10 August 2011

மங்காத்தா – Ocean’s Eleven


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த மாதத்தில் ஒரு நாள் ஏதோவொரு தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவு இந்தப்படத்தை தமிழில் ஒளிபரப்பினார்கள். துரதிர்ஷ்டவசமாக அப்போது முழுப்படத்தையும் பார்க்க முடியாததால் சிரத்தையெடுத்து படத்தை பதிவிறக்கம் செய்தேன். ஜார்ஜ் க்லூனி, பிராட் பிட், மேட் டேமான் போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடித்த படம் என்பதாலும் மங்காத்தாவின் ஒரிஜினல் என்று ஜி கொளுத்திப் போட்டதாலும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

- Title: Ocean’s Eleven
- Country: United States
- Language: English
- Year: 2001
- Genre: Crime, Thriller
- Cast: George Clooney, Brad Pitt, Matt Damon, Andy Garcia, Julia Roberts
- Direction: Steven Soderbergh
- Production: Jerry Weintraub
- Cinematography: Steven Soderbergh
- Editing: Stephen Mirrione
- Music: David Holmes
- Length: 117 Minutes

கதைச்சுருக்கம்:
ஏற்கனவே ஒரு திருட்டு குற்றத்திற்காக சிறையில் இருக்கும் ஜார்ஜ் க்லூனி அங்கிருந்து விடுதலை செய்யப்படுகிறார். விடுதலையானதும் ஒரு திட்டத்துடன் தனது கூட்டாளியான பிராட் பிட்டை சந்திக்கிறார். லாஸ் வேகாஸில் உள்ள மூன்று பிரபல சூதாட்ட கிளப்களை கொள்ளையடிக்க வேண்டுமென்பதே அந்த திட்டம். வரலாறு காணாத இந்த திட்டத்தை நிறைவேற்ற இவர்களுடன் சேர்த்து மொத்தம் பதினோரு பேரை திரட்டுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை குற்றத்தில் ஸ்பெஷலிஸ்ட். கடுமையான பாதுகாப்பு வளையங்களுக்கு அப்பால் இருக்கும் 150 மில்லியன் டாலர் பணத்தை எப்படி வெற்றிகரமாக திருடுகிறார்கள் என்பதே மீதிக்கதை.

மேலும், ஜார்ஜ் க்லூனி தனது முன்னாள் மனைவி ஜூலியா ராபர்ட்சை, மேலே குறிப்பிட்ட மூன்று சூதாட்ட கிளப்களின் உரிமையாளரிடம் இருந்து மீட்கிறாரா இல்லையா என்று ஒரு கிளைக்கதையும் இருக்கிறது.

பணத்தை திருடுவதற்கு எப்படி திட்டம் போட்டு அதை படிப்படியாக செயல்படுத்துகிறார்கள் என்ற திரைக்கதை மிகவும் சுவாரஸ்யம்.

ஜூலியா ராபர்ட்ஸ். அவருடைய ரசிகர்கள் யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். இவ்வளவு குறைவான அழகை வைத்துக்கொண்டு ஒரு நடிகை நிறைவான பேரும் புகழும் சம்பாதித்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய திறமை மட்டுமே காரணம். மற்றபடி அவருடைய முகத்தோற்றமும், நடையும் சகிக்கவில்லை.

2001ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் 85 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுக்க வெளியாகி 450 மில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்தது. பலவேறு தரப்பினர்களின் பாராட்டைப் பெற்ற இந்த திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இது ஏற்கனவே 1960ம் ஆண்டு வெளிவந்த ஓஷன்’ஸ் லெவன் படத்தின் ஹாலிவுட் ரீமேக். இந்தப்படத்திற்கு பிறகு Ocean’s Twelve, Ocean’s Thirteen என்ற பெயரில் இதன் அடுத்த பாகங்கள் முறையே 2004ம் ஆண்டும் 2007ம் ஆண்டும் வெளிவந்தன.

எனக்குப் பிடித்த வசனம்:
(க்ளப்பில்...)
முதல் நபர்: உன்னுடைய கேம் எப்படி போயிட்டு இருக்கு...?
பிராட் பிட்: ரொம்ப ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு.
முதல் நபர்: என்ன...? (சரியாக காது கேட்காமல்)
பிராட் பிட்: நான் உன் பொண்டாட்டியோட ஓடிப்போகப்போறேன்.
முதல் நபர்: சூப்பர்...!!!

(மற்றொரு காட்சியில்...)
பிராட் பிட்: ஏன் ஆரஞ்சு சாப்பிடுற...
சால்: எனக்கு வைட்டமின் சத்து தேவைன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.
பிராட் பிட்: அப்ப வைட்டமின் சாப்பிட வேண்டியதுதானே...!!!

எனக்குப் பிடித்த கேரக்டர்:
சந்தேகமே இல்லாமல் ஜார்ஜ் க்லூனிதான். அதற்கு அடுத்தபடியாக சால் என்ற வேடத்தில் வரும் கிழவரின் நடிப்பும் உடல் மொழியும் வெகுவாக ரசிக்க வைத்தது. மேலும் அவர் அடிக்கடி சிக்லெட்டை எடுத்து வாயில் திணிக்கும் ஸ்டைல் அருமை.

ஒரு அட்வைஸ்: படத்தின் நீளம் 117 நிமிடங்கள் என்று விக்கிபீடியா சொல்கிறது. ஆனால் தமிழ் பதிப்பில் வந்ததோ 101 நிமிடங்கள் மட்டுமே. (என்னென்ன பிட்டை தவறவிட்டேனோ...?). எனவே ஆங்கில பதிப்பையே பாருங்கள்.

ஒரு ஒற்றுமை: 2001ம் ஆண்டு இந்தப்படம் வெளிவந்தபோது ஜார்ஜ் க்லூனியின் வயது நாற்பது. இப்போது அஜித்தின் வயதும் அதே.

ஒரு டவுட்: பேட்டி தவறாமல் ஒவ்வொரு முறையும் வெங்கட் பிரபு “சால்ட் அண்ட் பெப்பர் லுக்” என்று சொல்கிறாரே... உண்மையிலே அப்படின்னா என்ன...???

பதிவிறக்க லிங்குகள்:

டிஸ்கி 1: அஜீத் ரசிகர்கள் யாராவது திட்டுவதாக இருந்தால் இந்த லிங்கிற்குப் போய் இவரை கண்டமேனிக்கு திட்டுங்கள்.

டிஸ்கி 2: திரட்டிகளில் இணைப்பவருக்கு மங்காத்தா ரிங்க்டோன் அனுப்பி வைக்கப்படும்.


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 comments:

Chitra said...

Ocean's Eleven was a good entertainer. I hope that the Tamil version will be too....

தமிழ் வண்ணம் திரட்டி said...

பகிர்வுக்கு நன்றி

Prabu Krishna said...

பாப்போம் படம் வரட்டும்.

//டத்தின் நீளம் 117 நிமிடங்கள் என்று விக்கிபீடியா சொல்கிறது. ஆனால் தமிழ் பதிப்பில் வந்ததோ 101 நிமிடங்கள் மட்டுமே. (என்னென்ன பிட்டை தவறவிட்டேனோ...?). எனவே ஆங்கில பதிப்பையே பாருங்கள்.//

ஆங்கிலம்தான் பார்ப்போம். நமக்கு பிட் தான் முக்கியம். நான் பிராட் பிட்ட சொன்னேன்.

Anonymous said...

சால்ட் & பெப்பர்னா - கொஞ்சம் வெள்ளை கலந்த கருப்பு நிற முடி.

-டைனோ

N.Manivannan said...

படம் காப்பியோ ,டீயோ எப்படி இருந்தாலும் நாங்க பாப்போம்ல

இவன்
ஆழ்வாரை ஆயிரம் தடவை பார்த்தவன் ,தலயின் தன்மான தொண்டன்

N.Manivannan said...

இன்ட்லி ல இணைச்சிருக்கேன் ரிங் டோண அனுப்பவும்

சென்னை பித்தன் said...

ஒப்பனை கூட அப்படியே இருக்கே!உப்பு மிளகுத்தாடி மீசை,தலைமுடியுடன்!

Philosophy Prabhakaran said...

@ பலே பிரபு
// ஆங்கிலம்தான் பார்ப்போம். நமக்கு பிட் தான் முக்கியம். நான் பிராட் பிட்ட சொன்னேன். //

என்கிட்டே பிட்ட போடுறியே பிரபு...

Philosophy Prabhakaran said...

@ டைனோ
// சால்ட் & பெப்பர்னா - கொஞ்சம் வெள்ளை கலந்த கருப்பு நிற முடி. //

தகவலுக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// இவன்
ஆழ்வாரை ஆயிரம் தடவை பார்த்தவன் ,தலயின் தன்மான தொண்டன் //

இன்னுமா உயிரோட இருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

@ N.Manivannan
// இன்ட்லி ல இணைச்சிருக்கேன் ரிங் டோண அனுப்பவும் //

நல்லா இணைச்சீங்க மணி... 5 மணிக்கு வெளியிட்ட பதிவை, 6.30க்கு நானாக பார்த்து தமிழ்மணத்தில் இணைத்தேன்... சரி ஏதோ இன்ட்லியில் இணைச்சிருக்கீங்களே... நன்றி... ரிங்டோன் இன்னும் சில நாட்களில் அனுப்பி வைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ சென்னை பித்தன்
// ஒப்பனை கூட அப்படியே இருக்கே!உப்பு மிளகுத்தாடி மீசை,தலைமுடியுடன்! //

பெரியவரே... என்ன ஒரு மொழிமாற்றம்... பின்னிட்டீங்க...

bandhu said...

//ஒப்பனை கூட அப்படியே இருக்கே!உப்பு மிளகுத்தாடி மீசை,தலைமுடியுடன்!//
காப்பியடிக்கரதுன்னு முடிவெடுத்த பின்னாலே வெறும் கதையோட ஏன் நிக்கணும்? முடிஞ்சவரைக்கு காப்பி அடிக்க வேண்டியது தான்! நாம யாரு.. பாட்டை கூட விடமாட்டோமில்ல!

Unknown said...

மங்காத்தா tailer பார்தபோது Ocean's Eleven ன் நினைப்பு வருவதனை தவிர்க்க முடியவில்லை. தல ஐ ரசிப்போம் நாங்கள் :)

Unknown said...

மாப்ள என்னோமோ சொல்றீக சர்தான்....பாப்போம் எப்படி இருக்குன்னு!

test said...

ஆமா! நானும் ட்ரைலர் பார்த்தேன்! அப்பிடித்தான் தோணுது!

//அஜீத் ரசிகர்கள் யாராவது திட்டுவதாக இருந்தால் இந்த லிங்கிற்குப் போய் இவரை கண்டமேனிக்கு திட்டுங்கள்//

நல்லா குடுக்கிறாய்ங்க டீட்டெயிலு! :-)

கவிதை பூக்கள் பாலா said...

எல்லாம் சரி எதுக்கு இப்படி அப்படியே மங்காத்தா டௌன் லோட் லிங்க் குடுங்க மோங்கிய இருந்த நெட்ல பாக்க வசதியா இருக்கும் . பாவம் தல இந்த படமாவது கை குடுக்கணுமே !

Anonymous said...

எய தல பேஷ் மாட்டேன் எங்கு ஷூபர் ஸ்டார் நாற்காலி வேணும்!!எந்த கடைல கெடக்கும்?

ராஜா said...

இப்படி காப்பியடிச்சி நடிப்பதெல்லாம் ஒரு பொழப்பா?

rajamelaiyur said...

Thala always king

Anonymous said...

epudi boss download panuradhu thepiratebay.org la pani parthen aagala konjam help panunga boss

Philosophy Prabhakaran said...

@ புதிய பாதை
// epudi boss download panuradhu thepiratebay.org la pani parthen aagala konjam help panunga boss //

நண்பா... torrent மூலமா டவுன்லோடு பண்ண உங்களிடம் utorrent அல்லது free download manager போன்ற தரவிறக்க மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்... மேலே குறிப்பிட்ட இரண்டு மென்பொருட்களுமே இணையத்தில் இலவசமாக கிடைக்கும்... அவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள்...

அதன்பிறகு நான் கொடுத்துள்ள டோரன்ட் லிங்கை கிளிக் செய்தால் .torrent என்று முடியக்கூடிய ஒரு கோப்பு உங்கள் கணினிக்கு டவுன்லோடு ஆகும்... அதை டெஸ்க்டாப்பிலோ அல்லது பொதுவான ஒரு இடத்திலோ சேமித்துக்கொள்ளவும்...

பின்னர் பதிவிறக்கம் செய்த அந்த கோப்பை utorrent அல்லது free download manager மூலமாக திறந்தால் உங்களுடைய பதிவிறக்கம் ஆரம்பமாகும்...

இவ்வளவு அக்கப்போர் தேவையில்லையே என்றால் நீங்கள் நேரடி இணைப்பைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்...

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும் : 8015899828

Anonymous said...

thnks boss download manager download paniten