அன்புள்ள வலைப்பூவிற்கு,
டிவிட்டரில் நடக்கும் ப்ளாக்கர் பற்றிய விவாதங்கள் சமயங்களில் எரிச்சல் தருகின்றன. ஏதோ ப்ளாக்கர் என்ற ஒன்றே அழிந்துவிட்டதாகவும் அதிலிருந்தவர்கள் அப்படியே டிவிட்டருக்கும் பஸ்ஸுக்கும் தாவிவிட்டதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் நாமெல்லாம் பதிவர்களே இல்லையோ...??? பழைய பதிவர்கள் நிறைய பேர் இடத்தை காலி செய்துவிட்டனர் என்பது உண்மைதான். ஆனால் அதைத்தான் புதிய பதிவர்கள் வந்து நிரப்பிவிட்டார்களே. என்னை யாரேனும் அடித்து விரட்டினால் கூட நான் ப்ளாக்கரை விட்டு நகர்வதாய் இல்லை.
திரைப்பட பாடகி சின்மயி ஒரு பதிவர் என்பது யாருக்காவது தெரியுமா...? அதுவும் கொஞ்ச நஞ்சமில்லை ஏழு ஆண்டுகளாக எழுதி வருகிறார். கொஞ்சம் பொறுங்க, தமிழில் அல்ல... ஆங்கிலத்தில். 2005ம் ஆண்டு ஆரம்பித்து இதுவரைக்கும் கிட்டத்தட்ட எழுநூறு பதிவுகள் எழுதியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலும் டைரிக்குறிப்புகளை போல பர்சனல் விஷயங்களையே பதிந்திருக்கிறார். இவருடைய வலைப்பூவின் பெயர் என்ன தெரியுமோ: WhatToNameIt
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு கட்டுரை. தற்போதெல்லாம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை அச்சடிப்பது குறைந்து வருகிறதாம். நவநாகரிக யுகத்தில் நிறைய பேர் மெயில் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் திருமண அழைப்பை சிக்கனமாக முடித்துக்கொள்கிறார்களாம். எல்லாம் கணினி, இணையம் என்று மாறிக்கொண்டிருப்பது அச்சுத்துறையில் இருக்கும் என் தந்தை போன்றவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான்.
சனிக்கிழமை இரவு சிரிப்பொலி தொலைக்காட்சியில் ஒரு படம் பார்த்தேன். ஹீரோவை நான்கைந்து இளம்பெண்கள் சேர்ந்தது கலாய்க்கிறார்கள். ஹீரோ பதிலுக்கு வீர வசனம் பேச ஹீரோயின் தோழிகள் எஸ்கேப். ஹீரோயின் மட்டும் வயிற்றை பிடித்துக்கொண்டு கத்துகிறார். வயசுக்கு வந்துட்டாங்களாமாம். அப்புறமென்ன பாட்டுதான். காதல் படத்தை ஸ்பூஃப் செய்தது போல இருந்தது. படத்தின் பெயர் புழல். (அவ்வ்வ்வ்)
ஜொள்ளு:
மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு இழுக்குதடி மானே... வளையல் மெட்டு வயசைத் தொட்டு வளைக்குதடி மீனே... |
ட்வீட் எடு கொண்டாடு:
pinjimanasu கீர்த்தி
வளர்ந்த செடிகளை பராமரிப்பதை விட வளரும் செடிகளை பராமரிப்போம்#காலேஜ் பிகர விட்டுட்டு ஸ்கூல் பிகர சைட் அடிங்கப்பா!!
mayavarathaan மாயவரத்தான்....
இதே ரீதியிலே போனா கருணாநிதி யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு கே.என்.நேரு சொல்வாரோ?! #ஐயப்பன்_எஃபெக்ட்
Kaniyen கனியன்
திருமண வாழ்க்கை என்பது எப்போதும் வெற்றிகரமாக உள்ளது மனைவிக்கு மட்டும் !
thoatta ஆல்தோட்டபூபதி
இந்த பூமியில் வாழ்ந்த, வாழும் மனிதர்கள் அத்தனை பேரிடமும் திட்டு வாங்கியது அநேகமாய் வாழ்க்கையாகத்தான் இருக்கும்.!
அறிமுகப்பதிவர்: எறும்பு
இவரைப் படித்தால் புது ஆள் மாதிரி தெரியவில்லை. பழைய ஆள் யாரோ ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எழுத்துக்கள் அந்த அளவிற்கு தரமாக இருக்கின்றன. கொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee... என்றொரு தலைப்பால் வசீகரிக்கப்பட்டு உள்ளே நுழைந்தேன். அதேமாதிரி இன்னும் ஆறு காதல் கதைகள் வைத்திருக்கிறாராம். அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், கம்யூனிசம் என்று சீரியஸ் இடுகைகளும் உண்டு. ப்ளாக்கர் டெம்ப்ளேட் மட்டும் கொஞ்சம் செட் ஆகாமல் கண்ணை உறுத்துகிறது. மற்றபடி கிரேட்...!
இந்த வார பாடல்:
தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான் அவரது மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக்காகி வெளிவர இருப்பது தெரியும்தானே. அது நிச்சயம் ஒரிஜினல் பதிப்பின் மரியாதையையும் சேர்த்து குலைக்கும் என்பது தெரிந்த விஷயம்தான்.
ஆனால், அதன் ப்ரோமோ பாடல், “காட்டுப்புலி வழி மறிக்கும்...” என்று ஆரம்பிக்கும் பாடல் அசத்துகிறது. நாதஸ்வரத்தை செக் பண்ணுவது போல ஒரு சவுண்ட் எபக்ட் கொடுத்திருக்கிறார்கள் – என்னமாய் இருக்கிறது. அப்புறம், சிம்புவின் குரலும் வசீகரிக்கிறது. வீடியோவில் பிரஷாந்த் தரும் ரியாக்ஷன்கள் மட்டும் எரிச்சலை கிளப்புகிறது. மற்றபடி சூப்பர்.
இந்த வார வீடியோ:
பப்பர... பப்பர... பப்பர... ப்பப்பப்பா... பவர் ஸ்டார் பேட்டி...
சேம்பிள்கள் –
- கொல கொலயா முந்திரிக்கா... பவர் ஸ்டாரை அடிச்சா நீ கத்திரிக்கா...
- லத்திகா 150வது நாள்: தன்னம்பிக்கைக்கு கிடைத்த தரமான வெற்றி
- எனக்கு தமிழ்நாட்டுல ரசிகர்கள் குறைந்தபட்சம் அஞ்சு லட்சம் பேர் இருக்காங்க.
இது சிரிக்க... இனி சிந்திக்க...
திரையுலகில் ஒரு உதவி இயக்குனர் திருமணம் ஆன அன்றே எதிர்பாரா விதமாக மாரடைப்பால் இறந்திருக்கிறார். பண உதவி தேவைப்பட்டு நிறைய பேரிடம் கேட்க யாரும் உதவி செய்ய முன்வராத நேரத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் மட்டும் உதவி செய்திருக்கிறார். HATS OFF TO POWER STAR...!
(ஃபேஸ்புக்கில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராச்குமார் பகிர்ந்துக்கொண்டது)
இந்த வார புகைப்படம்:
தாய்மை |
இந்த வார தத்துவம்:
“சிரிப்பவர்கள் எல்லாம் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல... கவலைகளை மற(றை)க்க கற்றுக்கொண்டவர்கள்...” (டிவிட்டரில் பிஞ்சுமனசு உதிர்த்தது)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
53 comments:
ட்விட்டரிலும் பிளாகர் பற்றி விவாதமா? நான் இங்கு மட்டும்தான் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரிதான்!
பவர் ஸ்டார் ...அடடா...ஸ்ஸ்ஸ்ஸ் ....இப்பவே கண்ணை கட்டுதே...
கலக்கல் பதிவு நண்பா!....பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி!
உங்கள்கு காமெடி நன்றாக வருகிறது ...
அருமையான
கலக்கல் பதிவு ....
வாழ்த்துக்கள்
என்னங்க நா இன்னும் எதிர் பாத்தேன்... ஜொள்ளு போட்டோ போட்டே அரை பக்கத ரொப்பிட்ட எப்படி எழுத வரும்....
ஏன் டிவிட்டர்ஸ்லாம் இப்படி இருக்காங்க... நான் கண்டிப்பா பிளாக்க விட்டு போகவேமாட்டேன்...
இந்த வார புகைப்படம் அருமை ஜொள்ளு படங்களை எங்க தான் எடுக்கிங்க எல்லாம் சைடு போஸ் தான் போடுவிங்களோ
NALLATHU NANBA !!!!
சின்மயி என் மகளின் Favorite பாடகி...நன்றி...
கட்டிங் கலக்கல்...
பவர் ஸ்டாரை இப்போதுதான் பார்க்கிறேன், கதி கலங்க வைத்துவிட்டார்.இன்னொரு சாம் ஆண்டர்சன்
Nice view about blogging..And nice to know the helping tendency of our Power Star..:-)
யோவ உமக்கு புழல் படம் பாக்குற அளவுக்கு பொறுமை இருக்கா?சூப்பர் மாமு!!அப்புறம் மம்பட்டியான் பாடலை நானும் ரசித்தேன்!
ஹீரோ கிண்டல் பண்ணி ஹீரோயின் வயசுக்கு வந்துட்டாளா? ஆஹா என்ன ஒரு கதையம்சம் நெறஞ்ச படம்? ஆமா அது என்ன எல்லா படத்துலேயும் ஹீரோயின் 25 வயசுக்கு மேலதான் வயசுக்கு வர்ரா? வாட் இஸ் தி ப்ராப்ளம், கமான் டெல் மி.....?
/////:தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான் அவரது மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக்காகி வெளிவர இருப்பது தெரியும்தானே.///////
இவனுங்க அடங்க மாட்டானுங்களா?
\\திரைப்பட பாடகி சின்மயி ஒரு பதிவர் என்பது யாருக்காவது தெரியுமா...?\\ அப்படியா?
\\இவற்றில் பெரும்பாலும் டைரிக்குறிப்புகளை போல பர்சனல் விஷயங்களையே பதிந்திருக்கிறார்.\\ ஐயோ சாமி, அப்ப வேண்டாம்...!!
\\தற்போதெல்லாம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை அச்சடிப்பது குறைந்து வருகிறதாம்\\ காகிதம் செலவழிப்பது குறைவது சுற்றுப் புறச் சூழலுக்கு நல்லது தானே!
மம்பட்டியானை ஹெலிகாப்டர் வச்சு துரத்துராங்கோ....!!! ஹா...ஹா.....ஹா.... [பிரஷாந்த் இந்த கேரக்டருக்கு தகுந்த ஆள் இல்லை].
\\இந்த வார புகைப்படம்:\\ சூப்பர்.
/////யாரும் உதவி செய்ய முன்வராத நேரத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் மட்டும் உதவி செய்திருக்கிறார். HATS OFF TO POWER STAR...!/////
நானும் சொல்லிக்கிறேன்.....
பவர் ஸ்டார் வாழ்க
//என்னை யாரேனும் அடித்து விரட்டினால் கூட நான் ப்ளாக்கரை விட்டு நகர்வதாய் இல்லை.//
நானும் தான்..
சோனாக்ஷி என்னையே பார்க்கிறா,, பவர் ஸ்டார் பேட்டிய விஜய் டீவிலயும் பார்தேதேன்.. தமிழ்நாட்டு மக்கள்தான் பாவம் என்ன செய்ய,, அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்,,
இந்த வார சரக்கு, சூப்பர் பிரபா.
நம்ம ஏரியாவுல இன்றைக்கு ஒரு ஒலகப்படம் ஓடுது,,
ஐயோ.... பவர் ஸ்டார்ஸ் செம தூள்... கலக்கல் பதிவு..!
தமிழ்மணம் 10.
ஏ யப்பா கலக்கல் பதிவு...!!!
ஒயின் சாப்ள சரக்கு கம்மியா இருக்கே?
அருமையான பதிவு சிந்திக்க தூண்டும் வகையில் உள்ளது.
வாழ்த்துக்கள்.
நல்ல செய்திகளை சொல்வதற்கு எதாவது ஒரு தளம் மட்டுமில்லாமல் பல வகைகளில் தளங்கள் இருந்தால் நல்லதுதான்.
திரைப்பட பாடகி சின்மயி ஒரு பதிவர் என்பது யாருக்காவது தெரியுமா///
.
.
யாரு?அந்த கட்டை ஆம்பிள்ளை குரலில் கவுதம் பட கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்து சாகடிப்பான்களே?அவளா?ஐயோ ஆள உடுங்க சாமி!
நானும் அப்படியே நினைக்கிறேன். யாரும் படித்தாலும் படிக்காவிட்டாலும் என் வலைப் பதிவில் நானும் பதிவு செய்து வைக்கவே விரும்புகிறேன்.
உன் தலைவியோட 'அந்த ' ஸ்டில்ல எடுத்து போடைலையா , அட அட என்னா காலு ,என்னா கையி ,..............................
@ சேட்டைக்காரன்
// ட்விட்டரிலும் பிளாகர் பற்றி விவாதமா? நான் இங்கு மட்டும்தான் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரிதான்! //
உங்களுக்கு தெரிந்திருக்குமே சேட்டை... நீங்களும் டிவிட்டரில் அடித்து விளையாடுகிறீர்களே...
@ கோவை நேரம்
// பவர் ஸ்டார் ...அடடா...ஸ்ஸ்ஸ்ஸ் ....இப்பவே கண்ணை கட்டுதே... //
முதல் வருகைக்கு நன்றி... சரக்கடிச்சாச்சா...? அப்புறமென்ன நேரா தலப்பாக்கட்டி பிரியாணி கடைக்கு போக வேண்டியது தானே...
@ விக்கியுலகம்
// கலக்கல் பதிவு நண்பா!....பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி! //
வெங்கி... என்ன பின்னூட்டம் போடுவது என்ற கலக்கம் உங்களிடம் தெரிகிறது... அதெல்லாம் வேண்டாம்... உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் போட்டு அடிச்சு விளையாடுங்க...
@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// உங்கள்கு காமெடி நன்றாக வருகிறது ...
அருமையான
கலக்கல் பதிவு ....
வாழ்த்துக்கள் //
நான் என்ன சந்தானமா...??? (அவ்வ்வ்வ்)
@ சதீஷ் மாஸ்
// என்னங்க நா இன்னும் எதிர் பாத்தேன்... ஜொள்ளு போட்டோ போட்டே அரை பக்கத ரொப்பிட்ட எப்படி எழுத வரும்.... //
என்ன பண்றது...? அது ப்ளாக்கர் செய்யும் தொழில்நுட்ப கோளாறு... Large என்று கொடுத்தால் படம் மிகவும் சிறியதாக இருக்கிறது... Very Large என்று கொடுத்தால் மிகவும் பெரியதாக இருக்கிறது... நான் என்ன செய்ய...?
@ சதீஷ் மாஸ்
// ஏன் டிவிட்டர்ஸ்லாம் இப்படி இருக்காங்க... நான் கண்டிப்பா பிளாக்க விட்டு போகவேமாட்டேன்... //
நீ போகனும்ன்னு நினைச்சாலும் உன் கோடானுகோடி ரசிகர்கள் உன்னை போக விடுவதாக இல்லை...
@ சி.பிரேம் குமார்
// இந்த வார புகைப்படம் அருமை //
நன்றி...
// ஜொள்ளு படங்களை எங்க தான் எடுக்கிங்க //
See im.indli.com
// எல்லாம் சைடு போஸ் தான் போடுவிங்களோ //
என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க... எல்லாம் ஒரு ரசனை தான்...
@ NAAI-NAKKS
// NALLATHU NANBA !!!! //
NANRI NANBA !!!!
@ ரெவெரி
// சின்மயி என் மகளின் Favorite பாடகி...நன்றி...
கட்டிங் கலக்கல்... //
ஃபேவரிட் என்று சொல்ல முடியாது... பட் எனக்கும் பிடிக்கும்...
@ ஒதிகை மு.க.அழகிரிவேல்
// பவர் ஸ்டாரை இப்போதுதான் பார்க்கிறேன், கதி கலங்க வைத்துவிட்டார்.இன்னொரு சாம் ஆண்டர்சன் //
இவர் ஸாம் ஆண்டர்சனுக்கெல்லாம் பெரியப்பா... பத்து ஸாம் ஆண்டர்சன்களுக்கு சமம்...
@ PTR
// Nice view about blogging..And nice to know the helping tendency of our Power Star..:-) //
Thanks bro... Thanks for the first visit too...
@ வடக்குபட்டி ராமசாமி
// யோவ உமக்கு புழல் படம் பாக்குற அளவுக்கு பொறுமை இருக்கா? //
அது என்ன படம்ன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல பார்த்தேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆமா அது என்ன எல்லா படத்துலேயும் ஹீரோயின் 25 வயசுக்கு மேலதான் வயசுக்கு வர்ரா? வாட் இஸ் தி ப்ராப்ளம், கமான் டெல் மி.....? //
சரி விடுங்க ப.ரா... ரொம்ப டீப்பா போக வேண்டாம் :)
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இவனுங்க அடங்க மாட்டானுங்களா? //
கவலைப்படாதீங்க... இந்த படம் ஊத்திக்கிட்டு மூடினதும் அடங்கிடுவாங்க...
@ Jayadev Das
// காகிதம் செலவழிப்பது குறைவது சுற்றுப் புறச் சூழலுக்கு நல்லது தானே! //
நல்லது தான்... ஒரு சுயநல நோக்கத்தோடு பார்த்தால் எனக்கு கெட்ட விஷயம்... (என் தந்தை அச்சகம் வைத்திருக்கிறார்)
@ சி.பி.செந்தில்குமார்
// பவர் ஸ்டார் வாழ்க //
தம்பி டீ இன்னும் வரலை... (நீங்க இன்னும் லத்திகா விமர்சனம் போடலை)
@ Raazi
// பவர் ஸ்டார் பேட்டிய விஜய் டீவிலயும் பார்தேதேன்.. தமிழ்நாட்டு மக்கள்தான் பாவம் என்ன செய்ய,, //
எவ்வளவோ பார்த்துட்டோம்... இதை பார்க்க மாட்டோமா...?
@ N.H.பிரசாத்
// இந்த வார சரக்கு, சூப்பர் பிரபா. //
நன்றி நண்பா...
@ Raazi
// நம்ம ஏரியாவுல இன்றைக்கு ஒரு ஒலகப்படம் ஓடுது,, //
கேள்விப்பட்டேன் தல... Blue Lagoon தானே... இதோ வருகிறேன்...
@ Nirosh
// ஐயோ.... பவர் ஸ்டார்ஸ் செம தூள்... கலக்கல் பதிவு..!
தமிழ்மணம் 10. //
நன்றி நண்பா... பூஜா கில்மா படம் பண்ணிய பாடை விட மோசமா இருக்குல்ல...
@ MANO நாஞ்சில் மனோ
// ஏ யப்பா கலக்கல் பதிவு...!!! //
நன்றி தலைவரே...
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// ஒயின் சாப்ள சரக்கு கம்மியா இருக்கே? //
கூட்டத்தை பாருங்க... உங்களுக்கு முன்னாடி நிறைய பேர் வந்து வாங்கிட்டு போயிட்டாங்க...
@ அந்நியன் 2
// நல்ல செய்திகளை சொல்வதற்கு எதாவது ஒரு தளம் மட்டுமில்லாமல் பல வகைகளில் தளங்கள் இருந்தால் நல்லதுதான் //
என்னவோ சொல்கிறீர்கள்... ஒன்றும் விளங்கவில்லையே...
@ வடக்குபட்டி ராம்சாமி
// யாரு?அந்த கட்டை ஆம்பிள்ளை குரலில் கவுதம் பட கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுத்து சாகடிப்பான்களே?அவளா?ஐயோ ஆள உடுங்க சாமி! //
அவங்களே தான்... நீங்க வாகை சூட வா படத்தில் சரசர சாரக்காத்து பாட்டு கேட்டு பாருங்க... என்ன வாய்ஸ்யா...
@ அப்பு
// நானும் அப்படியே நினைக்கிறேன். யாரும் படித்தாலும் படிக்காவிட்டாலும் என் வலைப் பதிவில் நானும் பதிவு செய்து வைக்கவே விரும்புகிறேன். //
சில பேர் ப்ளாக்கரை ஃபேஸ்புக், டிவிட்டர் போல வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைக்கிறார்கள்...
@ N.Manivannan
// உன் தலைவியோட 'அந்த ' ஸ்டில்ல எடுத்து போடைலையா , அட அட என்னா காலு ,என்னா கையி ,............................. //
அது ரொம்ப மோசமா இருக்கேயா... அப்புறம் பதிவுக்கு பதினெட்டு பிளஸ் தான் போடணும்...
Post a Comment