அன்புள்ள வலைப்பூவிற்கு,
இந்த வாரத்தின் உடான்ஸ் பதிவர் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தினம் ஒரு இடுகை வரும். உங்க விதியை யாரால மாத்த முடியும். முதல் உடான்ஸ் பதிவரானது மகிழ்ச்சியே. இந்த வாய்ப்பு “வருங்கால கேபிளார்” என்றழைக்கப்படும் ஒரு பதிவருக்கு கிடைத்து அவர் எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த வருங்கால கேபிள் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.
டெல்லியில் வெடிகுண்டு வெடித்தும் சென்னையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடந்திருக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் குண்டுவெடிப்பு நடந்தால் எப்படி மீட்பது என்று ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம் சில நாட்களுக்குத்தான் அதன்பிறகு நடந்த சம்பவத்தை எல்லாம் அடியோடு மறந்துவிடுகின்றனர் திரும்பவும் அடுத்த வெடிகுண்டு வெடிக்கும்வரை.
இணையத்தை கடந்து கொஞ்சம் வெளியுலகத்தை பார்த்தால் இந்த சாம் ஆண்டர்சன், வில்பர் சற்குனராஜ், பவர் ஸ்டார் இவர்களை எல்லாம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. மங்காத்தா படம் பார்த்துவிட்டு சாம் ஆண்டர்சன்னு வசனம் வருதே யாரவர்ன்னு கேட்டார். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
கூகுள் கூட்டல் சேவை ஆரம்பித்தபோது நமக்கொரு இன்விட்டேஷன் கிடைக்காதா என்று அல்லோலப்பட்டேன். ஒரு வழியாக இரண்டு நாட்களுக்குப்பிறகு இன்விட்டேஷன் கிடைத்தது. என்னைப் போலவே பலரும் அடித்துபிடித்து டவுன் பஸ்சில் துண்டு போடும் வேகத்தில் இணைந்தார்கள். ஆனால் இப்போது யாரும் கூகுள் கூட்டலை சட்டை செய்வதாக தெரியவில்லை. ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் எப்போதும் போலவே இயங்கிக்கொண்டிருக்கின்றன. கூகுள் பஸ்ஸில் இருந்தவர்கள் பஸ்ஸையே ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். கூகுள் கூட்டலும் ஃபெயிலியர் தான் போல.
ஜொள்ளு 1:
நீ ஆனந்தி... நான் பிரபாகர்... (நெஜமாதான் சொல்றியா...?) |
ஜொள்ளு 2:
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் நாயகி |
ட்வீட் எடு கொண்டாடு:
2016-ல் ம.தி.மு.க. ஆட்சி - வைகோ #அடுத்த ஜோக்கை சொல்ல பா.ம.க.விலிருந்து ஒருவர் மேடைக்கு வரவும்!
எத்தனை தான் அடக்கினாலும் வெளிப்பட்டுவிடுகிறது, உன் மீதுள்ள காதல்…பச்சிளம் குழந்தையின் சிறுநீர் போல…#காதல்
உலகை பற்றிய குறுகிய பார்வையே பெண்ணின் தாழ்விற்கு காரணம் என்றார் வி.எஸ்.நைபால். இதை நான் சொன்னால் ஆணாதிக்கம், அவர் சொன்னால் வி.எஸ்.நைபால்.
அணு உலைகளால் எந்த ஆபத்துமில்லை என்றால் ராஜ் பவன், போயஸ் கார்டன் போன்ற இடங்களின் அருகே கூட அமைக்கலாமே
அரசு பணத்தில் அம்மா அம்மா என்று கத்துகிற ஆடு மாடுகளை இலவசமாக வழங்கும் ஜெவின் தந்திரத்தை கலைஞர் கருணாநிதி கண்டித்தே ஆக வேண்டும்.
அறிமுகப்பதிவர்: kamakshe
சீனியர் பதிவர் உண்மைத்தமிழன் ஃபேஸ்புக்கிலும், பஸ்ஸிலும் புகழ் பரப்பிக்கொண்டிருக்க, கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். அய்யராத்து காபி சுவை என்னை உள்ளே கவர்ந்திழுத்தது. அப்புறம்தான் தெரிந்தது இவர் சிறுகதை ஸ்பெஷலிஸ்ட் என்று. சாம்பிளுக்கு இந்த பூனைக்குட்டி சிறுகதையை படித்துப் பாருங்களேன். பெண்ணாக இருந்து கொண்டு ஆண்களின் ஃபீலிங் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார் பாருங்கள். எல்லாக் கதைகளிலுமே அம்மா செண்டிமன்ட் கொஞ்சம் தூக்கல் தான்.
இந்த வார பாடல்:
ரொம்பவும் பழைய மற்றும் அரிய பாடல். விதவை மறுமணம் பற்றி அதிக அளவில் விழிப்புணர்ச்சி இல்லாத காலகட்டத்தில் வந்த ஒரு புரட்சிப்பாடல். நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பாடல் யூடியூப் மூலம் கிடைத்திருக்கிறது.
இந்த வார காணொளி:
CAMLIN பெர்மனன்ட் மார்க்கருக்கான விளம்பரம். நகைச்சுவையினூடே கொஞ்சம் நம் நாட்டு மூடநம்பிக்கைகளையும் துவைத்து காயப்போட்டிருக்கிறார்கள்.
இந்த வார புகைப்படம்:
இந்த வார தத்துவம்:
“மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் புறம் பேசினால், நீ உன் செவியை அடைத்துக்கொள்...”
- டூவார்லஸ்
இந்த வார மொக்கை:
நபர் 1: ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு பாக்குறேன்... கையில காசில்ல...!
நபர் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணீங்க...?
நபர் 1: அப்புறமென்ன பாக்கெட்டுல இருந்து எடுத்துக்கொடுத்தேன்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
46 comments:
அனைத்தும் சுவை,U...டான்ஸ்?
நல்லா அடிச்சு ஆடுங்க
உடான்ஸ் பதிவரா? புதுசு புதுசா என்னென்னமோ நடக்குது போலிருக்குதே! வாழ்த்துகள்!
உடான்சிலும் கலக்க வாழ்த்துக்கள்
உடான்ஸ் கலக்கல் - தொடர வாழ்த்துக்கள்
//எத்தனை தான் அடக்கினாலும் வெளிப்பட்டுவிடுகிறது, உன் மீதுள்ள காதல்…பச்சிளம் குழந்தையின் சிறுநீர் போல…#காதல்//எதைத் தான் ஒப்பிட்டு பாக்குறதுன்னு இல்லையா !
இந்த வார புகைப்படம் அருமை
வாழ்த்துக்கள்.. அப்புறம் அந்த சாம் அன்டர்சன் யாரு?
ரெண்டு ட்வீட்க்கான நக்கல்ஸ் கலக்கல்ஸ்...
ஃஃஃஃஃ சென்னையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடந்திருக்கிறது.ஃஃஃஃ
இப்ப தோவையில்லையே.. ராஜீவ் கொலையாளிகள் வழக்கு வரும் நேரம் காங்கிரஸ்காரர் வைப்பாங்க அப்ப உசரா இருக்கச் சொல்லுங்க பி.பி
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
யாருங்க வருங்கால கேபிளார்..?! :)
அனைத்தும் அருமை
//அந்த வருங்கால கேபிள் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.//
யோவ் பிரபாகரா..ஆளை காலி பண்றதுன்னே முடிவு பண்ணியாச்சா? நடு ரோட்ல கால்ல வேணும்னாலும் விழறேன்னு அந்த 'வருங்காலம்' சொல்லி இருக்காரு. விட்ருங்க அவரை!!
//இந்த வாய்ப்பு “வருங்கால கேபிளார்” என்றழைக்கப்படும் ஒரு பதிவருக்கு கிடைத்து அவர் எனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார். அந்த வருங்கால கேபிள் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.//
நீங்க சைஸ்ல கேக்குறீங்களா? இல்ல திறமைல கேக்குறீங்களா ?
என்னது வருங்கால கேபிளாரா? அப்போ இப்பவே நல்லா சாப்புட்டு உடம்ப தேத்திக்க சொல்லுங்க......
//////இந்த வாரத்தின் உடான்ஸ் பதிவர் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தினம் ஒரு இடுகை வரும்.//////
என்னது உடான்ஸ் பதிவரா? அப்போ ஏற்கனவே விட்டதுலாம் உடான்ஸ் இல்லியா?
இந்த வாரத்தின் உடான்ஸ் பதிவராக ஆகியிருக்கும் பிரபாவுக்கு என் வாழ்த்துக்கள்.
இனி தினம் ஒரு மொக்கையை படிக்கனுன்னு எங்க தலையெழுத்து..
உடான்ஸ் பதிவருக்கு வாழ்த்துக்கள்
நல்லா தெம்பா எழுதுங்க மக்கா வாழ்த்துக்கள்....!!
வாழ்த்துக்கள் பிரபா...
வருங்கால கேபிளார் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு :-)))) யாருன்னு சொன்னா என்ன ஸ்பெசல் மீல்ஸ் போட்டுட சான்ஸ் இருக்குறதால எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.............
உடான்ஸ் பதிவரான பிரபல பதிவர்! யாரந்த வருங்கால கேபிளார்?
பதிவுலகில் பூகம்பம்!
பச்சிளம் குழந்தையின் சிறுநீர் போன்றது எது?
இந்த வார அறிமுகப்பதிவரின் ஸ்பெஷல் என்ன?
விடைகான படியுங்கள்
"பிரபா ஒயின்ஷாப் – 19092011"
ஒரே அளப்பறையா இருக்கு:)
ஓகே நண்பா...
படித்தேன் ரசித்தேன்.
வாழ்த்துக்கள் ப்ளஸ் தமிழ் மணம்.11
//CAMLIN பெர்மனன்ட் மார்க்கருக்கான விளம்பரம். நகைச்சுவையினூடே //
I hated this black humor!
இந்த வார மொக்கை அருமை...
வாழ்த்துக்கள்...
nalla kalakura pirabha mixing than
@ ஒதிகை மு.க.அழகிரிவேல், சேட்டைக்காரன், # கவிதை வீதி # சௌந்தர், மனசாட்சி, சி.பிரேம் குமார், Real Santhanam Fanz, ஷீ-நிசி, ♔ம.தி.சுதா♔, சேலம் தேவா, வைரை சதிஷ், ! சிவகுமார் !, Prabu Krishna, பன்னிக்குட்டி ராம்சாமி, N.H.பிரசாத், கே.ஆர்.பி.செந்தில், ஜ.ரா.ரமேஷ் பாபு, MANO நாஞ்சில் மனோ, !* வேடந்தாங்கல் - கருன் *!, இரவு வானம், கோகுல், மழை, அந்நியன் 2, bandhu, ரெவெரி, bala
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே... வாராவாரம் வருகை தந்து கடையை கல்லா கட்ட வையுங்கள்...
@ மனசாட்சி
// உடான்ஸ் கலக்கல் - தொடர வாழ்த்துக்கள் //
தலைவரே... பார்த்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க...? அடிக்கடி வாங்க... உங்க சேவை எனக்கு தேவை...
@ சி.பிரேம் குமார்
// /எதைத் தான் ஒப்பிட்டு பாக்குறதுன்னு இல்லையா ! //
மாட்டு சிறுநீரையே புண்ணிய தீர்த்தம் என்று குடிக்கிறார்கள்... அப்படி இருக்கும்போது குழந்தையின் சிறுநீரை காதலோடு ஒப்பிட்டால் ஒன்றும் தவறில்லை...
வைன் இனிக்குது )))
@ Real Santhanam Fanz
// வாழ்த்துக்கள்.. அப்புறம் அந்த சாம் அன்டர்சன் யாரு? //
அவர் எவ்ளோ பெரிய்ய்ய்ய அப்பாட்டக்கர் தெரியுமா...?
@ ஷீ-நிசி
// ரெண்டு ட்வீட்க்கான நக்கல்ஸ் கலக்கல்ஸ்... //
அப்போ மத்த ட்வீட்டெல்லாம் மொக்கையா இருக்கா...
@ சேலம் தேவா
// யாருங்க வருங்கால கேபிளார்..?! :) //
பன்னிரண்டாவது பின்னூட்டம் போட்ட அன்னாரது பெயரை நான் எப்படி என் வாயால் சொல்வேன்....
@ ! சிவகுமார் !
// யோவ் பிரபாகரா..ஆளை காலி பண்றதுன்னே முடிவு பண்ணியாச்சா? நடு ரோட்ல கால்ல வேணும்னாலும் விழறேன்னு அந்த 'வருங்காலம்' சொல்லி இருக்காரு. விட்ருங்க அவரை!! //
இந்த ஒப்புதல் வாக்குமூலமே போதும்...
@ Prabu Krishna
// நீங்க சைஸ்ல கேக்குறீங்களா? இல்ல திறமைல கேக்குறீங்களா ? //
யோவ்... திறமைலதான்யா... கொஞ்சம் உனக்கு மேலே யாரு பின்னூட்டம் போட்டிருக்காருன்னு பாரு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// என்னது வருங்கால கேபிளாரா? அப்போ இப்பவே நல்லா சாப்புட்டு உடம்ப தேத்திக்க சொல்லுங்க...... //
ஊருக்கே ஸ்பெஷல் மீல்ஸ் போடுறவரு... அவர் சாப்பிட மாட்டாரா... அப்படியே மீல்ஸ் காலியானாலும் மிக்சர் வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுவாரு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// என்னது உடான்ஸ் பதிவரா? அப்போ ஏற்கனவே விட்டதுலாம் உடான்ஸ் இல்லியா? //
என்னங்க இது சரமாரியா தாக்குறீங்க ஒரு ஸ்மைலி கூட போடாம...
@ கே.ஆர்.பி.செந்தில்
// இனி தினம் ஒரு மொக்கையை படிக்கனுன்னு எங்க தலையெழுத்து.. //
தலைவரே... அதைத்தான் நானே முதல்வரியில ஒப்புதல் வாக்குமூலமா கொடுத்திட்டேனே....
@ இரவு வானம்
// வருங்கால கேபிளார் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு :-)))) யாருன்னு சொன்னா என்ன ஸ்பெசல் மீல்ஸ் போட்டுட சான்ஸ் இருக்குறதால எஸ்கேப்ப்ப்ப்ப்ப்........... //
போட்டா சந்தோஷமா சாப்பிட வேண்டியதுதானே சுரேஷ்...
@ கோகுல்
// உடான்ஸ் பதிவரான பிரபல பதிவர்! யாரந்த வருங்கால கேபிளார்?
பதிவுலகில் பூகம்பம்!
பச்சிளம் குழந்தையின் சிறுநீர் போன்றது எது?
இந்த வார அறிமுகப்பதிவரின் ஸ்பெஷல் என்ன?
விடைகான படியுங்கள்
"பிரபா ஒயின்ஷாப் – 19092011" //
நீங்க கவுண்டமணி வலைப்பூவுல நம்ம அக்கப்போர படிச்சிட்டு நேரா வர்றீங்கன்னு புரியுது...
@ மழை
// ஒரே அளப்பறையா இருக்கு:) //
முதல் வருகைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
@ bandhu
// I hated this black humor! //
ம்ம்ம்... அதான் அந்த கணவர் உயிர் பிழச்சிடறாரே...
@ ரெவெரி
// இந்த வார மொக்கை அருமை...
வாழ்த்துக்கள்... //
இதுக்கு பதிவு மொக்கையா இருக்குன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம் ரெவேரி...
@ bala
// nalla kalakura pirabha mixing than //
பாலா... எனக்கு மிக்ஸிங் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது... வேணும்னா செல்வின்கிட்ட கேட்டு சொல்றேன்...
முதல்ல உடான்ஸ் பதிவரானதுக்கு வாழ்த்துக்கள். தினம் ஒரு பதிவுன்னதும் நல்ல விஷயம்தான். இந்த எங்கேயும் எப்போதும் பத்தி கொஞ்சம் எழுதுங்க.
Post a Comment