அன்புள்ள வலைப்பூவிற்கு,
நம்மூரில் ரஜினி படம் ரிலீசாகும்போது ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே, அந்தமாதிரி பல மடங்கு எதிர்பார்ப்போடு ஐபோன் ஐந்திற்காக காத்திருக்கிறார்கள் மேலைநாட்டினர். இந்நிலையில் கடந்த வாரம் ஐபோன் 5 வெளிவந்துவிட்டதாக யாரோ இணையத்தில் கொளுத்திப்போட, “வடை போச்சே” என்று பலர் அல்லோலப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்றார்போல ஆப்பிள் நிறுவனத்தின் அளப்பறைகளும் கொஞ்சம் ஓவர்தான். இதுவரை ரிலீஸ் தேதி, போனில் உள்ள வசதிகள் என்று சகலத்தையும் கமுக்கமாக வைத்திருக்கிறது.
தேடாதீங்க... படத்தை சென்சார் செஞ்சிட்டேன்... |
Wardrobe Malfunction – உலகெங்கிலும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகிற விஷயங்களில் ஒன்று. சமீபத்தில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துக்கொண்ட கேத்தலீனாவுக்கு என்ன நடந்தது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். (மேலே பார்க்க படம் – ஹி ஹி சென்சார் செய்யப்பட்டது). இதேபோல, பிரபல பிரிட்டிஷ் மாடல் நவோமி கேம்ப்பெல் ஒரு பியூட்டி பார்லர் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கிறார். அவர் மரியாதை நிமித்தமாக குனிந்தாரோ என்னவோ உடனே படம் பிடித்துவிட்டார்கள் “கோ”மான்கள். எல்லாம் ஒரு வெளம்பரம் தான்.
மெக்சிகோவில் கஞ்சா கடத்தல் செய்யும் கும்பலால் ஒரு ஜோடி கொலை செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் கஞ்சா கடத்தும் கும்பல்கள் பற்றி வலைப்பூவில் தாறுமாறாக எழுதியதால்தான் அவர்களைக் கொன்றோம் என்று அவர்கள் பிணத்தின் மீது எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் கொலைகாரர்கள். இந்தமாதிரி இங்கே யாராவது ஆரம்பித்தால் ஒருத்தரும் மிஞ்சமாட்டோம். அவர்களை கொலை செய்து தொங்க விட்டிருப்பதைப் பார்த்தால் நீங்கள் மெர்சலாகக்கூடும். அவன் இவன் கிளைமாக்சை விட கொடூரமாக இருந்தது. பிரசுரிக்க விரும்பவில்லை இங்கே கிளிக்கி பார்க்கவும்.
புகைப்பட கலையில் பேரார்வம் கொண்ட ரஷிய இளைஞனின் கைவண்ணம் |
நாசா விஞ்ஞானி Laurance Doyle மற்றும் அவரது குழுவினர் இரண்டு சூரியன்களைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். தற்காலிகமாக “Kepler-16b” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம், நம் பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறதாம். அதாவது நாம் இங்கிருந்து ஒரு நொடிக்கு 186,282 மைல் வேகத்தில் பயணம் செய்தால் கூட அங்கே சென்றடைய இருநூறு ஆண்டுகள் ஆகும். அந்த கிரகத்தைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் அங்கே தண்ணீர் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கின்றனர். எப்போதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் பார்த்த காட்சிகள் நிஜத்தில் நடப்பது ஆச்சர்யாமாகத்தான் இருக்கிறது.
வெளிநாட்டு வாழ்க்கை முறைகளை தெரிந்துக்கொள்வதில் ஒரு ஆர்வம். அந்த வகையில் இந்த வார ஸ்பெஷல் வியட்நாம் காபி. (ஏய்... ஏய்... காபியை மட்டும் பாருங்கப்பு...)
சீனாவில் மேல்நிலை நிலை வகுப்பில் படிக்கும் மாணவ / மாணவியருக்கு செக்ஸ், காதல் போன்ற பிரிவுகள் கொண்ட ஒரு பாடத்தை கட்டாயமாக்கி இருக்கிறது கல்வி அமைச்சகம். ஏற்கனவே, உலகில் அதிக அளவில் கரு கலைப்பு செய்துக்கொள்ளும் நாடுகள் பட்டியலில் சீனா முன்னிலை வகிக்கிறது. அதிலும் இருபதிலிருந்து இருபத்தி ஒன்பது வயதிற்குள் இருக்கும் மணமாகாத பெண்கள் நிறைய பேர் கரு கலைப்பு செய்துக்கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் இதெல்லாம் தேவையா என்று வழக்கம் போல கொந்தளித்திருக்கிறது சமூக காவலர்கள் தரப்பு. செக்ஸ் கல்வி என்பது கட்டாயம் தான். ஆனால், தொபுக்கடீர் என்று மேல்நிலை பருவத்தில் அறிமுகப்படுத்தாமல் சிறுவயதில் இருந்தே படிப்படியாக கற்றுக்கொடுத்தல் சிறப்பு.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
46 comments:
அதாண்ணே எனக்கும் புரியலை, நான் பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் மட்டும் வாக்களிக்க ஒட்டுப்பட்டை வரமாட்டேங்குது, அவங்க ஏதாவது காசு எதிர் பாக்குறாங்களா என்ன, அப்புறம் எதையாவது தினமும் எழுதி பதிவுலகில் மேலே வந்துடலாம்னு பார்த்தா தினமும் எழுத சரக்கு கிடைக்க மாட்டேங்குது, நீங்கலெல்லாம் எப்படி தினமும் எழுதறீங்க,
நான் தான் முதல் ஆளு போல, அத கவனிக்கலயே. அடடா மத்தவங்க சொல்ற மாதிரி வடை எனக்கா
@ ஆரூர் முனா செந்திலு
// அதாண்ணே எனக்கும் புரியலை, நான் பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் மட்டும் வாக்களிக்க ஒட்டுப்பட்டை வரமாட்டேங்குது, அவங்க ஏதாவது காசு எதிர் பாக்குறாங்களா என்ன //
அண்ணே தமிழ்மணத்துல ரெஜிஸ்டர் பண்றவங்க கட்டாயமா திரைமணத்துலயும் ரெஜிஸ்டர் பண்ணனும்ன்னு சொல்றாங்க... ஒருவேளை அப்படி ஏதாவது பிரச்சனை இருக்கும்... தமிழ்மண நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி பார்க்கவும்...
// அப்புறம் எதையாவது தினமும் எழுதி பதிவுலகில் மேலே வந்துடலாம்னு பார்த்தா தினமும் எழுத சரக்கு கிடைக்க மாட்டேங்குது, நீங்கலெல்லாம் எப்படி தினமும் எழுதறீங்க //
உங்களைச் சுற்றி ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... தேடுங்கள்...
@ ஆரூர் முனா செந்திலு
// நான் தான் முதல் ஆளு போல, அத கவனிக்கலயே. அடடா மத்தவங்க சொல்ற மாதிரி வடை எனக்கா //
ம்ம்ம் ஆமாம் தல என்சாய்...
சமூக காவலர்கள் தரப்பு. செக்ஸ் கல்வி என்பது கட்டாயம் தான். ஆனால், தொபுக்கடீர் என்று மேல்நிலை பருவத்தில் அறிமுகப்படுத்தாமல் சிறுவயதில் இருந்தே படிப்படியாக கற்றுக்கொடுத்தல் சிறப்பு.///
அட இந்த ஆலோசனை நல்லா இருக்கே?
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// அட இந்த ஆலோசனை நல்லா இருக்கே? //
கருத்துக்கு நன்றி கருண்...
Appo nammalum China pogalaamnu nenakkiren
பால்கனி வழியா எட்டிப்பாக்குறது தப்புங்களா?
பால்கனி-ன்னு ஏன் பேர் வச்சிருக்கீங்கன்னு புரியுது. சில சங்கதிகள் டாப்-ஆங்கிள் வியூ தான்! :-)
((ஏய்... ஏய்... காபியை....)) ரொம்ப லொள்ளு
தமிழ்மணம் ஏன் இப்படிப் படுத்துது...? :-((
கலக்கல் விஷயங்களை வியட்நாமிய காப்பியுடன்(காபி மட்டும்!) கலந்து கொடுத்ததுக்கு நன்றிய்யா மாப்ளே!
பல்கனி..உலகின் பல்வேறு நாடுகளில் இடம் பெற்ற விந்தையான நிகழ்வுகளோடு,
உலக அழகியின் ஜன்னல் சேதியினையும் தாங்கி வந்துள்ளது.
Ok....thaliva....
பால்கனிக் காட்சிகள் பிரமாதம்..
அந்த லிங்கை க்ளிக் செய்து பார்த்தேன்..
இனி திரும்ப க்ளிக் பண்ண மாட்டேன்.
கொடூரமா இருக்கு..
@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
// Appo nammalum China pogalaamnu nenakkiren //
இதுக்காக எதுக்கு சீனா போய்க்கிட்டு... இங்கேயே ஏதாவது பலான புக் படிச்சு கத்துக்கோங்க...
@ கே.ஆர்.பி.செந்தில்
// பால்கனி வழியா எட்டிப்பாக்குறது தப்புங்களா? //
இதுக்கு நாட்டுநடப்புன்னு தான் பெயர் வச்சிருந்தேன் தலைவரே... அது ரொம்பவும் அவுட்டேட்டடா இருந்தது...
அது மட்டுமில்லாம யாரோ ஒரு பிரபல பதிவர் அந்த தலைப்பை சுட்டுட்டாராம்...
ஒயின் ஷாப்பை விட கிக்கா செய்திகள் இருக்கு!!
@ சேட்டைக்காரன்
// பால்கனி-ன்னு ஏன் பேர் வச்சிருக்கீங்கன்னு புரியுது. சில சங்கதிகள் டாப்-ஆங்கிள் வியூ தான்! :-) //
சரியா சொன்னீங்க சேட்டை... இது பால்கனி மட்டுமல்ல... பால் + கனியும் கூட...
@ ♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
// ((ஏய்... ஏய்... காபியை....)) ரொம்ப லொள்ளு //
ஹி ஹி பார்த்துட்டீங்களா... காபியை...
@ சேட்டைக்காரன்
// தமிழ்மணம் ஏன் இப்படிப் படுத்துது...? :-(( //
வழக்கமா நடக்குறது தானே...
@ விக்கியுலகம்
// கலக்கல் விஷயங்களை வியட்நாமிய காப்பியுடன்(காபி மட்டும்!) கலந்து கொடுத்ததுக்கு நன்றிய்யா மாப்ளே! //
அது உங்களுக்காகவே ஸ்பெஷலா போட்டது மாம்ஸ்... காபியை சொன்னேன்...
@ நிரூபன்
// பல்கனி..உலகின் பல்வேறு நாடுகளில் இடம் பெற்ற விந்தையான நிகழ்வுகளோடு,
உலக அழகியின் ஜன்னல் சேதியினையும் தாங்கி வந்துள்ளது. //
நன்றி தல... ஆனா அது பல்கனி இல்லை பால்கனி...
@ NAAI-NAKKS
// Ok....thaliva.... //
Nanri....thaliva....
\\ஆனால், தொபுக்கடீர் என்று மேல்நிலை பருவத்தில் அறிமுகப்படுத்தாமல் சிறுவயதில் இருந்தே படிப்படியாக கற்றுக்கொடுத்தல் சிறப்பு.\\ சாப்பிட, தூங்க, ஏதாவது ஆபத்துன்னு வந்த தன்னைக் காத்துக் கொள்ளுதல் அப்புறம் இந்த இழவு செக்ஸ் இதெல்லாம் எல்லா உயிரினத்துக்கும் இயற்கையிலேயே அறிவு இருக்கு, எல்லாமும் தெரியும். மேனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. சந்தேகமிருந்தா அனிமல் பிளானட் பார்க்கவும், யானை சிங்கத்தில் இருந்து பூனை வரைக்கும் அத்தனையும் [எந்த வகுப்புக்கும் போகாமலேயே] இந்த மேட்டர்களை நன்றாகப் பண்ணும். ஐயோ... ஐயோ...
@ இந்திரா
// அந்த லிங்கை க்ளிக் செய்து பார்த்தேன்..
இனி திரும்ப க்ளிக் பண்ண மாட்டேன்.
கொடூரமா இருக்கு.. //
ஆமாம் மேடம்... நான் அவன் இவன் கிளைமாக்ஸ் பார்த்ததுக்கே ரொம்ப வருத்தப்பட்டேன்...
@ Jayadev Das
// ஒயின் ஷாப்பை விட கிக்கா செய்திகள் இருக்கு!! //
நன்றி சார்... உங்களுடைய அடுத்த பின்னூட்டத்திற்கு கொஞ்சம் விரிவான பதிலை இரவு வெளியிடுகிறேன்... இப்போது ஆணி அழைக்கிறது...
இன்னிக்கி உலக சினிமாவா உங்க தேட்டர்ல, ஓகே ஒகே, தகவல்கள் அருமை, சென்சார் செய்த படத்துக்கு இணைப்பு ஏதாச்சும் கெடைக்குமா.. சும்மா ஒரு இதுக்கு கேட்டு வக்கிறதுதானே...
@ Dr. Butti Paul
// இன்னிக்கி உலக சினிமாவா உங்க தேட்டர்ல, ஓகே ஒகே, தகவல்கள் அருமை, சென்சார் செய்த படத்துக்கு இணைப்பு ஏதாச்சும் கெடைக்குமா.. சும்மா ஒரு இதுக்கு கேட்டு வக்கிறதுதானே... //
கூகுள்ல போய் Catalina Robayo Wardrobe Malfunction ன்னு டைப் பண்ணுங்க தன்னால வரும்...
Unnudaya ulaga arivu arpudham dear...
பல்சுவை தகவல்கள்...!!!
அய்யய்யோ அந்தப்படம் செமையா பயமுறுத்துது, ம்ம்ம் ஊருக்கு வந்தா தலையில தொப்பி வச்சிட்டுதான் சுத்தணும் போல....
அந்த வீடியோ கிளிப்புல சத்தியமா ஒரு பயலும், காப்பியை பார்கலைன்னு உளவுத்துறை ரிப்போர்ட் வந்துருக்கு ஜாக்கிரதை...
tamilmanam 7 dandanakkaa...
கடைசிவரை காப்பிய பார்க்கவே இல்லை, கண்ணுல பட்டது எல்லாம் அந்த மஞ்சளா... குடி குடி ன்னு கூப்பிட்ட பீர் மக்-ல தான் மச்சி!!
பால்கனி மேட்டர்கள் சூப்பர். பகிர்வுக்கு நன்றி பிரபா.
ஜெர்மானிய புகைப்படம், அதகளம்.
ஆஹா எழுதும்ப்போது இனிமே கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும் போல ..........
தொங்க விட்டிருவாங்க ..........
அந்த காபி பெயரு விக்கி காபியா ?
பால்கனி வியூ சூப்பர்.
மொத சென்சொறு பண்ணத காபி வீடியோ சரி கட்டிரிச்சு .
முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா
சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?
அனைவரும் http://udanz.com ல் சேர்ந்து பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டிக்கு ஆதரவு தாரீர்.
கேபிள் சஙக்ர்.
"கோ"மான்களால் தான் டயானா "டை"ஆனார்!கொஞ்சம் அவங்க நிலைமையையும் புரிஞ்சுகிட்டா சரி!
பால்கனியில் இருந்து பாக்கும் போது எல்லாமே சூப்பரு!
பால் கனி --ஆடையில்லாத பால் போல அருமை முதல் செய்தியை போல ..
ஒயின் ஷாப்...இப்பம் பால்கனி... கலக்குறீங்க...
பல்சுவை பதிவா இருக்கு. எல்லாத்தையும் கல்ந்துகட்டி போட்டிருக்கீங்க..! ஐபோன் ஐந்து, காபி மேட்டரு, பாலியல் கல்வின்னு போட்டுத் தாக்கிட்டீங்க. அந்த கொலை மேட்டரு இன்னும் கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிடுச்சு..! வாழ்த்துக்கள் பிரபா..
Post a Comment