26 September 2011

பிரபா ஒயின்ஷாப் – 26092011


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்னையில் திடீர் திடீரென மழை பெய்வது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் கவலை அளிக்கிறது. பின்னே, பேருந்தில் தினசரி தரிசனம் தரும் SIET சிட்டுக்கள் லீவ் எடுத்துக்கொண்டால் அந்தநாள் எப்படி இனிய நாளாக அமையுமாம்.

கேபிள், ஜாக்கியெல்லாம் என்னங்க சினிமா விமர்சனம் எழுதுறாங்க. புதுப்படம் ரிலீசானதும் பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் பயணித்துப்பாருங்கள். படத்தை அலசி ஆராயுறாங்க பசங்க. சென்ற வாரம் பேருந்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் “வந்தான் வென்றான்” படத்தை அக்குவேராக ஆணிவேராக பிரித்துக்கொண்டிருந்தார்கள். திருவொற்றியூரிலிருந்து தேனாம்பேட்டை செல்வதற்குள் கிட்டத்தட்ட முழுப்படத்தையும் பார்த்த திருப்தி கிடைத்துவிட்டது. நடிகர் ஜீவா மட்டும் அவர்கள் பேசியதை கேட்டிருந்தால் ஒரு முழம் கயிற்றை தேடியிருப்பார்.

ரஜினி ஒரு மாமனிதர், சகாப்தம், நல்லவருக்கு நல்லவர். இப்படியெல்லாம் இருக்கும்போது ரஜினி வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பதை ஏன் தடுக்க முயற்சிக்கிறார்கள். ரஜினி வாழ்க்கை வரலாற்றை பார்த்து நாலு நாதாரிப்பசங்க திருந்தினால் நாட்டுக்கு நல்லதுதானே. என்ன நாஞ்சொல்றது...?

என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். அப்படியே திறந்தாலும் பிரவுசர் க்ராஷ் ஆகிவிடுவதாக சிலர் சொல்கின்றனர். எனக்கு புரிகிறது. ஆனால் இந்த சிக்கலை எப்படி சரிகட்டுவது என்றுதான் தெரியவில்லை. யாராவது உருப்படியான ஆலோசனை சொல்லுங்களேன். டாட் காமாக மாற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் என் கேள்வி அப்படி மாற்றிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடுமா...?

ஜொள்ளு:
நீ ஹார்மோனிய கட்டையம்மா...
என் ஹார்மோன் செய்யுது “சேட்டை”யம்மா...
ட்வீட் எடு கொண்டாடு:
ஆறுதல் சொல்ல உண்மையான நண்பன் இருந்தால்.."காதல் தோல்வி" கூட "காமடி படம்தான்"#மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன்..

பெரியார் ஒரு நாய் வளர்த்தார் என்று கேள்விப்பட்டேன்! அதனுடைய ப்ரீட்தான் ஈவிகேஎஸ் என்று தெரியாமல் போய்விட்டது!

பணியாளர்களை வாட்டி வதைத்து... பணம் பண்ணும் மொதலாளிகளைக் கண்டால், பொணம் பண்ணத் தோன்றுகிறது... #என்னிக்கு எங்க பாஸப் போடப்போறேன்னு தெரில!

லஞ்ச்டைம் ஆயிட்டா "ஜெஸி ஜெஸி"னு சொல்ற வாய்கூட "பசி பசி"னு சொல்லுது # காதலிக்கு அவ்வோலோதான் மதிப்பு

அறிமுகப்பதிவர்: சைக்கிள்காரன்
ஆனந்த விகடன் வலைபாயுதேவில் பார்த்து, டிவிட்டரில் தொடர்ந்து அப்படியே அங்கிருந்து நூல் பிடித்து இவருடைய வலைப்பூவிற்கு சென்றேன். கொஞ்சம் பழைய ஆள்தான். ஆனால் ஓட்டரசியலில் சிக்காதவர். நம்ம கடைல காண்டம் கவிதைகள் போட்டாமாதிரி இவர் செருப்புக் கவிதைகள் எழுதியிருக்கார். மங்காத்தா படம் பார்த்துவிட்டு இவர் அஜித்துக்கு கொடுத்த அட்வைஸ் என்னவென்று பாருங்கள். சமீபத்தில் எழுதியது, பணம் தின்னும் பிணங்கள்.

கேட்ட பாடல்:
பன்னிக்குட்டியார் அறிமுகப்படுத்திய ஒரு பலான வீடியோவில் முதல்முறையாக இந்தப்பாடலை கேட்டேன். அதே பாடலை விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் மறுமுறை கேட்டு ஈர்க்கப்பட்டேன். ஒருவழியாக யூடியூபில் தேடிக்கண்டுபிடித்த அந்த பாடல் ஆர்யா 2 என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ரிங்க ரிங்கா பாடல். யாருங்க இந்த அல்லு அர்ஜுன் இந்த ஆட்டம் ஆடுறார். I’M IMPRESSED.
மயக்கம் என்ன, ஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய இடுகைகள் தனியாக வரும்.

பார்த்த வீடியோ:
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க...

நேற்று பிசாசுக்குட்டி வலைப்பூவில் பார்த்த வீடியோ...

ரசித்த புகைப்படம்:
படத்தை பெரிதாக பார்க்க தனி விண்டோவில் திறக்கவும்
கடைசியா ஒரு தத்துபித்துவம்:
இரண்டு சொட்டு போட்டா அது போலியோ...
நாலு சொட்டு போட்டா அது உஜாலா...
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்...
இதுதான் இன்னைக்கு மேட்டர்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

37 comments:

Anonymous said...

அண்ணே வணக்கம். எனக்குத்தான் வடை போல. என்ன தான் அண்ணே பண்ணுறது. இந்த ஒரு வாரமா வீட்ல தான் இருக்கேன். தற்பொழுது ரயில்வே வேலை கிடைத்ததால் பழைய வேலையை விட்டு விட்டேன். ஜாயின் பண்ண 1 மாதம் இருக்கிறது. தினம் 10 பதிவெழுத நான் என்ன தேர்ந்த எழுத்தாளனா? ஏதோ என்னால் முடிந்தது. தினம் 1 சொந்த பதிவு 2 காப்பி பதிவு அவ்வளவு தான்.

சக்தி கல்வி மையம் said...

இந்த அல்லு அர்ஜுனின் தாய் மாமந்தான் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி...

Unknown said...

மாப்ள அந்த குப்ப கொட்ற விஷயம்தான்யா இருக்கறதுலையே டாப்பு ஹிஹி!

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
வாங்க என் ஆருயிர் முனா செந்திலு அவர்களே...

// தினம் 10 பதிவெழுத நான் என்ன தேர்ந்த எழுத்தாளனா? ஏதோ என்னால் முடிந்தது. தினம் 1 சொந்த பதிவு 2 காப்பி பதிவு அவ்வளவு தான். //

சிறந்த எழுத்தாளன் ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் எழுதனும்ன்னு யார் சொன்னது... ஒரே ஒரு சொந்தப்பதிவு... அதுவே போதுமே... செய்திகளை காப்பி பேஸ்ட் செய்து போடலாம் தவறில்லை... ஆனால் செய்திக்கு கீழே உங்களுடைய கருத்தையும் குறைந்தபட்சம் நான்கு வரிகளில் பதிவு செய்யலாமே...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// இந்த அல்லு அர்ஜுனின் தாய் மாமந்தான் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி... //

ஆந்திரா பார்டர்ல இருந்துட்டு இவ்வளவு மேட்டர் தெரிஞ்சி வச்சிருக்கீங்களா...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// மாப்ள அந்த குப்ப கொட்ற விஷயம்தான்யா இருக்கறதுலையே டாப்பு ஹிஹி! //

நன்றி மாம்ஸ்...

Anonymous said...

///Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
வாங்க என் ஆருயிர் முனா செந்திலு அவர்களே...

// தினம் 10 பதிவெழுத நான் என்ன தேர்ந்த எழுத்தாளனா? ஏதோ என்னால் முடிந்தது. தினம் 1 சொந்த பதிவு 2 காப்பி பதிவு அவ்வளவு தான். //

சிறந்த எழுத்தாளன் ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் எழுதனும்ன்னு யார் சொன்னது... ஒரே ஒரு சொந்தப்பதிவு... அதுவே போதுமே... செய்திகளை காப்பி பேஸ்ட் செய்து போடலாம் தவறில்லை... ஆனால் செய்திக்கு கீழே உங்களுடைய கருத்தையும் குறைந்தபட்சம் நான்கு வரிகளில் பதிவு செய்யலாமே...///

நன்றி அண்ணே முயற்சிப்போம்,

நிரூபன் said...

இனிய காலை வணக்கம்,

சினிமா விமர்சகர்கள் பற்றிய அருமையான கருத்தினைத் தங்களின் நடை முறை வாழ்வில் கண்ட மனிதர்களின் உளக் கருத்துக்களோடு பகிர்ந்திருக்கிறீங்க, கலக்கல்.

உங்கள் தளம் எனக்கு இலகுவாக எந்தச் சிக்கலும் இன்றி ஓப்பின் ஆகின்றது.

தளம் க்ராஷ் ஆகின்றது என்று யாராவது சொன்னால் அதற்குப் பரிகாரமாக டெம்பிளேட்டினை மாற்றிப் பாருங்கள். சைட் பாரில் உள்ள தேவையற்ற விட்ஜெட்டுக்களை நீக்கிப் பாருங்கள்.

நிரூபன் said...

லொள்ளு சூப்பர்...சந்தம் கொண்டு சிந்து பாட வைக்கும் நறுக்கு கவிதை.


pinjimanasu
ஆறுதல் சொல்ல உண்மையான நண்பன் இருந்தால்.."காதல் தோல்வி" கூட "காமடி படம்தான்"#மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன்..//

இந்த டுவிட்ஸ் கலக்கல்.


அறிமுகப் பதிவர் சைக்கிள்காரன் அவர்களிற்கு வாழ்த்துக்கள்.

வீடியோ...நாயகி கயிற்றிலிருந்து மேலே வரும் போதே கிறங்க வைக்குது..
அவ்...

ஏனைய பகிர்வுகளும் கலக்கல்/

ஒயின் ஷாப் கொஞ்சம் சூடேத்துது.

settaikkaran said...

சாயா குடித்தாற்போல் ஹாயா இருக்குதய்யா
ஸ்ரேயா திருவுருவம் பார்த்தவுடன்-தீயாட்டம்
போட்டீர் புகைப்படத்தை புண்ணியமே உங்களுக்கு
சேட்டை வாயெல்லாம் பல்.

:-)))))))))))

settaikkaran said...

தமிழ்மணம் நாட் வொர்க்கிங்! :-(

Prem S said...

இந்த வார ஜொள்ளு பழைய கள்ளு
ஆனது ஏன் ? உண்மையை உரைக்கும் வீடியோ அருமை

நிரூபன் said...

தமிழ்மணம் இணைச்சுட்டேன்.

rajamelaiyur said...

Video super . . .

rajamelaiyur said...

First twitt super . . .

பாலா said...

குடிப்பழக்கம் இல்லாதவர்களும் வந்து போகும் ஒரே ஒயின்ஷாப்.. பிரபா ஒயின்ஷாப்... :)

Unknown said...

மாப்ள ஓட்டு போட்டாச்சி....TM 3!

நாய் நக்ஸ் said...

Its ok......
Super......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹார்மோனியக் கட்டையா அது.... சந்தனக்கட்டைய்யா..... சந்தனக்கட்டை.....!

Unknown said...

அருமை பிரபாகரன்..
வீடியோ எல்லாம் சூப்பர்

எல்லாத்தையும் விட கடைசி தத்துபித்துவம் அதுலயும் மூணாவது இன்னும் கண்ணுலேயே நிக்குது

Unknown said...

குவார்ட்டர் சொல்லாம ஒரு ஒயின்ஷாப்பான்னு நெனச்சேன்.. சொட்டு சொட்டா சொல்லிட்டியே தம்பி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கேட்ட பாடல்:பன்னிக்குட்டியார் அறிமுகப்படுத்திய ஒரு பலான வீடியோவில் முதல்முறையாக இந்தப்பாடலை கேட்டேன். /////

அந்த வீடியோவுல இப்படி ஒரு பாட்டும் வருதுன்னு சத்தியமா எனக்கு இப்பத்தான்யா தெரியும்...... (ங்கொக்காமக்கா வீடியோ பாக்க சொன்னா ஆடியோ கேக்கிறாய்ங்களே?)

Sivakumar said...

// டாட் காமாக மாற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் என் கேள்வி அப்படி மாற்றிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடுமா...//

நடக்குமென்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும்...

கோகுல் said...

உங்களுக்குபேருந்தில்கிடைத்த அனுபவம் எனக்கு சலூனில் கிடைத்தது.படம் தான் வேற.
ஆனால் சிலது நல்ல படங்கள்ன்னு தலையில் தூக்கி வைச்சுகிட்டாங்க
அதுல ரெண்டு பசங்க,களவாணி.

Anonymous said...

பிரபா ஒயின்ஷாப் அருமை ...
லொள்ளு சூப்பர்...
கலக்குங்க பிரபாகரன்...

Anonymous said...

அதென்னங்க பிரபா ஒயின்ஷாப்

////இரண்டு கல்லூரி மாணவர்கள் “வந்தான் வென்றான் படத்தை அக்குவேராக ஆணிவேராக பிரித்துக்கொண்டிருந்தார்கள்.////

உண்மைதான்.. என் நண்பன் ஒருவன் படம் பார்த்திவிட்டு அவன் கதை சொல்லிவிட்டால் மீண்டும் படம் பார்க்கவேண்டிய அவசியமே இருக்காது.... சீன் பை சீன் சொல்வான்...

திறமையானவர்கள் நிறைய பேர் வெளிச்சம் படாமல் இருக்கிறார்கள்.


//ரஜினி வாழ்க்கை வரலாற்றை பார்த்து நாலு நாதாரிப்பசங்க திருந்தினால் நாட்டுக்கு நல்லதுதானே. என்ன நாஞ்சொல்றது...?///

ஒன்னுஞ் சொல்ல விரும்பல

///என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். அப்படியே திறந்தாலும் பிரவுசர் க்ராஷ் ஆகிவிடுவதாக சிலர் சொல்கின்றனர்.///

எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே... டெம்ப்ளேட் மாற்றி பாருங்களேன்...


////antojeyas
லஞ்ச்டைம் ஆயிட்டா "ஜெஸி ஜெஸி"னு சொல்ற வாய்கூட "பசி பசி"னு சொல்லுது # காதலிக்கு அவ்வோலோதான் மதிப்பு///

இது டாப்... சூப்பரா இருக்கு!

///அறிமுகப்பதிவர்: சைக்கிள்காரன்///

சைக்கிள்காரன் ஓ(ட்)டி போய் பார்த்திடவேண்டியதுதான்....


/////கேட்ட பாடல்:
////ஆர்யா 2 என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ரிங்க ரிங்கா பாடல். யாருங்க இந்த அல்லு அர்ஜுன் இந்த ஆட்டம் ஆடுறார். I’M IMPRESSED.///

காலையில் எழுந்துதான் பார்க்கனும் (2 டூ 8 தானே அன்லிமிடெட் :) )

///கடைசியா ஒரு தத்துபித்துவம்:
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்...///

செம தத்துவம் போங்க!!!

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// தளம் க்ராஷ் ஆகின்றது என்று யாராவது சொன்னால் அதற்குப் பரிகாரமாக டெம்பிளேட்டினை மாற்றிப் பாருங்கள். சைட் பாரில் உள்ள தேவையற்ற விட்ஜெட்டுக்களை நீக்கிப் பாருங்கள். //

செய்து பார்க்கிறேன் தல... கருத்துக்கு நன்றி...

Philosophy Prabhakaran said...

@ சேட்டைக்காரன்
// சாயா குடித்தாற்போல் ஹாயா இருக்குதய்யா
ஸ்ரேயா திருவுருவம் பார்த்தவுடன்-தீயாட்டம்
போட்டீர் புகைப்படத்தை புண்ணியமே உங்களுக்கு
சேட்டை வாயெல்லாம் பல். //

உங்களுக்காகவே ஸ்பெஷலா போட்டது சேட்டை... புகைப்படத்தின் கீழே உள்ள வாசகத்தில் சேட்டை என்ற வார்த்தையை மட்டும் குரிஈடுகளுக்குள் போட்டிருக்கிறேன் பாருங்கள்...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// இந்த வார ஜொள்ளு பழைய கள்ளு
ஆனது ஏன் ? //

இதுவே பழசாயிடுச்சா... என்னை விட்டா நான் டி.ஆர்.ராஜகுமாரி ஸ்டில்லை கூட கண்டுபிடிச்சு போடுவேன்...

Philosophy Prabhakaran said...

@ நிரூபன்
// தமிழ்மணம் இணைச்சுட்டேன். //

நன்றி நண்பா... தொடரட்டும் உங்கள் சேவை...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அந்த வீடியோவுல இப்படி ஒரு பாட்டும் வருதுன்னு சத்தியமா எனக்கு இப்பத்தான்யா தெரியும்...... (ங்கொக்காமக்கா வீடியோ பாக்க சொன்னா ஆடியோ கேக்கிறாய்ங்களே?) //

ஹி ஹி... நாங்கல்லாம் நித்யானந்தா வீடியோ பார்த்துட்டு "மச்சமுள்ள மச்சானுக்கு..." பாட்டை தேடி டவுன்லோட் பண்ணவங்க... கண் பாக்குறது என்னவோ வீடியோவை தான் ஆனால் ஆடியோ நம்மையே அறியாமல் மனசுல ஒட்டிக்கிது...

Philosophy Prabhakaran said...

@ கோகுல்
// ஆனால் சிலது நல்ல படங்கள்ன்னு தலையில் தூக்கி வைச்சுகிட்டாங்க
அதுல ரெண்டு பசங்க,களவாணி. //

பசங்க உண்மையிலேயே நல்ல படம்தான் நண்பா... களவாணி சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ ஷீ-நிசி
// காலையில் எழுந்துதான் பார்க்கனும் (2 டூ 8 தானே அன்லிமிடெட் :) ) //

நானும் அதே கேஸ்தான்...

Anonymous said...

///Philosophy Prabhakaran said...

எனக்கு கிடைக்கும் அஞ்சு பத்து சில்லறையையும் கெடுக்கணுமா...? ஏன் இந்த கொலைவெறி...///

அண்ணே வணக்கம். ஒரு விளம்பரம். ஏதோ நம்மால முடிஞ்சது, அவ்வளவுதான்,

சி.பி.செந்தில்குமார் said...

நேற்று உங்க பிளாக் ஓப்பன் ஆகலை. சோ லேட்

Rizi said...

//நேற்று உங்க பிளாக் ஓப்பன் ஆகலை. சோ லேட்//

ஆமாம் நான் வந்து திரும்பி போயிட்டன்..

ஒயின்ஷாப் பிரமாதம்.. அந்த ரிங்கு ரிங்கா பாடல் ஆந்திராவில் தடையாம்.. வார்த்தைகளில் உள்ள ஆபாசத்திற்கு. ஆந்திர நண்பர்கள் சொன்னார்கள்.

Jayadev Das said...

\\என்னுடைய வலைப்பூ சரிவர திறக்க மறுக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். அப்படியே திறந்தாலும் பிரவுசர் க்ராஷ் ஆகிவிடுவதாக சிலர் சொல்கின்றனர். எனக்கு புரிகிறது. ஆனால் இந்த சிக்கலை எப்படி சரிகட்டுவது என்றுதான் தெரியவில்லை. யாராவது உருப்படியான ஆலோசனை சொல்லுங்களேன். \\ Google Reader -ல் RSS Feed Subscribe பண்ணி படிக்கச் சொல்லு மச்சி, ஒரு பிரச்சினையும் வராது, ஆனா உனக்கு ஒட்டு, கமெண்ட்ஸ் போடுவது கஷ்டம். ஹி......ஹி......ஹி......ஹி......