அன்புள்ள வலைப்பூவிற்கு,
உதட்டழகி ஏஞ்சலினா ஜோலியின் ஜோடி பிராட் பிட் ஜோலிக்காக லண்டன் சென்றிருக்க, தனியாக இருக்கும் நேரத்தை வீணடிக்க வேண்டாமென்று ஏஞ்சலினா ஜோலி விமானம் ஓட்ட கற்றுக்கொண்டிருக்கிராராம். கூடிய விரைவில் அவர்களின் தத்து குழந்தைகள் பிறந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்திருக்கிறாராம். அந்த வகையில் வியட்னாமுக்கும் செல்வார் என்று தெரிகிறது. (விக்கி மாம்ஸுக்கு ஜாலிதான்).
உக்ரைன் நாட்டில் நடந்த கொழுக்கட்டை தின்னும் போட்டியில் 77 வயது முதியவர் ஒருவர் அரை நிமிடத்தில் பத்து கொழுக்கட்டைகள் தின்று முதல் பரிசை வென்றிருக்கிறார். ஆனால் பரிசைப் பெற்றுக்கொண்ட சில நிமிடங்களில் உடல்நிலை மோசமடைந்து இறந்துவிட்டாராம். (இனிமே நீங்க கொழுக்கட்டை சாப்பிடுவீங்க...?)
வெளிநாட்டு ஜொள்ளு:
படர்ந்திருக்கும் அல்லி... மிங்கா கெல்லி... |
ஆஸ்திரியா நாட்டில் ஒருவர் இறந்துபோன தனது 88 வயது ஆண்ட்டியின் சடலத்தை சில மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு புகார் கொடுக்க, இப்போது இவரை கைது செய்திருக்கிறார்கள். விசாரித்தபோது ஆண்ட்டிக்கு மாதாமாதம் கிடைக்கும் பென்ஷன் தொகையை அனுபவிக்கவே இப்படி செய்ததாக கூறியிருக்கிறார். (இறந்துபோன ஆண்ட்டிக்கு காரியம் செய்றதை விட்டுட்டு இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்கான்).
மலைக்க வைத்த புகைப்படம்:
பிரிட்டனில் நடந்த காட்டுவிலங்குகள் பற்றிய புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்களுள் ஒன்று |
எழுத்தாளர்கள் என்றாலே சண்டைபிடித்துக்கொள்வது சகஜம்தான். இப்போது ட்விட்டர் ஊடாக உலகளவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டியும், தஸ்லிமா நஸ்ரினும் சண்டை போட்டிருப்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ். இவர்கள் இருவருமே டவுசரை கிழிப்பதில் பெயர்போனவர்கள். மேட்டர் இதுதான், ட்விட்டரில் 72 வயது சல்மான் ருஷ்டிக்கு யாரோ ஒரு இளம்பெண் ரூட்டு விட்டிருக்கிறார். அதைப் பார்த்த தஸ்லிமா அந்தாளுக்கிட்ட ஜாக்கிரதையா இருந்துக்கோம்மா என்ற ரீதியில் அட்வைஸ் செய்ய பிரச்சனை கிளம்பியிருக்கிறது. (#சல்மான் கானுக்கு கூட இப்படிப்பட்ட ரசிகைகள் இருக்கமாட்டார்கள்).
கலாச்சார சுற்றுலா:
இன்றைய ஸ்பெஷல்: சிங்கப்பூர்
பரந்த மனப்பான்மை கொண்ட பமீலா ஆண்டர்சன் சமீபத்தில் ஒரு மாத இதழ் பேட்டியில் “எனக்கு மைக்கேல் ஜாக்சன் மீது ஒரு “இது” இருந்தது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் மட்டும் ப்ரோபோஸ் செய்திருந்தால் ஓகே சொல்லியிருப்பாராம். பதினைந்து வயதில் ஒரு மகனும், பன்னிரண்டு வயதில் ஒரு மகனும் இருக்கும் பமீலாவுக்கு இந்த பேச்செல்லாம் தேவையா...?
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
20 comments:
ஒலக அதிசயம்டா சாமீ... தமிழ்மணத்துல ஒடனே இணைஞ்சிடுச்சு...
வெளி நாட்டு ஜொள்ளு அருமை கொழுக்கட்டை மேட்டர் அருமை பால் கனி பருக இனிமை
மலைக்க வைத்த புகைப்படம்... அருமை..
Padam super....
Engappa voting butten ???
இனி கொழுக்கட்டை தின்னும் பொது எல்லாம் இது தான் ஞாபகம் வரும்..
அல்லி அழகாய்
பதிவும்
நீங்கள் எழுதியிருக்கும் ஐந்து மேட்டர்களுமே அட்டகாசமானவை.
ஒரு சின்ன வேண்டுகோள் (ஆலோசனை என்றும் வைத்துக் கொள்ளலாம்)
இந்த ஒவ்வொரு மேட்டரையுமே தனித்தனிப் பதிவாக விரிவுபடுத்தி ‘மானே, தேனே’ போட்டு மசாலா தூவி எழுதினீர்களேயானால் ஐந்து சூப்பர்ஹிட் பதிவுகள் ரெடி. ஜர்னலிஸத்தின் மொத்த ரகசியமே இதுதான் :-)
அந்த வகையில் வியட்னாமுக்கும் செல்வார் என்று தெரிகிறது. (விக்கி மாம்ஸுக்கு ஜாலிதான்).//
அவன் ஏற்கனவே ஜாலியா'தான்யா இருக்கான்...
தமிழ்மணம் ஏழு டண்டனக்கா குத்தியாச்சு..
பால்கனி இனிமை.
பால்கனி மேட்டர்கள் எல்லாமே அருமை பிரபா.
all are superb,, //மலைக்க வைத்த புகைப்படம்... அருமை.// yes
Philosophy Prabhakaran said...
ஒலக அதிசயம்டா சாமீ... தமிழ்மணத்துல ஒடனே இணைஞ்சிடுச்சு...
ஹா ஹா லக்கி ஃபெலோ
கெல்லி....கள்ளி.......
மேட்டர்கள்லாம் நல்லா வலை போட்டு புடிக்கிறீங்க......
அப்போ விக்கிக்கு செம ஜாலிதான் போல.....
பால்கனி வியூ சூப்பர்!
இனிய இரவு வணக்கம் பாஸ்,
வித்தியாசமான + விந்தையான தகவல்களைத் தாங்கி வந்திருக்கிறது பால்கனி..
கலக்கல்.
நல்ல மிக்ஸ்சர் பிரபா
பால்கனி Special show...படம் அருமை...ஜொள்ளு..No Comments...-:)
Post a Comment