23 September 2011

மூணு குவாட்டர் மார்பியஸும் பிராப்ள பதிவர்களும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மதுரையில் இருந்து பதிவர் சந்திப்பிற்காக வந்திருந்த மணிவண்ணன் வம்ப வெலைக்கு வாங்குறதுக்காகவே வந்திருப்பார் போல. பதிவர் சந்திப்பு முடிந்ததும் என்னையும் அஞ்சாசிங்கம் செல்வினையும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் டிஸ்கவரி புக் பேலஸில் இருந்து டாஸ்மாக்கிற்கு இழுத்துச் சென்றார். எங்களுக்கும் கை நடுங்க ஆரம்பித்திருந்ததால் வேறு வழியில்லாமல் அவருடன் சென்றோம். இனி ஓவர் டூ டாஸ்மாக்...

ரொம்ப நாளா ருசித்துப்பார்க்க ஆசைப்பட்ட மார்பியஸ் கருப்பு பெட்டியில் கம்பீரமாக இருந்ததால் அதையே வாங்கிவிட்டோம். அப்புறம், சில்லி சிக்கன், நெத்திலி மீன், ஜில்தண்ணி (பதிவர் அல்ல) போன்றவற்றை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். அப்போது, மணி ஜில்தண்ணி குடிச்சா உடம்புக்கு நல்லதில்லன்னு என்ட் (ENT) டாக்டர் சொன்னதா சொல்லி ஒரு ஆர்டினரி வாட்டர் பாட்டில் ஆர்டர் பண்ணார். (சரக்கடிச்சா மட்டும் உடம்புக்கு ரொம்ப நல்லதாமாம்). மேலே குறிப்பிட்ட சங்கதிகள் வந்து இரண்டு ரவுண்டு உள்ளே போனதும் மங்காத்தா ஆரம்பமானது...

(இனி வரும் பத்திகளை போதையில் புலம்பும் தொனியில் படிக்கவும்)
முதலில் பாஸ் (எ) பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் நான்தான் ஆரம்பித்தேன், “உன்கிட்ட வந்து உன் டவுசரு கிழிஞ்சிருக்குன்னு சொன்னா நீ என்ன பண்ணனும். என்ன செல்லம் பண்ணனும். இல்லடா என் டவுசரு கிழியலன்னு சொல்லணும். இல்லன்னா கிழிஞ்ச டவுசர கையை வச்சி மறச்சிட்டு போகணும். அத வுட்டுட்டு அதோ அங்க போறானே அவன் டவுசர் கூட கிழிஞ்சிருக்கு. பக்கத்து தெருவுல ஒருத்தன் இருக்கான் அவன் டவுசர் கூட கிழிஞ்சிருக்கு. கொஞ்சம் பின்னாடி திரும்பிப்பாரு உன் டவுசர் கூட கிழிஞ்சிருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்...? இல்ல என்ன அர்த்தம்ன்னு கேக்குறேன்...” என்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேள்வியை இருவரிடமும் முன் வைத்தால் அவர்கள் “டவுசர்” என்றால் என்னவென்று புரியாமல் உங்களைப்போலவே முழித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் அஞ்சாநெஞ்சன் மணி, இன்னொரு பக்கம் அஞ்சாசிங்கம் செல்வின் நடுவில் அமர்ந்திருந்த எனக்கு அச்சமாக இருந்ததால் இதுக்கு மேல மொக்கை போட வேண்டாமென்று அடக்கி வாசித்தேன்.

செல்வின் மார்பியஸ் பாட்டிலையே பார்த்துக்கொண்டிருந்தார். அய்யய்யோ கிரேக்க வரலாற்றில் வரும் மார்பியஸ் பற்றி ஏதாவது ஆரம்பிக்கப்போகிறார் என்று பதறியடித்து பேச்சை அரசியல் பக்கம் திருப்ப, செல்வின் ஆரம்பித்தார். “வாஜ்பாய்க்கு மூட்டு வலி வந்தப்போ விஷயத்தை இந்தியா “ஃபுல்லா” பப்ளிசிட்டி பண்ணாங்க. ஆனா சோனியா காந்திக்கு கேன்சர் வந்ததை மட்டும் ஏன் பொத்தி பொத்தி வைக்கிறாங்க...?” என்ற கேள்வியை கேட்டுவிட்டு ஒரு கட்டிங்கை கப்பென்று அடித்துவிட்டு அவரே தொடர்ந்தார், “ஏன்னா சோனியாவுக்கு வந்தது கேன்சரே இல்ல. அவங்களுக்கு ஒரு பலான நோய் வந்திருக்கு” என்றார். “சும்மா சொல்லாதீங்க...” என்று மெத்தனமாக ஒரு லுக் விட்டேன். இன்னும் சீரியஸாக பேச ஆரம்பித்தார், “இந்த வியாதி மூன்று பிரிவினருக்குத்தான் வரும். ஒன்று, சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். இரண்டு, பால்ய விவாகம் செய்தவர்கள். மூன்றாவது, பாலியல் தொழிலாளிகள். இந்த மூன்றில் சோனியா எந்த பிரிவுன்னு நீயே யோசிச்சுப்பாரு”. சொல்லிட்டு அவருடைய மருத்துவ நண்பருக்கு போன் போட்டு அந்த நோயின் பெயரை சொல்லச்சொன்னார். அவர் gonorrhoea, syphillis என்று என்னென்னவோ சொன்னார். இவ்வளவு தகவல்களையும் சொல்லிவிட்டு கடைசியாக செல்வின் ஒரு வார்த்தை சொல்ல, மூவரும் கு”பீர்” என்று சிரித்தோம். அந்த ஒரு வார்த்தை, “அன்னை சோனியா”

அடுத்து மணி ஆரம்பித்தார், “எனக்கு மங்காத்தா படம் ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா...?”. ஏன் என்றேன் நான். “படத்துல அஜீத் அடிக்கடி மணி, மணி, மணி, மணின்னு என் பேரையே சொல்றாரு தெரியுமா” என்று பெருமையுடன் சொன்னார். ம்ம்ம் வெளங்கிடும்ன்னு மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். “தலய தறுதலன்னு நீ எப்படிய்யா எழுதலாம்...? அவராச்சு படத்துல மட்டும்தான்யா, ஆனா ஒருத்தரு நிஜத்துல தறுதலையா சுத்திட்டு இருக்காரு அவரப்பத்தி எழுதுய்யா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க ஊர்ல அவரோட பாட்டு ரிலீஸுக்கு அவர் என்னென்ன அட்டூழியம் பண்ணாரு தெரியுமா...? இதுல அந்தாளு டெல்லிக்கு போய் உண்ணாவிரதம் இருக்குறாராமாம். தமிழகத்தின் அன்னா ஹஜாரேன்னு தனக்குத்தானே போஸ்டர் அடிச்சிக்கிட்ட பொடலங்காயை பாத்திருக்கியா...? செவனேன்னு கிடக்குற கன்னுக்குட்டியையும், ஆட்டுக்குட்டியையும் தூக்கிட்டு வந்து அந்தாளு பண்ற கொடுமைக்கு அளவே இல்ல. எங்க தலைக்கு ‘என் **** குடியிருக்கும் ரசிகர்களே...” ன்னு பேசி ஊர ஏமாத்த தெரியாதுய்யா....” என்று என்னென்னவோ பேசிக்கொண்டே போனார்.

“அம்பதாவது சுறா புட்ட தின்னுட்டு பேதியாகி கிடக்குற நிதி குடும்பத்துக்கே நிதி குடுக்க வந்த ஆத்தாதான்யா எங்க மங்காத்தா...” என்று நடுவில் பஞ்ச் டயலாக் வேற. இதுக்கு மேல இங்க இருந்தா ஆத்தா வரமாட்டா ஆட்டோதான் வரும்ன்னு இருந்த கட்டிங்கை காலி பண்ணிட்டு ஆளுக்கொரு திசையா சிதறினோம்.

“யப்பா... இனிமே சத்தியமா தண்ணியடிக்க கூடாதுடா...”

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKRAN

Post Comment

32 comments:

Unknown said...

மாப்ள உடான்ஸ் உடாதே..நீ தான் கைய புடிச்சி இழுத்திட்டு போனதா மணி சொன்னாரு..கொய்யால இங்லிஸ் காரேன் போல இதல ஒன்லி ராவாத்தான் அடிப்பியாமே ஹிஹி!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்

படிச்சிட்டு வாரேன்.

Anonymous said...

காலையில் டான் என்று பதிவு விழுந்து விடுகிறதே எப்படி அண்ணே அது, இருந்தாலும் நான் தான் இன்றும் முதல் ஆள். நேற்று நீங்கள் கூறியது போல் தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பினேன், பதில் இல்லையே,மற்றப்படி பதிவு அருமை, நம்மைப்போன்ற குடிமகன்களெல்லாம் குடிக்கும் வரை தான் நன்றாக பேச வேண்டும், பிறகு உளறினால் தான் கொடுத்த காசுக்கு மதிப்பு. அடுத்த பதிவர் சந்திப்புக்கு அழையுங்கள். நான் தருகிறேன் அடுத்த ட்ரீட்டு,

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// மாப்ள உடான்ஸ் உடாதே..நீ தான் கைய புடிச்சி இழுத்திட்டு போனதா மணி சொன்னாரு..கொய்யால இங்லிஸ் காரேன் போல இதல ஒன்லி ராவாத்தான் அடிப்பியாமே ஹிஹி! //

பயபுள்ள ஒன்னு விடாம கக்கிடுச்சு போல... நல்லவேளை நீங்க பதிவா போட்டு நாறடிக்கிறதுக்கு முன்னாடி நானே போட்டுட்டேன்...

நிரூபன் said...

எங்களுக்கும் கை நடுங்க ஆரம்பித்திருந்ததால் வேறு வழியில்லாமல் அவருடன் சென்றோம். இனி ஓவர் டூ டாஸ்மாக்...//

ஆகா...புத்திவான் பிழைச்சுக்குவான் என்பது போல, நம்ம பாஸும்,
இப்படி ஒரு பிட்டுப் போடுறாரே...

Anonymous said...

அடடா வட போச்சே நான் படிக்கும் வரை யாரும் பின்னுட்டமிடவில்லை. தமிழில் டைப் செய்து வருவதற்குள் இருவர் வந்து விட்டனரே,

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் முனா செந்திலு
// காலையில் டான் என்று பதிவு விழுந்து விடுகிறதே எப்படி அண்ணே அது //

இந்த வாரம் உடான்ஸ் பதிவர் என்பதால் தினமும் பதிவெழுதுகிறேன்... மற்றபடி தினமும் காலை ஏழரை மணிக்கு ஏழரையை கூட்டுவது என்னுடைய ஸ்டைல்...

நிரூபன் said...

ரொம்ப ஓவரா நொந்து நூலாகியிருப்பீங்களோ.......

நிரூபன் said...

அதுவும் மணிசார் சொல்லிய கதை செம காமெடி.......

பேதியா கிடக்கிற நிதி குடும்பத்திற்கு நிதி கொடுக்க;-))))))))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

போதையில இருந்தாலும் யதார்த்தைச் சொல்லுறாரே...

கும்மாச்சி said...

மாப்ள மப்புல எல்லோரையும் வம்புக்கு இழுத்துட்டு விழுப்புண் இல்லாம வெளியே வந்தீங்களே, நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

நாய் நக்ஸ் said...

Nalla kudukkureeinga detailu !!!

Unknown said...

என்னைய கூப்பிடாம போய் தண்ணியடிச்ச பாவம் உங்களை சும்மா விடாது மக்களே!!!!

Unknown said...

மச்சி எனக்கொரு கோர்ட்டர் சொல்லேன் பதிவை இன்னொரு வாட்டி உன் ஸ்டைல்-ல படிச்சு பாக்குறேன்

Anonymous said...

அண்ணே, தமிழ்மணம் ஒட்டுப்பட்டை தயாராகிவிட்டது, ஒரு ஓட்டுப்போட்டு பாருங்களேன்,

Anonymous said...

Oye... Oor nadappu pesuranu solli bodhayula adi vangitu varadha kutti...

அஞ்சா சிங்கம் said...

நீ வில்லங்கம் பிடிச்ச ஆளுயா .........

“யப்பா... இனிமே சத்தியமா தண்ணியடிக்கும் போது பேச கூடாதுடா...”

Unknown said...

யோவ் ........ நீ மட்டும் மதுரை பக்கம் வாயா ,உன்னைய பாத்துக்குறேன்

Unknown said...

"நீ வில்லங்கம் பிடிச்ச ஆளுயா .........

“யப்பா... இனிமே சத்தியமா தண்ணியடிக்கும் போது பேச கூடாதுடா...” "

தண்ணியடிக்கும் போது பேசக்கூடாது.
உண்மைதான்- தண்ணி மட்டும் அடிங்க.

MANO நாஞ்சில் மனோ said...

அன்னை சோனியா வியாதியா, ஹேய் இது புதுசா இருக்கே ஹி ஹி...

Anonymous said...

அந்த மூனில என்ன வியாதி அன்னை சோனியாவுக்கு )))

'பரிவை' சே.குமார் said...

என்னது அன்னை சோனியா வியாதியா?
மப்படிச்சாலும் அதையும் பதிவாத் தேத்தி இருக்கீங்க... அதுக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////எங்களுக்கும் கை நடுங்க ஆரம்பித்திருந்ததால் வேறு வழியில்லாமல் அவருடன் சென்றோம். ///////

யாரு கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு நல்லா தெரியுதே....

கேரளாக்காரன் said...

Soniya matter is true the digit magazine dated 20 Sep 2011. She is suffering from STD

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரொம்ப நாளா ருசித்துப்பார்க்க ஆசைப்பட்ட மார்பியஸ் கருப்பு பெட்டியில் கம்பீரமாக இருந்ததால் அதையே வாங்கிவிட்டோம். //////

இதுக்கு என்ன மிக்சிங்கு? சுடுதண்ணியா? (இதுவும் பதிவர் அல்ல)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவர் gonorrhoea, syphillis என்று என்னென்னவோ சொன்னார். //////

இதெல்லாம் எளிதில் குணப்படுத்த கூடிய வியாதிகள்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////“அம்பதாவது சுறா புட்ட தின்னுட்டு பேதியாகி கிடக்குற நிதி குடும்பத்துக்கே நிதி குடுக்க வந்த ஆத்தாதான்யா எங்க மங்காத்தா...”//////

இதக் கேட்டா பேரரசுக்கே பேதியாகிடும் போல இருக்கே....?

rajamelaiyur said...

//“யப்பா... இனிமே சத்தியமா தண்ணியடிக்க கூடாதுடா...”


//

அப்படியா ?

rajamelaiyur said...

குவாட்டர் னா ஏன்னா ?

Anonymous said...

இதுக்காகவே தண்ணியடிக்க தொடங்கணும் போல...அதுக்காக என்ன ரொம்ப நல்லவன்னு மட்டும் சொல்லீராதீங்க...

Anonymous said...

நானு இனி சத்தியமாக தண்ணி அடிக்க மாட்டேன் சார்.(நான் மங்காத்தா தல ஸ்டைல்)

வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..

பல்பு பலவேசம் said...

கழக கண்மணிகள் ஆடும் மங்காத்தா!!
http://www.youtube.com/watch?v=0XE23Snz8Ew&feature=player_embedded

கவிதை பூக்கள் பாலா said...

எப்படியோ ஒரு பதிவு ரெடி அதுக்காக இப்படியா தனி அடிச்சத கத கதைய அடிச்சி விடறது , நான் நினைக்கிறேன் சோனியா ஜி மேட்டர் போடறதால தண்ணி மேட்டர் போட்டு தப்பிச்சிக்க பாக்கிறீங்களோ நல்ல தான் இருக்கு ஐடியா ! அப்ப ஏதாவது வில்லங்கமா மேட்டர் போடனுன்னா இனி தண்ணி அடிசிட்டு பேசுவது போல் போடலாம் போல சபாஷ் பிரபா !