25 September 2011

பேசும் ஊமைகள்


அன்புள்ள சாந்திலால் அவர்களுக்கு,

“நான் அனுப்பிய புத்தகங்கள் வந்து சேர்ந்ததா...?” என்று அக்கறையுடன் விசாரித்திருந்தீர்கள். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்பதற்காக “ஆம். நன்றி..” என்ற ஒற்றை வரி பதிலை தவிர்த்து வந்தேன். புத்தகங்கள் வந்துசேர்ந்தது பேசும் ஊமைகளை படித்தும் முடித்துவிட்டேன்.


ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னுரை, முன்னரையெல்லாம் படிப்பது அவசியமா என்று தெரியவில்லை. இனி வரும் காலங்களில் அவற்றை தவிர்க்க விரும்புகிறேன். ஏனென்றால் என்னுரையிலேயே நீங்கள் ஒரு நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட் என்றும் சீரிய(ஸ்) கதைகள் எழுத முயற்சித்திருப்பதாகவும் குட்டை வெளிப்படுத்திவிட்டீர்கள்.

அடுத்தது, கதைகள் அனைத்தும் 1999ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டிற்குள் கல்கி, தேவி, சாவி, ஆ.வி, அ.வி (அவள் விகடன்) போன்ற இதழ்களில் வெளியானதாக சொல்லியிருந்தீர்கள். அப்படியென்றால் அனைத்தும் பத்து வருடத்திற்கு முந்தய அவுட்டேட்டட் கதைகள். இந்த இரு ஏமாற்றங்களையும் கடந்துதான் புத்தகத்திற்குள் நுழைந்தேன். இனி பேசும் ஊமைகளை பற்றி பேசுகிறேன்.
(நான் கொஞ்சம் உண்மைகள் சொல்வேன் அதிகப்பிரசங்கித்தனம் என்று நினைக்க வேண்டாம்).

முதலில் ஒரு விஷயம், இந்த புத்தகத்தை நான் படித்தது உங்கள் கதைகளை படித்து மனிதநேயத்தை கற்றுக்கொள்வதற்கு அல்ல. இந்த புத்தகத்தின் மூலம் நான் உங்களைத்தான் படித்தேன். (இதை எனது ப்ரோபைல் பக்கத்தில் உள்ள வரிகளை படித்தால் புரிந்துக்கொள்ளலாம்). அதற்கு தகுந்தாற்போல உங்கள் கதைகளும் உங்களைப் பற்றி தெளிவாக எடுத்து சொல்லிற்று.

நீங்கள் தொழில்ரீதியாக ஒரு மருத்துவர் என்பது தெரியாதவர்கள் கூட உங்கள் கதைகளை படித்தால் இதை எழுதியவர் ஒரு மருத்துவர் என்று கண்டுபிடித்துவிடுவார். பதினைந்தில் கிட்டத்தட்ட நான்கைந்து கதைகள் மருத்துவம் சார்ந்தவை. அதென்ன நான்கைந்து, இரண்டு கதைகள் மேலோட்டமாக மருத்துவம் சார்ந்தவை. அதான் குத்துமதிப்பாக சொன்னேன். ஒரு மருத்துவராக நீங்கள் நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள். நிறைய சுகதுக்கங்களை பார்த்திருப்பீர்கள். அவை உங்கள் கதைகளில் பிரதிபலித்தன. அதிலும் பாதி மட்டுமே உங்கள் நோயாளிகளின் அனுபவம் மிச்சத்தை நீங்களே உங்கள் கற்பனையில் தொடர்ந்திருப்பது போல தெரிகிறது. என்ன சரிதானே....?

ராஜபாளையத்தில் பிறந்ததாலோ என்னவோ உங்களுக்கு தாய்ப்பாசத்திற்கு இணையாக நாய்ப்பாசமும் இருக்கிறது. நாய்ப்பாசம் மட்டுமல்ல மற்ற உயிரினங்கள், ஏன் மரங்களின் மீதும் கூட. அந்த வகையில் உங்களுடைய “ஷிவாவின் திருவிளையாடல்” சிறுகதை செம டச்சிங். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. சீரியஸ் கதைகளில் நாய்கள், மாடுகள் பேசுவது போல எழுதியிருக்கும் ஃபேண்டஸி ரசிக்க முடியவில்லை. ஒருவேளை நகைச்சுவை கதைகளாக இருந்தால் பொருந்தியிருக்கும்.

நான் மூன்றாவது பத்தியில் குறிப்பிட்டது போல நிறைய கதைகள் அவுட்டேட்டட். அதையும் மீறி அவற்றை ரசிக்க வைத்தது உங்கள் எழுத்து நடை என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே கொஞ்சம் சமூகச்சாடல்கள். குறிப்பாக, மதுக்கடைகளில் ஒரிஜினல் லேபிளை ஒட்டி விற்கப்படும் போலி சரக்குகளை பற்றிய உங்கள் நியாயமான கோபத்தை ரசித்தேன். நீங்கள் ஆதிசேஷன் – அல்சேஷன் என்று எழுதியிருந்த வரிகள் “சிவாஜி” படத்தில் இடம்பெற்றது தெரியும்தானே. 

சில கதைகளில் உள்ள கிராமம் சார்ந்த விஷயங்களை நகரவாசியான என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. கிராமங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைக்க தோன்றியது. “பொதர்”, “ஒரே கல்லில் மூணு மாங்கா” கதைகளைப் பற்றிதான் சொல்கிறேன். மற்ற கதைகள் அதிகம் ஈர்க்கவில்லை.

சரி மேட்டருக்கு வர்றேன். உங்கள் புத்தகத்தின் பதினைந்து கதைகளில் மூன்று முத்தான கதைகளைப் பற்றி சொல்கிறேன், கவுன்ட்டவுன் ஆர்டரின்படி. மூன்றாவது, வானவில் கனவு என்ற மனநலம் குன்றிய பெண் அல்லது முதியவர் பற்றிய கதை. கதையின் இறுதியில் ஒரு மரணம் இருக்குமென எண்ணினேன். அதை மாற்றி வேறு திசையில் கொண்டு சென்று கதையை முடித்த உங்கள் யுத்தி கவர்ந்தது.

இரண்டாவது, குழந்தையும் தெய்வமும். இந்தக்கதையை பற்றி எனக்கு இரண்டு மாற்றுக்கருத்துகள். ஒன்று கதையின் தலைப்பு சரியான தேர்வல்ல. (பெரும்பாலான கதைகளுக்கு அப்படித்தான்). இந்தக்கதைக்கு “ஊஸ்” என்று பெயர் வைத்திருக்கலாம். அப்புறம், கதையை பாதியிலேயே முடித்திருக்கலாம். இரண்டாம் பாதி தேவையற்றது. அந்த மாறுதல்களோடு இந்தக்கதைக்கு இரண்டாவது இடம்.

முதலிடம் பெற்ற அல்டிமேட் கதை – பொன்குஞ்சு. சான்ஸே இல்லை. ஒருசில கதைகளை படித்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு நினைவில் கிடந்தது பாடாய்ப்படுத்தும். அப்படிப்பட்ட கதைதான் இது. அப்படி ஒரு சிறுவனை நான் நெருக்கமான முறையில் சந்தித்திருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் அந்த வலி எனக்கு புரிந்தது. 

மொத்தத்தில் இவை சீரியஸ் கதைகள் தான். ஆனால் சீரிய கதைகள் என்று சொல்லமாட்டேன். அப்புறம் முழு புத்தகத்தையும் படித்தபிறகு தான் பின் அட்டையில் உங்கள் பக்கத்தில் நிற்கும் நாய்க்குட்டியை பார்த்தேன். உங்கள் நாய்ப்பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா...?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

Unknown said...

நீர் படித்ததை பகிர்ந்தது மூலம் யாமும் படித்தோம் நண்பா!

Unknown said...

நீங்க படிச்சத சொல்லிருக்கீங்க நானும் தெரிஞ்சிகிட்டேன்

இராஜராஜேஸ்வரி said...

இவை சீரியஸ் கதைகள் தான். ஆனால் சீரிய கதைகள் என்று சொல்லமாட்டேன்/

விமர்சனம்????

கோகுல் said...

உங்கள் வாசிப்புத்திறனை மெச்சுகிறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

இணையத்தளங்கள் வந்தபின்பு புத்தகங்கள் வாசிப்பது குறைந்து விட்டது என்பது என் கருத்து, அதை தவிடு பொடி ஆக்கி விட்டீறேய்யா...!!!!

Anonymous said...

உங்கள் வாசிப்பு திறன் அழகு வாழ்த்துக்கள் சாரே.

Sivakumar said...

நல்ல பதிவு பிரபா. வாழ்த்துகள்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

ஒரு நூலினைப் படிக்கின்ற போது, நூலாசிரியர் பற்றி எமக்குச் சில ஐயங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

அந்த வகையில் நூல் பற்றிய விமர்சனப் பார்வையோடு நூலாசிரியரின் இருப்பிடம் சார்ந்த விடயங்களையும் அலசியிருக்கிறீங்க.

நல்லதோர் பகிர்வு.

நிரூபன் said...

ஒரு படைப்பாளியின் அடுத்த படைப்பு மேலும் வலிமையுடையதாக, காத்திரமானதாக அமையும் வண்ணம் பேசும் ஊமைகள் பற்றிய உங்களின் பார்வை அமைந்துள்ளது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது போன்ற கதை விமர்சனங்கள் படித்து ரொம்ப நாளாகிடுச்சு.... நல்லாருக்கு பிரபாகரன்......

Anonymous said...

நல்ல விமர்சனம் பிரபாகரன்...