அன்புள்ள வலைப்பூவிற்கு,
வளர்ந்துவரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்துள்ள “மயக்கம் என்ன...?” பாடல்களை முதல்நாளே கேட்டதற்கு முதல் காரணம், இது செல்வராகவன் படம். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு வரும் செல்வராகவனின் படம் என்பதால் படத்தின் மீதும் பாடல்கள் மீதும் எக்கச்சக்கச்சக்க எதிர்பார்ப்பு. பாடல்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா...?
நான் சொன்னதும் மழை வந்துச்சா...
மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) இந்தப்பாடல் படத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.
பிறை தேடும் இரவிலே...
மென்மையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கிறது பாடல். ஜிவி இசை – சைந்தவி குரல் இரண்டும் கலந்தால் வேறென்ன லவ்ஸ்தான். சைந்தவி குரல் வழக்கத்தை விட இனிமையாக இருக்கிறது. காரணம் ஜிவி பிரகாஷோ...? பாஸ், இப்படியெல்லாம் பாட வைத்தால் அப்புறம் நாங்களும் ஷைந்தவியை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவோம். பாடலின் வரிகள் காதல் கொண்டேன் படத்தின் நெஞ்சோடு கலந்திடு பாடலை அப்படியே நினைவூட்டுகிறது.
இசைக்கு அப்பாற்பட்டு இந்த பாடலை பற்றிய என் கருத்து, இது காதலா...? இல்லை காமமா...? இல்லை இரண்டுக்கும் நடுவிலான உறவா...? இந்த மாதிரி மேட்டரெல்லாம் கேட்டு, பார்த்து போர் அடிச்சிடுச்சு சாமிகளா... தயவு செஞ்சு புதுசா ஏதாவது யோசிங்க.
ஓட ஓட ஓட தூரம் குறையல...
இது ஒரு வசனப்பாடல். அதாங்க, திருடா திருடி படத்தில் உன்னை பார்த்த பிறகுதான்னு ஒரு பாட்டு வருமே... அந்த வகையறா. பாடலை பாடியிருப்பவர்... ச்சே பேசியிருப்பவர்... அப்படியும் சொல்ல முடியாது... சரி குரல் கொடுத்திருப்பவர் தனுஷ்...! வழக்கமான தனுஷ் கேரக்டரில் ஒரு வடை கிடைக்காத வருத்தம் தெரியுமே... அது இந்தப்படத்திலும், இந்தப்பாடலிலும் தொடர்கிறது போல. பாடலின் இறுதியில் வரும் விசில் ரீங்காரம் ரிங்டோனாக ஒரு வலம்வரலாம்.
என்னென்ன செய்தோம் இங்கு...
அட, செல்வராகவன் படத்தில் பக்திப்பாடலா என்று வியக்க வைக்கிறது இந்தப்பாடல். பக்திப்பாடல்களுக்கே உரிய கம்பீரமான குரலுடன் கம்பேக் கொடுத்திருக்கிறார் ஹரீஷ் ராகவேந்திரா. கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தாக அமையலாம். மற்றபடி சாமான்ய ரசிகனுக்கு பிடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இது படத்தில் எந்த சூழ்நிலையில் வரும், எங்கே சொருகப்பட்டிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.
காதல் என் காதல்...
காதல் தோல்வி, கூடவே சரக்கு இரண்டும் இணைந்தால் புலம்பல்கள். அதையே பாடலாக உருவாக்கியிருக்கிறார்கள். அட, செல்வராகவனும், தனுஷும் இணைந்து பாடியிருக்கிறார்கள். செல்வராகவன் குரல் கேட்பதற்கு இனிமையாக இல்லையென்றாலும் புதுமையாக இருக்கிறது. பாடலில் புகுந்து விளையாடும் கடம் இசை, அஞ்சலை பாடலை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில்லை.
மயக்கமென்ன தீம் மியூசிக்
வழக்கமாக செல்வா படங்களில் இரண்டு தீம் இசையாவது இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற Celebration of Life இசையை மறக்க முடியுமா...? இந்தப்படத்தில் ஒன்றுதான். ஆனால் ஏமாற்றம் தராத வகையில் ஒலிக்கிறது. கிடார் இசை பின்னி பெடலெடுக்கிறது. மூன்று நிமிடப்பாடலில் முதலிரண்டு நிமிடங்கள் அசத்தல், மூன்றாவது நிமிடம் இரைச்சல்.
எனக்குப் பிடித்த பாடல்: பிறை தேடும் இரவிலே...
எனக்குப் பிடித்த வரிகள்:
கருவாட்டு குழம்பா நீயும் ருசி ஏத்துற...
ஒருவாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற...
ஃபியூஸ் போனபின் பல்புக்கான சுவிட்சை தேடுறேன்...
சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீருல...
படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிடும் காலைல அடிக்கிற மோரினில...
என்னுடைய ரேட்டிங்: 7.5 / 10
இந்த ஆல்பத்தின் வாயிலாக ஜிவி பிரகாஷ் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதை நிரூபித்தது மட்டுமில்லாமல், தனுஷ் ஒரு நல்ல பாடகராகவும், செல்வராகவன் ஒரு நல்ல பாடலாசிரியராகவும் உருவெடுத்திருக்கிறார்கள். வழக்கமான செல்வராகவன் படங்களின் பாடல்கள் போல வசீகரிக்கவில்லை என்றாலும் இது போதும்டா மச்சான்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
31 comments:
பாடல்கள் விமர்சனம் தூக்கல் ரகம் நன்றிங்கோ மாப்ளே!
தமிழ்மணத்துல என்னைத்தவிர வேற யாராவது இணைச்சாதான் இணையும் போல இருக்கு... யாராவது ஹெல்ப் ப்ளீஸ்...
அண்ணே நானும் பாடல்கள் கேட்டேன், நன்றாகவே உள்ளது.
அப்புறம் இதுக்கான டியுன்லாம் எந்தெந்த கார்டூன்லேந்து சுட்டாருனு சொல்லியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும், தெ.தி.மகள் படத்துக்கப்புறம் ஜி.வி.ய துளிகூட நம்ப முடியல.
@ ஐத்ருஸ்
// அப்புறம் இதுக்கான டியுன்லாம் எந்தெந்த கார்டூன்லேந்து சுட்டாருனு சொல்லியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும், தெ.தி.மகள் படத்துக்கப்புறம் ஜி.வி.ய துளிகூட நம்ப முடியல. //
அவசரப்படாதீங்க... அதெல்லாம் கொஞ்ச நாள்ல தன்னால வெளிய வரும்...
Parpom!!
தனுஷ் எழுதிய பாடல் வரிகள் பெரும்பாலும் ட்விட்டர் கவிதைகளிலிருந்து சுடப்பட்டவை
மயக்கம் தருமளவுக்கு இல்லை என்றே சொல்லலாம்.
யோவ் எங்கையா ரிச்சா போட்டோவ ?
//நா.மணிவண்ணன் said...
யோவ் எங்கையா ரிச்சா போட்டோவ?//
பூகம்பமே வந்தாலும் மணி தன்னோட லட்சியத்துல குறியா இருப்பாரு...
ஏழாம் அறிவு பாடல்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தேன்.
மயக்கம் என்ன பாடல்களை எதிர்பாக்கவே இல்லை. முழுமையாக ரசித்தேன்...
இப்போ நம்மளோட பேவரிட் தனுஷுன் காதல் என் காதலும், என்னென்ன செய்தோம் இங்கேயும்தான்...
அருமையான பாடல்கள்.
//போதும்டா மச்சான்//
தலைப்பைப் பார்த்ததும்,போதும்,போதும் னு ஆயிடுச்சோன்னு நினைத்தேன்.
த.ம.7!
பாடல்கள் நல்லாத்தான் இருக்கு கேட்கலாம்,,
நல்ல விளக்கங்கள் பிரபா,, தனுஷ் பாடிய பாடல் ராவா இருக்கு,,
நேற்றுதான் தரைவிறக்கம் செய்தேன்... நன்றாகத்தான் உள்ளது... நல்ல பதிவு.
பாட்டு நல்லாதான்யா இருக்கு...!!
பாடலுக்கு விமர்சனம் அருமை சகோ ..
ரேட்டிங் குடுக்குற அளவுக்கு இசை ஞானம் இருக்கா என்ன?
படமும் நல்லா இருக்குமுன்னு நம்பலாமா ...!! :-)
சார் போன கிழமை என்னால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை. கடந்த கிழமை பூராகவும் விளையாட்டு வேறு வேலைகளில் சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களின் தளங்களிற்கு வருகிறேன்.
// பாடலை பாடியிருப்பவர்... ச்சே பேசியிருப்பவர்... அப்படியும் சொல்ல முடியாது
அதை ஏற்றுக்கொள்ளவே மட்டேன். அற்புதமாக பாடியிருக்கிறார்,
மயக்கம் என்னவிவ் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 7.5 out of 10. Hats off for ur rating. Perfectly correct
அனானி தொல்ல மறுபடியும் ஆரம்பிசுடுச்சு டோய்
http://spoofking.blogspot.com
பாடல்கள் விமர்சனம் ரசித்தேன்...பாடல்களை ரசிக்க முடியலை அவ்வளவா...
விமர்சனத்துக்கு என்னுடைய ரேட்டிங்: 7.5 / 10
-:)
பின்குறிப்பு:
மிச்சம் 2.5 எப்படி போச்சுன்னு உங்களுக்கும் தெரியாது..எனக்கும் தெரியாது... Choice ல விட்டாச்சு...
என்ன ஏழரையா?
இது ரேட்டிங்கா இல்ல பாடலை சொல்றிங்களா?
நல்ல பாடல் வரிகள் நண்பா
இனிய காலை வணக்கம் பாஸ்,
நான் இந்தப் பதிவினை மிஸ்ட் பண்ணிட்டேன்.
மயக்கம் என்ன"
படம் பற்றிய எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கும் வண்ணம் பாடல்களைத் தாங்கி வந்திருகிறது.
இதற்கேற்றாற் போல பாடல்களை கலைஞர்களின் கடந்த காலத் திரை வெளியீடுகளோடு ஒப்பிட்டு விமர்சித்து உங்களின் பதிவும் அமைந்துள்ளது.
பாடல் விமர்சனம் நல்லாத்தான் இருக்கு, பாட்டு... இனிமே கேட்டுட்டுத்தான் சொல்லனும்........
@ சி.பி.செந்தில்குமார்
// தனுஷ் எழுதிய பாடல் வரிகள் பெரும்பாலும் ட்விட்டர் கவிதைகளிலிருந்து சுடப்பட்டவை //
இது வேறயா காலக்கொடுமை டா...
@ நா.மணிவண்ணன்
// யோவ் எங்கையா ரிச்சா போட்டோவ ? //
ஓ நீங்க காஜல்ல இருந்து ரிச்சாவுக்கு தாவியாச்சா... அப்ப நானும் தாவிடுறேன்...
@ கே.ஆர்.பி.செந்தில்
// ரேட்டிங் குடுக்குற அளவுக்கு இசை ஞானம் இருக்கா என்ன? //
தலைவரே இதுக்கு ஞானமெல்லாம் தேவையில்லை... ரசனை இருந்தால் போதும்...
Post a Comment