அன்புள்ள வலைப்பூவிற்கு,
செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி போலவே மற்றுமொரு பலமான, அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட கூட்டணி என்று ஏ.ஆர்.முருகதாஸ் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியை சொல்லலாம். பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை. இந்தமுறை படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு கொஞ்சம் பாடல்களுக்கும் தொற்றிக்கொண்டதால் கேட்டேன்...
ரிங்கா ரிங்கா...
பதறியடிக்கும் ஒரு குரலுடனும், மிரட்டலான இசையுடனும் ஆரம்பமாகும் பாடல், இருபது நொடிகள் கடந்த பின்னர் அடப்பாவிகளா டாக்சி டாக்சி பாடலை இப்படியா காப்பி அடிப்பீங்கன்னு நினைக்க வைக்கிறது. பாடல்வரிகளும் இது தமிழ் தானா என்று சந்தேகிக்க வைக்கிறது. இது ஹீரோ அறிமுகப்பாடலாக இருக்கும் என்று தெரிகிறது. சென்னையின் முக்கிய இடங்களை காட்டுகிறார்களாம். (அதைத்தான் அயன் படத்துலேயே காட்டியாச்சே...)
முன் அந்திச்சாரல் நீ...
ஹாரிஸ் ஜெயராஜுக்கே உரித்தான அக்மார்க் மெலடிப்பாடல். நா.முத்துக்குமார் வரிகளை கார்த்திக் பாட அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஃஎப்.எம் ரேடியோக்களிலும், இசையருவி, சன் மியூசிக்கிலும் இதுதான் கொண்டாட்டப் பாடலாக இருக்கும். பாடலை கண்டிப்பாக ஏதாவது பாலைவனத்திலோ, அல்லது வெளிநாட்டு மலைப்பிரதேசத்திலோ தான் படம் பிடித்திருப்பார்கள். மெலடி ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரையில் ஓகே ரகம்.
எல்லே லாமா...
டூயட் பாடல்தான் என்றாலும் பார்ட்டிகளில் ஒலிபரப்பும் தகுதிபெற்ற பாடல். ஸ்ருதி ஹாசன் தனது கட்டைக்குரலில் கலந்துகட்டி அடித்திருக்கிறார். (குரலும் செமகட்டை தான்). நடுவில் ஒரு ஹம்மிங், அடேங்கப்பா செம்மொழி பாடலில் இழுத்ததை விட அதிகமாக இழுத்திருக்கிறார். நடுநடுவே அவசர அவசரமாக வந்து பாடிவிட்டுப் போகும் ஆண்குரலும் வசீகரிக்கிறது.
யம்மா யம்மா...
இங்கேயும் ஒரு சோகப்பாடல். எஸ்.பி.பி. குரலில் ஒலிப்பது செம கிளாசிக். அதென்ன சோகப்பாடல் என்றாலே கடம் இசையை கசிய விடுகிறார்கள். (அஞ்சலை எபக்ட். மயக்கமென்ன படத்தில் வரும் காதல் என் காதல் பாடலிலும் கூட). பாடல் மனதை ஈர்ப்பது என்னவோ உண்மைதான். ஆனால் சோகப்பாடலை ஆறு நிமிடங்கள் நீட்டியிருக்க வேண்டுமா...? சுருக்கமாக மூன்றரை நிமிடங்களில் முடித்திருந்தால் இன்னும்கூட அதிகம் ரசித்திருக்கலாம்.
இன்னும் என்ன தோழா...
ஈழ மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது. (புளி வியாபாரம்...?) பா.விஜய் கைவண்ணத்தில் வரிகள் எல்லாம் உணர்ச்சி மயமாக இருக்க, அதற்கு தகுந்தபடி இசையமைக்க தவறியிருக்கிறார் ஹாரிஸ். உணர்ச்சிகரமான பாடலுக்கு இப்படியா மென்மையாக இசையமைப்பது...? பாடல்வரிகள் நிறைய இடங்களில் கருத்தாழமிக்கதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கின்றன. பாடலின் இடையே வரும் ட்ரம்ஸ் இசை ரசிக்க வைக்கிறது.
Rise of Damo
வழக்கமாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் புரியாத வரிகளை அறிமுகப்படுத்துவார். அந்தமாதிரி போல என்று நினைத்தால் பாடலே சீனமொழிப்பாடலாம். வரிகள் புரியாவிடினும் அழகான மெலடி. இது கிறிஸ்தவ ஆலயங்களில் பாடப்படும் துதிப்பாடலின் மெட்டு என்று கேள்விப்பட்டேன். இடையிடையே சிவாஜி கணேசனின் “மனிதன் மாறிவிட்டான்...” பாடலையும், எம்.ஜி.ஆரின் “புதிய வானம்... புதிய பூமி...” பாடலையும் நினைவூட்டுகிறது. பாடல் வரிகளின் தமிழாக்கம் – மதன் கார்க்கி வலைப்பூவில்.
எனக்குப் பிடித்த பாடல்: எல்லே லாமா...
எனக்குப் பிடித்த வரிகள்:
பூ பூத்த சாலை நீ... புலராத காலை நீ...
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ...
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா...?
இரவோன்றே போதுமென்று பகலிடம் சொல்வோமா...?
பனிமூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா...?
அந்த பகைமூட்டம் வந்து பனியாமல் எங்கள் இருவிழி உறங்குமா...?
என்னுடைய ரேட்டிங்: 6.5 / 10
ஏற்கனவே, நிறைய பேர் சொன்னது போல ஹாரிஸ் ஜெயராஜின் பழைய பாடல்களை நினைவூட்டுகின்றன பாடல்கள். ஆனால் பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
28 comments:
Download panniduvom
வழக்கம்போல யாராவது தமிழ்மணத்தில் இணையுங்கள்...
பாட்டு ஓகே படம் எப்பிடி வந்து இருக்கோ மாப்ள!~
//பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை.//
யானும் அங்ஙனமே! ஒரே மெட்டை தோசை திருப்புவது போலத் திருப்பித் திருப்பிப் போடுவது எரிச்சலாய் இருக்கிறது.
தமிழ்மணம் - ’ட்ரை’ பண்ணியும் சரிப்படவில்லை. :-(
பாடல்கள் எப்படியிருந்தாலும், விமர்சனம் அருமை அண்ணே
//பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை.//
ஹாரிஸ் ஜெயராஜ் என்றால், மனுஷன் டப்பா அடிச்சாவது ரெண்டு பாட்டு நல்லா குடுப்பார்னு நம்பி சிடி வாங்குவது வழக்கம்.. இப்படமும் விலக்கல்ல என்பது திண்ணம். நல்ல விமர்சனம் பிரபா..
ரிங்கா ரிங்கா ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப அநியாயம் போங்க! வரிகளை மட்டும் மாற்றி டாக்சி டாக்சி கேட்டாப்புல இருந்தது.
Ok.....parppom......
பாடல்கள் எப்படியிருந்தாலும், விமர்சனம் அருமை.
////ஈழ மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது. (புளி வியாபாரம்...?) பா.விஜய் கைவண்ணத்தில் வரிகள் எல்லாம் உணர்ச்சி மயமாக இருக்க,/// தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தக்களவு வருவாயை அள்ளி கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் கவனத்தை திரைப்படத்தின் பால் ஈர்க்கவாக இருக்கலாம்.
சில வேளைகளில் அவர் உண்மையாகவே மனமுவந்தும் ஈழ தமிழர்களுக்காக எழுதியிருக்கலாம்... (மனதை அளவிடம் சக்தி இலக்கில்லைப்பா ))
என்ன பிரபாகரன், ஒரே இசைமழையில் நனைதலா? நன்றி. இனிமேல்தான் பாடல்கள் கேட்க வேண்டும்.
/ ஆனால் பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும்.//
ரஹ்மான் பாட்டுதான் கேக்க கேக்க புடிக்கும். இப்ப இவருமா?
//Philosophy Prabhakaran said...
வழக்கம்போல யாராவது தமிழ்மணத்தில் இணையுங்கள்..//
நாங்கள் எல்லாம் எப்போதோ தமிழ் மணத்தில் இணைந்து விட்டோம்.
படம் பார்த்துட்டுதான் கருத்து சொல்லுவேன்....
இனிய மாலை வணக்கம் பாஸ்,,
ஏழம் அறிவுப் பாடல்கள் சுமார் ரகம் என்பதனை உங்களின் பாடல் விமர்சனங்களே சொல்கிறது.
நான் இன்னமும் பாடல்களைக் கேட்கவில்லை.
முதல் வகுப்பில் பாஸ்!
//ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.//
எனக்குத் தெரிந்து பச்சக் என மனதில் ஒட்டி அதே வேகத்தில் ஓடியும் விடுவது ஹரீஸின் பாடல்கள். அதுவல்லாமல் ஒரே ரகத்திலான மெலடி பாடல்கள் ஒரே மாதிரியாக படமாக்கப்பட்டிருக்கும்.
கேட்குந்தோறும் ஏதேனும் பிடிப்பட்டு அட என ரசிக்க வைப்பது ரஹ்மான் பாடல்கள்தான்
விமர்சனம் அருமை...இனிமேல்தான் பாடல்கள் கேட்க வேண்டும் பிரபாகரன்...
கேட்டுப் பார்ப்போம்......
// ..விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ...//இந்த வரிகள் எனக்கும் பிடித்திருந்தது .அருமையான பாடல் விமர்சனம்
@ கந்தசாமி.
// தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தக்களவு வருவாயை அள்ளி கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் கவனத்தை திரைப்படத்தின் பால் ஈர்க்கவாக இருக்கலாம்.
சில வேளைகளில் அவர் உண்மையாகவே மனமுவந்தும் ஈழ தமிழர்களுக்காக எழுதியிருக்கலாம்... (மனதை அளவிடம் சக்தி இலக்கில்லைப்பா )) //
பாடலை எழுதியவர் நிச்சயம் உணர்வோடு தான் எழுதியிருப்பார்... (உணர்வில்லாமல் இப்படிப்பட்ட வரிகளை எல்லாம் எழுத முடியாது) ஆனால் இயக்குனர் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது...
@ ! சிவகுமார் !
// நாங்கள் எல்லாம் எப்போதோ தமிழ் மணத்தில் இணைந்து விட்டோம். //
யப்பா எங்கிருந்துய்யா புதுசு புதுசா கிளம்புறீங்க....
இந்தக் கூட்டத்தில் இளைஞர்களே இல்லையா? வயது முதிர்ந்த, கிழப்பாடுகள்தான் உள்ளார்கள் போலும்!
நாங்கள் ஹாரிஸ் மீது பைத்தியமாகி, அவருக்கு கோவில் கட்டவே தயாராக இருக்கிறோம்!ஹாரிஸ் மீது உயிரையே வைத்திருக்கிறோம்!
ஐரோப்பிய வீதிகளின் அவரின் பாடல்களைப் பாடித்திரிகிறோம்! நீங்களோ குற்றம் சொல்லித்திரிகிறீர்கள்!
முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்று சொல்வார்கள! உங்களுக்கு ஹாரிஸ் என்ற அற்புதமான கலைஞனின் ஆற்றல் புரியவில்லை!
ஹரிஸ் காப்பியடிக்கிறார் என்ற கனவில் இருந்து வெளியே வாருங்கள்! சனிக்கிழமை இதற்கு எதிர்பதிவு போடுகிறேன்!
சார்! மனச கொஞ்சம் யூத்ஃபுல்லா வச்சிருங்க!
பொணத்துக்கு முன்னாடி வாசிச்சுக்கிட்டுப் போவாங்களே டண்டணக்கா மியூசி்க்!
அதே மியூசிக்கில், ஸ்ரீகாந்த் தேவா வகையறாக்கள் செய்வது போல, ஹாரிஸ் பாட்டுப் போட்டிருந்தால் ஒத்துக்கொள்வீர்கள் போலும்!
ஹாரிஸின் பாடல்களை ஐ டியூனில் கன்வேட் செஞ்சு ஐ பாட்டில் கேளுங்க! இன்ப மழை பொழியும்! எங்கிருந்தெல்லாமோ மியூசிக் வரும்!
எமக்கு ரஹ்மான் தளபதி, ஹாரிஸ் துணைத் தளபதி! அவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்குகிடைத்த வரம்!
அதை உணர்த்தெரியாத வஸ்துகள்தான் நீங்கள்!
பேசாமல் அவர்கள் இருவரையும் நாட்டை விட்டு துரத்திவிடுங்கள்! வெள்ளைக்காரன் அவர்கள் இருவரையும் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பான்!
ஏனென்றால் அவனுக்குத் தெரியும் அந்த இருவரதும் ஆற்றல்!
////ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.//
எனக்குத் தெரிந்து பச்சக் என மனதில் ஒட்டி அதே வேகத்தில் ஓடியும் விடுவது ஹரீஸின் பாடல்கள். அதுவல்லாமல் ஒரே ரகத்திலான மெலடி பாடல்கள் ஒரே மாதிரியாக படமாக்கப்பட்டிருக்கும்.
கேட்குந்தோறும் ஏதேனும் பிடிப்பட்டு அட என ரசிக்க வைப்பது ரஹ்மான் பாடல்கள்தான்//
Very Correct..
ரெண்டும் கெட்டான் பாடல்கள், நல்ல விமர்சனம்...
ringa ringa is copied from Kannum Kannum Nokia...
The No.1 Copycat is Harris Jayaraj
Post a Comment