அன்புள்ள வலைப்பூவிற்கு,
இன்செப்ஷன் படம் பார்க்கலைன்னா நீயெல்லாம் இருக்குறதே வேஸ்டுன்னு யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் சொல்லியிருந்தா பரவாயில்லை. அநேகமாக உலக சினிமா பார்க்கும் நண்பர்கள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள். பார்த்தே தீர வேண்டிய படம் என்று பலரும் பறைசாற்றியதால் பார்த்துவிடலாமென்று பதிவிறக்கினேன். ஆனால் பார்க்கச் சொல்லி வலியுறுத்திய அதே நண்பர்கள் இதெல்லாம் “ஏழாம் அறிவு” படைத்த அதிபுத்திசாலிகளுக்கு மட்டுமே புரியும் என்று கிலியை கிளப்பிவிட்டனர். எனவே, படத்தை புரிந்துக்கொண்டு நானும் அதிபுத்திசாலிதான் என்று நிரூபிக்கும் ஆர்வத்தில் யாரையும் கூட்டு சேர்க்காமல் தனியாக அமர்ந்து படம் பார்த்தேன்.
பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பு சில விஷயங்களை சொல்லி முன்ஜாமீன் வாங்கிக்கொள்கிறேன்...
- நான் இதுவரை ஒருசில உலகப்படங்கள் / ஆங்கிலப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
- நான் மேட்ரிக்ஸ் சீரியஸ் படங்கள் எதையுமே பார்த்ததில்லை.
- சில நாட்களுக்கு முன்புவரை எனக்கு கிறிஸ்டோபர் நோலனைப் பற்றி எதுவுமே தெரியாது.
அப்ப, என்ன டேஷுக்கு இந்தப்படத்தை பாத்தன்னு கேட்டால், எனக்கு கனவுகள் மீது நிறைய ஆர்வம் உண்டு. கனவுகள் குறித்து நிறைய சிந்தித்திருக்கிறேன். முன்பொரு காலத்தில் தூங்கும்போது பக்கத்தில் பேப்பர், பேனா வைத்துக்கொண்டு கனவு கலைந்து விழித்ததும் கனவை நினைவில் கொண்டுவந்து எழுதி வைத்திருக்கிறேன். சும்மா பதிவுக்காக டக்கால்ட்டி விடுறேன்னு நினைச்சீங்கன்னா என்னுடைய கனவுதுரத்தி குறிப்புகள் பாகம் 1, பாகம் 2 போன்ற பழைய இடுகைகளை படிக்கவும்.
- Title: Inception
- Tagline: Your mind is the scene of the crime
- Country: United States, United Kingdom
- Language: English
- Year: 2010
- Genre: Sci-Fi, Adventure
- Cast: Leonardo DiCaprio, Joseph Gordon-Levitt, Marion Cotillard
- Director: Christopher Nolan
- Cinematographer: Wally Pfister
- Editor: Lee Smith
- Music: Hans Zimmer
- Producers: Christopher Nolan, Emma Thomas
- Length: 148 Minutes
ஹீரோ ஒரு கனவு திருடன். அதாவது மற்றவர்களின் கனவில் புகுந்து அவர்களின் ரகசியங்களை திருடுபவன். மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் ஹீரோவிடம் ஒரு வேலையை ஒப்படைக்கிறார். அதாவது அவரது போட்டி தொழிலதிபரின் கனவில் புகுந்து அவரது எண்ண ஓட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் அவரை தொழில் போட்டியில் வீழ்த்திவிடலாம் என்பது அவரது திட்டம். (இதுக்கு பேசாம கூலிப்படையை வச்சி எதிராளியை போட்டு தள்ளியிருக்கலாம்). ஹீரோ அவரது குழுவினர் உதவியோடு இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
இதற்கு நடுவில் ஹீரோவின் இறந்துபோன மனைவி, அவருடைய குழந்தைகள், அவர்களது ஞாபகங்கள் என்றொரு கிளைக்கதையும் உண்டு.
கனவு, கனவுக்குள் கனவு, கனவுக்குள் கனவுக்குள் கனவு என்று நான்கு லெவல் வரை பயணிக்கின்றனர். பசங்க சொன்னதுபோலவே, முதல் ஒருமணிநேரம் படத்தில் ஒன்றும் புரியவில்லை. மாஸ்டர் ப்ளான் ஆரம்பமானதும் தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. இரண்டாவது முறை பார்க்கும்போது மிகவும் பிடித்திருந்தது.
இந்தப்படத்திற்கு எப்படித்தான் திரைக்கதை அமைத்தார்கள் என்று எக்கச்சக்கச்சக்கமா வியந்துக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்டோபர் நோலன் பயங்கர மூளைக்காரர் என்று உணர்ந்துக்கொண்டேன். அவரது முந்தய படங்களான Memento, Prestige போன்றவற்றை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. அதைவிட அவரது அடுத்த படம் எப்போது வரும் என்று ஏங்க ஆரம்பித்துவிட்டேன்.
இன்செப்ஷன் நான்கு ஆஸ்கர் விருதுகள், நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் வாங்கி குவித்திருக்கிறது. இந்தப்படத்தை ஆங்கிலத்தில் சப்-டைட்டில்களுடன் தான் பார்த்தேன். தமிழில் கனவு வேட்டை என்ற பெயரில் வெளியானதாக கேள்விப்பட்டேன். தமிழில் பார்த்திருந்தால் இன்னும்கூட தெளிவாக புரிந்திருக்கும், பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்செப்ஷன் படத்தை பார்த்தபிறகு தமிழ் சினிமாவில் வரும் மசாலா குப்பைகளை பார்த்தால் புழுவைப் பார்ப்பதுபோல இருக்கிறது. அப்படியே, ஏதாவது நல்ல படங்கள் வந்தாலும் அவை காப்பி அடிக்கப்பட்டவையாக இருக்கின்றன. இனி கேபிள் சங்கர் படம் எடுத்தால்தான் தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்கும்போல.
இந்தப்படத்தை பார்த்தபிறகு கனவுகள் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. Sigmund Freud எழுதிய Interpretation of Dreams என்ற புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதையும் படிப்பதற்காக மின்னூல் வடிவில் பதிவிறக்கி வைத்திருக்கிறேன்.
இப்போது, என் நண்பர்கள் சொன்னது போலவேதான் நானும் சொல்கிறேன். நீங்கள் இதுவரைக்கும் இன்செப்ஷன் பார்க்கவில்லை என்றால் கீழே உள்ள இணைப்புகள் மூலம் பதிவிறக்கி பார்க்கவும்.
பதிவிறக்க லிங்குகள்:
(சப்-டைட்டில் இணைக்கப்பட்டுள்ளது. நேரடி லிங்குகள் கிடைக்கப்பெறவில்லை.)
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
26 comments:
பின்னூட்டத்துலேயும் ஒரு பதிவா ............
ஓகே பார்த்துடுவோம்
Thanks !!
ஐ இலவசமா ஒரு சினிமா, பார்க்கிறேன் ராஜா பார்க்குறேன்....
///இனி கேபிள் சங்கர் படம் எடுத்தால்தான் தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்கும்போல.//// ;-))
இன்செப்ஷன் படம் பார்க்கலைன்னா நீயெல்லாம் இருக்குறதே வேஸ்டுன்னு யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் சொல்லியிருந்தா பரவாயில்லை. அநேகமாக உலக சினிமா பார்க்கும் நண்பர்கள் எல்லோரும் /// நானும் இன்னும் பாக்கள நண்பா..
நாளைக்கு பார்த்துட்டா போச்சு..
தமிழ் சினிமாவின் உண்மை நிலையை பதிவு செய்ததற்க்கு நன்றி !
//இனி கேபிள் சங்கர் படம் எடுத்தால்தான் தமிழ் சினிமாவுக்கு விடிவுகாலம் பிறக்கும்போல// :)
படம் வெளிவந்த நாட்களில், ஏய்.. நா சொன்ன வெளக்கம் தான் சரி, நான் சொன்ன வெளக்கம் தான் சரி என்று பல சண்டைகள். சாரு எழுதியிருந்த விளக்கத்திற்கும் ஒருவர்.. நைனா... நீ சொன்ன வெளக்கம் தப்பு.. நா எழுதீக்கீறாதுதான் சரி என்று வாய்க்கா தகராறுகளை இழுத்து விட்ட படம்... பல பேரின் மண்டயை காய வைத்ததும் கூட...
Memento அவசியம் பார்க்கவும்... இந்த அளவு இல்லாவிட்டாலும், தலை சுத்தலுக்கு கியாரண்டி...
பகிர்வுக்கு நன்றி.
படம் பாத்துட்டமேள்ள
@ stalin
// பின்னூட்டத்துலேயும் ஒரு பதிவா ............ //
அது பாதிக்கப்பட்ட ஒருவனின் புலம்பல்...
@ இரவு வானம், NAAI-NAKKS, MANO நாஞ்சில் மனோ, கந்தசாமி, !* வேடந்தாங்கல் - கருன் *!, ♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்ஸ்...
@ மதுரைஅழகு
// தமிழ் சினிமாவின் உண்மை நிலையை பதிவு செய்ததற்க்கு நன்றி ! //
புரிந்துக்கொள்ளுணர்வுக்கு நன்றி...
@ பாலா
// படம் வெளிவந்த நாட்களில், ஏய்.. நா சொன்ன வெளக்கம் தான் சரி, நான் சொன்ன வெளக்கம் தான் சரி என்று பல சண்டைகள். சாரு எழுதியிருந்த விளக்கத்திற்கும் ஒருவர்.. நைனா... நீ சொன்ன வெளக்கம் தப்பு.. நா எழுதீக்கீறாதுதான் சரி என்று வாய்க்கா தகராறுகளை இழுத்து விட்ட படம்... பல பேரின் மண்டயை காய வைத்ததும் கூட...
Memento அவசியம் பார்க்கவும்... இந்த அளவு இல்லாவிட்டாலும், தலை சுத்தலுக்கு கியாரண்டி... //
அந்த எழவுக்கு தான் தலைவரே முன்ஜாமீன் போட்டிருக்கேன்... இல்லைன்னா என்னவோ கிறிஸ்டோபர் நோலனும் இவனும் ஒரே தட்டுல சாப்பிட்டா மாதிரி எவனாவது வந்து சண்டை போடுவான்...
அந்த சாரு பதிவின் லிங்க் இருந்தால் அனுப்பவும்... (சண்டை போட இல்லீங்கோ)
சாருவின் விமர்சனம்:
http://charuonline.com/blog/?p=858
விமர்சன எதிர்வினைக்கான சாருவின் எதிர்வினை
http://charuonline.com/blog/?p=868
//இல்லைன்னா என்னவோ கிறிஸ்டோபர் நோலனும் இவனும் ஒரே தட்டுல சாப்பிட்டா மாதிரி எவனாவது வந்து சண்டை போடுவான்...// rofl
Instead of downloading the movie, you could buy the DVD and watch. Its not that costly now a days. If you really love good movies, make sure that you support the guys who create them.
Just a suggestion !
படிச்சுட்டேங்க.....
ஓட்டும் போட்டுட்டேங்க....
அப்ப நான் வரட்டா......
நன்றிங்க.
Enakum pakkanum pola iruku dear... Lets sit and watch together... Then oly i can understand...
My most favorite Pic!
நான் முன்பே பார்த்து விட்டேன். நிச்சயமாக அருமையான படம். ஒருவனின் ஆழ் மனதுக்குள் புகுந்து விளையாடும் கதைக்களன். இந்தப் படத்தையெல்லாம் காப்பியடிச்சால் கூட நம்ம ஆட்களால் நிச்சயமாய் எடுக்க முடியாது.
அவ்வளவு நம்பிக்கையா? என் மேல... ராசா.. படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னமே பயந்துவருதே..:))
நல்ல படம்.. நல்ல பார்வை...
சம்பந்தப்பட்ட படங்களுக்கு லிங்க் தருவது பாராட்டத்தக்கது..
சிறப்பான பணி..
உலக படம் என்ற வார்த்தைதான் எனக்கு எப்போதுமே குழப்பமாக இருக்கிறது...
உலகில் எடுக்கப்படும் எல்லா படங்களுமே உலகப்படங்கள்தானே
தல நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
உங்க விமர்சனம் சூப்பரா இருக்கு தல.
@ பாலா
// சாருவின் விமர்சனம்:
http://charuonline.com/blog/?p=858
விமர்சன எதிர்வினைக்கான சாருவின் எதிர்வினை
http://charuonline.com/blog/?p=868 //
சாருவின் விமர்சனத்தையும் எதிர்வினையையும் படித்தேன்... உண்மையில் சாரு அமேச்சூர்த்தனமாகத் தான் எழுதியிருக்கிறார்... எதிர்வினை எழுதியவர் அட நம்ம ஜெய்...
@ Premkumar Masilamani
// Instead of downloading the movie, you could buy the DVD and watch. Its not that costly now a days. If you really love good movies, make sure that you support the guys who create them.
Just a suggestion ! //
உங்கள் கருத்துக்கு நன்றி... ஆனால் அந்த அளவிற்கு பண வசதியோ நேரமோ என்னிடம் இல்லை... ஒரு டிவிடியின் விலை குறைந்தபட்சம் 200 ரூபாய்... இதை வாங்குவதற்கு ஸ்பென்சர் ப்ளாசாவோ, சிட்டி செண்டரோ தான் போக வேண்டும்...
ஒருவேளை இதுபோன்ற படங்களில் தியேட்டர்களில் சப் டைட்டிலோடு திரையிட்டால் பார்க்கலாம்....
@ பார்வையாளன்
// உலக படம் என்ற வார்த்தைதான் எனக்கு எப்போதுமே குழப்பமாக இருக்கிறது...
உலகில் எடுக்கப்படும் எல்லா படங்களுமே உலகப்படங்கள்தானே //
நீங்கள் சொல்வது சரிதான்... இனி அயல் சினிமா என்று எழுத வேண்டும்...
Post a Comment