30 September 2011

முரண் – Strangers on a Train


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இப்படி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை தனிமையில் சந்திக்கிறீர்கள். ஒருவேளை அங்கே நீங்கள் அவரை காரணமே இல்லாமல் கொலை செய்தால் கொலை செய்தது நீங்கள்தான் என்று எப்படி கண்டுபிடிக்க முடியும். மோட்டிவேஷனே இல்லாமல் கொலை செய்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற ஒன்லைனை எப்போதோ ஒரு சிறுகதையில் படித்ததாக ஞாபகம். (அநேகமாக சுஜாதா எழுதியது). கற்றது தமிழ் படத்தில் கூட இப்படியொரு கருத்து சொல்லப்பட்டிருக்கும். அதுதான் இந்தப்படத்தின் உயிர்நாடி.

- Title: Strangers on a Train
- Country: United Kingdom
- Language: English
- Year: 1951
- Genre: Crime, Thriller
- Cast: Farley Granger, Ruth Roman, Robert Walker
- Direction: Alfred Hitchcock
- Cinematography: Robert Burks
- Editing: William H. Zeigler
- Music: Dimitri Tiomkin
- Produced By: Alfred Hitchcock
- Length: 101 Minutes

டென்னிஸ் வீரர் கய். அவருடைய மனைவி ஒரு... எப்படி சொல்வது... கமல்மொழியில் லோலாயி. மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று காதலியை கரம்பிடிக்க நினைக்கிறார் கய். ஆனால் அவரது மனைவி அவருக்கு விவாகரத்து தருவதாக இல்லை. இப்போது அவருக்கு மனைவியை கொல்லனும் போல இருக்கு.

புருனோ ஒரு அதிபுத்திசாலி. ரசனைக்காரன். அதிகம் பேசுவான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே அவனது தந்தையை பிடிக்காது. பிடிக்காதென்றால் தந்தையை கொன்றுவிட வேண்டும் என்னுமளவிற்கு ஒரு வெறி.

“முரண்” கொண்ட, முன்பின் அறிமுகமில்லாத இவர்கள் ஒரு ரயில்பயணத்தில் சந்திக்கிறார்கள். (Strangers on a Train). டென்னிஸ் வீரனிடம் ரசிகனாக அறிமுகமாகும் புருனோ, கய்யின் விருப்பம் இல்லாமலே அவனது பர்சனல் விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்கிறான். ஒரு கட்டத்தில் உனக்கு உன் மனைவியும் எனக்கு என் தந்தையும் கொல்லப்பட வேண்டும். நாமிருவர் கொலையை பரிமாறிக்கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம் என்று கய்யிடம் கூறுகிறான். அவன் செவிசாய்ப்பதாக இல்லை.

பிறிதொரு நாளில் கய்யின் மனைவியை பின்தொடர்ந்து செல்லும் புருனோ, ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் வைத்து அவளை கொலையும் செய்கிறான். பதிலுக்கு கய் தனது தந்தையை கொல்ல வேண்டுமென்பது அவன் எதிர்பார்ப்பு. கய் போலீசிடம் செல்ல நினைத்தும் முடியவில்லை, ஏனென்றால் அனைவரின் சந்தேகமும் அவன்மீதுதான். தொடர்ந்து புருனோ தனது தந்தையை கொல்லும்படி தொல்லை கொடுக்க கய் என்ன முடிவெடுத்தான், இறுதியில் யார் சட்டத்தின் பிடியில் சிக்கினார்கள் என்பதே மீதிக்கதை.

70 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் இந்த அளவிற்கு பிரமிக்க வைக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு காட்சியில் டென்னிஸ் போட்டியையும், சிகரெட் லைட்டரையும் வைத்து நம்மை சீட் நுனிக்கு வர வைக்கிறார். அந்தகாலத்துப் படம் என்பதால் செல்போன், டிவி என்று எதையும் படத்தில் காண முடியவில்லை. அதிகபட்ச விஞ்ஞானம் ரயிலும் தரைவழி தொலைபேசியும் தான்.

இவர்தான் படத்தின் ஹீரோயின். நம்மூர் எம்.என்.ராஜம் மாதிரி. இப்போது உயிரோடு இருந்திருந்தால் 89 வயது இருக்கும். 89 வயது கிழவியைப் போய் ஏன் சைட்டடிப்பானேன்.


இதன் இயக்குனர் ஹிட்ச்காக் உலக சினிமாவிற்கு ஒரு உன்னதமானவர். மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ் என்று பெயரெடுத்தவர். தம் சினிமாக்களில் பல வித்தியாசமான ஷாட்டுகளையும் இன்னபிற புதுமைகளையும் புகுத்தியவர். கிட்டத்தட்ட 80 படங்களை இயக்கியிருக்கிறார். 1960ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் உலகப்புகழ் வாய்ந்தது. மேலே பார்க்கும் புகைப்படம் அவரது புதுமையான முயற்சிகளில் ஒன்று.

இதுதான் தமிழில் முரண் என்பது உளவுத்துறை செய்தி. (வில்லன் சேரனா...? பிரசன்னாவா...?). ஆனால் வழக்கம் போல இயக்குனர் இது தழுவல் மட்டுமே, படத்தின் ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறோம் என்று டக்கால்டி விட்டிருக்கிறார். (இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி). ஹிட்ச்காக்கை போலவே சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தால் இது ஹிட் படம். பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் எழுதியது: வாகை சூட வா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

26 comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நல்லாத்தான் இருக்கு ஸ்டோரி, முரண் வரட்டும் பாப்போம். இன்னொரு தெய்வதிருமகளா இல்லாட்டி சரி தான்..

Unknown said...

மாப்ள என்னய்யா நீர் இம்புட்டு பழைய படத்துக்கு விமர்சனம் பன்றீர்ன்னு பாத்தா...பழையன பார்த்து புது படம் எடுத்திருக்காங்கன்னு சொல்றீரா...ரைட்டு பாப்போம்....விமர்சனம் அருமை நன்றி!

Anonymous said...

அண்ணே வணக்கம், ஒரு அவசர வேலையாக சொந்த ஊர் செல்ல வேண்டியிருந்தது, அதான் பிரியாணியை பதிவிடலை, இந்த பதிவின் மூலம் முரண் படித்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது, எல்லா ஒட்டும் போட்டாச்சு அண்ணே

IlayaDhasan said...

அட ரொம்ப நல்லா இருக்கே ...எனக்கும் ஹிட்ச் காக் படங்கள் சில ரொம்ப பிடிக்கும். ஏதோ ஒரு படத்துல
காக்காயா வச்சே பயம் காட்டிருப்பாரு மனுஷன்.

நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்

Anonymous said...

முரண் வெற்றிபெறுமா இல்லையான்னு தெரியல... ஆனா நீங்க சொன்னத்தோட படத்தோட கதை சான்ஸே இல்ல.. செமயா இருக்கு!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ஆரூர் முனா செந்திலு said...

அண்ணே வணக்கம், ஒரு அவசர வேலையாக சொந்த ஊர் செல்ல வேண்டியிருந்தது, அதான் பிரியாணியை பதிவிடலை, இந்த பதிவின் மூலம் முரண் படித்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது, எல்லா ஒட்டும் போட்டாச்சு அண்ணே
///

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ? ஹி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பிரபா பதிவு பட்டைய கிளப்புது , இங்கு நான் ஒன்றை குறிப்பிட்டே ஆகணும் கண்டிப்பாக பிரபாவுக்கு என்னை விட வயது குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனா உங்களுடைய எழுத்துக்கள் மிகவும் தெளிவாக , பிழை இல்லாமல் , நேர்த்தியாக உள்ளது . really great .
வாழ்த்துக்கள் பிரபா . .

நாய் நக்ஸ் said...

Parppom.....
Rasikka mudinthal rasippom !!!!

பால கணேஷ் said...

பிரபாகரன்... மோட்டிவ் இல்லாமல் கொல்வது பற்றி சுஜாதா எழுதியது எதையும் ஒரு முறை என்ற நாவல். ஹிட்ச்காக்கின் வெர்டிகோ என் பேவரைட். நன்றாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஏம்பா..இதையெல்லாம் டிக்கட் ரிசர்வ் பண்றதுக்கு முன்னாடி சொல்லக்கூடாதாப்பா?

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
70 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படத்தின் கதையிலும் கை வைக்கிறாங்களா?

அவ்...

ஆனாலும் எமக்காக இப் படத்தினைப் பார்த்து, விமர்சனம் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி பாஸ்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே அசாத்தியமான படைப்புக்களை ஹாலிவூட் திரையுலகம் வழங்கத் தொடங்கி விட்டது என்பதற்கு இப் படமும் சான்று.

வாகை சூடவா இன்று மாலையுடன் இணையப் பக்கம் சில நேரம் தான் வர முடியும்,

நாளை வந்து படிக்கிறேன்.

Unknown said...

இந்த விமர்சனம் நீட்டாகவும் அருமையாகவும் இருக்கிறது, அந்த முரணும் இந்த முரணும் ஒன்றான்னு இன்னைக்கு தெரிஞ்சுடும், பார்ப்போம்

rajamelaiyur said...

Super review . . . I will wait for your next review

சேலம் தேவா said...

//இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி//

ஹி..ஹி... நச் கமெண்ட்..!!

Unknown said...

பிரபாகரன், தழுவல் சினிமாவை எடுக்கும் இயக்குனர்களுக்கு நீங்கள்தான் பெரிய வில்லின் என்று நினைக்கிறேன். இப்படி எல்லாப் படங்களின் வேரையும் தேடி எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லுவதால் கோடம்பாக்கத்தின் கோபம் உங்கள் மேல் வராமல் இருந்தால் சரி.

சக்தி கல்வி மையம் said...

அநேகமாக நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும்போது நான் திரையரங்கில் வாகை சூட வா பார்த்துக்கொண்டிருப்பேன். அடுத்த பதிவு அதுதான்.//

வாங்க..வாங்க.. சீக்கிரம் போடுங்க..

Unknown said...

இன்னொரு
பழைய கள்ள எடுத்து புது கிளாஸ்-ல ஊத்தி தரப்போறாங்களா!!?

N.H. Narasimma Prasad said...

அருமையான விமர்சனம். இந்த படத்தின் டவுன்லோட் லிங்க் இருந்தால் எனக்கு அனுப்பி விடவும்.

Anonymous said...

அழகாய் சொல்லியுள்ளீர்கள் ..முரண் படம் வெளி வந்த பிறகு தெரியும் ..எந்த அளவு காபி பேஸ்ட் செய்துள்ளார்கள் என்று )))))

Anonymous said...

நானும் உங்களுக்கு 93 வயசோன்னு நினைத்தேன்...தழுவல் சினிமா...வாசிக்கிற வரை...

வாகை சூட வா விமர்சனத்துக்கு வெய்ட்டிங்...

இளம் பரிதி said...

sujatha novel PALAM... VAGAI SUDA VAA..POIRATHENGA...AAAPPPUUUU CONFIRM....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுவும் காப்பிதானா? வெளங்கிரும்......

yeskha said...

ரொம்பவும் முக்கி முக்கி படம் எடுத்ததுபோல, சொந்தமாக "நானே சிந்திச்சேன்" பாணியில் சீன் போடும் நம்ம ஊர் இயக்குனர்கள் எப்போதுதான் திருந்துவார்கள்? அடக்கருமம், அந்தப்படம் ஓடினாலாவது விமர்சனங்கள் குறையும் (உ.தா- கோ, கஜினி, தெய்வத்திருமகள்). ஆனால் பெரும்பாலானவை ஊத்திக்கொள்கின்றன (உ.தா- யோகி). இதையெல்லாம் உண்மையான படைப்பை எடுத்தவன் பார்த்தால் எப்படி இருக்கும். ரத்தக்கண்ணீர் வராது அவனுக்கு?

சென்னை பித்தன் said...

நான் stangers on a train, பல ஆண்டுகளுக்கு முன் அதன் இரண்டாவது ரன்னில் பார்த்திருக் கிறேன்.அதைஎ(கெ)டுத்திருக்காங்களா!

Vijayan Durai said...

நன்பா முரண் திரைப்படத்தின் திரைகதை நல்லா தான் இருக்கு...Books எழுதும் போது retold by----,தமிழில்----,மொழிபெயர்ப்பு--- என்று போடுவது மாதிரி இந்த மாதிரி திரைப்படத்துக்கும் போட வேண்டும் நன்பா...சொந்தமா யோசிச்ச மாதிரி சீன் போட்ற டைரக்டர்ஸ் இங்க அதிகம் நன்பா...(காப்புரிமை சட்டத்தின்படி கைது செய்ய முடியுமா??)

தக்குடு said...

//இந்தப்படத்தை எடுக்க ஆறு மாசமா தூங்கலை. ஏழு மாசமா பல் தேயக்கலைன்னு சொல்லாம இருந்தா சரி// ha ha ha . Enjoyed your way of writing very much in this post.Gud job!