அன்புள்ள வலைப்பூவிற்கு,
தலைப்பை படித்ததும் பயபுள்ள கோ படத்தை பார்த்துட்டு எடுத்த வாந்தி மாதிரி ஏதோ பண்ணியிருக்குன்னு நினைச்சிடாதீங்க. நிலைமை அந்த அளவிற்கு மோசமாகவில்லை. ஆனால் கொஞ்சம் மோசம்தான்.
இந்தமுறை தல படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி டிக்கெட் கிடைக்காதோ என்று கொஞ்சம் கலங்கித்தான் போனேன். கடைசியாக பெரம்பூர் ஸ்ரீ பிருந்தாவில் காலை எட்டு மணிக்காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. (படம் முடிந்து நேரே ஆபீஸ் சென்றுவிட்டதால் பதிவு போட இயலவில்லை). வழக்கம்போல ஒருமணிநேரம் முன்னதாகவே திரையரங்கம் சென்றுவிட்டேன் ரசிகர்களின் அளப்பறைகளை ரசிக்க. பால் பாக்கெட்டுகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. பட்டாசு வெடிக்கப்பட்டன, படத்தின் தலைப்பு மங்காத்தா என்பதால் சிலர் சீட்டுக்கட்டு அட்டைகளை விசிறியடித்தபடி இருந்தனர். மூன்றில் ஒரு ரசிகனின் வாயில் மாவா நிறைந்திருந்தது, மற்றவர்கள் வாய்நிறைய கெட்டவார்த்தைகள். எரிச்சலாக இருந்தது. சரி தியேட்டருக்கு உள்ளே போகலாம்ன்னா அங்கே அஜீத் அதுக்குமேல கெட்டவார்த்தை பேசுகிறார். தல... நீங்க வெறும் தலயா...? தறுதலயா...?
கிரிக்கெட் சூதாட்டங்கள் தலைவிரித்தாடும் மும்பை மாநகரம். அங்கே ஆறுமுக செட்டியார் என்றொரு லோக்கல் தாதா. ஒரு பெரிய சூதாட்ட தொகை அவரது கைக்கு வந்து மற்றவர்களுக்கு பிரிய இருக்கிறது. அந்த தொகையை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள் நான்கு அடிபொடிகள். திட்டத்தை தெரிந்துக்கொண்டு ஐந்தாவது நபராக கொள்ளைக்கூட்டத்தில் நுழைகிறார் அஜீத். அஜீத்தின் புதிய திட்டத்தின்படி அந்த பெரிய தொகை கொள்ளையடிக்கப்படுகிறது. இப்போது மற்ற நான்கு அடிபொடிகளையும் ஏமாற்றிவிட்டு பணத்தை ஒரே ஆளாக அடிக்க திட்டமிடுகிறார் அஜீத். அவரது திட்டம் நிறைவேறியதா...? இல்லையா..? என்பதே மீதிக்கதை. இவர்களுக்கு நடுவில் போலீஸும், ஆறுமுக செட்டியார் ஆட்கள் என்று இன்னும் சில கேரக்டர்களும் பணத்திற்காக மங்காத்தா ஆடுகின்றனர். ஊறுகாய் நாயகிகளும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.
அஜீத்... நீங்க வந்தாமட்டும் போதும்... நீங்க வந்தாமட்டும் போதும்... என்று நினைப்பவன் நான். மங்காத்தாவிலோ பேருக்கு மல்ட்டி ஸ்டாரர் என்று கதை விட்டுவிட்டு படம் முழுக்க தல சாம்ராஜ்ஜியம்தான். அப்படி இருக்கும்போது எனக்கென்ன ஏமாற்றம் இருக்க முடியும். அஜீத் நடிப்பில் புத்தம் புது பொலிவோ, மாற்றமோ எதுவுமில்லை ஆனால் எப்போதும் போல கிளாஸ். என்னதான் அஜீத்தின் கேரக்டர் நெகடிவாக இருந்தாலும் ஜெயப்பிரகாஷை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிடும்போது அடப்பாவி என்று பதறுகிறது நெஞ்சம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதல் பாதியில் ஒரு அரைமணிநேரமும், இரண்டாவது பாதியின் இறுதியில் ஒரு அரைமணிநேரமும் வந்து போகிறார். கடைசி இரண்டரை நிமிடங்கள் இல்லாவிட்டால் அவரது பாத்திரம் டம்மியாக்கப் பட்டிருக்கும்.
ஒரு காட்சியில் அஜித்தும், அர்ஜுனும் அருகருகே நடந்து வரும்போது அப்பப்பா... படத்தில் அஜீத் கேரக்டர் பெயரை விநாயக் என்று வைத்ததன் சூட்சுமம் புரிந்துக்கொண்டேன். விநாயகர் சதுர்த்திக்கு முந்தின நாள் வெளியானது கூட இதனால் தானோ...??? (ITS A COINCIDENCE DAMID)
த்ரிஷாவிற்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை அவரும் தவறவிடவில்லை. ஒரு காட்சியில் அஜீத்தை பெருமையாக பார்க்கிறாரே... அடடா அவரது கண்கள் என்னமாய் நடிக்கின்றன.
லக்ஷ்மிராய்க்கு த்ரிஷாவை விட அதிக காட்சிகள். கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் கீழே விழுந்த பொருட்களை பொறுக்கும்போது (குழைவான) இடுப்பு காட்டி நம் இதயத்தையும் சேர்த்து பொறுக்குகிறார்.
அஞ்சலிக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டார்கள். (அதுசரி, இரண்டே முக்கால் மணிநேர படத்தில் எத்தனை கேரக்டர்களை காட்டுவது). அஞ்சலி மட்டும் ஒரு பாடல் காட்சியில் கொஞ்சம் ஆறுதல் தருகிறார். அவர் மேக்கப்போடு இருப்பதைவிட மேக்கப்பில்லாமல்தான் அழகாக இருக்கிறார்.
என்னாது...? கைனத் அரோராவா...? அவர் ஏதோ ஒரு பாட்டில் ரெண்டு ஸ்டெப் ஆடியதாக ஞாபகம். அந்தப்பாடலில் தோன்றிய மற்றும் சில மாடல்களில் பாணா காத்தாடி புகழ் டெபி தத்தாவும் ஒருவர்.
ப்ரேம்ஜி எப்போதும்போல மொக்கை காமெடியில் பிண்ணி எடுக்கிறார். அதுவும் இந்த படத்தில் ரஜினி படக்காட்சிகள், வசனங்களை ஆங்காங்கே ஸ்பூஃப் செய்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. துப்பாக்கியில் சுடப்பட்ட பின்பு பாக்கெட்டில் இருந்து “786” தகடு எடுக்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்.
வைபவ், ஜெயப்பிரகாஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். புதுமுகங்கள் மகத்தும், அஷ்வினும் (பிற்சேர்க்கை: இவர் நடுநிசி நாய்கள் ஹீரோவாம்) அங்ஙனமே. அரவிந்த் கேரக்டர் படத்திற்கு தேவையே இல்லையோ....?
விளையாடு மங்காத்தா அதகளப்படுத்தும் ஒப்பனிங் பாடல். லக்ஷ்மி ராயும், அவரது க்ளோசப் ஷாட்களும் இந்தப்பாடலுக்கு மெருக்கூட்டுகின்றன. கண்ணாடி நீ... கண்ஜாடை நீ... கொஞ்ச நாளைக்கு நிலைத்து நிற்கக்கூடிய பாடல். திரையிலும் படு ரொமாண்டிக். வைபவ் – அஞ்சலி, அஜீத் – த்ரிஷா, அர்ஜுன் – ஆண்ட்ரியா என்று மூன்று இணைகளும் வருவது சிறப்பு. எஸ்பிபி குரல் செவிக்கினிமை. (உபரித்தகவல்: பாடல் வரிகளை இயற்றியது பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி). வாடா பின்லேடா பாடலில் ஒளிப்பதிவிலும், நடன அசைவுகளிலும் ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார்கள். மச்சி ஒப்பன் த பாட்டில் – சரோஜா சாமான் நிக்காலோ ரெண்டும் ஒரே மாதிரி தெரியுதுல்ல. இந்தப்பாடலின் இடையே தல “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்” பாடலை பாடுவதும் அதற்கு கொடுக்கும் விளக்கமும் பலே. நண்பனே காதல் துரோகத்தில் பாடும் சோகப்பாடல். என்னதான் த்ரிஷா சோகமாக பாடினாலும் ரசிகர்களெல்லாம் FINDING NEMO...!!! பல்லேலக்கா பாடலில் மறுபடியும் லக்ஷ்மி ராய் கவர்ச்சி அருவி. இந்தப்பாடல் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் சிக்கிமுக்கி நெருப்பே பாடல் வகையறா.
ஒளிப்பதிவில் ஆங்காங்கே புதுமை காட்டுவதெல்லாம் ஓகே. ஆனால் இதெல்லாம் சாமான்ய ரசிகனுக்கு புரியுமா பிடிக்குமா என்று தெரியவில்லை. (என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர், “என்னது அஞ்சாறு அஜீத்தை காட்டுறாங்க” என்று கேட்டார்). பைக் சேசிங், காரை ரிவர்ஸ் கீரில் ஓட்டுவது இதையெல்லாம் அஜீத்தின் முந்தய படங்களிலேயே காட்டியாச்சே.
வசனங்களும் அவ்விதமே. அஜீத் “I’m not impressed. Gimme more” என்று சொல்வது சத்தியமாக சி சென்டர் ரசிகனுக்கு புரியப்போவதில்லை. அதையே விஜய் அவருடைய படங்களில் “வாடா.....” என்று ஹை-பிட்ச்சில் கத்தி எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார் பாருங்கள்.
அப்புறம், சமீபகாலமாக அஜீத் படங்களில் “தல” என்ற வார்த்தையை வைத்தே சுமார் பத்து பதினைந்து மொக்கை ஜோக் அடிப்பார்கள். இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிரார்கள். எரிச்சல்ல்ல்ல்.
ஆங்காங்கே சில காட்சிகள் மொக்கையாக இருப்பது எடிட்டரின் சோம்பேறித்தனம் தெரிகிறது. உதாரணம்: இண்டர்வலுக்கு முன்பு அஜீத் கற்பனை செய்யும் காட்சி.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் பொத்தல்கள். பின்னே, கமர்ஷியல் படம் என்றாலே இருக்கத்தானே செய்யும். அந்த வேன் கண்டெயினரை கிரேன் உதவியோடு மாற்றுவதெல்லாம் அபத்தம். க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வைத்தே தீர வேண்டுமென்பதற்காக ஒரு லாஜிக் பள்ளத்தாக்கையே தோண்டி இருக்கிறார்கள். ஆனால், அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நிச்சயம் பல ரிப்பீட் ரசிகர்களை வரவழைக்கும் என்பது ஒரு பிளஸ் பாயின்ட்.
வெங்கட் பிரபுவின் “தல” தப்பிவிட்டது. சென்னை 28 அளவிற்கு அட்டகாசமாக இல்லையென்றாலும் கோவா அளவிற்கு சொதப்பவில்லை. வெங்கட் பிரபுவுக்கு ஸ்பூஃப் காமெடி நன்றாக வருகிறது. அதையே இன்னும் நிறைய இடங்களில் பயன்படுத்தியிருக்கலாமே. தோட்டா சத்தத்தை குறைத்திருக்கலாம். ஆங்... வெங்கட்ஜி நீங்க Behind the Scenes-யே ப்ளான் பண்ணி, ஸ்க்ரிப்ட் எழுதி, ஷூட் பண்ற விஷயம் எல்லோருக்கும் தெரிஞ்சுபோச்சு.
X-Factor:
வழமையான மாஸ் ஹீரோ படங்களைப் போலவே இளைய சமுதாயத்தினரை சீரழிக்கும் காட்சியமைப்புகள். இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட “பீப்” ஒலிகள். அஜீத் அநியாயத்திற்கு தரம் தாழ்ந்த வார்த்தைகளையெல்லாம் பேசுகிறார். சிகரெட்டும், மதுவும் சர்வசாதாரணம். ஏன் ஆரண்ய காண்டம் வெளிவந்தபோது மூடிக்கொண்டு இருந்தாயே என்று நீங்கள் கேட்கலாம். ஆரண்ய காண்டம் படத்தை எந்த அடித்தட்டு ரசிகனும் பார்க்கவில்லை, அதில் வரும் பாத்திரங்களை யாரும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இங்கே அஜீத்தை மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் கேரக்டர்களையும் ரோல் மாடலாக நினைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜீத்தைப் போலவே கிருதா வைப்பவன், அஜீத்தைப் போலவே “சால்ட் அண்ட் பெப்பர்” லுக்கோடு சுற்றுபவன், அடுத்தது அஜீத்தைப் போல ஸ்டைலாக புகை பிடிக்கவும், மது அருந்தவும் நினைக்கத்தானே செய்வான்.
Verdict:
ஒரு அஜீத் ரசிகனாக மங்காத்தாவை ரொம்பவும் ரசித்து பார்த்தேன். ஆனால் இதுதான் நல்ல சினிமாவா என்றால் வருத்தத்துடன் இடம்வலமாகவே “தல”யை அசைப்பேன். படம் ஹிட் ஆகுமா என்றால் ஆம் அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. வெங்கட் பிரபு தமிழ் சினிமா வெற்றிப்பட டெம்ப்ளேட்டில் மங்காத்தாவை பொருத்தியிருக்கிறார். அனால், சன் பிக்சர்ஸ் – தயாநிதி அழகிரி படம் என்பதால் அரசியல் எதுவும் நடக்காமல் இருந்தால் சரி. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மங்காத்தாவிற்கு ஐந்திற்கு இரண்டு நட்சத்திரங்கள் கொடுக்கலாம்.
இந்த பதிவு எத்தனை பேரை திருப்திப்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை, இதெல்லாம் ஒரு விமர்சனமா என்று நீங்கள் காறி உமிழவும் செய்யலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஏனென்றால்... ச்சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு... நீங்களே தலைப்பை இன்னொருமுறை படிச்சிக்கோங்க...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
74 comments:
கொஞ்ச நாளா நீங்க பதிவு எழுதாம இருந்தீங்க, ப்ளீஸ் தயவு செய்து அதையே தொடருங்க, உங்கள் பதிவை எல்லாம் படிக்க வேண்டிய துர்பாக்கியத்தில் நினைக்கையில் த்து என்று துப்ப வேண்டும் போல இருக்கிறது. விமர்சனம் என்கிற பெயரில் நடக்கும் அழிசாட்டியங்களை சகிக்கவில்லை. போ போயி உருப்புடுற வழியை பரு.
நல்லா ஆரம்பிச்சு விட்டீங்க தம்பி...
//சமீபகாலமாக அஜீத் படங்களில் “தல” என்ற வார்த்தையை வைத்தே சுமார் பத்து பதினைந்து மொக்கை ஜோக் அடிப்பார்கள். இந்தப்படத்திலும் அதையே தொடர்ந்திருக்கிரார்கள். எரிச்சல்ல்ல்ல்.//
அஜித் ரசிகன் என்றாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா இந்த பதிவுக்கான டைட்டிலை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். நண்பன் என்ற உரிமையுடன்.
ஓ..தலை ரசிகரா நீங்கள்.
பரவா இல்லை கதை எழுதியவரை விட நீங்கள் படு சூப்பராக விமர்சித்து எழுதியுள்ளிர்கள்.
தமில் மணமும் போட்டாச்சு.
வாழ்த்துக்கள் பிரபா.
மங்காத்தா குறித்து தங்களிடமும் நல்ல விமர்சனம் வந்திருக்கிறது..
மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்...
இவ்விமர்சனமும் பட்டியலில் இணைக்கப்படுகிறது....
அடுத்தது அஜீத்தைப் போல ஸ்டைலாக புகை பிடிக்கவும், மது அருந்தவும் நினைக்கத்தானே செய்வான்.//
உண்மைதான்!இந்த பழக்கங்களை ஒருத்தனுக்கு அறிமுகப்படுத்துவது,நண்பர்களும் சினிமாவும்தான்.பாபா படத்துல ஒரு காட்சியில் ஒரே நேரத்தில் ரஜினி சாராயம் ஒரு பாட்டில்,ஒரு டப்பா குட்கா,அப்பறம் சுருட்டு பிடிப்பார்,இதைப்பார்த்து இதை முயற்சி செய்த்தவர்களை நான் அறிவேன்!(ராமதாஸ் இந்த படத்திற்கு எதிர்ப்பு காட்டியதை பாராட்டுகிறேன் அதனால் தான சந்திரமுகியில் சூயிங்கம் மென்றார்,சிவாஜியில் ஹால்சை வைத்து சமாளித்தார்)இது போன்ற காட்சிகளை குறைத்து கொள்வது சமுதாயத்துக்கு நல்லது.அத விட்டுட்டு இல்ல ஒருத்தன கெட்டவனா காட்ட அவன் எல்லா தப்பையும் செய்யரவனா காட்டினாதான் ரீச் ஆவும் ன்னு சொன்னா அது சுத்த பேத்தல்.
ஒரு அஜித் ரசிகனிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை.
நல்ல விமர்சனம்... 2 நட்சத்திரத்தை மூன்றாக கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.....
வணக்கம் ஒயின்ஷாப் ஓனரே..
எப்படி இருக்கிறீங்க.
வசனங்களும் அவ்விதமே. அஜீத் “I’m not impressed. Gimme more” என்று சொல்வது சத்தியமாக சி சென்டர் ரசிகனுக்கு புரியப்போவதில்லை. அதையே விஜய் அவருடைய படங்களில் “வாடா.....” என்று ஹை-பிட்ச்சில் கத்தி எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறார் பாருங்கள்.//
அவ்....இது சூப்பர் கடி.
விமர்சனம் நடு நிலையாக வந்திருக்கிறது பாஸ்.
வலையில் நான் படித்த விமர்சனங்களுக்குள் அஜித்தை உயர்த்திக் காட்டாது சரியான முறையில் ஒப்பிட்டு அலசியிருக்கிறீங்க.
GOOD......AND.......GOOD
விமர்சனம் ஓக்கே, ஆனா டைட்டில்?
தலைப்பை பார்த்து என்னடா இது என நினைத்தேன்..
அஜீத் ரசிகனாக மட்டும் விமர்சிக்காமல் சினிமா ரசிகனாக விமர்சித்தது அருமை.
@ N.Manivannan
ஆஹா மணி கமெண்டுலயே மங்காத்தா ஆடிப்புட்டீங்களே, கமெண்டே ஒரு பதிவு அளவுக்கு ஆகிப்போச்சு போங்க, இனி யார் யார் போன் பண்ணி சண்டை போட்டாங்கன்னும் கமெண்ட போடுங்க :-----))))))))))
@N.Manivannan //அம்பதாவுது சுறா'புட்ட தின்னுபுட்டு இன்னம் வரைக்கும் பேதியாகி கெடக்குற நிதிகுடும்பத்துக்கே 'நிதி ' குடுக்க வந்த ஆத்தா தான்யா எங்க மங்காத்தா//
ஹாஹாஹா... நச்
@ப்ரபாகரன்:
படத்தோட ஸ்கிரிப்ட விட உங்க விமர்சனம் பெருசா இருக்கும் போலருக்கு. ஒவ்வொரு கேரக்கடரையும் தனித்தனியா அரை பக்கதுக்கு விமர்சனம் பண்ணனுமா?
இனி வரும் விமர்சனங்களில் பதிவின் நீளத்தை முடிந்த வரை குறைக்க முயலுங்கள்...
யாருப்பா அது மணி? கருத்து சொல்ல சொன்னா தனி பதிவே போடுறது. அஜீத்த பாராட்டுறது சரி. அதுக்காக இளைய தளபதிய இப்படியா ரவுசு விடுறது. உங்க பெரியப்பா மதுரைல கட்சிப்பொறுப்புல இருக்குற தைரியத்துல அவரோட போன் நம்பரை தந்துருக்கீங்க. தில் இருந்தா உங்க நம்பரை குடுங்க..சென்னைக்கு வாங்க...போக்கிரி பொங்கல் வக்காம விட மாட்டோம்!!
- 'தமிழகத்தின் அன்னா ஹஜாரே' விஜய் ரசிகன்.
பிரபா, விமர்சனம் அருமைன்னு நான் சொல்ல மாட்டேன். அதே சமயம் நீ எல்லாம் ஒரு தல ரசிகனான்னு கேக்க மாட்டேன். Because கொஞ்ச நேரம் படம் பார்த்த எனக்கே அஜித்தை குடிகாரனா காட்டும்போது கொஞ்சம் எரிச்சலாத்தான் இருந்தது. இந்த மாதிரி காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்கள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்வாங்க. என்ன பண்றது? அவங்க 'தல' ரசிகர்களாச்சே?
please remove that manivannan comment. both thala and thalapathy are great in life and also they are good friends.. but indha madhiri silarala(manivannan)than problem varudhu,, as a vijay fan i am telling you mankatha is good not bad.. please remove that comment as earlier as possible.
அஜீத் ரசிகர் என்ற வட்டத்துல இருந்து வெளிய வந்து விமர்சனம் பண்ணி இருக்கீங்க......... பாராட்டுக்கள்... தனிப்பட்ட முறையில் அஜீத் என்னதான் நல்ல மனிதராக இருந்தாலும், படங்களை பொறுத்தவரை அவர் தறுதலைதான்.... நல்ல கதை தேடி நடிக்கத்தெரியாதவர், நல்ல இயக்குனர்களை மதிக்காதவர்!
///Philosophy Prabhakaran said...
நல்லா ஆரம்பிச்சு விட்டீங்க தம்பி.../////
ஹஹ்ஹா அது என்னது உங்க பதிவுன்னாலே அனானிகள் குஷியா கெளம்பிடுறானுங்க.... ஆனா தமிழ்மண நட்சத்திர வாரத்துல நீங்க சொன்னதை கேட்டுக்கிட்டு அடக்கி வாசிச்சானுங்க பாத்தீங்களா....? இவிங்க என்ன அநியாயத்துக்கு நல்லவிங்களா இருக்காய்ங்க....?
விமர்சனம் ஓகே...
ஒரு தல ரசிகனா எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது..
’தல’ யான விமரிசனம்!
Enna review ithu Ivar periya samooha poruppu velakkenna. Yenda yemaathuraannu therijavana the...... Payaanno illa the ......... Pu nno solrathula enna thappu po poi modhalla unnoda soo la irukkura alukka kaluvu
// இந்த பதிவு எத்தனை பேரை திருப்திப்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை, இதெல்லாம் ஒரு விமர்சனமா என்று நீங்கள் காறி உமிழவும் செய்யலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஏனென்றால்... ச்சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு... நீங்களே தலைப்பை இன்னொருமுறை படிச்சிக்கோங்க... //
வாசகனின் மனதை நீங்கள் அறிந்து இதை எழுதி இருப்பது அருமை...
சரியான மொக்காத்தா!
படம் செம மொக்க!!ரசிகர்களுக்கு மட்டும்!!
good review praba,,, but heading unwanted (fu..king)
Srtictly No Rules... Thats why "Thala" brakes the rules.... Mankatha - well play...
நீங்களே வேண்டாம்னு சொல்றீங்க ...அப்பம் பார்க்க வேண்டியது தான்...-:)
What a ***** REVIEW -:)
@ ! சிவகுமார் !
// அஜித் ரசிகன் என்றாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா இந்த பதிவுக்கான டைட்டிலை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். நண்பன் என்ற உரிமையுடன். //
நன்றி... எப்படியும் இருவேறு தரப்பினரும் இந்த பதிவிற்காக கும்முவார்கள் என்று தெரியும்... அதற்காகத்தான் இப்படி ஒரு சமாளிபிகேஷன் தலைப்பு...
@ அந்நியன் 2
// ஓ..தலை ரசிகரா நீங்கள்.
பரவா இல்லை கதை எழுதியவரை விட நீங்கள் படு சூப்பராக விமர்சித்து எழுதியுள்ளிர்கள்.
தமில் மணமும் போட்டாச்சு.
வாழ்த்துக்கள் பிரபா. //
நன்றி நண்பா...
@ பாட்டு ரசிகன்
// மங்காத்தா குறித்து தங்களிடமும் நல்ல விமர்சனம் வந்திருக்கிறது..
மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்...
இவ்விமர்சனமும் பட்டியலில் இணைக்கப்படுகிறது.... //
நன்றி செளந்தர்...
@ கோகுல்
// உண்மைதான்!இந்த பழக்கங்களை ஒருத்தனுக்கு அறிமுகப்படுத்துவது,நண்பர்களும் சினிமாவும்தான்.பாபா படத்துல ஒரு காட்சியில் ஒரே நேரத்தில் ரஜினி சாராயம் ஒரு பாட்டில்,ஒரு டப்பா குட்கா,அப்பறம் சுருட்டு பிடிப்பார்,இதைப்பார்த்து இதை முயற்சி செய்த்தவர்களை நான் அறிவேன்!(ராமதாஸ் இந்த படத்திற்கு எதிர்ப்பு காட்டியதை பாராட்டுகிறேன் அதனால் தான சந்திரமுகியில் சூயிங்கம் மென்றார்,சிவாஜியில் ஹால்சை வைத்து சமாளித்தார்)இது போன்ற காட்சிகளை குறைத்து கொள்வது சமுதாயத்துக்கு நல்லது.அத விட்டுட்டு இல்ல ஒருத்தன கெட்டவனா காட்ட அவன் எல்லா தப்பையும் செய்யரவனா காட்டினாதான் ரீச் ஆவும் ன்னு சொன்னா அது சுத்த பேத்தல். //
மிகச் சரியான கருத்து... ஸ்டைல், மேனரிசம் காட்ட இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு... ரஜினியும், விஜயும் திரையில் தம், தண்ணி அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்... அஜித்தும் அதேபோல நிறுத்தினால் நன்று...
@ MANASAALI
// ஒரு அஜித் ரசிகனிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. //
மனதில் பட்டதை எழுதுகிறேன்...
@ அன்பு
// நல்ல விமர்சனம்... 2 நட்சத்திரத்தை மூன்றாக கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்..... //
ம்ம்ம் கொடுத்திருக்கலாம்...
@ நிரூபன்
// வணக்கம் ஒயின்ஷாப் ஓனரே..
எப்படி இருக்கிறீங்க. //
சூப்பரா இருக்கேன்...
// அவ்....இது சூப்பர் கடி. //
ரொம்ப ஃபீல் பண்ணி எழுதிய வரிகள்...
// விமர்சனம் நடு நிலையாக வந்திருக்கிறது பாஸ்.
வலையில் நான் படித்த விமர்சனங்களுக்குள் அஜித்தை உயர்த்திக் காட்டாது சரியான முறையில் ஒப்பிட்டு அலசியிருக்கிறீங்க. //
நன்றி...
@ NAAI-NAKKS
// GOOD......AND.......GOOD //
நன்றி...
@ சி.பி.செந்தில்குமார்
// விமர்சனம் ஓக்கே, ஆனா டைட்டில்? //
ம்ம்ம் புரியுது தல...
@ Prabu Krishna (பலே பிரபு)
// அஜீத் ரசிகனாக மட்டும் விமர்சிக்காமல் சினிமா ரசிகனாக விமர்சித்தது அருமை. //
நன்றி நண்பா...
@ N.Manivannan
(நீக்கப்பட்ட பின்னூட்டத்திற்கு பதில்)
மன்னிக்கவும் மணி... வேறு வழியில்லாமல் உங்கள் பின்னூட்டத்தை நீக்க வேண்டியதாக போய் விட்டது... கீழே பின்னூட்டம் போட்டிருக்கும் vinod kumarன் ஆதங்கத்தை பாருங்கள்...
அப்புறம், இன்னொரு விஷயம், உங்கள் பின்னூட்டத்தில் என்னையும் லேசாக பகடி செய்தது போலிருந்ததே... ம்ம்ம் கவனிச்சுக்குறேன்...
@ இரவு வானம்
// ஆஹா மணி கமெண்டுலயே மங்காத்தா ஆடிப்புட்டீங்களே, கமெண்டே ஒரு பதிவு அளவுக்கு ஆகிப்போச்சு போங்க, இனி யார் யார் போன் பண்ணி சண்டை போட்டாங்கன்னும் கமெண்ட போடுங்க :-----)))))))))) //
தல... மணி ரொம்ப தைரியமா கொடுத்தது அவருடைய போன் நம்பர் இல்லை... அவருடைய உண்மையான நம்பரை நான் போட்டு விடுறேன்... வெயிட் பண்ணுங்க...
@ முத்துசிவா
// படத்தோட ஸ்கிரிப்ட விட உங்க விமர்சனம் பெருசா இருக்கும் போலருக்கு. ஒவ்வொரு கேரக்கடரையும் தனித்தனியா அரை பக்கதுக்கு விமர்சனம் பண்ணனுமா?
இனி வரும் விமர்சனங்களில் பதிவின் நீளத்தை முடிந்த வரை குறைக்க முயலுங்கள்... //
ஹி... ஹி... ஒவ்வொரு கேரக்டர் பத்தி ரெண்டு ரெண்டு வரிதான் எழுதினேன்... அதுக்கே பதிவு நீளமா போயிடுச்சு... என்னா பண்றது படத்துல அம்புட்டு கேரக்டர்ஸ்...
@ ! சிவகுமார் !
// 'தமிழகத்தின் அன்னா ஹஜாரே' விஜய் //
இது எப்போ...
@ N.H.பிரசாத்
// பிரபா, விமர்சனம் அருமைன்னு நான் சொல்ல மாட்டேன். அதே சமயம் நீ எல்லாம் ஒரு தல ரசிகனான்னு கேக்க மாட்டேன். Because கொஞ்ச நேரம் படம் பார்த்த எனக்கே அஜித்தை குடிகாரனா காட்டும்போது கொஞ்சம் எரிச்சலாத்தான் இருந்தது. இந்த மாதிரி காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்கள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்வாங்க. என்ன பண்றது? அவங்க 'தல' ரசிகர்களாச்சே? //
தங்கள் கருத்திற்கு நன்றி...
@ vinodkumar
// please remove that manivannan comment. both thala and thalapathy are great in life and also they are good friends.. but indha madhiri silarala(manivannan)than problem varudhu,, as a vijay fan i am telling you mankatha is good not bad.. please remove that comment as earlier as possible. //
நண்பா... உங்களுக்காக அவருடைய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்... மணிவன்னனுடைய போன் நம்பர் - 9080727941... உங்களுக்கு தைரியம் இருந்த எங்க பாஸை போன் பண்ணி திட்டுங்க பார்ப்போம் :)
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அஜீத் ரசிகர் என்ற வட்டத்துல இருந்து வெளிய வந்து விமர்சனம் பண்ணி இருக்கீங்க......... பாராட்டுக்கள்... தனிப்பட்ட முறையில் அஜீத் என்னதான் நல்ல மனிதராக இருந்தாலும், படங்களை பொறுத்தவரை அவர் தறுதலைதான்.... நல்ல கதை தேடி நடிக்கத்தெரியாதவர், நல்ல இயக்குனர்களை மதிக்காதவர்! //
நன்றி...
// ஹஹ்ஹா அது என்னது உங்க பதிவுன்னாலே அனானிகள் குஷியா கெளம்பிடுறானுங்க.... ஆனா தமிழ்மண நட்சத்திர வாரத்துல நீங்க சொன்னதை கேட்டுக்கிட்டு அடக்கி வாசிச்சானுங்க பாத்தீங்களா....? இவிங்க என்ன அநியாயத்துக்கு நல்லவிங்களா இருக்காய்ங்க....? //
பாசக்கார அனானிகள்... தவிர தமிழ்மண வாரத்தில் சர்ச்சைக்குரிய பதிவு எதையும் எழுதி தொலைக்கவில்லை என்று நினைக்கிறேன் (அந்த நடிகைகள் படம் போட்டு எழுதிய பதிவை தவிர்த்து)... இப்போ ஒரு இரண்டு பதிவு Draftல் வைத்திருக்கிறேன்... வெளியிட்டால் தேவையில்லாத சர்ச்சை கிளம்புமோ என்று பதுக்கி வைத்திருக்கிறேன்...
@ சே.குமார், !* வேடந்தாங்கல் - கருன் *!, சென்னை பித்தன்
நன்றி மக்களே...
@ Anonymous
// Enna review ithu Ivar periya samooha poruppu velakkenna. Yenda yemaathuraannu therijavana the...... Payaanno illa the ......... Pu nno solrathula enna thappu po poi modhalla unnoda soo la irukkura alukka kaluvu //
உங்க தமிழை தட்டு தடுமாறி வாசிக்கவே பத்து நிமிடம் ஆச்சு... காலம் செய்த சோதனை...
எல்லோருடைய அதுக்குள்ளயும் ஒரு அவுன்ஸ் அதுவாவது இருந்துட்டே இருக்கும்ன்னு கமல் ஒரு மேடையில் சொன்னதாக ஞாபகம்...!
@ WiNnY...
// வாசகனின் மனதை நீங்கள் அறிந்து இதை எழுதி இருப்பது அருமை.. //
என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க...
@ மணிவண்ணன்
// சரியான மொக்காத்தா! //
நன்றி... அஞ்சாநெஞ்சன் மணி பெயரில் FAKE ID...???
@ ராஜன், Raazi, அந்நியன்
நன்றி மக்களே...
@ ரெவெரி
// நீங்களே வேண்டாம்னு சொல்றீங்க ...அப்பம் பார்க்க வேண்டியது தான்...-:)
What a ***** REVIEW -:) //
"தல"யிலே அடிச்சு சத்தியம் பண்றேன்... நான் படம் பார்க்க வேண்டாம்ன்னு சொல்லவே இல்லை... இதுவும் பாஸிடிவான பதிவுதான்... நம்புங்கப்பா...
உங்க விமர்ச்சனம் ரொம்ப மொக்கை நண்பரே .... அஜீத் ரசிகனாக இருந்து கொண்டு அஜீத் படத்தை விமர்ச்சித்தால் எல்லாரும் பாராட்டி விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டீர்கள்...
ம்மம்..ம்ம்ம்ம்ம்ம்
சுட்டுட்டிங்க.. நெஞ்சத்தான்..
அப்படியே நான் சொந்தமா ஒரு கவிதை எழுதியிருக்கேன் வந்து பார்த்துட்டு பாராட்டிட்டுப் போங்களேன்..! பாரட்டுன்னு சொன்னேன்...!!
இணைப்பு: இனி தடைகள் இல்லை உனக்கு
ஏன் இந்த சீன் ??? தலைப்பு மாற்றுங்கள்
எவ்வளவு நாளைக்குத்தான் அவங்களும் நல்லாவே நடிக்கிறது,,////
.
.
யோவ அதான் அவுரு வாலி பில்லா வரலாறு இதுல எல்லாம் வில்லனா நடிக்கலியா?
*****king பண்ணிதான் எல்லாரும் போரந்தோம்!!பேசாம அதையும் ஸ்க்ரீன்ல காட்டிடுங்க
தல அருமையா இருக்கு... நானும் அஜித் ரசிகன் தான் என குறிப்பிட விழைக்கிறேன்... மங்காத்தா.... கொஞ்சம் என் பக்கமும் வந்துட்டு போரது...
நைஸ் டச் . நடு நிலைமையான விமர்ச்சனம்
//இடம்வலமாகவே “தல”யை அசைப்பேன்//
நைஸ் டச் .
நடு நிலைமையான விமர்ச்சனம்
அஜித் ரசிகராக இருந்தும் ,நடுநிலையான பதிவு !
.....என்னதான் அஜீத்தின் கேரக்டர் நெகடிவாக இருந்தாலும் ஜெயப்பிரகாஷை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிடும்போது அடப்பாவி என்று பதறுகிறது நெஞ்சம்.
என் மனசுல பட்டதை உங்கள் எழுத்து அப்படியே பிரதிபலிக்கிறது... பதிவர் சந்திப்பில் சந்திபோம்.
innum padam paakkala friend so vimarsanam nanraaka irunthathu
இந்த விமர்சனத்துக்குப் பிறகுதான் படம் பார்க்கப் போகிறேன். விமர்சனம் அருமை.
இந்த விமர்சனத்துக்குப் பிறகுதான் படம் பார்க்கப் போகிறேன். விமர்சனம் அருமை.
மங்காத்தா குறித்து தங்களிடமும் நல்ல விமர்சனம் வந்திருக்கிறது..
enimae nee aelam padam paathu vimarsanam panatha da loosu payalae. blog na aenna vena aethuthalama!!!! stupid fellow
உங்கள் பார்வையைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று!!
விமர்சனம் நல்லா இருக்கு ப்ரபா.. ஆனா தலைப்பு இப்படி வைச்சிருக்க வேண்டாம். நல்லா எழுதுறீங்க.. அதுனால வார்த்தைகள்ல கொஞ்சம் கவனமா இருங்க..
இதெல்லாம் ஒரு விமர்சனமானு யாரும் கேட்கமுடியாது... அவரவர் பார்வையில் எழுதப்படும் ஒரு பதிவு... யாரும் யாரையும் கட்டாயபடுத்தி எழுதவைக்க முடியாது....
///அஜீத்தை மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் கேரக்டர்களையும் ரோல் மாடலாக நினைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.///
மிக மிக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். சமூக பொறுப்பு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுக்கு நிறையவே உள்ளது..
மிக நடுநிலையான விமர்சனம்!
யே தல பேஷ் மாட்டேன் என்கு ஷூபர ஷ்டார் நாக்காலி வேண்ம்...அது வர்க்கும் நான் நட்ந்து கிட்டே இருப்பேன் ...இது....
மணி மணி குஞ்சு மணி கவுண்ட மணி உசுல மணி கோவில் மணி
பிரபாகரன் புதிய பதிவுகளெதுவும்வ வில்லையே ஏன்?
Post a Comment