14 October 2011

21 Grams

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழில் வானம், ஆரண்ய காண்டம் படங்கள் வெளிவந்தபோது அவை நான்-லீனியர் படங்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் உண்மையில் நான்-லீனியர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன படம் இதுதான்.

- கிறிஸ்டினா தன்னுடைய கணவனையும், இரண்டு குழந்தைகளையும் ஒரு கார் விபத்தில் பறிகொடுக்கிறாள்.
- ஜேக் ஒருநாள் கார் ஓட்டிப்போகும்போது ஒரு ஆளையும் இரண்டு குழந்தைகளையும் இடித்து, அவர்கள் இறந்துவிடுகிரார்கள்.
- பால் இதய நோயால் மரணத்திற்கு அருகிலிருப்பவன். அவனுக்கு கார் விபத்தில் பலியான ஒருவனின் இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.

இந்த மூன்று வெவ்வேறு கதைகளையும் ஒரே கதையாக சேர்த்து பிசைந்து சுழட்டியடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இதற்கிடையே பால் – அவரது முன்னாள் மனைவியுடனான காதல், ஜேக் – கர்த்தர் காயடித்துவிட்டார் என்று புலம்புவது, கிறிஸ்டினாவின் போதைப்பழக்கம் என்று இன்னும் நிறைய கிளைக்கதைகள். சிகரெட், மது, கஞ்சாவெல்லாம் சர்வசாதாரணமாக புழங்குகிறது. தொண்ணூறாவது நிமிடத்தில் ஒரு காமத்துப்பால் காட்சியும் உண்டு.

ஆங்கிலப்படங்களில் குடும்பம், பாசம் என்று நெகிழ வைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவே. அந்த குறைவான எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.

இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஸீன் பென். அதாங்க ஐயாம் சாம் படத்தில் விக்ரம் மாதிரியே நடிக்க முயற்சி பண்ணாரே, அவரேதான். ஹீரோயினாக நடித்திருப்பவர் நவோமி வாட்ஸ். ஒரு காட்சியில் ஆவேசமாக முத்தம் கொடுத்துவிட்டு, அடுத்த நொடியே ஆத்திரம் கொண்டு அடிப்பது என்று அடேங்கப்பா என்னா நடிப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் பெனிசியோ டெல் டொரோ. இவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக, நகைச்சுவையுடன் கடைசி பத்தியில்.

2003ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இருபது மில்லியன் செலவில் அறுபது மில்லியன் வசூலை குவித்திருக்கிறது. நவோமியும், பெனிசியோவும் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதவிர பல்வேறு விருதுகளையும் வாங்கிஇருக்கிறது.

இந்தப்படத்தை இயக்கிய அலெக்சாண்டர் (அதுக்கு மேல வாயில நுழையல... சர் நேமாம்...) திரைக்கதையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அமெரோஸ் பெரோஸ் படத்தை இயக்கியவர்.

21 Grams – பொறுமையாக பார்த்தால் அருமையாக ரசிக்கலாம்.

பதிவிறக்க லிங்குகள்:
நேரடி லிங்குகள்: பாகம் 1, 2, 3, 4

பெனிசியோ டெல் டொரோ... இந்த நடிகரைப் பார்த்ததும், அட நம்ம கே.ஆர்,பி.செந்தில் அவருடைய ப்ரோபைல் போட்டோவில் இருப்பது போலவே இருக்கிறாரே என்று கொஞ்சம் வியந்தேன். மேலும் தெரிந்துக்கொள்ள கூகிளினேன். மேலும் ஆச்சர்யம், இவர் சே குவேரா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சே குவேராவாக நடித்திருக்கிறார். என்னுடைய தீர்க்க தரிசனத்தை மெச்சிக்கொண்டேன். இன்னும் கொஞ்சம் புகைப்படங்களை கூகிளி பார்த்தேன், அப்போதுதான் தெரிந்தது. நம்மவர்கள் நிறைய பேர் ப்ரோபைல் படத்தில் இருப்பது சே குவேரா அல்ல. இவர்தான். சே குவேரா புகைப்படம் கிடைக்காத பட்சத்தில் சில ஓவியர்கள் இவரை மாடலாக வைத்து சே குவேராவை வரைந்திருக்கிறார்கள். ச்சே.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

16 comments:

Philosophy Prabhakaran said...

இந்த படத்தோட கதையும் "உயிரின் எடை 21 அயிரி" படத்தோட கதையும் ஒன்னா...??? பார்த்தவங்க யாராச்சு சொல்லுங்க...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

இவர்தான் நம்மாளுக சேகுவேரான்னு நினச்சிட்டிருக்காங்களா? நல்ல தகவல், படத்த பார்த்திடுவோம்.

kumaran said...

நல்ல விமர்சனம்..நன்றி.....

Unknown said...

அருமையான விமர்சனம்...அதுல ஏன்யா காமத்து பால் கருமத்து பால்னு போட்டு கொல்றீரு!...அதுவும் விக்ரம தாக்கி சாம ஓட்டி இருக்கீரு...கட்சீல பதிவர்கள் பலரின் முகப்பு படங்களையும் தாக்கி வந்திருக்கு பதிவு...எப்பிடி போதுமா மாப்ள...பகிர்வுக்கு நன்றி!

Prem S said...

// இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஸீன் பென். அதாங்க ஐயாம் சாம் படத்தில் விக்ரம் மாதிரியே நடிக்க முயற்சி பண்ணாரே, அவரேதான்// நெத்தியடி நக்கல்.அருமையான விமர்சனம்

நாய் நக்ஸ் said...

Nalla discovery......

He ....he.......

குறையொன்றுமில்லை. said...

விமரிசனம் நல்லா இருக்கு.

Anonymous said...

Enaku oruthar name kooda puriyala prabha...

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை பிரபா. படத்தோட லிங்க் போட்டதற்கு ரொம்ப நன்றி.

Anonymous said...

//விக்கியுலகம் said...
அதுல ஏன்யா காமத்து பால் கருமத்து பால்னு போட்டு கொல்றீரு//

Because it's PRABA'S blog!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா சே குவாரா மேட்டர் புதுசா இருக்கே...!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா இதுதான் நான் லீனியரா?

Unknown said...

வணக்கம் பிரபாகரா,
நல்ல விமர்சனம்.
வாய்ப்பு கிடைக்குமெனில் பார்த்துவிட்டு வருகிறேன்.

மயில் றெக்க said...

is sarvam story like this ah?

Philosophy Prabhakaran said...

@ கார்த்திக் கவி
// is sarvam story like this ah? //

நான் சர்வம் பார்த்ததில்லை... சர்வம் படத்திலும் இதுபோல உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

உயிரின் எடை 21 கிராம் படம் இந்தப்படத்தின் உல்டாவா? என கேட்டா உதைக்க வருவாங்க!! ஹா ஹா