அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒவ்வொரு முறை code அடிக்கும்போதும் யாருடா இதெல்லாம் கண்டுபுடிச்சான் அவன் மட்டும் என் கையில கிடைச்சா கொண்டேபுடுவேன்னு ஒரு மனுஷனை திட்டுவேன். அந்த மனிதர் இப்போது நம்முடன் இல்லை. Steve Jobs மறைந்த போது கிடைத்த மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம். C Programming Language, UNIX Operating System ஆகியவற்றின் தந்தை என்றழைக்கப்படும் Dennis Ritchie கடந்த அக்டோபர் மாதம் பன்னிரண்டாம் தேதி தனது எழுபதாம் வயதில் மறைந்துவிட்டார். எனக்கெல்லாம் ஐந்திலக்க சம்பளம் கொடுத்து சோறு போடும் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
தீபாவளி, பொங்கல் என பெரிய படங்கள் ரீலிசாவதற்கு முந்தய வாரம் பெரும்பாலான தியேட்டர்களில் ஈயடிப்பார்கள். அந்த மாதிரி சமயங்களில் தியேட்டர்க்காரர்கள் பழைய ஆங்கில டப்பிங், சாப்ட் போர்ன் படங்களை ரிலீஸ் செய்வார்கள். அந்த வகையில் பொங்கலுக்கு முந்தய வாரம் கஜுராஹோ இளவரசி என்றொரு காவியத்தை பார்த்தேன். இந்தமுறை “அதிசயப்புதையலும் காட்டு மனிதர்களும்” என்று 1979ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆங்கிலப்படத்தின் டப்பிங்கை பார்த்தோம். படத்தில் நிறைய மொக்கை காமெடி வசனங்கள். கொடுத்த முப்பது ரூபாய்க்கு திருப்தி கிடைத்தது.
கிரிக்கெட் போட்டி நடக்கும் சமயங்களில் அலுவலகத்தில் இருந்தாலோ அல்லது தொலைக்காட்சியில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டாலோ Cricbuzz என்ற தளத்தை நாடுவேன். பெரும்பாலும் அனைவரும் Cricinfo பார்ப்பார்கள். இது அதைவிடவும் துரிதமான தளம். லைவ் கமென்ட்ரியும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதில் காமெடி என்னவென்றால் ஓரத்தில் Chatbox என்றொரு சமாச்சாரம். அங்கே கிரிக்கெட் ரசிகர்கள் அடித்துக்கொள்வதை பார்க்க வேண்டுமே, கிரிக்கெட்டை விட செம இன்ட்ரஸ்டிங் அதுதான். அடுத்தமுறை முயற்சி செய்து பாருங்கள்.
தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏழாம் அறிவு பார்க்கலாம் என்று நாளை இரவுக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறேன். அதற்கு வேறு பாஸிடம் ஒருமணிநேர பர்மிஷன் கேட்க வேண்டும். சினிமாவுக்கு போறதுக்கு பர்மிஷன்னு தெரிஞ்சா டவுசர் கிழிஞ்சிடும். என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. பொய் சொல்லவும் பிடிக்கவில்லை. ஒரே எரிச்சலா இருக்கு.
ஜொள்ளு:
அழகு என்பது ஆண்பாலா...? பெண்பாலா...? என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது... |
ட்வீட் எடு கொண்டாடு:
iamkarki கார்க்கி
காட்டன் புடவைகளை அனுஷ்கா கட்டிவிட்டு கழட்டினால் காஞ்சிபுரம் பட்டாக மாறுகிறதாம். ஆய்வாளர்கள் தகவல்
naiyandi நையாண்டி
கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன! இதை முதல்லேயே தெரிஞ்சிருந்தா நரகத்திலேயே இருந்து தொலைச்சிருக்கலாம்!
antojeyas Jeyaseelan
ஒருத்தரை மட்டும் கொன்னாஅது "ஆயுதம்".. தியேட்டர்க்கு வர்ற அத்தனை பேரையும் கொன்னா அது "வேலாயுதம்" # இது தாண்டா பஞ்ச்
Kaniyen கனியன்
நிதானம் என்பது, சரக்கு இல்லாதபோது உண்டாகும் மாயத்தோற்றம் !
அறிமுகப்பதிவர்: BALARAMAN - CUDDALORE
சிலர் திரட்டிகள் பற்றி தெரியாமல் அல்லது தெரிந்துக்கொள்ள விரும்பாமல் பதிவெழுதுகின்றனர். அப்படியொரு பதிவர்தான் இவர். அபாரமான எழுத்துத்திறமை படைத்தவர் என்பது உள்ளே நுழைந்து இவருடைய பதினோரு நிமிடங்கள் இடுகையை படித்ததுமே தெரிந்துக்கொண்டேன். செய்தி விமர்சனகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். இவருடைய ஏன் தெலுங்கானா...? கூடங்குளம் போன்ற இடுகைகள் அதற்கு நல்ல உதாரணங்கள். இவருடைய காதலர் தின ஸ்பெஷல் இடுகை. ரூம் நம்பர் 32 என்ற சிறுகதை கிளாஸிக். மறந்தும் தவற விடக்கூடாத நல்லதொரு வலைப்பூ.
கேட்ட பாடல்: விழிகளில் ஒரு வானவில்
லேட் அட்டெண்டன்ஸ். மயக்கம் என்ன படத்தின் “பிறை தேடும் இரவிலே...” பாடலை கேட்டபிறகு சைந்தவி பாடிய பாடல்களை தேடித்தேடி கேட்கிறேன். அப்படிக்கேட்ட பாடல்களில் முதல்முறை கேட்டபோதே வசீகரித்த பாடல் இது. “நீ வந்தாய் என் வாழ்விலே... பூ பூத்தாய் என் வேரிலே...” என்று ஆரம்பிக்கும் அந்த பத்தி முழுவதுமே மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வரிகள் – நா.முத்துகுமார் ஸ்பெஷல். இந்த பாடலை எனக்கு பிடிக்கவில்லை என்று யாருமே சொல்லமாட்டார்கள். இன்னும் விரிவாக இங்கே.
பார்த்த வீடியோ: Mangatha Reloaded
இந்த வாரம் முழுக்க யூடியூப், ஃபேஸ்புக் என ரவுண்டு கட்டி கலக்கிய காணொளி இதுதான். இன்னும் பார்க்காதவர்கள் பார்த்து சிரித்து வைக்கவும்.
ரசித்த புகைப்படம்:
பிரியாணியில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக படுத்திருக்கும் கோழி – ஃபேஸ்புக்கில் சுட்டது |
தத்துபித்துவம்:
வாழ்க்கை ஒரு புறா மாதிரி... இறுக்கி பிடிச்சா செத்துடும்... இலகுவா பிடிச்சா பறந்துடும்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
51 comments:
சுவாரசியமா இருக்கு Philo. என் மாயக்கண்ணாடி உங்கள் பால்கனிக்கோ ஒயின் ஷாப்பிற்கோ பக்கதில் கூட வரமுடையாது பிரதர். நான் இப்பத் தான் தத்து பித்துன்னு நடக்கிறேன். நீங்களோ மரதன் ஓட்ட வீரர். எப்படி கம்பார் பண்ண முடியும்?
மாப்ள ரைட்டு...எனகென்னமோ டாப்பு அந்த சிக்கன் பீஸ் தான்யா!
வேலாட்யுதம் ட்வீட் டாப். அறிமுகப்பதிவர் அழகு. இப்பவே போய் பார்க்கறேன்
கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்?
சிபி கேள்விக்கு நீ பதில் சொல்லலேன்னா நான் உன்ன டைவர்ஸ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை..!
டி.ஆர்.கலக்குறாரு! :-)))
அட, அழகு என்ன அமலா பாலா? நல்ல தமிழ் அறிவு சார் உங்களுக்கு.
ஏழாம் அறிவு எப்புடியாவது பாத்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க சார், நான் அந்த படம் பாக்கணும்னா தேட்டருக்கு போய் சேர்றதுக்கு மட்டும் மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், ஒர்த்தா இல்லையான்னு சொல்லுங்க சார், புண்ணியமா போகும்.
//
காட்டன் புடவைகளை அனுஷ்கா கட்டிவிட்டு கழட்டினால் காஞ்சிபுரம் பட்டாக மாறுகிறதாம். ஆய்வாளர்கள் தகவல்
//
ஜொள்ளு டுவிட்
tr video super
சுவாரசியமான விஷயங்கள் அருமை நண்பா
செத்தாலும் கெத்தா இருக்கணும்னு கடைசி படத்தை பார்க்கும் பொது தெரியுது ஹா ஹா ஹா
இனிய மதிய வணக்கம் பாஸ்,
பதிவு கலக்கல்,
முத்ல் பாதி தொழில்நுட்பம், லாங்குகேஜ்,
டப்பிங் சினிமா என்று லைட்டா போதை கூட்டி, அப்புறமா டீ.ஆர் வீடியோ மூலமா செம போதை கொடுத்திருக்கு...
டீ.ஆர் டூயட் பாடும் போது வாய் அசைவு சரிவரப் பொருந்தலை என்றலும் வீடியோ சூப்பர்..
இன்று அறிமுகமாகியிருக்கும் கூடலூர் பலராமனுக்கு வாழ்த்துக்கள்!
நானும் cricbuzz தான்!
நல்ல பதிவர் அறிமுகம்!
புறாவுக்கு பதில் பட்டாம்பூச்சியா இருந்தா இன்னும் சிறப்பாகியிருக்கும் தத்துப்பித்துவம்!
Mangatha Reloaded - Ultimate Fun!
Dennis Ritchie - எத்தனையோ கணினி மொழிகள் வந்தாலும் C -க்கு இணையான தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை, இவரை எடு இணையற்ற வரலாற்று நாயகர் என்றே சொல்ல வேண்டும்.
\\என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியவில்லை. பொய் சொல்லவும் பிடிக்கவில்லை.\\ நன்மை பயக்குமிடத்து பொய்யும் வாய்மையே என்று வள்ளுவர் சொல்லியிருக்காரு மச்சி.
\\கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன! இதை முதல்லேயே தெரிஞ்சிருந்தா நரகத்திலேயே இருந்து தொலைச்சிருக்கலாம்!\\ கல்யாணம் சொர்க்கத்தில நிச்சயம் பண்ணிட்டு குடித்தனம் நரகத்தில வச்சிட்டாங்க, ஹா...ஹா....ஹா....
\\
நிதானம் என்பது, சரக்கு இல்லாதபோது உண்டாகும் மாயத்தோற்றம் !\\ ஆஹா...எப்படி எல்லாம் யோசிக்கிறாயிங்க!!
\\பார்த்த வீடியோ: Mangatha Reloaded\\ நல்லாயிருக்கு.... ஹா..ஹா..ஹா...
\\
கேட்ட பாடல்: விழிகளில் ஒரு வானவில்\\\ இந்தப் படத்தி திருடி எடுத்தாங்கன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எதையும் ரசிக்க முடியல.
எத்தனை டிக்கட் இருக்கு பிரபா?
உங்க பாசுக்கு உங்க ப்ளாக் முகவரி தெரியுமா?
@ அப்பு
\\உங்க பாசுக்கு உங்க ப்ளாக் முகவரி தெரியுமா?\\ Haa...ha..ha...
///எனக்கெல்லாம் ஐந்திலக்க சம்பளம் கொடுத்து சோறு போடும்///
ஆஆ மாசம் மாசம் அஞ்சுலட்சம் சம்பளமா ஆஆஆஆஆஆஆஆஅ
///சினிமாவுக்கு போறதுக்கு பர்மிஷன்னு தெரிஞ்சா டவுசர் கிழிஞ்சிடும்///
////பொய் சொல்லவும் பிடிக்கவில்லை. ஒரே எரிச்சலா இருக்கு.////
ஒ இதுக்கு முன்னால நீங்க பொய்யே சொன்னதில்ல
அந்த 'சொள்ளு' வச்ச கண்ணு எடுக்காம என்னையேவே பாக்குராயா, மல்லிகைபூவும் ரொம்ப வாசமா இருக்கும் போலேயே
ஒருத்தரை மட்டும் கொன்னாஅது "ஆயுதம்".. தியேட்டர்க்கு வர்ற அத்தனை பேரையும் கொன்னா அது "வேலாயுதம்" # இது தாண்டா பஞ்ச்//
ஆஹா போட்டு தாக்க ஆரம்பிச்சிட்டாங்களே, சின்ன டாகுட்டர் ரூம் போட்டு அழுதுட்டு இருக்காராம்..!!!
சி.பி.செந்தில்குமார் said...
கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்?//
டேய் நீ பிளாக் மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன் ஹி ஹி...
/////அழகு என்பது ஆண்பாலா...? பெண்பாலா...? என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது...
/////
அமலா பால்னு முடிவு பண்ணிட்டிங்க... அப்போ காஜலை விட்டுக் கொடுத்துடுங்க.......
////சி.பி.செந்தில்குமார் said...
கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்?//////
அமலா பால் பார்த்த கண்ணால அதெல்லாம் பார்க்க முடியாதுன்னுதான் போடல போல....
/////நா.மணிவண்ணன் said...
அந்த 'சொள்ளு' வச்ச கண்ணு எடுக்காம என்னையேவே பாக்குராயா, மல்லிகைபூவும் ரொம்ப வாசமா இருக்கும் போலேயே//////
சரி சரி போட்டோவ பிரிண்ட் பச்ச குத்தி வெச்சுக்குங்கப்பு.......
டீஆரு எப்பவும் அப்படித்தான்.. ஆனா மும்தாஜ் அழுவுறத பார்க்கும் போதுதான்.... டிஆரை நெனச்சி பாவமா இருக்கு........
சுவாரசியமா இருக்கு...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...
Dennis Ritchie ...நெல்லை பஸ் ஸ்டாண்ட் கடையிலே டாலருக்கு ரூவா கணக்கு போட்டு வாங்கின புத்தகம்...ஊர் போற வரைக்கும் புத்தக வாசனையை முகர்ந்துட்டே பஸ் பயணம்...ம்ம்ம்..மலரும் நினைவுகள் தந்துட்டீங்க...
கடைசி வரைக்கும் நம்ம மரமண்டைக்கு அது ஏறவில்லைங்க்றது மறந்து போன விஷயம்...
நல்ல பதிவர் அறிமுகம்...
ட்வீட் ...-:)
////தொலைக்காட்சியில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டாலோ Cricbuzz என்ற தளத்தை நாடுவேன்/// நானும் இதை தான் அதிகம் பயன்படுத்துறனான் ..வேகம் அதிகம்.. எபிக் பிரவுசரில் சைட் பாரில் இது உள்ளது ...
இறுதி தத்துவம் சூப்பரு ))
T.R VIDEO கலக்கல் எப்டி தான் எடிட் செய்றாங்களோ .ஜொள்ளு சூப்பர்
காக்டெயில் கலக்கல்.
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......
@ ஷர்மி
// சுவாரசியமா இருக்கு Philo. என் மாயக்கண்ணாடி உங்கள் பால்கனிக்கோ ஒயின் ஷாப்பிற்கோ பக்கதில் கூட வரமுடையாது பிரதர். நான் இப்பத் தான் தத்து பித்துன்னு நடக்கிறேன். நீங்களோ மரதன் ஓட்ட வீரர். எப்படி கம்பார் பண்ண முடியும்? //
மேடம்... உங்கள் வேல்யூ உங்களுக்கு தெரியவில்லை... நீங்கள் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்...
@ சி.பி.செந்தில்குமார்
// கில்மா ஃபோட்டோ ஏதும் போடலையே ஏன்? //
அமலா பால் போட்டோவெல்லாம் உங்களுக்கு கில்மாவாவே தெரியலையா...
@ தங்கம்பழனி
// சிபி கேள்விக்கு நீ பதில் சொல்லலேன்னா நான் உன்ன டைவர்ஸ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை..! //
சொல்லிட்டேன் தல... அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க...
@ Dr. Butti Paul
// ஏழாம் அறிவு எப்புடியாவது பாத்துட்டு ஒரு விமர்சனம் போடுங்க சார், நான் அந்த படம் பாக்கணும்னா தேட்டருக்கு போய் சேர்றதுக்கு மட்டும் மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், ஒர்த்தா இல்லையான்னு சொல்லுங்க சார், புண்ணியமா போகும் //
பிரார்த்தனா டிரைவ் இன்னா... புதன்கிழமை அதிகாலை ஏழாம் அறிவு பதிவு வெளிவரும்...
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// செத்தாலும் கெத்தா இருக்கணும் //
அட இந்த தத்துவம் ரொம்ப நல்லா இருக்கே...
@ நிரூபன்
// இன்று அறிமுகமாகியிருக்கும் கூடலூர் பலராமனுக்கு வாழ்த்துக்கள்! //
அண்ணே அவர் கடலூர் பலராமன்...
@ கோகுல்
// புறாவுக்கு பதில் பட்டாம்பூச்சியா இருந்தா இன்னும் சிறப்பாகியிருக்கும் தத்துப்பித்துவம்! //
ஆமால்ல...
@ Jayadev Das
// ன்மை பயக்குமிடத்து பொய்யும் வாய்மையே என்று வள்ளுவர் சொல்லியிருக்காரு மச்சி. //
உண்மையையே சொல்லிட்டேன் சார்... கொஞ்சம் அர்ச்சனை பண்ணிட்டு பர்மிஷன் கொடுத்துட்டார்...
@ அஞ்சா சிங்கம்
// எத்தனை டிக்கட் இருக்கு பிரபா? //
தல... ரெண்டு டிக்கெட் தான் எடுத்தேன்... ரெண்டாவது டிக்கெட்டுக்கு பலத்த போட்டி நிலவுகிறது...
@ அப்பு
// உங்க பாசுக்கு உங்க ப்ளாக் முகவரி தெரியுமா? //
தெரியும்... ஆனால் அவர் எழுத்துக்கூட்டி தமிழ் படிப்பதற்குள் விடிந்துவிடும்...
@ நா.மணிவண்ணன்
// ஆஆ மாசம் மாசம் அஞ்சுலட்சம் சம்பளமா ஆஆஆஆஆஆஆஆஅ //
யோவ் ஏன்யா இப்படி... ஏன்... அஞ்சு லட்சம் வாங்கினா நான் ஏன் இங்க இருக்குறேன்...
// ஒ இதுக்கு முன்னால நீங்க பொய்யே சொன்னதில்ல //
பப்ளிக்... பப்ளிக்...
// அந்த 'சொள்ளு' வச்ச கண்ணு எடுக்காம என்னையேவே பாக்குராயா, மல்லிகைபூவும் ரொம்ப வாசமா இருக்கும் போலேயே //
இல்லையே எனக்கென்னவோ என்னை பாக்குறா மாதிரிதான் இருக்கு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அமலா பால்னு முடிவு பண்ணிட்டிங்க... அப்போ காஜலை விட்டுக் கொடுத்துடுங்க....... //
என்ன தல... என்னவோ ஜன்னலோர சீட்டை கேக்குறா மாதிரி கேக்குறீங்க... அதெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது காஜல்தான் என் ஆள்... ச்சே... ஆல்-டைம் பேவரைட்ன்னு சொல்ல வந்தேன்...
// டீஆரு எப்பவும் அப்படித்தான்.. ஆனா மும்தாஜ் அழுவுறத பார்க்கும் போதுதான்.... டிஆரை நெனச்சி பாவமா இருக்கு........ //
இன்னொரு பதிவுக்கு ஐடியா கொடுத்திட்டீங்கன்னு நினைக்கிறேன்...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தத்துத்துவம super
Post a Comment