அன்புள்ள வலைப்பூவிற்கு,
தமிழ்மணம். இதற்கு மேல் இந்த பத்திக்கு விளக்கம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். அதைப் பற்றிதான் இந்த இடுகை.
அமைதிகாக்கும் அயோக்கியத்தனத்தை கைவிட்டு இந்த விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தே ஆகவேண்டும் என்று நண்பர் சிவகுமார் கொஞ்சம் நாகரீகமாகவும் நாசூக்காகவும் சொன்னதால் என்னுடைய விருப்பமே இல்லாமல் இந்த இடுகையை எழுதுகிறேன்.
இப்போது நானிருக்கும் மனநிலையை கிட்டத்தட்ட என்னுடைய டைரியில் எப்படி எழுதுவேனோ அதேபோல பதிகிறேன். அது சுயசொறிதல் போலவும் தெரியலாம். நாலு பேர் தவறாக பேசுவார்களே என்ற காரணத்திற்காக என்னுடைய சுயத்தை இழந்து, என்னுடைய எழுத்துக்களை மாற்றியமைக்க நான் விரும்புவதில்லை. அதேசமயம், நான் இப்படித்தான் எழுதுவேன் படிச்சா படி இல்லைன்னா ஓடிப்போயிடு என்ற அதிகப்பிரசங்கித்தன மனப்பான்மையும் என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை. இப்போது புரிந்திருக்கும் இந்த இடுகைக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன் என்று. இதுதான் என்னுடைய பிரச்சனை.
பதிவுலகம் விந்தையானது. பதிவர்களும் அப்படியே. இங்கே எனக்கு சில நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். இதோ இப்போது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருப்பது கூட நான் மரியாதை வைத்திருக்கும் அந்த ஒருசில நண்பர்களுக்காக மட்டும்தான்.
இங்கே ஒரு பதிவர் எழுதக்கூடிய கருத்தில் மாற்றுக்கருத்து இருந்தாலும் அவரிடம் பழையபடி நட்பு மாறாமல் பழகுவது வெகு சிலரே. மற்றபடி பெரும்பாலானவர்கள் ஒருவர் எழுதிய கருத்துக்களை மட்டுமில்லாமல் அவரையே எதிரியாக பார்க்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் கருத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்று சில நல்ல நண்பர்களை இழக்க விரும்பவில்லை.
நண்பர்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மாற்றுக்கருத்து உள்ளவர்கள் பின்னூட்டமிடலாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
16 comments:
இந்த இடுகை தமிழ்மண விவகாரத்திற்கு மட்டுமல்லாமல் ஏனைய பதிவுலக சர்ச்சைகளுக்கும், இன்னபிற பொதுவான விஷயங்களுக்கும் கூட பொருந்தும்...
சப்பனு சொல்லீட்டிங்கா
இந்த விஷ(ய)த்தை பற்றி நீங்கள் காரமாய் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன் .ஒன்றும் சொல்லவில்லை
ஃஃஃஃஃ மாற்றுக்கருத்து இருந்தாலும் அவரிடம் பழையபடி நட்பு மாறாமல் பழகுவது வெகு சிலரே. மற்றபடி பெரும்பாலானவர்கள் ஒருவர் எழுதிய கருத்துக்களை மட்டுமில்லாமல் அவரையே எதிரியாக பார்க்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள்.ஃஃஃஃஃ
உண்மை தான் பீ.பீ...
கருத்து மோதல் வேறு, மனங்களின் மோதல் வேறு. அப்படியானால் பட்டிமன்றத்தில் சந்தித்தால் கூட இதே மனநிலையில் தான் இருப்பார்கள் என்றால் மனிதம் என்னாவது.
சபாஷ் பிரபாகரன், உங்கள் உணர்வுகளுக்கு நன்றி!
தலைப்பிலேயே உங்கள் மனதைச் சொல்லிவிட்டீர்கள். திரட்டிகளை விட நட்பே முக்கியம், எனவே திரட்டி விஷயத்தில் உங்கள் முடிவு எப்படி இருந்தாலும் ஒன்றும் இல்லை, எனவே சஞ்சலப்பட வேண்டாம்.
சபாஷ் பிரபா...
பலருடைய நிலைப்பாடு இதுதான்... நாங்கள் நேரடியாக பாதிக்க பட்டதால் அனைவரையும் வெளியேற சொல்ல முடியாது (நண்பனாக இருந்தாலும் கூட).
சுயவிளக்கத்துக்கு நன்றி
@ வெளங்காதவன்
தல... தயவு செய்து நீங்க அனுப்பின வைரஸ்களை அழிக்க வழி சொல்லுங்க... ஏற்கனவே என் கம்ப்யூட்டர் ஒடப்புல இருக்கு... இதுல நீங்க வேறயா...
@ பன்னிக்குட்டி ராம்சாமி, அருண் பிரசாத்
புரிந்துக்கொண்டமைக்கு நன்றி...
பிரபா,உணர்ச்சி வசப்படாமல் உங்கள் எண்ணத்தைத் தயக்கமின்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.
என்ன சொல்லுவது என புரியவில்லை
இன்று என் வலையில்
தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM
என்னாச்சி பிரபா எப்போதும் எழுத்தில் சுயத்தை இழக்க கூடாது பிரபா நன்று , கருத்து என்பது வேரு , நட்பு என்பது வேரு , நமக்கென்ன வாய்க்கா தகறார சொல்லுங்க ... நட்புக்கும் கருத்திற்கும் முடிச்சி போட்டால் அது நட்பே அல்ல அது தெளிவு .
பட் உங்க நேர்மை எங்களுக்கு புடிச்சிருக்கு.... (பழைய கமென்ட அழிச்சதுக்கு சாரி,ஆர்கைவ பார்கல)
Post a Comment