அன்புள்ள வலைப்பூவிற்கு,
ரா ஒன் – இன்னும் ஓரிரு மாதங்களுக்கு இதுதான் டாபிக். எந்திரன் வெளிவந்தபோது தமிழகத்தில் இருந்த பரபரப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது அதைவிட இரண்டு மடங்கு மும்பையில். அந்த மும்பை பரபரப்பு தமிழகத்திலும் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த நிமிடம்வரை ரா – ஒன் படத்திற்காக கிட்டத்தட்ட 160 கோடி செலவு செய்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான படம். போட்ட பணம் திரும்ப வருமா...? இந்திய அளவில் விநியோக உரிமை மட்டும் 77கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது, வெளிநாட்டு உரிமை 45 கோடி, தொலைகாட்சி உரிமை 40, பாடல்கள் 15 என்று இதுவரைக்கும் போட்ட கணக்கே லாபம் தந்துவிட்டது. இதில் படம் வேறு தமிழ், தெலுங்கு மற்றும் ஜெர்மன் மொழிகளில் டப்பாக இருக்கிறது. தமிழ் டப்பிங் உரிமையை அபிராமி ராமநாதன் ஒரு பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார்.
ரா ஒன் அறிவிக்கப்பட்டதுமே சிலர் ஐயகோ எந்திரனின் காப்பி என்று புலம்பித்தள்ளினார்கள் எந்திரனே காப்பி என்பதை மறந்துவிட்டு. ஆனால் ரா ஒன்னின் இயக்குனர் ஆறு வருடங்களுக்கு முன்பு தான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த கதை மனதில் தோன்றியதாக டக்கால்ட்டி விடுகிறார். (ஒருவேளை சக்திமான் பார்த்திருப்பாரோ...???) ஷாருக்கான் தென்னிந்தியராக நடிப்பதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. படத்தில் ஷாருக்கின் கேரக்டர் பெயர் ஜி ஒன். அப்படின்னா ரா ஒன்...? அது அர்ஜுன் ராம்பாலின் கேரக்டர் பெயர். அதை ஏன் படத்தின் டைட்டிலாக வைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஷாருக் கேரக்டரை விட அர்ஜுன் ராம்பாலுக்கு முக்கியமான கேரக்டர் அதனால்தான் அவருடைய கெட்டப்பை கூட ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தரப்பு.
சரி மேட்டருக்கு வருவோம். சமீப வருடங்களாக பாலிவுட் ஹீரோக்கள் தங்கள் படங்களை பிரமோட் பண்ணுவதற்காக ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள். அதிலும் ஷாருக் மற்றும் அமீர் கான் செய்யும் வித்தைகள் உச்சக்கட்டம். இரண்டு கான்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் படங்களை மார்கெட்டிங் செய்கிறார்கள். ஷாருக்கை பொருத்தமட்டில் அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய விளம்பரத்தை தேடித் தருவது கிரிக்கெட். அடி மேல் அடி வாங்கினாலும் ஷாருக் ஐபிஎல்லை விடாப்பிடியாக பிடித்திருப்பது இதற்குத்தான். தவிர இந்தமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் ரா – ஒன் ட்ரைலரை வெளியிட்டதில் எக்கச்சக்க பப்ளிசிட்டி.
இதுதவிர்த்து என்னென்ன மார்கெட்டிங் வித்தைகள்...? இந்தமுறை புதிய டெக்னிக் அதாவது ரா – ஒன் பெயரில் ப்ளே ஸ்டேஷன் கேம் வெளியிட்டு சோனி நிறுவனமும், ரா – ஒன் படமும் விளம்பரம் தேடிக்கொண்டது. நோக்கியா, கூகுள், யூடியூப் என்று பெரிய நிறுவனங்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் படத்திற்கு ஸ்பான்சர் செய்கின்றன.
இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தவர்களுக்கு சில பிரபல நடிகர்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கலாமே என்று தோன்றியிருக்கிறது. சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா என்று சில பாலிவுட் முன்னாள்களை வளைத்துபோட்டதோடு, அமிதாப்பை படத்தின் ஒரு முக்கியமான காட்சிக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.
ரைட்டு அடுத்து...? உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கல்லா கட்ட, படத்தில் ஜாக்கி சானை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். ஜாக்கி அதுக்கெல்லாம் அசருகிற ஆளா...? கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக எஸ்கேப்பாகிவிட்டார். அடுத்த டார்கெட்...? நம்ம சூப்பர்ஸ்டார். ரஜினியை படத்தின் ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்துவிட்டால் தமிழகம், ஏன் தென்னிந்தியா முழுவதும் படம் பெரிய கலெக்ஷன் பார்த்துவிடும். உடல்நிலைகோளாறில் இருந்த ரஜினியை அப்படி இப்படியென்று மகள் சவுந்தர்யாவை வைத்து பேசி நடிக்க (???) வைத்திருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ரஜினி ரா ஒன்னில் நடித்தாரா...? படத்தின் ஒருகாட்சியில் ரஜினி, எந்திரன் சிட்டி கெட்டப்பில் தோன்ற வேண்டும். ஆனால் அதற்கு ரஜினிதான் நடிக்க வேண்டும் என்றில்லை. கிராபிக்ஸ் கூட செய்துக்கொள்ளலாம். (எந்திரனில் செய்தது போலவே) அதேசமயம் ரஜினி நடித்தார் என்றும் ஊர் உலகத்தை நம்ப வைக்க வேண்டுமே. எனவே, நீங்க வந்தா மட்டும் போதும், நீங்க வந்தா மட்டும் போதும் என்ற ரீதியில் ரஜினிக்கு அப் அண்ட் டவுன் மும்பைக்கு டிக்கெட் போட்டு உபசரித்திருக்கிறார்கள்.
ரஜினி ரா ஒன்னில் நடித்தாரோ இல்லையோ, ஆனால் இது Tribute to Rajnikanth என்று பிதற்றுகிறது ஒரு ஆங்கிலப் பத்திரிகை. உண்மையிலேயே இது ரஜினிக்கு ஒரு கெளரவமா....? தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக ரஜினியை பயன்படுத்தியிருக்கிறார் ஷாருக். சுருக்கமாகச் சொன்னால் ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய். இது தெரியாமல் ஏதோ ரஜினியை பெருமைப்படுத்திவிட்டதாக மீடியாவோடு சேர்ந்து ரஜினி ரசிகர்களும் கூப்பாடு போடுவது வேடிக்கையாக இருக்கிறது.
சரி, வரும் ஆனா வராது வடிவேலு காமெடி பாணியில் எத்தனையோ முறை ரஜினி அவரது ரசிகர்களை வைத்து காமெடி செய்திருக்கிறார். நான் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் வராமல் ரசிகர்களுக்கு பெப்பே காட்டியிருக்கிறார். டூயட் பாடல்களில் “கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு... காலத்தின் கையில் அது இருக்கு...” போன்ற வரிகளை வைத்து தமிழனை தலை சொறிய வைத்திருக்கிறார். இப்படியெல்லாம் கோடானு கோடி ரசிகர்களை அவருடைய போதைக்கு ஊறுகாயாக்கிய ரஜினி ஒரே ஒருமுறை யாருடைய போதைக்கோ ஊறுகாயாக்கப் பட்டால் ஒன்னும் குத்தமில்லை.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
78 comments:
//ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்.//
மிகத்தவறான உதாரணம். ரஜினி என்னவோ ஏமாந்தது போல் சொல்கிறீர்களே? பெரிய அமவுண்ட்டை வாங்கிட்டுதான நடிச்சாரு? அப்புறம் என்ன?
கடைசில நீங்களும் உங்க பதிவு போதைக்கு எங்களை ஊறுகாயாக்கிட்டீங்களே தம்பி!
ரைட்டு! :-)
இப்படிக்கு - ரஜினி ரசிகன்
உண்மைதான் ....
@ ! சிவகுமார் !
// மிகத்தவறான உதாரணம். ரஜினி என்னவோ ஏமாந்தது போல் சொல்கிறீர்களே? பெரிய அமவுண்ட்டை வாங்கிட்டுதான நடிச்சாரு? அப்புறம் என்ன? //
ரஜினி இப்போதிருக்கும் நிலையில் பணம் ஒரு விஷயமா என்ன...? அவருடைய இமேஜ்... அதுதானே முக்கியம்...
@ அனானி அண்ணன்
// கடைசில நீங்களும் உங்க பதிவு போதைக்கு எங்களை ஊறுகாயாக்கிட்டீங்களே தம்பி! //
யப்பா அறிவு வந்துடுச்சுடா யப்பா அறிவு வந்துடுச்சு... (ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா ஸ்டைலில் படிக்கவும்...
@ சேட்டைக்காரன்
// இப்படிக்கு - ரஜினி ரசிகன் //
ஆத்தி...
@ NAAI-NAKKS
// உண்மைதான் .... //
நன்றி நக்கீரன்...
// உங்க பதிவு போதைக்கு எங்களை ஊறுகாயாக்கிட்டீங்களே தம்பி //
உண்மை.
ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய். இது தவறான ஒன்று. சிவகுமார் சொன்னது போல பணம் வாங்கிட்டு தானே நடிக்கிறார் வேறென்ன?
இது மட்டுமின்றி ஒரு பட தயாரிப்பாளராக அதை ப்ரோமொட் செய்ய அவர் செய்யும் வழக்கமான உத்திகள் தானே இவை எல்லாம், இதை ஏன் இப்படி கேவலமான தலைப்பு போட்டு ஒரு பதிவாக போட வேண்டும் என எனக்கு புரியவில்லை. சரி அது உங்க இஷ்டம்.
//இது தெரியாமல் ஏதோ ரஜினியை பெருமைப்படுத்திவிட்டதாக மீடியாவோடு சேர்ந்து ரஜினி ரசிகர்களும் கூப்பாடு போடுவது வேடிக்கையாக இருக்கிறது.//
உண்மை அன்பரே படம் பற்றிய தகவல் அருமை
அவன் பணம் குடுத்தான் இவன் நடிச்சு குடுத்தான். பட்டையும் கொட்டையும் போடுறதுனால ரஜினி ஒன்னும் பெரிய ஞானி கிடையாது.. அவனும் ஒரு சாதாரண மனுஷன் தான்.
// அவருடைய இமேஜ் //
அவர் இமேஜ் பற்றி கவலை படுபவராய் இருந்திருந்தால் எந்திரன் என்ற ஒன்றை கையில் எடுத்திருக்க மாட்டார். எடுத்தாலும்,
"ஐஸ்'ஐ பார்த்து நான் அப்படியே ஆஃப் ஆயிட்டேன்" என்று பேட்டி கொடுத்திருக்க மாட்டார்.
கோடிகளுக்கு வெள்ளை அடிக்க உதவி இருக்க மாட்டார்...
// இது மட்டுமின்றி ஒரு பட தயாரிப்பாளராக அதை ப்ரோமொட் செய்ய அவர் செய்யும் வழக்கமான உத்திகள் தானே இவை எல்லாம், இதை ஏன் இப்படி கேவலமான தலைப்பு போட்டு ஒரு பதிவாக போட வேண்டும் என எனக்கு புரியவில்லை. சரி அது உங்க இஷ்டம். //
எனக்கு தோன்றியதை எழுதினேன்... இது ரஜினிக்கு பெருமையா சிறுமையா என்று யோசித்துப் பாருங்களேன்...
// உண்மை அன்பரே படம் பற்றிய தகவல் அருமை //
நன்றி பிரேம்...
// அவன் பணம் குடுத்தான் இவன் நடிச்சு குடுத்தான். பட்டையும் கொட்டையும் போடுறதுனால ரஜினி ஒன்னும் பெரிய ஞானி கிடையாது.. அவனும் ஒரு சாதாரண மனுஷன் தான். //
ஆரம்பத்துல இருந்து எல்லோரும் இந்த உண்மையை புரிஞ்சிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...
// அவர் இமேஜ் பற்றி கவலை படுபவராய் இருந்திருந்தால் எந்திரன் என்ற ஒன்றை கையில் எடுத்திருக்க மாட்டார். எடுத்தாலும்,
"ஐஸ்'ஐ பார்த்து நான் அப்படியே ஆஃப் ஆயிட்டேன்" என்று பேட்டி கொடுத்திருக்க மாட்டார். //
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது...
பரபரப்பா ஒரு செய்தி கொடுத்தாச்சு போல. உடனே நம்ம ஆளுங்க கிளம்பிடுவானுங்க, எப்படி எங்க தலைவரை தப்பா சொல்லலாம் என்று, அவனுங்களுக்கு என்ன தெரியும், எல்லாம் ஒரு விளம்பரம் தான்னு.
@ ஆரூர் முனா செந்திலு
// உடனே நம்ம ஆளுங்க கிளம்பிடுவானுங்க, எப்படி எங்க தலைவரை தப்பா சொல்லலாம் என்று, அவனுங்களுக்கு என்ன தெரியும், எல்லாம் ஒரு விளம்பரம் தான்னு. //
ஏற்கனவே ஒருமுறை அனுபவித்திருக்கிறேன்...
மாப்ள பகிர்வுக்கு நன்றி!..ஹாஹா...சிக்க மாட்டேன்ல!
@ விக்கியுலகம்
// மாப்ள பகிர்வுக்கு நன்றி!..ஹாஹா...சிக்க மாட்டேன்ல! //
நீங்க மாட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்... ப்ச்...
ஹி ஹி ஹி
இந்த படத்தில் ரஜினி நடிக்க வில்லை .
எல்லாம் cg work தான். இவரு படத்தை ப்ரமோட் பண்ண என்னவெல்லாம் தகிடு தத்தம் பண்ணுவாருன்னு நமக்கு ஏற்கனவே தெரியும் . இப்போ இவரை இன்னொருத்தன் யூஸ் பண்றான் அவ்ளோதான் .........
சரி பிரியாணி விருந்து எப்போ போடுவாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க .
ரானா படத்துக்கு முன்னாடியா ? ரானா படத்துக்கு பின்னாடியா ?
ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்...!/
அவர் பணம் குடுத்தார் ,இவர் நடித்தார் ,நாளை இவரது படத்தில் சாருக்கை கூப்ட்டாலும் அவர் வந்து நடித்து தருவார், ஆரோக்கியமான சினிமா சூழ்நிலை இதுதான், நம்மாட்கள் எந்த விசயத்தையும் எளிதில் அரசியலாக்கி விடுகிறார்கள் , திரும்பவும் இந்த பதிவின் தலைப்பை ஒரு முறை படித்து பாருங்கள் ,இப்படி ஒரு தலைப்பு தேவைதானா? என்று,
ஒரு கமல் வெறியரிடம் இது போன்ற பதிவைத்தான் எதிர்பாக்கமுடியும் (சும்மா கொளுத்திவிட்டு போவம் காசா பணமா )
ஆனால் அதற்கு ரஜினிதான் நடிக்க வேண்டும் என்றில்லை. கிராபிக்ஸ் கூட செய்துக்கொள்ளலாம். (எந்திரனில் செய்தது போலவே)//
அது எப்படி பாஸ் கிராபிக்ஸ்ல செய்யறது ? கொஞ்சம் விளக்க மாக சொன்னால் நன்றாக இருக்கும் ,
ஊறுக்கா, போதைன்னு சொல்றீங்களே கடைசி வரை பிராண்டு அடிச்சீங்கன்னு சொல்லவே இல்லியே?
ஒரு பைசாவிற்கும் USE இல்லாத உன்னுடைய ப்ளாக்ஐ எப்போதும் உயர்த்தி பிடிப்பதற்கு உனக்கு ரஜினி என்ற பெயர் தேவை படுகிறது . அது போல் 160 கோடி முதல் போட்டு படம் எடுத்த ஷாருக், அவர் படம் promote பண்ண எந்த நடிகரை USE பண்ணினால் உனக்கென்ன ? நாட்டில் வேறு பிரச்சனைகள் இல்லையா ? எப்போதும் ஏன் ரஜினியின் பூ- - - - ஐ பிடித்து கொண்டு அலைகிறாய். வேறு ஏதாவது யோசித்து பதிவு எழுது. பதிவின் HIT ற்கு RAJINI என்ற தலைப்பை வைக்காதே . இதை சொன்னால் நான் ரஜினி ரசிகன் என்று நினைக்காதே .
//@ விக்கியுலகம் said...
மாப்ள பகிர்வுக்கு நன்றி!..ஹாஹா...சிக்க மாட்டேன்ல!///
இதை நான் வழிமொழிகிறேன் . .
///@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஊறுக்கா, போதைன்னு சொல்றீங்களே கடைசி வரை பிராண்டு அடிச்சீங்கன்னு சொல்லவே இல்லியே? ///
அவங்க என்ன சரக்கடிச்சா நமக்கென்ன பன்னிகுட்டி??? நமக்குதான் ஒரிஜினல் ஒத்துக்காதே , எப்பவும் டூப்ளிகேட்தானே ? ஹி ஹி
அது சரி நீ அந்த நாட்டுல உக்காந்துகிட்டு சரக்கு அது இதுன்னு பேசிகிட்டு இருக்க? பாத்து புடிச்சுட்டு போய்ட போறாங்க ஹி ஹி
//கோடானு கோடி ரசிகர்களை அவருடைய போதைக்கு ஊறுகாயாக்கிய ரஜினி ஒரே ஒருமுறை யாருடைய போதைக்கோ ஊறுகாயாக்கப் பட்டால் ஒன்னும் குத்தமில்லை.//
குத்தமேயில்லங்க... பணம் கிடைத்தால் உடல் நலம் பற்றி கவலையில்லை. அதான் கூட்டமா மொட்ட போட நம்ம தமிழகத்துல ஆளுங்க இருக்கே... அப்புறம் என்ன கவலை...
எதற்கும் USE இல்லாத உங்களின் பதிவை PROMOTE பண்ணவே உங்களுக்கு , TAMILMANAM , UDANZ , இன்ட்லி தேவைப்படும் போது , 160 கோடிக்கும் மேல் பணம் போட்டு படம் எடுக்கும் PRODUCER , அந்த படத்தை லாபமாக்க எப்படி எல்லாம் PROMOTE பண்ண முடியுமோ , அப்படி எல்லாம் PROMOTE பண்ண தான் செய்வார்கள் . இதில் தப்பு ஒன்றும் இல்லை . ஆனால் படம் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தால் தான் படம் ஓடும் . ஆனால் இதில் ரஜினி ஐ வைத்து பதிவு எழுத வேண்டிய அவசியம் என்ன ? உங்கள் பதிவு HIT ஆக வேண்டும் என்று தானே .ஊருக்கு உபதேசம் பண்ணுவதை விட்டால் மிகவும் நன்று . மற்ற படி ரஜினி பற்றி GOOD CERTIFICATE எதுவும் உங்களிடம் எதிர் பார்க்கவில்லை . ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய் அல்ல . உங்களை மாதிரி சில கேடு கெட்ட பதிவர்களின் போதைக்கு தான் ரஜினி என்றுமே பயன் பட்டு கொண்டு இருக்கிறார் .
/ரஜினி இப்போதிருக்கும் நிலையில் பணம் ஒரு விஷயமா என்ன...? அவருடைய இமேஜ்... அதுதானே முக்கியம்...//
அவர் அறிந்தே ஊறுகாய் ஆனாரா? அதற்கு பதில் சொல்லுங்கள் சார்.
அட ஒயின் ஷாப்பெல்லாம் மூடியிருக்குற நேரத்துல போதையை ஞாபகப்படுத்திடிங்க.
இப்பவே கை நடுங்க ஆரம்பிச்சுடுச்சு!
ஆஹா செம மப்புல இருந்துட்டு, தலைப்பு வச்ச மாதிரி இருக்கே ஹி ஹி...
பிரபாகரன்,
எல்லாமே ஒரு எல்லை தாண்டிப் போய் விட்டது. எதையும் வியாபார நோக்கத்தோடு மட்டுமே அணுகுகிற முறை மாறினால் நல்லது. தெளிவான அணுகுமுறை. வாழ்த்துக்கள்.
//தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக ரஜினியை பயன்படுத்தியிருக்கிறார் ஷாருக்//
//வருவேன்னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் வராமல் ரசிகர்களுக்கு பெப்பே காட்டியிருக்கிறார்.//
இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் விளம்பரம் தான்.
//ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்...!//
ஆனால் ஷாருக் செய்ததை தானே நீங்களும் செய்திருக்கிறீர்கள்.
எப்படியோ தலைவர் பேர சொல்லி ஹிட் பண்ணியாச்சு.வாழ்த்துக்கள்
>>. இப்படியெல்லாம் கோடானு கோடி ரசிகர்களை அவருடைய போதைக்கு ஊறுகாயாக்கிய ரஜினி ஒரே ஒருமுறை யாருடைய போதைக்கோ ஊறுகாயாக்கப் பட்டால் ஒன்னும் குத்தமில்லை.
ஹி ஹி ஹி
இந்தப்பதிவுக்கு ஒரே ஒரு மைனஸ் ஓட்டுதானா? வேதனை.. ஹி ஹி
விடுங்க பாஸ் படம் வரட்டும்... ஷாருக்கின் படத்தில் ரஜினி 10நொடிகள் கௌரவ தோற்றத்தில் வர்றாரா இல்லல ரஜினி படத்தில் ஷாருக் இரண்டரை மணித்தியாலம் கௌரவ தோற்றத்தில் வர்றாரான்னு பார்போம்? ஹி ஹி...
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
// ஹி ஹி ஹி //
நன்றி...
@ அஞ்சா சிங்கம்
// சரி பிரியாணி விருந்து எப்போ போடுவாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க .
ரானா படத்துக்கு முன்னாடியா ? ரானா படத்துக்கு பின்னாடியா ? //
வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வரும்...
@ டெனிம்
// அவர் பணம் குடுத்தார் ,இவர் நடித்தார் ,நாளை இவரது படத்தில் சாருக்கை கூப்ட்டாலும் அவர் வந்து நடித்து தருவார், ஆரோக்கியமான சினிமா சூழ்நிலை இதுதான், நம்மாட்கள் எந்த விசயத்தையும் எளிதில் அரசியலாக்கி விடுகிறார்கள் , திரும்பவும் இந்த பதிவின் தலைப்பை ஒரு முறை படித்து பாருங்கள் ,இப்படி ஒரு தலைப்பு தேவைதானா? என்று, //
தவறான கண்ணோட்டம்... ஏதோ ஷாருக்கும் ரஜினியும் ஒன்னா சேர்ந்து சரிக்கு சமமா மல்ட்டி ஸ்டாரர் படத்துல நடிக்கிற மாதிரி சொல்றீங்க... ஒருவேளை அப்படி நடந்த அது ஆரோக்கியமான சூழல்தான்...
// நாளை இவரது படத்தில் சாருக்கை கூப்ட்டாலும் அவர் வந்து நடித்து தருவார் //
ஷாருக் அவ்வளவு சீக்கிரம் ஏமாற மாட்டார்...
@ நா.மணிவண்ணன்
// ஒரு கமல் வெறியரிடம் இது போன்ற பதிவைத்தான் எதிர்பாக்கமுடியும் (சும்மா கொளுத்திவிட்டு போவம் காசா பணமா ) //
இந்த விஜய் ரசிகர்கள் தொல்லை தாங்கலையே...
@ டெனிம்
// அது எப்படி பாஸ் கிராபிக்ஸ்ல செய்யறது ? கொஞ்சம் விளக்க மாக சொன்னால் நன்றாக இருக்கும் , //
நார்நியா படத்தில் சிங்கம் எப்படி நடித்து...? எந்திரன் படத்தின் மின்சார ரயில் சண்டைக்காட்சி எப்படி படமாக்கப்பட்டது...?
உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை... ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஊறுக்கா, போதைன்னு சொல்றீங்களே கடைசி வரை பிராண்டு அடிச்சீங்கன்னு சொல்லவே இல்லியே? //
ராவா அடிச்ச ரா-ஒன் பிராண்ட்...
@ Anonymous
// நாட்டில் வேறு பிரச்சனைகள் இல்லையா ? எப்போதும் ஏன் ரஜினியின் பூ- - - - ஐ பிடித்து கொண்டு அலைகிறாய். வேறு ஏதாவது யோசித்து பதிவு எழுது. //
அண்ணே நாட்டுல வேற பிரச்சனைகளும் இருக்கும் நானும் வேறு சில பதிவுகளையும் எழுதியிருக்கேன்... நீங்க ஏன் இந்த பதிவின் பூ - - - - ஐ மட்டும் பிடித்து தொங்குறீங்க...
@ ♔ℜockzs ℜajesℌ♔™
// அது சரி நீ அந்த நாட்டுல உக்காந்துகிட்டு சரக்கு அது இதுன்னு பேசிகிட்டு இருக்க? பாத்து புடிச்சுட்டு போய்ட போறாங்க ஹி ஹி //
இந்த நாட்டுலயே அவனவன் ஆறு நாளா அல்லல் படுறான் ராஜேஷ்...
@ சே.குமார்
// குத்தமேயில்லங்க... பணம் கிடைத்தால் உடல் நலம் பற்றி கவலையில்லை. அதான் கூட்டமா மொட்ட போட நம்ம தமிழகத்துல ஆளுங்க இருக்கே... அப்புறம் என்ன கவலை... //
நல்லா சொன்னீங்க சே... ரானா நல்லபடியா ரிலீஸ் ஆயிட்டா உங்களுக்கு மொட்டை போடுறேன் :)
@ ROSHAN , MUMBAI
// எதற்கும் USE இல்லாத உங்களின் பதிவை PROMOTE பண்ணவே உங்களுக்கு , TAMILMANAM , UDANZ , இன்ட்லி தேவைப்படும் போது //
அண்ணே என்னுடைய உதாவாக்கரை ப்ளாக்கை பிரமோட் பண்ண தமிழ்மணமும் இன்ட்லியும் தேவைதான் ஒத்துக்குறேன்... ஆனா ரஜினி தேவைன்னு சொன்னா உதைப்பேன்... உதைக்க வேண்டாமா... உதைக்க வேண்டாமா...
@ ROSHAN , MUMBAI
கடைசியா ஒரு பின்னூட்டம் பொதுவா போடுறேன்... அதையும் படிச்சுக்கோங்க...
@ ! சிவகுமார் !
// அவர் அறிந்தே ஊறுகாய் ஆனாரா? அதற்கு பதில் சொல்லுங்கள் சார். //
தெரிந்தே யாரும் ஊறுகாய் ஆகமாட்டார்கள் சிவா...
சில காரணிகள் இருக்கலாம்... என்னுடைய கணிப்பு...
1. ஷாருக் கான் படத்தில், இந்தி படத்தில் நடிப்பது நமக்கு பெருமை என்று நினைத்திருக்கலாம்...
2. பெரும் பணம் கிடைத்திருக்கலாம்...
மேலே குறிப்பிட்ட இரண்டுக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு...
3. ஷாருக் படத்தில் நடிக்க அழைத்து ரஜினி மறுத்துவிட்டார் என்று மீடியாவிற்கு தெரிந்தால் தன்னுடைய so called இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்திருக்கலாம்...
@ கோகுல்
// அட ஒயின் ஷாப்பெல்லாம் மூடியிருக்குற நேரத்துல போதையை ஞாபகப்படுத்திடிங்க.
இப்பவே கை நடுங்க ஆரம்பிச்சுடுச்சு! //
ப்ளாக்ல கிடைக்குதாமே... Black... Blog அல்ல....
@ MANO நாஞ்சில் மனோ
// ஆஹா செம மப்புல இருந்துட்டு, தலைப்பு வச்ச மாதிரி இருக்கே ஹி ஹி... //
ஏண்ணே இப்படி... நான் தெளிவா தான் இருக்கேன்...
@ அப்பு
// பிரபாகரன்,
எல்லாமே ஒரு எல்லை தாண்டிப் போய் விட்டது. எதையும் வியாபார நோக்கத்தோடு மட்டுமே அணுகுகிற முறை மாறினால் நல்லது. தெளிவான அணுகுமுறை. வாழ்த்துக்கள். //
புரிந்துக்கொண்டமைக்கு நன்றி அப்பு...
@ Minmalar
// இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் விளம்பரம் தான். //
புரிஞ்சா சரி...
// ஆனால் ஷாருக் செய்ததை தானே நீங்களும் செய்திருக்கிறீர்கள். //
இதற்கு கடைசியாக பதில் சொல்லுகிறேன்...
@ கோவை நேரம்
// எப்படியோ தலைவர் பேர சொல்லி ஹிட் பண்ணியாச்சு.வாழ்த்துக்கள் //
என்னது தலைவரா... எங்கே...? எங்கே...? யாருப்பா...?
@ சி.பி.செந்தில்குமார்
// இந்தப்பதிவுக்கு ஒரே ஒரு மைனஸ் ஓட்டுதானா? வேதனை.. ஹி ஹி //
அது ஒன்னுமில்ல தல... இப்போல்லாம் யாரும் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை டச் பண்றதில்லை... அதான் மைனஸ் ஓட்டு விழலை....
@ மொக்கராசு மாமா
// விடுங்க பாஸ் படம் வரட்டும்... ஷாருக்கின் படத்தில் ரஜினி 10நொடிகள் கௌரவ தோற்றத்தில் வர்றாரா இல்லல ரஜினி படத்தில் ஷாருக் இரண்டரை மணித்தியாலம் கௌரவ தோற்றத்தில் வர்றாரான்னு பார்போம்? ஹி ஹி... //
தமிழ் ரசிகர்களை பொறுத்தவரையில் ரஜினி தான் ஹீரோ ஷாருக் சும்மா ஊறுகாய்...
ரஜினிகாந்த் பெயரை வைத்து நான் ஹிட்ஸ் வாங்கிவிட்டேன், ரஜினியையும், ரசிகர்களையும் எனது போதைக்கு ஊறுகாயாக்கி விட்டேன் என்று கூறும் நண்பர்களுக்கு,
ஒருவேளை நான் ரஜினியைப் புகழ்ந்து எழுதியிருந்தால் உங்களுக்கெல்லாம் இனித்திருக்கும்... "தலைவர்ன்னா தலைவர்தான்" என்று பெருமிதத்தோடு பின்னூட்டம் இட்டிருப்பீர்கள்... ஆனால் அவரை வேறொரு கோணத்தில் விமர்சித்தால் உடனே ஹிட்ஸ்க்கு எழுதுகிறான் என்று சொல்லிவிட வேண்டியது...
இந்த பதிவுக்கு ஹிட்ஸ் அதிகம் வருவது யார் குற்றம்... என்னுடையதா... நான் வேறு சில இடுகைகளையும் எழுதியிருக்கிறேன்... அப்போதெல்லாம் எட்டிப்பார்க்காத நீங்கள் இப்போது ஓடிவந்திருக்கிறீர்களே உங்களுடைய குற்றமா...
ஹிட்ஸ் தான் வேண்டும் என்றால் எனக்கு ரஜினி தேவையில்லை நண்பர்களே... சாம் ஆண்டர்சனே போதும்...
உங்கள் பதிவை HIT ஆக்குவதற்கு மட்டுமே நீங்கள் தலைப்பில் ரஜினி என்ற பெயரை USE பண்ணுகிறீர்கள் .இப்போது மட்டும் அல்ல , உங்கள் பதிவில் மாதம் ஒரு முறை எப்படியும் ரஜினி பெயரை தாங்கிய பதிவு வந்து விடும் . என்ன செய்ய எல்லாம் SURVIVAL .இதில் உங்களை சொல்லி குற்றம் ஒன்றும் இல்லை . உங்கள் கெட்ட நேரம் நேற்றே ரஜினி திருமலையில் கொடுத்த பேட்டியில் RA 1 படத்தில் GUEST APPEARANCE தோன்றியதை CLEAR பண்ணி உள்ளார் . முகத்தில் பூசப்பட்ட கரியை முதலில் துடைத்து கொள்ளுங்கள் . அடுத்தது RAJINI ஐ பற்றி நீங்கள் பாராட்டி எழுதினாலும் ரஜினி ரசிகர்கள் வந்து உங்களுக்கு ஜால்ரா போடா போவதில்லை . BECAUSE THEY KNOW ABOUT YOU & UR பதிவு . உங்களுக்கு தேவை பதிவின் HIT . THATS IT . மற்ற படி யாரை பற்றியும் விமர்ச்சனம் பண்ணலாம் . ஆனால் அது தனி நபர் தாக்குதலாக இருக்க கூடாது . உங்களின் ரஜினி பற்றிய அனைத்து பதிவுகளும் , அவரின் மீது உங்களின் தனி மனித வெறுப்பு தான் தெரிகிறது .
நீ எப்போதும் ரஜினியின் பூ---- ஐ பிடித்து தொங்கி கொண்டு இருப்பதால் தான் இந்த முறை உன் பதிவின் பூ----ஐ பிடித்து தொங்க வேண்டியதாகிவிட்டது. உன் பதிவு HIT ஆகுவதற்கு SAM அன்டர்சன் போதும் என்றால் அதை செய். அதை விட்டு விட்டு ஏன் ரஜினி , ரஜினி என்று சாவுகிறாய் . இதில் பின்னூட்டம் இட்டுள்ள ROCKZ RAJESH அவர்களின் AWARNESS ABT WEB CAM & SPY CAM போன்று ஏதாவது ஒரு பதிவு உருப்படியாக எழது .
சில காரணிகள் இருக்கலாம்... என்னுடைய கணிப்பு...
1. ஷாருக் கான் படத்தில், இந்தி படத்தில் நடிப்பது நமக்கு பெருமை என்று நினைத்திருக்கலாம்...
2. பெரும் பணம் கிடைத்திருக்கலாம்...
மேலே குறிப்பிட்ட இரண்டுக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு...
3. ஷாருக் படத்தில் நடிக்க அழைத்து ரஜினி மறுத்துவிட்டார் என்று மீடியாவிற்கு தெரிந்தால் தன்னுடைய so called இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்று நினைத்திருக்கலாம்...//
இதில் எந்த காரணங்களும் இருக்க வாய்ப்பில்லை , ரஜினியீன் ரானா படத்தை தயாரிக்கும் நிறுவனமா ஈரோஸ் நிறுவனம் தான் ரா 1 க்கும் தயாரிப்பாளர் , அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தான் ரஜினி ஒத்துக்கொண்டார் ,கேட்கச் சொன்னது ஷாருக்கான் தான் ,ரானா விற்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்கு வேண்டுமானால் நடித்து இருக்கலாம் ,அதே போல ரஜினியே வந்து தான் நடித்துக் கொடுத்துள்ளார் , நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதில் சி ஜி செய்துவிட முடியாது
எப்போதும் ஊறுகாய், படம் பார்ப்பவர்கள் மட்டும் தான்.
ரா எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறது பாஸ்.
! சிவகுமார் ! கருத்துக்கு டிட்டோ.
ரஜனிக்கு இன்னும் இமெஜ் இருக்கிறதா என்ன?
சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.
@ ROSHAN , MUMBAI
// உங்கள் பதிவை HIT ஆக்குவதற்கு மட்டுமே நீங்கள் தலைப்பில் ரஜினி என்ற பெயரை USE பண்ணுகிறீர்கள் .இப்போது மட்டும் அல்ல , உங்கள் பதிவில் மாதம் ஒரு முறை எப்படியும் ரஜினி பெயரை தாங்கிய பதிவு வந்து விடும் . என்ன செய்ய எல்லாம் SURVIVAL //
என்ன தல சொல்றீங்க... எனக்கே என் ப்ளாக்கை சுத்திக் காட்டுறீங்க... போன வருஷம் சூப்பர் ஸ்டார் பத்தி ஒரு பதிவு எழுதினேன்... அதோட இப்பதான் எழுதுறேன்...
// உங்கள் கெட்ட நேரம் நேற்றே ரஜினி திருமலையில் கொடுத்த பேட்டியில் RA 1 படத்தில் GUEST APPEARANCE தோன்றியதை CLEAR பண்ணி உள்ளார் . முகத்தில் பூசப்பட்ட கரியை முதலில் துடைத்து கொள்ளுங்கள் . //
யாரு யார் முகத்தில் கரியை பூசினாங்கன்னு இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்...
மறுபடி மறுபடி ஹிட்ஸ்ன்னு சொல்லி கடுப்பை கெளப்பாதீங்க... இதைவிட மிகவும் சுலபமாக ஹிட்ஸ் வாங்கும் வழிமுறைகள் எனக்கு தெரியும்...
@ Anonymous
// நீ எப்போதும் ரஜினியின் பூ---- ஐ பிடித்து தொங்கி கொண்டு இருப்பதால் தான் இந்த முறை உன் பதிவின் பூ----ஐ பிடித்து தொங்க வேண்டியதாகிவிட்டது. உன் பதிவு HIT ஆகுவதற்கு SAM அன்டர்சன் போதும் என்றால் அதை செய். அதை விட்டு விட்டு ஏன் ரஜினி , ரஜினி என்று சாவுகிறாய் //
LOL... என்னுடைய வலைப்பூவில் என்ன எழுத வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்...
ஒருவேளை இப்படி எதையாவது சொல்லி என்னுடைய வாயை அடைத்துவிடலாம் என்று திட்டமா... அது நடக்காது பாஸ்...
// இதில் பின்னூட்டம் இட்டுள்ள ROCKZ RAJESH அவர்களின் AWARNESS ABT WEB CAM & SPY CAM போன்று ஏதாவது ஒரு பதிவு உருப்படியாக எழது . //
இது உங்கள் ஆலோசனையாக இருந்தால் முயல்கிறேன்...
@ டெனிம்
// இதில் எந்த காரணங்களும் இருக்க வாய்ப்பில்லை , ரஜினியீன் ரானா படத்தை தயாரிக்கும் நிறுவனமா ஈரோஸ் நிறுவனம் தான் ரா 1 க்கும் தயாரிப்பாளர் , அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தான் ரஜினி ஒத்துக்கொண்டார் ,கேட்கச் சொன்னது ஷாருக்கான் தான் ,ரானா விற்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்கு வேண்டுமானால் நடித்து இருக்கலாம் //
தகவலுக்கு நன்றி டெனிம்...
// அதே போல ரஜினியே வந்து தான் நடித்துக் கொடுத்துள்ளார் , நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதில் சி ஜி செய்துவிட முடியாது //
இந்த பதிவை எழுதிய பிறகு இன்னொரு article படிக்க நேர்ந்தது...
http://moonramkonam.com/2011/10/rajini-ra-one-shahrukh-movie/
@ பாலா
// எப்போதும் ஊறுகாய், படம் பார்ப்பவர்கள் மட்டும் தான் //
அதென்னவோ உண்மைதான்...
@ நிரூபன்
// ரா எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறது பாஸ். //
நன்றி நிரூபன்... அதான் எல்லோருக்கும் தெரியுமே...
@ அப்பாதுரை
// சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். //
நன்றி அப்பாதுரை...
இதைதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது.இந்த வருடம் MAY மாதம் ஒரு மிக சிறிய பதிவு ரஜினி பற்றி வந்தது எனக்கு நினைவில் உள்ளது . IF U WANT TO CHECK GO BACK TO MAY & CONFIRM IT . U THINK U R SMART . வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதை உங்களின் பரந்த மனதில் வைத்து கொள்ளுங்கள். உங்களின் ஆரம்ப கால பதிவில் இருந்து இன்று வரை நான் பார்த்ததில் உங்களுக்கு KAMAL & AJITH மிகவும் பிடிகிறது என்று தெரிகிறது . THAT IS UR WISH BUT DONT DEGRADE A LEGEND LIKE RAJINI . இதைவிட மிகவும் சுலபமாக ஹிட்ஸ் வாங்கும் வழிமுறைகள் எனக்கு தெரியும் . I AM ALSO TELLING THAT ONLY .இந்த பதிவையே நீங்கள் RAJINI என்ற HEADING இல்லாமல் எழுதி இருக்க முடியும். ஆனால் உங்களுக்கு தெரியும் . RAJINI என்ற MAGICAL WORD க்கு இருக்கும் POWER . இப்போதும் நீங்கள் மறுத்தால் JUST ASK UR மனசாட்சி . THAT WILL TELL EVERY THING TO YOU . THATS ALL FOR NOW . IF IT CONTINUES DEFINITELY I WILL GIVE MY COMMENTS .
ஷாருக்கின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. உங்களின் இந்தப் முயற்சி கேவலமாயிருக்கு! :(
ரா ஒன் படத்தை ரஜினியின் எந்திரனுக்கு போட்டியாக நினைத்து ஒதுங்காமல் ரஜினி ரசிகர்களையும்ம் பொது மக்களையும் பார்க்கத் தூண்டிய ஷார்க்கின் "பிசினெஸ் மூளை" மற்றும் அதை செயல்ப்படுத்திய விதமும் பாராட்டத்தக்கது..
***ரஜினி ரா ஒன்னில் நடித்தாரோ இல்லையோ, ஆனால் இது Tribute to Rajnikanth என்று பிதற்றுகிறது ஒரு ஆங்கிலப் பத்திரிகை. உண்மையிலேயே இது ரஜினிக்கு ஒரு கெளரவமா....? ***
ரஜினி ரசிகர்களே சும்மா இருக்காங்க. நீங்க ஏன் கொதித்தெழுறீங்கனுதான் புரியலி எனக்கு? நல்லெண்ணமா? இல்லை இதனால வேலாயுதம் படுத்துவிடும்னு பயமா??? நீங்க் அஜீத் ரசிகர்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க? ஆமா உண்மையைச் சொல்லுங்க நீங்க விசய் ரசிகருதானே?? இல்லையா? தெரியாதா???
**தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக ரஜினியை பயன்படுத்தியிருக்கிறார் ஷாருக்.**
ரஜினியின் உடன்பாடுடன் செய்து இருக்காரு! அதிலே உங்களுக்கு என்ன பிரச்சினை???
***சுருக்கமாகச் சொன்னால் ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்.***
ஷார்க், ரஜினி, போதை, ஊறுகாய்னு நாலு வார்த்தையை வச்சு காக்டெயில் போட்டு உங்க வயித்தெரிச்சலை காட்டியிருக்கீங்க! ரொம்ப "நல்ல பதிவு" தான் போங்க!!!
***ரஜினி ரா ஒன்னில் நடித்தாரோ இல்லையோ, ஆனால் இது Tribute to Rajnikanth என்று பிதற்றுகிறது ஒரு ஆங்கிலப் பத்திரிகை. உண்மையிலேயே இது ரஜினிக்கு ஒரு கெளரவமா....? ****
நீங்க, ரஜினியையும் எந்திரனையும் கெள்வரவப்படுத்திய லட்சணம் இங்கே இருக்கு!
***எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை....!
எந்திரனின் முன்னோடி - Bicentennial Man
Endhiran Revisited - சுஜாதாவுக்காக
எம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை***
மேய்ந்து பாருங்கள்!
உடல்நலமில்லா ரஜினியை சாருக் இன்னைக்கு இதுபோல் கெளவரவப்படுத்துவது உங்க அளவுக்கு கீழ்த்தரமாக இல்லை!!!
பாருங்கப்பா பிலாசபி வடிக்கிறாரு நீலிக்கண்ணீரு! அள்ள முடியலை போங்க! அம்புட்டு கண்ணீரு!
@ ROSHAN , MUMBAI
// இதைதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது.இந்த வருடம் MAY மாதம் ஒரு மிக சிறிய பதிவு ரஜினி பற்றி வந்தது எனக்கு நினைவில் உள்ளது . IF U WANT TO CHECK GO BACK TO MAY & CONFIRM IT . U THINK U R SMART //
ஆமாம் மே மாதத்தில் அந்தர் பல்டி என்ற பெயரில் ஒரு சிறிய இடுகை வெளியிட்டேன்... ஆனால் அதன் தலைப்பிலோ, உள்ளடக்கத்திலோ ரஜினி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லை... பின்னாளில் நீங்கள் சொன்னதுபோல அதன் நீளம் மிகவும் குறைவாக இருந்ததால் நீக்கிவிட்டேன்...
// வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதை உங்களின் பரந்த மனதில் வைத்து கொள்ளுங்கள். உங்களின் ஆரம்ப கால பதிவில் இருந்து இன்று வரை நான் பார்த்ததில் உங்களுக்கு KAMAL & AJITH மிகவும் பிடிகிறது என்று தெரிகிறது . THAT IS UR WISH BUT DONT DEGRADE A LEGEND LIKE RAJINI . //
ஆமாம் ஒரு நடிகன் என்ற முறையில் கமலை பிடிக்கும்... ஆனால் கமலை அக்மார்க் யோக்கியன் என்று சொன்னால் அடிக்க வருவேன்... அஜீத் நடிப்பளவில் சுமார்தான் என்றாலும் நல்ல மனிதனாக ரொம்பப் பிடிக்கும்...
ரஜினி நடிப்பளவில் legend-ஆக இருக்கலாம்... ஆனால் தனது ரசிகர்களை குனிய வைத்து ஏறி சிகரத்தை அடைந்தவர்...
// இதைவிட மிகவும் சுலபமாக ஹிட்ஸ் வாங்கும் வழிமுறைகள் எனக்கு தெரியும் . I AM ALSO TELLING THAT ONLY .இந்த பதிவையே நீங்கள் RAJINI என்ற HEADING இல்லாமல் எழுதி இருக்க முடியும். ஆனால் உங்களுக்கு தெரியும் . RAJINI என்ற MAGICAL WORD க்கு இருக்கும் POWER . இப்போதும் நீங்கள் மறுத்தால் JUST ASK UR மனசாட்சி . THAT WILL TELL EVERY THING TO YOU . THATS ALL FOR NOW . IF IT CONTINUES DEFINITELY I WILL GIVE MY COMMENTS . //
இதென்னங்க வம்பா போச்சு... பதிவின் சாரம் இதுதான் என்னும்போது நான் ஏன் வேறு தலைப்பு வைக்க வேண்டும்...
@ வருண்
// ரஜினி ரசிகர்களே சும்மா இருக்காங்க. நீங்க ஏன் கொதித்தெழுறீங்கனுதான் புரியலி எனக்கு? நல்லெண்ணமா? இல்லை இதனால வேலாயுதம் படுத்துவிடும்னு பயமா??? நீங்க் அஜீத் ரசிகர்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க? ஆமா உண்மையைச் சொல்லுங்க நீங்க விசய் ரசிகருதானே?? இல்லையா? தெரியாதா??? //
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா...
// நீங்க, ரஜினியையும் எந்திரனையும் கெள்வரவப்படுத்திய லட்சணம் இங்கே இருக்கு! //
அதுல ரெண்டு லிங்கை விட்டுட்டீங்க தல...
வழக்கமா இங்கிலிபீசுல பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுவீங்களே... இந்தமுறை மறந்துட்டீங்களா...
@ ROSHAN , MUMBAI
ஆங் இப்பதான் பார்த்தேன் அந்தர் பல்டி பதிவு டெலீட் செய்யப்படவில்லை... ஜூன் மாத பதிவுகளில் இருக்கிறது...
Post a Comment