அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஏகப்பட்ட தமிழர்களின் எதிர்பார்ப்புகளோடு களம் இறங்கியிருக்கிறது ஏழாம் அறிவு. சினிமாவே பார்க்காதவர்கள் கூட ஏழாம் அறிவை பரிந்துரைக்க காரணமாக இருந்த விஷயங்கள் போதி தர்மர், தமிழர்களின் பெருமை etc etc. இது உண்மையிலேயே தமிழருக்கு பெருமையா அல்லது வியாபார தந்திரமா என்ற குழப்பத்துடனேயே படம் பார்த்தேன். இனி...
Genetics மாணவி ஸ்ருதி 1600 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சீனா சென்று மருத்துவத்தையும் தற்காப்பு கலைகளையும் பரப்பிய போதி தர்மரைப் பற்றி DNA ஆராய்ச்சி செய்கிறார். போதி தருமரின் வம்சாவளியில் வந்த சூர்யாவுடன் போதி தருமரின் DNA என்பது சதவிகதத்திற்கு மேல் (83.74%) ஒத்துப்போவதால் அவருக்கு போதி தருமரின் DNAவை செலுத்தி பழைய மருத்துவ ரகசியங்களையும், தற்காப்பு கலைகளையும் மீட்டெடுக்க முனைகிறார் ஸ்ருதி. இதற்கிடையே சீனா – இந்தியா பயோ வார், ஆப்பரேஷன் ரெட் இன்னபிற மசாலா மேட்டர்களையும் குழைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
கதை... ம்ம்ம் ஓகே ஆனால் திரைக்கதை. இரண்டு குறைகள் – ஒன்று மொக்கை, இன்னொன்று லாஜிக். படம் பார்ப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்தறிவு கூட இருக்காது என்று நினைத்துவிட்டு மொழம் மொழமா பூவை சுற்றியிருக்கிறார்கள். இரண்டாம் பாதி ஆரம்பமான பின்பு இப்ப லிப்ட்ல இருந்து வில்லன் வருவான் பாரேன், இப்ப திரும்பி வந்து எட்டிப்பார்ப்பானே என்று கடைக்கோடி ரசிகன் கூட யூகிக்கும் அளவிற்கு பயங்கர க்ளிஷேத்தனங்கள். இரண்டே முக்கால் மணிநேரம் பொறுமையை சோதிக்காமல் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம்.
சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோயிசம் காட்டுகிறார். ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே. சீன நடிகர் ஜானி பார்த்து பார்த்தே எல்லோரையும் சாகடிக்கிறார் படம் பார்ப்பவர்களையும் சேர்த்து. ஹீரோ பின்னாடியே ஜல்லியடித்துக் கொண்டு திரியும் காமெடியன் மிஸ்ஸிங். (சில காட்சிகள் வரும் குள்ள நடிகரை தவிர்த்து) அதற்கெல்லாம் நேரமும் இல்லை. அது படத்திற்கு பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஸ்ருதியின் தோழிகளாக வருபவர்கள் சூப்பர் ஃபிகர்ஸ்.
பாடல்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும். அவற்றை காட்சிப்படுத்திய விதத்தில் ஒளி ஓவியர் ரவி கே சந்திரன், கலை இயக்குனர் ஆகியோரது உழைப்பு தெரிகிறது. குறிப்பாக முன் அந்திச்சாரல் பாடலில் காட்டப்பட்ட லொக்கேஷன் பிரமிக்க வைத்தது. பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.
படம் ஆரம்பிக்கும் முன்பு செய்திப்பட பாணியில் போதி தர்மரைப் பற்றி சுமார் இருபது நிமிடக்காட்சிகள் ரசிக்க வைத்தன. தியேட்டருக்கு லேட்டாக வரும் ரசிகர்கள் பாவம். அதே மாதிரி க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு சூர்யா வேப்பிலை மருத்துவம், மஞ்சள் மகத்துவம், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என்று தமிழனை குத்திக்காட்டும் வசனங்கள் நச். படம் முடிந்த மறுவினாடியே தெறித்து ஓடும் ரசிகர்களும் பாவம்.
சில காட்சிகளில் மட்டும் தமிழனை பெருமைப்படுத்திய இயக்குனர் பல காட்சிகளில் தமிழனை தலைசொறிய வைத்திருக்கிறார். தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே போதும் என்று நம் தலையில் மாங்கு மாங்கென்று டன் கணக்கில் மிளகாய் அரைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் எடுத்த படத்தில் இலங்கைத்தமிழனின் வீழ்ச்சியை பற்றி பேசி நம்மை புடைக்கச் செய்வார்களாம். என்னங்கடா ஒங்க நியாயம்.
சராசரி பொழுதுபோக்கு படம் என்று நினைத்தால் ரசிக்கலாம். மற்றபடி தமிழ், தமிழன், தமிழனின் பெருமை என்று படத்தில் காட்டப்படும் ஜிம்மிக்ஸ் வேலைகள் எரிச்சலூட்டுகின்றன.
தொடர்புடைய சுட்டிகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
38 comments:
மற்றபடி தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே போதும் என்று நம் தலையில் மாங்கு மாங்கென்று டன் கணக்கில் மிளகாய் அரைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.///
ஓகே பாஸ், நோ தேட்டர் ஒன்லி டவுன்லோட், சரிதானா? இல்ல முதல் இருபது நிமிடம் தேட்டர்ல பார்க்கணுமா? மார்ஷல் ஆர்ட் சண்டை காட்சிகள் எப்புடின்னு ஒரு வாட்டி சொல்லிட்டீங்கனா மூணு மணி நேரம் வண்டி ஓட்டறதா இல்லையான்னு முடிவு எடுத்திடலாம்...
//பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.//
ஹீ ஹீ !!! இவருக்கிட்ட நாம என்னக்கி பின்னணி இசைய எதிர்பார்த்திருக்கோம், அதுக்கு இளையராஜா, ரஹ்மான் விட்டா யுவன், இல்லனா யாராவது புதுசா வாறவங்க..
@ Dr. Butti Paul
// ஓகே பாஸ், நோ தேட்டர் ஒன்லி டவுன்லோட், சரிதானா? இல்ல முதல் இருபது நிமிடம் தேட்டர்ல பார்க்கணுமா? மார்ஷல் ஆர்ட் சண்டை காட்சிகள் எப்புடின்னு ஒரு வாட்டி சொல்லிட்டீங்கனா மூணு மணி நேரம் வண்டி ஓட்டறதா இல்லையான்னு முடிவு எடுத்திடலாம்... //
டிவிடியில பார்க்கத்தான் ஒர்த்... க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி நல்லா இருக்கு... அதைத்தவிர மார்ஷல் ஆர்ட்ஸ்க்கு அதிக வேலை இல்லை... அதான் வில்லன் எல்லோரையும் கண்ணால பார்த்து பார்த்தே வசியம் பண்ணிடுறாரே...
தலைவா பின்னிட்டீங்க போங்க..இந்த படத்துக்கு போயி இங்க (மலேசியா) பெரிசா நீ போறியா நான் போறியானு (தேதருக்கு) கட்டுப்பேத்திட்டு இருக்காங்க..எண்ட்ட இனிமேல கேட்டா எதுக்கும் போக வேணானு சொல்ல போறேன்..நல்ல தீபாவளி நாள வேற ஏதாவது நல்ல வழில பயன்படுத்தலாம் என்று சொல்ல போறேன்..இதோ இப்பவே SMS...
எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Thanks for the quick review.
மாப்ள விமர்சனம் நல்லா இருக்கு....நன்றி!
84 கோடிய சம்பாதிக்க விட மாட்டானுங்க போல இருக்கே..!!
உதயநிதி ஸ்டாலின் :(
தேர்தல் கருத்துக்கணிப்பை தடை செஞ்ச மாதிரி படம் வந்து பத்து நாளைக்கு விமர்சனங்களை முதல்ல தடை போடணும்.இந்த ஆட்சில எங்க..?! :(
ரைட்டு! அவசரப்பட்டு பார்க்க வேண்டாம்-னு புரியுது. :-)
பி.பி,
ஏ.ஆர்.எம் படத்தில போய் லாஜிக் பார்க்கலமா? அவர் என்னிக்கு சொந்த சரக்க படமா எடுத்தார்.
இந்த படம் மொக்கையாக இருக்கும்னு எனக்குள் ஒரு எண்ணம் உங்கள் விமர்சனம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. பேச்சுக்கு நல்லா இருக்குனு சொல்லாம உண்மைய சொல்லி இருக்கிங்க.
பல்லவர்கள் வரலாறு, களப்பிறர்கள்,சிவகாமியின் சபதம் எல்லாம் படிச்சிட்டு இப்படம் பார்க்க போனால் கொடுமையாகவே தெரியும்னு ,இன்னும் பார்க்கவில்லை.
போதி தர்மன் தமிழர் என்பது சும்மா தூண்டில் புழு, போலத்தான். போய் மாட்டிப்போமா என்ன?
ஏதோ சொல்றிங்க போங்க ரொம்ப எதிர்பார்த்தேன்
விமர்சனம் சூப்பர், கலக்குறிங்க பாஸ்,,,
கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் எடுத்த படத்தில் இலங்கைத்தமிழனின் வீழ்ச்சியை பற்றி பேசி நம்மை புடைக்கச் செய்வார்களாம். என்னங்கடா ஒங்க நியாயம்.
//
ஏன்னா தமிழன் தான புன்னகை மன்னன்(இதுக்கு வேற அர்த்தம்)
பாஸ்..
விமர்சனத்தில் நடு நிலையாக அதே வேளை தவறைச் சுட்டி அசத்தலாக எழுதியிருக்கிறீங்க.
அப்டின்னா ஏழாம் சரிவு ன்னு சொல்லுங்க.
அன்னிக்கு முருகதாஸ் பேசுன பேச்ச பார்த்தப்பவே எனக்கு தோனுச்சு, இப்ப அது சரியாத்தான் இருக்கு.....
இவனுங்க திருந்த மாட்டானுங்க பாஸ்......... நாம டாகுடரை மட்டும் குறை சொல்லிட்டு இருக்கோம்.....
ஏழாம் அறிவு ஏழரை.....
\\ஸ்ருதி பாடல் காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். மற்றபடி உவ்வே.\\ பழைய நடிகை ராதாவின் மகளை அழகின்னு நீ சொன்னப்போ, என்னடா இது இந்த பிள்ளை எப்படி பிழைக்கும்னு வருத்தப் பட்டுகிட்டு இருந்தேன், இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கே, இதையே மெயிண்டன் பண்ணு மச்சி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அய்யய்யோ படம் புட்டுகிச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்....
என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........
எல்லாரும் தூக்கி நிறுத்திருக்காங்க....
நீங்க உண்மையச் சொல்றீங்க...
நல்ல விமர்சனம். பார்த்துட்டு பதில் சொல்றேன்..
அப்புறம் - பாஸ்கிட்ட சொல்லியாச்சு போல...
///தமிழனை ஏமாற்ற சீனாக்காரன் எல்லாம் தேவையில்லை கள்ளக்குறிச்சிக்காரனே// ........))
சராசரி பொழுதுபோக்கு படம் என்று நினைத்தால் ரசிக்கலாம். மற்றபடி தமிழ், தமிழன், தமிழனின் பெருமை என்று படத்தில் காட்டப்படும் ஜிம்மிக்ஸ் வேலைகள் எரிச்சலூட்டுகின்றன//
விமர்சனம் சூப்பர்...நல்லா இருக்கு...
மிச்சம் உள்ள தீபாவளியை உருப்படியா ENZOY பண்ணுங்க... -:)
''சீன நடிகர் ஜானி பார்த்து பார்த்தே எல்லோரையும் சாகடிக்கிறார் படம் பார்ப்பவர்களையும் சேர்த்து.'' இந்த வரியை படித்து விட்டு, ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து சிரித்தேன்.
விமர்சனம் கலக்கல்.
தமிழர் பெருமையை உணராத பலருக்கு சிறிதாவது அறிவு ஒளியேற்ற முயற்சித்த 7ஆம் அறிவு திரைப்படக் குழுவினருக்கு பாராட்டுகள். அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்!
@ சேலம் தேவா
// 84 கோடிய சம்பாதிக்க விட மாட்டானுங்க போல இருக்கே..!!
உதயநிதி ஸ்டாலின் :(
தேர்தல் கருத்துக்கணிப்பை தடை செஞ்ச மாதிரி படம் வந்து பத்து நாளைக்கு விமர்சனங்களை முதல்ல தடை போடணும்.இந்த ஆட்சில எங்க..?! :( //
டிவிட்டரில் மனுஷனுக்கு ஒரு போஸ்ட் போட்டேன்... படிச்சிருப்பாரோ...
@ வவ்வால்
// பி.பி,
ஏ.ஆர்.எம் படத்தில போய் லாஜிக் பார்க்கலமா? அவர் என்னிக்கு சொந்த சரக்க படமா எடுத்தார்.
இந்த படம் மொக்கையாக இருக்கும்னு எனக்குள் ஒரு எண்ணம் உங்கள் விமர்சனம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. பேச்சுக்கு நல்லா இருக்குனு சொல்லாம உண்மைய சொல்லி இருக்கிங்க.
பல்லவர்கள் வரலாறு, களப்பிறர்கள்,சிவகாமியின் சபதம் எல்லாம் படிச்சிட்டு இப்படம் பார்க்க போனால் கொடுமையாகவே தெரியும்னு ,இன்னும் பார்க்கவில்லை.
போதி தர்மன் தமிழர் என்பது சும்மா தூண்டில் புழு, போலத்தான். போய் மாட்டிப்போமா என்ன? //
Well Said... திங்கள் சத்யா, ஹைதர் அலி பதிவுகளை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... இல்லையென்றால் படிக்கவும்...
@ கோகுல்
// ஏன்னா தமிழன் தான புன்னகை மன்னன்(இதுக்கு வேற அர்த்தம்) //
இளிச்சவாயன் தானே... எனக்கு புன்னகை மன்னன்னு சொன்னதும் வேற ஒரு பிரச்சனை ஞாபகத்துக்கு வந்துடுச்சு...
@ Jayadev Das
// பழைய நடிகை ராதாவின் மகளை அழகின்னு நீ சொன்னப்போ, என்னடா இது இந்த பிள்ளை எப்படி பிழைக்கும்னு வருத்தப் பட்டுகிட்டு இருந்தேன், இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்சிருக்கே, இதையே மெயிண்டன் பண்ணு மச்சி. //
தல இப்பவும் சொல்றேன்... கார்த்திகா அழகிதான்... அழகு என்பது கலரில் இல்லை...
>>சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோயிசம் காட்டுகிறார்.
நான் ரசித்த வரிகள்
இந்தப்படம் பற்றி நம்ம ஆளுங்க கிட்டே 2 விதம விமர்சனம் இருக்கு.. ஜாக்கி படம் ஓக்கேன்னார், கேபிள் செல்லாதுன்ண்ட்டார்.. ம் ம் லெட் சீ
எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஏதோ சொல்றிங்க போங்க ரொம்ப எதிர்பார்த்தேன்.
apa namma velayutham than hitah
//பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பலோ சொதப்பல். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எழவு மியூசிக் மாதிரி ஒன்னு போட்டிருக்கிறார், கொன்னுட்டாரு போங்க.///
same feeling...
Balanced review... வாழ்த்துக்கள்!!
அடடா கவுத்துட்டங்களா ? முனமே நினைசேன் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு .......... சோ இப்ப அதுதான் நடந்திருக்கு மறுபடியும் .
thamilanukku mattum than intha padam puriyum & pudikum tharuthalaingalukku epdi da puriyum, ungalala than thamilanukku keevalam......fools..
Post a Comment