28 October 2011

ஒரு பிறந்தநாள் விழாவும் சில சர்ச்சைகளும்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பதிவுலக நண்பர்களுக்கு: கொஞ்சம் பர்சனல் பக்கங்களை புரட்டுகிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம். 

நம்மூரில் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் பஞ்சமில்லை. அவை கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு திருமணம் பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கிறது. பிடித்திருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையாக பூ வைக்கிறார்கள். (ஏன் இதுக்கு முன்னாடி அவங்க பூவே வச்சதில்லையா...?) அப்புறம் நிச்சயதாம்பூலம் மாற்றுகிறார்கள். கல்யாணத்துக்கு முந்தின நாளே விழாவை சிறப்பிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். (உன் விலா எலும்பை நான் சிறப்பிக்கிறேன் பார்...!) அப்புறம் திருமணம். அடக்கருமமே முதலிரவை கூட நேரம் காலம் பார்த்துதான் நடத்துகிறார்கள். கேட்டால் சாந்தி முகூர்த்தமாம். (சாந்தி அப்புறம் நித்யா...???). இந்த புதுமண தம்பதிகள் ஜோடியா வெளியே போனா எவனாவது வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கானா. வீட்ல ஏதாவது விசேஷம் இருக்கான்னு நைஸா ஆரம்பிக்க வேண்டியது. இந்த கேள்விக்கு என்ன அர்த்தம்ன்னு கொஞ்சம் டீப்பா யோசிச்சு பாருங்களேன். (எப்படிய்யா கேக்குறீங்க இப்படி ஒரு வெக்கங்கெட்ட கேள்வியை...?) தப்பித்தவறி அந்த “விசேஷம்” நடந்துருச்சுன்னா அடுத்தது வளைகாப்பு. குழந்தை பொறந்துருச்சுன்னா மொட்டை போடுறது, காது குத்தறதுன்னு ஆரம்பிச்சு ஒரு பட்டியல் போயிட்டே இருக்கு. எதுவுமே கிடைக்கலைன்னா பொறந்தநாள் கொண்டாட வேண்டியது. அப்படி ஒரு பொறந்தநாள் விழாவில் ஏற்பட்ட எரிச்சல்களின் விளைவே இந்த இடுகை.

பிறந்தநாளை ஏன் கொண்டாடுகிறார்கள் என்ற கான்செப்ட் எனக்கு சத்தியமாக புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய பிறந்தநாள் எனக்கு மற்றுமொரு நாளே. யாருடைய பிறந்தநாளுக்கும் வாழ்த்துச்சொல்லியும் எனக்கு பழக்கமில்லை. சிலர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது ஒருவிதமான தர்மசங்கடமான மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல அவர்களின் பிறந்தநாளன்று கடமைக்காக பதில் வாழ்த்து சொல்கிறேன். இதைப்போய் கேக் வெட்டி கொண்டாடுவதெல்லாம் டூ மச். இருந்தாலும் சில பிறந்தநாள் விழாக்களை சகித்துக்கொள்வதற்கு காரணம் – தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடும் போது குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள், ஒருத்தர் முகத்தில் ஒருத்தர் முழிக்காத சொந்தபந்தங்கள் கூட கூடிப்பேசி மகிழ்கிறார்கள்.

இப்போ இந்த ரெண்டாவது சமாச்சாரத்துல தான் பிரச்சனை ஆரம்பிக்குது. மாசக்கணக்கில் சந்திக்காமல் அல்லது சந்திக்கவிரும்பாமல் இருப்பவர்கள் தெரியாத்தனமாக சந்தித்ததும் எப்படி ஆரம்பிக்கிறார்கள் தெரியுமா....? “நீங்க ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்களே...” – அவர் விஜயகாந்த் சைஸில் இருந்தாலும், அவங்க ஜெயலலிதா சைஸில் இருந்தாலும் அதே டெம்ப்ளேட் டயலாக் தான். (உனக்கு எதுக்கு இந்த வேல). அதெப்படி ஒருத்தர பத்தி பின்னாடிப்போய் நாரக்கேவலமா பேசிட்டு முன்னாடி ஆளைப் பார்த்ததும் பல்லைக்காட்டுறீங்க. சாவு வீட்டுக்கு வாசல் வரைக்கும் சிரிச்சிட்டே வந்துட்டு உள்ளே நுழைஞ்சதும் ஒப்பாரி வைக்கிற உயரிய திறமை நம் குல பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. சரி போய்த்தொலைங்க அப்படியாவது சிரிச்சு பேசுறீங்களேன்னு சந்தோஷம்தான். ஆனா, அதோடு முடிந்ததா பிரச்சனை – இல்லையே. வாய் ஏடாகூடமா எதையாவது பேசித்தொலைக்குதே. அப்படி இல்லைன்னா அவங்க இப்படி சொல்லிட்டாங்க, இவங்க அப்படி சொல்லிட்டாங்கன்னு டீச்சர் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணுறது, விழாவில் இருந்து வெளிநடப்பு செய்யுறது இதெல்லாம் எங்க இருந்து கத்துக்கிட்டீங்க சனங்களே.

குடும்பம் ஒன்றுகூடி குதூகலமாக இருக்க வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனா இப்ப இருக்குற சூழ்நிலைல இதெல்லாம் நடக்குற காரியமா...? இங்க ஒருத்தர் இப்படி திருப்பிக்கிட்டு நிக்கிறாரு. அங்க ஒருத்தங்க அப்படி திருப்பிக்கிட்டு நிக்கிறாங்க. இந்த பாதியில் வந்து புகுந்த அல்லக்கைங்க தொல்லை வேற தாங்க முடியல. அதனால சனங்களே இனிமே யாரும் தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் விழா எடுக்காதீங்க. அப்படியே யாராவது விழா எடுத்தாலும் வர்றவங்க, வந்தோமா கொஞ்சம் நேரம் உக்காந்தோமா சாப்பிட்டோமான்னு கிளம்புற வழியை பாருங்க. 

என்னடா அம்மாஞ்சி மாதிரி இருந்த பிரபாகரன் இப்படியெல்லாம் நாக்குல பல்லைப்போட்டு பேசுறானேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க. உங்க பெரிய மனுஷங்க சண்டை பெரிய மனுஷங்களுக்குள்ள மட்டும் இருந்திருந்தா யாருக்கும் எந்த பிரச்சனையில்லை. என்றாவது ஒருநாள் உங்கள் சிதையோடு சேர்த்து சண்டை சச்சரவுகளுக்கும் தீ மூட்டியிருப்போம். ஆனால் உங்கள் பகை அடுத்த தலைமுறையினருக்கும் பரவிக்கொண்டிருப்பதை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். நீங்கள் வாழ்ந்து கெட்டது போதும் எங்களையாவது கொஞ்சம் வாழ விடுங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 comments:

Unknown said...

நடத்துங்க...கேட்டா எடக்கு மடக்கா பதில் சொல்வீங்க...ஹிஹி...ஏன்னா இந்த வயசுல இதெல்லாம் கேக்கலன்னாத்தான் தப்பு...கேக்கிறீங்க பாருங்க உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஹிஹி!

கோகுல் said...

வாழுங்க!

Unknown said...

எல்லோருக்கும் முகமூடி தேவைப்படுதே

Jayadev Das said...

பிறந்தநாள் கொண்டாடுவதென்பது நம்மூர் வழக்கமல்ல, மேற்க்கத்திய இறக்குமதி. மற்றபடி சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை என்பது போல தோன்றினாலும் அவை அவசியமே. திருமணத்தில் உள்ள விழாக்கள், சடங்குகள் எல்லாம் அவர்கள் மணம் செய்வதை எல்லோருக்கும் தெரியப் படுத்தவும், அந்தப் பெண்ணை பிறந்த வீட்டிலிருந்து அவளது புகுந்த வீட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அட்ஜஸ்ட் ஆவது போன்றவற்றிர்க்கே. கமலஹாசன் மாதிரி அப்படியே கூட்டிவந்து தாலிகட்டாமல் கூட குடும்பம் நடத்தினால்தான் என்ன என்று நானும் கூட நினைத்ததுண்டு, ஆனால் சடங்கு சம்பிரதாயங்கள் தேவை எனபது நான் காலவாக்கில் உணர்ந்த ஒன்று. அடுத்து ஒருத்தர் இறந்து போனால் நடக்கும் சடங்குகளும் இதே போல அவரது இழப்பை கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கே. பல உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள், நம்மை பலர் அழைத்துச் செல்வார்கள். இவை அர்த்தமுள்ளவை, தேவையானவையே.

Jayadev Das said...

பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களைப் பார்த்ததுண்டா? அவற்றிலும் சடங்குகள் உள்ளன. செனட் உறுப்பினர்களைப் பார்த்து ஒருத்தர் இவர்களுக்கெல்லாம் பட்டங்கள் வழங்குவதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா என்று கேட்கிறார், அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் ஆம், ஆமொதிக்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த சம்பிரதாயங்கள் எதற்கு? ஒரு உதாரணத்திற்கு, உங்களுக்குப் பிடித்த பெண்ணை, அவர்கள் வீட்டிற்கு போய் அவர்கள் பெற்றோர்களிடம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, பைக் பின்னாடி வந்து உட்காரும்மா என்று சொல்லி அழைத்து வந்து அன்றே குடும்பம் நடத்த ஆரம்பித்தால் எப்படி இருக்கும். அதே முன் பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்வதாக இருந்து இதையே செய்தால் எப்படி இருக்கும்?

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
வாங்க சார்... என்மேல் பர்சனலாக அக்கறை எடுத்து பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி...

// மற்றபடி சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை என்பது போல தோன்றினாலும் அவை அவசியமே. திருமணத்தில் உள்ள விழாக்கள், சடங்குகள் எல்லாம் அவர்கள் மணம் செய்வதை எல்லோருக்கும் தெரியப் படுத்தவும், அந்தப் பெண்ணை பிறந்த வீட்டிலிருந்து அவளது புகுந்த வீட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அட்ஜஸ்ட் ஆவது போன்றவற்றிர்க்கே. கமலஹாசன் மாதிரி அப்படியே கூட்டிவந்து தாலிகட்டாமல் கூட குடும்பம் நடத்தினால்தான் என்ன என்று நானும் கூட நினைத்ததுண்டு, ஆனால் சடங்கு சம்பிரதாயங்கள் தேவை எனபது நான் காலவாக்கில் உணர்ந்த ஒன்று. அடுத்து ஒருத்தர் இறந்து போனால் நடக்கும் சடங்குகளும் இதே போல அவரது இழப்பை கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கே. பல உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள், நம்மை பலர் அழைத்துச் செல்வார்கள். இவை அர்த்தமுள்ளவை, தேவையானவையே. //

சரி சார்... சடங்குகளும் சம்பிரதாயங்களும் சந்தோஷமா நடந்தா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே... அதானே நடக்க மாட்டேங்குது...

மெயின் மேட்டருக்கு வாங்க தல... எங்க வூட்டு பெரிய மனுஷங்க செய்யுறது எங்களுக்கெல்லாம் ஒரு தவறான உதாரணமாக அமைகிறதே... அதுக்கு என்ன பண்ணலாம்...?

// அதே முன் பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்வதாக இருந்து இதையே செய்தால் எப்படி இருக்கும்? //

என்ன சொல்ல வர்றீங்க சார் :)

Jayadev Das said...

\\என்ன சொல்ல வர்றீங்க சார் :) \\ தெளிவா எழுதாதற்கு மன்னிக்கவும்!! இப்போ மாதிரி முந்தைய கால கட்டத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் அறிமுகமானவர்களாக இருக்க மாட்டார்கள். பெற்றோர்கள் பார்த்துதான் திருமணம் செய்து வைப்பார்கள். தற்போது பெற்றோர்கள் பார்த்தாலும், திருமணம் வரை செல்போனில் மணிக்கணக்காக பேசி அறிமுகமாகும் வசதி போன தலைமுறையினருக்கு இல்லை. இந்த சடங்கு சம்பிரதாயங்களை கூர்ந்து கவனித்தால் அந்தப் பெண்ணை கொஞ்சம் கொஞ்சமாக பிறந்த வீட்டை மறந்து புகுந்த வீட்டினரை தனது குடும்பத்தாராக ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளும்படியாக இருக்கும்.

Sivakumar said...

//அம்மாஞ்சி மாதிரி இருந்த பிரபாகரன்//

ம்ம்ம்ம்...

rajamelaiyur said...

//
உங்க பெரிய மனுஷங்க சண்டை பெரிய மனுஷங்களுக்குள்ள மட்டும் இருந்திருந்தா யாருக்கும் எந்த பிரச்சனையில்லை.

//

சரியா சொன்னிங்க

MANO நாஞ்சில் மனோ said...

உள்ளத்தில் இருப்பது வெளியே வந்துருச்சி ஹா ஹா ஹா ஹா...

இராஜராஜேஸ்வரி said...

பிறந்தநாள் விழாக்களை சகித்துக்கொள்வதற்கு காரணம் – தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடும் போது குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள், ஒருத்தர் முகத்தில் ஒருத்தர் முழிக்காத சொந்தபந்தங்கள் கூட கூடிப்பேசி மகிழ்கிறார்கள்./

இதுவே சந்தோஷ்மான நல்ல விஷயம்தானே!

middleclassmadhavi said...

//அதனால சனங்களே இனிமே யாரும் தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் விழா எடுக்காதீங்க. அப்படியே யாராவது விழா எடுத்தாலும் வர்றவங்க, வந்தோமா கொஞ்சம் நேரம் உக்காந்தோமா சாப்பிட்டோமான்னு கிளம்புற வழியை பாருங்க. //
சரி தான்!!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

//இங்க ஒருத்தர் இப்படி திருப்பிக்கிட்டு நிக்கிறாரு. அங்க ஒருத்தங்க அப்படி திருப்பிக்கிட்டு நிக்கிறாங்க. இந்த பாதியில் வந்து புகுந்த அல்லக்கைங்க தொல்லை வேற தாங்க முடியல//

டாப்பு..

Anonymous said...

நீங்கள் வாழ்ந்து கெட்டது போதும் எங்களையாவது கொஞ்சம் வாழ விடுங்கள்...//
பிடித்தது.Well said.

Selmadmoi gir said...

கேளுங்க சார் சரியான கேள்விகள்

Selmadmoi gir said...

கேளுங்க சார் சரியான கேள்விகள்

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!ஒரு வழியா உங்க பிளாக் வந்து விட்டேன்.
மொசில்லா பயர் பாக்ஸ் வழியா வந்தேன்.

கவிதை பூக்கள் பாலா said...

சரி சரி எல்லாம் சகஜம் தான் விடுங்க சண்ட போடலைன்னாலும் ஒரு கிக்கு இருக்காது இல்ல, நாட்டுல சண்டை இல்லைன்னா யோசிச்சி பாருங்க எப்படி பொழுது போகும் ( காவல் என்ற பெயரில் எப்படி ) அப்படித்தானே அவங்க அப்படி தான் பாஸ் எப்பப பார்த்தாலும் அடிசிகிட்டே இருப்பாங்க வாங்க பாஸ் . விழா நல்ல விஷயம் தான் பிரபா . அதனால எவ்வளவு பண புழக்கம் இருக்கு வேளை வாய்ப்பு இருக்கு கொஞ்சம் போருக்கு சந்தோசம் இருக்கு . சில பேருக்கு சங்கடமும் இருக்கத்தானே செய்யும் ...........

Anonymous said...

tamil10.com ஒட்டுப்பட்டை பெற



நன்றி

'பரிவை' சே.குமார் said...

மனக்குமுறலை இறக்கி வச்சிருக்கீங்க...
நல்ல பதிவு.

சிவகுமாரன் said...

\\நீங்கள் வாழ்ந்து கெட்டது போதும் எங்களையாவது கொஞ்சம் வாழ விடுங்கள்.//

நெத்தியடி.
உறவுகளால் வரும் பிரச்சினைகள் அதுவும் விழாக்களால் வரும் தலைவலிகள் சொல்லி மாளாது. பிச்சுட்டீங்க பிரபு