அன்புள்ள வலைப்பூவிற்கு,
படம் பார்க்க சில நண்பர்களை அழைத்தேன். பகலில் பார்ப்பதாக இருந்தால் நான் வருகிறேன் என்று சிலர் நட்புக்கரம் நீட்டினார்கள். போங்கடா நீங்களும் உங்க பகல் காட்சியும்ன்னு சொல்லிட்டு தன்னந்தனியாக புறப்பட்டேன். அபோகேலிப்டோ படத்திற்கு பிறகு இப்போதுதான் பிறமொழி படத்தை திரையரங்கில் பார்க்கிறேன். தேவி பாலா திரையரங்கம். அடித்தளத்தில் அமைந்திருந்த திரையரங்கிற்குள் சென்று அமர்வதற்கே திகிலாக இருந்தது. ஆரம்பத்தில் ஒரு இருபது பேர் இருந்தார்கள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் கிட்டத்தட்ட பாதி திரையரங்கம் நிறைந்துவிட்டது.
முதல், இரண்டாவது பாக கதைகளுக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள். முதல் பாகத்தில் வந்த கேட்டி, இரண்டாம் பாகத்தில் வந்த கிறிஸ்டி இருவரும் சிறுமிகளாக,. இவர்களுடைய பெற்றோர் ஜூலி – டென்னிஸ். சிறுமிகளுடன் invisible கதாப்பாத்திரம் டோபி. ஜூலியும் டென்னிஸும் தங்களது பலான காட்சியை படமெடுக்க நினைக்கிறார்கள். அப்போது நிலநடுக்கம் வந்து சீனை கெடுத்துவிடுகிறது. பதிவான வீடியோவை பின்னர் போட்டுப் பார்க்க, அதில் ஏதோ ஒரு உருவம் இருப்பதாக தெரிகிறது. வழக்கம் போல வீட்டில் கேமராக்கள் நிறுவப்படுகின்றன. தனியாக பேசுவது தூக்கத்தில் நடப்பது என சிறுமி கிரிஸ்டியின் நடவடிக்கைகள் விந்தையாக இருக்கின்றன. அதுபற்றி கேட்கும்போது தன் நண்பன் டோபியிடம் பேசியதாக கூறுகிறாள். தொடர்ந்து இன்னும் பல விசித்திர நிகழ்வுகள் நடக்க, அனைவரும் குடும்பத்துடன் பாட்டி வீட்டுக்கு (ஜூலியின் தாய்) செல்கின்றனர். அங்கேயும் கேமராக்கள். அங்கே நிலைமை இதைவிட மோசம், அதிலும் பாட்டியே பேயாக... இறுதியில் என்ன நடக்கிறது என்பதை கடைசி பத்து நிமிடங்களில் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கமெண்ட் அடிக்கும் கம்முனாட்டிகள் தொல்லை தாங்க முடியவில்லை. சத்யம் தியேட்டரில் பார்க்கலாம்ன்னு சொன்னேன் கேட்டியா... கேட்டியான்னு என்னை நானே திட்டிக்கொண்டேன். ஆமாம், தேவி தியேட்டர் ரசிகர்களுக்கும் சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் இன்றுதான் வித்தியாசம் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஓயாமால் கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தவர்களையும் கடைசி பத்து நிமிடங்கள் பொத்திக்கொண்டு படம் பார்க்க வைத்ததில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
படம் முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் சுமார். இரண்டாம் பாகத்துடன் ஒப்பிட்டால் சூப்பர். ஜாலியாக ஜல்லியடித்துக்கொண்டு படம் பார்க்க விரும்புபவர்கள் தேவி திரையரங்கிலும், படத்தின் திகிலை அனுபவித்து பார்க்க விரும்புபவர்கள் சத்யம் திரையரங்கிலும் பாருங்கள். இரண்டையும் விட பதிவிறக்கம் செய்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது சிறந்த ஆப்ஷன்.
நைட் ஷோ பார்த்துவிட்டு மவுண்ட் ரோடிலிருந்து திருவொற்றியூர் வரை தனியாக பயணம் செய்த அனுபவம் இருக்கே... ப்ச்... உடம்பில் கால் மட்டும் வெளியே தெரியும்படி முழுக்க போர்த்திப் படுத்திருக்கும் பிளாட்பார வாசி, மூர்க்கமான பார்வையுடன் குப்பை சேகரிக்கும் தொழிலாளி, குடித்துவிட்டு ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி சொறிந்துக்கொண்டே புலம்பும் தெருவோரக்குடிகாரன், சவாரிக்காக நம்மையே குறுகுறுவென்று பார்க்கும் ஆட்டோக்காரன், இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்கும் தொனியில் நம்மருகே வந்து முகர்ந்துபார்க்கும் நடுநிசி நாய்கள். இதையெல்லாம் விட வேறென்ன சார் த்ரில் வேணும்...???
தொடர்புடைய சுட்டிகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
22 comments:
இனிய வணக்கங்கள்...
சுட சுட விமர்சனம்...
உங்க 'த்ரில்' அனுபவம் ரசித்தேன்...
நல்ல விறு விறு விமர்சணம்
விமர்சனம் நறுக் சுறுக்.. அப்போ படம் பார்க்கலாம்!!
நானு கடேசியாப் பார்த்த இங்கிலீசுப் படம் டைட்டானிக்! :-)
வணக்கம் பாஸ்,
விமர்சனம் அசத்தல். அதுவும் விமர்சனத்தில் நீங்கள் ரிஜாலிட்டி புகுத்தி, தேவி தியேட்டர் சுற்றுப் புறச் சூழல் வர்ணனையினையும், படம் பார்த்து முடிந்த பின்னர் நீங்கள் தரிசித்த விடயங்களையும் திரிலிங் கலந்து கொடுத்திருப்பது அசத்தல்.
மாப்ள பட விமர்சனத்தை விட இரவு சென்னையின் விமர்சனம் நச்சுன்னு இருக்குய்யா!
படத்தை விட நீங்க திரும்பி போன கடைசி பாராகிராப் தான் பயங்கரமா இருக்கும் போல? அதுலயும் அந்த நடுநிசி நாய்கள்........ ?? பேய்க்கு பயப்படாதவன் கூட அதுக்கு பயந்துதான் ஆகனும்........
nice
நல்ல விமர்சனம் பிரபா நன்றி என் மனைவியின் ஊரும் திருவொற்றியூர் தான் வரும் பொழுது சந்திப்போம்
தம்பி..! பிரபா..! உன்ன விட்டா யாரு இப்படி விமர்சனம் எழுதமுடியும்.! சொல்லு?!!
'நச்'னு இருக்கு.!
கலக்கல் விமர்சனம்
இன்று என் வலையில்
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?
செம விமர்சனம் பாஸ்... தேவி தியேட்டர் ரசிகர்களுக்கும் சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் உள்ள வித்தியாசம், ஹி ஹி...
விமரிசனம் நல்லாருக்கு.அடுத்து என்ன படம்?தீபாவளி ரிலீசா?
அருமையான விமர்சனம் பிரபா. இப்போதே இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது இந்த விமர்சனம். தனியா பாக்கறதுக்கு ட்ரை பண்றேன்.
இந்த படம் சத்தியமாக நம்ம ஊரில் திரையிடப்பட போவதில்லை. ஆகவே வெயிட்டின் ஃபார் குட் பிரிண்ட். தரவிரக்குவதை தவிர வேறு வழி இல்லை.
நைட் ஷோ பார்த்துவிட்டு மவுண்ட் ரோடிலிருந்து திருவொற்றியூர் வரை தனியாக பயணம் செய்த அனுபவம் இருக்கே... ப்ச்... உடம்பில் கால் மட்டும் வெளியே தெரியும்படி முழுக்க போர்த்திப் படுத்திருக்கும் பிளாட்பார வாசி, மூர்க்கமான பார்வையுடன் குப்பை சேகரிக்கும் தொழிலாளி, குடித்துவிட்டு ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி சொறிந்துக்கொண்டே புலம்பும் தெருவோரக்குடிகாரன், சவாரிக்காக நம்மையே குறுகுறுவென்று பார்க்கும் ஆட்டோக்காரன், இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நீ நல்லவனா கெட்டவனா என்று கேட்கும் தொனியில் நம்மருகே வந்து முகர்ந்துபார்க்கும் நடுநிசி நாய்கள். இதையெல்லாம் விட வேறென்ன சார் த்ரில் வேணும்...???//
ஹா ஹா ஹா ஹா செம திரில் அனுபவம்தான், அதான் நண்பர்கள் பகல்ல கூப்புட்டு இருக்காங்க!!!!
படத்தைவிட பயணம் பல்வேறு உணர்வுகளை விதைத்திருக்கிறது போல,,,
உங்கள் பதிவை விட கடைசி பத்தியை ரசித்தேன்..
விமர்சனம் அருமை.((அனுபவம் இருக்கே... ப்ச்... உடம்பில்....)))த்ரில் விமர்சனம் அருமை நண்பா
//தேவி தியேட்டர் ரசிகர்களுக்கும் சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் இன்றுதான் வித்தியாசம் தெரிந்துக்கொண்டேன்.//
ஹா.. ஹா.. ஹா.....! கூட இருவது ரூவா போன போவட்டும். இனிமே நம்ம ரூட்ட பாலோ பண்ணுங்க!
En Chellamey... Nee dhan valaipoovin gopinath... Rasikavaikum vimarsanam...
I'll never become courageous like you ;-(
Post a Comment