அன்புள்ள வலைப்பூவிற்கு,
பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று கேட்க வைத்த பயங்கரடேட்டா பதிவரின் தரிசனம் எனக்கும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்னை வந்திருந்த அவரது கால் சுண்டுவிரலை பிடித்து நான் உங்களை பார்த்தே ஆகவேண்டுமென தரதரவென்று எக்ஸ்பிரஸ் அவென்யூ வரை இழுத்துவந்துவிட்டேன். நானும் அவரும் இன்னபிற கப்பல் வியாபாரிகள் இருவரும் கோழிக்கறியை கொறித்தபடி சில மணிநேரங்கள் அரட்டையடித்து தீர்த்தோம். கடைசி வரை மனிதர் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. போட்டோவை வெளியிட்டால் த்ரில் போய்விடும் என்றார். அதுவும் சரிதான், அவரே அனுமதி அளித்தாலும் அவருடைய போட்டோவை பிரசுரித்து அந்த த்ரில்லை கெடுக்க நாங்களும் விரும்பவில்லை.
பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்த்தால், பொண்ணு சிக்குன்னு ஜோரா ஜில்லுன்னு கூலா இருப்பாள். பையன் மஞ்ச மாக்கான் மாதிரி இருப்பான். என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன். ஆண்ட்டிக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அம்சமான ஆண்ட்டிகளுக்கு அம்மாஞ்சி கணவர்கள் வாய்ப்பது காலம் போடும் கோலங்களுள் ஒன்று. ஒருவேளை நானும் என்னவளும் ஜோடியாக வெளியே போகும்போது மற்றவர்களும் இதையேதான் நினைப்பார்களோ...??? நீதி: ஒன்னு நாம அழகா இருக்கணும்... இல்ல அழகா இருக்குற பொண்ணை கட்டிக்காம இருக்கணும்.
உயர் ரக மதுபானங்களை விற்பதற்காக எலைட் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும்ன்னு அம்மா அறிவித்து குடிமகன்கள் / குடிமகள்கள் வயிற்றில் வோட்காவை வார்த்திருக்கிறார். இந்த செய்தியில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் எலைட் டாஸ்மாக்களில் ப்ரின்ட் செய்யப்பட்ட பில் தரப்படும். இதனால் சரக்கை கூடுதல் விலைக்கு விற்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இதே முறையை மற்ற டாஸ்மாக்குகளிலும் பின்பற்றி ஏனைய குடிமகன்கள் வயிற்றில் குறைந்தபட்சம் ஒரு மானிட்டராவது வார்க்க வேண்டுமென்று அண்ணா நூலகத்திற்கு பின்புறம் அமர்ந்து சைட்டிஷ் உண்ணாவிரதம் இருக்கலாமென்று நினைக்கிறேன்.
சமீபத்தில் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை தயார் செய்வதற்காக ஒரு வலைப்பூவை சக்கையாக பிழிந்து சாறு (சாரு அல்ல) எடுத்துக்கொண்டிருந்தேன். சேரனின் வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தை பற்றி வலைப்பூவின் ஓனர் எழுதியிருந்த வரிகள். “வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் மட்டமாக நினைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும். இதுவே படம் சொல்ல வந்த கருத்து. ஆனாலும், அந்தப் படத்தின் வடிவேலு – பார்த்திபன் காமெடி காட்சிகள், மலம் அள்ளும் தோழர்களை கேவலப்படுத்தி, கேலி செய்து அவமானப்படுத்தியது” நல்ல கருத்துகள் கொண்ட இயக்குனர்கள் சிலரையும் இந்தமாதிரி ஏதாவது சொல்லி... சரிவிடுங்க நம்ம கீழே இருக்குற ஸ்டில்லை பார்ப்போம்.
ஜொள்ளு:
வேப்பிலை தித்திக்கிறதே...! உன்னைப் பார்த்ததும் பத்திக்கிறதே...!! |
ட்வீட் எடு கொண்டாடு:
sheik007 Sheik pareeth
நடனத்தின் போது நாயகியை விட்டு பின் வரிசையில் ஆடுபவர்களை கவனிப்பவனே உண்மை ரசிகன் #அம்புட்டும் ஜூப்பர்
Koothaadi SHAN - கூத்தாடி
இந்தாம்மா இன்னில இருந்து இவருக்கு பதில இவரு தான் உனக்கு புருஷன் #தமிழ் மெகா சீரியல் கொடுமை
iParisaL Parisalkaaran
ஸ்டீவ் ஜாப்ஸே செத்தாலும் நீங்க 'அனுஷ்கா'ன்னு சொல்ல முடியாது.. 'அஞ்சலி'ன்னுதான் சொல்லணும்.
thoatta ஆல்தோட்டபூபதி
மகள் ஷூக்களை மாற்றிப்போட்டிருந்தாள், யார் மாற்றி போட்டுவிட்டது என்றேன், அம்மா தான் என்றாள், சிறுமிகளுக்கும் அரசியல் தெரிந்திருக்கிறது
RajanLeaks theTrendMaker™
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி # இது கலைஞர் எழுதிய பாடலா?
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே:
யப்பா... இதுவரைக்கும் நாங்க எங்க தலைவருங்க போராட்டத்துக்குப் பயந்து போயித்தான் சுதந்திரம் குடுத்தான் வெள்ளக்காரன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்... இதையெல்லாம் பாக்குறப்போ... அவனோட சுதந்திரத்தக் காப்பாத்திக்கத்தான் பின்னங்கால் பிடறில பட ஓடிருக்கான்னு இப்பத்தான புரியுது... (படித்ததும் கிழித்ததும் – பாமரன்)
அறிமுகப்பதிவர்: துரை டேனியல்
தூத்துக்குடி “முத்து”. மருத்துவம் சார்ந்த இடுகைகளோடு அவ்வப்போது சில பல்சுவை இடுகைகளும் எழுதுகிறார். குறட்டைத்தொல்லை, வாய்வுத்தொல்லை போன்ற சிக்கல்களுக்கு இவருடைய இடுகைகள் தீர்வு தரும் என்கிறார். “நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்ற பழமொழிக்கு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மண்டை ஓட்டு வியாபாரத்தை போட்டு உடைத்து அதிர்ச்சியடைய வைக்கிறார். இவை தவிர்த்து இவருடைய சின்ன சின்ன சிந்தனைகள் அனைத்தும் அருமை.
கேட்ட பாடல்:
தனுஷ் – ஸ்ருதி ஹாசன் நடிப்பில், தனுஷ் மனைவி ஐஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 3 படத்திலிருந்து ஒரு பாடல் இணையத்தில் கசிந்திருக்கிறது. அறிமுக இசையமைப்பாளர் அனிருத் இசையில் அக்மார்க் தனுஷ் பாடல். தனுஷே பாடவும் செய்திருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக ரிப்பீட் மோடில் வைத்து கேட்டுக்கொண்டிருக்கும் பாடல். ஆனாலென்ன, மயக்கம் என்ன படத்தின் “ஓட ஓட ஓட தூரம் குறையல...” பாடலையும் “காதல் என் காதல்...” பாடலையும் சேர்த்து பிசைந்தது போல இருக்கிறது.
பார்த்த காணொளி:
தங்கமணின்னா இப்படிதான்யா இருக்கணும்...!
தத்துபித்துவம்:
“வத்திப்பொட்டின்னா வத்திப்பொட்டின்னா குச்சிங்க ஓரசத்தான்...
பத்திக்கிச்சுன்னா பத்திக்கிச்சுன்னா பீடி குடிக்கத்தான்...”
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
41 comments:
"ஒன்னு நாம அழகா இருக்கணும்... இல்ல அழகா இருக்குற பொண்ணை கட்டிக்காம இருக்கணும்."
தலைவர் டயலாக்கு...
”வலைப்பூவை சக்கையாக பிழிந்து சாறு (சாரு அல்ல) ”
ந்ம்ம குரு நாதர் பேரு..
”அண்ணா நூலகத்திற்கு பின்புறம் அமர்ந்து சைட்டிஷ் உண்ணாவிரதம் இருக்கலாமென்று நினைக்கிறேன்.”
தற்போதைய அண்ணா நூலகம் எதற்கு பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது என்ற நச் கமெண்ட்...
மொத்தத்தில் இந்த இடுகையை நான் எழுதி இருக்க வேண்டும்.
சூப்ப்ர்....
ஒரே ஒரு வருத்தம்.. போதிய நூலக வசதிகள் இல்லாத விருது நகர் அருப்புக்கோட்டை பகுதிகளிலோ,வண்ணாரப்பேட்டை , திருவொற்றியூர் போன்ற வட சென்னை பகுதிகளிலோ நூலகம் அமைக்காமல் புறக்கணித்து விட்டு , வசதியானவர்களுக்கு ஏதுவான இடத்தில் 200 கோடி நூலகம் அமைத்ததை கண்டிப்பீர்கள் என எதிர்பார்த்தேன்.அது இல்லாதது ஏமாற்றம்தான்
// தலைவர் டயலாக்கு... //
உங்க தலைவர் டயலாக்குகளை வச்சிதான் புத்தகமே எழுதியிருக்காங்களே...
// ந்ம்ம குரு நாதர் பேரு.. //
அங்கே மேலே குறிப்பிட்டிருந்த ஆராய்ச்சிக் கட்டுரை யாரைப் பற்றியது என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்...
// தற்போதைய அண்ணா நூலகம் எதற்கு பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது என்ற நச் கமெண்ட்... //
ம்ம்ம் எல்லோரும் குடும்பம் குடும்பமாக சென்று சுற்றிப்பார்க்கிறார்கள் என்று இப்போதுதான் கேபிள் பதிவில் வாசித்தேன்...
// மொத்தத்தில் இந்த இடுகையை நான் எழுதி இருக்க வேண்டும்.
சூப்ப்ர்.... //
நன்றி :)
// ஒரே ஒரு வருத்தம்.. போதிய நூலக வசதிகள் இல்லாத விருது நகர் அருப்புக்கோட்டை பகுதிகளிலோ,வண்ணாரப்பேட்டை , திருவொற்றியூர் போன்ற வட சென்னை பகுதிகளிலோ நூலகம் அமைக்காமல் புறக்கணித்து விட்டு , வசதியானவர்களுக்கு ஏதுவான இடத்தில் 200 கோடி நூலகம் அமைத்ததை கண்டிப்பீர்கள் என எதிர்பார்த்தேன்.அது இல்லாதது ஏமாற்றம்தான் //
என் ஃப்ரோபைல்ல நான் பிறந்தது விருதுநகர், வளர்ந்தது திருவொற்றியூர்ன்னு படிச்சிட்டு நல்லா உசுப்பேத்தி விடுறீங்க பாத்தீங்களா... BTW, திருவொற்றியூரில் இரண்டு நூலகங்கள் உள்ளன... அதுமட்டுமில்லாமல் கன்னிமாராவும், தேவ நேயப் பாவாணரும் பல மைல் தூரம் தள்ளியா இருக்கிறார்கள்...
பன்னி குட்டியை மீட் பண்ணியதுக்கு வாழ்த்துக்கள்...யோவ் நூல் அகம்ன்னா என்ன....ஹிஹி!
சுதந்திரம் சும்மா கெடைக்கலன்னு இப்பவாவது புரியிதா ஹிஹி!....கடைசி தத்துபித்துவம் ஜூப்பருங்க!
@ விக்கியுலகம்
// சுதந்திரம் சும்மா கெடைக்கலன்னு இப்பவாவது புரியிதா ஹிஹி!... //
நல்லா புரிஞ்சிக்கிட்டேன் மாம்ஸ்...
எங்க ஊர் பதிவரை அறிமுக படுத்தியதற்கு நன்றி .புகைப்படம் அருமை
//எலைட் டாஸ்மாக்களில் ப்ரின்ட் செய்யப்பட்ட பில் தரப்படும்//
பிரச்சனை பிரிண்ட்ங் பில்லில் இல்லை.
உள்ளே உள்ள மனிதர்களிடம் தான். இனிமேல் பில்லுக்கு மேல் 10,20 கேட்பார்கள். அவ்வளவு தான்.
//அவருடைய போட்டோவை பிரசுரித்து அந்த த்ரில்லை கெடுக்க நாங்களும் விரும்பவில்லை.//
காங்கிரஸ் வேட்பாளர் ஓட்டு கேக்குற மாதிரி 'கை' தான் இருக்கு. அவ்வ்..
//என்னவளும் ஜோடியாக வெளியே போகும்போது மற்றவர்களும் இதையேதான் நினைப்பார்களோ//
யாரு நீங்க அம்மாஞ்சியா?? லயன் தம் கட்டி பேசும்போது அதை கவனிக்காம வெண்புறாக்களை வேடிக்கை பாத்துட்டு ''அப்பறம்...என்ன சொன்னீங்க'' அப்டின்னு கேக்குற ஆளு நீரு....அம்மாஞ்சியாம். படுவா ராஸ்கோல்!
#வேப்பிலை தித்திக்கிறதே...! உன்னைப் பார்த்ததும் பத்திக்கிறதே...!#
வெறித்தனம்...
உங்களுக்காகத்தான் என்னோட தற்போதைய இடுகையான "எத்தனை கண்ணீரடி தோழி?" ல காஜல் ஸ்டில் ல தவிர்த்திருக்கேன்..நீங்களும் என் மனசு கோணாம நடந்துகோங்க..:)
நல்ல உண்ணாவிரத திட்டம், வாழ்த்துக்களும் ஆதரவும், சைடு டிஷ் மட்டுமா இல்ல சரக்குமா?
என்ன பிரபா..அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கீங்க..
http://pichaikaaran.blogspot.com/2011/11/blog-post_11.html
உண்ணாவிரதம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
கலக்கல் காக்டையில் - படங்கள் அருமை - ஜொள்ளு ஜொள்ளுதான்.
//பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று கேட்க வைத்த பயங்கரடேட்டா பதிவரின் தரிசனம் எனக்கும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.///
யாருய்யா அது?
#ம்ம்ம்... நடத்தும்...
கொலைவெறி
பாடல் நல்லா இருந்துச்சு நண்பா
அப்புறம் அந்த நூலகம் மேட்டர் குட்
கடைசி படம் எனக்கு பிடிச்சு இருந்துச்சு.. எனக்கும் ஒரு கட்டிங் வைங்க பாஸு..
//அவருடைய போட்டோவை பிரசுரித்து அந்த த்ரில்லை கெடுக்க நாங்களும் விரும்பவில்லை.//
ஸ்பைடர்மேன் மாதிரி ......................உட்ரா சூனா பானா இதை இப்படியே மேயண்டேன் பண்ணுவோம் ................
ரசித்த புகைப்படமும் ட்விட்டுக்களும் அருமை..
அடேய் பிளாசபி.. உன்னோ பிளாசபிக்கு அளவே இல்லியா?... உன் பதிவை படிச்சதால இங்ஙனயும் பத்திக்கிச்சுலேய்..!!
இப்படியும் குடிக்கலாமா?
அந்த 4 கிளாஸ் படம் தூள்..
/////பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று கேட்க வைத்த பயங்கரடேட்டா பதிவரின்//////
ஆமா யாருங்க அவரு...? புதுசு புதுசா கெளப்புறீங்களே?
//////அதுவும் சரிதான், அவரே அனுமதி அளித்தாலும் அவருடைய போட்டோவை பிரசுரித்து அந்த த்ரில்லை கெடுக்க நாங்களும் விரும்பவில்லை.//////
அப்பாடா....... தப்பிச்சாய்ங்க பப்ளிக்...
/////பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்த்தால், பொண்ணு சிக்குன்னு ஜோரா ஜில்லுன்னு கூலா இருப்பாள். பையன் மஞ்ச மாக்கான் மாதிரி இருப்பான். என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன். /////
அப்படி இருந்தாத்தான் பொண்ணு கண்ட்ரோல்ல பையன் இருப்பான்னு பொண்ணுங்க பண்ற டெக்குனிக்காம்..... (அனுபவஸ்தர் ஒருத்தர் சொன்னாருங்கோ....)
///////விக்கியுலகம் said...
பன்னி குட்டியை மீட் பண்ணியதுக்கு வாழ்த்துக்கள்...////////
தக்காளி உனக்கு ஓவர் குசும்புய்யா.....
தனுஷ் பாடியிருக்குற பாடல் ரொம்ப நல்லா இருக்கு பிரபா. ஆனாலும் 'காதல் என் காதல்' பாட்டு மாதிரி ரொம்ப சூப்பரா ஒன்னும் இல்ல.
சகோ. பிலாசபிபிரபாகரன் அவர்களுக்கு,
// தூத்துக்குடி “முத்து”. மருத்துவம் சார்ந்த இடுகைகளோடு அவ்வப்போது சில பல்சுவை இடுகைகளும் எழுதுகிறார். குறட்டைத்தொல்லை, வாய்வுத்தொல்லை போன்ற சிக்கல்களுக்கு இவருடைய இடுகைகள் தீர்வு தரும் என்கிறார். “நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்ற பழமொழிக்கு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். மண்டை ஓட்டு வியாபாரத்தை போட்டு உடைத்து அதிர்ச்சியடைய வைக்கிறார். இவை தவிர்த்து இவருடைய சின்ன சின்ன சிந்தனைகள் அனைத்தும் அருமை.//-
என்ற தங்களின் அருமையான வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் அறிமுகப் பதிவர் பகுதியில் என்னை பதிவர்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. திடீரென என்னுடைய ட்ராபிக் மூலங்கள் பகுதியில் உங்கள் வலைப்பூ முலமாக நிறைய பேர் என்னுடைய வலைப்பூவுக்கு விஜயம் செய்திருந்தனர். என்னடாவென்று என்னுடைய அக்கவுண்ட் சென்று பார்த்ததில் விஷயம் அறிந்துகொண்டேன். மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றியோடும் ஆதரவோடும்....
உங்கள் அன்பு சகோ.
த.ம 4.
\\என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன்.\\ பையன் மஞ்ச மாக்கான், அம்மாஞ்சி கணவர்கள் என்றெல்லாம் கவனித்த நீங்க அந்தப் பையனின் படிப்பு, தொழில் இதில்லெல்லாம் எப்படி என்று பார்த்ததுண்டா? அல்லது அந்த அழகு தேவதை படிப்பில், புத்திசாலித் தனத்தில் எப்படி என்று விசாரிச்சு பாருங்க. கலக்கலா கலக்குற பையனா இருப்பான் அல்லது அவனிடத்தில் ஏதோ ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும், அந்த தேவதை மக்கு பிளாஸ்திரியா இருப்பா. பொண்ணுங்க பயன்களை விட புத்திசாலிகள், நீங்க வெறும் Package -ஐப் பார்க்கிறீர்கள், அவர்கள், Package- உள்ளே இருக்கும் சரக்கு எப்படி என்று பார்க்கிறாள். அவ்வளவுதான் வித்தியாசம். உண்மையில் ஏமாந்தவர்கள் யார் என்றால் நீங்கள் சொன்ன மஞ்ச மாக்கான், அம்மாஞ்சி கணவர்கள் தான்.
\\இந்த செய்தியில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் எலைட் டாஸ்மாக்களில் ப்ரின்ட் செய்யப்பட்ட பில் தரப்படும்.\\ மது பான விற்பனை குறையுதே என்றால் மக்கள் திருந்துகிறார்கள் என்று மகிழ்ச்சியடையாமல், அடடே இது நடக்க வாய்ப்பேயில்லையே, அப்படியே நடந்தாலும் அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று சொல்லி, காரணம் என்னன்னு விசாரிங்கய்யா, கண்டுபிடியுங்கய்யா என்று அரசு இயந்திரத்தை முடிக்கி விட்டு கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் சாராயம்தான் காரணம் என்று கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கி மீண்டும் விற்ப்பனையை உயர்த்திய ஒரே அரசாங்கம் நம்முடையதாகத்தான் இருக்கும்.
யப்பா... இதுவரைக்கும் நாங்க எங்க தலைவருங்க போராட்டத்துக்குப் பயந்து போயித்தான் சுதந்திரம் குடுத்தான் வெள்ளக்காரன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்... இதையெல்லாம் பாக்குறப்போ... அவனோட சுதந்திரத்தக் காப்பாத்திக்கத்தான் பின்னங்கால் பிடறில பட ஓடிருக்கான்னு இப்பத்தான புரியுது...//
யோவ் இது இப்போதான் உமக்கு தெரியுதாக்கும், இருவது வருஷத்துக்கு முன்னாடியே இது நமக்கு தெரியுமே ஹி ஹி....
பயணத்தில் அல்லது பொது இடங்களில் காதல் ஜோடிகளை பார்த்தால், பொண்ணு சிக்குன்னு ஜோரா ஜில்லுன்னு கூலா இருப்பாள். பையன் மஞ்ச மாக்கான் மாதிரி இருப்பான். என்னங்கடா இந்த பொண்ணுங்க ரசனை இவ்வளவு கேவலமா இருக்கு என்று மனம் நொந்துக்கொள்வேன். ஆண்ட்டிக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அம்சமான ஆண்ட்டிகளுக்கு அம்மாஞ்சி கணவர்கள் வாய்ப்பது காலம் போடும் கோலங்களுள் ஒன்று. ஒருவேளை நானும் என்னவளும் ஜோடியாக வெளியே போகும்போது மற்றவர்களும் இதையேதான் நினைப்பார்களோ...??? நீதி: ஒன்னு நாம அழகா இருக்கணும்... இல்ல அழகா இருக்குற பொண்ணை கட்டிக்காம இருக்கணும்.
100% true...nanum palatha pathuten...
//பதிவுலகில் பலரையும் யாருய்யா இந்த ஆளு...? என்று கேட்க வைத்த பயங்கரடேட்டா பதிவரின் தரிசனம்///
///கடைசி வரை மனிதர் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. போட்டோவை வெளியிட்டால் த்ரில் போய்விடும் என்றார்.///
ஆமா அவரு மூஞ்சி அப்புடியே கவுண்டர் மூஞ்சின்னு நமக்கு பிக்ஸ் ஆகி போச்சு, இனிமே அவரு முகத்த போட்டு பயம் காட்டாதீங்க...
//நல்ல கருத்துகள் கொண்ட இயக்குனர்கள் சிலரையும் இந்தமாதிரி ஏதாவது சொல்லி... //
இன்னிக்கு பதிவுலகத்தின் மெயின் பிரச்சினையே இதுதான்...
why this kolaveri di
பாட்டு சூப்பர் ...
நேரு மாமா போட்டோ பத்தி கமெண்ட் அத விட சூப்பர்
ரூம் போட்டு யோசித்தா?
அந்த கடைசி படம் நீங்க தானே...
Tweets nice...
குழந்தைகள் தின வாழ்த்துகள்...
//நடனத்தின் போது நாயகியை விட்டு பின் வரிசையில் ஆடுபவர்களை கவனிப்பவனே உண்மை ரசிகன் #அம்புட்டும் ஜூப்பர்
//
அட இது நம்ம மேட்டர்
வணக்கம் பாஸ், ஒயின் ஷாப் வழமை போலவே போதை தூக்கலா கலந்து வந்திருக்கு!
பன்னிக்குட்டி அண்ணரைச் சந்தித்தது ஆச்சரியமாக இருக்கு பாஸ்!
>>iParisaL Parisalkaaran
ஸ்டீவ் ஜாப்ஸே செத்தாலும் நீங்க 'அனுஷ்கா'ன்னு சொல்ல முடியாது.. 'அஞ்சலி'ன்னுதான் சொல்லணும்.
குட் ஒன்
Philo... பேரு ஒயின் ஷாப், பிறகென்ன பொம்பளைப் புள்ளைங்க படமா போடுறது? நல்லால்லை சொல்லிபுட்டேன்.
That ad was super... no words but simple superb... everone needs such a wife man...
Post a Comment