அன்புள்ள வலைப்பூவிற்கு,
எவன் ஆண்டால் எனக்கென்ன என்ற மனப்பான்மையோடும், கொஞ்சம் சுயநலத்தோடு இருப்பவர்களுக்கும் நூலக இடமாற்றம், கூடங்குளம் அணு உலை போன்ற பிரச்சனைகள் ஒரு விஷயமாக தெரியாது. பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது போல வருடாவருடம் நடப்பதுதான். ஆனால் இப்போது பால், பேருந்து, மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஏற்றி ஏழை, நடுத்தர மக்களுக்கு பால் ஊற்றிவிட்டார். கலைஞர் ஆட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தொடர்ந்து போராடியதை பலர் மறந்திருக்கலாம். அதைத்தான் இப்போது அம்மா நிறைவேற்றியிருக்கிறார் என்றாலும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் உயர்த்திக்கொடுத்துவிட்டு மக்களுக்கு ஆறு ரூபாய் உயர்த்தியிருக்கிறார். ஆறுல ரெண்டு போனா மிச்சம் இருக்குறது நாலு தானே #டவுட்
அஞ்சாசிங்கம் செல்வினுக்கும் அம்மா ஜெயலலிதாவிற்கும் என்ன பூர்வ ஜென்ம பந்தமோ தெரியவில்லை. கொல்லிமலையை சுற்றுலா தலமாக மாற்றினால் நாறிவிடும் என்று திருவாய் மலர்ந்தார். அடுத்த வாரமே கொல்லிமலையை சுற்றுலா தலமாக மாற்றும் அறிவிப்பு வந்துவிட்டது. தமிழ்நாட்டுல மட்டும்தான் இன்னும்கூட ரெண்டு ரூபாய் டிக்கெட் இருக்குன்னு சேலத்தில் வைத்து சொன்னார். இப்போது அதற்கும் ஆப்படித்துவிட்டார்கள். ஒருவேளை அவர் புலியிடம் பால் கறந்த காரணத்தினால் தான் பால் விலையை உயர்த்திவிட்டார்களோ என்னவோ.
நோக்கியா, சோனி எரிக்சன், சேம்சங் போன்ற நிறுவனங்கள் என்னதான் தரமான போன்களை தயாரித்துக்கொடுத்தாலும் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சைனா போன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். போன்ல எல்லா வசதிகளும் இருக்கனும், ஆனா விலை மட்டும் கம்மியா இருக்கனும்ன்னு எதிர்பார்க்குறாங்க. இதுபோன்ற வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நோக்கியா ஆஷா என்ற புதிய சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. சகல வசதிகளுடன், பல வண்ணங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நோக்கியா ஆஷா இந்தியாவில் நுழையும் என்று தெரிகிறது.
கடந்த வாரம் பெங்களூரை சேர்ந்த இரண்டு லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்களின் அக்கவுன்ட் களவாடப்பட்டிருக்கிறது. அவர்களின் அக்கவுண்டில் இருந்த போட்டோக்களை போர்ன் சைட்டுகளுக்கு கை மாறியிருப்பது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட தளத்தின் இணைப்பு ஃபேஸ்புக் பயனாளியின் WALLல் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தனது தாய், தந்தை, சகோதரர்கள் என குடும்ப சகிதமாக ஃபேஸ்புக்கில் இருந்த பெண் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி பதறியடித்துக்கொண்டு தங்கள் அக்கவுண்டை டெலீட் செய்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் கூடுமான வரை உங்கள் புகைப்படங்கள், பர்சனல் தகவல்களை பகிராமல் இருப்பது நல்லது.
ஜொள்ளு:
நான் ஆணாதிக்கவாதி இல்லைங்கோ...! |
ட்வீட் எடு கொண்டாடு:
jill_online ஜில்
கடந்த சிலநாட்களாக மக்களின் மனநிலையை சிறுநீரும் பிரதிபலிக்கிறது. #மஞ்சளாக மாறியிருக்கிறது:-(
CycleKaaran சைக்கிள்காரன்
பெண்களைத்தாக்கி தமிழ் நாட்டில் பல பாடல்கள் வெளிவருவதாகக் கேள்வி ,இந்த ராமதாஸ், திருமாவளவன், குஷ்பூலாம் என்ன பண்றாங்க # கொளுத்திப்போடு
TPKD_ TPKD / TBCD
பொது இடத்தில் மூத்திரம் பெய்ய கூச்சப்படாதவர்கள், மூத்திரம் என்று சொல்லக் கூச்சப்படுகிறார்கள்...
vedhaLam அர்ஜுன்
பெண்களுக்கு இருந்தாலும் அது ஆணவம் தான் !
Nambiyaaru நம்பியாரு
ஸ்ருதி'யின் தமிழால் என் ஒரு காதில் ரத்தம்., வரலட்சுமி'யின் தமிழுக்காக இன்னொரு காது வெயிடிங்!
அறிமுகப்பதிவர்: மன பதிவுகள்
இந்த வாரம் மதுரைக்கார பதிவர். மதுரையைப் பற்றி இவர் எழுதியுள்ள பதிவு மதுரை பதிவர்களை கண் கலங்க வைத்திருக்கிறது. இவர் அஜீத், விஜய் ரசிகரில்லை என்பதை இவருடைய மங்காத்தா, எங்காத்தா போன்ற இடுகைகளை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம். அதே சமயம் மற்றொரு நடிகரை “தலைவா...” என்று விளிக்கிறார். தலைவருக்கு தங்கச்சி பாசம் ரொம்ப அதிகம் அது எந்த தங்கச்சின்னு தெரிஞ்சிக்க இங்கே க்ளிக்கவும்.
கேட்ட பாடல்: ஒரு முறை... ஒரு முறை... (முப்பொழுதும் உன் கற்பனைகள்)
ஜி.வி.பிரகாஷ் இசையில் அவரே பாடவும் செய்திருக்கிறார். பெண் கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு காதலன் தன்னுடைய காதலிக்கு என்ன பரிசுப்பொருள் வாங்குவது என்றெண்ணி திண்டாடி தவிப்பதாக பயணிக்கிறது இந்தப்பாடல். “இதயம் முழுதும் ஈரம்... அதனால் செடிகள் வளர்க்க தரலாம்...” போன்ற வரிகள் ஒரு சாம்பிள் தான். பாடல் முழுக்க இதுபோன்ற ரொமாண்டிக் வரிகள்தான். “அழகு செய்யும் சாதனம்...” என்று ஆரம்பிக்கும் மெட்டு செவிக்கினிமை. அழகு குட்டி செல்லம் அமலா பாலோடு பொடிப்பய அதர்வா டூயட் பாடப்போகிறான் என்று நினைத்தால் மட்டும் எரிச்சலாக இருக்கிறது.
பார்த்த காணொளி:
நம்மூரில் நடக்கும் கலக்க போவது, அசத்த போவது ஸ்டைலில் லண்டனை கலக்கிக்கொண்டிருக்கிறார் இந்தியாவை சேர்ந்த Papa CJ என்ற Stand Up காமெடியன். இந்தியாவை கலாய்த்து இவர் பேசியிருக்கும் இந்த காணொளியை பார்த்து சிரிங்க சீரியஸா எடுத்துக்காதீங்க.
ரசித்த புகைப்படம்:
யாருக்கு வேணும் சுவையான கேக்...! |
தத்துவம்:
Dream as if you'll live forever. Live as if you'll die today. – James Dean
ஃபைனல் கிக்:
வத்திகுச்சின்னா வத்திக்குச்சின்னா குச்சிங்க ஒரசத்தான்...!
பத்திக்கிச்சுன்னா பத்திக்கிச்சுன்னா பீடி குடிக்கத்தான்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
43 comments:
ஜெ க்கு தைரியம் தான்..திரிபில் உயர்வு...
ட்வீட்ஸ் சூப்பர்...
என்ன கொடுமை சார் இது? என்ன பொண்ணுங்க போட்டாவா போடுறீகன்னு கேட்டா இப்படி அம்மணமா பையன் போட்டா போட்டா நியாயமா?
//பெண்களுக்கு இருந்தாலும் அது ஆணவம் தான் !//
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் அது அடிப்படையில் ஆண்களின் குணம் தான்.
எப்புடீ?
எல்லா செய்திகளும் நல்ல தொகுப்பு. அதிலும் ஒரு படம் போட்டிருகிங்களே.... முடியல பிரபா?
எப்டிலாம் கேக் தயாரிக்காங்க பாஸ்
ஜொள்ளு பெண் படம் போடாதது கண்டிக்கிறேன்
என்ன பிரபா, எழுத்தில் கூடுதல் உற்சாகம் தெரிகிறதே, வித்தகன் பார்த்த எபெக்டா? நான் நீங்கள் போன் செய்த முதல் நாள் இரவே பார்த்து விட்டேனப்பா, அதான் வரவில்லை. சாரி பிரபா. மற்றொரு மீட்டிங்கில் கண்டிப்பாக சந்திப்போம்.
காக்டையில் அருமை - ஆமா எனக்கும் அந்த நாலு ரூபா # டவுட்டு
யோவ்..முதல்ல அந்த அஞ்சாசிங்கத்த நாடு கடத்துங்கய்யா..
//நோக்கியா ஆஷா இந்தியாவில் நுழையும்//
ஆஷாவா? ஏய்யா எப்ப பாத்தாலும் பொண்ணுங்க நெனைப்பாவே திரியற?
>>பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது போல வருடாவருடம் நடப்பதுதான். ஆனால் இப்போது பால், பேருந்து, மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஏற்றி ஏழை, நடுத்தர மக்களுக்கு பால் ஊற்றிவிட்டார்.
குட் ஒன்
அஞ்சாசிங்கம் செல்வினுக்கும் அம்மா ஜெயலலிதாவிற்கும் என்ன பூர்வ ஜென்ம பந்தமோ தெரியவில்லை. கொல்லிமலையை சுற்றுலா தலமாக மாற்றினால் நாறிவிடும் என்று திருவாய் மலர்ந்தார். அடுத்த வாரமே கொல்லிமலையை சுற்றுலா தலமாக மாற்றும் அறிவிப்பு வந்துவிட்டது. தமிழ்நாட்டுல மட்டும்தான் இன்னும்கூட ரெண்டு ரூபாய் டிக்கெட் இருக்குன்னு சேலத்தில் வைத்து சொன்னார். இப்போது அதற்கும் ஆப்படித்துவிட்டார்கள்..................
/////////////////
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று உண்மையாக தெரிவித்து கொள்கிறேன் நம்பவில்லை என்றால் என் பதிவை பார்த்து தெரிந்து கொள்ளவும் ...............
அந்த புகைப்படம் நம்ம பன்னிகுட்டி அண்ணன் பிறந்தநாள் ஐட்டம் தானே ......
இந்த படத்தை போட அவர்க்கிட்ட அனுமதி வாங்கியாச்சா ?
இன்னைக்கு கொஞ்சம் சூடு ஜாஸ்தி...
சில அறிவு ஜீவிகளின் சொகுசுக்காக இருநூறு கோடியில் நூலகம் . எளியவர்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணம் உயர்வு . இதற்கு காரணம் அறிவு ஜீவிகளின் சுயநலம் என்பதை மறைமுகமாக ஆரம்ப வரிகளில் சொன்னதற்கு நன்றி .
சில அறிவு ஜீவிகளின் சொகுசுக்காக இருநூறு கோடியில் நூலகம் . எளியவர்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணம் உயர்வு . இதற்கு காரணம் அறிவு ஜீவிகளின் சுயநலம் என்பதை மறைமுகமாக ஆரம்ப வரிகளில் சொன்னதற்கு நன்றி .
\\நூலக இடமாற்றம்\\ ஒன்னும் தப்பில்ல, நூலகத்தை விட ஆஸ்பத்திரியால் அதிகம் பேருக்கு பயன் படும். நூலகம்னா மாநிலம் முழுசும் கட்டுங்கப்பா, அதென்னா ஒரு ஊர்ல அதுவும் ஒரே இடத்துல மட்டும், ஆறு கோடி சனமும் அங்கே வந்து படிக்க முடியுமா?
\\கூடங்குளம் அணு உலை போன்ற பிரச்சனைகள் ஒரு விஷயமாக தெரியாது. \\ நீங்க என்ன செய்தாலும் அவனுங்க உலையை மூடப் போவதில்லை, நம்ம மக்கள் உசிருக்கு உலை வைப்பதுன்னு முடிவு பன்னிட்டானுங்க, போராடி என்ன சாதிக்க முடியும்?
\\பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது போல வருடாவருடம் நடப்பதுதான்.\\
காரு, பைக்கு என்ன குப்பனும் சுப்பனுமா வச்சிருக்கான்? பணம் இருக்கிறவன்தானே? வரியை எத்தனையோ விதத்தில் ஏமாற்றும் இவர்கள் இப்படியாவது அரசுக்கு பணம் தரட்டும், அல்லது பஸ், டிரெயினில் பிரயாணம் செய்து, காற்று மாசுபடுவதையாவது குறைக்கட்டும்.
\\ ஆனால் இப்போது பால், பேருந்து, மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஏற்றி ஏழை, நடுத்தர மக்களுக்கு பால் ஊற்றிவிட்டார்.\\ கொஞ்சம் பொறுங்க, பாதியாவது குறைப்பாங்க, கொஞ்சமாவது ஏத்தணும், இல்லாட்டி, அந்த பொதுத் துறை நிறுவனங்கள் போன்டியாயிடும்.
விஷயங்களும், பதிவும் அருமை.
Face Book ஹாக்கர்ஸ் பற்றி முன்பே தெரியும், ஆனால் போர்ன் சைட்க்கு மாறப்பட்டு இருப்பதாய் தெரிவித்ததற்கு நன்றி.
\\நோக்கியா, சோனி எரிக்சன், சேம்சங் போன்ற நிறுவனங்கள் என்னதான் தரமான போன்களை தயாரித்துக்கொடுத்தாலும் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சைனா போன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். \\ கழுதை விட்டை என்றாலும் பரவாயில்லை, கை நிறைய கிடைக்குதேன்னு மகிழ்ச்சியடையும் இந்திய மனநிலையை நன்கு உணர்ந்தவன் சைனாக்காரன்.
கேக் படம்.............. உவ்வ்வே........... Kindly avoid this type in future, please.
பெட்ரோலுக்கு விலையை குறைச்சிட்டு, பஸ்சுக்கு விலையேற்றம் செய்தவர்களை பா[ர்] ஆட்டாமல் இருக்க முடியவில்லை...!!!
பிரபா அந்தப் படம் எங்கிருந்து எடுத்தீங்க?
கலக்கல் குருவே!
தம 10
அடுத்தவன் ப்ளாக் ல காஜல் போட்டோ போட்டா வூடுகட்டி திட்ற...
அதரவா அமலாபாலோட டான்ஸ் போட்டாலும் ஃபீல் ஆகுற..
என்னதான்யா பிரெச்சன உனக்கு?..
அந்த கேக்கு படம்.. உவ்வே
அந்த பாட்ட ஜி.வி எங்க இருந்து சுட்டார்னு தெரியுமா?
@ ஷர்மி
// என்ன கொடுமை சார் இது? என்ன பொண்ணுங்க போட்டாவா போடுறீகன்னு கேட்டா இப்படி அம்மணமா பையன் போட்டா போட்டா நியாயமா? //
மேடம் நீங்க ரொம்ப மோசம்...? அவர்தான் கீழே பேன்ட் போட்டிருக்காரே...
@ சி.பிரேம் குமார்
// ஜொள்ளு பெண் படம் போடாதது கண்டிக்கிறேன் //
நீங்க ஷர்மியை தான் கண்டிக்கனும்.... அடுத்த வாரத்துல இருந்து நானே ஜொள்ளு விடுறேன்...
@ ஆரூர் முனா செந்திலு
// சாரி பிரபா. மற்றொரு மீட்டிங்கில் கண்டிப்பாக சந்திப்போம். //
இதையே நீங்க எத்தனை முறை தான் சொல்லுவீங்க...
@ ! சிவகுமார் !
// யோவ்..முதல்ல அந்த அஞ்சாசிங்கத்த நாடு கடத்துங்கய்யா.. //
கடத்துனா கண்டிப்பா வியட்நாமுக்கு தான் கடத்தணும்...
// ஆஷாவா? ஏய்யா எப்ப பாத்தாலும் பொண்ணுங்க நெனைப்பாவே திரியற? //
நானும் முதலில் சந்தேகப்பட்டேன்... ஆனா மெய்யாலுமே அந்த போன் பெயர் ஆஷா தான்...
@ சி.பி.செந்தில்குமார்
// பெட்ரோல் விலையேற்றம் என்பது மாரியாத்தாளுக்கு கூழ் ஊற்றுவது போல வருடாவருடம் நடப்பதுதான் //
இது உங்க ஆத்ம நண்பர் ஜாக்கியிடம் இருந்து கற்றுக்கொண்ட வரிகள்...
@ அஞ்சா சிங்கம்
// அந்த புகைப்படம் நம்ம பன்னிகுட்டி அண்ணன் பிறந்தநாள் ஐட்டம் தானே ......
இந்த படத்தை போட அவர்க்கிட்ட அனுமதி வாங்கியாச்சா ? //
இது பன்னிக்குட்டி கேக் அல்ல... பட்டாபட்டி கேக்...
@ பார்வையாளன்
// சில அறிவு ஜீவிகளின் சொகுசுக்காக இருநூறு கோடியில் நூலகம் . எளியவர்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணம் உயர்வு . இதற்கு காரணம் அறிவு ஜீவிகளின் சுயநலம் என்பதை மறைமுகமாக ஆரம்ப வரிகளில் சொன்னதற்கு நன்றி . //
உங்களை விட்டா காளைமாட்டு மடியில இருந்துகூட பால் கரப்பீங்க சார்...
@ Jayadev Das
// ஒன்னும் தப்பில்ல, நூலகத்தை விட ஆஸ்பத்திரியால் அதிகம் பேருக்கு பயன் படும். நூலகம்னா மாநிலம் முழுசும் கட்டுங்கப்பா, அதென்னா ஒரு ஊர்ல அதுவும் ஒரே இடத்துல மட்டும், ஆறு கோடி சனமும் அங்கே வந்து படிக்க முடியுமா? //
நீங்க சொல்றது சரிதான்... அதற்காக ஏற்கனவே கட்டிய நூலகத்தை இடம் மாற்றுவது முட்டாள்தனமான செயல் இல்லையா... இப்போது நூலகத்தை இடம் மாற்றவும், இருக்கின்ற நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவும் இரட்டை செலவு ஆகுமே...
// கொஞ்சம் பொறுங்க, பாதியாவது குறைப்பாங்க, கொஞ்சமாவது ஏத்தணும், இல்லாட்டி, அந்த பொதுத் துறை நிறுவனங்கள் போன்டியாயிடும். //
எப்படி ஆறு ரூபாய் விலையை கூட்டிட்டு மூன்று ரூபாய் விலையை குறைப்பாங்களா... அதுக்கு பேர் தான் தாயுள்ளமா...?
@ Jayadev Das
// Kindly avoid this type in future, please. //
இந்தமுரையே கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தேன்... ஓகே இனி நடக்காம பாத்துக்குறேன்...
அதென்ன நண்பா பொடிப்பய அதர்வா? யாரு நடிச்சா ஒத்துக்குவீங்க?
@ மயிலன்
// அடுத்தவன் ப்ளாக் ல காஜல் போட்டோ போட்டா வூடுகட்டி திட்ற...
அதரவா அமலாபாலோட டான்ஸ் போட்டாலும் ஃபீல் ஆகுற..
என்னதான்யா பிரெச்சன உனக்கு?.. //
நம்மகிட்ட ஒரு பெரிய லிஸ்டே இருக்கு... அங்க உரசுனா இங்க வலிக்கும்...
@ மொக்கராசு மாமா
// அந்த பாட்ட ஜி.வி எங்க இருந்து சுட்டார்னு தெரியுமா? //
ஜி.வி ஒரு பாட்டு விடாம எல்லாத்தையும் சுடுறார்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா...
அன்பின் பிரபாகரன் - இடுகை நன்று - பல்வேறு தகவல்கள் . பால்விலை ஏற்றம் - கொல்லிமலை - நோக்கியா ஆஷா - முகநூல் களவு - ஜொள்ளு - தேர்ந்தெடுத்த ட்வீட்டுகள் - அறிமுகப் பதிவர் - கேட்ட பாடல் - பார்த்த காணொளி - ரசித்த ஒன்று ( ????? ) - தத்துவம் - கிக் - அடடா - எத்தனை எத்தனை செய்திகள் - பலே பலே - அததனையும் இரசித்தேன் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
please avoid these type of birthday pictures..
Aruvaruppa eruku........
Post a Comment