அன்புள்ள வலைப்பூவிற்கு,
பிரபா ஒயின்ஷாப் - இருபாத்தி நாண்கு மனிநேரம் முப்பத்திநாளு நிமிடங்கால் தாம்தமகா... (சரி விடுங்க... சும்மா முயற்சி பண்ணி பார்த்தேன்... நம்மளால எல்லாம் முடியாதுப்பா...)
சமீபத்தில் “கருங்காலி” என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. ரொம்பவும் மோசமான ஒரு கதைக்களன். வக்கிரமான ஒரு காட்சியில் பெண்ணினத்தையே கேவலப்படுத்தியிருந்தார் இயக்குனர். (அவ்வளவு நல்லவனாடா நீ என்று கேட்காதீர்கள்). நானும் பிட்டுப்படங்கள் பார்க்கும் ஒரு சராசரி இளைஞன்தான். ஆனால் “தாய்மார்களின் பேராதரவுடன்”, “பெண்கள் பார்க்கவேண்டிய விழிப்புணர்வு படம்” போன்ற அடைமொழிகளோடு வெளிவந்த கருங்காலி படத்தில் ஏனிந்த வக்கிரம் என்பதுதான் என்னுடைய கோபம். இரண்டரை மணிநேர படத்தில் இல்லாத நாதாரித்தனங்களை காட்டிவிட்டு கடைசியில் இப்படி எல்லாம் செய்யக்கூடாதுன்னு பாடம் நடத்துறது அயோக்கியத்தனம்.
நீதி: நல்லவங்கள நம்பலாம்... (என்னை மாதிரி) கெட்டவங்கள கூட நம்பலாம்... ஆனால் நல்லவங்க மாதிரி நடிக்கிற கெட்டவங்கள மட்டும் நம்பவே நம்பாதீங்க...!
உங்க வீட்ல எல்லாம் குருமா எதை வச்சி செய்யுவாங்க...? பாகிஸ்தானில் ஒருத்தங்க வீட்டில் புருஷன் குருமா செஞ்சிருக்கார். புருஷன் குருமா செய்றது சகஜம்தானே அப்படின்னு நீங்க நினைக்கலாம். ஆனா அந்த வீட்டு பெண்மணி புருஷனையே கொலை செய்து குருமா செய்திருக்கிறார். ஜைனப் என்ற பாகிஸ்தான் பெண்மணி தன்னுடைய முதல் கணவனுக்கு பிறந்த பதின்ம வயது மகளுடனும் இரண்டாவது கணவனுடனும் வாழ்ந்து வந்திருக்கிறார். குடிகார கணவன் அவருடைய மகளிடம் தவறாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட மனைவி கணவனை கொன்றுவிட்டு பின்னர் பிணத்தை அப்புறப்படுத்த வழி தெரியாமல் குருமா செய்திருக்கிறார். (இந்த செய்தியில் தவறு கணவனின் மீதா...? மனைவியின் மீதா...? நீங்களே சொல்லுங்கள்)
மயக்கம் என்ன படம் பார்த்தபோது திரையரங்கில் வரிசையாக ட்ரைலர்களின் அணிவகுப்பு. போராளி, ராஜபாட்டை, ஒஸ்தி, நண்பன், 3 என்று ட்ரைலர் மட்டுமே பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஓடியது. நண்பன் பட ட்ரைலர் பார்க்கும்போது சத்யராஜ் கேரக்டருக்காகவே படம் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. மூன்று பட ட்ரைலரில் ஸ்ருதி ஹாசனை ஸ்கூல் பொண்ணு மாதிரி காட்டினார்கள். சரி ஏதோ துள்ளுவதோ இளமை காட்சி ஒன்றினை ஸ்பூப் செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால் சீரியஸாகவே பள்ளிக்கூட மாணவியாம். (ஒய் திஸ் கொலவெறி...?) எல்லா படத்துக்கும் ட்ரைலரெல்லாம் நல்லாத்தான் இருக்கு. படம்தான் ம்ஹூம்.
சென்ற வாரம் அலுவலகத்தில் பெரிய தல ஒருத்தர், என்ன தம்பி நக்மாவை பத்தி ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க என்றார். எனக்கு தூக்கி வாரிபோட்டது. இன்னொருத்தர் சிறுகதை முயற்சியை படித்ததாக சொன்னார். இப்படியே போனால் கூடிய விரைவில் தெருவில் நிற்க வேண்டி வரும் என்பதால் இத்தோடு ஆபீஸ் அளப்பறைகள் ஸ்டாப். பழைய ஆபீஸில் பணிபுரிந்தபொது இப்படித்தான் டீம் லீடரை நக்கலடித்து ஒரு பதிவு போட, செய்தி காட்டுத்தீயாக பரவி டீம் லீடரின் காதிற்கு எட்டிவிட்டது. அப்புறம் டீம் லீடருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி சமாதானம் செய்ய வேண்டியதாக போய்விட்டது.
ஜொள்ளு:
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது...! மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது...!! |
ட்வீட் எடு கொண்டாடு:
Nambiyaaru நம்பியாரு
கருணாநிதியின் அறிக்கைகள் கி.வீரமணி பெயரில் வந்த மாதிரி, ஜெ;-வின் அறிக்கைகள் சரத்குமார் பெயரில் வருகிறது!
arattaigirl sowmya
ஆண் ஆளுமையுடன் துவங்கி அன்பிற்கு அடிமையாகிறான்! பெண் அன்புடன் துவங்கி ஆணை ஆளுமை செய்கிறாள் #காதல்
thoatta ஆல்தோட்டபூபதி
சென்ற தலைமுறையை விட இந்த தலைமுறை கற்பனை வறட்சியில் உள்ளதற்கு நல்ல சான்று, குஷ்பூ இட்லி போல இன்னமும் ஹன்சிகா பூரி வராததே.!
thoatta ஆல்தோட்டபூபதி
ஹீரோ ஒரே பாட்டுல பணக்காரனாகிறான்; ஹீரோயின் ஒரே பாட்டுல அம்மா ஆகுறாங்க; தமிழ் சினிமா சோ சிம்பிள் மாமு.!
iamkarki கார்க்கி
அஷ்வின்கிட்ட அவர் மனைவி பாடியது "மாமா. பால் எடுத்துக்கோ.அப்படியே கைல பேட்டையும் எடுத்துக்கோ. பப்பப்பான் பப்பப்பான்..பப்பப்பான்
அறிமுகப்பதிவர்: அகமும் புறமும்
யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...! என்ற பின்நவீனத்துவ இலக்கிய தலைப்பை பார்த்ததுமே கோவாலு... கோவாலு... என்று பயந்துக்கொண்டே தான் உள்ளே நுழைந்தேன். கார்ப்பரேட் சாமியார்கள் பற்றிய இவரது இடுகை சாமான்யர்களும் படிக்கலாம் என்று நம்பிக்கையை வரவழைத்தது. ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்த கதையை எளிமையாக பகிர்ந்திருக்கிறார். ரஜினிக்கும் கமலுக்கும் வயசாயிடுச்சு. இனிமே வயசுக்கு தகுந்த கேரக்டரில் தான் நடிக்கனும்ன்னு சொல்றார். ரஜினி, கமல் ரசிகர்கள் போய் கொஞ்சம் கும்மிட்டு வாங்க.
கேட்ட பாடல்:
தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்தில் கொலைகாரா... கொலைகாரின்னு கொலவெறியில்லாத ஒரு பாடல். இசைக்காக கொஞ்சம் பிடித்தது. பாடல் வரிகளுக்காக ரொம்பவும் பிடித்துவிட்டது.
அனுபவசாலி வைரமுத்து வரிகளில் காமத்துப்பால் பொங்கி வழிகிறது. தலைவி தலைவனைப் பார்த்து “பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பிச்செல்லும் மூடா... முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா...” என்று பாடுகிறார். அடுத்த வரியில் “ஆசை வச்ச பொம்பளைக்கு அஞ்சுநாளா தூக்கமில்ல... மீசை வச்ச ஆம்பிளைக்கு மெத்தை வாங்க நேரமில்லை...” இப்படி போகிறது இந்தப்பாடல். வீடியோவாக பார்க்கும்போது அஞ்சலியையும் ரசிக்கலாம். ஆனால் என்ன இயக்குனர் இந்தப்பாடலை மிகவும் ரசனைக்குறைவாக காட்சிபடுத்திவிட்டார்.
பார்த்த காணொளி:
ஹி... ஹி... அமெரிக்க கைக்கூலி “பிரியாணி” புகழ் அஜீத் நடித்த முதல் விளம்பரப்படம்...
ரசித்த புகைப்படம்:
பத்த வச்சிட்டியே பரட்டை...! |
தத்துவம்:
“Dont cry because its over, Dont smile because its happened...” – Dr.Seuss
படித்த ஜோக்:
டாக்டர்: உங்களுக்கு தலைவலி இருக்கா...?
நோயாளி: இருக்கு டாக்டர்... வெளியே தான் வெயிட் பண்றா...
(ஃபேஸ்புக்கில் மஸ்கட் மான்குட்டி)
ஃபைனல் கிக்:
தமிழ் சினிமாவையும் ஆயா சென்டிமென்ட்டையும் இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் பிரிக்க முடியாது போல... #மயக்கம் என்ன EFFECT
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
54 comments:
Superb .
கிளுகிளுப்புக்கும் வக்ரத்துக்கும் இடையேயான வேறுபாட்டை புரிந்து கொண்டு எழுதியதை ரசித்தேன்
@ பார்வையாளன்
// கிளுகிளுப்புக்கும் வக்ரத்துக்கும் இடையேயான வேறுபாட்டை புரிந்து கொண்டு எழுதியதை ரசித்தேன் //
கமல் வசனத்தை உல்டா பண்ணியிருக்கேனே... அதை ரசிக்கலையா...???
இப்ப இருக்குற உங்க உயர் அதிகாரி பத்தி ஒரு கிசு கிசு சொன்னீங்களே. அதை எப்ப போடப்போறீங்க.
ஆமா டீம் லீடர்னா யாருங்க? நம்ம காப்டன் டோனியா? # டவுட்டு.
aswin tweet is toomuch.
apparam machini yaaru? namma kajal thangachi thaane.
வணக்கம் பிரபாகரன்!
இந்த வேலையவாவுதல் காப்பாற்ற பாருங்கோ..!!
அவ்ளோ நேரமா தம் அடிக்காம இருந்தீரு வாரே வா நல்ல முன்னேற்றம்!
பய புள்ள முழு படத்தையும் பாத்து பயந்துடுச்சோ...ச்சே ச்சே இருக்காது...அதான் முழுப்படம் பாத்தாச்சே...ஹிஹி..!..
ஆமாம் எதுக்கு குருமா?...
ஜொள்ளு பேரு என்ன பாஸ்
//கருணாநிதியின் அறிக்கைகள் கி.வீரமணி பெயரில் வந்த மாதிரி, ஜெ;-வின் அறிக்கைகள் சரத்குமார் பெயரில் வருகிறது!//கலக்கல் ட்வீட்
சூப்பர் அப்பூ.. அருமையான தகவல்களோட ஒரே சீரான பதிவு.. படித்தேன், ரசித்தேன்.. அறிமுகப் பதிவர் பகுதி அருமை. புகிர்வுக்கு நன்றி பிரபா.
>>நானும் பிட்டுப்படங்கள் பார்க்கும் ஒரு சராசரி இளைஞன்தான்
hi hi உண்மையை ஒத்துக்கொண்ட உத்தமரே
அமெரிக்க கைக்கூலி-அஜீத்...அப்படினா என்ன ????
குருமா மேட்டர் பயங்கரம் .....
பிரபா ஒயின்ஷாப்-
அழகான தள்ளாட்டம் ....
வாழ்த்துக்கள் நண்பா
அருமையான தொகுப்பு
Eppothum pola.....
Nice....
:)
>>நானும் பிட்டுப்படங்கள் பார்க்கும் ஒரு சராசரி இளைஞன்தான்.
ஹீ ஹி .நானும்தான் ..
சூப்பர் பாஸ்! அமெரிக்க கைக்கூலி அஜித்தோட வேஷ்டி (வீணா வேஷ்டி?) விளம்பரம் ஒண்ணு இருக்காம்! முடிஞ்சா கண்டுபிடிச்சுப் போடுங்க பாஸ்! :-)
தலயா அது!
கலக்கல் காக்டெயில்.
பதிவு சூப்பர்.
ஜொள்ளு புகைப்படம் அருமை. யார் அந்த பொண்ணு...
ஆபீசர், வேலையிடங்கள் பத்தி இதுக்கு தான் நான் எழுதறதே இல்லை.... ஏன்னா ஆப்பு நமக்கு நாமே... ஹி ஹி
நம்ம தளத்தில்:
அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?
ஜோக் சூப்பர்
அன்புடன் :
ராஜா
.. இன்று
பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
//நானும் பிட்டுப்படங்கள் பார்க்கும் ஒரு சராசரி இளைஞன்தான்
இதை வன்மையாக கண்டிக்கிறேன். இளைஞன் மட்டுமா பிட்டு படம் பார்க்கிறான்?
ஆனந்த விகடன்ல ஹிட் ஆகுற ட்வீட்டர்களோடு சேர்த்து, புதியவர்கள் எழுதியதையும் அடிக்கடி போடுங்கள் பிரபாகர். உடனே பழைய பைலை தேட வேண்டாம். இனிமே எழுத சொன்னேன்.
வழக்கம் போல.......ஜொள்ளு..ஹ்ம்ம்மம்ம்ம்ம்.......
இந்த வார சரக்கு அருமை பிரபா. முக்கியமாக ட்விட்டர் தத்துவங்கள் சூப்பர்.
ஆண் ஆளுமையுடன் துவங்கி அன்பிற்கு அடிமையாகிறான்! பெண் அன்புடன் துவங்கி ஆணை ஆளுமை செய்கிறாள் #காதல்//
ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா ஆமா கரெக்ட்டா சொல்லிட்டாங்கடோய், மகளிர் அணி இப்போ பூரிக்கட்டையோட வரப்போராயிங்க...!!!
மாப்ள.. சரக்கு தூக்கலா இருக்கு...
கருங்காலி படத்துலேர்ந்து ஒரு ஃபோட்டோ போட்டிருக்கலாம்.!
தத்துவம்:
“Dont cry because its over, Dont smile because its happened...” – Dr.Seuss
நன்று.
என் மனதை திருடிய பாடல்கள்
ஒரு நாள் லேட்டா வந்தாலும் கிக் குறையலப்பா....
கலக்கல் தலைவா. அந்த பாகிஸ்தான் பெண்மணி மேட்டர் நெஞ்சை தொட்டுச்சு. தத்துபித்துவமும் அருமை.
தஓ 10.
கலக்கல்.
தஓ 10.
இருபாத்தி நாண்கு மனிநேரம் முப்பத்திநாளு நிமிடங்கால் தாம்தமகா... (சரி விடுங்க... சும்மா முயற்சி பண்ணி பார்த்தேன்... நம்மளால எல்லாம் முடியாதுப்பா...)
//
அப்ப 'அது' நீங்க தானா?
(போட்டுக்குடேய்)
//பழைய ஆபீஸில் பணிபுரிந்தபொது இப்படித்தான் டீம் லீடரை நக்கலடித்து ஒரு பதிவு போட, செய்தி காட்டுத்தீயாக பரவி டீம் லீடரின் காதிற்கு எட்டிவிட்டது. ///
ஹீ ஹீ.. செம காமெடி..
///ஹி... ஹி... அமெரிக்க கைக்கூலி “பிரியாணி” புகழ் அஜீத் நடித்த முதல் விளம்பரப்படம்.///
ஒரே ஒன்னர மாசத்துக்கு முன்னாடி நாங்களும் இத பத்தி போட்டுருந்தோமே,
பிஞ்சு மூஞ்சி அஜித்தும் , கட்டிக்க மறுக்கும் பொண்ணுகளும்
ஹீ ஹீ...அமெரிக்கா கைகூலிய பார்க்க அப்பாவியா இருக்குல்ல...
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். படம் (பத்த வச்சிட்டியே பரட்டை...!) சூப்பர். விமர்சனக்களும் அருமை. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
கலக்கல் காக்டெயில்...ட்விட் சூப்பர்ப்...
//நல்லவங்கள நம்பலாம்... (என்னை மாதிரி) கெட்டவங்கள கூட நம்பலாம்... ஆனால் நல்லவங்க மாதிரி நடிக்கிற கெட்டவங்கள மட்டும் நம்பவே நம்பாதீங்க...!//
எப்புடீப்பா முடியுது ஒங்களால?(கண்ணீரைத் துடைத்து விட்டுக்கொள்கிறேன்) சரக்கடிக்கிறதுக்கு முன்னால எழுதுவீங்களா, அப்புறமா எழுதுவீங்களா இல்ல சரக்கடிச்சிக்கிட்டே எழுதுவீங்கள? (டவுட்...)
@ நா.மணிவண்ணன்
// namma kajal //
தப்பு ராசா... ரொம்ப தப்பு...
@ சி.பிரேம் குமார்
// ஜொள்ளு பேரு என்ன பாஸ் //
இயற்பெயர் நிஷா அகர்வால்... நான் செல்லமா கொழுந்தியாள், மச்சினின்னு கூப்பிடுவேன்...
@ ஜீ...
// சூப்பர் பாஸ்! அமெரிக்க கைக்கூலி அஜித்தோட வேஷ்டி (வீணா வேஷ்டி?) விளம்பரம் ஒண்ணு இருக்காம்! முடிஞ்சா கண்டுபிடிச்சுப் போடுங்க பாஸ்! :-) //
முயற்சி பண்றேன் தல...
@ பாலா
// இதை வன்மையாக கண்டிக்கிறேன். இளைஞன் மட்டுமா பிட்டு படம் பார்க்கிறான்? //
கரெக்ட்... உங்களைமாதிரி நடுத்தர வயதுக்காரர்களும் பார்க்கிறார்கள் தான்...
@ ! சிவகுமார் !
// ஆனந்த விகடன்ல ஹிட் ஆகுற ட்வீட்டர்களோடு சேர்த்து, புதியவர்கள் எழுதியதையும் அடிக்கடி போடுங்கள் பிரபாகர். உடனே பழைய பைலை தேட வேண்டாம். இனிமே எழுத சொன்னேன். //
முயற்சி செய்றேன் சிவா... 138 பேரை follow செய்தாலும் ஒரு பத்து பேர் போடும் ட்வீட்டுகள் மட்டுமே என் மனம் கவர்கிறது நான் என்ன செய்ய... தவிர, நான் ஆ.வி தொடர்ந்து வாசிப்பதில்லை... எப்போதாவது தான்... இவங்கதான் தொடர்ந்து வலைபாயுதேவை கலக்குபவர்களா...
@ மாயன் : அகமும் புறமும்
// கருங்காலி படத்துலேர்ந்து ஒரு ஃபோட்டோ போட்டிருக்கலாம்.! //
ஏன் உங்களுக்கு இந்த கொலவெறி...?
@ கோகுல்
// அப்ப 'அது' நீங்க தானா? //
அது, இதுன்னு பொடி வைக்காம எதுன்னு சொன்னா நல்லா இருக்கும்...
@ மொக்கராசு மாமா
// ஒரே ஒன்னர மாசத்துக்கு முன்னாடி நாங்களும் இத பத்தி போட்டுருந்தோமே, //
ஆமாம் பார்த்தேன்... தலைப்பே கோக்குமாக்கா வச்சிருந்தீங்க... ஏதோ அஜீத்தை பொண்ணுங்க கட்டிக்க மாட்டேன்னு சொன்ன மாதிரி...
@ ஷர்மி
// எப்புடீப்பா முடியுது ஒங்களால?(கண்ணீரைத் துடைத்து விட்டுக்கொள்கிறேன்) சரக்கடிக்கிறதுக்கு முன்னால எழுதுவீங்களா, அப்புறமா எழுதுவீங்களா இல்ல சரக்கடிச்சிக்கிட்டே எழுதுவீங்கள? (டவுட்...) //
மேடம் நான் இதுவரைக்கும் ஒரே ஒரு பதிவை மட்டும்தான் சரக்கடிச்சிட்டு எழுதியிருக்கேன்... அதை நீங்களெல்லாம் படிக்க முடியாது...
யோவ நம்ம சாரு மாமா கருங்காலி பத்தி ஓஹோன்னு சொன்னப்பவே எனக்கு ஒரு டவுட்டு அந்த மாதிரி படமொன்னு!கண்பார்ம்ட்!
. நண்பன் பட ட்ரைலர் பார்க்கும்போது சத்யராஜ் கேரக்டருக்காகவே படம் பார்க்க வேண்டுமென்று தோன்றியது//
.
.
நான் ஹிந்தியிலேயே பாத்துட்டேன்!டக்குடர் படம் பார்க்கும் பொறுமையில்ல!
ஹி... ஹி... அமெரிக்க கைக்கூலி “பிரியாணி” புகழ் அஜீத் ///
.
.
உள்ளாட்சி தேர்தலில் ஏனய்யா உங்க தல க்யூவில் நின்னு ஒட்டு போடலை?
பிரியாணி போட்டா மனித நேய பண்பாளர்!ஓட்ட போட க்யூவில் நின்னா மாமனிதன்!நடிகனை தூக்கி பிடிப்பதை நிறுத்துங்க!அவுர் வாங்கும் 15 கோடிக்கு எவ்வளவு வரி காட்டுறார்?எவ்வளவு கருப்பில் வான்குரார்னு தெரியாம பேசுவது அறிவிலித்தனம்!
super da..
Post a Comment