அன்புள்ள வலைப்பூவிற்கு,
அந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் தபு சாயலில் இருந்த ரிசப்ஷனிஷ்டை தவிர நானும் அவளும் மட்டுமே அமர்ந்திருந்தோம். அவளும் என்னைப்போலவே பணியில் சேரத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும்போதே “கண்ணா... லட்டு தின்ன ஆசையா...” என்று மனதிற்குள் மணியடித்தது. பெயர் நித்யா. சுமாரான கலர்தான். ஆனால் ஷார்ப்பான கண்கள், லிப்ஸ்டிக் போடாமலே இளஞ்சிவப்பு வண்ணம் கொண்ட உதடுகள், சுருள் சுருளாக படர்ந்த தலைமுடி என்று கொள்ளை அழகாக இருந்தாள். மாடர்ன் டிரஸ் அணிந்தால் இன்னும் அழகாக தெரிவாள். ஆமாம், இந்த காலத்துல சப்பை ஃபிகரையே எவனும் விட்டுவைக்க மாட்டேங்குறான். கண்டிப்பா இவளுக்கு ஒரு காதலனாவது இருப்பான் என்று பெருமூச்சு விட்டபோது, போன் ரீசிவரை காதில் வைத்தபடி “Now both of you can go and meet your manager” என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொன்னாள் ரிசப்ஷனிஷ்ட்.
மேனேஜருக்கே உரிய வழுக்கையுடன் வரவேற்றார் அந்த மனிதர். எங்களை மற்ற ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு பெரிதாக சிரித்தார். எல்லா முகங்களுமே அன்னியமாய் தெரிந்தன நித்யாவின் முகம் தவிர. எங்களுக்கு எதிரெதிர் கேபின் அமைந்தது. இருவரும் அவரவர் கணினியைப் பார்க்கும் நேரத்தை விட, என் முகத்தை அவளும், அவள் முகத்தை நானும் பார்த்த நேரமே அதிகம் இருக்கும். நிறைய பேசுவாள். ஆனால் அவள் குடும்பம், அவங்க வீட்டு நாய்க்குட்டி, டைரிமில்க் சாக்லேட், சூர்யா, ஜோதிகா இதைத்தாண்டி எதுவும் பேசமாட்டாள். நான்தான் கடாஃபி, ஒபாமா, inflation, corruption’ன்னு ஏதோ உலக பொருளாதாரத்தை தூக்கி நிருத்துவறனாட்டம் மொக்கை போட்டுக்கொண்டு இருப்பேன்.
நாளடைவில் இருவருக்கும் வேலைப்பளு அதிகமாகி பேச்சுவார்த்தை குறைந்திருந்தது. லஞ்ச் டைமில் அவள் அம்மா சமைத்த உருளைக்கிழங்கு பொரியலுடன் சேர்த்து கொஞ்சூண்டு பேச்சையும் பரிமாறுவாள். மற்றபடி அலுவலக நேரத்தில் உச்சக்கட்ட டென்ஷனில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது வந்து ஏதாவது சந்தேகம் கேட்டு நச்சரிப்பாள். ஆரம்பத்தில் நானும் அவளுடைய வேலைகளை இழுத்துப் போட்டு செய்தேன். பின்ன, சாதாரண அழகியா அவள். அவளுக்காக இதுகூட செய்ய மாட்டேனா. ஆனால் நாளடைவில் இதையே சாக்காக வைத்து பாதி வேலையை என் தலையில் கட்ட ஆரம்பித்துவிட்டாள். சமயங்களில் எரிச்சலாக வரும். அவள் “ப்ளீஸ்டா...” என்று உதடு குவித்து கேட்கும்போது அத்தனையும் பறந்துபோகும்.
மேனேஜரிடம் அத்தனை வேலையையும் அவளே செய்ததாக சொல்லுவாள். நான் மனதிற்குள் நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்வேன். இப்படி ரொம்பவும் மெனக்கெடாமல் சம்பளம் வாங்குபவள் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் மாதிரி இருப்பாள். என்னடா ஆச்சு’ன்னு இயக்குனர் சேரன் மாதிரி பரிவாக கேட்டால் தலைவலி, வயித்துவலின்னு பொய்க்காரணம் சொல்வாள். அதற்கு மேல் அவள் பர்சனல் விஷயங்களில் தலையிட நான் யார்...? அடிக்கடி லீவ், அரைநாள் பர்மிஷன் என்று ஓபியடிக்க தொடங்கினாள். வேலை பிடிக்கலையாடி என்று கேட்டால் அடுக்கடுக்கான காரணங்கள் சொல்லி சலித்துக்கொள்வாள். இத்தனைக்கும் வீட்டில் இரண்டு மூத்த சகோதரிகள் போதாத குறைக்கு அம்மாவும் இருக்கிறார். நிச்சயம் வீட்டில் இவளுக்கு ஒரு வேலையும் இருக்காது என்று எண்ணிக்கொள்வேன்.
அதற்கு மேல் அவளை சமாதானப்படுத்த எனக்கு பொறுமையில்லை. வேலைப்பளு இன்னும் அதிகமாக ஆரம்பித்தது. அடுத்த இரண்டு வாரத்திற்குள் அந்த ப்ராஜெக்டை முடித்தாக வேண்டும். நைன் டூ ஃபை ஆபீஸ் ஹவர்ஸ் என்ற லாஜிக் மறந்துபோக தொடங்கியிருந்தது. இப்போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் கூட கிடைப்பதில்லை. பசிக்கும்போது கேண்டீனில் ரெண்டு சமோசா, ஒரு கோக் அவ்வளவுதான்.
ப்ராஜெக்ட் டெட்லைன் முடிய இன்னும் இரண்டு நாட்களே இருக்க, கருமமே கண்ணாக வேலை செய்துக்கொண்டிருந்தேன். சீனியர் ப்ரோக்ராமர் முகிலன் என்னைப் பார்த்து சிரித்தபடி “என்னடா இந்தமுறை Employee of the month ஆகாமல் விடமாட்ட போல இருக்கே...” என்றார். என் முகத்தில் பெரிதாக மாற்றம் காட்டவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தமாதிரி பத்து பேராவது சொல்லியிருப்பார்கள். அடுத்த இரண்டு நாட்கள் அல்லும் பகலுமாக வேலை செய்ததில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்திருந்தது. மேனேஜர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எனக்கும் தான். ஏதோ ஸ்கூல் டீச்சரிடம் வெரி குட் வாங்கிய எல்.கே.ஜி பையன் மாதிரி அகமகிழ்ந்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில் அலுவலகமே ஆர்ப்பாட்டமாக இருந்தது. வழக்கமான நடக்கும் மாதாந்திர மீட்டிங்குக்குத்தான் அத்தனை ஆர்ப்பாட்டம். எம்.டி முன்னிலையில் கிளார்க் அந்த மாதத்தின் நிதி அறிக்கையை வாசித்தார். அலுவலகத்தின் அந்த மாதத்தின் செயல்பாடுகள் பற்றியும் அடுத்த மாதத்தின் செயல்திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. இறுதியாக Employee of the month அறிவிக்கும் நேரம் வந்தது. என்னை அறியாமல் எழுந்து முன்னே செல்வதற்கு என் கால்கள் தயாராகின. போட்டோவிற்கு எப்படி சிரிக்க வேண்டுமென என் உதடுகள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தன. அடுத்த கனம், அதிர்ச்சி. எம்.டி உதடுகள் உச்சரித்தது என் பெயர் இல்லை. யாரோ ஒரு பெண் முன்னேறிச் செல்ல அனைவரும் கைதட்டுகிறார்கள். யாரது...? என் கண்களை நம்ப முடியவில்லை. அது நித்யாவே தான். அவள் எம்.டி கையிலிருந்து பரிசுப்பொருளை வாங்கியது என் கையில் இருந்து பிடுங்கியது போல இருந்தது. மீட்டிங் நிறைவடைய அனைவரும் அவரவர் இடத்திற்கு திரும்பினோம்.
என் மனம் முழுவதும் ஏமாற்றமே நிறைந்திருந்தது. எனக்கு அந்த பெருமை கிடைக்கவில்லை என்பதைவிட அவளுக்கு கிடைத்தது என்பதே அதிக ஏமாற்றம். அவள் மீது கோபமும் பொறாமையும் பொங்கி வழிந்தது. சுற்றியிருந்த யாரும், ஏன் முன்னால் இருந்த கணினி உட்பட எதையுமே பொருட்படுத்தாமல் நான் ஸ்தம்பித்திருந்தேன். ஒரு கனம் யாரோ உரக்கப்பேசுவது என் காதில் விழுந்தது. திரும்பிப்பார்த்தேன். கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வழக்கமாக வெட்டியாக நேரத்தை கடத்தும் நித்யா அந்த ஜூனியர் பையனுக்கு ஏதோ சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நம்பிக்கையும் பெருமையும் தெரிந்தன. அவள் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அடுத்தடுத்து மும்முரமாக வேலை செய்துக்கொண்டிருந்தாள். பின்னாலிருந்து யாரோ என் தோள் பட்டையில் கை வைப்பது போல தெரிந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது என் மேனேஜர் என்னைப்பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
67 comments:
இந்த பொண்ணுங்களே இப்டிதான் எசமான்....
விடுங்க..(note: NO DOUBLE MEANING IMPLIED)
எப்படி தலைவரே... பின்னிரவுல சளைக்காம வந்து பின்னூட்டம் போடுறீங்க...
சனங்களே... என்னுடைய முதல் சிறுகதை முயற்சி... அதனால் கூச்சப்படாமல் குறைகளை சுட்டிக்காட்டுங்கள்...
சூப்பர் அப்பு, சிறுகதை முழுவதும் சுவாரஸ்யமா இருந்தது. என்னமோ சொல்ல வரீங்கன்னு தெளிவா புரியுது, ஆனா என்னன்னு சுத்தமா புரியல... முடிவு எதிர்பார்த்த முடிவுதான், ஆனா மெஸ்சேஜ் வேற மாதிரி இருக்கு. உங்களுக்கு தோளில் தட்டிக்கொடுத்தது ஆறுதல் கூற, நித்தியாவுக்கு கான்பிடன்ஸ் குடுக்க, நான் சொல்றது சரிதானா? இல்ல வழக்கமான இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எசமான் கதையா? அதுலதான் கான்பூஸ் ஆகிட்டேன்..
நல்ல கதை பிரபா,
சிறுகதையில் வார்த்தைகள் ரொம்ப முக்கியம்,
அது உங்களுக்கு நல்ல வருது.
அப்புறம் உங்க பாஸும் வழுக்கையா?
ஆபீஸ்ல நடந்த உண்மைக்கதைன்னு தெரியுது. உங்க தோழி/லவ்வர் நல்லாத்தான் அல்வா குடுத்து இருக்காங்க.
என்ன பிளாசபி! கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க..!!
அடுத்து கவிதையா?!!
கலக்குங்க..!!
கதையின் ஓட்டம் ஒரே சீராக இருந்தது.. எதிர்பார்த்தது போலவே நம்ம கதாநாயகனுக்கு கல்தா கொடுத்துருக்காங்க...ம்ம்.. எங்கும் இப்படி நடப்பது சகஜம்தான்.. நம்ம கதாநாயகன் மட்டும் விதிவிலக்கா என்ன?
பலே..!! கதை எழுதறலயும் பாஸ் பண்ணிட்டீங்க..!!
கைத நீதி. அண்ணாத்தனால தான் அவேராட கம்ேபனிக் லாபம் அதிகமாம்
வாழ்த்துக்கள்.
ரசித்தது :
//லஞ்ச் டைமில் அவள் அம்மா சமைத்த உருளைக்கிழங்கு பொரியலுடன் சேர்த்து கொஞ்சூண்டு பேச்சையும் பரிமாறுவாள்.//
சலித்தது :
//இப்போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் கூட கிடைப்பதில்லை. பசிக்கும்போது கேண்டீனில் ரெண்டு சமோசா, ஒரு கோக் அவ்வளவுதான்.//
அப்லாஸ் :
//நான் திரும்பிப்பார்த்தபோது என் மேனேஜர் என்னைப்பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.//
தொடரட்டும்...
என் மேனேஜர் வழுக்கை தான்.
//மேனேஜருக்கே உரிய வழுக்கையுடன் வரவேற்றார் அந்த மனிதர். //
ஹி. ஹி.
@ Dr. Butti Paul
// உங்களுக்கு தோளில் தட்டிக்கொடுத்தது ஆறுதல் கூற, நித்தியாவுக்கு கான்பிடன்ஸ் குடுக்க, நான் சொல்றது சரிதானா? //
ம்ம்ம் சரிதான்...
@ Dr. Butti Paul
// இல்ல வழக்கமான இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எசமான் கதையா? //
அது ஒரு உபகருத்துன்னு வச்சிக்கலாம்... But க்ளைமாக்ஸில் சொல்ல வந்தது - Employee of the Month திறமையை பார்த்து கொடுப்பதில்லை... ஒருவரை உற்சாகப்படுத்தவே கொடுக்கிறார்கள்...
@ அப்பு
// நல்ல கதை பிரபா,
சிறுகதையில் வார்த்தைகள் ரொம்ப முக்கியம்,
அது உங்களுக்கு நல்ல வருது. //
நன்றி அப்பு...
// அப்புறம் உங்க பாஸும் வழுக்கையா? //
ஆமாம்...
@ ! சிவகுமார் !
// ஆபீஸ்ல நடந்த உண்மைக்கதைன்னு தெரியுது. உங்க தோழி/லவ்வர் நல்லாத்தான் அல்வா குடுத்து இருக்காங்க. //
என்ன தல எதை எழுதினாலும் பொசுக்குன்னு உண்மைக்கதைன்னு சொல்லி என்னையே மிரள வைக்கிறீங்க...
இந்தக்கதையில் வந்த ஒரே ஒரு சம்பவம் உண்மையில் நடந்தது... மற்றவை கற்பனை...
@ தங்கம்பழனி
// அடுத்து கவிதையா?!! //
அந்த முயற்சியையும் ஏற்கனாவே பண்ணியிருக்கேனே...
@ நா.மணிவண்ணன்
// கைத நீதி. அண்ணாத்தனால தான் அவேராட கம்ேபனிக் லாபம் அதிகமாம் //
LOL... ஆபீஸ் பெரிய மனுஷங்க யாராவது இந்தக்கதையை படிச்சா கண்டிப்பா என் டவுசரை கிழிச்சிடுவாங்க... பூரா பயலுகளுக்கும் எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க தெரியாதுன்னுற ஒரே நம்பிக்கையில என் இஷ்டத்துக்கு எழுதி வச்சிருக்கேன்... FYI, நான் இன்னும் Trainee தான்...
@ Boobala Arun Kumaran
ரசித்தது, சலித்தது, அப்ளாஸ் என்று வகைப்படுத்தி விமர்சித்ததற்கு மிக்க நன்றி பூபாலன்...
அதாவது பிரபா, இந்த பொம்பளப்புள்ளைக இருக்காளுங்களே நீங்கள் மட்டும் கொஞ்சம் இளிச்சவாயத்தனமாக இருந்தால் தன் அலுவலக வேலையை மட்டுமல்லாமல் அவள் வீட்டு வேலையையும் கொஞ்சமும் கூச்சப்படாமல் உங்களிடமே கொடுப்பாள் ஜாக்கிரதை. மற்றப்படி சிறுகதை என்று எடுத்துக் கொண்டால், சுவாரசியம் என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. முதல் பாராவிலேயே நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. வாழ்த்துக்கள்.
கதையில இன்னும் சொல்ல வந்த விசயத்தை கொஞ்சம் சேர்த்து இருக்கலாம்
நித்யா ரெம்ப அழகானவள் என்பதை தவிர எனக்கு எதுவும் சரியா புரியலை ))
நல்ல கதை பிரபா.
பாஸ் கலக்கல் இத ஒரு குரும்படமாவே எடுக்கலாமே நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு ..
இன்னும்..இன்னும் இன்னும் நிறைய பழகணும்..:))
நல்ல முயற்சி... க்ளைமாக்ஸ் யூகிக்கக்குடியதாய் இருந்தது, ஆனாலும் ஒது அபவ் ஆவரேஜ் ஸ்டோரி . வெல் டரை
நன்றாக முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் வார்த்தைகள் இன்னும் உங்களுக்கு வசப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. தீம் நன்றாகவே இருந்தது. சுமாராக வேலை செய்பவரை ஊக்கப்படுத்தவே பரிசு என்பதும், பல அலுவலகங்களில் ஆண்களின் தலையில் வேலையச் சுமத்துவது பெண்களே என்பதும் நிதர்சனம். மொத்தத்தில்... நீங்கள் இன்னும் நிறைய எழுதலாம்...
:)
நல்லா இருக்கு பிரபா..
குட் மானேஜ்மென்ட்.. உங்களுக்கு இனி வேலை குறையும் (கதைப்படி)
நித்யா ஒரு சாதாரண பெண் போல இல்லாமல்...முழுக்க.
உங்களை பயன் படுத்தி கொண்டாள்.(என் மேனேஜர் என்னைப்பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.)
உங்களின் ஏமாற்றம் ஒரு மாற்றத்தை உருவாக்கியது.
அட கொடுமை சாமி!
கதை கூறும் கருத்து.
ஒரு ஏமாளி கோமாளி ஆன கதை.
வாழ்த்துக்கள் மேலும் வளர.......
ஏமாந்த கதை நல்லாத்தான் இருக்கு!இயல்பான நடை.தொடருங்கள் பிரபா.
உங்கள் முதல் சிறுகதை முயற்சி என்ற வகையில் - மிக நல்ல முயற்சி; பாராட்டுக்கள்.
சிற்சில எழுத்துப் பிழைகளைத் திருத்தி விடுங்கள் - 'நிருத்துவறனாட்டம் - நிறுத்துபவனாட்டம் (அ) நிறுத்துவறனாட்டம்?; கனம்- கணம். மற்றபடி சூப்பர்!
நித்யா இனிமேல் கதாநாயகனை வேலை வாங்க மாட்டாள்; மானேஜர் அவளைத் திருத்தத் தான் அவளுக்கு விருது கொடுத்தது - உண்மையில் வேலை செய்தது யார் என அவர் தெரிந்து அவர் புன்னகைத்தார் அல்லவா? நல்ல கதை - இனி சிறுகதைகள் மழையாகப் பொழியட்டும்!!
நல்லா இருக்கு .. தொடரட்டும் உங்கள் கதைகள்
இன்று என் வலையில்
விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்
சிறுகதை சுவாரஸ்யமாக உள்ளது.
அருமை, தொடருங்கள். வாழ்த்துக்கள்.
சிறுகதை முயற்சி திருவினையாக்கும், அருமை...!!!
இனிய மாலை வணக்கம் மச்சி,
முதல் முயற்சியே சூப்பரா இருக்கு.
அசத்தலான கதை,
கதையினைத் தொய்வின்றி நித்யா பற்றிய எதிர்பார்ப்புக்களுடன் நகர்த்தியது அருமை.
இறுதியில் தலையில் மிளகாய் அரைத்த செயலை முடிவாக்கி, கொஞ்சம் யாதார்த்தம் கலந்து உங்கள் நிலையினை உரைத்திருப்பதும் அருமை!
முடிந்த வரை, கொஞ்சம் வசன நடைகளை அல்லது பேச்சு வசனங்களை மேற் கோள்களுடன் கையாண்டிருக்கலாம்.
இன்னும் சிறப்பாக இருக்கும்!
Keep it Up!
#Philosophy Prabhakaran said...
எப்படி தலைவரே... பின்னிரவுல சளைக்காம வந்து பின்னூட்டம் போடுறீங்க..#
சிறுகதைன்னு சொல்லிர்ந்தா கொஞ்சம் லேட்டா படிச்சுர்பேன்...
முயற்சின்னு சொல்லிடீங்களா, சோ,உடனே உள்ள வந்துட்டேன்...
வாழ்த்துக்கள் பிரபா..:)
கதை கதையாம் காரணமாம்...சிறுகதை நல்லா இருக்குங்கோ!..என்ன இருந்தாலும் வேல செய்யாத ஆளுங்களுக்கு மரியாதை கொஞ்சம் அதிகம்தான் ஹிஹி!
முதல் முயற்சி என்று நம்ப முடியவில்லை. கோர்வையாகச் சொன்னதில் வெற்றியடைந்திருக்கிறீர்கள். நன்று!
இது முயற்சி மாதிரி தெரியல. உண்மைப் போலவே தெரியுதே..
ஹீ..ஹீ....
எனிவே வாழ்த்துக்கள்...
இது முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை பிரபா...வாழ்த்துக்கள்....நல்லா வந்திருக்கு...
நல்ல நடை, தொடருங்கள் பிரபா.
பாஸ்... நீங்க திரும்ப திரும்ப "குறை சொல்லுங்க மக்களே"ன்னு மன்றாடி கேட்டுக்கிட்டதினால உங்க கதைய 5 முறை படிச்சுப் பாத்து, எதோ எனக்கு தோனுனத இங்க சொல்லுறேன்.
"பெயர் நித்யா"
இப்டி ரொம்ப ஷார்ப்பா அந்த பேர இன்ட்ரொடியூஸ் பண்ணாம, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் பன்னிருந்தா ஆரம்பத்திலேயே ஒரு ஸ்ட்ராங் செட்டில்மென்ட் கெடச்சிருக்கும்.
டிஸ்கி 1: இது என்னோட முதல் கமெண்ட்.
டிஸ்கி 2: கமெண்டுக்கும் டிஸ்கி போடுவோம்ல.
@ ஆரூர் முனா செந்திலு
// மற்றப்படி சிறுகதை என்று எடுத்துக் கொண்டால், சுவாரசியம் என்பது ஆரம்பம் முதல் இறுதி வரை குறையவில்லை. முதல் பாராவிலேயே நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. வாழ்த்துக்கள். //
நன்றி அண்ணே...
@ கணேஷ்
// நித்யா ரெம்ப அழகானவள் என்பதை தவிர எனக்கு எதுவும் சரியா புரியலை )) //
:)))
@ சே.குமார்
// நல்ல கதை பிரபா //
நன்றி...
@ சி.பிரேம் குமார்
// பாஸ் கலக்கல் இத ஒரு குரும்படமாவே எடுக்கலாமே நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு .. //
நீங்க ப்ரோட்யூசர்ன்னா கண்டிப்பா எடுத்துடலாம்...
@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// இன்னும்..இன்னும் இன்னும் நிறைய பழகணும்..:)) //
கருத்துக்கு நன்றி தல... ரெண்டு ஷாட் டக்கீலா போட்டுட்டு பழகுறேன்...
@ சி.பி.செந்தில்குமார்
// நல்ல முயற்சி... க்ளைமாக்ஸ் யூகிக்கக்குடியதாய் இருந்தது, ஆனாலும் ஒது அபவ் ஆவரேஜ் ஸ்டோரி . வெல் டரை //
நன்றி சிபி...
@ கணேஷ்
// நன்றாக முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் வார்த்தைகள் இன்னும் உங்களுக்கு வசப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. தீம் நன்றாகவே இருந்தது. சுமாராக வேலை செய்பவரை ஊக்கப்படுத்தவே பரிசு என்பதும், பல அலுவலகங்களில் ஆண்களின் தலையில் வேலையச் சுமத்துவது பெண்களே என்பதும் நிதர்சனம். மொத்தத்தில்... நீங்கள் இன்னும் நிறைய எழுதலாம்... //
நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி கணேஷ்...
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
//
குட் மானேஜ்மென்ட்.. உங்களுக்கு இனி வேலை குறையும் (கதைப்படி) //
நிஜத்துல குறையனுமே...
@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// ஒரு ஏமாளி கோமாளி ஆன கதை. //
அவரு ஹீரோங்க... அநியாயத்துக்கு கலாய்க்குறீங்க...
@ சென்னை பித்தன்
// ஏமாந்த கதை நல்லாத்தான் இருக்கு!இயல்பான நடை.தொடருங்கள் பிரபா. //
நன்றி சார்...
@ middleclassmadhavi
// நிருத்துவறனாட்டம் - நிறுத்துபவனாட்டம் (அ) நிறுத்துவறனாட்டம்?; கனம்- கணம் //
நன்றி மேடம்... எழுத்துப்பிழை அதிகமா பண்ணமாட்டேன்... வேகமா டைப் பண்ணும்போது தெரியாம வந்திருக்கும் போல...
// நித்யா இனிமேல் கதாநாயகனை வேலை வாங்க மாட்டாள்; மானேஜர் அவளைத் திருத்தத் தான் அவளுக்கு விருது கொடுத்தது - உண்மையில் வேலை செய்தது யார் என அவர் தெரிந்து அவர் புன்னகைத்தார் அல்லவா? நல்ல கதை - இனி சிறுகதைகள் மழையாகப் பொழியட்டும்!! //
கதையை கரெக்டாக புரிந்துக்கொண்டீர்கள் மேடம்...
@ "என் ராஜபாட்டை"- ராஜா
// நல்லா இருக்கு .. தொடரட்டும் உங்கள் கதைகள் //
நன்றி ராஜா...
@ Arun J Prakash
// சிறுகதை சுவாரஸ்யமாக உள்ளது.
அருமை, தொடருங்கள். வாழ்த்துக்கள். //
நன்றி அருண்...
@ MANO நாஞ்சில் மனோ
// சிறுகதை முயற்சி திருவினையாக்கும், அருமை...!!! //
நன்றி நாஞ்சிலாரே...
@ நிரூபன்
// முடிந்த வரை, கொஞ்சம் வசன நடைகளை அல்லது பேச்சு வசனங்களை மேற் கோள்களுடன் கையாண்டிருக்கலாம். //
கருத்துக்கு நன்றி நண்பா...
@ மயிலன்
// சிறுகதைன்னு சொல்லிர்ந்தா கொஞ்சம் லேட்டா படிச்சுர்பேன்...
முயற்சின்னு சொல்லிடீங்களா, சோ,உடனே உள்ள வந்துட்டேன்...
வாழ்த்துக்கள் பிரபா..:) //
ஹா... ஹா... இனி எப்போதுமே சிறுகதை முயற்சின்னே போடுறேன்...
@ விக்கியுலகம்
// கதை கதையாம் காரணமாம்...சிறுகதை நல்லா இருக்குங்கோ!..என்ன இருந்தாலும் வேல செய்யாத ஆளுங்களுக்கு மரியாதை கொஞ்சம் அதிகம்தான் ஹிஹி! //
கருத்துக்கு நன்றி விக்கி...
@ சேட்டைக்காரன்
// முதல் முயற்சி என்று நம்ப முடியவில்லை //
சேட்டை... மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க வைக்கிறீங்களே....
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// இது முயற்சி மாதிரி தெரியல. உண்மைப் போலவே தெரியுதே..
ஹீ..ஹீ....
எனிவே வாழ்த்துக்கள்... //
நன்றி கருண்...
@ ரெவெரி
// இது முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை பிரபா...வாழ்த்துக்கள்....நல்லா வந்திருக்கு. //
நன்றி ரெவேரி...
@ கும்மாச்சி
// நல்ல நடை, தொடருங்கள் பிரபா. //
நன்றி கும்ஸ்...
@ Anonymous
// பாஸ்... நீங்க திரும்ப திரும்ப "குறை சொல்லுங்க மக்களே"ன்னு மன்றாடி கேட்டுக்கிட்டதினால உங்க கதைய 5 முறை படிச்சுப் பாத்து, எதோ எனக்கு தோனுனத இங்க சொல்லுறேன். //
ஹி... ஹி...
// "பெயர் நித்யா"
இப்டி ரொம்ப ஷார்ப்பா அந்த பேர இன்ட்ரொடியூஸ் பண்ணாம, இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் பன்னிருந்தா ஆரம்பத்திலேயே ஒரு ஸ்ட்ராங் செட்டில்மென்ட் கெடச்சிருக்கும். //
கருத்துக்கு நன்றி தல...
// இது என்னோட முதல் கமெண்ட். //
ஏன் தல எங்க டாடி குதிருக்குள்ள இல்லைன்னு நீங்களே காட்டி கொடுக்குறீங்க...
நல்லா இருக்கு பாஸ்! முடிவு கொஞ்சம் யூகிக்க முடியுது!
கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு எழுதத் தெரியாது..அனால் சிலவிஷயங்களை கொஞ்சம் உரையாடல்கள் மூலமா சுருக்கமா சொல்லலாம்னு தோணுது!
சிறுகதை எழுதறது எனக்கு தெரியாது ..
ஆனாலும் இதை படித்ததில் ஒரு நிறைவு ஏற்படுகிறது ..
கதை அருமை ..
உங்க மேனேஜர் ரொம்ப நல்லவர்.. உங்க வேலைப்பளுவைக் குறைக்க இப்படி ஒரு தந்திரத்தைக் கையாண்டுள்ளார்..:) சரிங்க.. அந்த உண்மையான பொண்ணு பேரு என்ன..? தனியா எனக்கு மட்டும் சொல்லுங்க..
Post a Comment