அன்புள்ள வலைப்பூவிற்கு,
நான் பார்த்திபனின் மொக்கை காமெடி வகையறா வசனங்களின் பரம ரசிகன் என்பதாலும், ஏற்கனவே ட்ரைலர் பார்த்து ஈர்க்கப்பட்டிருந்தாலும் இந்தப் படத்தை பார்த்தேன். கேபிளின் எச்சரிக்கையையும் மீறி இதுவரை பார்த்திராத அண்ணா திரையரங்கிற்கு செல்லலாம் என்றிருந்தேன். நேரத்திற்கு வராமல் நண்பன் காலை வாரியதால் உட்லண்ட்ஸ் சிம்பொனியில் படம் பார்க்க நேர்ந்தது.
தமிழ் சினிமாவின் அரத பழசான இத்துப்போன கதை. நேர்மையான போலீஸ் அதிகாரி ஹீரோ, பழி வாங்கும் படலம், லூசுப்பொண்ணு ஹீரோயின், ஆப்படிக்கும் அரசியல்வாதிகள், அவர்களுக்கு துணைபோகும் ‘போலி’ஸ், தீவிரவாதிகள், தாதாக்கள், உப தாதாக்கள், ரவுடிகள், அடியாட்கள்.... யப்பா படிக்கும் போதே மண்டை காயுதுல்ல. இவையெல்லாவற்றையும் தூக்கி நிறுத்த முயன்றிருக்கும் (கவனிக்க முயற்சி மட்டுமே) ஒரே விஷயம் – வசனம்.
வசனக்குத்துகளை பற்றி தனி பதிவே போடலாம். ஆனால் இது அட்ராசக்க வலைப்பூ இல்லை என்பதாலும், நான் சிபி இல்லை என்பதாலும் ஒரே ஒரு பத்தியோடு ஸ்டாப்பிங். கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலுமே ஏதோ ஒரு வசனத்தின் மூலம் சிரிக்க வைத்துவிடுகிறார் பார்த்திபன். அந்த அளவிற்கு அல்டிமேட் மொக்கை வசனங்கள். சிறுவனை ஒளிந்துக்கொள்ள அனுப்பிவிட்டு “பார்த்துப்பா புல் தடுக்கிட போகுது...” என்று சொல்வது, “நான் தெரியாம தான் கேக்குறேன்...” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் இழுக்கும்போது “அதானே தெரிஞ்சா ஏன் கேக்க போறீங்க...” என்று சொல்வது போன்றவை சில உதாரண தோட்டாக்கள். Survival of the fittest சமாச்சாரத்தை புழுவை வைத்து ஒரு வசனமா பேசியிருக்கார் – செம.
அதே மாதிரி திரைக்கதையிலும் ஆங்காங்கே சில திரைக்கவிதைகள். அமைச்சரை கைது செய்ய வரும்போது பெருச்சாளி ஒன்று பம்முவது போல காட்டுவது, பூர்ணா சேலை டிசைனில் இருக்கும் பூக்கள் நிஜப்பூக்களாக மலர்வது, குறிப்பாக இடைவேளை போடும்போது காட்டும் கேப்பு – ஆப்பு மேட்டர் போன்றவைகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
பார்த்திபன் ஒவ்வொரு ஃபிரேமிலும் டாமினேட் செய்திருக்கிறார். ஆனால் வித்தியாசமாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய இடங்களில் வித்தியாசமே இல்லாமல் படம் எடுத்திருப்பது வேதனை. மேக்கப்பை பார்க்கும்போது விட்டால் பவர் ஸ்டாரை வீழ்த்திவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ஒரு படைப்பாளியாக பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார் அதே சமயம் நடிகனாக... ப்ச் சொல்வதற்கில்லை.
பூர்ணா முந்தய படங்களில் டல்லா இருந்தவர் இந்த படத்தில் நல்லா இருக்கிறார். அம்மணிக்கு மாடர்ன் டிரஸ் கொஞ்சம்கூட சூட் ஆகலை. ஆனா சேலை, சுடிதாரில் பூரண அழகு. ஸ்விம்மிங் தெரியாது ஆனால் அதற்கு ஸ்பெல்லிங் மட்டும் தெரியும் என்று ஒரு காட்சியில் வசனம் பேசுகிறார். அதேமாதிரி ஆக்டிங் என்ற வார்த்தைக்கும் ஸ்பெல்லிங் மட்டும்தான் தெரியும் போல. இரண்டாம் பாதியில் சம்பந்தமே இல்லாமல் இரண்டொரு முறை தலைகாட்டி எரிச்சலூட்டுகிறார். கடைசியில் உயிர் தியாகம் செய்து அனுதாப ஓட்டுக்களை அள்ளிச்செல்கிறார்.
ஹீரோ ஹீரோயின் தவிர்த்து படத்தில் ஒரு பாத்திரக்கடையே இருக்கிறது. யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் சாதிக்கவில்லை (அ) சாதிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. ம்ம்ம் அந்த பில்லு கட்ட மல்லு கட்டும் காமெடியில் வரும் பெரியவரை மட்டும் குறிப்பிடலாம். பார்ப்பதற்கும் வசன உச்சரிப்பிலும் “என்னத்த” கண்ணையா சாயல். ஆனால் இவர் அவரல்ல.
ஜோஷ்வா ஸ்ரீதர் கைவண்ணத்தில் தியேட்டர் கேண்டீன்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றன. பாடல்கள், பின்னணி இசையெல்லாம் சுத்த வேஸ்ட். ‘உன் Zone’ல சேட்டையை போடு...’ பாடலின் முதல் நான்கு வரிகளுக்கான மெட்டு மட்டும் ஈர்க்கிறது. பாடல்களில் ஆங்காங்கே புகுத்தப்பட்டுள்ள கவித்துவமான தமிங்கில வரிகள் (ஒருவேளை புரிந்தால்) ரசிக்க வைக்கின்றன.
படத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டது, நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது, ATTACHMENT. அதாவது உங்கள் தாயோ, தந்தையோ, உடன்பிறப்போ, வாழ்க்கைத்துணையோ திடீரென ஒருநாள் இறந்துவிட்டால் ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு மூணாவது நாள் நீங்க சோத்துமூட்டையை கட்டிக்கிட்டு ஆபீஸுக்கு போய்தான் ஆகணும். அதான் வாழ்க்கை. ஒரு மனிதனின் பலம், பலவீனம் இரண்டுமே இந்த Attachment தான். ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகத்தில் உங்களை நம்பி, உங்களுக்காக அழ யாருமே இல்லையென்று நினைத்துப் பாருங்கள் – உங்கள் மனதில் டன்கணக்கில் சுமை குறைந்தது போல தோன்றும். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் – வாழ்க்கையில சென்டிமென்ட்ஸ் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே சென்டிமென்ட்டா இருக்கக்கூடாது.
படம் எப்படி...? சுமார் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்கிறது. கதையளவில் பார்த்தால் ரொம்பவும் மொக்கைதான். ஆனால் சிரிக்கத் தெரிந்தவர்கள் ரசிக்கலாம். குறைந்தபட்சம் முப்பது காட்சிகளில் மனம்விட்டு சிரித்தவர்கள் கூட படம் முடிந்து வெளியே வரும்போது மொக்கைப்படம் என்று கூசாமல் சொல்வதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். பார்த்திபன் வில்லை வளைத்திருந்தால் வளைந்திருக்கும். கன்னை வளைத்தால்...? சிம்பிளா சொன்னா படம் ஓடாது. அடிக்கடி தீக்குள் விரலை விட்டு கையை சுட்டுக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஒரு இயக்குனராக இதுதான் கடைசி படமாக இருக்கக்கூடும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
17 comments:
அந்த அளவுக்கு மொக்கயாவா இருக்கு!
avara patha romba payama irukunga intha padathula....for ur information chennai book fair jan 5-17
சிபி விமர்சனம் வேற மாதிரி இருக்கே ..
அவருக்கு இந்த படத்துக்கே தயாரிப்பாளர் கிடைச்சது பெரிய விஷயம்...
தும் ததா!
பூர்ணா..வாட் எ நடிப்பு!!!
மொக்கை....
//அடிக்கடி தீக்குள் விரலை விட்டு கையை சுட்டுக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஒரு இயக்குனராக இதுதான் கடைசி படமாக இருக்கக்கூடும்.//
என்ன இப்படி சொல்லிடிகே அச்சச்சோ
புது டெம்ப்ளேட் மாத்திட்டிங்க போல. இப்போ தான் உங்கள் தளம் எனக்கு க்ரோமில் ஓபன் ஆகிறது.
வித்தகன் விமர்சனம் எழுதனுமானு யோசிச்சு எழுதினாப்ல தெரியுது. அம்புட்டு மொக்கையா?
நம்ம தளத்தில்:
மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்
டிவியில் இவரின் காட்சிகள் போட்டாலே என் மகள் சொல்வது " அப்பா,,,இத மாத்துங்கப்பா...இந்தக்குரலைக் கேட்டாலே எனக்கு எரிச்சல் வருது ". அந்த அளவுக்கு டயலாக் டெலிவரியில் கொஞ்சம்கூட மாடுலேஷனே இல்லாமல் கட்டைக்குரலில் அனைவரையும் நோகடித்துக்கொண்டிருக்கிறார்..அவர் நடிப்பில் இது கடைசிப்பாடமாக இருந்தால் அவருக்கு ஆயிரம் நன்றிகள்...ஒரு வகையில் பார்த்தால் பார்த்திபனின் அதீத புத்திசாலித்தனமே அவருக்கு எதிரியாக இருக்கிற மாதிரி தோணுது ( அப்படி ஒன்று இருந்தால் ).
இயக்கத்தை மட்டும் கவனிக்கலாம்...தற்கொலைத் துணிவில் ஏதாவது தயாரிப்பாளர் கிடைத்தால்.
மொத்தத்தில் பார்த்திபன் இப்போது ஒரு அடையாளச் சிக்கலில் தவிக்கிறார் என்றே நினைக்கிறேன்........
இவருக்கு இன்னொரு துணை இருக்கிறார்...சேரன் என்று பெயர் ..( ஆனால் சேரனுக்கு ஈழம் ..மூணு பேர் தூக்குன்னு கொஞ்சம் வேலைகள் இருக்கிறது )
என்னாத்த சொல்றது? அந்த உள்ளே வெளியே, புதிய பாதைகள் கொடுத்த பார்தீபனா இது? எதுக்கும் டைம் கெடச்சா பார்க்கலாம்!!! வசனங்களுக்காக மட்டும்!!!
பாக்கலாம் ன்னு நெனச்சேன்..
சரி...ரைட் விடுங்க..
//மேக்கப்பை பார்க்கும்போது விட்டால் பவர் ஸ்டாரை வீழ்த்திவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. //உண்மை புகைப்படங்களை பார்த்தால் அப்படி தான் தோணுகிறது
Nalla review prabhakaran..
OK right..appo dvd vangi parthukaalam..
பாவம்....நாம் தான்!
Good review. This team spoke in TV today & gave a big build up.
சிம்பிளா சொன்னா படம் ஓடாது//
தயாரிப்பு...தலைல துண்ட போட வச்சுட்டு...சிம்பிளான்னு...சிம்பிளா சொல்றீங்க...-:)
Post a Comment