அன்புள்ள வலைப்பூவிற்கு,
முதற்கண் போதி தர்மனை அறிமுகம் செய்து வைத்து மிஸ்டர்.முருகதாஸுக்கும் இப்படி ஒரு சீனப்படம் இருப்பதாக தகவல் சொன்ன பதிவர் டம்பி மேவி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
Da Mo Zu Shi (அ) Master of Zen என்ற இந்த திரைப்படம் 1994ம் ஆண்டு வெளிவந்த ஒரு சீன திரைப்படம். ஒன்றரை மணி நேர திரைப்படம் போதி தருமரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கிறது. Infact, Da Mo Zu Shi என்ற சொல் “போதி தர்மர்” என்ற பெயரின் சீன மொழிபெயர்ப்பே.
தென் இந்தியாவின் மன்னர் ஒருவரின் மூன்றாவது மகன்தான் போதி தாரா. மன்னர் மரணபடுக்கையில் இருக்க, மூத்த இளவரசர்கள் போதி தாராவை கொல்ல முயல்கின்றனர். காரணம் மன்னர் போதி தாராவை தனது வாரிசாக முன்னரே அறிவித்திருக்கிறார். மூத்த இளவரசர்களின் முயற்சி தோல்வியில் முடிகிறது. அப்போது அரண்மனைக்கு பெளத்த துறவி பிரஜ்ன தாரா வருகை தருகிறார். அவருடைய போதனைகள் போதி தாராவை கவர்ந்துவிட, அவருடைய ஆசிரமத்திற்கு சென்று அவருடைய சீடராக விரும்புவதாக தெரிவிக்கிறார். சிலபல சோதனைகளுக்குப்பின் போதி தாராவை தனது சீடராக ஏற்றுக்கொள்கிறார் பிரஜ்ன தாரா. மேலும் அவருக்கு போதி தர்மா என்று பெயர் சூட்டுகிறார். அவர் இறந்து 67 ஆண்டுகளுக்குப்பின் போதி தர்மர் சீனாவிற்கு செல்ல வேண்டுமென்று கூறுகிறார்.
அப்படி சொன்ன பிரஜ்ன தாரா அப்போதே இறந்துவிடுகிறாரா என்று சொல்லப்படவில்லை. ஆனால் 67 ஆண்டுகளுக்குப்பின் என்ற ஸ்லைடோடு அடுத்த காட்சி தொடங்குகிறது. அப்போது போதி தருமரின் அண்ணன் மகன் அந்த இடத்தை ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறான். அவன் பெளத்த துறவிகளை துன்புறுத்துகிறான் (தசாவதாரம் நெப்போலியன் போல). அப்போது ஒரு பெளத்த துறவி சொல்லும் படிப்பினைகளை கேட்டு அவன் மனம் திருந்தி தனது சித்தப்பாவான போதி தருமரை காணச் செல்கிறான். அவரை சீனா செல்ல வேண்டாமென வலியுறுத்துகிறான். அவர் மனம் மாறாத காரணத்தினால் குறைந்தபட்சம் அவருக்கு மரியாதை செய்யும்பொருட்டு சீன மன்னருக்கு போதி தருமரை தகுந்த மரியாதையுடன் உபசரிக்கச் சொல்லி ஓலை அனுப்புகிறான்.
சீனாவிற்கு செல்லும் போதி தர்மருக்கு ராஜ மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால் அவர் எளிமையாக இருக்கவே விரும்புகிறார். சிலகாலம் அங்குள்ள துறவிகளுக்கு போதிக்கிறார். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரு மலைக்குகையில் தவம் செய்ய ஆரம்பிக்கிறார். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுமார் ஒன்பது ஆண்டுகள் அங்கேயே அமர்ந்து தவம் செய்கிறார். வாய்வழி பிரச்சாரமாக பலர் போதி தர்மர் பற்றி கேள்விப்பட்டு அவரை வழிபட தொடங்குகிறார்கள். அது ஒரு வழிபாட்டு தலமாகவே மாறுகிறது. இவருடைய பெருமைகளை அறிந்து குகை வாசல் முன்பு அமர்ந்து மூன்று நாட்களாக கொட்டும் பனியில் தவம் செய்கிறான் ஒரு இளைஞன். இவனுடைய தவத்தை கண்டு மெச்சி, ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் கண் திறக்கிறார் போதி தர்மர்.
இளைஞன் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி போதி தருமரிடம் மன்றாடுகிறான். தன்னுடைய ஒரு கையை வெட்டி போதி தருமரிடம் கொடுத்து தன்னுடைய அர்ப்பணிப்பை காட்டுகிறான். போதி தர்மரும் அவனை அவரது சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு WEI HO என்று பெயர் சூட்டுகிறார். மேலும் அவனுக்கு Second Master of Zen என்ற பட்டத்தையும் கொடுக்கிறார். தன்னுடைய இறுதிக்காலத்தில் அங்குள்ளவர்களுக்கு குங்பூ கலையை கற்றுக்கொடுக்கிறார்.
ஒருநாள் வியாபாரி ஒருவர் தான் போதி தருமரை ஒற்றை செருப்புடன் பார்த்ததாக மற்றொருவனிடம் கூறுகிறான். அவனோ போதி தர்மர் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக கூறுகிறான். போதி தருமரை புதைத்த இடத்தை தோண்டிப்பார்க்கும்போது அங்கே ஒற்றை செருப்பு மட்டுமே இருக்கிறது. படம் நிறைவடைகிறது.
இதற்கும் ஏழாம் அறிவு படத்தில் காட்டிய இருபது நிமிடங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள்.
- போதி தர்மர் பிறந்த ஊர் தென் இந்தியா என்று மட்டுமே படத்தில் குறிப்பிடப்படுகிறது. தமிழகம் என்றோ காஞ்சிபுரம் என்றோ, பல்லவ இளவரசன் என்றோ குறிப்பிடவில்லை.
- போதி தர்மர் சீனாவை நோக்கி புறப்படும்போது அவருடைய வயது என்பதிற்கும் மேல். மேலும் அவர் கடல்வழி பயணமாகவே சீனா சென்றதாக கூறப்படுகிறது. போதி தர்மர் இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டு கடைசியாக சீனா சென்றடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
- போதி தர்மர் மருத்துவர் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் புத்த மத போதகர் என்றும் இறுதிக்காலத்தில் தற்காப்பு கலையை பயிற்றுவித்தார் என்று மட்டுமே கூறப்படுகிறது.
- உச்சக்கட்டமாக போதி தருமரை சீனர்கள் விஷம் வைத்து கொன்றதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்த மாதிரி ஒரு சமாச்சாரத்தை சீன மக்களிடம் சொன்னால் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸுக்கு (போதி) ‘தர்ம’ அடி கொடுக்கக்கூடும்.
இந்தப் படத்தின் பதிவிறக்க லிங்குகள் இணையத்தில் எளிதாக கிடைக்கவில்லை. யூடியூபில் மட்டுமே கிடைத்தது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
41 comments:
இந்த படம் ஒரு சாம்பிள் தான்...!
இணையத்தை புரட்டி பொட்டு தேடினால் போதி தர்மர் பற்றி இன்னும் ஏராளமான தகவல் கிடைக்கின்றன... போதி தர்மர் ஏறத்தாழ நூற்றியைம்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது... அவர் இறந்தபிறகு மூன்றாண்டுகள் வரை ஆங்காங்கே சிலர் கண்ணில் தென்பட்டதாக கூறினார்களாம்... இவர் புத்த மதைத்தை தழுவிய காரணத்திற்காக இந்து மத கம்முனாட்டிகள் திட்டமிட்டு இவருடைய வரலாற்றை மறைத்ததாகவும் சொல்லப்படுகிறது... TRIAD என்ற பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் போதி தருமரை பெருமைப்படுத்தும் வண்ணம் அவருடைய உருவ அமைப்பில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்கிறது... அந்த பொம்மை தான் படத்தின் கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் படம்...
இதற்கு மேலும் வேறு யாருக்காவது தகவல்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
போதி தருமரின் இயற்பெயர் போதி தாரா என்று சொல்லப்பட்டாலும் அதுவும் கூட அவருடைய இயற்பெயர் அல்ல என்றே தோன்றுகிறது...
/////இதற்கும் ஏழாம் அறிவு படத்தில் காட்டிய இருபது நிமிடங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள்./////
உண்மையில் இதைப் படித்ததும் தான் சர்ச்சைகள் புரிகிறது... இதே போலத் தானே ஆயிர்த்தில் ஒருவன் வந்த போதும் நெருடியது... ஏதோ நல்ல ரசிக்கக் கூடிய திரைக்கதை ரசித்தேன்...
நன்றி பி பி...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)
பல விஷயங்களை தெளிவா எடுத்து சொல்லி இருக்கீங்க மாப்ளே...நன்றி!
படத்தை கேள்விப்பட்டு பார்த்து அதன் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.... போதி தர்மர் பற்றி பலருக்கும் உண்மை விளங்கும் என நினைக்கிறேன்.
நம்ம தளத்தில்:
ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்
@Philosophy Prabhakaranஇந்துமதக் கம்முனாட்டிகள் மறைத்துவிட்டார்கள் என்று பிரபாகரன் என்ற கம்முனாட்டி சொன்னாப்புல ....என்று வைத்துக்கொள்ளலாமா
தெரியாத தகவல்கள் பல இதில் உள்ளன.
//உச்சக்கட்டமாக போதி தருமரை சீனர்கள் விஷம் வைத்து கொன்றதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்த மாதிரி ஒரு சமாச்சாரத்தை சீன மக்களிடம் சொன்னால் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸுக்கு (போதி) ‘தர்ம’ அடி கொடுக்கக்கூடும்.
.....///மகா குறும்புதான்:) இதைவிட நீ என்கிற கவிதைக்கு ரெவரிக்கு நீங்கபோட்ட கமென்ட்க்கு சிரிச்சி உடனே இங்கபாக்கவந்தேன்!!!:smart!
முதலில் வந்ததால் அதில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை ஆகிவிடாது அல்லவா? விஷம் கொடுக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் நம்பலாம். அப்புறம் கம்முனாட்டி என்றால், விதவை என்று பொருள். ஆகவே அந்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
:-)
இந்தப்படத்தை நானும் Youtube ல பார்த்தேன் பாஸ்!
சீனர்கள் விஷம் கொடுத்ததாகவும், பிறகு அவர் இறந்து (அல்லது ஆழ்துயில் கொண்டு) உயிர்த்து (ஜீசஸ் போல) - (இதுபற்றி ஓஷோ நிறையச் சொல்லி இருக்கிறார்) வந்தபோதுதான் அப்படி செருப்பை மாட்டியிருந்தராம்! இப்படித்தான் நான் வாசித்திருந்தேன்!
முருகதாசின் இன்னோர் திரிப்பு - போதிதர்மன் இந்தியாவிலிருந்து செல்லும்போதே பௌத்தத் துறவிதான்! அவர் படத்தில் காட்டியதுபோல இடையில் போகும் வழியில் காவியுடை தரித்து துறவியாகவில்லை!
இன்னிக்கு ரெண்டுபேரும் ஒரே மேட்டர் தான் போட்டிருக்கோம் .
என்ன நான் அராய்ச்சி கட்டுரை போட்டிருக்கேன் .
நீங்க யாரோ ஆராய்ந்ததை போட்டிருக்கீங்க ...............
ஒரு சீனா காரன் எடுத்த படத்தில் , அவன் நாட்டுகாரனே அடுத்த நாட்டில் இருந்து வந்த வரை விஷம் வைத்து கொன்றான் என்று படம் எடுத்தால் , அந்த நாட்டு கலா சார காவலர்கள் போர் கோடி தூக்கி விடுவார்கள் என்ற பயமோ என்னவோ ? ஆனால் தெரியாத தகவல்கள் பல உங்கள் பதிவில் உள்ளது . THANKS FOR IT
என்னப்பா பிரபாகரா நீங்க கடைசி வரைக்கும் 7ம் அறிவை அவமானப்படுத்துவதை விடப்போவதில்லை போல. அது சரி சிவக்குமார் நீங்க ஏதோ ஒரு மேட்டர்ல ஆஸ்கர் அவார்டு எல்லாம் வாங்கியவர்னு சொல்றாரே. அப்படியா?
தெரியாத பல விஷயங்களை அட்டகாசமாக சொல்லி தந்துட்டீங்க மக்கா நன்றிகள்....!!!
ஒ... கத அப்படி போவுதா? எத்தனை போதி(க்கும்) தர்மர்கள் வந்தாலும் நம்மாளுங்களை திருத்த முடியாது(இவர்கள் மட்டும் வெளிநாட்டு படங்களை சுட்டு படமெடுக்கலாம்). அதே படத்தை நாம (திருட்டு) dvd ல பார்த்தா நம்மள திட்டுவாய்ங்க.
haa haa முருகதாஸ் மாட்னாரா?
நிறைய புதிய தகவல்கள் (குறைந்தது எனக்கு).. ஆனால் அந்த சீனபடத்தை அப்படியே ஒரு வரலாற்று சான்றாக எடுத்துகொள்ளமுடியாது.
சரி உடுங்க பாஸ், ஏதோ தெரியாத – அறியாத முருகதாஸ் தப்பு செஞ்சுட்டார் மன்னிச்சிடுங்க. ‘மனிப்பு’ எனக்கு புடிக்காத ஒரே தமிழ் வார்த்தை ன்னு அவரோட டயலாக்கை நீங்க சொல்லமாட்டிங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முந்தைய வரலாற்றை படமாக்கும் போது மாற்று கருத்துக்கள், மாற்று தகவல்கள் நிச்சயம் விமர்சனமாக கிடைக்கும் என்பது யாவரும் அறிந்ததே.
கொண்டாடப்படவேண்டிய ஒரு தமிழனை பற்றி தாம் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டமைக்கு வருத்தப்பட்டு ஒருவிதமான மனநிலையில் அவர் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ரமணாவின் திரைக்கதையும், இந்தப்பட திரைக்கதையும் ஒப்பிட்டு பார்க்கும்போது.. ஒரு படைப்பாளியாக அவருக்கு நிச்சயமாக பெரிய சறுக்கல், அவர் முழு கவனத்துடன் தான் இந்தப்படத்தை எடுத்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
ரெட் ஜயன்ட் மூவீஸ் செய்த தவறான விளம்பர அணுகுமுறைதான் முருகதாஸ் விமர்சிக்கபடுவதற்க்கு முக்கிய காரணம்.. இதற்குமுன் அவர் மீடியாக்களில் இப்படி பேசியதில்லை.
இருந்தபோதிலும்
கள்ளக்குறிச்சிக்காரனாக நான் முருகதாஸ் குறித்து பெருமையடைகிறேன்.
பல விஷயங்களை தெளிவா எடுத்து சொல்லி இருக்கீங்க...மேலும் கிடைத்தால் சொல்லுங்கள் பிரபா...
பிரபாகரன், குட் ஃபைண்ட்!
எங்கோ இருக்கும் சைனீஸ் தமிழர்களுக்கு உண்மையான வரலாற்றை உள்ளபடி காமிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால் இங்கே அப்படியே மானத்தை அல்லவா வாங்கியிருக்கிறார்கள். இந்த சைனீஸ் வெர்சன் பார்த்தால்... நமது ஏழாம் அறிவின் அபத்த அரசியல் பரப்புரை பல்லிளிக்கிறது.
Shame on us! twisting history as we wish :(
Master of Zen:
http://1337x.org/torrent/266976/0/
@ பாலா
// கம்முனாட்டி என்றால், விதவை என்று பொருள். ஆகவே அந்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் //
அடச்சே தெரியாம போச்சே... மன்னிச்சூ... நான் ஏதோ அர்த்தமில்லாத சென்னை கெட்டவார்த்தைகளில் இதுவும் ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன்...
@ சூனிய விகடன்
// இந்துமதக் கம்முனாட்டிகள் மறைத்துவிட்டார்கள் என்று பிரபாகரன் என்ற கம்முனாட்டி சொன்னாப்புல ....என்று வைத்துக்கொள்ளலாமா //
தாராளமா வச்சிக்கோங்க தல... பாலா பின்னூட்டத்தை படித்துவிட்டு...
@ ஷைலஜா
// இதைவிட நீ என்கிற கவிதைக்கு ரெவரிக்கு நீங்கபோட்ட கமென்ட்க்கு சிரிச்சி உடனே இங்கபாக்கவந்தேன்!!!:smart! //
ஹி... ஹி... அந்த பஞ்சாபி தாபா கமெண்ட் தானே... அதெல்லாம் எப்பவாவது ஃப்லோவுல வரும்... அதை மனசுல வச்சிட்டு நான் பெரிய ஹாஸ்ய எழுத்தாளர்ன்னு நினைச்சு ஏமாந்துடாதீங்க...
@ ஜீ...
// சீனர்கள் விஷம் கொடுத்ததாகவும், பிறகு அவர் இறந்து (அல்லது ஆழ்துயில் கொண்டு) உயிர்த்து (ஜீசஸ் போல) - (இதுபற்றி ஓஷோ நிறையச் சொல்லி இருக்கிறார்) வந்தபோதுதான் அப்படி செருப்பை மாட்டியிருந்தராம்! இப்படித்தான் நான் வாசித்திருந்தேன்!//
ஓஷோ புக்ஸ் எல்லாம் நான் படித்ததில்லை... அதெல்லாம் பெரிய மனுஷங்க படிக்கிரதுன்னு எப்படியோ ஒரு மாயை என் மனதில் குடிபுகுந்துவிட்டது... அதை மாற்ற முடியவில்லை...
// முருகதாசின் இன்னோர் திரிப்பு - போதிதர்மன் இந்தியாவிலிருந்து செல்லும்போதே பௌத்தத் துறவிதான்! அவர் படத்தில் காட்டியதுபோல இடையில் போகும் வழியில் காவியுடை தரித்து துறவியாகவில்லை! //
போதி தர்மன் சீனா சென்றதே பெளத்தத்தை பரப்புவதற்காகத்தான்... அவர் அங்கே சென்ற பொது அங்குள்ள துறவிகள் மனஉறுதி படைத்தவர்களாக இருந்தனராம்... ஆனால் நோஞ்சான்களாக... எனவேதான் போதி தர்மன் அவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலையை கற்றுக்கொடுத்தாராம்... இதுவும் இணையத்தில் படித்தது தான்...
@ அஞ்சா சிங்கம்
// நான் அராய்ச்சி கட்டுரை போட்டிருக்கேன் //
அவ்வ்வ்வ்வ்... இந்தா வாறேன்...
@ ROSHAN , MUMBAI
// ஒரு சீனா காரன் எடுத்த படத்தில் , அவன் நாட்டுகாரனே அடுத்த நாட்டில் இருந்து வந்த வரை விஷம் வைத்து கொன்றான் என்று படம் எடுத்தால் , அந்த நாட்டு கலா சார காவலர்கள் போர் கோடி தூக்கி விடுவார்கள் என்ற பயமோ என்னவோ ? //
valid point...
பிரபாகரா... சத்தமில்லாம நிறைய பேர் நம்ம பதிவை படிச்சிட்டு இருக்காங்க... Be Careful (நான் என்னைச் சொன்னேன்)
@ ஆரூர் முனா செந்திலு
// என்னப்பா பிரபாகரா நீங்க கடைசி வரைக்கும் 7ம் அறிவை அவமானப்படுத்துவதை விடப்போவதில்லை போல. //
சார்... ஏழாம் அறிவு, ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி இணையத்தில் வெளிவந்த ஏராளமான பதிவுகளை படித்தாலே புரிந்துக்கொள்ளலாம்... நீங்கள் தொடர்ந்து விடாப்பிடியாக இருப்பதால் சொல்கிறேன்... நாம் நேரில் சந்திக்கும்போது (ஒருவேளை சந்தித்தால்) இதுகுறித்து விவாதிக்கலாம்...
// அது சரி சிவக்குமார் நீங்க ஏதோ ஒரு மேட்டர்ல ஆஸ்கர் அவார்டு எல்லாம் வாங்கியவர்னு சொல்றாரே. அப்படியா? //
அமைதிக்கான நோபல் பரிசு என்று சொல்வதற்கு பதிலாக அண்ணன் ஆஸ்கர் அவார்டு என்று தவறுதலாக குறிப்பிட்டிருக்கிறார்...
@ திண்டுக்கல் தனபாலன்
// வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி. //
வாங்க சார் கருத்துக்கு நன்றி... உங்கள் ப்ரோபைல் படத்தை தொலைவில் இருந்து பார்க்கும்போது தலைவர் புகைப்படம் மாதிரியே இருக்கிறது...
@ Thekkikattan|தெகா
// பிரபாகரன், குட் ஃபைண்ட்! //
நன்றி சார்... வராதவங்க எல்லாம் வந்திருக்குறத பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு...
@ Arun
// Master of Zen:
http://1337x.org/torrent/266976/0/ //
இதுல Seeds இருக்காது என்று நினைக்கிறேன்...
போதி தர்மர் பற்றிய படத்தை ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறீர்கள் பிரபா. பகிர்வுக்கு நன்றி.
உண்மை புரிகிறது பகிர்வுக்கு நன்றி.
உங்கள் பதிவுகளை 2009 இருந்தே பார்க்க I MEAN வாசிக்க தொடங்கி விட்டேன் . ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை . முதன் முதலில் 2010 இல் எந்திரன் படம் சம்பந்தமாக நீங்கள் இட்ட பதிவில் ( I THING U ASKED SOME QUESTIONS ABT ENTHIRAN அந்த பதிவு இப்போது இல்லை என்று நினைகிறேன் ) நானும் மிக மிக ஆபாசமாக உங்களிடம் கேள்விகள் கேட்டு COMMENT பண்ணுவதாக இருந்தது . ஆனால் கடைசி நேரத்தில் எனக்கே கேவலமாக இருந்ததால் அதை அனுப்பவில்லை . பிறகு தைரிய லட்சிமி என்ற சிறிய பதிவிற்கு நானும் ஒரு பின்னூட்டம் மிக ஆபாசமாக type பண்ணி, கடைசி நேரத்தில் அனுப்பவில்லை. BUT உங்கள் ஒருவரின் பதிவில் தான் தனக்கு ஜால்ரா அடிக்கும் COMMENT களை அனுமதித்து மற்றவர் COMMENT ஐ DELETE பண்ணாமல் , எந்த பின்னூட்டமாக இருந்தாலும் அவர்களை மதித்து REPLY COMMENT ( I THINK 95 % ) செய்கிறீர்கள். அதனால் தான் உங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட தோன்றுகிறது . KEEP IT UP & KEEP GOING . THANX
திரைப்படத்தின் விமர்சனம் அருமை. சில அறியப்படாத தகவலுக்கும் நன்றி.
சீனாகாரன் என்பதற்காக இது உண்மை என கூறிவிடவும் முடியாது.
எது உண்மை என்று இது போல் விஷயங்களில் அறிவது மிகக்கடினம்.
good info:)
@ROSHAN , MUMBAI
ரோஷன்... நான் இதுவரை ஐந்தாறு பதிவுகளை எழுதிய பிறகு அழித்திருக்கிறேன்... சக பதிவரை திட்டி எழுதிய ஒரு இடுகை, காந்தி பற்றி சரியான புரிதல் இல்லாமல் எழுதப்பட்ட இடுகை, விஜயை கிண்டலடித்து ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் பதிவாக போட்டது, அப்புறம் ஆரம்ப காலத்தில் விவரம் தெரியாமல் காப்பி - பேஸ்ட் செய்த சில இடுகைகள்... இவை தவிர வேறு எந்த பதிவையும் நான் அழித்ததில்லை... இனியும் அழிக்க மாட்டேன்...
மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி தைரியலட்சுமி என்ற தலைப்பில் நான் பதிவு எதையும் எழுதியதில்லை...
யாருடைய பின்னூட்டங்களையும் நான் நீக்க விரும்புவதில்லை... ஒருவேளை நீங்கள் என்னை ஆபாசமாக திட்டி பின்னூட்டமிட்டிருந்தால் அது உங்களுக்குத்தான் அவமானம் என்று டெலீட் செய்யாமல் அப்படியே வைத்திருந்திருப்பேன்... சில மாதங்களுக்கு முன்பு Spammers ஒரே பின்னூட்டத்தை பலமுறை காப்பி பேஸ்ட் செய்து போட்டுவந்தனர்... அந்த தொல்லை தாங்காமல் கமெண்ட் மாடரேஷன் வைத்தேன்... இப்போது அந்த தொல்லைகள் குறைந்ததால் பின்னூட்ட பெட்டிக்கு மேலே ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு மாடரேஷனை எடுத்துவிட்டேன்...
தைரிய லட்சிமி என்று நான் சொல்வது,2011 MAY election இல் ADMK POWER க்கு வந்த பின்பு , RAJINI Jaya வை பாராட்டியதால் , நீங்கள் ரஜினியின் பெயரை போடாமல் ஒரு மிக சிறிய பதிவு இட்டீர்கள் . அதை தான் குறிப்பிட்டேன் . எந்திரன் பற்றிய பதிவில் நீங்கள் கேட்ட ஒரு QUESTION எனக்கு நினைவில் உள்ளது . கிளி மான்ஜாரோ பாடலில் ரஜினியின் DANCE பற்றியது அது.
அந்த இடுகைகள் இங்கே இருக்கின்றன...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/06/blog-post_17.html
http://philosophyprabhakaran.blogspot.com/2010/12/blog-post_12.html
உண்மையை உணர்த்தும் பதிவு ... ஏழாம் அறிவு படத்தில் தமிழன் பெருமைக்காக வரலாறு சற்று திரிக்கபபட்டிருப்பது உண்மை ... என்னுடைய ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...பதிவில் இதை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் ... http://pesalamblogalam.blogspot.com/2011/10/blog-post_29.html
master of zen
http://rapidshare.com/files/245928852/Bodhidharma_-_Master_Of_Zen.part01.rar
http://rapidshare.com/files/249512909/Bodhidharma_-_Master_Of_Zen.part02.rar
http://rapidshare.com/files/249529909/Bodhidharma_-_Master_Of_Zen.part03.rar
http://rapidshare.com/files/249650421/Bodhidharma_-_Master_Of_Zen.part04.rar
http://rapidshare.com/files/249697995/Bodhidharma_-_Master_Of_Zen.part05.rar
http://rapidshare.com/files/250234638/Bodhidharma_-_Master_Of_Zen.part06.rar
http://rapidshare.com/files/250593365/Bodhidharma_-_Master_Of_Zen.part07.rar
http://rapidshare.com/files/250792359/Bodhidharma_-_Master_Of_Zen.part08.rar
http://rapidshare.com/files/250799183/Bodhidharma_-_Master_Of_Zen.part09.rar
Post a Comment