அன்புள்ள வலைப்பூவிற்கு,
அதிகாலை சூரியனை பல வருடங்கள் கழித்து பார்த்தேன். நான் பரனூரில் இருக்குமொரு பரங்கியர் நிறுவனத்தில் வேலை செய்வதால் மதியம் இரண்டு மணி ஆபீஸுக்கு காலை பத்தரை மணிக்கு எழுந்தே பழக்கமாகி விட்டது. அன்று மாலை நண்பனின் திருமணத்திற்காக கேரளா செல்லவேண்டி இருந்ததால் அலுவலகத்திற்கு சீக்கிரம் சென்று சீக்கிரம் திரும்ப வேண்டிய கட்டாயம். நிற்க... கேரளத்து கப்பக்கிழங்குகள் பற்றி ஏதோ ஜொள்ளப்போகிறேன் என்று நினைத்தால்... ஐயாம் ஸாரி.
காலை எட்டரை மணி, பீச் ஸ்டேஷன் சந்திப்பு, பலவித முகங்கள், ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு ஃபீலிங். என்னுடன் ஒட்டிப்பிறக்க தவறிய நண்பன் சிவகுமாருக்கு போனினேன்.
“மச்சி... எங்கடா இருக்க...?”
“...”
ரயில் கூவ, “டேய்... (பீப்) எங்கடா இருக்க...?” என்று கொஞ்சம் பாசத்தை கூட்டினேன்.
போன்லைன் கட்டாக, பின்னாலிருந்து என் தோள்பட்டையில் கை வைத்தது அவனாகத்தானே இருக்க முடியும்.
ப்ரைம் டைம் என்பதால் எப்போதும் போல ஜன்னலோர இருக்கை வாய்க்கவில்லை. அன்றைய விலைவாசி உயர்வு அறிக்கையை, அதாங்க நியூஸ்பேப்பரை பிரித்தேன். பார்க் ஸ்டேஷன் வந்ததும் கம்பார்ட்மென்ட்டில் காற்றும் நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் சேர்ந்திருந்தது. என்னைச் சூழ்ந்து சுமார் ஏழெட்டு பேர் ஓசி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது அடுத்த பக்கத்தை திருப்புவதற்கு தர்ம சங்கடமாக இருந்தது.
தற்செயலாக என் கண்கள் நியூஸ்பேப்பருக்கு அப்பால் பாய, அங்கே... எதிர்சீட்டில்... வேறென்ன அழகான பொண்ணுதான். பிங் நிற ஸ்லீவ்லெஸ், நீல நிற ஜீன்ஸ், கொழு கொழுவென்று கொள்ளை அழகாக இருந்தாள், அந்த ரயில்பெட்டியில் அவள் புன்னகையை கண் தெரியாத ரிமோட் கவர் வியாபாரி தவிர அனைவருக்குமே பிடிக்கும். ஒரே ஒரு ஃபீலிங், பொண்ணு பக்கத்துல அவங்க அப்பா உட்கார்ந்திருந்தார். கொஞ்சி கொஞ்சி பேசிய அவளுடைய தமிழ் போதி தர்மருக்கே தானொரு தமிழனென்ற திமிரைத் தரும்.
நானும் சிவாவும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த நிமிடத்தில் செய்தித்தாளில் இருந்த பால் விலை உயர்வு செய்தி கூட எங்களை பதறடிக்கவில்லை. அவள் என் செய்தித்தாளின் பின்புறமிருந்த மன்மோகன் சிங்கை தந்தையிடம் காட்டி ஹர்பஜன் சிங் என்று சொல்ல, எனக்கு குபீரென்று சிரிப்பு பொங்கியது. அதே சமயம், “பிரபாகரா... இதாண்டா சான்ஸ் கோல் போட்ரு...” என மனசாட்சி சொல்ல, அவங்க அப்பாவை முந்திக்கொண்டி அவளுக்கு விளக்கம் கொடுத்தேன்.
சிவா பக்கமிருந்து ஏனோ கருகிய வாடை வீசியது. ஐ டோன்ட் கேர். நானும் செய்தித்தாளில் இருந்த மன்மோகன் சிங் மாதிரி என் விளக்கத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அவளோடு பேசலானேன். அவளும் என்னைப் பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டாள். முன்பின் தெரியாத ஒருத்தியிடம் என்னைப் பற்றிய விவரங்கள் ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவள் பெயரை கேட்டேன், பதிலேதும் சொல்லாமல் தந்தையின் முகத்தை பார்த்தாள். “அடிப்பாவிகளா... இந்த பொண்ணுங்க எல்லாரும் ஏண்டி இப்படி இருக்கீங்க...” என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அவள் தந்தை பர்மிஷன் கொடுப்பது போல ஒரு பார்வை பார்க்க, “ஜனனி...” என்றாள். இப்போது பேக்ரவுண்டில் இளையராஜா தாய் மூகாம்பிகை படப்பாடலை பாடிக்கொண்டிருந்தார். அவள் என்னுடைய பெயரை கேட்காதது செம பல்பு. ஆனாலும் நாங்கள் பேச்சை நிறுத்தவில்லை. பக்கத்திலிருந்து சிவா அவ்வப்போது கோல் போட முயன்றுக்கொண்டிருந்தான். ஆனால் அவளுக்கு என்னிடம் பேசுவதில்தான் ஈடுபாடு.
தாம்பரம் வந்ததும் என் பக்கத்தில் இருந்தவர் இடத்தை காலி செய்ய, அவள் அங்கே உட்கார விரும்புவதாக கோரிக்கை வைத்தாள். பெயர் சொல்லவே யோசித்தவள் பக்கத்தில் உட்கார விழைவது அதிசயம்தான். அப்புறம்தான் அவள் என் பக்கத்தில் உட்கார விரும்பவில்லை, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க விரும்பியிருக்கிறாள் என்று உணர்ந்துக்கொண்டேன். இப்பொழுது என் மனதிற்கு நெருக்கமாக அவள் அமர்ந்திருந்தாள். ஸ்டேஷன்கள் கடந்துக்கொண்டிருந்தது. அவளருகில் இருந்ததினால் சாதா ரயில் கூட மெட்ரோ ரயில் வேகத்தில் பயணிப்பதாக தோன்றியது.
இன்னும் சில நிமிடங்களில் பிரியப் போகிறோம். அவள் முகத்திலும் அதே கவலை தெரிந்தது. திடீரென என் செல்போன் அலற, அந்த சில நிமிடங்களையும் கெடுக்க நினைத்த பாவியை கடிந்துக்கொண்டு கட் பண்ணினேன். அடுத்த நிமிடமே போன் செய்த அந்த பாவியிடம் மனதளவில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. என் போனை பார்த்தவள், “உங்க நம்பர் என்ன...?” என்று அழகு தெறிக்க கேட்டாள். இந்தமுறை இளையராஜா மியூசிக். ஸ்தம்பித்தபடி நானிருக்க, சிவா என்னை உலுக்கி, “மாப்ள... கேக்குறால்ல குடுறா...” என்றான். நான் வாயெல்லாம் பல்லாக அவளுக்கு பதில் சொல்ல, அவள் தந்தையின் பாக்கெட்டில் இருந்து பேப்பர், பேனா எடுத்து குறித்துக்கொண்டாள். சில நொடிகள் மெளனத்திற்குப்பின் “உன் நம்பர் தரமாட்டியா...?” என்று வழிந்தேன். “ம்ம்ம் என்கிட்ட செல்போன் இல்லை... எங்கப்பா நம்பர் தர்றேன் நோட் பண்ணிக்கோங்க...” என்று கொஞ்சலாக சொன்னாள். அவள் சொன்ன நம்பர் சிவா காதில் விழுந்துவிடக்கூடாதென சிவபெருமானை வேண்டிக்கொண்டேன். இந்த நொடி வரைக்கும் அவள் என் பெயரை கேட்காதது புரியாத புதிராகவே இருந்தது. பெயரே தெரியாமல் போன் நம்பர் வாங்கி வைத்திருக்கிறாளே... என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
ரயில் தன்னை பரனூர் ஸ்டேஷனில் நுழைத்துக்கொண்டிருந்தது. “போலாமா ஆபீசர்...” என்று சிவா என் தோளை தட்டி நக்கலடிக்க பல்லைக்கடித்துக்கொண்டு எழுந்தேன். என் அசட்டு புன்னகையை அவளுக்கு பரிசளித்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கினேன். ரயில் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது. இனம் புரியாத சோகத்துடன் அவளைப் பார்த்து கையசைத்தேன். அவளும் பதிலுக்கு கையசைத்தாள். ரயில் என் கண்ணில் இருந்து மறையும் வரை கையசைத்துக்கொண்டிருந்தாள்.
ஜனனி... மறக்கக்கூடிய பெயரா அது...? அவள் முகம்... அந்த கண்கள்... பப்ளிமாஸ் கன்னங்கள்... எல்லாம்தான் எத்தனை அழகு... அவளுடைய கொஞ்சல் குரல்... அவளுடைய முகபாவனைகள்... அடடா, அதிலும் அவள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறிச் சொன்ன அந்த ரைம்ஸ்... ச்சே சான்ஸே இல்லை நாலு வயது எல்.கே.ஜி பெண்ணிடம் இவ்வளவு அறிவா...? என்று அவள் அழகையும் அறிவையும் நினைத்து இன்னும் இன்னும் இன்னும் வியந்துக்கொண்டிருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
45 comments:
பதிவெழுத சரக்கில்லாத போழ்து சிறிதளவு
ஃபார்வர்ட் மெயிலும் ஈயப்படும்...
உபயம்: அருண்பிரசாத்
சிங் super
@Philosophy Prabhakaran
பிரபா - குறளும் நல்ல இருக்கு - பதிவின் குரலும் நல்ல இருக்கு.
siva...?..mmmm..
ஆரம்பத்திலேயே தெரிஞ்சிடுச்சி என்னவோ பல்டி அடிக்கப்போறிங்கன்னு. ஆனால் பிரபா 4 வயதுப் பெண்ணை ரசித்தார் என்று நம்பமுடியவில்லையே...
இப்படிக்கு காலங்காத்தாலே பல்ப்பு வாங்கிய தக்காளி...இருடி இரு!
என்னே ஒரு வில்லத்தனம்))
அந்த சின்ன பொண்ண பாத்தப்புறம் 'ச்சே கொஞ்சம் பிந்தி பிறந்திருக்கலாமே' எண்டு தோன்றியிருக்குமே ))
:-)) sivavaiyum karuka vittadhu vedikkai!!
naalu vayasu ponnukita cel number ketta mudhal aal neeyathan iruppa. idhula enganne siva kumarukku karugiya vada varudhamla.
சிறுகதை போல தான் இருக்கு நைஸ்
பாஸ் சிறுகதையிலும் கலக்குறீங்க பல ஒப்பனைகள் அருமை
//கொஞ்சி கொஞ்சி பேசிய அவளுடைய தமிழ் போதி தர்மருக்கே தானொரு தமிழனென்ற திமிரைத் தரும்.//போதி தருமரை ஒரு வழி பன்னிருவிங்க போல
செல்போன் இல்லாத பெண், அப்பா அருகில் இருக்கும்போதே உங்கள் அருகில் அமர நினைத்தது, கை அசைத்தது இவற்றை வைத்தே கடைசி பாராவில் பல்பு காத்திருக்கிறது என்று எதிர் பார்த்தேன். ஆனால் உங்கள் வர்ணனை அருமை. அடப்பாவிங்களா நாலு வயசு பாப்பாவையும் விட மாட்டிங்களா?
நல்ல ட்விஸ்ட்டுட்ன் கதை சொல்லியிருக்கிறீர்கள். முன்பெல்லாம் பத்திரிகைகளில் ஒரு பக்கக் கதை என்று இப்படி முடிவில் ஜெர்க் அடிக்கும் கதைகளைப் போடுவார்கள். இப்போது வழக்கொழிந்து போய் விட்டது. மீண்டும் நினைவுபடுத்தியது உங்கள் படைப்பு அதை. நன்றி பகிர்வுக்கு!
>>Philosophy Prabhakaran said... [Reply To This Comment]
பதிவெழுத சரக்கில்லாத போழ்து சிறிதளவு
ஃபார்வர்ட் மெயிலும் ஈயப்படும்
hi hi நோட்டட்
//கொஞ்சி கொஞ்சி பேசிய அவளுடைய தமிழ் போதி தர்மருக்கே தானொரு தமிழனென்ற திமிரைத் தரும்//
அட அட அட! கொன்னுட்டீங்க பிரபா! :-)
Lol......
:)
அட போங்கப்பா ஒரு எல்.கே.ஜி. பொண்ணுக்கிட்ட பழகவே இவ்ளோ கஷ்டபடுற பையனுக்கு .
வீட்டுல பொண்ணு பாக்குறாங்க வெளங்கீரும் ................
ச்சே சான்ஸே இல்லை நாலு வயது எல்.கே.ஜி பெண்ணிடம் இவ்வளவு அறிவா...? - palpo palpu..
3 பட promo song.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
படிக்க வச்சு பல்பு கொடுக்குறீயேப்பா
நைஸ்
அதானே பார்த்தேன். என்னடா பிரபாவுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காதே. இன்னைக்கு இப்படி வர்ணிக்குராறேன்னு பார்த்தா நாலு வயசு குழந்தையா அது? ரைட்டு...
இப்படித்தான் முடிக்கப்போகிறீர்கள் என முன்பே முடிவு செய்து விட்டேன்!
எட்றா அந்த அருவாளை, விட்றா வண்டியை சென்னைக்கு....
அழகா ஒரு காதல் ஓவியம் ச்சே ச்சீ காவியம் உருவாகுதுன்னு படிச்சா கிர்ர்ர்ர்ர்ர்ர்.....
யாரு சாமி இவன்...?
:-))
4 வயதுப் பெண்ணை????
அப்படி எங்களையும் உன்கூடவே வரவச்சிட்டப்பா...
இதுமாதிரி தனியா அனுப்பி வைக்ககூடாது..
அடுத்த முறைபோகும்போது அம்மா கூட்டிகிட்டுபோா...
என்ன நான் சொல்றது..
அம்புட்டு பேரும் கோவா இருக்காங்க இதோ அபிட்டு ஆயிக்கே பிரபா...!
இருங்க உங்கள யுனிசெப்ல போட்டு குடுக்குறேன்....
"_குறும்புத்திலகம்!!!
@ ஷர்மி
// ஆரம்பத்திலேயே தெரிஞ்சிடுச்சி என்னவோ பல்டி அடிக்கப்போறிங்கன்னு. ஆனால் பிரபா 4 வயதுப் பெண்ணை ரசித்தார் என்று நம்பமுடியவில்லையே... //
பிரபா நாலையும் ரசிப்பான் நாற்பதையும் ரசிப்பான்... அவன் ரொம்ப கெட்டப்பய மேடம்...
@ நா.மணிவண்ணன்
// naalu vayasu ponnukita cel number ketta mudhal aal neeyathan iruppa //
யோவ் கதைய ஒழுங்கா படியும்... அந்த புள்ள தான் என்கிட்ட நம்பர் கேட்டுச்சு...
@ அஞ்சா சிங்கம்
// வீட்டுல பொண்ணு பாக்குறாங்க வெளங்கீரும் ................ //
ஆத்தீ... இது எப்போ... சொல்லவே இல்லை...
@ N.H.பிரசாத்
// அதானே பார்த்தேன். என்னடா பிரபாவுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காதே. //
யாரோ உங்களுக்கு தவறான தகவல் கொடுத்திருக்காங்க... முன்னாடி ஷர்மி மேடமுக்கு போட்ட பதிலை படிக்கவும்...
@ ஷைலஜா
// "_குறும்புத்திலகம்!!! //
எது இந்த நடிகர் திலகம், புரட்சி திலகம் மாதிரியா... ஏற்கனவே நான் பேருக்கு முன்னாடி தெரியாத்தனமா ஒரு பிலாசபியை போட்டுட்டு படுற அவஸ்தையே போதும் மேடம்...
அமர்க்களம்
//பிரபா நாலையும் ரசிப்பான் நாற்பதையும் ரசிப்பான்... அவன் ரொம்ப கெட்டப்பய மேடம்...//
நல்ல வேளை நாற்பதோட நிறுத்திவிட்டான்...
அடடா வடை போச்சே பிரபா :p
அடப் போய்யா.. காலங்காலமா இதே மாதிரி ஏமாத்திகிட்டு..
Super, Really enjoyed it...... சம கலக்கல்.
நான் கூடவே இருந்த மாதிரி ஒரு பீல் ...., கடைசியில ஒரு ஏமாற்றம் இருந்தாலும் அது சுகமாவும், நிறைவாவும் இருந்துச்சி.
Post a Comment