அன்புள்ள வலைப்பூவிற்கு,
கொல்லிமலை பயண அனுபவங்களின் தொடர்ச்சி...!
வீர மரணம் அடைந்த வல்வில் ஓரி...! |
ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு சேஞ்சுக்காக டீ குடித்துவிட்டு கால்நடையாக ஒரு உலா சென்றோம். அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி சிலையை காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரே ஒரு அம்பு எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு ஆகிய ஐந்து விலங்குகளையும் மாய்க்கும் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. LOL, பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டாரையெல்லாம் விட பெரிய அப்பாட்டாக்கராக இருந்திருப்பார் போல. சிலையில் குதிரை வடிவமைப்பு பற்றி செல்வின் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். அதாவது, முன்னிரண்டு கால்களை தூக்கியபடி இருந்தால் அந்த மன்னர் போரில் வீர மரணம் அடைந்திருக்கிறார். ஒரு காலை மட்டும் தூக்கியபடி இருந்தால் மன்னர் போரில் விழுப்புண் பெற்று சில காலம் கடந்து இறந்திருக்கிறார். குதிரையின் நான்கு கால்களும் தரையில் இருந்தால் மன்னர் இயற்கை மரணம் அடைத்திருக்கிறார். எப்படி இந்த மனுஷன் எப்படி இந்த மனுஷன் அறிவியல், வரலாறு, சரக்கியல் (ஹி.. ஹி... எந்த சரக்குல எதை மிக்ஸ் பண்ணனும்ன்னு சொல்ற படிப்பினை) என்று சகலத்துறைகளின் விவரத்தையும் விரல்நுனியில் வைத்திருக்கிறார் என்று செல்வினின் உலக அறிவைக் கண்டு வியந்தேன்.
பின்னர் கேரவனை எடுத்துக்கொண்டு மலையுச்சியை நோக்கி பயணிக்க கிளம்பினோம். அதற்குள் நேற்றிரவு ஹோட்டலில் தூங்கி வழிந்த முகத்துடன் காணப்பட்ட செம்மேடு ஆண்ட்டி சீவி முடிச்சு சிங்காரிச்சு பொட்டு வச்சு பூ முடிச்சு ஜில்லுன்னு ஜோரா சிக்குன்னு கூலா குறுக்கே வந்தார். அவரைப் பார்த்ததும் டிபன் சாப்பிடும் ஞாபகம் வர அதே ஹோட்டலில் வண்டியை நிறுத்தினோம். சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும்போது செல்வின் நாசூக்காக பேசி செம்மேடு ஆண்ட்டியிடம் இருந்து செல்போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டார்.
அதன்பிறகு வேறெந்த ஆண்ட்டிக்காகவும் வண்டியை நிறுத்தாமல் ஆகாய கங்கை அமைந்திருந்த இடத்திற்கு சென்றோம். அருவியைக் காண ஆயிரம் படிகட்டுகளுக்கு மேல் இறங்க வேண்டியிருக்கும் அதனால் இதை குடித்துவிட்டு செல்வோம் என்று இயற்கையளித்த Red Bull மொடவாட்டு கால் கிழங்கு சூப் வாங்கிக்கொடுத்தார் செல்வின். சற்றே அயர்ச்சியான அந்த படிக்கட்டு பயணம் நாற்பதை தாண்டியவர்களுக்கு உகந்ததல்ல. ஆனால் செல்வின் மட்டும் விடாப்பிடியாக இறங்கியது ஆச்சர்யமாக இருந்தது. What a man...? கீழே இறங்க இறங்க அருவியின் அமானுஷ்ய சத்தம் பேராவலை தூண்டியது. இன்னும் இறங்க அருவிச்சாரல் மேலே தெறிக்க ஆரம்பித்து, குளிர் வதைக்க ஆரம்பித்தது. அருகே நெருங்கிவிட்டோம் ஆனால் அருவியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவ்வளவு வீரியத்துடன் நூற்றியென்பது அடி உயரத்தில் இருந்து பாய்கிறது அருவி. சுமார் நாற்பதடி தூரத்தில் அருவி – அதற்குமேல் அருகே செல்வது ஆபத்தானது. நானோ ஏற்கனவே குளிரில் நனைந்த கோழியாக நின்றிருந்தேன். தயங்கி தயங்கி முன்னேறி அருவியிடம் புறமுதுகு காட்டி சில நிமிடங்கள் நனைந்துவிட்டு நடையை கட்டினேன்.
மேலே இருக்கும் புகைப்படம் நெட்டில் சுட்டது. இந்த இடத்திற்கு கேமராவை எடுத்துச் சென்று படமெடுப்பது சாமான்யமானவர்களுக்கு சாத்தியப்படாத செயல்.
மீண்டும் ஆயிரக்கணக்கான படிகள் ஏறி வந்ததும், நமக்கு மொடவாட்டு கால் கிழங்கு சூப்பெல்லாம் வேலைக்கு ஆகாது, பிராந்தி தான் சரிபட்டு வரும் என்று சில நண்பர்கள் பாட்டிலை திறந்துவிட்டனர். நானும் செல்வினும் மட்டும் நல்லபிள்ளையாக மறுபடி ஒருமுறை சூப் குடித்துவிட்டு அருகில் குளிப்பதற்கு தகுந்தபடி இருந்த மற்றொரு சிறிய அருவியை பார்த்துவிட்டு வந்தோம்.
இதுவும் நெட்டில் சுட்டது தான்...! |
அடுத்தது அறப்பளீஸ்வரர் கோவில். இப்போது சரக்கடித்த நண்பர்கள் நாங்கள் குளித்துவிட்டு தான் கோவிலுக்குள் வருவோம் என்று சென்டிமென்ட்டாக அடம்பிடித்து குளித்துவிட்டு வந்தனர்.
கோவிலின் வரலாறு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. அது உங்கள் பார்வைக்காக: கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.
இந்த கோவிலுக்கு கொல்லிப்பாவை எனும் தெய்வீக சிறப்பு இருப்பதாக குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கொல்லிப்பாவை...? இம்மலைப் பகுதியில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.
மதிய உணவு சாப்பிடுவதற்காக தேடிக் கண்டுபிடித்து வீட்டுச்சூழலில் இருந்த ஒரு ஐயர் மெஸ்ஸுக்கு சென்றோம். இந்தமுறை ஆண்ட்டி யாருமில்லை ஒரு ஆயா தான் பரிமாறினார். மெஸ் வாசலில் போர்டை பார்க்காமல் எங்களுடன் வந்த நண்பர் ஆயாவிடம் ஒரு ஆப்பாயில் போடுங்க என்றார். அப்போது ஆயா பார்த்த பார்வையில் அவருக்கு அடித்த ஆஃப் இறங்கிவிட்டது.
அஞ்சா சிங்கமும் ஐயர் ஓட்டலில் ஆஃப் பாயில் கேட்ட நண்பரும்...! |
அடுத்ததாக இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் குகையை நோக்கி புறப்பட்டோம்...
அடுத்த பாகத்தில்...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
37 comments:
ஐ... நான் தான் முதல்!!
ஒரு தன்னிலை விளக்கம்: ஒரு பயண அனுபவத்தை இப்படி பல பாகங்களாக எழுதுவது என்னுடைய நோக்கமல்ல. இருப்பினும் மொத்தத்தையும் ஒரே பதிவாக போடும் பட்சத்தில் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து ஸ்க்ரோல் பட்டனின் உதவியை நாடக்கூடும். அவ்வாறு செய்யும்போது பதிவின் இடையே தப்பித்தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல கருத்துகள் தவறிப்போகும் அபாயம் உள்ளதால் இப்படி பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது.
ஜஸ்ட் மிஸ்...
பதிவின் இடையே தப்பித்தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல கருத்துகள் தவறிப்போகும் அபாயம் உள்ளதால் "
இல்லை.. ஓரிரண்டு கருத்துக்கள் அல்ல.. பல நல்ல கருத்துகள் கொண்ட தொடராக இது இருக்கிறது.. பல விஷ்யங்கள் எனக்கு புதிய செய்திகள்.. இலக்கியம், ஆன்மீகம் என சூப்பர்.. குதிரை சிலை மேட்டர் வெரி யூஸ்ஃபுல்..
இதை ஒரே பதிவாக போட்டாலும் , நான் வரி விடாமல் படித்திருப்பேன் . அப்படி படித்துதான் அதிகாலை 3.09க்கு பின்னூட்டம் இடுகிறேன்
சென்ற இடுகையில் நான் சொன்ன திருத்தத்தை ஏற்றதை பார்த்தேன். மகிழ்ந்தேன்.
@ பார்வையாளன்
// இல்லை.. ஓரிரண்டு கருத்துக்கள் அல்ல.. பல நல்ல கருத்துகள் கொண்ட தொடராக இது இருக்கிறது.. பல விஷ்யங்கள் எனக்கு புதிய செய்திகள்.. இலக்கியம், ஆன்மீகம் என சூப்பர்.. குதிரை சிலை மேட்டர் வெரி யூஸ்ஃபுல்..
இதை ஒரே பதிவாக போட்டாலும் , நான் வரி விடாமல் படித்திருப்பேன் . அப்படி படித்துதான் அதிகாலை 3.09க்கு பின்னூட்டம் இடுகிறேன் //
நன்றி சார்... கடந்த பாகத்தில் குடித்ததைப் பற்றி மட்டுமே எழுதி கும்மி அடித்தது குற்ற உணர்ச்சியாக இருந்தது... அதனால் இந்த பதிவை கொஞ்சம் சீரியஸாக எழுதினேன்...
யோவ் நீர் கோவிலுக்கெல்லாம் போவீரா....ஹிஹி....கலி முத்திடுச்சி டோய்!
நல்லாத்தான் இருக்கு.
ஆனா கடைசியில என்ன அது?
டைடானிக் போஸா?
அதுதான் சூப்பரா இருக்கு
கடந்த வருட இறுதியில் கொல்லி மலை போயிருந்தோம். நல்ல இடம். ஆனால் கோவிலுக்கு போக நேரம் இல்லை. உங்கள் பதிவு மூலம் கோயில் போயிட்டு வந்துட்டேன்.
நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0
அதென்ன கடைசில சாமி பதிவுல டைடானிக் போஸ்ல படமாம்?:) பிலாசபிக்குத்தான் குறும்புவருமா எங்களுக்குமில்ல?:)
எஸ்.ரா வுக்கு இணையாக நீரும் பயணக் கட்டுரையில் கலக்க வாழ்த்துக்கள். ஆனா பயணக் கட்டுரையை விட இடையில் வரும் டாஸ்மார்க் விஷயங்கள் தான் இன்னும் சுவாரஸ்யப்படுத்துகின்றன.
ஆனா தினமும் எப்படி விடியற்காலை 02.30க்கு சரியாக பதிவிடுகிறீர்கள். உங்கள் அலுவலக நேரம் தான் என்ன ஒய்?
பதிவின் இடையே தப்பித்தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல கருத்துகள் தவறிப்போகும் அபாயம் /
அருமையான
பயணப் பகிர்வுக்கு
பாராட்டுக்கள்..
ஆனால் செல்வின் மட்டும் விடாப்பிடியாக இறங்கியது ஆச்சர்யமாக இருந்தது. What a man...?////////////
////////////////////////////////
என்ன அநியாயம் ஒரு சின்னப்பையனை போட்டு இப்படியா கலாய்க்கிறது...........
>>Philosophy Prabhakaran said... [Reply To This Comment]
ஒரு தன்னிலை விளக்கம்: ஒரு பயண அனுபவத்தை இப்படி பல பாகங்களாக எழுதுவது என்னுடைய நோக்கமல்ல. இருப்பினும் மொத்தத்தையும் ஒரே பதிவாக போடும் பட்சத்தில் படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்து ஸ்க்ரோல் பட்டனின் உதவியை நாடக்கூடும். அவ்வாறு செய்யும்போது பதிவின் இடையே தப்பித்தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல கருத்துகள் தவறிப்போகும் அபாயம் உள்ளதால் இப்படி பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது.
haa haa ஹா ஹா ஆஹா. என்னே ஒரு தன்னிலை விளக்கம்?
சுவாரசியமாய் போகிறது பதிவு உங்கள் பயணம் போலவே தொடருங்கள்
நல்ல சூழ்ச்சி....
சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நல்ல தண்ணிலை விளக்கம்!
யோவ் எங்க ஊரு பக்கம் எல்லாம் வந்து இருக்க போல. ம்ம் என்ஜாய். அருவி போட்டே நிறைய போடலாமே? (அருவில போட்டோ எடுக்கவே இல்லையா?) ஒரு வேளை "தண்ணில" இருந்துடீங்களோ?
யோவ் எங்க ஊரு பக்கம் எல்லாம் வந்து இருக்க போல. ம்ம் என்ஜாய். அருவி போட்டே நிறைய போடலாமே? (அருவில போட்டோ எடுக்கவே இல்லையா?) ஒரு வேளை "தண்ணில" இருந்துடீங்களோ?
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
பயணம் சூப்பரா இருக்கே, குற்றாலம் போனோப்போ தண்ணி பாட்டலையே திறக்க விடாமல் செய்த மூதேவி சிபி ஒழிக...
அலிபாபாவும், 40 திருடர்களும் ஸ்டைல்லயே தலைப்பு வக்கிது தம்பி.
அஞ்சாசிங்கம் ஆம்பளைங்க பின்னாலயே டூயட் பாடிட்டு திரியுதே.....
சுவாரசிய பயண பதிவு...தொடருங்கள்...வாழ்த்துகள்...
ஒரு tour போய்ட்டுவந்துட்டு ஓவர் சீன போட்ற உனக்கு 'அலப்பறையீஸ்வரர்' பட்டம் கொடுத்துற போறாங்க..:):)
அருமையான பதிவு பிரபா...:)
அருமையான பயண கட்டுரை .. நன்றி
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
@ விக்கியுலகம்
// யோவ் நீர் கோவிலுக்கெல்லாம் போவீரா....ஹிஹி....கலி முத்திடுச்சி டோய்! //
ஏன் போகக்கூடாதா...?
@ ஷைலஜா
// அதென்ன கடைசில சாமி பதிவுல டைடானிக் போஸ்ல படமாம்?:) //
என்னது இது சாமி பதிவா சொல்லவே இல்லை... அப்போ பரோட்டா கடை ஆண்ட்டி பத்தி எழுதினதெல்லாம் பக்தியா...?
@ ஆரூர் முனா செந்திலு
// எஸ்.ரா வுக்கு இணையாக நீரும் பயணக் கட்டுரையில் கலக்க வாழ்த்துக்கள். //
தல யாராவது பெரிய மனுஷங்க பாக்குறதுக்கு முன்னாடி இந்த கமெண்ட்டை அழிச்சிட்டு கொல்லைப்புறமா ஓடிடுங்க...
// ஆனா தினமும் எப்படி விடியற்காலை 02.30க்கு சரியாக பதிவிடுகிறீர்கள். உங்கள் அலுவலக நேரம் தான் என்ன ஒய்? //
அலுவலக நேரம் மதியம் இரண்டரையிலிருந்து இரவு பதினோரு மணிவரை... வீட்டிற்கு பன்னிரண்டு மணிக்கு திரும்புவேன்... சிறிது நேரம் நண்பர்களின் பதிவுகளை படித்துவிட்டு இரண்டரை மணிக்கு பதிவை போட்டுவிட்டு தூங்கிவிடுவேன்....
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நல்ல தண்ணிலை விளக்கம்! //
டபுள் மீனிங்கா...?
@ Prabu Krishna
// யோவ் எங்க ஊரு பக்கம் எல்லாம் வந்து இருக்க போல. ம்ம் என்ஜாய். அருவி போட்டே நிறைய போடலாமே? (அருவில போட்டோ எடுக்கவே இல்லையா?) ஒரு வேளை "தண்ணில" இருந்துடீங்களோ? //
தெளிவா தான் இருந்தோம்... நல்லவேளையாக கேமராவை அருவிப்பக்கம் எடுத்துச் செல்லவில்லை... சென்றிருந்தால் கண்டிப்பாக முழுவதுமாக நனைந்திருக்கும்...
@ ! சிவகுமார் !
// அஞ்சாசிங்கம் ஆம்பளைங்க பின்னாலயே டூயட் பாடிட்டு திரியுதே..... //
ம்ஹூம்... 377 தான் சரிபட்டு வரும்...
@ மயிலன்
// ஒரு tour போய்ட்டுவந்துட்டு ஓவர் சீன போட்ற உனக்கு 'அலப்பறையீஸ்வரர்' பட்டம் கொடுத்துற போறாங்க..:):) //
பட்டம் ரொம்ப நல்லா இருக்கு :)
ரொம்பா நாளாச்சு. அறப்பளீச்வரர் பார்த்து. உங்க பதிவு அந்த ஆசையைத் தூண்டியது.
அப்படியே மசூதிகள் பத்தியும் தேவாலயம் பத்தியும் கிண்டல் செய்து எழுத தில் உண்டா?
தனுசின் பொறுக்கி கதாபாத்திரங்களும் கொலைவெறி பாட்டை பிரபலமடைய வைத்த ஏமாற்று வித்தையும்
http://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?cat=8
ஆகாய கங்கையும் கோயிலும் கண்டுகொண்டோம்.
@ விடுதலை கரடி
// அப்படியே மசூதிகள் பத்தியும் தேவாலயம் பத்தியும் கிண்டல் செய்து எழுத தில் உண்டா? //
ஆங்... ஒடனே வந்துடுவீங்களே சொம்பை தூக்கிட்டு... மிஸ்டர் கரடி, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பதிவை படித்துவிட்டு பதிவில் கோவிலைப் பற்றி கிண்டலடித்திருக்கிறேனா என்று சொல்லவும்...
அப்படியே கிண்டலடித்திருந்தாலும் அதனாலென்ன...? நான் யாருடைய டவுசரை கிழிக்க வேண்டுமென்று நான்தான் முடிவு செய்யவேண்டும்...
உங்களுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் டவுசரை கிழிக்க ஆசை என்றால் நீங்களே கிழிக்கலாமே...
Post a Comment