அன்புள்ள வலைப்பூவிற்கு,
நேற்றைய அழுகாச்சி பதிவை மறந்துவிட்டு ஜாலி மூடோடு ஆரம்பியுங்க...!
கடந்த இரண்டு வாரமாக விரும்பியோ விரும்பாமலோ சேனல் மாற்றும்போது CCL எனப்படும் நட்சத்திர கிரிக்கெட்டை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தபோது ரஜினி, அமிதாப்பெல்லாம் விளையாடிய கிரிக்கெட்டோடு ஒப்பிடும்போது இது எவ்வளவோ தேவலை. IPL புண்ணியத்தில் ரொம்பவே ப்ரோபஷனலாக விளையாடுகிறார்கள் அல்லது விளையாடுவது போல நடிக்கிறார்கள். தமிழில் வர்ணனை செய்வதைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆங்கில வர்ணனைகளை அரைகுறையாக புரிந்துக்கொண்டு பார்ப்பதற்கு இது பெட்டர். ஆனால் அப்படியே ஆங்கில வர்ணனையாளர்களின் தொனியை காப்பி அடிப்பதும், அதிக பிரசங்கித்தனமாக பேசுவதும் (என்னைப் போல) சிரிப்பை வரவழைக்கிறது.
இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று ஃபின்லாந்தில் இருந்து இந்திய தலைநகரான டெல்லி நோக்கி பயணித்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. திடீரென வரிசையாக விமானத்திற்குள் நுழைந்த பணிப்பெண்கள் இந்திய குடியரசை போற்றும் (!!!) வண்ணம் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்கள். அதுவும் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் வரும் ஃபேமஸான பாடல், பாலிவுட் ஸ்டைல் நடனம்.
ஆப்பிளின் தமிழ்ப்பெயர் எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்க்கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பழம் ஆப்பிளாகத்தான் இருக்கும். ஆதாம் ஏவாள் சாப்பிட்ட பழமாச்சே. ஆனால் பெரும்பாலும் தமிழிலும் ஆப்பிள் என்றே குறிப்பிடுகின்றனர். தெரிந்துக்கொள்ளுங்கள், ஆப்பிளின் தமிழ்ப்பெயர் அரத்திப்பழம். இன்னும் சில பழங்கள்: ஆரஞ்சு - நரந்தம்பழம், ஸ்ட்ராபெர்ரி – செம்புற்றுப்பழம், WaterMelon – குமட்டிப்பழம் அல்லது தர்பூசணி. ஆங்... பதிவர்கள் முக்கியமா தெரிந்துக்கொள்ள வேண்டியது: லிச்சி – விளச்சிப்பழம்.
நன்றி: HIOX
சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் வேலாயுதம் என்ற ஒலகப்படத்திலிருந்து சில்லாக்ஸ் பாடலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஹீரோயினின் கும்மாங்குத்து ஆட்டத்தோடு பெண் பாடகியின் கிளாசிக் ஸ்டைல் பொருந்தவே இல்லை. நமக்கு அதுவா முக்கியம், ஹன்சிகாவின் வாளிப்பான தோற்றத்தை கண்களால் வாலிபால் ஆடிக்கொண்டிருந்தேன். அம்மணியின் கழுத்தை மட்டும் திருகி எடுத்து வேறு ஏதாவது லட்சணமான முகத்தை பொருத்தினால் சிறப்பாக இருக்குமென எண்ணிக்கொண்டேன். பாடலின் நடுவே ஏதோ ஒரு வரி மிஸ் ஆனது போல் தெரிய, ஆடியோவில் கேட்டுப் பார்த்தேன். “கட்டபொம்மன் பேரன்... கத்திமீசை வீரன்... முத்தம் வச்சு குத்திக்கொல்லு செத்துப்போறேன்...!” இதில் சிகப்பு வரிகள் மட்டும் நீக்கப்பட்டிருந்தன. ஒருவேளை கட்டபொம்மனை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று யாராவது கேஸ் போட்டிருப்பார்களோ...!
ஜொள்ளு:
பழைய கள்ளு...! |
ட்வீட் எடு கொண்டாடு:
Siva_Says siva subramani
எப்போதும் மொக்கைபோடும் காதலியிடம் நாம் அவளைவிடக் குறைவாகவே மொக்குதல் நலம்! இதில் நாம் அவளை மிஞ்சினால்.. அவள் நம்மை மிஞ்சுவாள்! தேவையா??
ubaisaji உபைதுல்லா
மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி # நீங்க இப்ப சொன்னதே மோசமான கருத்துதான்.
jroldmonk ஜூனியர் ஓல்ட்மாங்க்
புடவை விளம்பரத்தில் 'சாத்வீகம்',அருந்ததியில் 'பயானகம்',பாடல் காட்சிகளில் 'ப்ரஜோதகம்' #அனுஷ்கா
losangelesram கலக்கல் கபாலி
டெய்லி ராஜா-ரஹ்மான், வாழ்த்துக்கள்-வாழ்த்துகள் சண்டை, தாங்கல சாமிங்களா!
இந்த கடைசி ட்வீட் சொல்லுற மேட்டர்ல நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். ட்விட்டர், ஃபேஸ்புக், பிளஸ்ன்னு எங்கே போனாலும் விரட்டி விரட்டி அதே மொன்னையான ராஜா vs ரஹ்மான் விவாதம். அதிலும் சில பேர் எது(க்)கெடுத்தாலும் ராஜா ராஜா தான்னு மொக்கையா கமெண்ட் பண்றது கடுப்பை கிளப்புது. நாங்க மட்டும் என்ன ராஜா ராஜா இல்லை, கனிமொழின்னா சொன்னோம். அதேபோல தான் மொழிப்பிரச்சனையும் வாழ்த்துக்கள், வாழ்த்துகள், வாத்துக்கள் எப்படி இருந்தா என்ன, யாருக்கு சொல்றோமோ அவருக்கு புரிஞ்சா போதாதா...???
அறிமுகப்பதிவர்: பூங்கதிர் ஃபோட்டூன்ஸ்
அடல்ட்ஸ் ஒன்லி எச்சரிக்கை. அதையும் தாண்டி உள்ளேபோனால் பாக்யராஜ் புகைப்படம். அதற்கு கீழே “என் தலைவன் கே.பாக்யராஜ் வாழ்க பல நூற்றாண்டு” என்ற வாக்கியம். “ஒரு மாதிரியாகவே” இருந்தது அவரது வலைப்பூ. ஜொள்ளுவதெல்லாம் உண்மை பகுதியில் நடிகர், நடிகைகளை வைத்து மேலோட்டமான இரட்டை அர்த்த ஃபோட்டோ கமெண்ட்ஸ். இன்னொரு பதிவில் அதே மாதிரியான ஃபோட்டோ கமெண்ட்ஸ். இவை தவிர அடல்ட்ஸ் ஒன்லி என்று சொல்லும் அளவிற்கு மோசமாக எதுவும் இல்லை. காதல் கவிதைகள், ட்விட்டர் ஸ்டைல் கமெண்ட்ஸ் என்று எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு.
நம்ம சென்னை:
நறுக்கென்று பத்து பத்து நொடிகளாய் ஆறு ட்ரைலரை எடுத்து வைத்துக்கொண்டு அருமையாய் மெரீனா படத்திற்கு மார்கெட்டிங் செய்கிறார்கள். கூடவே இந்தப்பாடலும்.
கேட்கவும் பார்க்கவும் சென்னைவாசிகளை சிலிர்க்க வைக்கிறது...!
நைஜீரியன் காதல்:
இந்த குறும்படம் சூப்பர் என்று சொல்லமுடியாது. ஆனா, இதுல வர்ற பொண்ணு செம ஃபிகர். சான்ஸே இல்லை.
வழக்கமா மூக்குத்தி போட்ட ஃபிகர்களை ரசிப்பதில்லை. சில சமயங்களில் மட்டும் Exception...!
தன்னுடைய ரசிகனுடன் பவர் ஸ்டார்:
போட்டோ கமெண்ட்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது |
சி(ரி)றப்பு புதிர்ப்போட்டி:
பழம்பெரும் பதிவர் ஒருவரின் சிரிப்பு...! யாருன்னு கண்டுபிடிங்க...?
டிஸ்கி: கண்டுபிடிப்பவர்களுக்கு வெத்தலை பொட்டி ஒன்று பரிசாக வழக்கப்படும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
79 comments:
வி.ரா :))
@ அருண்மொழித்தேவன்
இப்படி மொத ஆளா வந்து பதிலை சொன்னா என்ன அர்த்தம் :) உங்க பின்னூட்டத்தை அப்புறமா பப்ளிஷ் பண்றேன்...
Power star meets universal star. ennadaa idhu kamalukku vandha sodhanai....
அட்டகாச அறிமுகம்..
ராஜா ராஜாதான்.. பவரு பவருதான்.. ஹி ஹி...
சிரிப்பு யாரு நீங்களேவா?
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வருத்தத்தில் இருந்து மீண்டு வந்து கடையை திறந்ததற்கு வாழ்த்துகள்..
மகிழ்ச்சி..
கடை கடையாம் காரணியாம்!...வெல்கம் மாப்ள...விஷயங்கள் பல எனக்கு புதிது & நல்லாவும் இருக்கு!
////இந்த குறும்படம் சூப்பர் என்று சொல்லமுடியாது. ஆனா, இதுல வர்ற பொண்ணு செம ஃபிகர். சான்ஸே இல்லை.////
என்னது செம பிகரா ? ஐயையோ பயபுள்ளைக்கு ஏதோ ஆகிபோச்சு
///வழக்கமா மூக்குத்தி போட்ட ஃபிகர்களை ரசிப்பதில்லை. சில சமயங்களில் மட்டும் Exception...!////
யோவ் உன் exception ல தீய வைக்க .எங்கையா அந்த பொண்ணு மூக்குத்தி போட்ருக்கு
கவலையை மறக்க அதுக்குள்ள wineshop ல புகுந்துட்டீன்களா வாழ்த்துகள்
சமீபத்தில் மோகன்ராம் ccl இல் சொன்ன வர்ணனை "விஷ்ணு இன்னும் அக்கௌன்ட் ஆரம்பிக்கல"ஏதோ வங்கி கணக்கு ஆரம்பிக்கிற மாதி
//நேற்றைய அழுகாச்சி பதிவை மறந்துவிட்டு ஜாலி மூடோடு//
சர்தான்
புண்பட்ட மனசை போதை போட்டு ஆத்துரிக.
ஹிம்....
அறிமுகப்திவர்பூங்கதிர் பத்திரிக்கையில் ஜோக்ஸ் எழுதுபவர், பாக்யாவில் எதிரொலி பகுதியில் எழுதி வருகிறார்
பவர்ஸ்டாருக்கு எங்கிருந்துதான் இந்த மாதிரி சட்டைகள் கிடைக்குதோ ???... என்னாமாய் சிரிக்கிறாரு.....
(என்ன கொடுமை சரவணன் இது)
@ ! சிவகுமார் !
// Power star meets universal star. ennadaa idhu kamalukku vandha sodhanai.... //
உல்டாவா சொல்றீங்க.... இவன்கூடல்லாம் நிக்க வேண்டி இருக்கேன்னு பவரு ஃபீல் பண்ணாராம்....
@ மயிலன்
// சிரிப்பு யாரு நீங்களேவா? //
ம்க்கும்... நானே சிரிச்சிட்டு நானே பழம்பெரும், பிரபல பதிவர்ன்னு அடைமொழியெல்லாம் கொடுத்துப்பேனா... ஏன் இப்படி...?
@ விக்கியுலகம்
// கடை கடையாம் காரணியாம்!...வெல்கம் மாப்ள...விஷயங்கள் பல எனக்கு புதிது & நல்லாவும் இருக்கு! //
நன்றி மாம்ஸ்...
@ நா.மணிவண்ணன்
// என்னது செம பிகரா ? ஐயையோ பயபுள்ளைக்கு ஏதோ ஆகிபோச்சு //
மணி... என்னைப் பத்தி தப்பா பேசுங்க... ஏன் ரசனையை பத்தி தப்பா பேசாதீங்க :)
// யோவ் உன் exception ல தீய வைக்க .எங்கையா அந்த பொண்ணு மூக்குத்தி போட்ருக்கு //
அந்த குறும்படத்தில் 1:50 நிமிடத்தில் பாருங்கள்... மூக்குத்தி பளீரென்று தெரியும்...
@ பிரேம் குமார் .சி
// கவலையை மறக்க அதுக்குள்ள wineshop ல புகுந்துட்டீன்களா வாழ்த்துகள் //
இப்படி வேற ஒன்னு இருக்கா... 2012 ஆரம்பிச்சு இதுவரைக்கும் நான் சரக்கே அடிக்கல... நீங்க ஞாபகப்படுத்திட்டீங்களே... இப்ப கை நடுங்குது பாருங்க...
@ மனசாட்சி
// சர்தான்
புண்பட்ட மனசை போதை போட்டு ஆத்துரிக.
ஹிம்.... //
அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க...
@ சி.பி.செந்தில்குமார்
// அறிமுகப்திவர்பூங்கதிர் பத்திரிக்கையில் ஜோக்ஸ் எழுதுபவர், பாக்யாவில் எதிரொலி பகுதியில் எழுதி வருகிறார் //
ஆமாம் சிபி... அவருடைய ப்ரோபைலில் படித்தேன்... நீங்க, கணேஷ் சார், பூங்கதிர் எல்லோரும் ஒரே செட் போல...
@ Ponchandar
// பவர்ஸ்டாருக்கு எங்கிருந்துதான் இந்த மாதிரி சட்டைகள் கிடைக்குதோ ???... என்னாமாய் சிரிக்கிறாரு.....
(என்ன கொடுமை சரவணன் இது) //
சவுக்கார்பேட்டை வாங்க சாரே...
பல விசயங்களை போட்டு கலக்குறீங்க சார் ! நன்றி !
விந்தை மனிதன் ராஜாராமன் # ஹெ..ஹெ..
வணக்கம் நண்பா,
அருமையான தொகுப்பு,
ஆப்பிளின் தமிழ் பெயர் இன்று தான் அறிந்து கொண்டேன்,.
அறிமுகப்பதிவர், டுவிட்டர், மற்றும் சமூக தளங்களில் சுருக்கப் பயன்பாட்டினால் அர்த்தம் கெடும் சொற்களைப் பற்றிய அலசல், மற்றும், சென்னை பற்றிய பாடல் அனைத்துமே ஒயின் ஹிக்கிற்கு குறை வைக்கலை.
நையீரியன் காதல் ஏலவே பார்த்திட்டேன்.
நன்றி.
அறிமுக பதிவர் பகுதியில் என் வலைப்பூவை பற்றி எழுதி, பெருமை படித்தியது மட்டுமல்லாமல், அதில் செய்ய வெண்டிய மாற்றம் பற்றி என் பதிவிலே கருத்திட்டு அட்வைஸ் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி, சார்!
////கடந்த இரண்டு வாரமாக விரும்பியோ விரும்பாமலோ சேனல் மாற்றும்போது CCL எனப்படும் நட்சத்திர கிரிக்கெட்டை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது/////
இதுக்கு மானாட மயிலாட பார்க்கலாம். தமிழகத்தின் கனவுப்பன்னிகள் குஷ்பக்கா, கலாக்கா, நமீ மூணு பேரும் போட்டி போட்டுட்டு கலங்கறாங்கோ.....
//////திடீரென வரிசையாக விமானத்திற்குள் நுழைந்த பணிப்பெண்கள் இந்திய குடியரசை போற்றும் (!!!) வண்ணம் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்கள். /////
இது ஏர் இந்தியாவா? செத்தானுங்கடா...... (ஏர் இந்தியா பணிப்பெண்களை பார்த்திருக்கீங்கள்ல? அதுக்கு மானாட மயிலாட பாத்து தொலைக்கலாம்)
///– குமட்டிப்பழம் அல்லது தர்பூசணி////
இது கேள்விப்பட்டிருக்கேன், பேமுட்டிக்காய்னு ஒண்ணு சொல்லுவாங்களே அது என்னன்னு தெரியுமா?
/////அம்மணியின் கழுத்தை மட்டும் திருகி எடுத்து வேறு ஏதாவது லட்சணமான முகத்தை பொருத்தினால் சிறப்பாக இருக்குமென எண்ணிக்கொண்டேன்/////
நல்ல வேளை முகத்த மட்டும் பார்த்தீங்க......!
///தன்னுடைய ரசிகனுடன் பவர் ஸ்டார்:////
பவர்ஸ்டார்: சார் உங்களுக்கப்புறமா தமிழ்சினிமாவோட அடுத்த காதல் மன்னன் நான்தான், நல்லா பார்த்துக்கங்க சார்...
கமல்: அண்ணே அப்படியே உங்க கையால பாலிடால் வாங்கி கொடுத்துட்டு போங்க....
/////கண்டுபிடிப்பவர்களுக்கு வெத்தலை பொட்டி ஒன்று பரிசாக வழக்கப்படும்./////
பட்டு ஜிப்பா, ஆம்னி வேன்லாம் யாரு கொடுப்பா?
//தன்னுடைய ரசிகனுடன் பவர் ஸ்டார்://வயத்துல கைவச்சா பணிவுன்னு அர்த்தமா? என்ன பணிவு சார்!
ஒயின் ஷாப்பை மறுபடி திறந்ததுக்கு பியரின் வாழ்த்து(க்)கள்
////பழைய கள்ளு...!///
புதிய ஜொள்ளு....
//பதிவர்கள் முக்கியமா தெரிந்துக்கொள்ள வேண்டியது: லிச்சி – விளச்சிப்பழம்//
விளாம்பழமா பாஸ்?
//அம்மணியின் கழுத்தை மட்டும் திருகி எடுத்து வேறு ஏதாவது லட்சணமான முகத்தை பொருத்தினால் சிறப்பாக இருக்குமென எண்ணிக்கொண்டேன்//
ஆமா பாஸ்! ஆம்பிளத்தனமா இருக்கு முகம்!
//நா.மணிவண்ணன் said...
யோவ் உன் exception ல தீய வைக்க .எங்கையா அந்த பொண்ணு மூக்குத்தி போட்ருக்கு//
அய்யய்யோ மணிக்குக் கண் தெரியல! :-)
///// ஜீ... said...
//நா.மணிவண்ணன் said...
யோவ் உன் exception ல தீய வைக்க .எங்கையா அந்த பொண்ணு மூக்குத்தி போட்ருக்கு//
அய்யய்யோ மணிக்குக் கண் தெரியல! :-)/////
இப்படி ஆளாளுக்கு ஏலம் விட்டுக்கிட்டு இருக்கீங்களேன்னு வேல மெனக்கெட்டு அந்த வீடியோவ ஆபீஸ்ல உக்காந்து இப்பத்தான் பார்த்தேன், ங்கொய்யால வாழ்க்கைல இனி இங்க வந்து எந்த பிகரும் பார்க்க மாட்டேன்யா.... இது எங்க பவர்ஸ்டார் மேல சத்தியம்........
எங்க தல சாம் ஆண்டர்சன் கொஞ்ச கேப் குடுத்துட்டா போதுமே பவர் ஸ்டார் டப்பா சடார்னு கெளம்பிடுரானுங்க!இருங்க!எங்க தல படம் வரட்டும்!
/நா.மணிவண்ணன் said...
யோவ் உன் exception ல தீய வைக்க .எங்கையா அந்த பொண்ணு மூக்குத்தி போட்ருக்கு
Philosophy Prabhakaran said...
அந்த குறும்படத்தில் 1:50 நிமிடத்தில் பாருங்கள்... மூக்குத்தி பளீரென்று தெரியும்...//
ஆமாம்..இது பெரிய அணுகுண்டு ஆராய்ச்சி. டீடெயில் வேற. ரெண்டு பேரும் நேர்ல சிக்குனீங்க.....கொண்டேபுடுவேன்!! ஒழுங்கா ஓடிப்போய்டுங்க.
விந்தை மனிதன் வயித்த கலக்குற மாதிரி ஆடியோல சிரிக்கறாரே..
பழைய கள்ளு பத்தாது பாஸ்! இன்னும் கொஞ்சம் மேலே கீழே எதிர்பார்க்கிறோம்ல! உங்க மேல எதிர்ப்பார்ப்பு ஜாஸ்தி தல!
அப்புறம் பவர் ஸ்டார் பவர் ஸ்டார் தான். அது சரி பக்கத்தில நிக்கிறது யாரு?
அட, பவருஸ்டாரு இப்போ உலக பவராயிருவாறே?
பதிவு கலக்கல்.
பழைய கள்ளு தான் போதை அதிகம். ஆன அது கொஞ்சம் புளிக்கும்......
ஒயின் ஷாப்' ல கள்ளும் விக்கிரிங்க போல!!!!
கமல் என்ன புண்ணியம் செஞ்சாரோ தெரில எங்க பவர் ஸ்டாரோட போடோ எடுக்குற வாய்ப்பு கெடச்சிருக்கு
As usual nice..
NEENGA..KALAKKUNGA..PRABHA...
என்னா பாஸ் பழைய கள்ளு, ரொம்ப பழசா இருக்கே.
அறிமுகப்திவர் பூங்கதிர்க்கு வாழ்த்துகள்...
பவர் ஸ்டார்..-:)
CCL...அதே கருமத்தை நானும் பார்த்தேன்...விக்ராந்த் Sixer நல்லாயிருந்தது...
Coming Soon...
http://faceofchennai.blogspot.in/
வணக்கம் அண்ணா, கலக்கல் பதிவு. முக்கியமாக அந்த பழங்களின் தமிழ் பெயரை பார்த்து சிலிர்த்தேன், கமல நெனைக்க பெருமையா இருக்கு. அவர் தலைவரோட நின்னு ஒரு போட்டோ எடுத்திட்டாரே..
@ திண்டுக்கல் தனபாலன்
// பல விசயங்களை போட்டு கலக்குறீங்க சார் ! நன்றி ! //
நன்றி சார்...
@ கே.ஆர்.பி.செந்தில்
// விந்தை மனிதன் ராஜாராமன் # ஹெ..ஹெ.. //
அண்ணே... இது ஈரோட்டுல பதிவு செஞ்சது... இன்னொரு பதிவரோட ஆடியோ இருக்கு அதை வெளியிட்டா மறுநாளே என் வீட்டுக்கு பத்து பேர் வருவாங்களாம்...
@ நிரூபன்
// வணக்கம் நண்பா,
அருமையான தொகுப்பு,
ஆப்பிளின் தமிழ் பெயர் இன்று தான் அறிந்து கொண்டேன்,.
அறிமுகப்பதிவர், டுவிட்டர், மற்றும் சமூக தளங்களில் சுருக்கப் பயன்பாட்டினால் அர்த்தம் கெடும் சொற்களைப் பற்றிய அலசல், மற்றும், சென்னை பற்றிய பாடல் அனைத்துமே ஒயின் ஹிக்கிற்கு குறை வைக்கலை.
நையீரியன் காதல் ஏலவே பார்த்திட்டேன்.
நன்றி. //
நன்றி நிரூபன்...
@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// அறிமுக பதிவர் பகுதியில் என் வலைப்பூவை பற்றி எழுதி, பெருமை படித்தியது மட்டுமல்லாமல், அதில் செய்ய வெண்டிய மாற்றம் பற்றி என் பதிவிலே கருத்திட்டு அட்வைஸ் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி, சார்! //
follower widget இணைத்ததற்கு நன்றி சார்... என்னை நீங்க சார்ன்னு கூப்பிட வேண்டாம்... நான் உங்க வீட்டு பிள்ளை...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இதுக்கு மானாட மயிலாட பார்க்கலாம். தமிழகத்தின் கனவுப்பன்னிகள் குஷ்பக்கா, கலாக்கா, நமீ மூணு பேரும் போட்டி போட்டுட்டு கலங்கறாங்கோ..... //
ஆமா தல... இரண்டு இடத்துலயும் முத்தின பீசுங்க ஆட்டம்தான்...
// இது ஏர் இந்தியாவா? செத்தானுங்கடா...... (ஏர் இந்தியா பணிப்பெண்களை பார்த்திருக்கீங்கள்ல? அதுக்கு மானாட மயிலாட பாத்து தொலைக்கலாம்) //
ஏர் இந்தியாவா இருந்திருந்தா இது செய்தியே அல்ல... சம்பவம் நடந்தது ஃபின்லாந்து ஏர்வேஸ்... ஆனாலும் பூரா கிழவிகள் தான்...
பார்க்க: http://www.youtube.com/watch?v=mEsnb3kUDAw
// இது கேள்விப்பட்டிருக்கேன், பேமுட்டிக்காய்னு ஒண்ணு சொல்லுவாங்களே அது என்னன்னு தெரியுமா? //
தெரியல தல... முடிஞ்சா பிளஸ் பெருசுங்க கிட்ட கேட்டு சொல்றேன்...
// நல்ல வேளை முகத்த மட்டும் பார்த்தீங்க......! //
எல்லாத்தையும் தான் பார்த்தேன்... மத்தது நல்லாத்தான் இருக்கு... முகம்தான் சரியில்லை...
// பட்டு ஜிப்பா, ஆம்னி வேன்லாம் யாரு கொடுப்பா? //
சம்பந்தப்பட்ட பதிவர் தருவார்...
@ Chilled beers
// வயத்துல கைவச்சா பணிவுன்னு அர்த்தமா? என்ன பணிவு சார்! //
ஆமா தல... ஒரு சாதாரண ரசிகனிடம் கூட பணிவு காட்டுவது ஆச்சர்யம்தான்...
// ஒயின் ஷாப்பை மறுபடி திறந்ததுக்கு பியரின் வாழ்த்து(க்)கள் //
நன்றி தல...
@ ஜீ...
// விளாம்பழமா பாஸ்? //
இல்லை ஜி... அது வேற... அதுக்கு ஆங்கிலத்துல wood appleன்னு பேரு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இப்படி ஆளாளுக்கு ஏலம் விட்டுக்கிட்டு இருக்கீங்களேன்னு வேல மெனக்கெட்டு அந்த வீடியோவ ஆபீஸ்ல உக்காந்து இப்பத்தான் பார்த்தேன், ங்கொய்யால வாழ்க்கைல இனி இங்க வந்து எந்த பிகரும் பார்க்க மாட்டேன்யா.... இது எங்க பவர்ஸ்டார் மேல சத்தியம்........ //
தல... கறுப்பா இருக்குற ஃபிகர்கள் மேல வெறுப்பா இருக்குற உங்களுடைய நிறவெறியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
@ வடக்குபட்டி ராம்சாமி
// எங்க தல சாம் ஆண்டர்சன் கொஞ்ச கேப் குடுத்துட்டா போதுமே பவர் ஸ்டார் டப்பா சடார்னு கெளம்பிடுரானுங்க!இருங்க!எங்க தல படம் வரட்டும்! //
அஜீத் டவுசரை கிழிக்காம விட மாட்டீங்க போல...
@ ! சிவகுமார் !
// ஆமாம்..இது பெரிய அணுகுண்டு ஆராய்ச்சி. டீடெயில் வேற. ரெண்டு பேரும் நேர்ல சிக்குனீங்க.....கொண்டேபுடுவேன்!! ஒழுங்கா ஓடிப்போய்டுங்க. //
சிவா... என்னுடைய ஆராய்ச்சிகளை ஏளனப்படுத்துறதே உங்க வேலையா போச்சு...
என்கிட்ட இப்போதைக்கு 21 ஆராய்ச்சி கட்டுரைகள் கைவசம் இருக்கு... எடுத்து வெளியே விட்டா ஊருல ஒரு பயலும் மிஞ்ச மாட்டீங்க....
// விந்தை மனிதன் வயித்த கலக்குற மாதிரி ஆடியோல சிரிக்கறாரே.. //
வால்யூம் கம்மியா இருக்குன்னு நான் கொஞ்சம் பூஸ்ட் பண்ணேன்...
@ ஜேகே
// பழைய கள்ளு பத்தாது பாஸ்! இன்னும் கொஞ்சம் மேலே கீழே எதிர்பார்க்கிறோம்ல! உங்க மேல எதிர்ப்பார்ப்பு ஜாஸ்தி தல! //
உங்க மோதிரக்கையால ஒரே ஒரு குட்டு வையுங்க ஜேகே...
@ தமிழ்வாசி பிரகாஷ்
// அட, பவருஸ்டாரு இப்போ உலக பவராயிருவாறே? //
உலகமா... அவரு எப்பவோ செவ்வாயெல்லாம் தாண்டியாச்சே...
@ MuratuSingam
// பதிவு கலக்கல். //
நன்றி சிங்கம்...
// ஒயின் ஷாப்' ல கள்ளும் விக்கிரிங்க போல!!!! //
சில நேரங்களில் மட்டும்...
@ மொக்கை முனியாண்டி
// கமல் என்ன புண்ணியம் செஞ்சாரோ தெரில எங்க பவர் ஸ்டாரோட போடோ எடுக்குற வாய்ப்பு கெடச்சிருக்கு //
ரஜினியும் தான் ஆறுவேளை சாமி கும்பிடுறாரு, மூணு வேளை குளிக்குறாரு... ஆனா அவருக்கு கிடைக்கலையே...
@ Sukumar Swaminathan
// As usual nice.. //
நன்றி தல...
@ NAAI-NAKKS
// NEENGA..KALAKKUNGA..PRABHA... //
நன்றி நக்ஸ்...
@ கும்மாச்சி
// என்னா பாஸ் பழைய கள்ளு, ரொம்ப பழசா இருக்கே. //
இதுவே உங்களுக்கு பழசாயிடுச்சா...
@ ரெவெரி
// விக்ராந்த் Sixer நல்லாயிருந்தது... //
அட நான் மிஸ் பண்ணிட்டேனே...
@ The Chennai Pages
// Coming Soon...
http://faceofchennai.blogspot.in/ //
சூப்பர் சாரே...
@ பி.அமல்ராஜ்
// வணக்கம் அண்ணா, கலக்கல் பதிவு. முக்கியமாக அந்த பழங்களின் தமிழ் பெயரை பார்த்து சிலிர்த்தேன், கமல நெனைக்க பெருமையா இருக்கு. அவர் தலைவரோட நின்னு ஒரு போட்டோ எடுத்திட்டாரே.. //
நன்றி அமல்... ஆனா என்னை அண்ணான்னு மட்டும் கூப்பிடாதீங்க ப்ளீஸ்...
@ பி.அமல்ராஜ்
// வணக்கம் அண்ணா, கலக்கல் பதிவு. முக்கியமாக அந்த பழங்களின் தமிழ் பெயரை பார்த்து சிலிர்த்தேன், கமல நெனைக்க பெருமையா இருக்கு. அவர் தலைவரோட நின்னு ஒரு போட்டோ எடுத்திட்டாரே.. //
நன்றி அமல்... ஆனா என்னை அண்ணான்னு மட்டும் கூப்பிடாதீங்க ப்ளீஸ்...
-Good piece of information.
உலகநாயகனுடன் பவர் ஸ்டார் படத்த போட்டு ஏன் இப்படி பயமுறுத்துறீங்க !
-பி.பி!ஆடியோவை பதிவில் இணைப்பது எப்படி என்று சொல்ல
முடியுமா?
-பி.பி!ஆடியோவை பதிவில் இணைப்பது எப்படி என்று சொல்ல
முடியுமா?
@ சமுத்ரா
// -பி.பி!ஆடியோவை பதிவில் இணைப்பது எப்படி என்று சொல்ல
முடியுமா? //
soundcloud கணக்கை உருவாக்கவும் (அ) facebook கணக்கை பயன்படுத்தி லாகின் செய்யவும்...
ஆடியோவை ரெகார்ட் செய்யுங்கள் (அ) ஏற்கனவே ரெகார்ட் செய்து வைத்திருப்பதை பதிவேற்றுங்கள்...
பொருத்தமான பெயர், எச்சச்ச, எச்சச்ச கொடுத்தபிறகு உங்கள் ஆடியோவிற்கு மேல் Share என்ற பட்டன் இருக்கும்...
அதை அழுத்தி Blogger என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்துவிட வேண்டாம்...
"edit your widget" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "Copy and paste the widget code to your website" என்ற வாக்கியத்திற்கு கீழே உள்ள இணைப்பை ctrl + a கொடுத்து select செய்துகொள்ளவும்...
அதன்பின்பு Blogger dashboard - new post - edit html ஆப்ஷனுக்கு சென்று எந்த இடத்தில் ஆடியோவை இணைக்க வேண்டுமோ அங்கே பேஸ்ட் செய்துக்கொள்ளவும்...
அருமையான பதிவு பிரபா. குறிப்பாக 'பவர் ஸ்டாருடன் உலக நாயகன்' போட்டோ சூப்பர். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment