அன்புள்ள வலைப்பூவிற்கு,
முதல் வாரம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தபோது நான் அந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே இல்லை. அடுத்தவாரம் நுழைந்தால் திரும்பிய திசையெல்லாம்... “இது உங்க டைரியா பாருங்க!” இதுதான் புத்தகத்தின் தலைப்பு. எழுத்தாளர் பெயர் பொறிக்கப்படவேண்டிய இடத்தில் முந்தாநாள் புத்தம் புதிதாக வெளியான “நண்பன்” பட டைட்டில், அதே ஸ்டைலில். அட்டைப்படத்தின் பேக்ரவுண்டில் ரஃப் நோட்டு கிறுக்கல்கள். சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் புத்தகங்களை மார்கெட்டிங் செய்வதில் ஒன் ஆஃப் தி கில்லாடீஸ். ப்ளீஸ்... இந்த புத்தகத்தை வாங்காதீங்கன்னு சொல்லி சொல்லியே நிறைய பேரை வாங்க வச்சவங்க. கையில் எடுத்து புரட்டிப் பார்த்தேன். பின் அட்டைப்பத்தியை படித்துப் பார்த்தேன். ஏதோ ஒரு உணர்ச்சிப்பெருக்கில் கடை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு நகர்ந்தேன்.
மதியம் கடந்து புத்தகங்களை வாங்க ஆரம்பித்த நேரத்தில் இது உங்க டைரியா பாருங்க மனதை ஆக்கிரமித்திருந்தது. ஏனோ அதன் அட்டைப்படத்தில் அறிவியல் = வரலாறு என்று அச்சடிக்கப்பட்டிருந்தது நினைவிற்கு வந்து சென்றது. நேராக குறுக்குவழியில் (!!!) புகுந்து F15 ஸ்டாலுக்கு நடையை கட்டினேன். திருநெல்வேலி சந்தையில் சீனிமிட்டாய் வைத்திருப்பது போல மேற்படி புத்தகத்தை அடுக்கி வைத்திருந்தார்கள். இந்தமுறை புரட்டிப்பார்க்கவில்லை. பணிப்பெண்ணிடம் பில் போடச்சொன்னேன். என் நீளமான தலைமயிரைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடியே பில் போட்டார். வீட்ல கஷ்டம்... முடி வெட்டக்கூட காசில்லைன்னு நினைச்சிருப்பாங்க போல. அருகிலிருந்த நடுத்தரம், இந்த புஸ்தகத்தை எழுதினவர் வர்றாரு பாருங்க என்று வலப்புறமாக ஜாடை காட்டினார். அங்கே திரும்பிப் பார்த்தால்...
நம்முடைய படைப்பு ஒருவரால் வாங்கப்படுகிறது என்கிற பெருமிதத்தோடு சிரித்தபடி நடந்து வந்துக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். என்னைவிடவும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் முன்பு பிறந்திருக்கக்கூடும். கை குலுக்கினேன். எனக்கு உங்களைப் பத்தியோ உங்க புத்தகத்தைப் பத்தியோ சத்தியமா எதுவும் தெரியாது. ஆனா, உங்க மார்கெட்டிங் திறமையும், அட்டைப்பட க்ரியேட்டிவிட்டியும் தான் இந்த புத்தகத்தை வாங்க வைத்தது என்றேன். அவரும் அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து எழுதியதாகச் சொன்னார். கூடவே, புத்தகம் படித்துவிட்டு கருத்து தெரிவிக்கவும் சொன்னார். ம்ம்ம் சரியென்று மையமாக தலையாட்டிவிட்டு கிளம்பினேன்.
முதல் சில பக்கங்களில் தான் தெரிந்துக்கொண்டேன் என்னிடம் காலையில் பேசியவர் பதிப்பாளரின் மகனாம். அதானே பார்த்தேன்... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இந்த “அதானே பார்த்தேன்...” என்ற வார்த்தைக்குள் மட்டும் ஆயிரம் வலிகள், இயலாமைகள். திறமையிருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் திறமையில்லாதவர்கள் ரெகமண்டேஷனில் முன்னேறுவதையும் பார்த்து பொங்கி வழியும் பொங்கல். நிற்க, புத்தகத்தையே படிக்காமல் எப்படி அந்த இளைஞனை திறமையில்லாதவன்னு முடிவு செய்யலாம். புத்தகத்தை தொடர்ந்தேன். ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை மச்சான் இதுதான் முதல் உபதலைப்பு. மொத்தம் ஒன்பது. முதாலவதை படித்து முடித்ததும்தான் என் கையில் தவழ்ந்துக்கொண்டிருப்பது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதையே உணர்ந்தேன்.
கடந்த பத்தியில் குறிப்பிட்ட அந்த முதல் சிறுகதை ஒன்றும் ஆஹா ஓஹோ வகையில்லை. “காலையில் எழுந்தேன்... காபி குடித்தேன்...” வகையறா தான். என்ன, காரை லவட்டுவது எப்படி என்று வேண்டுமானால் தெரிந்துக்கொள்ளலாம். அடுத்த கதையை வாசித்துக்கொண்டிருந்த வேளையில் முதல்முறையாக புத்தகத்தின் உள்ளே ஒரு வாக்கியம் எண்ணை ஈர்த்தது. மணி ஒன்பதே கால் என்று சொல்ல வந்த வரிகள், “எண்கள் இல்லாத என் கைக்கடிகாரத்தில் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் எங்களுக்குள் வாய்க்கால் தகராறு என்பதுபோல் வெவ்வேறு திசையைப் பார்த்துக்கொண்டு ஒன்றிற்கொன்று செங்குத்தாய் நின்றுக்கொண்டிருந்தன...” (குறிப்பு: அதற்கு முந்தய பத்தியில் மணி எட்டு ஐம்பது என்று குறிப்பிடப்பட்டிருந்தது). மெல்லிய புன்னகையோடு தொடர்ந்து புரட்டலானேன்.
மூன்றாவது கதையில் அறிவியல் = வரலாறு கோட்பாடு விளக்கப்பட்டிருந்தது. இப்படியொரு கோட்பாட்டை படித்தவுடன் நம்ம அஞ்சாசிங்கம் செல்வின் ஞாபகம் வராமல் இருக்குமா...? வந்து தொலைத்தார். ஆனால் புத்தகத்தை முடிக்கும்வரையில் அடிக்கடி செல்வின் நினைவுக்கு வருவார் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பக்கங்களை புரட்ட, சேத்தன் பகத் ஸ்டைல் நினைவிற்கு வந்தது. அதையே தமிழில் பின்பற்றியிருக்கிறார்கள். இளமை + புரட்சியாக கதைகள் நகர்ந்தன. கூடவே ஆன்மிகம், வரலாறு எல்லாம். காளான் சூப் தன்னுடைய வேலையைக் காட்ட தொடங்கியிருந்தது.
ஐந்தாவது கதையான பொறி இயல் நாயகனின் பெயர் பிரபாகரன். அவனும் பொறியியல் படிக்கிறான். அதுவும் மின்னணு மற்றும் தொலைதொடர்பியல். சினிமா பற்றிய அந்தக்கதைக்கு, அழகன், தாவணிக்கனவுகள், வறுமையின் நிறம் சிகப்பு என்று சினிமா வசனங்களாலும் காட்சிகளாலும் உயிர்ப்பூட்டிய விதம் அழகு. ஆனாலென்ன, அடுத்ததாக படித்த தங்க மீன் கதைதான் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிவதாய் நெருடுகிறது.
ஆண் பாவம் கதை மட்டுமில்லாமல் பெரும்பாலான கதைகள் அல்லது கதைகளினூடே வரும் சம்பவங்கள் ஐடி கம்பெனிக்களை சுற்றியே வலம் வந்தன. அந்த வகையில் ஆண் பாவம் ஐடி காதல் என்றால் என்னவென்று சொல்கிறது. அதைப் பற்றி தனி புத்தகமே போடலாம். ஒரு வீணையின் நாட்குறிப்புகள் என்ற கதையில் ஆவி என்ற வார்த்தையை கடக்கும்போது மணி அதிகாலை நான்கு. பேய்ங்க வாக்கிங் போற நேரமாச்சே... மனதை திடப்படுத்திக்கொண்டு படித்தால் அட “அதுவும்” ஒரு சமூகப்பொறட்சி கதைதான்.
கடைசியாக படித்ததாலோ, அல்லது புத்தகத்தில் கடைசியாக இருந்ததாலோ அல்லாமல் இப்படிக்குக் காதல் என்ற கதையை அதிகம் பிடித்திருந்தது. அதற்கு காரணம் காதல். முந்தய கதைகளைப் போல வெட்டியாக புரட்சி பேசாமல் நானுண்டு என் காதலுண்டு என்று என் மனதிற்குள் கர்சீப் போட்டு இடம் பிடித்தது கடைசி சிறுகதை. (ஆனா அதுக்காக 167-வது பக்கத்தில் கல்யாணம் என்ற வார்த்தையை கால்யானம் என்று அச்சடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது). பொண்ணுங்க மனசும் அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டின் பேப்பரும் ஒன்னு...! ரெண்டையும் புரிஞ்சிக்கவே முடியாது.
சினிமாவாக இருந்தாலும் சரி, புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் பதிவுலகமாக இருந்தாலும் திறமை மட்டும் இருந்தால் வெற்றி தேடி வராது. சொல்லப்போனால் அதீத திறமையும் தேவையில்லை. பாதி திறமை மீதி மார்கெட்டிங். இதுவே புத்தகக்கடையில் சீனி மிட்டாய் மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்த “இது உங்க டைரியா பாருங்க” என்ற புத்தகத்தின் வெற்றிக்கு சாட்சி. ஆங்... புத்தகத்தின் தலைப்பை மறுபடி டைப்பியதும் தான் நினைவுக்கு வருகிறது. இந்தப்புத்தகத்தை டைரியோடு ஒப்பிடும் அளவிற்கு ஒன்றும் மனதை உரசிச்செல்லவில்லை.ஆனாலும் இந்த தலைப்பு வைக்கக் காரணம், அதுவும் மேலே கூறிய மீதி சமாச்சாரம் தான்.
“சில சமயம் உப்புமா கூட டேஸ்டா தான் இருக்கும்...!”
தலைப்பு: இது உங்க டைரியா பாருங்க!
விலை: ரூ.100/-
கிடைக்குமிடம்: ஸ்டால் எண் F15 (சென்னை புத்தகக் கண்காட்சியில்)
அலுவலக முகவரி:
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,
தி.நகர், சென்னை -17.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
35 comments:
என்னா ஸ்பீடு பிரபா! வாங்கின புத்தகத்தை அதுக்குள்ள படிச்சு முடிச்சு, ரசிககிற மாதிரி விமர்சனமும் போட்டுட்டிங்களே...
விளக்கமான பதிவு! பாராட்டுக்கள். இனிய உழவர் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அண்ணே அப்படியே நமக்கும் அந்த புக்க வாங்கி பார்சல் பண்ணுங்க . அந்த பணிப்பெண் எதுக்காக உங்கள பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சாங்கன்னு கேளுங்க .
பொங்கல் வாழ்த்துக்கள் அன்பரே
//என் நீளமான தலைமயிரைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடியே பில் போட்டார். வீட்ல கஷ்டம்... முடி வெட்டக்கூட காசில்லைன்னு நினைச்சிருப்பாங்க போல//உங்க நகைச்சுவை கலந்த வரிகள் ரசிக்க வைக்கின்றன அருமை
Nice review prabha.
எந்திரன்ல ரஜினி புக்ஸ புரட்டி புரட்டி படிப்பாரே? அதே மாதிரி தானா நீங்களும்? என்ன ஒரு ஸ்பீடு?
பொங்கல் வாழ்த்துக்கள் தல !!!
//இந்த “அதானே பார்த்தேன்...” என்ற வார்த்தைக்குள் மட்டும் ஆயிரம் வலிகள், இயலாமைகள். //
விடுங்க பாஸு...
//காளான் சூப் தன்னுடைய வேலையைக் காட்ட தொடங்கியிருந்தது.//
ஹி ஹி...பட், அதையும் மீறி படிச்சு முடிசுடிங்கலே..
//கடைசியாக படித்ததாலோ, அல்லது புத்தகத்தில் கடைசியாக இருந்ததாலோ அல்லாமல் இப்படிக்குக் காதல் என்ற கதையை அதிகம் பிடித்திருந்தது. //
ஒரே வரி விமர்சனம்...
//இந்தப்புத்தகத்தை டைரியோடு ஒப்பிடும் அளவிற்கு ஒன்றும் மனதை உரசிச்செல்லவில்லை.//
இந்த எழவுக்குதான் நா டைரியே எழுதுறது இல்ல...
ஹ்ம்ம்..ஆசிரியருக்கும் இந்த பதிவோட லிங்க்க அனுப்பிவையுங்க...:))
முன்பெல்லாம் என்னை புத்தக விழாவிற்கு அழைப்பீர்கள்.. இப்போது சிவாவை மட்டும் அழைக்கிறீர்கள்.. ம்ம்ம்ம்ம்... ஏன் இந்த புறக்கணிப்பு ????
பதிவு அருமை.. வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
பிரபா,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.
PONGAL ...VAZHUTHUKKAL..
innum enna enna book vangininga?
Diary of the Wimpy Kid என்று ஆங்கிலத்தில் சிறுவர்களுக்குள் பிரபலமாகியிருக்கும் புத்தகத்தை அப்படியே காப்பியடிச்சு அட்டைப்படம் செய்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்கள் அதே பேரில் படமாகக் கூட வெளிவந்தன.. கதை விமர்சனங்கள் சூப்பர்..
பொங்கல் வாழ்த்துக்கள்.
+ and - rendum kalantha arockiamaana vimarsanam. Eppadi Thiramai+Marketing = Success a? Ithuthan formulae vaa? Purinjikitten Thala. Unga written style nallarukku Sago.
உண்மை தான் நண்பா ! தகரமாய் இருந்தாலும் தங்கள் போல விற்பதே திறமை! " ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க " கூட பெயர் இம்ப்ரெஸ் செய்த அளவிற்கு உள்ளே சரக்கு இல்லை ...!
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
தலைமுடி நிறைய வெச்சிருந்தா இப்படியெல்லாம் எஃபக்ட் கிடைக்குமா?
////நா.மணிவண்ணன் said...
அண்ணே அப்படியே நமக்கும் அந்த புக்க வாங்கி பார்சல் பண்ணுங்க . அந்த பணிப்பெண் எதுக்காக உங்கள பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சாங்கன்னு கேளுங்க ./////
அவருக்குத்தான் தெரியுமே........ டெய்லி வந்து வந்து சும்மா நோட்டம் விட்டுட்டு போறத பாத்து ஈ ஆளு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்னு சிரிச்சிருக்கும்.....
பொண்ணுங்க மனசும் அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டின் பேப்பரும் ஒன்னு...! ரெண்டையும் புரிஞ்சிக்கவே முடியாது.
EPPADINGA INTHA MAATHIRI UVAMAIKAL
KODUKKA MUTIKIRATHU ?
//////எனக்கு உங்களைப் பத்தியோ உங்க புத்தகத்தைப் பத்தியோ சத்தியமா எதுவும் தெரியாது. ஆனா, உங்க மார்கெட்டிங் திறமையும், அட்டைப்பட க்ரியேட்டிவிட்டியும் தான் இந்த புத்தகத்தை வாங்க வைத்தது என்றேன். ///////
நீங்க சொல்றத பார்த்தா நம்ம அண்ணன் ஜேகே ரித்தீஷ் படம் எல்லாத்தையும் ஒண்ணுவிடாம பாத்திருப்பீங்க போல தெரியுதே?
///“சில சமயம் உப்புமா கூட டேஸ்டா தான் இருக்கும்...!”///
சில பேருக்கு உப்புமாதான் புடிக்கும்....
////என் நீளமான தலைமயிரைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தபடியே பில் போட்டார். /////
வெளங்கிருச்சுய்யா......
@ நா.மணிவண்ணன்
// அண்ணே அப்படியே நமக்கும் அந்த புக்க வாங்கி பார்சல் பண்ணுங்க . அந்த பணிப்பெண் எதுக்காக உங்கள பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சாங்கன்னு கேளுங்க . //
மணி... சரோஜா தேவி புத்தகமெல்லாம் அங்கே கிடைக்காதே...
@ ஹாலிவுட்ரசிகன்
// எந்திரன்ல ரஜினி புக்ஸ புரட்டி புரட்டி படிப்பாரே? அதே மாதிரி தானா நீங்களும்? என்ன ஒரு ஸ்பீடு? //
நீங்க வேற... மூணு மணிநேரம் ஆச்சு தல...
@ மயிலன்
// ஹி ஹி...பட், அதையும் மீறி படிச்சு முடிசுடிங்கலே.. //
ஹி... ஹி... அது புத்தகத்தின் இடையே வரும் ஒரு சொல்லாடல்...
// ஹ்ம்ம்..ஆசிரியருக்கும் இந்த பதிவோட லிங்க்க அனுப்பிவையுங்க...:)) //
அனுப்பியிருக்கேன்... படிச்சா சந்தோஷப்படுவாரா அல்லது வருத்தப்படுவாரான்னு தெரியல...
@ பார்வையாளன்
// முன்பெல்லாம் என்னை புத்தக விழாவிற்கு அழைப்பீர்கள்.. இப்போது சிவாவை மட்டும் அழைக்கிறீர்கள்.. ம்ம்ம்ம்ம்... ஏன் இந்த புறக்கணிப்பு ???? //
தல... நான் போட்ட கோலை எனக்கே போடுறீங்களா...
@ Elamparuthi
// innum enna enna book vangininga? //
பொறுமையா சொல்றேன் தல...
@ ஷர்மி
// Diary of the Wimpy Kid என்று ஆங்கிலத்தில் சிறுவர்களுக்குள் பிரபலமாகியிருக்கும் புத்தகத்தை அப்படியே காப்பியடிச்சு அட்டைப்படம் செய்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்கள் அதே பேரில் படமாகக் கூட வெளிவந்தன.. கதை விமர்சனங்கள் சூப்பர்.. //
நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் அட்டைப்படம் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் இருக்கும்... இதைப்போலவே அதுவும் என்னைக் கவரத்தான் செய்தது....
@ ananthu
// " ப்ளீஸ் ! இந்த புத்தகத்தை வாங்காதீங்க " கூட பெயர் இம்ப்ரெஸ் செய்த அளவிற்கு உள்ளே சரக்கு இல்லை ...! //
அவ்வளவு சொல்லியும் கேட்காம வாங்கினீங்களா... நீங்க ரொம்ப மோசம்...
@ சென்னை பித்தன்
// இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள். //
பார்த்தேன்... மகிழ்ந்தேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// சில பேருக்கு உப்புமாதான் புடிக்கும்.... //
இதுவும் புத்தகத்தின் இடையே வரும் ஒரு சொல்லாடல் தான் தல...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// வெளங்கிருச்சுய்யா...... //
தலைமயிருன்னு தெளிவா தானே தல போட்டிருக்கேன்...
@ ABUBAKKAR K M
// EPPADINGA INTHA MAATHIRI UVAMAIKAL //
நீங்க அண்ணா யூனிவர்சிட்டி கொஸ்டின் பேப்பர் பார்த்தீங்கன்னா தன்னால வரும்...
subtitle போட்டு ஒரிஜினல் பாத்தே ரெண்டு வருஷம் ஆகுது!இப்ப போய் சின்ன புள்ள தனமா ஓங்க டைரியான்னு கேக்குற!
Post a Comment