27 February 2012

பிரபா ஒயின்ஷாப் – 27022012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

2012 பாக்யராஜ்
பழைய பாக்யராஜ் படங்கள் மீது எனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு. தற்காலத்தில் பிரகாஷ் ராஜ் தயாரித்து வெளியிடும் படங்களைப் போலவே மெளனமாய் மனதிற்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக தாவணிக் கனவுகள், தூறல் நின்னு போச்சு போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இன்று போய் நாளை வா படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட குடும்பத்தோடு பார்ப்போம். சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் ஒரு பின்னணி இசை என்னை பல மாதங்களுக்கு படுத்தி எடுத்தது. அந்த வரிசையில் கடந்த வாரத்தில் ஒருநாள், டார்லிங்... டார்லிங்... டார்லிங்... படத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு தலைக்காதலின் சுகமான சுமையை மிகச்சரியாக சொன்ன ஒருசில படங்களுள் அதுவும் ஒன்று எனச் சொல்லலாம். க்ளைமாக்ஸில் பாக்யராஜும் பூர்ணிமாவும் இணைகிறார்கள் என்பதைக் காட்டிலும் படம்நெடுக காட்டிய ஒருதலைக்காதல் உணர்வுகள்தான் அதன் வெற்றி.

ஒரு சின்ன நெருடல், கடைசி சில நிமிடங்களில் சுமனின் தந்தை சுமனிடம் சொல்கிறார், “நானும் உங்கம்மாவும் கிட்டத்தட்ட 40 yearsக்கு மேல தாம்பத்தியம் நடத்தியிருக்கோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை. அந்த அளவுக்கு செக்ஸுக்கு ஒரு புனிதமான மரியாதை கொடுத்தோம்”. எனக்கு புரியல – லைட் ஆஃப் பண்றதுக்கும், புனிதமான மரியாதைக்கும் என்ன தொடர்பு. அப்ப, லைட் போட்டுட்டு பண்றவங்க எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களா...??? Come On Speak...! நம்ம செக்ஸ் வறட்சி மிகுந்த நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...!
பள்ளிப்பருவத்தில் எனக்கு சுத்தமாக பிடிக்காத பாடம் சமூக அறிவியல்தான். ஏன்தான் இப்படி ஒரு சப்ஜெக்ட் என்று அலுத்துக்கொள்வேன். அதற்கு தகுந்தாற்போல, எனக்கு சமூக அறிவியல் வகுப்பெடுத்த ஒருவர் கூட உருப்படி கிடையாது. யாராவது ஒரு மாணவனை எழுப்பி ஒவ்வொரு பத்தியாக படிக்கச்சொல்லி அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்வதே அவர்களின் தலையாய கடமையாக இருந்தது. தேர்வுகளின்போது சமூக அறிவியலை குறைந்தபட்சம் மனப்பாடம் கூட செய்யாமல் அப்போது வந்த புதிய படத்தின் கதையையோ அல்லது வரலாற்று பகடியாகவோ எழுதி வைப்பேன். முட்டாள் ஆசிரியர்கள் கையெழுத்தை மட்டும் பார்த்து மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள். இதையெல்லாம் இப்பொழுது நினைக்கும்போது நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று வருந்தத்தோன்றுகிறது. இந்த ப்ளாஷ்பேக்கின் காரணி, நேற்று மதனுடைய வந்தார்கள் வென்றார்கள் படிக்க ஆரம்பித்தேன். மீண்டும் பள்ளிக்கூட மாணவனாக மாறி வரலாறு படிக்க ஆசையாக இருக்கிறது.

சிங்கார சென்னை
நீண்ட நாட்களுக்குப் பிறகு பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றிருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் வெறும் டப்பாத்தண்ணிக்கும், கள்ளக்காதலுக்கும் மட்டுமே இடமாக இருந்த எலியட்ஸ் பீச். இப்போது திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. அப்பளம், பஜ்ஜி, சோளம், வேர்க்கடலை, குல்பி என ஒரு ரவுண்டு கட்டிவிட்டு, வகைதொகை இல்லாமல் சைட்டு அடித்துவிட்டு மனமகிழ்வோடு திரும்பினோம்.

லிட்டில் ராஸ்கல்ஸ்
தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் மிகவும் அரிதானவை. குழந்தைகள் படம் என்று சொல்லிக்கொண்டு வரும் சில படங்களில் கூட பக்கவாட்டில் ஹீரோ – ஹீரோயின் டூயட் பாடுவார்கள். சமீபத்தில் தமிழில் வெளியான குழந்தைகள் படமான வண்ணத்துப்பூச்சி கூட முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துக்கொண்டால் பசங்க திரைப்படத்தை குழந்தைகள் படமென்று சொல்லலாம். ஆனால் மேலைநாடுகளில் இதுபோன்ற படங்களுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில் கடந்த வாரம் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பெயரில் The Little Rascals படம் பார்த்தேன். யாராவது உங்களை திட்டினாலோ, ஒருமையில் அழைத்தாலோ உங்களுக்கு கோபம் வரும். அதையே குழந்தை செய்தால் என்ன அழகா பேசுறான் பாருன்னு அள்ளியெடுத்து அணைத்துக்கொள்வோம். அதுதான் இந்தப்படத்தின் உயிர்நாடி. குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு சேட்டையும் செம க்யூட்.

ஜொள்ளு:
தூங்காம நான் காணும் சொப்பனமே...! உனக்காக என் மேனி அர்ப்பணமே...!!
ட்வீட் எடு கொண்டாடு:
உலகின் அழகான ஒருவரை கட்டி தழுவ முற்படும் போதெல்லாம்... கண்ணாடியில் முட்டிக் கொள்கிறேன்! :)

மின்வெட்டைக் கண்டித்து இருவர் தீக்குளிப்பு: திரு. தீக்குச்சி சம்பவ இடத்திலேயே மரணம். திரு. மெழுகுவர்த்தியின் உயிர் ஊசல்.

யாருமில்லாத தனிமையிலும் கூட சுகம் பெருவதற்கு ஒரு வழியை உருவாக்கியது கடவுள்தான் என்கிறான் நண்பன் #கடவுள் மட்டும் இத கேட்டா செத்துருவார்.

இது வரை யாரையும் காதலிக்காதவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றூ அர்த்தம்

எங்கேயும் எப்போதும்
சுஜாதா, ஹாய் மதன், பாலகுமாரன், பாக்யராஜ், அரசு, அந்துமணி, குருவியார், ஆந்தையார், கழுகார் இன்னபிற ஆர்கள் வரிசையில் நம்ம சிபியாரும் இணைந்திருக்கிறார். சிபியுடைய லொள்ளு கம் ஜொள்ளு கேள்வி பதில்கள் செக்ஷன் தான் இந்த வலைப்பூவின் ஸ்பெஷாலிடி. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. நாளை புத்தகமாக உங்கள் மடியில் தவழும் அபாயமும் இருக்கிறது.

சில சாம்பிள்கள்...

பிகர், கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?
கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன-னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகளை என் பிளாக்ல ட்வீட்ஸ்ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும், அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை.

திவுகள் வெளியிட்டுருக்கிறீர்கள் தெரியும் ? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்?
ஒரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ ரெடி; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி..

மீபத்துல பரபரப்பா பேசப்படுற பதிவுலக கோஷ்டிபிளவை பற்றி உங்கள் கருத்து என்ன.? பதிவர்கள் இரண்டு குருப்பா பிரிஞ்சு இருக்கறது உண்மையா.?
ய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட் போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும் வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா  கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...!
சின்ன வயதில் இருந்தே பெரிய இழப்புகள், வலிகள் எதுவுமில்லாமல் சுகமாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவன் நான். அதனால் சில வலிகள் புரிவதில்லை. சமீபத்தில் நண்பன் ஒருவன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் கண்கள் நீயே பாடலை பற்றி ஃபீலிங்காக பேசினான். நான் வழக்கம் போல யப்பா நாங்க பார்க்காத அம்மா சென்டிமென்ட்டா என்று நக்கலடித்து விட்டு வந்தேன்.

வீடு திரும்பியதும் அந்த பாடலை நண்பனோடு பொருத்தி மறுமுறை கேட்டேன், உருகினேன். நீங்களும் கேளுங்க, முடிஞ்சா வீடியோ இல்லாம, கண்களை மூடியபடி...!

பதிவர் புதிர் – 02

பதிவர் புதிர் ??? by Nr Prabhakaran
இந்த ஒலிப்பதிவில் கர்ஜிக்கும் ஒலக லெவல் பதிவர் யாரென்று கண்டுபிடிங்க பார்ப்போம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

44 comments:

Jayadev Das said...

மாப்பு, இதைப் பத்தி உண்மையா தெரிஞ்சுக்கணும்னா நாலஞ்சு பெரிசுங்களைப் புடிச்சு கேட்டா தெரியும். [எங்க தாத்தா என்னோட cousins கிட்ட அந்த மாதிரி பல உண்மைகளைப் போட்டு உடச்சிருக்கார், ஆனா இது சம்பந்தமா இல்லை.] அவங்க காலத்துல கரெண்டே இல்லியே மாப்பு, இப்போ இருக்குற மாதிரி நூறு வாட் பல்புங்க நாலஞ்சு போட்டா பளிச்சுன்னு தெரியும் [நான் Room-மைச் சொன்னேன்] விளக்கு வெளிச்சத்துல என்ன மாப்பு தெரியும். மேலும் முந்தைய தலைமுறையில் கொஞ்சம் orthodox ஆகவும் இருந்திருக்கிறார்கள். கொஞ்சம் எசகு பிசகாக நடந்து கொண்டால் போடா சரிதான் என்று போன கேசுகளும் உண்டு.

Jayadev Das said...

\\பள்ளிப்பருவத்தில் எனக்கு சுத்தமாக பிடிக்காத பாடம் சமூக அறிவியல்தான். \\ Same blood. அந்த வயதில் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நமது மனம் விசாலமாகி இருக்காது. டப்பா அடிக்கணும், therefore girls நல்ல மார்க்கு இதுல வாங்குவாங்க.

Jayadev Das said...

\\இதையெல்லாம் இப்பொழுது நினைக்கும்போது நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று வருந்தத்தோன்றுகிறது. \\ சரியாகவே எழுதியிருந்தாலும் அதே ரிசல்டுதான், ஒரு எழவும் புரியாது. நீ செய்தது சரிதான் மாப்பு.

Jayadev Das said...

\\அப்பளம், பஜ்ஜி, சோளம், வேர்க்கடலை, குல்பி என ஒரு ரவுண்டு கட்டிவிட்டு, வகைதொகை இல்லாமல் சைட்டு அடித்துவிட்டு மனமகிழ்வோடு திரும்பினோம்.\\ வெளியில போனா எண்ணையில் பொறித்த அயிட்டங்களை பார்த்தால் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மாப்பு, ஊருபட்ட வியாதிகள் அதனால்தான் வருதாம்.

Jayadev Das said...

\\கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துக்கொண்டால் பசங்க திரைப்படத்தை குழந்தைகள் படமென்று சொல்லலாம்.\\நானும் இந்தப் படத்தைக் கொஞ்சம் பார்த்தேன், பெரியவங்க கேரக்டருக்குப் பதில் பொடிப் பசங்களைப் போட்டுவிட்டு மற்றபடி காட்சிகள் வசனங்கள் எல்லாம் பெரியவங்க மாதிரியே போட்டு எடுத்திருக்காங்க, what is so special about this movie?

Jayadev Das said...

\\ஜொள்ளு:\\ சில்க் பீக்ல இருந்தப்போ, நமக்கு அவ்வளவா விவரம் இல்ல மாப்பு, மூஞ்சிக்கு கீழே எதுவும் கவனிக்கத் தோனது, என்னடா இந்த மூஞ்சிக்கு இப்படி அலையுறாங்களேன்னு தோணும், இப்போ in the later years பார்க்கும் போது தான் எல்லாமே விளங்குது.........what a structure....

Unknown said...

தாம்பத்தியம் ,செக்ஸ் வறட்சி எல்லாம் பத்தி பேசுறீங்க ,நீங்க ரொம்ப பெரிய ஆளுங்கன்னே ,ஆனா எனக்கு ஒரு டவுட் ங்கன்னே ,இந்த மாதிரி matter அனுபவம் இருந்தான் பேசமுடியும் ,அது சரி உண்மைய யாரு கண்டா?

ஆனா ஒண்ணுன்னே இருவது வருசத்துக்கு முன்னாடி வந்த படத்த இப்ப உள்ள சூழலுக்கு பொருத்தி பார்க்குறீங்களே உங்களுக்கு மூளையோ மூளைண்ணே

Prem S said...

//முட்டாள் ஆசிரியர்கள் கையெழுத்தை மட்டும் பார்த்து மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள். //அவ்வளவு சூப்பரா உங்க கையெழுத்து ம்ம்

வைகை said...

“நானும் உங்கம்மாவும் கிட்டத்தட்ட 40 yearsக்கு மேல தாம்பத்தியம் நடத்தியிருக்கோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை. அந்த அளவுக்கு செக்ஸுக்கு ஒரு புனிதமான மரியாதை கொடுத்தோம்”. எனக்கு புரியல – லைட் ஆஃப் பண்றதுக்கும், புனிதமான மரியாதைக்கும் என்ன தொடர்பு. அப்ப, லைட் போட்டுட்டு பண்றவங்க எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்களா...??? Come On Speak...! நம்ம செக்ஸ் வறட்சி மிகுந்த நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சாம்பிள்///////



பாஸ்.. இது சொல்லவந்தத சிம்பாலிக்கா சொல்றது... ஒரு தந்தை மகனிடம் நானும் உங்க அம்மாவும் ஒரு நாள்கூட செக்ஸ் இல்லாம இருந்ததில்லைன்னு சொன்னா எவ்ளோ கேவலமா இருக்கு பாருங்க? 80 களில் விளக்கை அணைக்கட்டுமா என்பது ஒரு கோட் வோர்ட்.. அதைதான் பாக்யராஜ் அப்பிடி ஒரு வசனத்தை வைத்தார்.. இதுல வறட்சி எங்க பாஸ் வந்தது? :-))

Unknown said...

புத்தகமா கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். உடனடியாக தொடர்புகொள்ளவும்.

*condition aply

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாக்யராஜ் படங்கள் பார்க்க எப்பவும் நல்லாருக்கும்..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தக் காலத்துல வெளிச்சத்துல அதெல்லாம் பண்றது தப்புன்னு நெனச்சாங்களோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நேற்று மதனுடைய வந்தார்கள் வென்றார்கள் படிக்க ஆரம்பித்தேன்.////

பா.ரா. வோட நிலமெல்லாம் ரத்தமும் படிச்சு பாருங்க....... (அப்பாடா நானும் பொஸ்தகம் படிச்சிருக்கேன்னு இந்த ஒலகத்துக்கு காட்டியாச்சு..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ஒரு காலத்தில் வெறும் டப்பாத்தண்ணிக்கும், கள்ளக்காதலுக்கும் மட்டுமே இடமாக இருந்த எலியட்ஸ் பீச்./////

யோவ் இது எப்ப? ஹைகிளாஸ் ஜொள்ளுன்னா எலியட்ஸ் பீச்சுதான் எப்பவுமே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தூங்காம நான் காணும் சொப்பனமே...! உனக்காக என் மேனி அர்ப்பணமே...!!////

ஆண்டியார் பாடுகிறார்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சிபியுடைய லொள்ளு கம் ஜொள்ளு கேள்வி பதில்கள் செக்ஷன் தான் இந்த வலைப்பூவின் ஸ்பெஷாலிடி. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கின்றன.//////

அடங்கொன்னியா..... இது எப்ப...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அதனால நான் என்ன சொல்றேன்னா கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!///////

சே தப்பிச்சிட்டாருய்யா....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! மற்றவையெல்லாம் வழக்கம் போல் கலக்கல் நண்பரே !

கோகுல் said...

நான் தமிழ்ல படிச்சதால எங்க ஸ்கூல்ல மொழிபெயர்ப்பு வேலை மிச்சம்.
அப்ப எழுத ஆரம்பிச்சது இப்ப பிளாக் வரை வந்து நிக்குது.உங்க எழுத்து திறமை வளர மறைமுகமா உதவியிருக்காங்க.இதுக்காகவே ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லனும்.

ஜேகே said...

// “நானும் உங்கம்மாவும் கிட்டத்தட்ட 40 yearsக்கு மேல தாம்பத்தியம் நடத்தியிருக்கோம். ஆனா எங்க பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை. அந்த அளவுக்கு செக்ஸுக்கு ஒரு புனிதமான மரியாதை கொடுத்தோம்//

அவ்வளவு புனிதமா பாஸ் ... சாமிக்கு கூட வீட்டில விளக்கு வைக்கமாட்டாங்க போல!

டக்கால்டி said...

பாஸ்.. இது சொல்லவந்தத சிம்பாலிக்கா சொல்றது... ஒரு தந்தை மகனிடம் நானும் உங்க அம்மாவும் ஒரு நாள்கூட செக்ஸ் இல்லாம இருந்ததில்லைன்னு சொன்னா எவ்ளோ கேவலமா இருக்கு பாருங்க? 80 களில் விளக்கை அணைக்கட்டுமா என்பது ஒரு கோட் வோர்ட்.. அதைதான் பாக்யராஜ் அப்பிடி ஒரு வசனத்தை வைத்தார்.. இதுல வறட்சி எங்க பாஸ் வந்தது? :-))


-- Good one. I agree this Prabha.
Except that point, it is a good cocktail altogether.

Anonymous said...

http://www.jaffnamuslimbase.com/2012/02/blog-post_4551.html

http://www.jaffnamuslimbase.com/2012/02/blog-post_4551.html

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

என்ன சார் நீங்க... ஒரு அருமையான பதிவில் இப்படி பண்ணிட்டிங்களே... 'சுஜாதா, ஹாய் மதன், பாலகுமாரன், பாக்யராஜ், அரசு, அந்துமணி, குருவியார், ஆந்தையார், கழுகார் இன்னபிற ஆர்கள் வரிசையில் நம்ம சிபியாரும் இணைந்திருக்கிறார்'இது ரொம்ப ஓவர் சார். சிபியும் என் நண்பர் தான். அதுக்காக இதில் எனக்கு உடன்பாடில்லை. இதை சிபியே ஏற்றுகொள்ள மாட்டார். மற்ற படி எங்க தலைவர் பற்றி நீங்கள் கூறியிருப்பதும், பன்னிக்குட்டி சார் கூறி இருப்பதும் 100-க்கு 100 சரியானவையே!

Anonymous said...

CP is a joke producing machine...அவர் முழு நேரமும் இதை செய்தால் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டிடுவார்...நல்லாயிருந்தது பிரபா...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
தல... எங்க வீட்டு பெருசுகள் யாரும் இப்போது பேசக்கூடிய நிலையில் இல்லை... மொத்தத்துல நாம இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்தங்கியபடி தான் இருக்கிறோம்...

// Same blood. அந்த வயதில் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நமது மனம் விசாலமாகி இருக்காது. டப்பா அடிக்கணும், therefore girls நல்ல மார்க்கு இதுல வாங்குவாங்க. //

பொண்ணுங்க டப்பா அடிக்கிறதுல அப்பாடாக்கருங்கன்னு நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க...

// சரியாகவே எழுதியிருந்தாலும் அதே ரிசல்டுதான், ஒரு எழவும் புரியாது. நீ செய்தது சரிதான் மாப்பு. //

ஆமாம் தல... BE படிக்கும்போது இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்... கஷ்டப்பட்டு படிக்கும் பாடங்களில் அரியர், போனால் போகட்டும் என்று அசால்ட்டாக எழுதிய பாடங்கள் பாஸ்...

// வெளியில போனா எண்ணையில் பொறித்த அயிட்டங்களை பார்த்தால் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மாப்பு, ஊருபட்ட வியாதிகள் அதனால்தான் வருதாம். //

இந்தமாதிரி எல்லாம் சாப்பாடு விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறதில்லை சார்... பல் இருக்கும்போதே பக்கோடா சாப்பிட்டுக்கணும்...

// நானும் இந்தப் படத்தைக் கொஞ்சம் பார்த்தேன், பெரியவங்க கேரக்டருக்குப் பதில் பொடிப் பசங்களைப் போட்டுவிட்டு மற்றபடி காட்சிகள் வசனங்கள் எல்லாம் பெரியவங்க மாதிரியே போட்டு எடுத்திருக்காங்க, what is so special about this movie? //

அதான் சார் ஸ்பெஷல்... பதிவில் அதுபற்றி எழுதியிருக்கும் வரிகளை மறுமுறை படிக்கவும்...

// சில்க் பீக்ல இருந்தப்போ, நமக்கு அவ்வளவா விவரம் இல்ல மாப்பு, மூஞ்சிக்கு கீழே எதுவும் கவனிக்கத் தோனது, என்னடா இந்த மூஞ்சிக்கு இப்படி அலையுறாங்களேன்னு தோணும், இப்போ in the later years பார்க்கும் போது தான் எல்லாமே விளங்குது.........what a structure.... //

ஸ்ட்ரக் மட்டுமில்லை சார்... சிலுக்கு முகமும் அழகுதான்... அந்த கண்ணைப் பாருங்க...

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// தாம்பத்தியம் ,செக்ஸ் வறட்சி எல்லாம் பத்தி பேசுறீங்க ,நீங்க ரொம்ப பெரிய ஆளுங்கன்னே ,ஆனா எனக்கு ஒரு டவுட் ங்கன்னே ,இந்த மாதிரி matter அனுபவம் இருந்தான் பேசமுடியும் ,அது சரி உண்மைய யாரு கண்டா? //

மணி, இங்க எல்லாமே theoritical knowledge தான்...

// ஆனா ஒண்ணுன்னே இருவது வருசத்துக்கு முன்னாடி வந்த படத்த இப்ப உள்ள சூழலுக்கு பொருத்தி பார்க்குறீங்களே உங்களுக்கு மூளையோ மூளைண்ணே //

யோவ் கலாய்க்கிறியா... இருபது வருஷத்துக்கு முன்னாடியே அது அபத்தமான டயலாக் தான்... ஏன் இருபது வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல யாரும் போட்டதே இல்லையா...?

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// அவ்வளவு சூப்பரா உங்க கையெழுத்து ம்ம் //

ஆமாம் தல உண்மைதான்...

Philosophy Prabhakaran said...

@ வைகை
நீங்க வசனத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்...

பெட்ரூம்ல ஒருநாள் கூட லைட் எரிஞ்சதில்லை என்ற வாக்கியம் ஒரு நாள்கூட செக்ஸ் இல்லாம இருந்ததில்லைன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்கு அந்த இடத்தில் பயன்படுத்தவில்லை...

சுமன் ஹீரோயின் குளிக்கறதை சாவித்துவாரம் வழியா பார்த்துவிடுகிறார்... அதை தெரிந்துக்கொள்ளும் தந்தை, நாங்க லைட் கூட போடாம புனிதமா நடந்துக்கொண்டோம்... ஆனா எங்களுக்கு பிறந்த நீ இவ்வளவு கேவலமாக நடந்துக்கொண்டாயே என்று கேட்கிறார்...

பார்க்க:
http://www.youtube.com/watch?v=ahd02S-CFbg

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// புத்தகமா கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். உடனடியாக தொடர்புகொள்ளவும்.

*condition aply //

அண்ணே... மொதல்ல ஆண்வெஜ் ஆண்டு பெண்வெஜ், கப்புகாத்து இரண்டையும் புத்தகமா வெளியிடுங்க... அதுக்கப்புறமா சிபியின் அஜால் குஜால் விமர்சனங்கள், அட்டு ஃபிகர் சொன்ன பிட்டு கவிதைகள் ஆகியவற்றை வெளியிடலாம்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அந்தக் காலத்துல வெளிச்சத்துல அதெல்லாம் பண்றது தப்புன்னு நெனச்சாங்களோ? //

இருக்கலாம்... ஆனா அது ரொம்ப கஷ்டமாச்சே... இது பற்றிய ஒரு ஆராய்ச்சியே இருக்கு... இருந்தாலும் இதுக்கு மேல டீப்பா போக வேண்டாம்ன்னு பாக்குறேன்...

// பா.ரா. வோட நிலமெல்லாம் ரத்தமும் படிச்சு பாருங்க....... (அப்பாடா நானும் பொஸ்தகம் படிச்சிருக்கேன்னு இந்த ஒலகத்துக்கு காட்டியாச்சு..) //

ப.ரான்னா பன்னிக்குட்டி ராம்சாமி தானே...

// யோவ் இது எப்ப? ஹைகிளாஸ் ஜொள்ளுன்னா எலியட்ஸ் பீச்சுதான் எப்பவுமே..... //

அப்படியா... ஒருவேளை அது மால்கள் இல்லாத கற்காலமா இருந்திருக்கும்... எங்க டீன் ஏஜுல ஹை கிளாஸ் மக்கள் ஸ்பென்சர், இஸ்பஹாணி தான்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஆண்டியார் பாடுகிறார்...... //

என்னய்யா ஆண்ட்டியை பார்த்து பாடினா ஆண்டியார் பாடுகிறார்ன்னு சொல்றீங்க...

// அடங்கொன்னியா..... இது எப்ப...? //

ரொம்ப நாளா நடக்குது போல... நான் இப்பதான் பார்த்தேன்...

Philosophy Prabhakaran said...

@ திண்டுக்கல் தனபாலன்
// நல்ல விமர்சனம் ! மற்றவையெல்லாம் வழக்கம் போல் கலக்கல் நண்பரே ! //

நன்றி DD சார்...

Philosophy Prabhakaran said...

@ கோகுல்
// அப்ப எழுத ஆரம்பிச்சது இப்ப பிளாக் வரை வந்து நிக்குது.உங்க எழுத்து திறமை வளர மறைமுகமா உதவியிருக்காங்க.இதுக்காகவே ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லனும். //

என்னுடைய எழுதும் பழக்கம் தூண்டப்பட்டது பத்தாம் வகுப்புக்கு அப்புறம்தான்னு நினைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ ஜேகே
// அவ்வளவு புனிதமா பாஸ் ... சாமிக்கு கூட வீட்டில விளக்கு வைக்கமாட்டாங்க போல! //

ஆமா தெரியாதா... பெட்ரூம்ல சாமி போட்டோஸ் நாட் அலவ்டு... ஏன்னா அது தப்பு நடக்குற ரூம்... ஆனா லைட்டும் போட மாட்டோம்... ஏன்னா அது புனிதமான புளியோதரை...

Philosophy Prabhakaran said...

@ டக்கால்டி
// Good one. I agree this Prabha.
Except that point, it is a good cocktail altogether. //

நீங்களும் அதே பதிலை படித்துக்கொள்ளுங்கள் தல...

Philosophy Prabhakaran said...

@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// என்ன சார் நீங்க... ஒரு அருமையான பதிவில் இப்படி பண்ணிட்டிங்களே... 'சுஜாதா, ஹாய் மதன், பாலகுமாரன், பாக்யராஜ், அரசு, அந்துமணி, குருவியார், ஆந்தையார், கழுகார் இன்னபிற ஆர்கள் வரிசையில் நம்ம சிபியாரும் இணைந்திருக்கிறார்'இது ரொம்ப ஓவர் சார். சிபியும் என் நண்பர் தான். அதுக்காக இதில் எனக்கு உடன்பாடில்லை. இதை சிபியே ஏற்றுகொள்ள மாட்டார். மற்ற படி எங்க தலைவர் பற்றி நீங்கள் கூறியிருப்பதும், பன்னிக்குட்டி சார் கூறி இருப்பதும் 100-க்கு 100 சரியானவையே! //

சார் அது பத்திரிகைகளில் பதில் எழுதுபவர்களின் வரிசை தானே தவிர ஒப்பீடு அல்ல... அப்படிப்பார்த்தால் சுஜாதாவும் குருவியாரும் ஒன்றா...

Philosophy Prabhakaran said...

@ ரெவெரி
// CP is a joke producing machine...அவர் முழு நேரமும் இதை செய்தால் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டிடுவார்...நல்லாயிருந்தது பிரபா... //

நாங்க அதுக்கு உல்டாவா சொல்றோம்... சிபி பன்னிக்குட்டி மாதிரி வதவதன்னு ஜோக் எழுதி தள்ளாம பொறுமையா எழுதினா இன்னும் தரமான ஜோக்குகள் கிடைக்கும்...

விஸ்வநாத் said...

// யாராவது ஒரு மாணவனை எழுப்பி ஒவ்வொரு பத்தியாக படிக்கச்சொல்லி அதை தமிழில் மொழிபெயர்த்து //

அப்ப நீங்க தமிழ் மீடியம்ல படிக்கலே ?

விஸ்வநாத் said...

// முட்டாள் ஆசிரியர்கள் கையெழுத்தை மட்டும் பார்த்து மதிப்பெண்கள் போட்டு விடுவார்கள் //


போடுறது முட்டை. அதுக்கு எதுக்கு படிக்கனும்கரே;

விஸ்வநாத் said...

// மீண்டும் பள்ளிக்கூட மாணவனாக மாறி //

பாஸ், நம்ப கிளாஸ்லேய நீங்க தா பாஸ் இந்த மாதிரி BOOKS எல்லா படிக்கறீங்க.

விஸ்வநாத் said...

// கடந்த வாரம் நண்பர் ஒருவரின் சிபாரிசின் பெயரில் The Little Rascals படம் பார்த்தேன்.//

ஒ அதுக்குத்தா LIFCO dictionary (ஓசி) வாங்கிட்டு போனீங்க

Philosophy Prabhakaran said...

@ விஸ்வநாத்
தல... நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்சிட்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க... நீங்க என் கிளாஸ்ல படிச்சதா எனக்கு ஞாபகமில்லை...

விஸ்வநாத் said...

// தல... நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்சிட்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க... நீங்க என் கிளாஸ்ல படிச்சதா எனக்கு ஞாபகமில்லை... //


எல்லா ஒரே குட்டைல ஊறுன மட்டைதா தல;
நானு ஸ்கூல் பாய் (முன்னாலே);
நீங்கலு ஸ்கூல் பாய் (முன்னாலே);
நானு பையே; நீங்கலு பைய;
நானு ப்ளாக் வச்சிருக்கே;
நீங்கலு ப்ளாக் வச்சிருக்கீங்க;
அரசியல்ல இதெல்ல ஜகஜம் பிரதர்;

Philosophy Prabhakaran said...

@ விஸ்வநாத்
ரைட்டு... ஓகே தல...