அன்புள்ள வலைப்பூவிற்கு,
அட்டகாசமான விளம்பர யுக்தி, அமானுஷ்ய கதையமைப்பு, 3D தொழில்நுட்பம் இவையனைத்தும் இணைந்து என்னை திரையரங்கிற்கு இழுத்துச்சென்றன. நேர விரயத்தை தவிர்க்க உள்ளூர் திரையரங்குகளே சிறந்தவை. இருப்பினும் நிச்சயம் 3D கண்ணாடி தரமாட்டார்கள் என்று தயங்கினேன். ஆனால் கவுன்ட்டரில் டிக்கெட்டோடு சேர்த்து கண்ணாடியும் தந்தது முதல் இன்ப அதிர்ச்சி. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இடப்பக்கம் இருந்து ஒரு நாய் குறைக்கும் சப்தம் கேட்டது. சரி, தியேட்டருக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் நாய் என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது DTS என்று – இரண்டாவது இன்ப அதிர்ச்சி. திருவொற்றியூர் டெவலப் ஆயிடுச்சு டோய்...!
ங்கொய்யால என்னங்கடா 3D படம் என்ற எண்ணம் உள்மனதில் இருந்தது. ஆனால் அந்த கண்ணாடியை மாட்டியதும் நான் ஒரு கேபிள் சங்கராகவே மாறிவிட்டேன். (அட, குழந்தையாவே மாறிட்டேன்னு சொல்ல வந்தேன்). கொஞ்ச நேரத்திற்கு கண்ணாடியை கழட்டியும், இடது கண்ணையும் வலது கண்ணையும் மாற்றி மாற்றி மூடி படத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.
கதைக்கு வருவோம். ஒரு கிராமத்து கல்லூரியில் இரண்டு மாத செமஸ்டர் விடுமுறை விடுகிறார்கள். 60 நாட்கள் காதலியை பிரிந்து இருக்க முடியாத ஹீரோ, தனது நண்பன் வாட்ச்மேன் மகன் தயவில் ஹாஸ்டலிலேயே தங்குகிறான். காதலியின் வீடோ கல்லூரியின் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில். சோளக்காடு வழியாக போனால் சீக்கிரம் போகலாம். ஆனால் அங்கே அம்புலி என்ற கொடிய மனித உடல் மிருகம் இருப்பதாகவும், இரவில் அந்தவழியாக செல்பவர்களை அம்புலி வேட்டையாடிவிடும் என்றும் சொல்கிறார்கள். அதையும் மீறி சோளக்காடு வழியாக போன ஹீரோவும் அவரது நண்பரும் என்ன ஆனார்கள் என்பது ஒரு கிளைக்கதையே...! முழுக்கதையும் தெரிந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் நம்பர் 1 பதிவரின் வலைப்பூவையோ, அண்ணாச்சியின் வலைப்பூவையோ படித்துக்கொள்ளுங்கள்.
முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்களே. ஹீரோவாக நடித்தவருக்கு லொள்ளு சபா “ஜீவா” சாயல். கதை எழுபதுகளின் இறுதியில் நடப்பதாலோ என்னவோ இயக்குனர் கதாநாயகிகளையும் ரொம்ப அவுட்டேட்டடாக தேர்வு செய்திருக்கிறார். படம் முழுக்க கறுப்பு சட்டை வெள்ளை வேட்டியோடு வரும் நண்டு ஜெகனின் கதாப்பாத்திரம் என்னவென்பதை அவரது உடையே சொல்கிறது. தம்பி ராமையா, கலைராணி போன்றவர்கள் திகில் படத்திற்கு சரியான தேர்வுகள். உமா ரியாஸ், பாஸ்கி, பாலா சிங், அப்புறம் மேதை படத்துல நடிச்ச மொக்கை வில்லன் இன்னும் நிறைய பேர் இருக்காங்க. ஆங், சொல்ல மறந்துட்டேன். பார்த்திபனும் நடித்திருக்கிறார். அந்த மேஜைக்கு கீழே நல்லபாம்பு இருக்குது என்ற வசனத்தோடு அறிமுகமாவது பார்த்திபன் டச். ஆனால் அதற்குப்பிறகு அவருடைய டச் ஒரு இடத்தில் கூட இல்லாதது ஏமாற்றமே.
ஐவர் குழுவின் இசையில் நெஞ்சுக்குள்ளே யாரு பாடல் கேட்கக் கேட்க பிடிக்கக்கூடிய ரகம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் “விடைகொடு எங்கள் நாடே...” பாடலை இசையிலும் காட்சியமைப்பிலும் உல்டா செய்து “மழைக்காடே... மணல்வீடே...” என்று பாட்டு போட்டதெல்லாம் தாங்கிக்க முடியல. மற்ற பாடல்கள் வெறும் வேகத்தடையே...!
வெங்காயம் படத்திற்கு சத்யராஜை வைத்து மார்கெட்டிங் செய்தது போல, அம்புலிக்கு பார்த்திபன் ஈட்டியை விட கூர்மையாய் பாயும்... என்றெல்லாம் சொல்லி மார்கெட்டிங் செய்திருக்கிறார்கள். 3D தொழில்நுட்பம் ஆடியன்ஸை திரையரங்கிற்கு வரவழைக்கும் யுக்தி தானே தவிர படத்தில் ஒருசில காட்சிகள் தவிர்த்து 3D என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை.
இந்தமாதிரி சிற்சில குறைகள் இருந்தாலும், படம் முழுக்க அடுத்து என்ன நடக்கும், குறிப்பாக அம்புலியை எப்ப காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தியது இயக்குனர் இணைக்கு மிகப்பெரிய வெற்றி. ஹாரர் படங்களில் இம்மி பிசகினாலும் செம காமெடி ஆகிவிடும். அதாகப்பட்ட Paranormal Activityக்கே விழுந்து விழுந்து சிரித்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அப்பேர்ப்பட்டவர்களை இரண்டாம் பாதி முழுக்க கப்சிப் என்று அமர வைத்திருக்கிறார்கள். டெம்ப்ளேட்தனமான சினிமாக்களுக்கு மத்தியில் அவ்வப்போது புதிய முயற்சிகளை எடுக்கும் இதுபோன்ற இளம் இயக்குனர்களுக்கு ராயல் சல்யூட்...!
ஆங்கிலப்படங்களின் பாணியில் இரண்டாம் பாதிக்காக அச்சாரம் போட்டாச்சு... விரைவில் எதிர்பார்க்கலாம் அம்புலி பாகம் 2...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
38 comments:
செய்தி எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை... படத்தில் நாயகனாக நடித்த அஜய் இப்போது உயிரோடு இல்லை என்று விக்கிபீடியா சொல்கிறது... உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய அனுதாபங்களை பதிவு செய்கிறேன்...
அச்செய்தி உண்மைதான் என்று இயக்குனர் ஹரீஷ் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அதனால்தான் நாயகனுக்கு டப்பிங் தர வேண்டியதாகி விட்டதாம். டைட்டிலில் இதைப்போட்டு அனுதாபம் தேட விரும்பவில்லை என்றார் ஹரீஷ். ஹாட்ஸ் ஆப்.
இரவில் தூங்காம உறக்கம் தொலைத்து தான் பார்த்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.
//Riyas said...
இரவில் தூங்காம உறக்கம் தொலைத்து தான் பார்த்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.//
Sevaiyaa??
இதை சேவைன்னு சொல்லாம வேற எப்பிடி சொல்றது.. வேனும்னா தியாகம்னு வெச்சிக்கிடலாமா..?
நானும் படம் பாத்துடலாம்னு நினைச்சேன். தள்ளிப் போகுது. சீக்கிரம் பாத்துடறேன்... நாயகனாக நடித்த முதல் படம் வெளிவரும் போது அதைப் பார்த்து மகிழ அவர் இல்லையென்பது உண்மையில் வருத்தமளிக்கிறது! என் அனுதாபங்கள்!
அட, குழந்தையாவே மாறிட்டேன்னு சொல்ல வந்தேன் //
ஞேஞேஞேஞேஞேஞேஞேஞே .....
தியேட்டருக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் நாய் என்று நினைத்தேன் //
ஆகா , உங்க ஊருல தியேட்டர்லாம் எப்படி இருந்துச்சுன்னு இப்ப தான தெரியுது ......
டிஸ்கி : விளம்பரத்திற்கு மன்னிக்கவும்.......
என் கடைல நேத்து http://renigundaboys.blogspot.in/2012/02/blog-post_20.html (காதலில் சொதப்புவது எப்படி....)
எல்லா இடத்திலும் நல்ல ரெவ்யூ இந்தப் படத்துக்கு.பார்த்தே ஆகணும் தியேட்டரை விட்டு போறதுக்குள்ள...
////அப்புறம் தான் தெரிந்தது அது DTS என்று – இரண்டாவது இன்ப அதிர்ச்சி. ////
இதெல்லாம் சத்யம், தேவி தியேட்டருக்கு வந்து 15 வருசத்துக்கு மேல ஆகுதே?
மனதை 3Dய அம்புலி' - ஆஹா,,, உங்க டைட்டில் 'செம' டச்சிங் சார்!
////"மனதை 3Dய அம்புலி"////
இந்த டைட்டில் செலக்சனுக்கே தனியா ஒரு ஆஃப் தேவைப்பட்டிருக்கும் போல?
///// 3D தொழில்நுட்பம் ஆடியன்ஸை திரையரங்கிற்கு வரவழைக்கும் யுக்தி தானே தவிர படத்தில் ஒருசில காட்சிகள் தவிர்த்து 3D என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை./////
அப்படியா? படம் ஃபுல்லா 3D ல எடுத்தாங்களா, இல்ல அந்த ஒருசில காட்சிகள் மட்டுமா? மைடியர் குட்டிச்சாத்தான்ல 3D காட்சிகள் படம் பூரா வரும், எல்லாம் சூப்பராவும் இருக்குமே!
தமிழ் சினிமா இன்னும் வயசுக்கே வரலன்னு சொல்லுவாங்க . 30 , 40 வருஷமா நாலஞ்சு கதையையே மாத்தி மாத்தி எடுத்திட்டு இருக்கோம் இது மாதிரி புது முயற்சியாவது ஒரு நல்ல காலத்தோட தொடக்கமா இருக்கலாம்..,
super review..
good title
ஒரு திகில் படத்தின் கதையை உடைக்கும் அதி மேதாவித்தனமெல்லாம் இல்லாமல் சிம்பிளாக நச்சென்று இருக்கிறது விமர்சனம்.
Nice Review
அருமையான பதிவு வாழ்த்துகள்
உங்களது மற்ற பட விமர்சனம் படிச்சி இருக்கேன் ,,,இதையும் ரொம்ப காமெடி யா இருக்கும் எதிர்ப்பார்த்தேன்
சுபேரா தான் இருந்தது ...
இருதாலும் உங்க டலேன்ட் க்கு கொஞ்சம் குறையுதொன்னு இருக்கு ...அவ்வவ் ...மன்சுலப் பட்டது சொன்னான் ...திட்டிபுடதிங்க அண்ணா
டைட்டிலுக்கே ஒரு தனி சல்யூட். நல்ல விமர்சனம். நம்ம நாடு எப்ப தமிழ் 3D தியேட்டர் கொண்டு வந்து ... ம்ம்ம். நடக்காது.
@ Riyas
// இரவில் தூங்காம உறக்கம் தொலைத்து தான் பார்த்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள். //
நன்றி ரியாஸ்... என் நல்ல மனசு உங்களைத் தவிர யாருக்கு புரியுது...
@ கணேஷ்
// நானும் படம் பாத்துடலாம்னு நினைச்சேன். தள்ளிப் போகுது. சீக்கிரம் பாத்துடறேன்... நாயகனாக நடித்த முதல் படம் வெளிவரும் போது அதைப் பார்த்து மகிழ அவர் இல்லையென்பது உண்மையில் வருத்தமளிக்கிறது! என் அனுதாபங்கள்! //
ஆமாம் சார்... எனக்குள்ளும் அந்த செய்தி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது... விக்கிப்பீடியா லிங்கை படிக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது...
@ சாகசன்
// ஆகா , உங்க ஊருல தியேட்டர்லாம் எப்படி இருந்துச்சுன்னு இப்ப தான தெரியுது ...... //
ஆமாம் எல்லாம் படுமோசம்...
// டிஸ்கி : விளம்பரத்திற்கு மன்னிக்கவும்.......
என் கடைல நேத்து http://renigundaboys.blogspot.in/2012/02/blog-post_20.html (காதலில் சொதப்புவது எப்படி....) //
நான் ஏற்கனவே ரெண்டு முறை படிச்சிட்டேன்...
@ Chilled Beers
// எல்லா இடத்திலும் நல்ல ரெவ்யூ இந்தப் படத்துக்கு.பார்த்தே ஆகணும் தியேட்டரை விட்டு போறதுக்குள்ள... //
பயப்படாதீங்க... அவ்வளவு சீக்கிரம் தியேட்டரை விட்டுப் போகாது...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இதெல்லாம் சத்யம், தேவி தியேட்டருக்கு வந்து 15 வருசத்துக்கு மேல ஆகுதே? //
அது சென்னை... இது வடசென்னை...
@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// ஆஹா,,, உங்க டைட்டில் 'செம' டச்சிங் சார்! //
நன்றி சார் ஒரு ஃப்ளோவுல வந்துடுச்சு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இந்த டைட்டில் செலக்சனுக்கே தனியா ஒரு ஆஃப் தேவைப்பட்டிருக்கும் போல? //
நீங்க வேற... அம்புலி படக்குழுவினர் தினசரி செய்தித்தாள்களில் தரும் கிரியேட்டிவான விளம்பரங்களை பாருங்கள்... அவங்க என்ன தினமும் ஒரு ஃபுல் அடிச்சிட்டா விளம்பரம் கொடுக்குறாங்க...
// அப்படியா? படம் ஃபுல்லா 3D ல எடுத்தாங்களா, இல்ல அந்த ஒருசில காட்சிகள் மட்டுமா? மைடியர் குட்டிச்சாத்தான்ல 3D காட்சிகள் படம் பூரா வரும், எல்லாம் சூப்பராவும் இருக்குமே! //
படம் முழுவதும் 3D தான்... ஆனால் அதற்கான தேவை இல்லையென்று சொல்கிறேன்... மை டியர் குட்டிசாத்தான் குழந்தைகள் படம் என்பதால் அடிக்கடி ஸ்க்ரீன் முன்பு எதையாவது கொண்டுவந்து காட்டிக்கொண்டே இருப்பார்கள்...
@ ...αηαη∂....
// தமிழ் சினிமா இன்னும் வயசுக்கே வரலன்னு சொல்லுவாங்க . 30 , 40 வருஷமா நாலஞ்சு கதையையே மாத்தி மாத்தி எடுத்திட்டு இருக்கோம் இது மாதிரி புது முயற்சியாவது ஒரு நல்ல காலத்தோட தொடக்கமா இருக்கலாம்.., //
நீங்க வேற... தமிழ் சினிமா எத்தனை முறைதான் வயசுக்கு வரும்...
@ NAAI-NAKKS
// super review..
good title //
நன்றி நக்ஸ்...
@ ரஹீம் கஸாலி
// ஒரு திகில் படத்தின் கதையை உடைக்கும் அதி மேதாவித்தனமெல்லாம் இல்லாமல் சிம்பிளாக நச்சென்று இருக்கிறது விமர்சனம். //
நன்றி கஸாலி... போகிற போக்கில் சிபியையும் அண்ணாச்சியையும் அதிமேதாவிகள் என்று சொன்னீர்களே... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
@ Sukumar Swaminathan
// Nice Review //
நன்றி தல...
@ DhanaSekaran .S
// அருமையான பதிவு வாழ்த்துகள் //
நன்றி தனா....
@ கலை
// உங்களது மற்ற பட விமர்சனம் படிச்சி இருக்கேன் ,,,இதையும் ரொம்ப காமெடி யா இருக்கும் எதிர்ப்பார்த்தேன்
சுபேரா தான் இருந்தது ...
இருதாலும் உங்க டலேன்ட் க்கு கொஞ்சம் குறையுதொன்னு இருக்கு ...அவ்வவ் ...மன்சுலப் பட்டது சொன்னான் ...திட்டிபுடதிங்க அண்ணா //
கருத்துக்கு நன்றி கலை... இந்த Fluctuation அடிக்கடி வர்றதுதான்... மனசுல எந்த கவலையும் இல்லாதபோது பதிவும் நச்சுன்னு சரளமா வரும்...
@ ஹாலிவுட்ரசிகன்
// டைட்டிலுக்கே ஒரு தனி சல்யூட். நல்ல விமர்சனம். நம்ம நாடு எப்ப தமிழ் 3D தியேட்டர் கொண்டு வந்து ... ம்ம்ம். நடக்காது. //
நன்றி நண்பா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க... தமிழ்நாட்டுல 4D தியேட்டரே வந்தாச்சு...
சினிமாவுக்கு நச்சுனு எழுதறிங்களே. ஒரு சீரியலுக்கும் எழுதுனீங்கன்னா எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன். ஹி...ஹி...!
எப்பவும் கிளைமாக்ஸ் உடைக்காம சொல்றது தான் நல்ல விமர்சனம். தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
http://eniyavaikooral.blogspot.com/
சீரியலுக்கா? 3 நாலுவருசமா எழுதனுமே?
Good POST
உங்கள் டைட்டில் , விமர்சனம் அருமை ... 3 டி வெறும் வியாபார உத்தி தான் என்பதில் சந்தேகம் இல்லை ... எனக்கு படம் பிடித்திருந்தாலும் பெரிய அளவில் கவரவில்லை ...
Post a Comment