அன்புள்ள வலைப்பூவிற்கு,
டிஸ்கி 1: பர்சனல் பக்கம் - பிடிக்காதவர்கள் புரட்ட வேண்டாம்.
டிஸ்கி 2: மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...!
வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி. விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டத்தை போன்றதொரு பரபரப்பு. இன்னும் ஒருமணி நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தாக வேண்டும். நாள் முழுக்க அலுவலகத்தில் பணியாற்றிய களைப்பு வேறு. நடை, ஓட்டம், பேருந்து, ஆட்டோ என பல்வேறு பரிமாணங்களை கடந்து அந்த பயணத்தை முடிக்கும்போது மணி சரியாக பத்தாக பத்து நிமிடங்கள் இருந்தன. நல்லவேளையாக டாஸ்மாக் மூடியிருக்கவில்லை. பேரார்வத்துடன் உள்ளே நுழைய சில வருடங்கள் கழித்து சந்திக்கும் சில நண்பர்கள். இப்படித்தான் ஆரம்பமானது கடந்த வாரயிறுதி நாட்கள்.
சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நான் கடைசி பெஞ்சில் அமர்ந்து சரோஜாதேவி புத்தகத்தை சத்தம்போட்டு வாசிக்க, என்னைச் சுற்றி கதை கேட்கும் மழலையின் பாங்குடன் அமர்ந்திருந்த அதே நண்பர்கள் குழு. காலம் செய்த கோலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்க, இப்போது மற்றொரு நண்பனின் திருமண நிகழ்விற்காக ஒன்றுகூடியிருக்கிறோம்.
“நீ எங்க வேலை செய்யுற...?”, “எப்பல்லருந்து மச்சி சரக்கடிக்க ஆரம்பிச்ச...?”, “ங்கொய்யால இன்னுமா அதே ஃபிகரை லவ் பண்ணுற...?”, “நீ ஒருமுறை என்கிட்ட சண்டை போட்ட ஞாபகமிருக்கா...?” இப்படியான பரஸ்பர கேள்வி பதில் பகுதிகளோடு, பியர் பாட்டில்களும், பிராந்தி டம்ளர்களும் காலியாகின. அரை மயக்கத்தில் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தோம். சும்மாவே பாசத்தை பொழிபவர்கள், போதையில் இருந்தால் சொல்லவா வேண்டும்.
மதுரையை நோக்கி பயணிக்கும் குளிர்பதன பேருந்தின் கடைசி இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டோம். பேருந்து கிளம்பியதும் மறுபடியும் ஒவ்வொருவருடைய சுயசரிதையும் விவாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பசியெடுக்க, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பிரியாணி, புரோட்டா பொட்டலங்களை பிரித்தோம். எனதருகே அமர்ந்திருந்த பாசக்கார நண்பன் ஆசையாய் கேட்டதால், ஒரு அவித்த முட்டையை எடுத்து அவன் வாயில் திணித்தேன். அதை அவன் ஆம்லேட்டாக மாற்றி என்மேல் கக்கினான். ஏசி பஸ் முழுவதும் நாறி நசநசத்துவிட்டது. திருநெல்வேலிக்கே அல்வா, திருப்பதிக்கே லட்டு என்ற பாணியில் எனக்கே ஆம்லேட் போட்டு காட்டிய ஸ்ரீகணேஷ் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பிடிப்பான்.
அவித்த முட்டையை ஆம்லெட்டாய் மாற்றிய அதிசயப்பிறவி...! |
அதன்பிறகு பயணம் எப்படி அமைந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. காலையில் மதுரையை நெருங்கும்போதே வம்ப வெலைக்கு வாங்கும் நோக்கத்தோடு மணிக்கு கால் செய்து லைவ் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தேன். காலை ஒன்பது மணியளவில் மணி எனது நண்பர்கள் குழுவுடன் இணைந்தார். அனைவரும் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள டெம்பிள் சிட்டி உணவகத்தில் சிற்றுண்டி முடித்தோம். இப்போது மணி 9.35 ஆகியிருந்தது. சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கையை பிசைந்துக்கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. பின்னே, கடை பத்து மணிக்கு தானே திறப்பாங்க.
அன்றைய தினத்தின் முதல் வாடிக்கையாளர் நம்ம கஞ்சாநெஞ்சன் மணிவண்ணன் தான். மதுரை மதுக்கூடத்தில் ஃபுரூட் சாலட், கொய்யாக்கனிகள் என உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைடு டிஷ்கள் கிடைத்தது பாராட்டவேண்டிய ஒன்று. நேற்றிரவு எனக்கு ஆம்லேட் போட்டுக்காட்டிய கயவனை எனது மைத்துனர் நெப்போலியன் துணையோடு பழிவாங்க போராடினேன். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாம் மாயா மாயா சாயா சாயா. மணியான பதிவரை யார் வழியனுப்பி வைத்தது...??? ஷார்ட்ஸ் அணிந்திருந்த நான் எப்போது பேண்ட்டுக்கு மாறினேன்....??? மதுரையிலிருந்தவன் எப்போது விருதுநகருக்கு வந்தேன்...??? எல்லாம் மாயை...!
கண்விழித்து பார்த்தபோது விருதுநகர் VVS திருமண மண்டபத்தின் மாடியறையில் படுத்திருந்தேன். கீழே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரும்படிக்கிற இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை. விழா அரங்கை லாவகமாக கடந்துவந்து மறுபடியும்... வேறெங்கே கழுதை கெட்டா குட்டிச்சுவரு டாஸ்மாக்தான். மதுரையை காட்டிலும் விருதுநகர் ஓஸ்தி. அந்த மதுக்கூடத்தின் சுவரெங்கும் மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோன், பூனம் பாண்டே மற்றும் பல உலகலெவல் ஃபிகர்களின் கவர்ச்சிப்படங்கள். பூனம் பாண்டேயின் தொப்புளில் யாரும் காறித்துப்பாமல் இருந்தது அது புதிதாய் கட்டப்பட்ட மதுக்கூடம் என்பதை பறைசாற்றியது.
இரவு மீண்டும் மண்டப அறையில், நண்பன் ஒருவன் சொன்ன சுவாரஸ்யமான மலேசியக் காதல் என்னுள் ஒரு நாவலின் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. உறங்காத விழிகளுள் கனவுகளை நிரப்பியபடி மணமகனும் எங்களுடன் தங்கியிருந்தான். மணி பன்னிரண்டை கடந்ததும் “இன்னைக்கு எனக்கு கல்யாணம்...!” என்று அவன் உற்சாகமாய் துள்ளிக்குதித்ததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.
பொழுது விடிந்தது, சில மணிநேரங்களில் நண்பனுக்கு திருமணம். இந்த சமயத்தில் அவனைப் பற்றி சில வரிகள் சொல்லியாக வேண்டும். அவனுக்கு குமரிமுத்து ரேஞ்சுக்கு கூட கண்ணடிக்க தெரியாது. அவனுக்கு காதல் திருமணம் கைகூடியிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். உலக நடப்புகளைப் பற்றி ஒன்றும் அறியாதவன். நான் லத்திகா படத்திற்கு அழைத்துச்சென்றபோது கூட வெள்ளந்தியாக என்னுடன் வந்து படம் பார்த்தவன். இருப்பினும் லத்திகா படத்தையே தாங்கிக்கொண்டவன் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவான் என்று நம்புகிறேன்.
ரொமாண்டிக் லுக்...! |
பெரியோர்கள் முன்னிலையில், சொந்தபந்தங்கள் கூடி, நண்பர்களின் அலப்பறைகளோடு “பல்” என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் எங்கள் நண்பனின் திருமணம் இனிதே நடந்துமுடிந்தது.
அன்றாட பணிகள் அவரவர் சட்டைக்காலரை பிடித்து இழுத்தமையால் உடனடியாக மணமக்களை வாழ்த்திவிட்டு எங்களது அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம். பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது விருதுநகருக்கே உரித்தான எண்ணையில் தோய்த்த பரோட்டா...! ஆனால் ஏற்கனவே வயிறும் மனதும் நிரம்பியிருந்ததால் புறக்கணிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் மதுரை. இந்தமுறை மணியை அழைக்கவில்லை. மிலாடி நபி காரணமாக கடை விடுமுறை என்பதால் அவரை அழைத்துவந்து ஏமாற்றமளிக்க மனம் ஒப்பவில்லை.
“சென்னை போகனுமா...? வால்வோ பஸ்... ஏசி பஸ்...” என பேருந்து புரோக்கர்கள் கையைப் பிடித்து இழுத்தவண்ணம் இருந்தனர். இறுதியில் ஒரு குளிர்பதன பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இங்கிருந்து போகும்போது காதல் கதைகளோடு சென்ற பயணம், அங்கிருந்து வரும்போது காமக்கதைகளாக நகர்ந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் சென்னை திரும்பிவிடுவோம், நண்பர்களை பிரிந்துவிடுவோம், மறுநாள் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்று நினைக்கும்போதே துக்கம் நெஞ்சை அடைத்தது.
பயணங்கள் முடிவதில்லை...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
34 comments:
படுவா ராஸ்கோல்..மதுரையின் 'மினி அஞ்சா நெஞ்சன்' மணியை கூட கெட்டவர் ஆக்கிட்டியே..
//நான் லத்திகா படத்திற்கு அழைத்துச்சென்றபோது கூட வெள்ளந்தியாக என்னுடன் வந்து படம் பார்த்தவன்.//
அந்த பாவம் உன்ன சும்மா விடாது. அடுத்த ஜென்மத்துல பவர் ஸ்டார் பக்கத்து வீட்டுக்காரனா பொறக்க போற தம்பி.
//அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு//
நல்ல வேளை.. ஒரு ஆம்லேட் பார்சல் கொடுக்காம வந்தீங்களே..
டாஸ்மாக் பத்தி எவ்வளோ எழுதறீங்க.. கொஞ்சம் டாஸ்மாக் அதிகார பூர்வ தூதரா உங்கள அறிவிச்சிட சொல்லுங்களேன்..
உபகுறிப்பு மற்றும் தகவல் : நண்பர் திரு பிரபாகரன் அவர்கள் மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்ற நிலையை பற்றி இங்கு கூற ஆசைப்படுகிறேன் (சரி வேணாம் எதுக்கு பயபுள்ளக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு )
பிரபாகர் சென்னையிலிருந்து மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு உண்மையை கூறினீர்களே அதை பற்றி கூறவா ?
///அன்றைய தினத்தின் முதல் வாடிக்கையாளர் நம்ம கஞ்சாநெஞ்சன் மணிவண்ணன் தான்.///
ஏன்னே இப்படி?
நாலு கோவட்டர் நெப்போலியன் பிராந்திய வாங்கி அசராமல் ராவாக அடித்த பதிவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க
//பர்சனல் பக்கம்//
உடு ஜூட்
மதுரையும் மப்பும் ,,,,,,அருமை ...
அந்த ரொமாண்டிக் லுக்கு..
சான்ஸே இல்லைங்க..
இண்டரெஸ்டிங் நரேஷன்...
நண்பா நீங்கள் விருதுநகரில் உள்ள பாருக்கு சென்றது திங்கட்கிழமை காலை என்றால், உங்களுக்கு அடுத்த டேபிளில் நான் அமர்ந்திருந்தேன். கவனிக்காமல் போய் விட்டோமே?
///// நா.மணிவண்ணன் said...
உபகுறிப்பு மற்றும் தகவல் : நண்பர் திரு பிரபாகரன் அவர்கள் மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்ற நிலையை பற்றி இங்கு கூற ஆசைப்படுகிறேன் (சரி வேணாம் எதுக்கு பயபுள்ளக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு )/////
யோவ் அந்த இமேஜு வெச்சி அவர் என்ன செய்ய போறாரு? மேட்டரை சொல்லும்யா.....
பாவம் போல அப்பாவியா இருந்த மணியையும் கெடுத்துப் போட்டாங்கப்பா..........
@ ! சிவகுமார் !
// படுவா ராஸ்கோல்..மதுரையின் 'மினி அஞ்சா நெஞ்சன்' மணியை கூட கெட்டவர் ஆக்கிட்டியே.. //
அவர் அஞ்சாநெஞ்சன் அல்ல... கஞ்சாநெஞ்சன்...
// அந்த பாவம் உன்ன சும்மா விடாது. அடுத்த ஜென்மத்துல பவர் ஸ்டார் பக்கத்து வீட்டுக்காரனா பொறக்க போற தம்பி. //
அதுக்கு நான் புண்ணியம் பண்ணியிருக்கணும்...
@ bandhu
// நல்ல வேளை.. ஒரு ஆம்லேட் பார்சல் கொடுக்காம வந்தீங்களே.. //
அவனும் எங்களோடு கடைக்கு வந்திருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்போம்...
// டாஸ்மாக் பத்தி எவ்வளோ எழுதறீங்க.. கொஞ்சம் டாஸ்மாக் அதிகார பூர்வ தூதரா உங்கள அறிவிச்சிட சொல்லுங்களேன்.. //
இவையெல்லாம் சென்சார் செய்து வெளியிடப்படும் சிறு பகுதிகள் மட்டுமே... டாஸ்மாக்கில் இதைவிடவும் சீரியஸான, அபத்தமான விஷயங்களை பார்க்கலாம், கேட்கலாம்...
@ நா.மணிவண்ணன்
// உபகுறிப்பு மற்றும் தகவல் : நண்பர் திரு பிரபாகரன் அவர்கள் மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்ற நிலையை பற்றி இங்கு கூற ஆசைப்படுகிறேன் (சரி வேணாம் எதுக்கு பயபுள்ளக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு ) //
யோவ் மணி... அய்யய்யோ கமெண்ட் மாடரேஷன் வைக்கணும் போல இருக்கே... பப்ளிக்யா... வேணாம்யா... விட்ருயா...
@ நா.மணிவண்ணன்
// பிரபாகர் சென்னையிலிருந்து மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு உண்மையை கூறினீர்களே அதை பற்றி கூறவா ? //
அது என்ன உண்மை தலைவா... அந்த கருமத்தைத்தான் நானே பதிவில் போட்டுவிட்டேனே...
@ நா.மணிவண்ணன்
//
ஏன்னே இப்படி?
நாலு கோவட்டர் நெப்போலியன் பிராந்திய வாங்கி அசராமல் ராவாக அடித்த பதிவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க //
உங்க கிளாஸ்ல ஊற்றும்போது சிதறி என் கிளாஸ்ல விழுந்ததை தானே தல நான் குடிச்சேன்...
@ மனசாட்சி
// உடு ஜூட் //
ஏற்கனவே நான் எழுதிய சொந்தக்கதைகளை படித்து டரியல் ஆகியிருக்கிறீர்கள் போல...
@ கோவை நேரம்
// மதுரையும் மப்பும் ,,,,,,அருமை ... //
நன்றி நண்பா...
@ இந்திரா
// அந்த ரொமாண்டிக் லுக்கு..
சான்ஸே இல்லைங்க.. //
பையன் ஒத்துழைத்திருந்தால் இன்னும்கூட பிரமாதமாக எடுத்திருக்கலாம்...
@ யுவகிருஷ்ணா
// இண்டரெஸ்டிங் நரேஷன்... //
நன்றி தல :)
சிலருடைய பாராட்டுகள் எப்போதுமே ஸ்பெஷல் தான்...
@ பாலா
// நண்பா நீங்கள் விருதுநகரில் உள்ள பாருக்கு சென்றது திங்கட்கிழமை காலை என்றால், உங்களுக்கு அடுத்த டேபிளில் நான் அமர்ந்திருந்தேன். கவனிக்காமல் போய் விட்டோமே? //
நாங்கள் சென்றது சனிக்கிழமை இரவு... நீங்க தண்ணி அடிப்பீங்களா... பார்த்தா அப்படி தெரியலையே...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் அந்த இமேஜு வெச்சி அவர் என்ன செய்ய போறாரு? மேட்டரை சொல்லும்யா..... //
எதுவா இருந்தாலும் அந்தப்பக்கமா சாட்டுக்கு போய் பேசிக்கோங்கண்ணே... இங்கேயே ஆம்லெட் போட்டுடாதீங்க...
ரொமாண்டிக் லுக்...-:)
நண்பர் திருமணம்னாலே தனி தான்...ஆனாலும் ஏதாவது கிப்ட் கொண்டு போயிருக்கலாம்...
@ பிலாசபி
//சிலருடைய பாராட்டுகள் எப்போதுமே ஸ்பெஷல் தான்...//
அது சரி....
@ ரெவெரி
// நண்பர் திருமணம்னாலே தனி தான்...ஆனாலும் ஏதாவது கிப்ட் கொண்டு போயிருக்கலாம்... //
வர்ற ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ரிசப்ஷன் இருக்கு... "பெருசா" செஞ்சிடலாம்...
@ ! சிவகுமார் !
// அது சரி.... //
யோவ் சிவா... இதுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லுங்க நான் விளக்கம் கொடுக்குறேன்...
Why this TASMAC veri, maappu?
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...!
to
பயணங்கள் முடிவதில்லை...!
to
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...!
வாழக்க ஒரு வட்டம் கண்ணு!
//எங்களது அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு //
அவ்வளவு கஞ்சப் பிசினாரியா நம்ம Philo?
சுவாரசியமான அனுபவம்.. ரொம்பக் குடிச்சுட்டு பக்கத்துக் கல்யாணக் கூட்டத்துல கலந்துகிட்ட நண்பன் ஒருத்தன் ஞாபகம் வருது..உங்க நண்பருக்கு வாழ்த்துக்கள்.
//பேருந்து புரோக்கர்கள் கையைப் பிடித்து இழுத்தவண்ணம்
ஒரு ஏசி பஸ்சுக்கு பத்து நாள் முந்தியே டிகெட் வாங்கி வச்சிருக்கற டயத்துலந்து ரொம்ப தூரம் வந்திருக்குறோம்.. சந்தோசமாக இருக்கிறது.
நண்பர்கள் இருவர்தான் தண்ணி அடித்தார்கள். நான் சும்மா அவர்களோடு கம்பெனி கொடுத்துக்கொண்டே, சைட் டிஷ்களை கொறித்து கொண்டிருந்தேன்.
ada kedi annaa...
superaa solli irukkinga...
sirichchitte iruntheneeeeeeeeeeee
Post a Comment