19 February 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் – மயிரே இல்லாத வழுக்கை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ட்ரைலர் பார்த்தபோதே பாடாவதியான படம் என்று தெரிந்தபின்னும் இந்தப் படத்தை பார்க்க இரண்டு காரணங்கள் – ஒன்று “ஒருமுறை... ஒருமுறை...” பாடல், மற்றொன்று என் கன்னுக்குட்டி அமலா பால்.

ஹீரோ வார நாட்களில் ஒரு மிகப்பெரிய ஐ.டி நிறுவனத்தில் அப்பாட்டாக்கர். வார இறுதியானால் பெங்களூரில் இருக்கும் தன் காதலி சாருவுடன் ஐக்கியமாகி விடுவார். ஹீரோவின் கம்பெனிக்கு புது CEOவாக வரும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்யப்பட்ட லதாவும் சாருவும் ஒரே சாயலில் இருக்கிறார்கள். லதாவுக்கும் ஹீரோவுடன் ஏற்கனவே பழகியது போன்றதொரு உணர்வு. ஒரு விபத்தில் ஹீரோ படுகாயம் அடைகிறார். அப்போது ஹீரோவின் ஆழ்மனதை கிளறிப்பார்க்க, சாரு, லதா, சாருலதா, சைக்கலாஜிக்கல்லி, பேசிக்கல்லி, கெமிக்கல்லி அதர்வாவும் அமலா பாலும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை.

அதர்வா – அந்த ராம்ப் வாக் நடையழகும், சுந்தரத்தமிழ் வசன உச்சரிப்பும், ஆக்கக்க தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அஜித் குமார் தயார். அமலா பாலுடன் ரொமான்ஸ் செய்வதையும் சரி, அடிதடி ஆக்குசன் காட்சிகளையும் சரி, சத்தியமாக தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அமலா பால் – Very Beautiful. அதர்வாவிற்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்து அடிக்கடி கடுப்பை கிளப்புகிறார். நடிப்பை பொறுத்தவரையில் பாஸ்மார்க் போடலாம். ஒரிஜினலாக வெட்கப்படுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. ஒரு ஹீரோயினுக்கு இந்த அளவு நடிப்பே தாராளமானது.

சந்தானம், நிறைய காட்சிகளில் சலிப்பூட்டுகிறார் சில காட்சிகளில் மட்டும் சிரிப்பூட்டுகிறார். ஜெயபிரகாஷை அமலா பால் “அங்கிள்... அங்கிள்...” என்று கூப்பிடுகிறார். அந்த வேலையை அவர் கரெக்டாக செய்திருக்கிறார். அதர்வாவின் அம்மாவாக அனுபமா குமார். பாவம்யா அவங்க ஹீரோயினா நடிக்க வந்தவங்க. அவங்களுக்கு போய், மொட்டையடிச்சு அழ வச்சு வேடிக்கை பாக்குது பாழாப்போன கோலிவுட். மகன் முதல்முறையாக நடந்துவரும்போது பெருமையும், ஆனந்தக்கண்ணீரும் கலந்த ஒரு பார்வை அவருடைய நடிப்பிற்கு சாம்பிள். நல்லவேளை அந்த ரோலுக்கு மொதல்ல சிம்ரனை கூப்பிட்டாங்களாம். அப்புறம் நாசர், நாலஞ்சு சைக்கோ வில்லன்கள் எல்லாம் இருக்காங்க.

ஜிவி பிரகாஷ் இசையில் ஒருமுறை முதல்முறையே பச்சக். ஓ சுனந்தா பாடலும் க்ளைமாக்ஸ் அருகே வரும் ஒரு குத்துப்பாடலும் ஓகே ரகம். பின்னணி இசை படுரொமாண்டிக்.

கலை இயக்குனர் கிரணைபாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக பெங்களூரு ஃபிளாட்டில் Interior Decorationல் அசத்தியிருக்கிறார். 

இயக்குனர் எல்ரெட் குமார், காதலுங்கறது மரணமே இல்லாத இடம், மயிரே இல்லாத தலை இந்தமாதிரி படுமொக்கையான வசனங்களை வைத்து இந்தக்காலத்து பசங்களை ஏமாற்ற முடியாது. Try to think practical. அம்மாக்கிட்ட சொல்லி காம்ப்ளான் வாங்கிக்குடிங்க பாஸ்.

ஏகப்பட்ட தமிழ் சினிமா க்ளிஷேக்கள். ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை.

Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்) எனக்கு படம் கொஞ்சம் பிடித்திருந்தது என்பது உண்மை. But when it come to others, இந்தமாதிரி படத்தையெல்லாம் பார்த்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம். அதையும் மீறி பார்த்தே தீருவேன் என்று அடம் பிடித்தீர்களானால், உங்களுக்கு வந்திருக்குற வியாதியின் பெயர் மொக்கையோபிலியா. அதாவது இந்த வியாதி வந்திருக்குறவங்க மொக்கை படங்களை தியேட்டர் தியேட்டரா தேடிப்போய் பார்ப்பாங்களாம். படம் பயங்கர மொக்கையாக இருந்தாலும் சூப்பரா இருக்குறதா அவங்களாகவே கற்பனை பண்ணிப்பாங்களாம்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

65 comments:

Philosophy Prabhakaran said...

அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...

கோவை நேரம் said...

படம் அம்புட்டு மொக்கையாகவா இருக்கு...

ஜேகே said...

அமலா பால பார்க்குற படங்களும் வெளங்கமாட்டுது பாஸ் .. என்னா கிக்கு!

ADMIN said...

///அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...///

எப்போதான் உனக்கு வெளங்கிச்சு...?

பால கணேஷ் said...

நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்)

-ஐயய்யோ... அவனா நீயி! நான் ஓடிர்றேம்பா...

Sathish said...

சரி விடுங்க, அமலாக்காக இன்னும் ஒரு தடம் பாக்கலாம் ..

www.sathivenkat.blogspot.in
www.sathyvenkat.blogspot.in

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது!

ஹாலிவுட்ரசிகன் said...

எதுக்கும் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். ஆனால் அமலாவுக்காக கட்டாயம் பார்ப்பேன்.

முத்தரசு said...

பால் குடிக்கிற புள்ளயா நீயி.....

Anonymous said...

ஏனப்பா தண்ணிய போட்டா இப்படித்தான் கலாய்ப்பதா, நானும் போட்டால் தானே அந்த இடத்தில் சமத்துவம் வரும். பதிலுக்கு பதில் கலாய்த்துக் கொள்ளலாம். ஏன்னா புள்ளைங்களோ போங்கப்பா.

NKS.ஹாஜா மைதீன் said...

#(பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்)#

ஹி ஹி....நக்கல் தூக்கல் நண்பா..

நெல்லை கபே said...

உஷார் படுத்தியதற்கு நன்றிகள்.ரொம்ப பில்டப் குடுக்கும்போதே மைல்டா டவுட் வந்திச்சு.இந்த மாதிரியான கதையெல்லாம் மசாலால ஊறவச்சு,பொரிச்சு,தாளிச்சு எடுக்க ஷங்கராலதான் முடியும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேதை படம் பார்த்ததுல இருந்தே தலைவர் ஒரு மாதிரியாத்தான் இருக்காரு போல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// மற்றொன்று என் கன்னுக்குட்டி அமலா பால்.////

வெளங்கிரும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வார இறுதியானால் பெங்களூரில் இருக்கும் தன் காதலி சாருவுடன் ஐக்கியமாகி விடுவார். /////

ஆரம்பமே சரியில்லியே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அமலா பாலுடன் ரொமான்ஸ் செய்வதையும் சரி, அடிதடி ஆக்குசன் காட்சிகளையும் சரி, சத்தியமாக தாங்கிக்கொள்ள முடியவில்லை.//////

ஹீரோன்னா அப்படித்தாண்ணே இருப்பாங்க, இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஒரிஜினலாக வெட்கப்படுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. ////

ஏதோ அந்த புள்ள சிரிக்கிறது அப்படி அமைஞ்சு போச்சு, அத நம்பி இன்னும் எத்தன பேரு ஏமாறப் போறாங்களோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை./////

இப்படியெல்லாம் காட்டலேன்னா யார் ஹீரோ யார் ஹீரோயின்னு படம் பார்க்கறவங்க மறந்துடுவாங்கப்பு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால்/////

அப்போ ஆனந்த தொல்லை பாத்தவுடனே முழு சைக்கோவா ஆகிடுவீங்களாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எனக்கு படம் கொஞ்சம் பிடித்திருந்தது என்பது உண்மை.////

பார்ரா........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Philosophy Prabhakaran said...
அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...//////

படம் உங்களுக்கு வெளங்க மாட்டேங்குதா இல்ல படமே வெளங்கமாட்டேங்குதா?

நாய் நக்ஸ் said...

why this kolai very????
ithukkuthaan appave sonnom...METHAI
pakkaatheengannu...
parunga..ippa enna aachi...????
yaru petha pullaiyo...ippadi polambuthu...

Kumaran said...

நேற்றே விமர்சனம் படித்துவிட்டேன்..இன்று ஒரு முறை படித்தேன்.
அழகான விமர்சனம்..சிறப்பாக எழுத்துக்கள்..படம் இப்பொழுது பார்ப்பதாக இல்லை.காண கிடைத்தால்தான் படம்.நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

Unknown said...

//சுந்தரத்தமிழ் வசன உச்சரிப்பும், ஆக்கக்க தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அஜித் குமார் //

ஓ...அஜித் தமிழ்தான் பேசுறாப்டியா பிரபா? ஹிஹி!

Unknown said...

//Actually, நான் ஒரு அரை சைக்கோ என்பதால்//

சென்னை வந்தால் சந்திக்கலாம் என்று இருக்கிறேன் பயமுறுத்தாதிங்க!

Unknown said...

அமலாபால் படம் போடாததை வருதத்துடன் கண்டிக்கிறேன்!படம் ஒர்த் ஆகுலையா? படு மொக்கையா? விமர்சனம் வழக்கம் போல் ராக்ஸ்! நச்!

Philosophy Prabhakaran said...

@ கோவை நேரம்
// படம் அம்புட்டு மொக்கையாகவா இருக்கு... //

எம்புட்டு மொக்கைன்னு பதிவிலேயே சொல்லியிருக்கேனே...

Philosophy Prabhakaran said...

@ ஜேகே
// அமலா பால பார்க்குற படங்களும் வெளங்கமாட்டுது பாஸ் .. என்னா கிக்கு! //

Watch காதலில் சொதப்புவது எப்படி...?

Philosophy Prabhakaran said...

@ தங்கம் பழனி
// எப்போதான் உனக்கு வெளங்கிச்சு...? //

எனக்கு வெளங்குச்சு தல... படம்தான் வெளங்கலை...

Philosophy Prabhakaran said...

@ கணேஷ்
// ஐயய்யோ... அவனா நீயி! நான் ஓடிர்றேம்பா... //

இதுக்கே இப்படியா...? இன்னும் சொல்லப்படாத பர்சனல் பக்கங்கள் நிறைய இருக்கின்றன...

Philosophy Prabhakaran said...

@ Sathish
// சரி விடுங்க, அமலாக்காக இன்னும் ஒரு தடம் பாக்கலாம் .. //

என்னது இன்னும் வேற ஒரு தடவையா... சாமீ...

Philosophy Prabhakaran said...

@ திண்டுக்கல் தனபாலன்
// நல்ல விமர்சனம் ! படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது! //

நன்றி தனபாலன்....

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// எதுக்கும் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். ஆனால் அமலாவுக்காக கட்டாயம் பார்ப்பேன். //

அதுக்கு மேல உங்க இஷ்டம்...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி
// பால் குடிக்கிற புள்ளயா நீயி..... //

அதை விடுங்க... பதிவுக்கு வாங்க தல...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் மூனா செந்தில்
// ஏனப்பா தண்ணிய போட்டா இப்படித்தான் கலாய்ப்பதா, நானும் போட்டால் தானே அந்த இடத்தில் சமத்துவம் வரும். பதிலுக்கு பதில் கலாய்த்துக் கொள்ளலாம். ஏன்னா புள்ளைங்களோ போங்கப்பா. //

பதறுகளா... எதுல எல்லாம் சமத்துவம்...?

Philosophy Prabhakaran said...

@ NKS.ஹாஜா மைதீன்
// ஹி ஹி....நக்கல் தூக்கல் நண்பா.. //

நன்றி ஹாஜா...

Philosophy Prabhakaran said...

@ மாயன்:அகமும் புறமும்
// உஷார் படுத்தியதற்கு நன்றிகள்.ரொம்ப பில்டப் குடுக்கும்போதே மைல்டா டவுட் வந்திச்சு.இந்த மாதிரியான கதையெல்லாம் மசாலால ஊறவச்சு,பொரிச்சு,தாளிச்சு எடுக்க ஷங்கராலதான் முடியும்... //

நல்லவேளை அந்த மாதிரி கொடுமை எதுவும் நடக்கலை...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// மேதை படம் பார்த்ததுல இருந்தே தலைவர் ஒரு மாதிரியாத்தான் இருக்காரு போல..... //

நாங்கல்லாம் அப்பவே அப்படி...

// ஹீரோன்னா அப்படித்தாண்ணே இருப்பாங்க, இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி? //

ஓ அதர்வா தம்பிதான் ஹீரோவா... சொல்லவே இல்லை...

// அப்போ ஆனந்த தொல்லை பாத்தவுடனே முழு சைக்கோவா ஆகிடுவீங்களாண்ணே? //

இந்த மேட்டர் பற்றிய நான் சில நாட்கள் கழித்து எழுதப்போகும் பதிவில் சொல்கிறேன்...

// படம் உங்களுக்கு வெளங்க மாட்டேங்குதா இல்ல படமே வெளங்கமாட்டேங்குதா? //

படமே வெளங்கமாட்டேங்குது...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// why this kolai very????
ithukkuthaan appave sonnom...METHAI
pakkaatheengannu...
parunga..ippa enna aachi...????
yaru petha pullaiyo...ippadi polambuthu... //

என்ன பண்றது நக்ஸ்... புலம்புறதே நம்ம ஃபுல் டைம் ஜாப் ஆயிடுச்சு...

Philosophy Prabhakaran said...

@ Kumaran
// நேற்றே விமர்சனம் படித்துவிட்டேன்..இன்று ஒரு முறை படித்தேன். //

U r really great...

// சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்.. //

ரொம்ப காலமா இதே லிங்க்கையே தர்றீங்க... அடுத்த பதிவு எப்ப வரும்...

Philosophy Prabhakaran said...

@ வீடு K.S.சுரேஸ்குமார்
// ஓ...அஜித் தமிழ்தான் பேசுறாப்டியா பிரபா? ஹிஹி! //

அப்படித்தான் சொல்றாங்க...

// சென்னை வந்தால் சந்திக்கலாம் என்று இருக்கிறேன் பயமுறுத்தாதிங்க! //

அடுத்த ஆடு ரெடி... Get ready guys...

// அமலாபால் படம் போடாததை வருதத்துடன் கண்டிக்கிறேன்! //

மூட் இல்லை...

Unknown said...

//அது என்னமோ தெரியல... என்ன மாயமோ புரியல... சரக்கடிச்சிட்டு பாக்குற படங்கள் எதுவுமே வெளங்கமாட்டேங்குது...//

பயபுள்ளை தண்ணியடிக்கிறது வீட்டுக்கு தெரியாதுன்னு சொன்னுச்சு!, ஆனா தன்னோட பிளாக் படிக்கிறாங்கன்னும் சொன்னுச்சு!!...

Vadakkupatti Raamsami said...
This comment has been removed by the author.
Vadakkupatti Raamsami said...

நான் ஒரு அரை சைக்கோ என்பதால் (பின்ன சாரு நிவேதிதா நாவல்களையெல்லாம் படிச்சா கலெக்டராவா ஆக முடியும்)///
.
.
ஹீ ஹீ ஹீ!ஹீரோயினுக்கு சாரு பேரை வெச்சதாலேயே படம் ஊத்திகிச்சோ?

Prem S said...

//ஹீரோயினை முதல்முறை பார்த்ததும் ஹீரோ ஃபரீஸ் ஆகும் காட்சியை இதுவரை எந்த இயக்குனரும் எடுத்ததில்லை.//பிரபாகரன் டச்சா ம்ம் எப்படி பாஸ் தலைப்புலாம் இப்படி (மயிரே இல்லாத வழுக்கை)

ஜி.ராஜ்மோகன் said...

அக அக ஆகா ஒரே கொழப்பமா இருக்கு பாஸ் . ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் 250 பிரிண்ட்
போடப்பட்டு இருக்காம் . என்னத்த சொல்ல . அது சரி elred குமார் யாரு ?

Riyas said...

//என் கன்னுக்குட்டி அமலா பால்.//

தமிழன் மலயாளிகளோட சண்டை பிடிச்சாலும் மலயாள பிகருகள விடமாட்டானுகளே,,

தமிழேண்டா!

Ramesh Mani said...

Dear Prabha,

Like your cinima vimarsanam.....

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// பயபுள்ளை தண்ணியடிக்கிறது வீட்டுக்கு தெரியாதுன்னு சொன்னுச்சு!, ஆனா தன்னோட பிளாக் படிக்கிறாங்கன்னும் சொன்னுச்சு!!... //

அதெல்லாம் அப்படித்தான் தல... சில விஷயங்கள் தெரியும் ஆனா தெரியாது...

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// இந்த படத்தில் சின்மயி அம்மையாரின் கட்டை ஆண் குரலை பற்றி ஒரு கருத்தும் இல்லையா //

ஒருகாலத்தில் எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரே மாதிரி டெம்ப்ளேட் குரல் கொடுத்துக்கொண்டிருந்த சவிதா மேடமை விட சின்மயி எவ்வளவோ பரவாயில்லை...

மீனவர் பிரச்சனையின் போது சின்மயி மீனவர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய மறுத்தது உங்களுடைய இந்த அளவு கடந்த வன்மத்திற்கு காரணம் என்று எண்ணுகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// எப்படி பாஸ் தலைப்புலாம் இப்படி (மயிரே இல்லாத வழுக்கை) //

நீங்க வேற... இப்பதான் ஒரு நண்பர் என்னோட அர்த்தம்கெட்ட தலைப்பை படிச்சிட்டு போனில் வசையருவி பொழியுறார்...

ஒருத்தன் அர்த்தமே இல்லாம படம் எடுக்குறான்... ஒருத்தன் அர்த்தமே இல்லாம புத்தகம் எழுதுறான்... அவனையெல்லாம் விட்டுர்றானுங்க... Bloody buggers...

Philosophy Prabhakaran said...

@ ஜி.ராஜ்மோகன்
// அக அக ஆகா ஒரே கொழப்பமா இருக்கு பாஸ் . ஆனாலும் இந்த படம் உலகம் முழுவதும் 250 பிரிண்ட்
போடப்பட்டு இருக்காம் . என்னத்த சொல்ல . அது சரி elred குமார் யாரு ? //

சோக்கா ஒரு ட்ரைலர் ரெடி பண்ணாலே போதும் தல... போட்ட காசை தட்டிடுவாங்க...

Philosophy Prabhakaran said...

@ Riyas
// தமிழன் மலயாளிகளோட சண்டை பிடிச்சாலும் மலயாள பிகருகள விடமாட்டானுகளே,,

தமிழேண்டா! //

அது கற்பனைத்தமிழ்... இது விற்பனைத்தமிழ்...

Philosophy Prabhakaran said...

@ Ramesh Mani
// Dear Prabha,

Like your cinima vimarsanam..... //

நன்றி நண்பா...

சொறியார் said...

அமலா பாலை பாத்தா காசுக்கு நான் தேங்காய் பால் இடியாப்பமாவது சாப்போட்டிருப்பேன்!மணி வேஸ்ட் எனேர்ஜி வேஸ்ட் டைம் வேஸ்ட்!

Vadakkupatti Raamsami said...
This comment has been removed by the author.
Vadakkupatti Raamsami said...
This comment has been removed by the author.
பல்பு பலவேசம் said...
This comment has been removed by the author.
மனித புத்திரன் said...
This comment has been removed by the author.
N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை பிரபா. பகிர்தலுக்கு நன்றி.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

சார், இது கெடக்குது கழுத, நீங்க காதலில் சொதப்புவது எப்படிக்கு இன்னும் விமர்சனம் போடலியா?

Philosophy Prabhakaran said...

@ சொறியார், வடக்குபட்டி ராம்சாமி, விடுதலை கரடி, மனித புத்திரன்

இந்த நாலு ப்ரோபைலும் ஒரே ஆளோடது தான்னு எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகம் இருந்தது... அது இன்னைக்கு கிளியர் ஆயிடுச்சு...

நானும் ஒரே பதிலாவே சொல்லிடுறேன்...

சுசித்ராவின் குரல் விசித்திரமான குரல் அது யாருக்கும் பொருந்தாது... ரொம்ப செயற்கையா இருக்கும்... அதனால ஊத்திக்கிச்சு....

ஏக் தீவானா தா தோல்விக்கு காரணம் ஹீரோயினுடைய பின்னணி குரல் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது...

அவாவா அவாவா குரல்ல பேசணும் என்பதே என்னுடைய அவா... ஆனா இப்பல்லாம் எந்த நடிகைக்கு தமிழ் தெரியுது...

பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவிற்கு குரல் கொடுத்த ரதி என்னுடைய சாய்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// விமர்சனம் அருமை பிரபா. பகிர்தலுக்கு நன்றி. //

நன்றி பிரசாத்...

Philosophy Prabhakaran said...

@ Dr. Butti Paul
// சார், இது கெடக்குது கழுத, நீங்க காதலில் சொதப்புவது எப்படிக்கு இன்னும் விமர்சனம் போடலியா? //

படம் பார்த்தாச்சு தல... டைப் அடிக்க நேரமில்லை...

Try 🆕 said...

கலக்கல் விமர்சனம்.
நன்றி.