அன்புள்ள வலைப்பூவிற்கு,
அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். அதுவும் கட்டாயம் எதிர்கால தங்க்ஸை அழைத்துச்செல்ல வேண்டும் என்பது திட்டம்.
ஏற்கனவே குறும்படத்தில் பார்த்த அதே கதைதான். சித்தார்த்தும், அமலா பாலும் காதலிக்கிறார்கள், தவறான புரிதல்களால் பிரிகிறார்கள். மறுபடியும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை. கிளைக்கதைகளாக அமலா பாலின் பெற்றோர், சித்தார்த்தின் நண்பர், நண்பரின் நண்பர் ஆகியோரது காதல்களும் இருக்கின்றன.
சித்தார்த் ஜாலியான கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்துபவர். இவருடைய வரலாற்றை திரும்பிப்பார்த்தால் இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருக்கும். இதிலும் அப்படியொரு ஜாலியான கேரக்டரை அசால்ட்டாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழி நாயகனாக வலம்வந்தவர் இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து முதல் பந்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார்.
அமலா பால் (இந்தமுறை கன்னுக்குட்டி, ஆட்டுக்குட்டின்னு எழுதினா தங்க்ஸ் வருத்தப்படுவார்) 2012 ஆரம்பிச்சதுல இருந்து வதவதன்னு அம்மணி நடிச்ச படமா வந்துட்டு இருக்கு. எதை பாக்குறது எதை விடுறதுன்னு தெரியல. ஆனா இந்த படத்துல எதையும் பார்க்க விடாம இழுத்து போர்த்திட்டு நடிச்சிருக்கார். அம்மணியின் சிகையலங்காரமும், உடையலங்காரமும் அட்டகாசம்ன்னு தங்க்ஸ் சொல்லிக்கொண்டே இருந்தார்.
குறும்படத்தில் நடித்த அதே நண்பர்கள். இருவருமே பெஸ்ட் செலக்ஷன். குறிப்பாக குண்டு கம் குறும்பு நண்பர் சொல்லும் வசனங்களும் செய்யும் முகபாவனைகளும் ஒரிஜினல் நண்பர்களை பார்த்த அனுபவம் கிடைத்தது.
சித்தார்த்தின் அப்பா அம்மாவாக ரவி ராகவேந்திரா – ஸ்ரீரஞ்சனி. தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் பெற்றோர்கள். நிஜத்துல இந்தமாதிரி அப்பா அம்மா எங்கேயாவது இருந்தா கூரியர்ல அனுப்பி வையுங்கப்பா. அமலா பாலின் பெற்றோராக சுரேஷ் – சுரேகா வாணி. உண்மையிலே சித்தார்த் – அமலா பாலை விட இந்த இணைதான் செம ரொமாண்டிக். அந்த லவ் லெட்டர் பிரமாதம்.
எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நண்பன் படத்தில் சில நொடிகள் வந்ததற்கே சிலிர்த்தது. இந்தப்படத்தில் நிறைய காட்சிகளில் வந்து நிமிர வைத்துவிட்டார். (நோ டபுள் மீனிங்).
தமன் இசையில் பாடல்கள் அனைத்துமே வழவழ கொழகொழ. எதுவுமே மனதில் ஒட்டவில்லை. “அழைப்பாயா... அழைப்பாயா...” பாடல் மட்டும் ஓகே ரகம்.
வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. “பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்டுற அளவுக்கு பசங்களால என்னிக்குமே காட்ட முடியாது” என்று ஆரம்பமே அமர்க்களம். “ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்” என்பது போன்ற வசனங்கள் வாழ்க்கைக்கல்வி.
முதல் பாதி முழுவதுமே கிண்டலும் சிரிப்புமுமாக ஜாலியாக நகர்ந்தது. இரண்டாம் பாதியில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று யோசித்தபோது நண்பனின் திருமணம், வெளியூர் பயணம் என்று சற்றே போரடித்தாலும் அவ்வப்போது சில நல்ல காட்சிகள் வந்து அந்த குறையை போக்கிவிட்டன. திரையுலகமே பார்க்காத அதிசயம், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட், ஹாலிவுட்டையே மிரட்டும் தொழில்நுட்பம் இப்படியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் முப்பத்தி ஆறே நாட்களில் சொதப்பாமல் எளிமையாகவும் அழகாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரத்தை தந்திருக்கிறார்கள். சுரேஷ் – சுரேகா வாணி காதலோடு சேர்த்து, திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு பின் காதலிப்பவர்களுக்கும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இது படமல்ல பாடம்...!
டைட்டில் உதவி: ஜேம்ஸ் கேமராமேன்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
38 comments:
டைட்டிலை நல்லாத்தேன் வைக்கிறீர்கள். இதில் இப்படி...நேற்று அம்புலிக்கு வைத்த மாதிரி..
என் ரசனை அமலா பால் விஷயத்தில் மட்டும் வேறுபடுகிறது.எனக்கு அவரோட இந்தபட ஸ்டில்கள்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.அவர் இதுவரை நடித்த எந்த படத்திலும் நல்லா இல்லை.
பாத்துரவேண்டியதுதான்...
உண்மையிலே சித்தார்த் – அமலா பாலை விட இந்த இணைதான் செம ரொமாண்டிக். அந்த லவ் லெட்டர் பிரமாதம். //
யோவ் , கன்னுகுட்டிய சைட் அடிக்க சொன்னாக்கா பசுமாட்ட சைட் அடிச்சுட்டு வந்துருக்க ???
பிரபா , வீ வாண்ட் மோர் எமோசன் ......
நமக்கும் கொஞ்சம் வாழ்க்கைக் கலவி ... சீ ... கல்வி தேவைப்படுது. இதைப் பார்த்து கொஞ்சம் படித்துக்கொள்வோம்.
விமர்சனம் சூப்பர் ...
அந்த "எஸ்.எஸ்.மியூசிக் பூஜா" வின் FRIEND ஆ வர்ற, சித்தார்த்திடம் லவ்வுக்கு ப்ரோபோஸ் பண்ண பொண்ணு யாருங்கண்ணா..
Detail please..
---Paran
சார் நம்ம அமலாபாலா இந்த படத்துல எதையும் பார்க்க விடாம இழுத்து போர்த்திட்டு நடிச்சிருக்காங்க!?... கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே!.. மரியாத்தா ஏன் தான் என்னை இப்படி சோதிக்கிறாள்ன்னு தெரியலையே...
@ Chilled Beers
// டைட்டிலை நல்லாத்தேன் வைக்கிறீர்கள். இதில் இப்படி...நேற்று அம்புலிக்கு வைத்த மாதிரி.. //
இது ஜேம்ஸ் கேமராமேன் கிட்ட இருந்து சுட்ட டைட்டில்...
// என் ரசனை அமலா பால் விஷயத்தில் மட்டும் வேறுபடுகிறது.எனக்கு அவரோட இந்தபட ஸ்டில்கள்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.அவர் இதுவரை நடித்த எந்த படத்திலும் நல்லா இல்லை. //
அது சரி... பாந்தமா இருக்குற அமலா பாலை நாம என்ன கட்டிக்கிட்டு குடும்பமா நடத்தப்போறோம்...
@ சாகசன்
// யோவ் , கன்னுகுட்டிய சைட் அடிக்க சொன்னாக்கா பசுமாட்ட சைட் அடிச்சுட்டு வந்துருக்க ??? //
யோவ் சைட் அடிக்கலைய்யா... இது நெகிழ்ச்சி... ஃபீலிங்க்ஸ்...
@ ஹாலிவுட்ரசிகன்
// நமக்கும் கொஞ்சம் வாழ்க்கைக் கலவி ... சீ ... கல்வி தேவைப்படுது. இதைப் பார்த்து கொஞ்சம் படித்துக்கொள்வோம். //
ரெண்டுமே எல்லோருக்கும் தேவைப்படுற விஷயம்தான்...
@ Paran
// விமர்சனம் சூப்பர் ...
அந்த "எஸ்.எஸ்.மியூசிக் பூஜா" வின் FRIEND ஆ வர்ற, சித்தார்த்திடம் லவ்வுக்கு ப்ரோபோஸ் பண்ண பொண்ணு யாருங்கண்ணா..
Detail please.. //
அடடே... அந்த முகம் நினைவில் இல்லையே... படத்தின் டிவிடி வரட்டும்... நிச்சயம் உங்களுக்காக பார்த்து சொல்கிறேன்...
@ எஸ்.எஸ்.பூங்கதிர்
// சார் நம்ம அமலாபாலா இந்த படத்துல எதையும் பார்க்க விடாம இழுத்து போர்த்திட்டு நடிச்சிருக்காங்க!?... கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே!.. மரியாத்தா ஏன் தான் என்னை இப்படி சோதிக்கிறாள்ன்னு தெரியலையே... //
கவலைப்படாதீங்க... மாரியாத்தா ஒரு கதவை அடைச்சா நிச்சயம் இன்னொரு கதவை திறப்பா...
\\இந்தப்படத்தில் நிறைய காட்சிகளில் வந்து நிமிர வைத்துவிட்டார். (நோ டபுள் மீனிங்). \\ எங்கடா டபுள் மீனிங் அப்படின்னு திரும்ப போய் படிச்சு பார்த்து..ஓஹோ ...அதுவா..ன்னு அப்புறமா விளங்குச்சு. அது சரி, இதென்ன எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேங்கிற மாதிரியில்ல இருக்கு!!
ஆஹா ஹாஆஆஆஆஆஆ ....சுபேரா இக்குதூஉ அண்ணா ....உங்க ஸ்டைல் சான்சே இல்லைப் போங்க ......... நிறைய சிரிச்சி போட்டேன் காலைலயே...
நன்றி அண்ணா
பாக்கணும் பாஸ்! குறும்படம் பாத்தப்பவே அப்பிடிப் பிடிச்சுப் போச்சு!
பிரபா ,நமக்கும் கொஞ்சம் வாழ்க்கைக் கலவி ... சீ ... கல்வி தேவைப்படுது. இதைப் பார்த்து கொஞ்சம் படித்துக்கொள்வோம்.
ரங்க்ஸ்க்கு அம்புட்டு பயமா பிரபா? மூன்று தடவை மாய்ந்து மாய்ந்து எழுதி இருப்பதால் அன்பாகத் தானிருக்கும் என்று உறுதி செய்யப் படுகிறது:-))
////அமலா பால் (இந்தமுறை கன்னுக்குட்டி, ஆட்டுக்குட்டின்னு எழுதினா ரங்க்ஸ் வருத்தப்படுவார்)///
என்ன தல போன தடவ அடி கொஞ்சம் பலமோ....?
////ஆனா இந்த படத்துல எதையும் பார்க்க விடாம இழுத்து போர்த்திட்டு நடிச்சிருக்கார். /////
மத்த படங்கள்லேயும் சொல்லிக்கிறா மாதிரி அப்படி ஒண்ணும் தெரியலீங்களே?
/////எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நண்பன் படத்தில் சில நொடிகள் வந்ததற்கே சிலிர்த்தது. இந்தப்படத்தில் நிறைய காட்சிகளில் வந்து நிமிர வைத்துவிட்டார். (நோ டபுள் மீனிங்). ///////
வரவர பின்நவீனத்துல கலக்க ஆரம்பிச்சிட்டீங்க.......
/////தமன் இசையில் பாடல்கள் அனைத்துமே வழவழ கொழகொழ. எதுவுமே மனதில் ஒட்டவில்லை. “அழைப்பாயா... அழைப்பாயா...” பாடல் மட்டும் ஓகே ரகம். ///////
ரொமாண்டிக் படங்களுக்கு பாட்டு ரொம்ப முக்கியம்..... இதுல சொதப்பிட்டாங்க போல....
விமர்சனம் சூப்பர் ! நன்றி சார் !
பார்க்கனும்னு எதுவும் கட்டாயங்களா?????????
அன்புள்ள நண்பருக்கு வணக்கம்...
வலைப்பதிகளை தாங்கள் வெற்றிகரமாக எழுதி வருவதை அறிவோம். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.
தமிழ் இணைய உலகில் திரட்டிகளின் பங்கு மிகப்பெரியது. தமிழில் திரட்டிகள் பல இருந்தாலும் புதிதாக hotlinksin.com என்னும் திரட்டியை துவக்கியுள்ளோம். வலைப்பதிவர்களாகிய தாங்கள் தங்கள் இடுகைகளை இந்த திரட்டியில் இணைத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், hotlinksin.com திரட்டி குறித்த செய்தி ஒன்றை தங்கள் வலைப்பதிவில் எழுதிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
ஹாட்லிங்க்ஸ் இன் டாட் காம் குழு
//இந்தப்படத்தில் நிறைய காட்சிகளில் வந்து நிமிர வைத்துவிட்டார். (நோ டபுள் மீனிங்). //
அமலா பாலுக்கே நிமிரலயாம் .. நீங்க வேற!!
வலைப்பதிகளை தாங்கள் வெற்றிகரமாக எழுதி வருவதை அறிவோம். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி!!!!
:-)
#Joopar
தியேட்டருக்குப் போயி பார்க்குற லெவலுக்கு ஒர்த்தா பாஸூ?
Anne, directorai pathi onnume sollalaiye?
@ Jayadev Das
// எங்கடா டபுள் மீனிங் அப்படின்னு திரும்ப போய் படிச்சு பார்த்து..ஓஹோ ...அதுவா..ன்னு அப்புறமா விளங்குச்சு. அது சரி, இதென்ன எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேங்கிற மாதிரியில்ல இருக்கு!! //
கருமம் அதை எழுதுறதே மத்தவாளுக்கு புரியணும்ன்னு தானே...
@ கலை
// ஆஹா ஹாஆஆஆஆஆஆ ....சுபேரா இக்குதூஉ அண்ணா ....உங்க ஸ்டைல் சான்சே இல்லைப் போங்க ......... நிறைய சிரிச்சி போட்டேன் காலைலயே...
நன்றி அண்ணா //
நன்றி கலை... ஆனா அவ்வளவு காமெடியாவா இருக்கு...
@ ஜீ...
// பாக்கணும் பாஸ்! குறும்படம் பாத்தப்பவே அப்பிடிப் பிடிச்சுப் போச்சு! //
பாருங்க ஜீ... நல்லா இருக்கு...
@ bala
// பிரபா ,நமக்கும் கொஞ்சம் வாழ்க்கைக் கலவி ... சீ ... கல்வி தேவைப்படுது. இதைப் பார்த்து கொஞ்சம் படித்துக்கொள்வோம். ///
பாலா என்ன அநியாயம் இது... ரெண்டு பிள்ளைகள பெத்துட்டு இப்படி ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுறீங்க... போய் புள்ளகுட்டிங்கள படிக்க வையுங்க...
@ எம் அப்துல் காதர்
// ரங்க்ஸ்க்கு அம்புட்டு பயமா பிரபா? மூன்று தடவை மாய்ந்து மாய்ந்து எழுதி இருப்பதால் அன்பாகத் தானிருக்கும் என்று உறுதி செய்யப் படுகிறது:-)) //
அன்பு தான் அப்துல்... பயமெல்லாம் இல்லை...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// என்ன தல போன தடவ அடி கொஞ்சம் பலமோ....? //
ம்ஹூம்... அன்பு பலம்... (சமயத்தில் ரங்க்ஸ் அனானியா வந்து பின்னூட்டம் போடுறாராம்... Be Careful... நான் என்னைச் சொன்னேன்...)
// மத்த படங்கள்லேயும் சொல்லிக்கிறா மாதிரி அப்படி ஒண்ணும் தெரியலீங்களே? //
இப்பதான் கொஞ்ச கொஞ்சமா வர்றார்... அவசரப்படாதீங்க...
// வரவர பின்நவீனத்துல கலக்க ஆரம்பிச்சிட்டீங்க....... //
எல்லாம் பதிவுலக பெரியவங்க கத்துக்கொடுக்குறது தான்...
// ரொமாண்டிக் படங்களுக்கு பாட்டு ரொம்ப முக்கியம்..... இதுல சொதப்பிட்டாங்க போல.... //
ஆமாம் சொதப்பல் தான்...
@ திண்டுக்கல் தனபாலன்
// விமர்சனம் சூப்பர் ! நன்றி சார் ! //
நன்றி சார்... உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி...
@ மனசாட்சி
// பார்க்கனும்னு எதுவும் கட்டாயங்களா????????? //
வேண்டாம்... இது உங்களுக்கான படம் இல்லை...
@ ஜேகே
// அமலா பாலுக்கே நிமிரலயாம் .. நீங்க வேற!! //
அதென்ன அமலா பாலுக்கே... பூஜா அமலாவை விட ஜூப்பர் ஃபிகர்...
// வலைப்பதிகளை தாங்கள் வெற்றிகரமாக எழுதி வருவதை அறிவோம். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி!!!! //
நான் என்னவோ காமராஜர், பெரியார் மாதிரி பணி அதுஇதுன்னு சொல்லிக்கிட்டு... போய் வேற வேலையை பாருங்க ஜேகே...
@ வெளங்காதவன்
// #Joopar //
நன்றி தல...
@ யுவகிருஷ்ணா
// தியேட்டருக்குப் போயி பார்க்குற லெவலுக்கு ஒர்த்தா பாஸூ? //
ஆமாம் தல... ஒர்த் இருக்கு...
@ Anonymous
// Anne, directorai pathi onnume sollalaiye? //
கடைசி இரண்டு பத்திகளில் சொன்னவை இயக்குனரையே சேரும்...
Post a Comment