அன்புள்ள வலைப்பூவிற்கு,
கேரமை கண்டுபிடித்தவர் யார்...?
“கேக்குறவன் கேனையா இருந்தா கேரம் போர்டை கண்டுபுடிச்சது கே.எஸ்.ரவிகுமாருன்னு சொல்லுவியே...” – இந்த வசனத்தை கேட்டதும் யாருக்கு என்ன ஃபீலிங் வந்ததோ, எனக்கு ஆமால்ல, கேரம் போர்டை கண்டுபிடிச்சது யாருன்னு கேள்வி வந்தது. தேடலில் இறங்கினேன். இன்னார் தான் கண்டுபிடித்தார் என்று கேரம் போர்டு பற்றிய உறுதியான குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பண்டைய இந்திய அரசர்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும், ஆளவந்த மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும், இன்னும் சிலர் பிரிட்டிஷ் மக்களின் கைங்கரியம் என்றும் பிட்டு பிட்டாக தகவல் கிடைக்கின்றன. 1935ல் முதன்முதலில் இலங்கையில் சர்வதேச கேரம் போட்டிகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் கேரம் போன்ற பல விளையாட்டுகள் (உதாரணம்: பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர்) பரவிக்கிடந்தாலும் கேரம் போர்டு தெற்காசியாவில் மட்டுமே பிரசித்தி பெற்றது.
சம்பிரதாயங்கள் சரியா...?
இத்துப்போன இந்துமத சம்பிரதாயங்களையும், அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் அறிவிலிகளையும் நினைத்தால் சிரிப்பும், கோபமும் கலந்து வருகிறது. சில சடங்குகள் சின்னப்பசங்க சொப்பு சாமான் விளையாடுவதை விட செம காமெடியாக இருக்கின்றன. இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு விவரமாக ஒரு கேள்வி கேட்டால், “நீ சின்னப்பைய பேயாம இருக்கணும்...!” என்றோ, “எளந்தாரிப் பயலுவளுக்கு எடக்கு மடக்கா பேசுறதே வேலையா போச்சு...!” என்றோ, அதுவுமில்லை என்றால் “அவங்கப்பா அவரை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சாரு தெரியுமா...? அவரைப் போய் கிண்டலடிக்கிறியே...!” (டேய்... நான் என்ன கேக்குறேன்... நீ என்ன சொல்ற...) என்று சம்பந்தமே இல்லாமல் செண்டிமெண்ட் ஜூஸைப் பிழிந்து நம் வாயை அடக்க முயற்சி செய்கிறார்களே தவிர பதில் மட்டும் வருவதே இல்லை.
கோழிக்கறியில் ஜனாதிபதி...!
நம்மூரில் அடிக்கடி இதய வடிவிலான கேரட், ஏசுநாதர் முக அமைப்பை கொண்ட கத்திரிக்காய் வகையறா விசித்திரங்களை தினத்தந்தி பெட்டிச்செய்திகளில் படித்திருப்பீர்கள். பெரும்பாலும் அவை இதய வடிவிற்கோ, ஏசுநாதர் முகத்திற்கோ சம்பந்தமே இல்லாமல் இருக்கும் என்பது வேறு விஷயம். அதுமாதிரி அமெரிக்காவில் ஒரு பெண் வாங்கிய கோழிக்கறி வறுவல் மறைந்த ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் போலவே இருக்க, அவர் அதை பத்திரமாக வீட்டுக்கு கொண்டுவந்து குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கிறார். சம்பவம் நடந்தது மூன்றாண்டுகளுக்கு முன்பு. அன்றிலிருந்து அதனை வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தவர், சமீபத்தில் அதனை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டிருக்கிறார். ஏலம் போன தொகை - $8100. ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4 லட்சம்.
கண்டதும் காதல்...!
அடர் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இளம் பெண்ணொருத்தி “ஹேய்ய்ய்ய்ய்ய்ய்....” என பெருங்குரலெடுத்து ஆரவாரமாக இரு கைகளையும் விரித்து, அண்ணாந்து பார்த்தபடி மழையை ரசித்து நனைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது மழையில் ஒரு நாய்க்குட்டி நனைய, இளம்பெண் நாயை கையில் எடுத்துக்கொண்டு, “ஜூஜூஜூஜூஜூ குளிருதாடா... ஓரமா போயிடலாமா டா...” என்று கொஞ்சிக்கொண்டே மெய்மறந்து நடந்து வருகிறாள். ரோட்டோர குழியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது. இளைஞன் நிமிர்ந்து பார்க்கிறான். பூம்...! Love at First Sight...! தமிழ் சினிமாவே பார்த்திராத இப்படியொரு அரிய காட்சியை தாங்கி வெளிவந்திருக்கும் ஒலகப்படம் – காதல் பாதை.
ஜொள்ளு:
நெருங்கிவந்து பார்த்தேன்... நீ நெஞ்சழுத்தக்காரி...! |
ட்வீட் எடு கொண்டாடு:
நல்ல வேளை எஸ்.ரா கம்பியூட்டர் புக்கெல்லாம் எழுதல..“பெரும் இரையை முழுங்கிய சர்பம் போல இருக்கிறது இந்த சீ++ பிரோக்ராம்"
எவ்வளவு டீசண்ட்டா இருக்கவறாலயும் பப்ஸ் சாப்புடும்போது அத மெய்ண்டைன் பண்ண முடியறதில்லை... #யுரேகா!!!
படிக்கிறப்போ 'எனக்கு ஆள் இருக்கு மச்சி'னு சொன்னா கெத்தா பார்ப்பாய்ங்க..இப்போ பரிதாபமா பார்க்கிறாய்ங்க ! #அடிங்கொய்யால
அறிவான பெண்ணை அழகென்று புகழ்;அழகான பெண்ணை அறிவென்று புகழ்;2ம் இருக்கிற பெண்ணை பத்தி கவலைப்படாதே,அவங்க நம்ம கிட்ட பேசமாட்டாங்க
என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...
பார்த்தேன்...! ரசித்தேன்...!!
புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட நண்பர் சவுக்கத் ராஜா தளத்தில் ரசித்த புகைப்படம். நண்பர் சவுக்கத் ராஜா ஒரு ரியல் லைப் கார்த்திக் சுவாமிநாதன். பறவைகள் மீதான இவருடைய புகைப்படக்கலை பார்ப்பதற்கு ஆரவாரமில்லாமல் எளிதாக இருந்தாலும் அதை அவர் எவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருப்பார் என்று நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
கத்துக்குட்டிகள் கோப்பை
வருகிற செப்டம்பர் மாதம் இலங்கையில் நடக்க உள்ள T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பத்து அணிகளுடன் சேர்த்து பன்னிரண்டு அணிகள் விளையாட உள்ளன. இப்போது மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு கத்துக்குட்டி அணிகள் கலந்துக்கொள்ளும் Qualifier Cup நாளை ஷார்ஜாவில் துவங்குகிறது. இந்த தொடரில் நாம் ஏற்கனவே அறிந்த கென்யா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுடன் ஓமன், நேபால், உகாண்டா, இத்தாலி உட்பட பதினாறு அணிகள் கலந்துக்கொள்கின்றன. சமபலம் (!) பொருந்திய அணிகள் விளையாடும் போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு கியாரண்டி.
தக்காளி... இதை மட்டும் Mark Zuckerberg பார்த்தா... போடாங் ஒங் ஒங் ஒங் ஒங்...!
திருத்தம் & வருத்தம்
படுவா...! தங்க்ஸ்ன்னு எழுதுறதுக்கு பதிலா ரங்க்ஸ்ன்னு எழுதி வச்சிருக்கேன்... இதெல்லாம் நீ சொல்ல மாட்டியா... எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னைப் பத்தி என்னடா நினைப்பான்...! செய்யறதையும் செஞ்சிட்டு நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி நிக்கிறான் பாரு...!
அறிவிப்பு
உங்கள் அபிமான (!!!) பிரபாகரனின் தத்துபித்துவங்கள் வலைப்பூ டாட் காமாக, அதாவது www.philosophyprabhakaran.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை மாற்றித்தந்து உதவிய தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
66 comments:
முதலில் வடையை கவ்வு, பதிவை அப்புறமா பார்த்துக்கலாம், ஹா...ஹா.ஹா...
கேரம், சீட்டாட்டம், கிரிக்கெட் மூனும் ஒண்ணேதான், சூதாட்டங்கள், உருப்படவே முடியாது.
\\சம்பிரதாயங்கள் சரியா...?\\ எது என்று குறிப்பிட்டு சொன்னால் தானே மாப்பு அது சரியா தவறா என்று சொல்ல முடியும்? இன்றைக்கு இந்து மதத்தில் உண்மைகளை விட போலிகள் அதிகம் உலாவுகின்றன. [ரஞ்சிதானந்தா, மேல்வருவத்தூறான், தங்கக் கோவில் கட்டிய வேலூர்க் காரன், 'பீடி குடித்தாலும் வாய் நாறாத' யாகாவா முனி, திருவண்ணா மலைக் காரன், வடலூரில் விளக்கு புடிச்சவன், கட்டிபிடி வைத்தியம் புகழ் கேரளாக்காரி, அமெரிக்காவில் பேசிய தலப்பாக் கட்டு, கேரளாவின் ஐயோ அப்பா, 'கல்கி' புருஷன் பொண்டாட்டி பொறம்போக்குகள் ...... என்று இந்தப் பட்டியலுக்கு முடிவேயில்லை!!] நீ அங்கெல்லாம் எதையாச்சும் பார்த்துட்டு வந்து கேட்டா அதுக்கு யாரும் விளக்கம் தர முடியாது. மற்றபடி வேத வியாசரின் இலக்கியங்கள் படி நடந்தா அதுக்கு ஈடு இணை உலகத்தில் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கப் பட்டுள்ளன, ஆனால் நம் முன்னோர்கள் சரியா அதை விளக்காதனால் இப்படி கேள்விகள் கேட்டுக் கொண்டு நம்மை நாமே அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு உலாத்திக் கொண்டிருக்கிறோம். [மற்ற மதங்க பற்றி இப்படி கருத்து சொன்னால் சும்மாயிருப்பார்களா? அதுதான் சகிப்புத் தன்மை,சனாதன தர்மத்தின் சிறப்பு!!
\\ஏலம் போன தொகை - $8100. ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4 லட்சம்.\\ இளிச்சவாப் பயல்கள் நம்மூரில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் இருக்காங்க.
\\ரோட்டோர குழியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது. இளைஞன் நிமிர்ந்து பார்க்கிறான். பூம்...! Love at First Sight...!\\ நல்ல வேலை, அந்த இடத்தில் திறந்து வச்ச பாதாளச் சாக்கைடை இருந்திருந்தா “புலக்” என மேலே போயிருப்பாள்.
\\நெருங்கிவந்து பார்த்தேன்... நீ நெஞ்சழுத்தக்காரி...!\\ ...................ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்.........................................................................................................................
\\அறிவான பெண்ணை அழகென்று புகழ்;\\ பெண் எப்படி அறிவானவளா இருக்க முடியும்....:((
\\T20 உலக கோப்பை கிரிக்கெட்\\ எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..........
\\ தங்க்ஸ்ன்னு எழுதுறதுக்கு பதிலா ரங்க்ஸ்ன்னு எழுதி வச்சிருக்கேன்.\\ அது ஏதோ புதுசா டிஸ்கி, முஸ்கிகின்கிற மாதிரி புது வார்த்தைன்னு இல்ல நினைச்சேன்...!!
இதென்ன ஒயின் ஷாப்ல லேடி போட்டா இல்லாமல் ஆராய்ச்சிக்கட்டுரை போடுறீங்க.. நம்ம philo திருந்திட்டானா..?
திருந்திட்டானான்னு நெனச்சுக்கிட்டே மேலே படிச்ச.. இவன் உருப்படவே மாட்டான்னு உறுதி செஞ்சுட்டே.... தம்பி! 🐒
டாட் காம்க்கு வாழ்த்துக்கள் பிரபா....
ஒய்ன்ஷாப்பில் சரக்கு கொஞ்சம் மந்தம் தான்......
கேரம் பற்றி விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு படிச்சா, யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டியே....
அந்த போட்டோவ பார்த்ததும் குவாட்டரும், பீரும் சேந்து அடிச்ச கிக்கு , கலக்கல் பதிவு !!
ஜொள்ளு பட வாசகம் உங்கள் அக்மார்க் லொள்ளு உண்மையும் கூட !
ஜெய் சொன்னது போல எந்த சம்பிரதாயம் என்று சொன்னால்தானே தெரியும்?
ஒயின்ஷாப் மப்பு கொஞ்சம் கம்மிதான் தலைவா
//கேரமை கண்டுபிடித்தவர் யார்...?//
யாரு? யாரு?? யாரு??
//சம்பிரதாயங்கள் சரியா...?//
சாபம்
//கோழிக்கறியில் ஜனாதிபதி...!//
கோழிகறியை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மேதாவியை பாராட்டாமல் இருக்க முடியல
இந்த இந்துகளை சீண்டுவதே சில பேருக்கு வேலையா போச்சு
//கண்டதும் காதல்...!//
செம செம வெற்றி விழா தான் போங்க
//ஜொள்ளு://
யோவ் அஞ்சலிஆ ...
//ட்வீட் எடு கொண்டாடு://
ம்
//அறிவிப்பு//
வாழ்த்துக்கள்
//
வெட்டிப்புள்ள Priya @vettipullai
என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...//
சூப்பர் ட்வீட்!
சூப்பருங்கோ பாஸ்! :-)
//நல்ல வேளை எஸ்.ரா கம்பியூட்டர் புக்கெல்லாம் எழுதல..“பெரும் இரையை முழுங்கிய சர்பம் போல இருக்கிறது இந்த சீ++ பிரோக்ராம்"//
:-))
அஞ்சலிய ரொம்ப நெருங்கிப் பாத்திருக்கீங்க போல!
/////அதுமாதிரி அமெரிக்காவில் ஒரு பெண் வாங்கிய கோழிக்கறி வறுவல் மறைந்த ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் போலவே இருக்க, அவர் அதை பத்திரமாக வீட்டுக்கு கொண்டுவந்து குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கிறார்.//////
நாறிப்போயிருக்குமே?
//// ரோட்டோர குழியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது. இளைஞன் நிமிர்ந்து பார்க்கிறான். பூம்...! Love at First Sight...!///////
இதுதானுங்க அந்த ஜலபுல ஜங்........
////நெருங்கிவந்து பார்த்தேன்... நீ நெஞ்சழுத்தக்காரி...!//////
அழுத்தமெல்லாம் அதிகமாத்தான் இருக்கு, ஆனா ஒரிஜினலான்னுதான் தெரியல......
/////உங்கள் அபிமான (!!!) பிரபாகரனின் தத்துபித்துவங்கள் வலைப்பூ டாட் காமாக, அதாவது www.philosophyprabhakaran.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். //////
ஏன் இந்த வெளம்பரம் அதுவும் ஒரு மாமாங்கம் கழிச்சு.....?
அஞ்சலிய ஆ.வி அட்டையில பாத்தே அவஅவனுக்கு அண்ட்ராயர் ஆட்டம் கண்ட்ருச்சு.. ஏன்யா நீ வேற?
//இளம்பெண் நாயை கையில் எடுத்துக்கொண்டு, “ஜூஜூஜூஜூஜூ குளிருதாடா... ஓரமா போயிடலாமா டா... //
வெளங்கிரும்...
@ Jayadev Das
// முதலில் வடையை கவ்வு, பதிவை அப்புறமா பார்த்துக்கலாம், ஹா...ஹா.ஹா... //
நீங்களும் இதெல்லாம் கத்துக்கிட்டீங்களா சார்...
// கேரம், சீட்டாட்டம், கிரிக்கெட் மூனும் ஒண்ணேதான், சூதாட்டங்கள், உருப்படவே முடியாது. //
கேரம் போர்டை ஏன் அந்த லிஸ்டில் சேர்க்குறீங்க...
// இளிச்சவாப் பயல்கள் நம்மூரில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் இருக்காங்க. //
ஆமாம் தல...
// நல்ல வேலை, அந்த இடத்தில் திறந்து வச்ச பாதாளச் சாக்கைடை இருந்திருந்தா “புலக்” என மேலே போயிருப்பாள். //
உடனே ஹீரோ தொபுக்கடீர்ன்னு குதிச்சு காப்பாத்திடுவார்... ஹீரோ தொபுக்கடீர்ன்னு குதிச்சார்ல அது பாதாள சாக்கடைல இல்ல... காதல்ல...
// ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்......................................................................................................................... //
என்ன இது பிட்டுப்பட பேக்ரவுண்ட் மியூசிக் மாதிரி இருக்கு...
// பெண் எப்படி அறிவானவளா இருக்க முடியும்....:(( //
உங்க மனைவி கிட்ட இந்த கேள்வியை கேட்டுப் பார்க்கவும்...
// எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.......... //
இதுவும் ஒருவகையான மூடநம்பிக்கை கம் போதை தான்...
// அது ஏதோ புதுசா டிஸ்கி, முஸ்கிகின்கிற மாதிரி புது வார்த்தைன்னு இல்ல நினைச்சேன்...!! //
நான் கூட பதிவுலகம் வந்து ரொம்ப நாளைக்கு அர்த்தம் தெரியாம தான் தல இருந்தேன்...
@ ஷர்மி
// இதென்ன ஒயின் ஷாப்ல லேடி போட்டா இல்லாமல் ஆராய்ச்சிக்கட்டுரை போடுறீங்க.. நம்ம philo திருந்திட்டானா..? //
ஒயின்ஷாப்புக்கு வேறொரு கலர் கொடுக்க முயல்கிறேன் மேடம்... சீக்கிரமே எப்படி மாத்துறேன் பாருங்க...
// திருந்திட்டானான்னு நெனச்சுக்கிட்டே மேலே படிச்ச.. இவன் உருப்படவே மாட்டான்னு உறுதி செஞ்சுட்டே.... தம்பி! �� //
என்ன மேடம்... ஆனந்த விகடன் அட்டைப்படத்துல போட்டா தப்பில்ல... நாங்க போட்டா மட்டும் தப்பா...
@ தமிழ்வாசி பிரகாஷ்
// டாட் காம்க்கு வாழ்த்துக்கள் பிரபா.... //
நன்றி தல...
// ஒய்ன்ஷாப்பில் சரக்கு கொஞ்சம் மந்தம் தான்...... //
better luck next time... எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்...
// கேரம் பற்றி விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு படிச்சா, யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டியே.... //
நான் என்ன பண்றது தல... வலையை போட்டு தேடிட்டேன்...
@ Sathish
// அந்த போட்டோவ பார்த்ததும் குவாட்டரும், பீரும் சேந்து அடிச்ச கிக்கு , கலக்கல் பதிவு !! //
பார்த்து சார், ஆப்பாயில் போட்டுடாதீங்க...
@ PREM.S
// ஜொள்ளு பட வாசகம் உங்கள் அக்மார்க் லொள்ளு உண்மையும் கூட ! //
நன்றி ப்ரேம்...
@ மனசாட்சி
// வாழ்த்துக்கள் //
நன்றி தல... உங்களுடைய சில பின்னூட்டங்கள் பாராட்டா, வசையான்னு புரியல... கிர்ர்ர்ருன்னு இருக்கு...
@ நா.மணிவண்ணன்
// இந்த இந்துகளை சீண்டுவதே சில பேருக்கு வேலையா போச்சு //
வேணாம் மணி... ஓடிப்போயிடுங்க...
@ ! சிவகுமார் !
// சூப்பர் ட்வீட்! //
நானும் ரசித்தேன்... வரிசையா காமெடி ட்வீட் படிச்சிட்டே வரும்போது ஒரு உருக்கமான ட்வீட்...
@ வெளங்காதவன்
// :-) //
:D
@ ஜீ...
// அஞ்சலிய ரொம்ப நெருங்கிப் பாத்திருக்கீங்க போல! //
நீங்க வேற... ரெண்டு நாளா மானிட்டரை தலைகீழ கவுத்தியெல்லாம் பார்த்துட்டேன்... ம்ஹூம்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நாறிப்போயிருக்குமே? //
ஆமாம் நாறியிருக்கும்... அதைவிட காமெடி ஆன்லைனில் இந்த விளம்பரத்தை பார்த்த ஒருவர், கூட சல்ஸா டிப் கொடுப்பீங்களான்னு கேட்டு கலாய்ச்சாராம்...
// அழுத்தமெல்லாம் அதிகமாத்தான் இருக்கு, ஆனா ஒரிஜினலான்னுதான் தெரியல...... //
மசாலா கபே இணை இயக்குனர் கேபிளுக்கு தெரிந்திருக்கும்...
// ஏன் இந்த வெளம்பரம் அதுவும் ஒரு மாமாங்கம் கழிச்சு.....? //
அறிவிப்பு கொடுத்தே ஆகணும்ன்னு தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் தாங்க சொன்னாரு... எங்க சொருகுறதுன்னு தெரியாம ஒயின்ஷாப் போடுற வரைக்கும் காத்திருந்தேன்...
@ மயிலன்
// அஞ்சலிய ஆ.வி அட்டையில பாத்தே அவஅவனுக்கு அண்ட்ராயர் ஆட்டம் கண்ட்ருச்சு.. ஏன்யா நீ வேற? //
ஆமாம் ஆவி பறக்க விற்பனையாச்சாம்...
// அண்ட்ராயர் ஆட்டம் கண்ட்ருச்சு //
ஒன்றும் விளங்கவில்லையே...
@ Jayadev Das & பாலா
என்னைப் பொறுத்தவரையில் உண்மை, போலி என்று எதுவும் இல்லை... இன்றைய போலிகளே நாளைய உண்மைகளாக மாறுகின்றன... உதாரணத்திற்கு இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்து முத்தமிழறிஞர் கலைஞர்ன்னு பள்ளிக்கூட பாட புத்தகங்களில் மாணவர்கள் படிப்பார்கள்...
சரி விஷயத்துக்கு வருகிறேன்... நான் பாதிக்கப்பட்ட சம்பவம் ஒரு பாலூற்றும் விழாவில் நடந்தது... இறந்தவர் என்னுடைய தாத்தா... ஒன்றா இரண்டா... எதைச் சொல்வேன்... இவற்றில் இறந்தவர் கையில் காசு கொடுத்து வாங்குவது, இறந்தவரை குளிக்க வைக்கும்பொருட்டு தலையில் சீயக்காய் தேய்ப்பது, ஏன் வாய்க்கு அரிசி போடுவதைக் கூட மூட நம்பிக்கையாக நினைக்காமல் உணர்வுப்பூர்வமான நிகழ்வாக நினைத்துக்கொள்ளலாம்...
இறந்தவருடைய பேரன்கள் ஏன் நெய் பந்தம் ஏந்த வேண்டும்...?
இறந்தவருடைய மகன்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்...?
இறந்தவர் இன்ன சாதி என்பதை பொறுத்து பிணத்தை உட்கார வைத்து அழைத்து செல்வது, படுக்க வைத்து அழைத்துச் செல்வது என பல பாகுபாடுகள் இருக்கின்றதே... ஏன்...?
பிணத்திற்கு நெருப்பு வைப்பதற்கு முன் ஒரு மண் குடத்தில் தண்ணீர் ஏந்தி மூன்று முறை சுற்றி வருகிறார்களே... ஏன்...? ஒவ்வொரு முறை சுற்றி வந்ததும் ஒரு ஓட்டை போடுகிறார்களே அது ஏன்...?
நெருப்பு மூட்டியதும் திரும்பிப் பார்க்காம போங்கன்னு சொல்றாங்களே அது ஏன்...?
மறுநாள் காலை எலும்புகளை சேகரித்து ஒரு வாழை இலையில் படையல் போல வைத்தார் வெட்டியான்... அதன்பிறகு அதன்மேலே தேன், அரிசி, வாழைப்பழம் உட்பட கிட்டத்தட்ட ஒரு பதினைந்து வகையான உணவுப்பொருட்களை குழைத்து அபிஷேகம் செய்தார்கள்... அது எதற்காக...?
ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் ஒருமுறை என மகன்கள், பேரன்கள் என ஒவ்வொருவரும் தலா மூன்று முறை அந்த அபிஷேகத்தை செய்தார்கள்... அது ஏன்...?
காக்கைக்கு சோறு வச்சது மனிதநேயம்ன்னு லூஸுல விட்டுடுவோம்...
சேகரித்த எலும்புகளை கடலில் கரைக்க எடுத்துச் செல்லும்போது காசி காசி என்று சொல்லிக்கொண்டே போகச்சொன்னார் வெட்டியான்... அது எதற்காக...?
இதற்கெல்லாம் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இருக்கின்றனவா...?
இவை சாம்பிள்கள் மட்டுமே... சின்னச் சின்ன சம்பிரதாயங்கள் நிறைய இருக்கின்றன... உதாரணத்திற்கு எலும்புகளை வெட்டியானிடம் இருந்து வாங்கும்போது இப்படித்தான் வாங்க வேண்டும் என்ற ரூல்ஸ் கூட இருக்கிறதாம்... ஏன் இப்படியெல்லாம்...? ஏன் இந்த கொலவெறி...???
தல.. எல்லா மதத்துலயுமே இந்த மாதிரி பழக்கவழக்கம் இருக்கு... நமக்கு ஹிந்து வழக்கங்கள் தெரியுது.. எனக்கும் வழக்கம் இருக்கு... ஆனா ஏன், எதுக்கு-னு சொல்ல மாட்டேங்குறாங்க-னு கோபம் வரும். ஆனா என்ன பண்றது... நம்ம தலைமுறைக்கு கேள்வி கேக்க உரிமை இருக்கு. அவங்களுக்கு அது கூட இல்லாம இருந்துருக்கு.
ட்வீட்கள் எல்லாம் நல்லா இருந்துது :)
ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இன்னும் செம செம போஸ்டர் எல்லாம் போட்டு இருந்தாங்களே.. ஆனாலும் தி.மு.க காரங்க ஸ்டாலினோட பிறந்தநாளுக்கு வாழ்த்தலாம்.
அ.தி.மு.க-ல ஜெயலலிதா பிறந்த நாளுக்கு வாழ்த்துறவர்க்கு எவ்வளவு வயசா இருந்தாலும், ‘வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்’ தான் :) :)
அஞ்சலி போட்டோ சூப்பர் :)
//இறந்தவருடைய பேரன்கள் ஏன் நெய் பந்தம் ஏந்த வேண்டும்...?
இறந்தவருடைய மகன்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும்...?
இறந்தவர் இன்ன சாதி என்பதை பொறுத்து பிணத்தை உட்கார வைத்து அழைத்து செல்வது, படுக்க வைத்து அழைத்துச் செல்வது என பல பாகுபாடுகள் இருக்கின்றதே... ஏன்...?
பிணத்திற்கு நெருப்பு வைப்பதற்கு முன் ஒரு மண் குடத்தில் தண்ணீர் ஏந்தி மூன்று முறை சுற்றி வருகிறார்களே... ஏன்...? ஒவ்வொரு முறை சுற்றி வந்ததும் ஒரு ஓட்டை போடுகிறார்களே அது ஏன்...?
நெருப்பு மூட்டியதும் திரும்பிப் பார்க்காம போங்கன்னு சொல்றாங்களே அது ஏன்...?//
யோவ்.. மனசுல 'பராசக்தி' சிவாஜின்னு நெனப்பா. அடுத்த வாட்டி நேர்ல இதப்பத்தி பேசுய்யா. சட்டைய கிழிக்காம விட மாட்டோம். டேய். டெட்ட டேய்!!
\\கேரம் போர்டை ஏன் அந்த லிஸ்டில் சேர்க்குறீங்க...\\ விளையாட்டுன்னு சொன்னா கால்பந்து, ஹாக்கி, ஓட்டம், நீச்சல் மாதிரி இருக்கணும். அரை மணி நேரம் ஒரு மணி நேரத்துல முடியனும். விளையாடுறவன் உடல்/மன ஆரோக்கியம் மேம்படணும். சின்னப் பசங்களுக்கானதா இருக்கணும். கேரம், சீட்டாட்டம், கிரிக்கெட் - இதெல்லாம் நாள் கணக்கா ஆடுறாங்க.....ஆடுறாங்க..... ஆடிகிட்டே இருக்காங்க. இதுல எப்போ எது நடக்கும்னு சொல்லவே முடியாது, திறமையை விட அதிர்ஷ்டம் இருக்கணும். அதனால மைண்டு சகுனி மாதிரி ஆயிடும். கிழட்டு பசங்க, கை,கால் கண் போனவன், நம்மூர் மாமா மாதிரி வயிறு வச்சிருப்பவன், நோஞ்சான், இத்துப் போனவன் எல்லாம் இந்த ஆட்டங்களில் ஜொலிக்கிறானுங்க. இவனுங்களை கொண்டு போய் புட்பால் ஆடுங்கடா, ஓடுங்கடான்னு விட்டா எந்த கதி ஆவானுங்க? டென்னிசில் 25 வயசைத் தாண்டினாலே ஆட்டம் காணும்போது, கிரிக்கெட்டில் மட்டும் கொள் ஊன்றிக் கொண்டு போறவனும் ரிடையர் ஆக மாட்டேன்கிறான். இந்த ஆட்டங்களை ஆடுபவன், வேடிக்கை பார்ப்பவன் ரெண்டு பெரும் உருப்பட மாட்டானுங்க.
\\என்ன இது பிட்டுப்பட பேக்ரவுண்ட் மியூசிக் மாதிரி இருக்கு...\\ அந்தப் படத்தைப் பார்த்து பெருமூச்சு தான் விட முடியும்கிறதை எழுத்துல சொல்ல வந்தேன், மீனிங் convey ஆகலே, ஹா..ஹா..ஹா...
\\உங்க மனைவி கிட்ட இந்த கேள்வியை கேட்டுப் பார்க்கவும்...\\ அவ்வளவு தூரம் எதுக்கு மாப்பு, இப்போ உன்னையே எடுத்துக்கோ, உன்னை மாதிரி டேலண்டா பதிவு போடும் பெண் பதிவரைக் காட்டு பார்ப்போம்... [எப்படி மடகஈனேன் பாரு .... ஹா..ஹா..ஹா.....]
மாப்பு, இந்து மதம் பற்றி நீ ஏதோ பெரிய லெவலில் கேட்பாய் என நினச்சேன், ஆப்டர் ஆல் டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணுறதில விழுந்து கிடக்குறியே மாப்பு !! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், நமக்கு வேண்டியவங்களோட திடீர் பிரிவை மனம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு நார்மலாக வேண்டும் என்பதற்க்காகத்தான் பல சடங்குகள் உள்ளன. மே பி தற்போது செத்தவர்கள் உனக்கு எள்ளு தாத்தா கொள்ளு தாத்தாவாக இருப்பதால், அவர்கள் பிரிவு உன்னை அதிகம் பாதிக்காமல் உன்னால் உணர முடியவில்லை.
@ kanagu
// தல.. எல்லா மதத்துலயுமே இந்த மாதிரி பழக்கவழக்கம் இருக்கு... நமக்கு ஹிந்து வழக்கங்கள் தெரியுது.. எனக்கும் வழக்கம் இருக்கு... ஆனா ஏன், எதுக்கு-னு சொல்ல மாட்டேங்குறாங்க-னு கோபம் வரும். ஆனா என்ன பண்றது... நம்ம தலைமுறைக்கு கேள்வி கேக்க உரிமை இருக்கு. அவங்களுக்கு அது கூட இல்லாம இருந்துருக்கு. //
இனி வர்ற தலைமுறைக்காவது உருப்படியா ஏதாவது சொல்லிக்கொடுப்போம் தல...
@ ! சிவகுமார் !
// யோவ்.. மனசுல 'பராசக்தி' சிவாஜின்னு நெனப்பா. அடுத்த வாட்டி நேர்ல இதப்பத்தி பேசுய்யா. சட்டைய கிழிக்காம விட மாட்டோம். டேய். டெட்ட டேய்!! //
இதான் நம்ம ஏரியா... இந்த கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்... நீங்களும் வரப்பிடாது...
@ Jayadev Das
// மாப்பு, இந்து மதம் பற்றி நீ ஏதோ பெரிய லெவலில் கேட்பாய் என நினச்சேன், ஆப்டர் ஆல் டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணுறதில விழுந்து கிடக்குறியே மாப்பு !! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், நமக்கு வேண்டியவங்களோட திடீர் பிரிவை மனம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு நார்மலாக வேண்டும் என்பதற்க்காகத்தான் பல சடங்குகள் உள்ளன. மே பி தற்போது செத்தவர்கள் உனக்கு எள்ளு தாத்தா கொள்ளு தாத்தாவாக இருப்பதால், அவர்கள் பிரிவு உன்னை அதிகம் பாதிக்காமல் உன்னால் உணர முடியவில்லை. //
தல... உங்களிடம் பதில் இல்லைன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாமே... ஏற்கனவே ஒருமுறை திருமண சடங்குகள் பற்றி கேட்டபோது புதுப்பெண்ணுக்கு புகுந்த வீட்டை பழக்கப்படுத்துவதற்காக என்று சொன்னீர்கள்... ரைட்டு... அதுல ஒரு லாஜிக் இருந்தது... இதுல லாஜிக்கே இல்லையே... நெய் பந்தம் ஏந்தினா சோகம் பறந்து விடுமா... அப்படியே நீங்கள் ஆமாம் என்றாலும் ஏன் செருப்பு போட்டுக்கொண்டு நெய் பந்தம் ஏந்தினால் சோகம் பறக்காதா... இடமிருந்து வலம் சுற்றுவதற்கு பதிலாக வலமிருந்து இடம் சுற்றக்கூடாதா...?
// ஆப்டர் ஆல் டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணுறதில விழுந்து கிடக்குறியே மாப்பு //
அதையே தான் தல நானும் கேக்குறான்... After all சாவுக்கு போய், கறிசோறு, துணிக்கட்டு, மூணாவது நாள், பதினாறாவது நாள், முப்பதாவது நாள்ன்னு சினிமா காட்டுறாங்க... ஏன் இந்த வேல...?
\\ இதுல லாஜிக்கே இல்லையே...\\ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா தவறிப் போனாங்க, அப்போ இந்த சடங்குகளால் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் அந்த சடங்குகள் எல்லாமும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து என்னுடைய மனதில் ஏற்ப்படுத்திய தாக்கம், இவற்றை வைத்து சொன்னேன். இது எனக்கு நிகழ்ந்தது, நான் உணர்ந்தது, அதுல லாஜிக் இருக்கா இல்லையா, சரியா தப்பா, அறிவியல் பூர்வமா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. மேலும் இந்தச் சடங்குகள், இடத்துக்கு இடம் மாறுபடுகிறது, but in any case, the purpose and the underlying principle is to கொஞ்சம் கொஞ்சமாக பிரிவை ஏற்றுக் கொள்வதற்கே.
\\ஏன் செருப்பு போட்டுக்கொண்டு நெய் பந்தம் ஏந்தினால் சோகம் பறக்காதா... இடமிருந்து வலம் சுற்றுவதற்கு பதிலாக வலமிருந்து இடம் சுற்றக்கூடாதா...?\\ ஒரு வேலை இந்த மாதிரி இருந்திருந்தால் வெறும் காலில் இடமிருந்து வலம் சுற்றக்கூடாத என்று கேள்வி எழுப்பியிருப்பாய் மாப்பு. அது சரி இவ்வளவு பேசுறியே, என் வாழ் நாளில் சடங்குகள் எதையும் செய்ய மாட்டேன் என்று ஸ்டெடியாக நிற்க உன்னால் முடியுமா? அப்பா அம்மா கம்பெல் பண்றாங்க, பெண்டாட்டி/கட்டிக்கப் போறவ தொல்லை பண்றா, மாமனார் மாமியார் விடவில்லைன்னு எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவாய்... ஹா..ஹா...ஹா....
// இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு விவரமாக ஒரு கேள்வி கேட்டால்//
அப்பிடி என்னத்த தான் விவகாரமா கேட்டீங்க தல?
//தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது.//
அந்தப் பையன் தூங்கிட்டு இருந்தானா? இல்லாட்டி நாலடி சின்னப் பையனா? இல்லாட்டி அந்தப் பொண்ணு அவ்வளவு வேகமா தண்ணீரில் காலை வச்சாளா அவ்வளவு உயரம் தண்ணீர் போக?
@ ஜேகே
// அப்பிடி என்னத்த தான் விவகாரமா கேட்டீங்க தல? //
யோவ் ரத்த பூமியில வந்து கலவரம் பண்ணிக்கிட்டு... பின்னூட்டங்களை படிய்யா...
@ ஹாலிவுட்ரசிகன்
// அந்தப் பையன் தூங்கிட்டு இருந்தானா? இல்லாட்டி நாலடி சின்னப் பையனா? இல்லாட்டி அந்தப் பொண்ணு அவ்வளவு வேகமா தண்ணீரில் காலை வச்சாளா அவ்வளவு உயரம் தண்ணீர் போக? //
அங்கதான் தல டைரக்டர் ட்விஸ்ட் வைக்கிறாரு... ஹீரோ செருப்பு தைக்கும் தொழிலாளி... அவர் பிளாட்பாரத்துல உட்கார்ந்து செருப்பு தச்சிட்டு இருக்கும் போது அந்த சம்பவம் நடக்கிறது... கண்டதும் காதல், காணாத காதல்ன்னு நிறைய பார்த்திருப்பீங்க... ஆனா தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக கால்களை பார்த்து காதல் கொள்கிறார் நம்ம ஹீரோ...
// ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க அம்மா தவறிப் போனாங்க, அப்போ இந்த சடங்குகளால் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம் அந்த சடங்குகள் எல்லாமும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து என்னுடைய மனதில் ஏற்ப்படுத்திய தாக்கம், இவற்றை வைத்து சொன்னேன். இது எனக்கு நிகழ்ந்தது, நான் உணர்ந்தது, அதுல லாஜிக் இருக்கா இல்லையா, சரியா தப்பா, அறிவியல் பூர்வமா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. மேலும் இந்தச் சடங்குகள், இடத்துக்கு இடம் மாறுபடுகிறது, but in any case, the purpose and the underlying principle is to கொஞ்சம் கொஞ்சமாக பிரிவை ஏற்றுக் கொள்வதற்கே. //
Hence it is not proved...
// ஒரு வேலை இந்த மாதிரி இருந்திருந்தால் வெறும் காலில் இடமிருந்து வலம் சுற்றக்கூடாத என்று கேள்வி எழுப்பியிருப்பாய் மாப்பு. //
ஹா... ஹா... கண்டிப்பா கேட்டிருப்பேன்...
// அது சரி இவ்வளவு பேசுறியே, என் வாழ் நாளில் சடங்குகள் எதையும் செய்ய மாட்டேன் என்று ஸ்டெடியாக நிற்க உன்னால் முடியுமா? அப்பா அம்மா கம்பெல் பண்றாங்க, பெண்டாட்டி/கட்டிக்கப் போறவ தொல்லை பண்றா, மாமனார் மாமியார் விடவில்லைன்னு எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவாய்... ஹா..ஹா...ஹா.... //
இங்கதான் நீங்க என்னுடைய ஓட்டுமொத்த கோபத்தை கிளப்பி விடுறீங்க தல... கோபத்துல கொஞ்சம் கேவலமா பேசுவேன்... தப்பா எடுத்துக்காதீங்க....
நான் உறுதியாக நிற்கத் தயார்... ஆனால் நான் அந்த சமயத்தில் சமுதாயம் தன்னுடைய துளைகளை பொத்திக்கொண்டு நிற்குமா... இங்கே நான் சமுதாயம் என்று குறிப்பிடுவது என் தாய், தந்தை, மனைவி ஆகியோரை அல்ல... அவர்களை சமாளிப்பதற்கு நான் 100% தயார்... அதையும் தாண்டி அஜித் சிட்டிசன் பட க்ளைமாக்ஸில் ஒரு பெரிய்ய்ய்ய்ய லிஸ்ட் கொடுப்பாரே... அவர்களை எல்லாம் யார் சமாளிப்பது...
அவங்கள கூப்பிட்டு உங்க பின்னாடி கழுவலைன்னு சொல்லதான் முடியும்... எல்லோருக்கும் நானே கழுவி விடணும்ன்னு சொன்னா அதுக்கு பதிலா நானும் அவங்களோட கழுவாமயே இருந்திடுவேன்...
இதுவும் உடல்ரீதியான பலப்பரீட்சை போல தான்... ஒருத்தர் இரண்டு பேர் குறுக்கிட்டால் நிச்சயம் சமாளிப்பேன்... நூறு பேரை சமாளிக்க நான் ஒன்றும் தமிழ் சினிமா ஹீரோவோ, பெரியாரோ அல்ல....
@ Jayadev Das
ஒவ்வொரு நாளும் ஒருமுறை மட்டுமே பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்... நான் இணையம் முன்பு அமரும் வாய்ப்பு நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே கிட்டுகிறது...
முடிந்தால் வாரக்கடைசியில் சாட் செய்யலாம்...
\\Hence it is not proved...\\ I think you are too much obsessed with the Scientific laws, which are generally misunderstood to be proved. For your kind information no Scientific law is claimed to be an eternal truth, but can be challenged at any point of time and dethroned if proved to be against a new experimental result. [No amount of experimentation can ever prove me right; a single experiment can prove me wrong.-Albert Einstein] If it is 'proved' and accepted as 'truth', it must be truth for ever, if something is 'truth' for the time being it is not truth at all, and the word 'proved' loses its meaning. Newton's laws were standing for 300 Years but later Einstein found them to be insufficient and now people are telling Einstein himself was wrong in his assumption that nothing can travel faster than light. Even if they prove something today, the postulates they assume need no proof, then what is the value of the subsequent theories based on these assumptions and proofs? If nothing in the world is proved in the real sense of the term, then why are you expecting some poor fellows doing some rituals for a dead body?
\\அவங்கள கூப்பிட்டு உங்க பின்னாடி கழுவலைன்னு சொல்லதான் முடியும்... எல்லோருக்கும் நானே கழுவி விடணும்ன்னு சொன்னா அதுக்கு பதிலா நானும் அவங்களோட கழுவாமயே இருந்திடுவேன்...
இதுவும் உடல்ரீதியான பலப்பரீட்சை போல தான்... ஒருத்தர் இரண்டு பேர் குறுக்கிட்டால் நிச்சயம் சமாளிப்பேன்... நூறு பேரை சமாளிக்க நான் ஒன்றும் தமிழ் சினிமா ஹீரோவோ, பெரியாரோ அல்ல....\\ உன்னோட குண்டிய நீ பாத்துக்கோ, என்னுத நான் பாத்துக்கறேன்னு சொல்லி ஸ்டெடியா நில்லு மாப்பு. அடுத்தவனுக்காக எத்தனை நாள் தான் பொய் வேஷம் போட்டு வாழ்வது?
// ஒவ்வொன்றும் விஞ்ஞான ரீதியாக விளக்கப் பட்டுள்ளன //
இது நீங்க சொன்னது... நான் சொல்லலை...
// உன்னோட குண்டிய நீ பாத்துக்கோ, என்னுத நான் பாத்துக்கறேன்னு சொல்லி ஸ்டெடியா நில்லு மாப்பு. அடுத்தவனுக்காக எத்தனை நாள் தான் பொய் வேஷம் போட்டு வாழ்வது? //
நீங்க ஏதோ உல்டாவா சொல்ற மாதிரி இருக்கு... சரி, மேரேஜ்ன்னு ஒன்னு வரும்ல... அன்னைக்கு இதுக்கு முடிவு கட்டலாம்...
அருமை... அருமை...
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment