அன்புள்ள வலைப்பூவிற்கு,
பெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம். ஒரு மேட்ச்சில் இந்தியா தோற்றுவிட்டால் உடனே டுபாக்கூர் பசங்க என்ன விளையாடுறாங்க என்றும், அடுத்த ஆட்டத்தில் ஜெயித்துவிட்டால் எதிர் டீம்காரங்க காசு வாங்கிட்டாங்க என்றும் கூசாமல் பேசுகிறார்கள். இதெல்லாம் ஃபிராடு. பூரா பயலுவளும் காசை வாங்கிட்டு ஆடுறாங்க. ஒரே மேட்ச் பிக்ஸிங் என்று புலம்புபவர்களும் கள்ளத்தனமாக கிரிக்கெட் பார்க்கத்தான் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட். அவர்கள் உண்மையாக விளையாடுகிறார்களா மேட்ச் ஃபிக்ஸிங்கா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எனக்குத் தேவையில்லை.
கடந்த வாரத்தை ஒரு Nostalgia வாரம் என்று சொல்லலாம். நேற்று மாலை நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படத்தை சாந்தி திரையரங்கில் அவரது ரசிகர்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சனிக்கிழமை மாலை நண்பர் சிவகுமார் தயவில் எஸ்.வி.சேகர் நடித்த ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடகம் பார்த்தேன். விவரம் அறியாத வயதில் ஒருமுறை எஸ்.வி.சேகரின் பெரியப்பா நாடகம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு நோ நாடகம்ஸ். சமீப காலமாக அடிக்கடி காமராஜர் அரங்கத்தை தாண்டி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, நாடகம் பார்க்கும் ஆசை தோன்றியது. அதுவும் எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் (!!!) என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
விடாப்பிடியாக நிற்பவர்களை உடும்புப்புடி புடிச்சிட்டான்யா என்று சொல்வது வழக்கம். அதாவது உடும்பு செங்குத்தாக இருக்கும் இடத்தில் கூட கீழே விழாமல் பேலன்ஸ் செய்ய வல்லது. பல்லி கூட இதேபோல பேலன்ஸ் செய்யும் திறன் வாய்ந்தது. ஆனால் இவை தம்முடைய எடையை மட்டுமே தாங்கி நிற்குமே தவிர முதுகில் ஒருவரை உப்புமூட்டை தூக்கிக் கொண்டேல்லாம் நிற்க முடியாது. சமீபத்தில் வெளிவந்த ஒரு சூரமொக்கைப்படத்தில் ஹீரோ அல்லது களவாணிப்பய வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார். அதே போல உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. வேண்டுமானால், சில வகையறா உடும்புகள் மட்டும் உண்ணத்தகாததாக இருக்கலாம்.
listverse என்ற இணையதளம், ஃபேஸ்புக்கில் மிகவும் பிரபலம் தினம் தினம் ஏதாவதொரு தலைப்பில் டாப் 10 பட்டியலை வெளியிடுவது சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. சாம்பிளுக்கு டாப் 10 ஹாரர் படங்கள் லிஸ்ட்:
10. Ringu (1998)
9. Jaws (1975)
8. Poltergeist (1982)
7. The Texas Chainsaw Massacre (2003)
6. Carrie (1976)
5. Les Diaboliques (1955)
4. Rosemary’s Baby (1968)
3. Pshycho (1960)
2. The Exorcist (1973)
1. The Shining (1980)
ஜொள்ளு:
ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...! |
ட்வீட் எடு கொண்டாடு:
எல்லாரும் கண்ணாடி தொட்டிக்குள் மீன்களை வளர்ப்பார்கள், நீ என்ன கண்ணாடிக்கு பின் வளர்க்கிறாய்? # தபூசங்கர் எஃபக்ட் :)
செக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....
மறுக்க படும் காதல் தேவலாம்.. ஆனால் மறக்கப்படும் காதலே கொடுமையானது.. #அடிடா அவள ஒதடா அவள
தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு
கமலும் தமிழும்
கமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தவகையில் கமல் தமிழைப்பற்றி சொன்ன பேட்டியின் ஒரு பகுதி.
பகிர்ந்துக்கொண்ட நண்பர் ராஜ நடராஜனுக்கு நன்றி.
ஸ்ருதியும் குரலும்
இந்தப்பாட்டு என்னவோ பண்ணுது கேளேன்... கேளேன்... என்று தங்க்ஸ் தந்த அன்புத்தொல்லை காரணமாக 3 படத்தின் கண்ணழகா பாடலை கேட்டேன். பாடலின் 1:50 நேரத்தில் ஆரம்பிக்கும் ரம்மியமான பெண் குரல் எனக்குள் ஏதோ செய்து திரும்பத் திரும்ப கேட்க வைத்தது.
யாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...!
யாருப்பா பாடினதுன்னு தேடினா தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்று போட்டிருக்கிறார்கள். But i dont believe it...!
தத்துவம்
Loneliness adds beauty to life. It puts a special burn on sunsets and makes night air smell better – Henry Rollins
தத்துபித்துவம்
கடல் – எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை – உதிர்த்தவர் சர்ச்சை பதிவர் சிராஜுதீன்
அடுத்து வருவது...
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
58 comments:
முதல் கட்டிங் எனக்குதான். மிக்சிங் கரீட்டாகீது. நீங்க என்னதான் சொன்னாலும் போர்டு லெவல்ல மேட்ச் பிக்சிங் இருக்குமோன்னு சந்தேகமெல்லாம் ஜனங்களுக்கு வருது. உதாரணம் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா பெஸ்ட் ஒப் த்ரீ போட்டி.
//தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு//அனுபவமோ
கிரிக்கெட்
அட போங்கப்பா இது ஒரு விளையாட்டுன்னு பேசிகிட்டு
//எஸ்.வி.சேகர், நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் (!!!) என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து//
ஸ்.... யப்பா முடியலைடா
ஜொள்ளு.. ட்விட்ட்ஸ், செம போதை குட் யு கண்டினிவ்
ஜொள்ளு: போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்... ஹி ஹி
உடும்புக்கறி உடல் சூட்டை தணிக்கும் என்பது பரவலான கருத்து.
///என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட்.//////
அப்படியெல்லாம் பேசுறதும் ஒரு எண்டர்டெயின்மெண்டுதானுங்கோ...
//////நண்பருடைய நண்பரின் தந்தையின் நண்பர் (!!!) என்பதால் முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.//////
ஏன் வசனம் பேசும்போது எச்ச தெரிச்சதா?
////வீட்டுச்சுவற்றில் ஊர்ந்து செல்லவேண்டி உடும்பை ஒரு கயிற்றில் கட்டி சுவற்றின் உச்சியில் போட்டுவிடுகிறார். அதன்பிறகு அது பேலன்ஸ் செய்து நிற்க இவர் சர்வசாதாரணமாக சுவர் ஏறுகிறார்.//////
அந்தக் காலத்துல இப்படி பண்ணாங்கன்னு முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன், ஆனா அந்தளவுக்கு சாத்தியமில்லைன்னுதான் தோனுது. ஆனா உடும்புக்கறிய விரும்பி சாப்பிடுறவங்க நிறைய இருக்காங்க (சந்தனக்கடத்தல் வீரப்பனோட ஃபேவரைட்டே அதுதானே?)
/////ராத்திரி பகலாத்தான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி...//////
இந்தப் புள்ளையும் வேகமா வளர்ந்துடுச்சே?
////தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு///////
அதையெல்லாம் கண்டுக்காம காரியத்தில் கவனமாக இருந்தால் வெற்றி உறுதி.....
////தலைவருடைய அரிய புகைப்படம்/////
கவுண்டரு கவுண்டருதான்...... பீக்ல இருக்கும் வரை அவரைப் பத்தி பர்சனல் விஷயங்கள் ஒண்ணுகூட வெளிய வராம பாத்துக்கிட்டாரு......
எங்கய்யா ஷாந்தி தியேட்டர்ல எடுத்த வீடியோ?
தலைவர் கமல் கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் பல. அவர் பேசுவதை கேட்பதே இனிமைதான்.
சூப்பர் தலைவரே .. ரொம்ப மெனக்கெட்டு எழுதி இருக்கிறீங்க .. நல்லா வந்து இருக்கு ..
அதுவும் கமலின் வீடியோ .. முக்கியமான பகிர்வு ..
நன்றி தலைவரே!
தங்கையின் தோழிகள் நம்மை அண்ணா என்றே அழைப்பது ஆண்களின் சாபக்கேடு
///
இன்றைய ஒயின்ஷாப் உம் கலக்கல்.
\\புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம்.\\இந்தியா டீம் கேவலமாக ஆடுதல், கிரிக்கெட் ஆட்டக் காரன் சினிமா நடிகையுடன் கள்ள உறவு வைத்திருத்தல்/ அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் சுற்றுதல், காசு வாங்கி கொண்டு மேட்ச் பிக்சிங் செய்தல், அடுத்த நாள் மேட்ச் என்றாலும் முதல் நாள் இரவு குடித்து விட்டு கும்மாளமடித்தல், சர்வதேச போட்டிகளில் முதல் ரவுண்டிலேயே தோற்றுப் போய் மூட்டை முடிச்சுகளோடு ஊர் திரும்புதல், அந்நிய மண்ணில் ஆடும் ஆட்டங்களில் அத்தனையிலும் கேவலமாக தோற்று போதல் இது அத்தனையும் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஏதாவது மொக்கை டீமோடு ஒரு மேட்சில் ஆடி ஊருபட்ட ரன்னைக் குவித்தால் போதும், அதற்க்கு முன் நடந்த அத்தனை கேவலங்களையும் மறந்துவிட்டு இந்த ஊதாரிகளை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆட இந்திய கிரிக்கெட் ரசிகன் தயாராக இருக்கிறான். இந்த மாதிரி இளிச்சவா பயல்கள் இருக்கிறவரைக்கும் அவனுங்க பாடு கொண்டாட்டம்தான்.
\\என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு என்டர்டெயின்மென்ட்.\\அதாவது தொலைகாட்சி சீரியல்கள் மாதிரி, அது செட்டப்புன்னு தெரிஞ்சாலும் சீரியஸா பார்க்கிறாங்களே அது மாதிரி......
\\உடும்புக்கறி உடம்புக்கு ஆகாதென்றும் படத்தில் சொல்லப்படுகிறது. அதுவும் பொய்யான தகவலே, தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது. \\அடப்பாவிங்களா....உடும்பை endangered species -ல கொண்டுபோய் விட்டுட்டீங்களா.... :((
\\ஜொள்ளு:\\ ஏமாத்திட்டியே மாப்பு... :((
\\கமல்ஹாசன் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் அவருடைய பேச்சு சுவாரஸ்யம் தனித்துவமானது. கேட்டுக்கொண்டே இருக்கலாம். \\ ஐயோ சாமி.... நான் இந்த விளையாட்டுக்கு வரலே.....
\\தலைவருடைய அரிய புகைப்படம்\\ அண்ணனின் மகள் அம்மாவைப் போல ன்னு நினைக்கிறேன், பார்த்துட்டு சொல்லு மாப்பு.
http://www.behindwoods.com/features/Gallery/events/Photos-1/goundamani/Goundamani-14.html
மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட். ஒரு படத்துல அண்ணன் டீக்கடை வச்சிருப்பார், அவருக்கு அந்த ஊர் பண்ணையாராக இருக்கும் ராதாரவி தன்னோட தங்கையைக் கல்யாணம் செய்து வைப்பார், அப்படியே இன்னொரு தங்கையை அதே ஊரில் ஐஸ் விற்கும் இன்னொருவருக்கு கல்யாணம் செய்து வைப்பார். இந்தப் படத்தோட பேரு என்னன்னு சொல்லு பார்ப்போம்.........!!! [படத்தோட பேரு தெரியாமத்தான் கேட்கிறேன்... ஹி..ஹி..ஹி..]
இதுக்குத் தான் ... நம்மள மாதிரி ஃபுட்பாலோட ஓதுங்கிடணும்.
//தெற்காசிய நாடுகளில் உடும்புக்கறி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக அது செக்ஸ் ஆசையை தூண்டும் காரணியாக சொல்லப்படுகிறது.//
இதுக்கு எதுக்கு உடும்பைத் திங்கணும்? ஜாக்கி, சி.பியின் ப்ளாக் பக்கம் போனாப் போதுமே? உடும்பு பாவம் தானே.
யோவ் உடும்பன்லாம் பாக்குறியா.. உன்ன நான் பாராட்டுறேன்...:)
அக்காவோட தோழிகள் தம்பின்னு கூப்ட்டாலே கடுப்பு வருது...ஏன்யா நீ வேற...?
கமல் பேசறது நல்லா இருக்கும்.. ஆனா புரியாது.. புரிஞ்ச மாதிரி காட்டிக்கனும்.. அப்பத்தான் நம்மள நாலு பேரு மெரண்டு போய் பாப்பானுங்க...நாலாம் ரொம்ப சீரியசா மூஞ்ச வெச்சுப்பேன்...:)
சரண்யா மோகன் போட்டோவ லவுட்டிட்டேன்.. விரைவில் மொக்கை கவிதையுடன் வெளியாகலாம்...
வழக்கம் போல பல்சுவை.. சூப்பர் பிரபா..
@ கும்மாச்சி
// முதல் கட்டிங் எனக்குதான். மிக்சிங் கரீட்டாகீது. நீங்க என்னதான் சொன்னாலும் போர்டு லெவல்ல மேட்ச் பிக்சிங் இருக்குமோன்னு சந்தேகமெல்லாம் ஜனங்களுக்கு வருது. உதாரணம் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா பெஸ்ட் ஒப் த்ரீ போட்டி. //
சந்தேகமென்ன சந்தேகம்... ஜூது கண்டிப்பா இருக்கு... இருக்கட்டுமே அதனாலென்ன...
@ PREM.S
// அனுபவமோ //
நிறைய... ஆரம்பிக்கும்போதே அண்ணான்னு தான் ஆரம்பிக்கிறாங்க...
@ மனசாட்சி
// அட போங்கப்பா இது ஒரு விளையாட்டுன்னு பேசிகிட்டு //
பந்து படாத இடத்துல பட்டுற போகுது... அப்படி ஓரமா போய் உட்காருங்க பெருசு...
// ஜொள்ளு.. ட்விட்ட்ஸ், செம போதை குட் யு கண்டினிவ் //
நன்றி சார்...
@ பாலா
// ஜொள்ளு: போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்... ஹி ஹி //
கிரிக்கெட்டுக்கு தந்த அதே விளக்கம் தான் இதற்கும்... போலியா இருந்தா இருக்கட்டுமே... நாம பார்க்க மட்டும்தானே செய்கிறோம்...
//கிரிக்கெட்டுக்கு தந்த அதே விளக்கம் தான் இதற்கும்... போலியா இருந்தா இருக்கட்டுமே... நாம பார்க்க மட்டும்தானே செய்க//
அதேதான் பிரபா...:))
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அப்படியெல்லாம் பேசுறதும் ஒரு எண்டர்டெயின்மெண்டுதானுங்கோ... //
கரெக்ட்... சமயத்துல அவங்க என்ன பேசுறாங்கன்னு அவங்களுக்கே தெரியாம பேசுறாங்க... Excitement... (ஏம்ப்பா நான் சரியாதான் பேசுறேனா...???)
// ஏன் வசனம் பேசும்போது எச்ச தெரிச்சதா? //
யோவ் விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாய்ங்க போல இருக்கே...
// அந்தக் காலத்துல இப்படி பண்ணாங்கன்னு முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன் //
எழுதும்போது கொஞ்சம் Exaggerate செய்து எழுதுவது தானே வரலாறு...
// இந்தப் புள்ளையும் வேகமா வளர்ந்துடுச்சே? //
யோவ் எதைய்யா சொல்ற.... மணி அண்ணன் பார்த்தா தப்பா புரிஞ்சிப்பாரே....
// அதையெல்லாம் கண்டுக்காம காரியத்தில் கவனமாக இருந்தால் வெற்றி உறுதி..... //
அண்ணான்னு கூப்பிட்ட அடுத்த நொடியே நொறுங்கிடுமேம்மா நொறுங்கிடுமே....
// கவுண்டரு கவுண்டருதான்...... பீக்ல இருக்கும் வரை அவரைப் பத்தி பர்சனல் விஷயங்கள் ஒண்ணுகூட வெளிய வராம பாத்துக்கிட்டாரு...... //
இது ஆரம்பம் தான்... கூடிய விரைவில் நிறைய கொண்டு வர்றோம்...
@ ! சிவகுமார் !
// எங்கய்யா ஷாந்தி தியேட்டர்ல எடுத்த வீடியோ? //
Editing in progress...
@ ஜேகே
// சூப்பர் தலைவரே .. ரொம்ப மெனக்கெட்டு எழுதி இருக்கிறீங்க .. நல்லா வந்து இருக்கு .. //
நன்றி சார்....
@ பி.அமல்ராஜ்
// இன்றைய ஒயின்ஷாப் உம் கலக்கல். //
நன்றி சார்...
@ Jayadev Das
ஜி... இரு தரப்பினருமே ஆபத்தானவர்கள்.... எதற்காக கிரிக்கெட் ப்ளேயர்களை கொண்டாடனும்... எதற்காக பழிக்க வேண்டும்... பார்க்க பிடிச்சிருக்கு... பாக்குறேன் போறேன்... அவ்வளவுதான்... Easy...
// அதாவது தொலைகாட்சி சீரியல்கள் மாதிரி, அது செட்டப்புன்னு தெரிஞ்சாலும் சீரியஸா பார்க்கிறாங்களே அது மாதிரி...... //
அதே அதே...
// ஏமாத்திட்டியே மாப்பு... :(( //
உங்க எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்கே சார்...
// ஐயோ சாமி.... நான் இந்த விளையாட்டுக்கு வரலே..... //
அட சும்மா வாங்க சார்...
// அண்ணனின் மகள் அம்மாவைப் போல ன்னு நினைக்கிறேன், பார்த்துட்டு சொல்லு மாப்பு. //
ஆமா சார்... குன்டூஸ்...
// மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட் //
சார் நான் அந்த அளவிற்கு வொர்த் கிடையாது... கவுண்டமணி வெறியர்கள் பன்னிக்குட்டி ராம்சாமி, சிவகுமார் அல்லது செல்வினிடம் கேட்கவும்...
@ ஹாலிவுட்ரசிகன்
// இதுக்குத் தான் ... நம்மள மாதிரி ஃபுட்பாலோட ஓதுங்கிடணும். //
அங்க ஜூதே இல்லைன்னு சொல்றீங்களா...
// இதுக்கு எதுக்கு உடும்பைத் திங்கணும்? ஜாக்கி, சி.பியின் ப்ளாக் பக்கம் போனாப் போதுமே? உடும்பு பாவம் தானே. //
அவிங்க ரெண்டு பேரும் பார்த்து உங்களை கொலையா கொல்லுறதுக்கு முன்னாடி கமெண்ட்டை டெலீட் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடுங்க...
@ மயிலன்
// யோவ் உடும்பன்லாம் பாக்குறியா.. உன்ன நான் பாராட்டுறேன்...:) //
நீங்க வேற... டிவியில ரெண்டு சீன் போட்டாங்க... அதுக்கே டரியல் ஆயிட்டேன்...
// கமல் பேசறது நல்லா இருக்கும்.. ஆனா புரியாது.. புரிஞ்ச மாதிரி காட்டிக்கனும்.. அப்பத்தான் நம்மள நாலு பேரு மெரண்டு போய் பாப்பானுங்க...நாலாம் ரொம்ப சீரியசா மூஞ்ச வெச்சுப்பேன்...:) //
சிரிச்சிட்டே இருக்கேன்... உங்க கமெண்ட்டை பார்த்து... சில சமயங்களில் அப்படித்தான்... இந்த வீடியோவுல கூட அமெரிக்க மோகம்ன்னு என்னவோ சொல்றாரு பாருங்களேன்...
// சரண்யா மோகன் போட்டோவ லவுட்டிட்டேன்.. விரைவில் மொக்கை கவிதையுடன் வெளியாகலாம்... //
சூப்பர் ஜி... எதிர்பார்க்கிறேன்...
// வழக்கம் போல பல்சுவை.. சூப்பர் பிரபா.. //
நன்றி தலைவா...
/*பெண்கள், மேனேஜர்கள், அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பவர்கள் போன்ற புரிந்துக்கொள்ளவே முடியாதவர்கள் வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களையும் சேர்க்கலாம்.*/
ஹா ஹா ஹா.. நல்ல நக்கல் பாஸ் :)
பாக்குறதே டைம் பாஸுக்கு தான். அதுல அவனுங்க என்ன பண்ணா நமக்கென்ன :)
கர்ணன் இன்னும் பாக்கல.. இனிமேல் தான்.
சரண்யா மோகன் படம் அருமை :)
ட்வீட்கள் சூப்பர்...
/*செக்ஸ் என்பது ஹைஸ்கூல்ல படிக்கிற மாதிரி, ஒரு பீரியட் வரலேன்னாலும் பிரச்சனைதான்....*/
:) :)
3 படத்துல பாட்டுங்க நிறையா நல்லா இருக்கு. இந்த பாட்டு அப்புறம் ‘நீ பார்த்த விழிகள்’... அட்டகாசமா இருக்கு :)
கர்ணன் பதிவ சீக்கிரம் போடுங்க...
கிஸ் ராஜா தளத்துக்கு போயிட்டோமா? என்னது சரண்யாவ பார்த்து இம்புட்டு ஜொள்ளு வடியுது?
உடும்பு செம மேட்டர் சார், இந்த நண்டு கறிக்குக் கூட அந்த எபெக்ட் இருக்காமே, நிஜமா?
உடும்பு செம மேட்டர் சார், இந்த நண்டு கறிக்குக் கூட அந்த எபெக்ட் இருக்காமே, நிஜமா?
சத்தியமா அந்த பாட்டு அவங்க ரெண்டுபேரும்தான்யா பாடினது, மேடைல கூட பாடினாங்களே...
//Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// எங்கய்யா ஷாந்தி தியேட்டர்ல எடுத்த வீடியோ? //
Editing in progress...//
பார்ரா..
/Philosophy Prabhakaran said...
@ Jayadev Das
//// மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட் //
//சார் நான் அந்த அளவிற்கு வொர்த் கிடையாது... கவுண்டமணி வெறியர்கள் பன்னிக்குட்டி ராம்சாமி, சிவகுமார் அல்லது செல்வினிடம் கேட்கவும்...//
படம் பேரு மதுரை வீரன் எங்க சாமி. தலைவர் நடிச்ச படங்களோட பேரெல்லாம் ஆணி அடிச்ச மாதிரி நெஞ்சுல நிக்கும்ல!!
யோவ்.. தொடர்ந்து ரெண்டு பதிவும் பிரபா ஒயின்ஸ்?? எதுனா எழுதுய்யா..வாய்லயே குத்துவேன்.
@ ! சிவகுமார் !
ரொம்ப நன்றி பாஸ். சரியான நேரத்துல வந்து காப்பாத்திட்டீங்க. அதை கண்டுபிடிக்கா படாத பாடு பட்டேன் ஒன்னும் வேலைக்கு ஆகலே, எப்படியோ உங்க மூலமா தகவல் கிடைச்சது, மீண்டும் நன்றி!!
தலைவருடைய அரிய புகைப்படம்///
.
.
யாரு மாமா அது!
*************************************
10. Ringu (1998)
9. Jaws (1975)
8. Poltergeist (1982)
7. The Texas Chainsaw Massacre (2003)
6. Carrie (1976)
5. Les Diaboliques (1955)
4. Rosemary’s Baby (1968)
3. Pshycho (1960)
2. The Exorcist (1973)
1. The Shining (1980)
*******************************
முதல் நாலு மட்டும்தான் பார்த்துள்ளேன்!எக்சார்சிட் பார்த்துவிட்டு ஒரு லிட்டர் தண்ணி குடிக்க வேண்டியதா ஆகிபோச்சு!ஐயோ நா இல்லீங்கோ!அந்த படிக்கட்டு சீன் இன்னிக்கும் திகிலை கிளப்புது!
பின்னூட்ட மட்டறுப்பை நீக்குகிறேன். அனானி அண்ணன்மார்களே எந்த தொந்தரவும் செய்ய வேண்டாமென்று உங்களிடம் இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை///
.
.
சொல்லிட்ட இல்ல!அவ்வளவுதான் ஹீ ஹீ !!
@ kanagu
// கர்ணன் பதிவ சீக்கிரம் போடுங்க... //
ரெடி ஆயிட்டே இருக்கு தலைவா...
@ Dr. Butti Paul
// கிஸ் ராஜா தளத்துக்கு போயிட்டோமா? என்னது சரண்யாவ பார்த்து இம்புட்டு ஜொள்ளு வடியுது? //
அது யாரு தல பதிவுலகின் கிஸ் ராஜா...
// உடும்பு செம மேட்டர் சார், இந்த நண்டு கறிக்குக் கூட அந்த எபெக்ட் இருக்காமே, நிஜமா? //
தெரியலையே சார்... நண்டுகிட்ட தான் கேட்கணும்...
// சத்தியமா அந்த பாட்டு அவங்க ரெண்டுபேரும்தான்யா பாடினது, மேடைல கூட பாடினாங்களே... //
ஆமா... ஆனா ரீ-ரெக்கார்டிங்ல ஏதோ உட்டாலக்கடி பண்ணியிருக்காங்க...
@ ! சிவகுமார் !
// படம் பேரு மதுரை வீரன் எங்க சாமி. தலைவர் நடிச்ச படங்களோட பேரெல்லாம் ஆணி அடிச்ச மாதிரி நெஞ்சுல நிக்கும்ல!! //
தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க...
// யோவ்.. தொடர்ந்து ரெண்டு பதிவும் பிரபா ஒயின்ஸ்?? எதுனா எழுதுய்யா..வாய்லயே குத்துவேன். //
கர்ணன் வந்துட்டே இருக்காரு...
@ வடக்குபட்டி ராம்சாமி
// யாரு மாமா அது! //
நீங்க ப்ரோபைல் படத்துல வச்சிருக்கீங்களே... அவருதான்...
// சொல்லிட்ட இல்ல!அவ்வளவுதான் ஹீ ஹீ !! //
மொதல்ல அந்த வாக்கியத்தை தூக்கணும்... எப்பவோ நடந்த சில கசப்பான அனுபவங்களுக்காக இன்னமும் வச்சிருக்கேன்...
பல்சுவை...
//////! சிவகுமார் ! said...
/Philosophy Prabhakaran said...
@ Jayadev Das
//// மாப்பு உனக்கு அண்ணன் மேல் இருக்கும் பிரியத்துக்கு ஒரு டெஸ்ட் //
//சார் நான் அந்த அளவிற்கு வொர்த் கிடையாது... கவுண்டமணி வெறியர்கள் பன்னிக்குட்டி ராம்சாமி, சிவகுமார் அல்லது செல்வினிடம் கேட்கவும்...//
படம் பேரு மதுரை வீரன் எங்க சாமி. தலைவர் நடிச்ச படங்களோட பேரெல்லாம் ஆணி அடிச்ச மாதிரி நெஞ்சுல நிக்கும்ல!!////////
நன்றி சிவா, தலைவர் என்கிட்டயும் கேட்டிருந்தாரு, எனக்கு ஞாபகம் வரல, தேடுறதுக்கு நேரமும் இல்ல.....!
Post a Comment