அன்புள்ள வலைப்பூவிற்கு,
தகுதிச்சுற்று போட்டிகளின் முடிவில் ஆப்கானிஸ்தானும், அயர்லாந்தும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் T20 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது. தகுதிச்சுற்று போட்டிகளின் தொடக்கத்தில் நேபாளமும் இத்தாலியும் சிறப்பாக செயல்பட்டு முன்னேறின. ஆனால் அடுத்தடுத்த தோல்விகளால் வெளியேற்றப்பட்டன. கென்யாவின் நிலை சற்றே மோசமாக அமைந்தது. .007 என்ற ரன் ரேட் கணக்கில் அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது அந்த அணி. இந்தியா தன்னுடைய முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோத வேண்டியிருக்கும்.
எம்.ஜி.ஆர், சிவாஜியை மட்டும் சிலாகிக்கும் சினிமாக்காரர்கள் அதற்கு முந்தய தலைமுறை சூப்பர்ஸ்டார்களை அறவே மறந்துவிட்டிருக்கிறார்கள். மூன்று திபாவளிகள் பார்த்த தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ், பி.யு.சின்னப்பா ஐந்து கெட்டப்பில் தோன்றிய ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களை இளைய தலைமுறையினர் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லையென்று தெரிகிறது. பி.யு.சின்னப்பா நடிப்பில் 1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படமே பின்னாளில் சிவாஜி நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் பி.யு.சின்னப்பாவின் உத்தமபுத்திரன் என்று டிவிடி கடைகளில் கேட்டால் அப்படி ஒரு படமே வரவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.
போர் வீரனான மும்தாஜின் கணவரை கொன்றுவிட்டு ஷாஜகான் மும்தாஜை மணந்துக்கொண்டதாக ஒரு பார்வேர்டு மெயில் சுற்றிக்கொண்டு இருந்தது. நானும் கூட நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியான வரலாற்றை திரிக்கும் அயோக்கியத்தனங்களை யார், எதற்காக செய்கிறார்கள் என்று புரியவில்லை. அர்ஜுமான் பேகம் என்கிற இயற்பெயர் கொண்ட மும்தாஜ் ஷாஜஹானின் உறவுக்காரப்பெண் என்றும் அவர்களின் திருமணம் ஒரு லவ் கம் அரேஞ்டு மேரேஜ் என்று சொல்கிறார் ஹாய் மதன். ஆனால் திருமணத்தின் போது மும்தாஜின் வயது பதினான்கா பத்தொன்பதா...? மும்தாஜ் ஷாஜஹானுடைய முதல் மனைவியா மூன்றாவது மனைவியா...? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது.
நேற்றைய மாலைப்பொழுது இந்தியாவின் தேசிய விளையாட்டுடன் இனிதே கடந்தது. அம்மா கட்டிக்கொடுத்த ஸ்டேடியத்தில் பிள்ளைகள் சமத்தாக விளையாடினாலும் இறுதியில் சென்னை அணி 4-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. ஆனாலும் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் சாப்பிட்டுக்கொண்டே ஹாக்கி பார்த்தது இனிமை. மேட்சுக்கு என்னை ஓசியில் அழைத்துச்சென்ற நண்பர் சிவகுமாருக்கு என் நன்றிகால். சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஆடம் சிங்களரிடம் தொலைபேசினேன். நிறைய விஷயங்கள் சொன்னார். என்னுடைய பதிவுகளை தொடர்ந்து வசிப்பதாக சொன்னார். தக்காளி, அது என்னவோ தெரியல சாண்ட்வேஜ் சாப்பிட்டாலே இப்படியெல்லாம் எழுதத்தோணுது. இருடி வர்றேன்... பேச்சா பேசுற நீயி...!
என் விகடனில் என்னுடைய பெயரும் புகைப்படமும் வெளிவந்தது எல்லோருக்கும் போல இல்லாமல் ஒரு துக்க நிகழ்வாக அமைந்துவிட்டது. வாழ்த்து தெரிவித்தவர்களிடமெல்லாம் மாப்பிள்ளை நான்தான் ஆனா போட்டிருக்குற சட்டை என்னுதில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
ட்வீட் எடு கொண்டாடு:
உள்ளாடைகள் கொடிகளில் நிர்வாணமாய் ....
அமெரிக்க தீர்மானம் சோடா கலந்த ரம் என்றால் இந்தியா அதில் தண்ணீரை மேலும் கலந்துவிட்டது - கேப்டன்
காதலியாகாமல் தோழியாய் மாத்திரம் இருப்பதும், இங்கிலீஷ் படத்துக்கு சப்-டைட்டில்ஸ் இல்லாம இருப்பதும் ஒண்ணுதான்!
அவர்கள் சைட்டடிக்கும் நபரோடு இணைத்து கிண்டல்செய்கையில், உள்ளூற சந்தோஷத்தோடு நண்பர்கள் பொய்கோபப்படும் அழகே தனி! #அட அட அட...
மானமுள்ள கணவன் - நீங்க வாய மூடுங்க என மனைவி கூறும் முன்பு வாயை மூடிக்கொள்பவன்..
ஓவியாவின் ஓரப்பார்வை
மன்மதராசா பாடல் வெளிவந்து பெரிய ஹிட் ஆகியிருந்த சமயம். அடுத்தடுத்து நிறைய பேர் அதே போல குத்துப்பாடல் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அதேமாதிரியான லொக்கேஷன், காஸ்டியூம் மட்டும் எடுத்துக்கொண்டு குறும்பு படத்திற்காக ஒரு மெலடி பாடலை கொடுத்தார் யுவன். மன்மதராசா காலத்தால் அழிந்துவிட்டாலும் ஓவியம் மட்டும் கரையவில்லை.
வேட்டி – கரைவேட்டி
ஏதோவொரு வார இதழில் வேட்டி – கரைவேட்டி என்று ஒருபக்க நகைச்சுவை படக்கதை வெளியிடுவார்கள். இந்த குறும்படமும் அதன் தலைப்பும் அதைத்தான் நினைவூட்டுகிறது. இதுக்கு மேல எதாவது எழுதினா குடும்பம் கெட்டுப்போகும். அதனால வீடியோவை பாருங்க...
இன்னுமா இந்த ஒலகம் நம்மள நம்புது
உண்மையான காமெடி பீஸ் இவரல்ல. இன்னமும் இவரை நம்பிக்கொண்டிருக்கும் பக்தர்கள் தான்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
38 comments:
வாழ்த்து தெரிவித்தவர்களிடமெல்லாம் மாப்பிள்ளை நான்தான் ஆனா போட்டிருக்குற சட்டை என்னுதில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்
-என்ன நடந்துச்சு? புரியலை! கொஞ்சம் விளக்கமாச் சொல்லுப்பா...
ஜொள்ளுக்கு உங்கள் அக்மார்க் கமெண்ட் எங்கே பாஸ் கேமரா கோணமே பயமுறுத்துதே
சட்டை சென்னைபித்தன் சாரோடதுன்னு நினைக்கிறேன்.
சான்ட்வெஜ் சாப்டாலே இப்டியெல்லாம் தோணுதா?
பி.யு.சின்னப்பாவின் உத்தமபுத்திரன் என்று டிவிடி கடைகளில் கேட்டால் அப்படி ஒரு படமே வரவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.//
ஏன் நம்ம தனுஷ் நடிச்ச உத்தம புத்திரனுமா கிடைக்கலை ம்ஹும்...
ஒயின்ஷாப் நல்லா களை கட்டிருச்சு, ஜொள்ளு பார்ட்டி பேர் என்ன?
தல நமக்கு அடுத்த தலைமுறை எம்ஜிஆர் சிவாஜி இருவரையும் மறந்து விடுவார்கள். இது நடக்குறதுதான். அப்புறம் ஹாக்கி போட்டிகள் நன்றாக உள்ளன. ஆனால் அடிக்கடி கரண்ட் கட் ஆகி பாதி மேட்ச்தான் பார்க்க முடியுது.
//மன்மதராசா காலத்தால் அழிந்துவிட்டாலும் ஓவியம் மட்டும் கரையவில்லை.//
சியர்ஸ் ஜீ.., உலகத்துலையே எனக்க் மட்டும் தான் இந்த பாட்டு Favorite ன்னு நினைச்சிட்டு இருந்தேன்...
இந்த வார பிரபா ஒயின்ஷாப் பகுதி எனக்கு அவ்வளவாக திருப்தியாக இல்லை பிரபா. அதனால் இந்த வாரம் 'சரக்கு சுமார் தான்'. ஒரு வேளை, வேலை டென்ஷன் ஜாஸ்தியோ?
\\இன்னுமா இந்த ஒலகம் நம்மள நம்புது\\ அருமையான சரக்கு, பின்னணி வசனங்கள்/இசை ஒன்னொன்னும் நல்ல தேர்வு, ரொம்பப் பொருத்தம் .... மொத்தத்தில்... செம கிக்கு... மாப்பு... ரொம்ப தேங்க்ஸ்.....!!
\\என் விகடனில் என்னுடைய பெயரும் புகைப்படமும் வெளிவந்தது எல்லோருக்கும் போல இல்லாமல் ஒரு துக்க நிகழ்வாக அமைந்துவிட்டது. \\ இதப் பத்தி சிவக்குமார் போட்ட பதிவைப் படிச்சேன், வயிறு குலுங்க சிரித்தேன். பார்த்தீபன் கிட்ட மாட்டிய வடிவேலு மாதிரி அவரு சான்ஸ் கிடைக்கிறப்பவெல்லாம் உன்னை வெளுத்து கட்டுறாரு. தமாசா கீது....
\\வாழ்த்து தெரிவித்தவர்களிடமெல்லாம் மாப்பிள்ளை நான்தான் ஆனா போட்டிருக்குற சட்டை என்னுதில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.\\ ஹா..ஹா..ஹா...
En vikaten pathu than thala na intha blog padika aarambichen.
ஜொள்ளுக்கு "கீழ்" கமென்ட் எங்கே...?
முதல் பத்தி ஒட்டாம நிக்குதே...ஏனோ அதுல உங்க டச் மிஸ்ஸிங்...
யோவ்.. மும்தாஜா பத்தின அம்மாம்பெரிய பத்தி எழுதியிருக்கியே...என் தலைவன் டி.ஆர ஒரு வார்த்தைக்கு கூட கண்டுக்கல... யு=ட்யூபை வாழவைக்கும் டி.ஆர் இரசிகர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...
வழக்கம் போல விகடன்-அ பக்கத்துக்கு ரூம்ல சுட்டுவரும்போது என் விகடன விட்டுட்டு வந்துட்டேன்... போய் பாக்குறேன்...
ஆனா நித்தி வீடியோ.. கவுண்டர் கவுண்டர் தான்.. ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் எத்தனை கமெண்டுகள் தேருது பாருங்க.. சூபரு...
இன்னிக்கு வைன்ஷாப்ல ஹைலைய்ட் ஜொள்ளு இல்ல. நித்தியானந்தா தான். கவுண்டர் rocks !!!
read VANTHARGAL VENRARGAL from madhan for mogal histroy...கேள்விகளுக்கு விடை athil iruku..vikatan publishers...
adada..padithu vitirgala...ithukthan line by line ku comment poda kudathu...sorry bass...
@ கணேஷ்
// என்ன நடந்துச்சு? புரியலை! கொஞ்சம் விளக்கமாச் சொல்லுப்பா... //
சார்... என்னுடைய போட்டோவையும், பெயரையும் போட்டுவிட்டு சென்னை பித்தன் சாருடைய பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்... இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பேரிளம்பெண் சென்னை பித்தன் சாரை பார்த்து அங்கிள்ன்னு கூப்பிட்டது என் பெயரில் வெளியாகி இருக்கிறது... எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்...
@ PREM.S
// ஜொள்ளுக்கு உங்கள் அக்மார்க் கமெண்ட் எங்கே பாஸ் கேமரா கோணமே பயமுறுத்துதே //
பதிவுல போடுற மாதிரி டீஜன்ட்டா எதுவும் தோணலை...
@ கோகுல்
// சட்டை சென்னைபித்தன் சாரோடதுன்னு நினைக்கிறேன். //
ஆமா கோகுல்... அதனாலதான் தொள தொளன்னு இருந்துச்சு...
@ MANO நாஞ்சில் மனோ
// ஏன் நம்ம தனுஷ் நடிச்ச உத்தம புத்திரனுமா கிடைக்கலை ம்ஹும்... //
ஏன்யா நீ வேற... அது ஒரு படம்ன்னு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ஒயின்ஷாப் நல்லா களை கட்டிருச்சு, ஜொள்ளு பார்ட்டி பேர் என்ன //
சராயு (அ) சாராயு... பேரே கிக்கா இருக்குல்ல...
@ பாலா
// தல நமக்கு அடுத்த தலைமுறை எம்ஜிஆர் சிவாஜி இருவரையும் மறந்து விடுவார்கள். இது நடக்குறதுதான். //
சரிதான்... அப்ப என்கிட்டே இருக்குற சேகரிப்புகள் வரலாற்று சிறப்பு மிக்கவைன்னு சொல்லுங்க...
@ ...αηαη∂....
// சியர்ஸ் ஜீ.., உலகத்துலையே எனக்க் மட்டும் தான் இந்த பாட்டு Favorite ன்னு நினைச்சிட்டு இருந்தேன்... //
ம்ம்ம்... நல்ல பாட்டு எந்த மொக்கை படத்தில் வந்தாலும் கரெக்ட்டா புடிச்சிடுவேன்... நிறைய பேருக்கு இந்தப்பாடல் பிடிக்கும்...
@ N.H.பிரசாத்
// இந்த வார பிரபா ஒயின்ஷாப் பகுதி எனக்கு அவ்வளவாக திருப்தியாக இல்லை பிரபா. அதனால் இந்த வாரம் 'சரக்கு சுமார் தான்'. ஒரு வேளை, வேலை டென்ஷன் ஜாஸ்தியோ? //
ஆமாம் தல... ஆழமா இறங்கிட்டே இருக்கு...
@ Jayadev Das
// அருமையான சரக்கு, பின்னணி வசனங்கள்/இசை ஒன்னொன்னும் நல்ல தேர்வு, ரொம்பப் பொருத்தம் .... மொத்தத்தில்... செம கிக்கு... மாப்பு... ரொம்ப தேங்க்ஸ்.....!! //
நன்றி தல... இதிலாவது நாம் உடன்படுகிறோமே...
// இதப் பத்தி சிவக்குமார் போட்ட பதிவைப் படிச்சேன், வயிறு குலுங்க சிரித்தேன். பார்த்தீபன் கிட்ட மாட்டிய வடிவேலு மாதிரி அவரு சான்ஸ் கிடைக்கிறப்பவெல்லாம் உன்னை வெளுத்து கட்டுறாரு. தமாசா கீது.... //
நெருங்கிய நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம் தானே...
@ sirippusurendar
// En vikaten pathu than thala na intha blog padika aarambichen. //
அப்படியா... மிக்க நன்றி தல...
@ மயிலன்
// ஜொள்ளுக்கு "கீழ்" கமென்ட் எங்கே...? //
அபிஷ்டு... அபிஷ்டு... ஆபாஷமா பேஷிண்டு... நேக்கு நாக்கே கூசுறது...
// முதல் பத்தி ஒட்டாம நிக்குதே...ஏனோ அதுல உங்க டச் மிஸ்ஸிங்... //
ஆமாம்... அது வெறும் செய்தியா வந்துடுச்சு...
// யோவ்.. மும்தாஜா பத்தின அம்மாம்பெரிய பத்தி எழுதியிருக்கியே...என் தலைவன் டி.ஆர ஒரு வார்த்தைக்கு கூட கண்டுக்கல... யு=ட்யூபை வாழவைக்கும் டி.ஆர் இரசிகர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்... //
யோவ்... இது அந்த மும்தாஜ் இல்லைய்யா...
// வழக்கம் போல விகடன்-அ பக்கத்துக்கு ரூம்ல சுட்டுவரும்போது என் விகடன விட்டுட்டு வந்துட்டேன்... போய் பாக்குறேன்... //
ராசா... இங்கதான் ஏதோ ட்ரிப்ளிக்கேன் மேன்ஷன்ல தங்கி இருக்கீங்க போல... இந்தா வாரேன்...
@ ஹாலிவுட்ரசிகன்
// இன்னிக்கு வைன்ஷாப்ல ஹைலைய்ட் ஜொள்ளு இல்ல. நித்தியானந்தா தான். கவுண்டர் rocks !!! //
மிக்க நன்றி தல...
@ Elamparithi
// adada..padithu vitirgala...ithukthan line by line ku comment poda kudathu...sorry bass... //
இன்னும் முடிக்கல தல... படித்துக்கொண்டே இருக்கிறேன்...
அப்போது அதேமாதிரியான லொக்கேஷன், காஸ்டியூம் மட்டும் எடுத்துக்கொண்டு குறும்பு படத்திற்காக ஒரு மெலடி பாடலை கொடுத்தார் யுவன்///
.
.
அதே குறும்பு படத்தில் ஆசை நூறு வகை பாடலை ரீமிக்ஸ் செய்து நாராசமான ரீம்கிஸ் கலாசாரத்தை துடங்கி வைத்தவரும் அண்ணாத்ததான்!
கொஞ்சம் மப்பு ஜாஸ்தி...
ஆமா இந்த கடைசில இருக்குற காமெடி பீசு யாரு.எங்கேயோ பிட்டுல... ச்சீ நெட்டுல பாத்த மாதிரி இருக்கு.......சட்ட என்னதுல்ல மேட்டர நானும் படிச்சேன்.கவலைப்படாத நண்பா அடுத்து உம்ம சட்டைய அவரு போடுவாரு....
அது சரி....சட்ட போட்ட உமக்கே இவ்வளவு வருத்தம்னா ...சட்டைய பறிகொடுத்துட்டு 'வட போச்சே' னு நிக்கிற சென்னைபித்தன்அய்யா நெலம இன்னும் மோசமாவுல இருக்கும்.
Post a Comment