அன்புள்ள வலைப்பூவிற்கு,
தனுஷ் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில்
நடித்து புகழின் உச்சியில் இருந்த சமயம், பன்னிக்குட்டி மாதிரி அவருக்கு வதவதன்னு
புதுப்பட வாய்ப்புகள் வந்து குவிந்துக்கொண்டிருந்தன. அப்போது “டாக்டர்ஸ்” என்ற
பெயரில் தனுஷுடைய மருத்துவச்சி சகோதரிகளின் அனுபவத்தை வைத்து ஒரு படமெடுக்க
இருப்பதாக தகவல் வெளியாகி முடங்கிப்போனது. அதுவே இப்போது மூன்று என்ற பெயரில்
கொலவெறித்தனமாக அவதாரமெடுத்திருக்கிறது. YES, ITS A MEDICAL MIRACLE...!
தனுஷுடைய இறுதிச்சடங்குடன் படம் தொடங்குகிறது. சோகத்தின்
பிடியிலிருக்கும் தனுஷின் மனைவி ஸ்ருதியின் நினைவுகளில்... தனுஷ் வழக்கம் போலவே
அப்பாவிடம் திட்டு வாங்கும் பொறுப்பில்லாத மகன். ஒருநாள் ச்சோன்னு மழை பெஞ்சிட்டு
இருக்கும் போது தனுஷ் ஸ்ருதியை பார்க்கிறார். வேறென்ன.. கழுதை கெட்டா
குட்டிச்சுவரு... காதல்...! சிலபல சிக்கல்களுக்கு பிறகு எக்கேடோ கெட்டு ஒழிங்க
என்ற ரீதியில் தனுஷ் – ஸ்ருதி அவர்களுடைய பெற்றோரின் விருப்பமில்லாமல், அதே சமயம்
எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துக்கொள்கின்றனர்.
இரண்டாம் பாதி... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்,
தினத்தந்தி பாணி உருக்கமான கடிதம், Bipolar Disordar... ஙேஙேஙேஙே...
ஙேஙேஙேஙே...
தனுஷ் – கிக்கிக்கிக்கி எனக்கு அவரை பார்த்தா சிரிப்பா
வருது... எனக்கு அவரை பார்த்தா சிரிப்பு வருது, உள்ள அழுகையா இருக்குது... அப்டியே
ஓன்னு வாய் விட்டு அழுவனும் போல இருக்கு... ணா மணிண்ணா எனக்கு ஒரே ஒரு அருவா
குடுண்ணா... அப்டியே எடுத்து ஒரே போடு...
ஸ்ருதி – அது என்னவோ தெரியல, அந்த புள்ளயோட மூக்கு சனியனை
பார்த்தா மட்டும் நமக்கு மூடே வர மாட்டேங்குது. அதுவுமில்லாமல் அம்மணி அழுவதை
பார்த்தால் நமக்கு ஏனோ கஞ்சா அடித்தமாதிரி சிரிப்பு வந்து தொலைக்கிறது.
சிவகார்த்திகேயன் முதல் பாதியில் மனது விட்டு சிரிக்க
வைத்தாலும் இரண்டாம் பாதியின் சீரியஸ்நெஸ் கருதி இயக்குனரால் சாமர்த்தியமாக
சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மற்றொரு நண்பராக வரும் “மயக்கம் என்ன”
சுந்தர் ராமு கேரக்டரில் நிறைய முரண்பாடுகள். ஒன்றும் விளங்கவில்லை...
பிரபு, பானுப்ரியா, ரோகிணி ஆகியோருடைய நடிப்பில் பாஸ்போர்ட்டை
எரிக்கும் காட்சியில் ரோகிணியின் நடிப்பு முன்னிலை பெறுகிறது. ஸ்ருதியின் தங்கையாக
நடிக்கும் சிறுமி இன்னொரு ஐந்து வருடங்களில் சூப்பர் ஃபிகரு. ஸ்ருதியின் தோழிகளாக
வரும் கூர்க்கா பொண்ணு உட்பட அம்புட்டும் ஜூப்பரு...!
படம் நெடுக ஸ்பான்சர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
ஏர்செல், சூப்பர்மேக்ஸ் (அதே மொக்கை ப்ளேடு தான்), LawMan என்று விளம்பர பதாகைகளை
காட்டி எரிச்சலூட்டுகிறார்கள். இன்னொரு காட்சியில் ஹீரோ வேண்டுமென்றே ஏர்செல் லோகோ
பொறிக்கப்பட்டிருக்கும் தம்முடைய மொபைலை உயர்த்திக்காட்டுகிறார்.
ஐயகோ...! யூ சர்டிபிகேட்டை பார்த்ததும் பதறிப்போனேன்.
பனியன் கம்பெனி விளம்பரம் கணக்கா போஸ்டர் ஒட்டியதெல்லாம் சும்மாதானா. ம்க்கும்
அடிக்கடி ஒருவர் மூக்கை ஒருவர் முத்தமிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். பாவம் அந்த
தனுஷ் தம்பி அதுல போய் முத்தம் கொடுக்க விட்டுட்டாங்களே...!
கண்ணழகா பாடல் தனுஷ், ஸ்ருதி, கொஞ்சூண்டு ரொமான்ஸுடன்
கண்களுக்கும் அழகாகவே இருக்கிறது. ஆடியோவில் பெரிய ஹிட்டடிக்கும் பாடல்கள்
விஷுவலில் மொக்கையாகவே இருக்கும். அப்படியே அது நன்றாக இருந்தாலும் கூட எதிர்பார்த்த
அளவிற்கு இல்லையென்ற நினைப்பு ஏற்படுவது மனித இயல்பு. அதையே கொலவெறி பாடலும்
உணர்த்துகிறது.
Actually, படம் நல்லாத்தான் ஆரம்பமாச்சு...! குறிப்பாக
என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். சைக்கிள்
வைத்திருந்தும் அதை வீடு வரைக்கும் தோழிகளுடன் பேசியபடி தள்ளிக்கொண்டே போகும்
ஃபிகர்ஸ், டியூஷன் அனுபவங்கள், சிங்கிள் டிஜிட் விடைத்தாளை கொடுக்கும் போது
வறுத்தெடுக்கும் வாத்தியார், பல மாதங்களாகனாலும் பார்வையில் மட்டுமே காதலிக்கும்
மனோபாவம் போன்றவை யதார்த்தம். க்ளிஷேத்தனமான காட்சிகளின் போது சுய எள்ளல்
செய்துக்கொள்ளும் வகையில் சிவகார்த்திகேயனுடைய கமெண்ட்ஸ் கலக்கல். ரசனையான
வசனங்கள்... மூஞ்சைப் பாரு பழைய அஞ்சு காசு மாதிரி...! அப்படியே தனுஷ், ஸ்ருதி
காதலுக்கு ஏற்படும் தடைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் அதெல்லாம் கூட ஓகேதான்.
அதற்குப்பின் ஒரு மருத்துவர் வருகிறார், அவருக்கு
வந்திருக்குற வியாதியோட பெயர் Bipolar Disorder. அடப்பாவிகளா எத்தனை பேருடா இதே
மொக்கையை போடுவீங்க என்று நாம் அலறும்போது, நோ நோ இது Split Personality Disorder
இல்லை. அதே மாதிரி, ஆனா இது வேறயாக்கும் என்று அவசரஅவசரமாக மறுக்கிறார். படம்
பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தனுஷுடைய காலில் மிதிபடும் ஹட்ச் நாயாக அவஸ்தைப்பட்டு
சாகிறார்கள். அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... ஊஊஊஊஊ.... அது வந்து ஙேஙேஙேஙே...
ஙேஙேஙேஙே... அதாவது.... ச்சே இந்த குட்டிப்பொண்ணும் பூசாரியும் பதிவெழுதவே விட
மாட்டேங்குறாங்க...! தனுஷ் சாகப்போகிறார்... சாகப்போகிறார்... சாகப்போகிறார்...
ங்கோத்தா செத்து ஒழியேன்டா என்று கடைக்கோடி ரசிகன் கலவரப்பட்டு கமென்ட் அடிக்கும்
போது படம் செத்து ச்சே தனுஷ் செத்து படம் நிறைவடைந்து திரை இருள்கிறது...!
இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா... |
மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும்
மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை
என்பது தீர்வாகாது...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
54 comments:
அடடே விடியல் காலையில் சூடா ஒரு காபி சாப்ட மாதிரி இருக்கு.அதுக்குன்னு இவ்ள சூடாவா?கலக்கலான விமர்சனம்...மூணு...பார்ப்பவர்கள் நெத்தியில்.
அடடா..என்னே உவமை!
கொன்னுட்டீங்க..
:)
கடைசி மூனு வரி! உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு....!
உங்கள் பதிவில் யாரோ ஒருத்தரோட சாயல் தெரியுதே? அவர்தான் உங்க ரோல்மாடலா?
நல்ல விமர்சனம் தனுஷ் இறக்கும் காட்சி மாற்றபட்டது ,ரஜினி ஒரு காட்சி என எல்லாம் பொய் தானா !
உங்க விமர்சன நடை போல் இல்லையே....ஆனாலும் மொக்கை படம் என்பது உங்க விமர்சனத்தில் தெரியுது ..
ஹா ஹா ஹா ஹா !!!சிரிப்பை அடக்கவே முடியல!இதுவரை எழுதிய விமரசந்த்தில் இதுதான் செம!
யோவ் நேத்தே நான் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு எச்சரிக்கை பன்னனே?உன்ன யாருய்யா போய் படத்த பக்க சொன்னது?படம் பார்த்து பாதியில் ஓடி வந்த நண்பர்களுக்கு நைண்டி கட்டிங் உட்டும் தலைவலி போகல!தியேட்டர் வாசலில் ஆம்புலன்ஸ் நிக்குதாம்!108 ஆம்புலன்ஸ் செம பிசி!
***********************************
இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா...
.
.
அந்த அனிமேஷன் தான் இதுக்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல்!
*
சூப்பர்மேக்ஸ் (அதே மொக்கை ப்ளேடு தான்)
.
.
யோவ் அத போட்டு சேவிங் பண்ணி நாலு நாலு ரத்தமா வந்துது மூஞ்சியில்!ஒரு வேளை தனுசு அதை பயன்படுத்தியதால்தான் முத்திய முகமா காட்சி அளிச்சானா?
*
ணா மணிண்ணா எனக்கு ஒரே ஒரு அருவா குடுண்ணா... அப்டியே எடுத்து ஒரே போடு...
.
.
இதுதான் பெஸ்ட் பஞ்ச!அண்ணா இந்தாங்க்னா புடிங்க அருவாள ஒரே போடு போடுங்க!அந்த கொசு தொல்ல தாங்கலடா நாராயணா!
*
*
அடிக்கடி ஒருவர் மூக்கை ஒருவர் முத்தமிட்டு வெறுப்பேற்றுகிறார்கள். ///
.
.
மாம்சு எனக்கு ஒரு டவுட்டு ஒரு வேளை மூக்குல சளி இருந்தா எப்படி முத்தமிடுவார்கள்?ஹீ ஹீ!
*
மொத்தத்தில் படம் பாக்குரவனுக்கு bipolar disorder (அல்லது என்ன கருமமோ) வந்து தொலைக்கும் போல@
***********************************
கடைசியாக ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்!அய்யா நீங்க முப்பது வருட கடும் உழைப்பில் இவ்வளவு பெரிய கூட்டத்தையும் பெயரையும் சேத்திருக்கீங்க!அதை உங்க பொண்ணுங்க மற்றும் மருமவன் ஒரே நாளில் காலி பண்ணிடுவாங்க போல!இது உங்களுக்கு தெரியுதா இல்லை களின்ஜர் மாதிரி ஒன்னும் பண்ண முடியாம உட்டுடீங்களா?
*
ரீசன்ட் அப்டேட்: பட பெட்டியை கைப்பற்றி அழிக்க துணை ராணுவம் வர உள்ளது!
http://picturepush.com/public/7918308
முன்பு அமரன்'ன்னு ஒரு படம் வந்தது கார்த்திக் நடித்து ஒரு பாட்டும் பாடினார் [[வெத்தலை போட்ட சோக்குல நான் குத்துனேன் பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம்....]] அந்த பாட்டு இந்த "கொலைவெறி" பாட்டு போல செம ஹிட் ஆச்சு ஆனால் படம் அட்டர் பிளாப் ஆகி மண்ணை கவ்வுச்சி ஹீ ஹீ ஹீ ஹீ அதே போலதான் தனுஷின் 3 படமும் ஹா ஹா ஹா ஹா பில்டிங் ஸ்டாங்கு பேஸ்மென்ட் வீக்கு ஹி ஹி.....!!!
:))
சார் நீங்க எந்த படத்தையாவது எப்பவாவது நல்ல படம் எண்டுருக்கிறீங்களா? சரியானடவுட்டு :P
@ Manimaran
// அடடே விடியல் காலையில் சூடா ஒரு காபி சாப்ட மாதிரி இருக்கு.அதுக்குன்னு இவ்ள சூடாவா?கலக்கலான விமர்சனம்...மூணு...பார்ப்பவர்கள் நெத்தியில். //
நன்றி தல... நைட் ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு வந்து எழுதி முடிப்பதற்குள் விடிந்துவிட்டது...
@ Raju N
// அடடா..என்னே உவமை!
கொன்னுட்டீங்க..
:) //
நன்றி தல...
@ வீடு சுரேஸ்குமார்
// கடைசி மூனு வரி! உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு....! //
ஆமாம் தல... சுயஎள்ளல் ரொம்ப முக்கியம்...
@ பாலா
// உங்கள் பதிவில் யாரோ ஒருத்தரோட சாயல் தெரியுதே? அவர்தான் உங்க ரோல்மாடலா? //
இது எப்ப... சாமீ... யார் அது...? ஒருவேளை ஒரே ஒரு ஒத்த வார்த்தையை பயன்படுத்தியதால் ஜாக்கி தான் என் ரோல் மாடல்ன்னு நினைக்கிறீங்களா...
@ PREM.S
// நல்ல விமர்சனம் தனுஷ் இறக்கும் காட்சி மாற்றபட்டது ,ரஜினி ஒரு காட்சி என எல்லாம் பொய் தானா ! //
படத்துல ரஜினி இல்லை... ஒருவேளை இறக்கும் காட்சியை இன்னும் கொடூரமாக எடுத்துவிட்டு வெட்டி எரிந்திருக்கலாம்... முதல் காட்சியில் தனுஷை பிணமாக காட்டவில்லையே...
@ kovai Neram
// உங்க விமர்சன நடை போல் இல்லையே....ஆனாலும் மொக்கை படம் என்பது உங்க விமர்சனத்தில் தெரியுது .. //
ஆமாம் சார்... இதுக்கு பேரு Bipolar Disorder ஒரே ஆளே வெவ்வேறு மாதிரியா பதிவெழுதுவாங்க... ஆனா எப்படி எழுதினாலும் படிக்கிறவங்க காண்டாவாங்க...
@ வடக்குபட்டி ராம்சாமி
// ஹா ஹா ஹா ஹா !!!சிரிப்பை அடக்கவே முடியல!இதுவரை எழுதிய விமரசந்த்தில் இதுதான் செம! //
நன்றி தல...
// யோவ் நேத்தே நான் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு எச்சரிக்கை பன்னனே?உன்ன யாருய்யா போய் படத்த பக்க சொன்னது? //
படம் சூரமொக்கை என்று தெரிந்தாலும் கூட பார்க்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா பார்த்துடனும் தல... இல்லைன்னா தல வெடிச்சிடும்...
ஆனா ஒன்னு தல, உண்மையிலேயே முழுநீள நகைச்சுவை படம் பார்த்தா கூட இந்த மாதிரி சிரிக்க முடியாது... Ultimate Fun... அதுக்கு மேல வேறென்ன வேணும்...
@ MANO நாஞ்சில் மனோ
// முன்பு அமரன்'ன்னு ஒரு படம் வந்தது கார்த்திக் நடித்து ஒரு பாட்டும் பாடினார் [[வெத்தலை போட்ட சோக்குல நான் குத்துனேன் பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம்....]] அந்த பாட்டு இந்த "கொலைவெறி" பாட்டு போல செம ஹிட் ஆச்சு ஆனால் படம் அட்டர் பிளாப் ஆகி மண்ணை கவ்வுச்சி ஹீ ஹீ ஹீ ஹீ அதே போலதான் தனுஷின் 3 படமும் ஹா ஹா ஹா ஹா பில்டிங் ஸ்டாங்கு பேஸ்மென்ட் வீக்கு ஹி ஹி.....!!! //
நன்றி தல... இம்பரமேஷன் இஸ் வெல்த்...
@ மோகன் குமார்
// :)) //
:))
@ கார்த்தி
// சார் நீங்க எந்த படத்தையாவது எப்பவாவது நல்ல படம் எண்டுருக்கிறீங்களா? சரியானடவுட்டு :P //
இது ஒரு நல்ல கேள்வி... யாராவது இந்த கேள்வியை கேட்பீங்கன்னு எதிர்பார்த்தேன்...
இதற்கான பதில் நீளமானது சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்...
என்னைப் பொறுத்தவரையில் நல்ல படங்களை மூன்று விதமாக பிரிக்கலாம்...
1. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நச்சுன்னு நடுமண்டையில் அடித்தாற்போல ங்கோத்தா இதுதாண்டா வாழ்க்கைன்னு சொல்லணும்
(உ.தா: புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம்)
2. படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா தெரியணும்
(உ.தா: காதலில் சொதப்புவது எப்படி, 180)
3. படம் சமுதாய மாற்றம் குறித்தான கருத்துக்களை "நேர்மையான" முறையில் எடுத்துச்சொல்ல வேண்டும்.
(உ.தா: வாகை சூட வா, அங்காடித்தெரு)
அங்காடித்தெரு, யுத்தம் செய், நந்தலாலா, வாகை சூட வா, அம்புலி இன்னும் சில படங்களுக்கு நான் பாசிடிவ் பதிவு எழுதியிருக்கிறேன்...
//மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...!/////
Fact-u.Fact-u.Fact-u.Fact-u.Fact-u.
இந்த படம் ஊத்திகிட்டதால நம்ம ரூட் கிளியர் ஆச்சு..
ஓபனிங் தலைப்பு - நடுவில விமர்சனம் - இறுதில பஞ்ச் . மூன்றுமே சூப்பர் தல.
தமிழில் பொம்பிளைங்க டைரக்ட் பண்ற படம் ஓடாதுன்னு ஒரு தியரி உருவாக்கலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்றே மாப்பு? [ஸ்ரீ ப்ரியா, சுகாசினி, ஜெயசித்ரா....... ஐஸ்வர்யா ரஜினி தனுஷ்....]
\\குறிப்பாக என்னுடைய பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பவும் அழைத்துச்சென்றது என்று சொல்லலாம். \\இதையே இன்னும் எத்தனை பேரு சொல்லப் போறாங்களோ தெரியலையே....
\\இரண்டாம் பாதி... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், தினத்தந்தி பாணி உருக்கமான கடிதம், Bipolar Disordar... ஙேஙேஙேஙே... ஙேஙேஙேஙே...
\\படத்தோட முதல் பாதியை மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன்.
\\ஸ்ருதி – அது என்னவோ தெரியல, அந்த புள்ளயோட மூக்கு சனியனை பார்த்தா மட்டும் நமக்கு மூடே வர மாட்டேங்குது. \\ இதென்னடா அநியாமா இருக்கு...???? பாவம் அது ஏதோ நடிச்சு காலத்தை தல்லலாம்னு வந்திருக்கு, நீ இப்படியெல்லாம் கண்டிஷன் போடுறியே மாப்பு...!!
\\கடைசி மூனு வரி! உங்க நேர்மை எனக்கு ரொம்ம புடிச்சிருக்கு....!\\ ரிப்பீட்டுடுடுடுடுடுடுடுடுடு......................
இது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இருக்கு.கன்ட்னியூ பண்ணவும்...தயாரிப்பாளர்கள் போட்ட காசை எடுததுவிடுவார்கள்.நிறைய தியேட்டரில் ரிலீஸ் பண்ணியதால்.மூன்றுநாள் ஹவுஸ்ஃபுல்தான்.
@ மொக்கராசு மாமா
// Fact-u.Fact-u.Fact-u.Fact-u.Fact-u.
இந்த படம் ஊத்திகிட்டதால நம்ம ரூட் கிளியர் ஆச்சு.. //
U mean OKOK... Lets wait and see...
@ ஹாலிவுட்ரசிகன்
// ஓபனிங் தலைப்பு - நடுவில விமர்சனம் - இறுதில பஞ்ச் . மூன்றுமே சூப்பர் தல. //
நன்றி தல...
Super star pera keduka 2 ponnungalum romba kasta padranga pavam, soundarya goa nu oru sappa padatha produce pannanga ippo iswarya avanga panguku 3. nu oru mokka padatha direct pannirukanga intha ponnungale ippadi than pa.
படம் பாக்காம விமரசனம் படிக்க மாட்டேன்.. தொடர் பணிகளினால் இன்னும் ரெண்டு வாரத்துக்கு அந்த கொசு கடி (தனுஷ சொல்லல) தியேட்டருக்கு போகமுடியாதுன்னு நெனைக்கிறேன்... சோ எல்லா விமர்சனத்தையும் படிச்சிட்டு கெடக்குறேன்..
மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்கெடுப்ப... இந்த கருமத்த எல்லா ப்லாக்ளையும் கைவி கைவி ஊத்திருக்க்காயங்க... நீ விடுவியா?
இரஜினி மொவளுக்கு இந்த விமர்சனத்த ட்வீட் பண்ணிடு.. சாகட்டும் சனியன்...
நானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்.. ஹீரோக்கு நீளமான முடி இருக்கணும்.. பிரபா கால்ஷீட் கெடைக்குமா..?
@ Jayadev Das
// தமிழில் பொம்பிளைங்க டைரக்ட் பண்ற படம் ஓடாதுன்னு ஒரு தியரி உருவாக்கலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்றே மாப்பு? [ஸ்ரீ ப்ரியா, சுகாசினி, ஜெயசித்ரா....... ஐஸ்வர்யா ரஜினி தனுஷ்....] //
ஹி... ஹி... அப்புடியா சொல்றீங்க... கரெக்ட் தான்... தியேட்டருக்கு வர்ற தொண்ணூறு சதவிகிதம் ஆண்கள் கம் இளைஞர்கள்... அப்படி இருக்கும்போது பெண்கள் படமெடுத்து வெற்றிபெறுவது சுலபமல்ல...
// இதையே இன்னும் எத்தனை பேரு சொல்லப் போறாங்களோ தெரியலையே.... //
எல்லோரும் அந்த பருவத்தை கடந்து தானே வந்திருப்பார்கள்...
// படத்தோட முதல் பாதியை மட்டும் பார்க்கலாம்னு இருக்கேன். //
சரியான முடிவு சார்... நான் மட்டுமல்ல நிறைய பதிவர்கள் அதையே சொல்கிறார்கள்...
// இதென்னடா அநியாமா இருக்கு...???? பாவம் அது ஏதோ நடிச்சு காலத்தை தல்லலாம்னு வந்திருக்கு, நீ இப்படியெல்லாம் கண்டிஷன் போடுறியே மாப்பு...!! //
மூக்கு ரொம்ப முக்கியம் சார்... மூக்கை வைத்து ஒரு ஆராய்ச்சி பதிவு ஆரம்பித்து அது கிடப்பில் இருக்கிறது... உங்களுக்காக அதை விரைவில் தூசி தட்டி எடுக்கிறேன்...
@ Chilled Beers
// இது உங்க விமர்சன நடை போல் இல்லை.ரொம்பவே நல்லாவே இருக்கு. //
அவ்வ்வ்வ்வ்வ்...
@ sirippusurendar
// Super star pera keduka 2 ponnungalum romba kasta padranga pavam, soundarya goa nu oru sappa padatha produce pannanga ippo iswarya avanga panguku 3. nu oru mokka padatha direct pannirukanga intha ponnungale ippadi than pa. //
அவசரப்படாதீங்க... இழந்த பெருமைகளை செளந்தர்யா கோச்சடையானில் மீட்டெடுப்பார் என்று நம்புவோமாக...
@ மயிலன்
// மத்தவங்க சுமார் ன்னு சொன்னாலே அந்த படத்த நீ சுளுக்கெடுப்ப... இந்த கருமத்த எல்லா ப்லாக்ளையும் கைவி கைவி ஊத்திருக்க்காயங்க... நீ விடுவியா? //
ஹி... ஹி... கார்த்திக்கு எழுதிய பதிலை படிக்கவும்,...
// இரஜினி மொவளுக்கு இந்த விமர்சனத்த ட்வீட் பண்ணிடு.. சாகட்டும் சனியன்... //
பண்ணிட்டேன்... ஆனா அவுக படிப்பாகளான்னு தெரியல...
// நானும் ஒரு மனோதத்துவம் சார்ந்த கதை வெச்சுருக்கேன்.. ஹீரோக்கு நீளமான முடி இருக்கணும்.. பிரபா கால்ஷீட் கெடைக்குமா..? //
உங்க கதை எதுக்கு... என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்திராத நிறைய அதிர்ச்சிகள் உள்ளன...
Ok thala ne solrathala vidren.
Ok thala ne solrathala vidren.
//என் சொந்த அனுபவங்களிலேயே தமிழ் சினிமாவே பார்த்திராத நிறைய அதிர்ச்சிகள் உள்ளன//
பாக்குறதும் சைக்கோ படம், பழகுற பயலுவளும்...ஒரே திகிலாவே இருக்கே என் நெலம!!
//இனிமே படம் முடிஞ்சதும் ஸ்லைடு போடுவியா... போடுவியா... போடுவியா.//
//மொக்கைப் பதிவுகளை தேடிப்படிக்கும் மனநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்ல. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது...!//
அல்டிமேட் வரிகள் பிரபாகர். கலக்குலே தம்பி!!
ஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை எட்டி ஒதைக்கறதுக்கு ரெடியா இருப்பா.
@ ! சிவகுமார் !
// பாக்குறதும் சைக்கோ படம், பழகுற பயலுவளும்...ஒரே திகிலாவே இருக்கே என் நெலம!! //
கூல்... எல்லாமே கண்டிப்பா ஒருநாள் பதிவா வரும்... இப்பவே போட்டா சமுதாயம் காறித்துப்பும்... அதான் பாக்குறேன்...
// அல்டிமேட் வரிகள் பிரபாகர். கலக்குலே தம்பி!! //
நன்றி தல...
// ஹட்ச் நாயை நாளைக்கி வாங்கி டெஸ்ட் பண்ணிடுவோம். அதை எட்டி ஒதைக்கறதுக்கு ரெடியா இருப்பா. //
நாய் நக்சை அழைத்து வாரும்... சோதிச்சிடலாம்...
படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா தெரியணும்
(உ.தா: காதலில் சொதப்புவது எப்படி, 180)
.
.
ஐயோ ஐயோ!180 படம் பாக்குறதே எனக்கு செம கஸ்டமா இருந்துதே!ஐயோ தெய்வ குத்தமா?
தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட் ... நல்ல நேர்மையான விமர்சனம் ...
@ குரங்கு குப்பன்
// ஐயோ ஐயோ!180 படம் பாக்குறதே எனக்கு செம கஸ்டமா இருந்துதே!ஐயோ தெய்வ குத்தமா? //
வடக்குப்பட்டி...!!!
நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க தல...
@ ananthu
// தனுஷ் _ ஸ்ருதி பள்ளி பருவ காதல் , பாடல்கள் தவிர மத்ததெல்லாம் வேஸ்ட் ... நல்ல நேர்மையான விமர்சனம் ... //
மிக்க நன்றி தல...
தனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக்கு "அவனா நீ" டிசார்டர் வந்திருக்கு!உடனே கீழ்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்!
எந்த ****** கூ** அந்த வடக்குபட்டி?
ஒன்னைய பாத்தா பாவமா இருக்கு!மோட்டு வேளைய வேற பாதுகினு இருக்க!தனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாரு!
@ குரங்கு குப்பன்
// தனுசுக்கு என்னவோ போலார் டிசார்டர் வந்தா மாதிரி உனக்கு "அவனா நீ" டிசார்டர் வந்திருக்கு!உடனே கீழ்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்!
எந்த ****** கூ** அந்த வடக்குபட்டி?
ஒன்னைய பாத்தா பாவமா இருக்கு!மோட்டு வேளைய வேற பாதுகினு இருக்க!தனுஷ் போல தப்பான் முடிவு எடுக்காம உடனே டாக்டரை பாரு! //
முழுசா நனைஞ்சாச்சு முக்காடு எதுக்கு...
http://www.youtube.com/watch?v=pFk3IPkB9uk
அப்போ படம் பார்த்தா 'Why திஸ் கொலைவெறி?' ன்னு இயக்குனரை பார்த்து பாடனும் போல இருக்கே உங்க விமர்சனம்?
Post a Comment