கதை என்று புதிதாக சொல்லுவதற்கு எதுவுமில்லை.
இயக்குனருடைய முந்தய படைப்புகளை பார்த்திருந்தால் அதுவே போதுமானது. பொண்ணுங்களை
டன்கணக்கில் கலாய்ப்பது, காதலை காறித்துப்புவது, நட்பையும், நண்பர்களையும்
உயர்த்திக்காட்டுவது – இவையெல்லாம் வெங்கட் பிரபு, செல்வராகவன் மாதிரி
இயக்குனர்களின் தற்போதைய யூத் ஃபார்முலா. அதே பாணியில் மூன்றாவது முறையாக
படமெடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார் ராஜேஷ்.
உதயநிதி – முதல் படமென்று சொல்லவே முடியவில்லை,
எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிப்பு அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க. (ம்க்கும்
கேக்குறவன் கேனைப்பயலா இருந்தா கேரம் போர்டை கண்டுபிடிச்சது
கே.ஆர்.பி.செந்திலுன்னு சொல்லுவியே). எத்தனையோ மாஸ் ஹீரோக்களின் முதல் படங்களோடு
ஒப்பிட்டு பார்க்கும் போது உதயநிதி ஓகே ஓகே ரகம்தான். என்ன, பாடல்காட்சிகளில்,
நடனக்காட்சிகளில் மட்டும் நமது சகிப்புத்தன்மையை கடுமையாக சோதிக்கிறார். க்ளோசப்
காட்சிகள் உங்களை க்ளோஸ் செய்யும் ஆபத்துகள் அதிகம். நிறைய காட்சிகளில் இது ஜீவா
நடிக்க வேண்டிய ரோலாச்சே என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
ஹன்சிகா – பச்சை மைதா மாவு. நடிப்பு.... ஆஹ்
அதெல்லாம் ஓரமா வச்சிடுவோம். அம்மணி அடிக்கடி கீழுதட்டை கடித்துக்கொள்ளும்
(அவருடையதை தான்) அழகிற்காகவே பாஸ்மார்க் போடலாம். ஆனாலும் சின்ன குஷ்புவெல்லாம்
டூ டூ டூ டூ மச். ஹன்சிகா பற்றி பெரும்பான்மை ரசிகர்களுடைய கருத்தை காபி ஷாப்
மாப்பிள்ளை கேரக்டர் புட்டு புட்டு வைக்கிறது. ஓகே ஓகேயை பொறுத்தவரையில்
எதிர்பார்த்ததை விட குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஹன்சிகாவை
பார்த்து சொல்றதுக்கு பெருசா எதுவுமில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
சந்தானம் – ஒரிஜினல் ஹீரோவே இவர்தான். (Fact u
Fact u Fact u Fact u Fact u). தொடர்ச்சியாக பத்து நிமிடங்கள் சந்தானம் வரவில்லை
என்றால்கூட படம் டல்லடிக்கிறது. வசனங்கள் ஒவ்வொன்றிற்கும் திரையரங்கு ஆரவாரம்
செய்கிறது. தொடர்ச்சியாக இயக்குனரின் மூன்று படங்களிலும் ஒரே கேரக்டர், ஆ-ஊன்னா
“டேய்” ன்னு ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற விஷயங்கள் சற்றே கடுப்பை
கிளப்பினாலும் ரசிக்க வைக்கின்றன.
ஜாங்கிரி – கேரக்டரில் நடித்த பெண் செம
செலக்ஷன். வாய்ப்பு கிடைத்தால் கோவை சரளா, ஆர்த்தி மாதிரி லேடி காமெடியனாக
கலக்கலாம், கலாய்க்கலாம். சரண்யாவுக்கு தமிழ் சினிமாவிற்கே உரித்தான அரைக்கிறுக்கு
அம்மா கேரக்டர். இந்தப் படத்துலயும் ஹீரோவுக்கு அப்பா இல்லைன்னு சொன்னா
உதைப்பாங்கன்னு டம்மியா ஒரு அப்பா கேரக்டர். ஹன்சிகாவின் அப்பாவாக சாயாஜி,
அம்மாவாக உமா பத்மநாபன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒரே
ஒரு காட்சியில் சினேகா, ஆண்ட்ரியா, ஆர்யா.
ஆக்சுவல்லி, டைட்டில் போடும்போதுதான் படத்துடைய
இசையமைப்பாளர் யுவனல்ல ஹாரிஸ் என்று தெரிந்தது. பரத்வாஜ், வித்யாசாகர் வரிசையில்
கூடிய விரைவில் ஹாரிஸ் ஓரம் கட்டுப்படுவார் என்றே தெரிகிறது. பாடல்கள் மொக்கையாக
இருக்கிறது, அதற்கு காரணம் ஒருவேளை உதயநிதியின் திவ்யமான முகமோ அல்லது வெளிநாட்டு
தெருக்களில், பாலைவனத்தில் ஆடுவதையோ தொடர்ந்து பார்ப்பதின் காரணமாக ஏற்படும்
சலிப்பாகவோ கூட இருக்கலாம். ப்ச் ஹன்சிகாவாவது ஆறுதல் சொல்லியிருக்கலாம். வேணாம்
மச்சான் பாடல் மட்டும் கொஞ்ச காலத்திற்கு யூத் ஆந்தெமாகவும் மொபைல் ரிங்டோனாகவும்
இருக்கக்கூடும். அந்த பாடலின் குரூப் டான்சர்களில் தலையில் துண்டைக்கட்டிக் கொண்டு
ஆடும் ஆயாவை பாராட்டியே ஆகவேண்டும். முப்பது பேர் ஆடினாலும் தனியாக கவனத்தை
ஈர்க்கிறார். டான்ஸ் மாஸ்டர் தினேஷ் வித்தியாசமான ஃபெர்பாமான்ஸ் என்ற பெயரில்
அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு பாடலில் ஆடி வெறியேற்றுகிறார் சாக்கிரதை.
இயக்குனர் ராஜேஷ், கமர்ஷியல் படமெடுக்கிறேன்
பேர்வழி என்ற பெயரில் பொலிட்டிக்கல் பொடிமாஸ் போடாமல் இருப்பது மிகவும் ஆறுதலான
விஷயம். ஆனால் தொடர்ச்சியாக ஒரே கதையை திரும்பத் திரும்ப காட்டுவது
வெகுகாலத்திற்கு எடுபடாது என்றே தோன்றுகிறது. இயக்குனரும், சந்தானமும் மாற்றத்தை
காட்டியே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் நிற்கிறார்கள்.
கருத்து, கத்திரிக்காய் ஈர வெங்காயமெல்லாம்
இல்லையென்றாலும் ஓகே ஓகே ஓட்டுமொத்தமாக ஒரு ஃபீல் குட் சினிமா, சினிமாவை சினிமாவாக
பார்ப்பவர்களுக்கு மட்டும். மற்றபடி தரை டிக்கெட் ரசிகர்களுக்காகவே படம் ஓஹோவென
ஓடும் என்பது வேறு விஷயம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
43 comments:
தலைப்பே சரியான விமர்சனம்! தமிழ்ப் படங்களில் கதையை எதிர்பார்த்துக்கூட போவீர்களா என்ன..? ஹன்சிகா எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் - எதைங்க? ஆக, சந்தானத்தால் காப்பாற்றப்படும் மற்றொரு படம்ங்கறீங்க..! சரி... சரி...
சட்டை சுமாரா தைச்சிருக்காங்க போல...!
//ஓகே ஓகே ஓட்டுமொத்தமாக ஒரு ஃபீல் குட் சினிமா, சினிமாவை சினிமாவாக பார்ப்பவர்களுக்கு மட்டும்.//
அதுவே போதும் பாஸ்! என்னத்த சீரியசா பாத்து! :-)
சரிங்ணா......
இப்போதைக்கு காமெடின்னாதான் படத்துக்கு வராங்க ஜனங்களும், அவங்களும் என்னதான் பண்ணுவாங்க, வித்தியாசமா டிரை பண்ணுனா நம்மாளுகளும் வித்தியாசமா பேக் பண்ணிடறாங்க
நீங்கள் சொல்வது உண்மைதான் .. கதையை விட காட்சிகளை நம்பி , முக்கியமா சந்தானத்தை நம்பி படத்தை எடுத்துள்ளனர்
இன்று
உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்
நண்பா..படம் நல்லாயிருக்கும் போல...பாத்திட வேண்டியதுதான்.வழக்கம் போல கலக்கலான விமர்சனம்
அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
தல! நமக்கு சினிமான்னாலே அலர்ஜி. படம் பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு. என்னடா வித்தியாசமான ஜந்துவா இருக்கானேன்னு நெனக்கிறீங்க இல்ல. அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன். நான் சினிமா பதிவு போடறதில்ல. சினிமா பத்தி எழுதறுதும் இல்ல. நீங்க சினிமா பத்திதான் அதிகமா எழுதறீங்க.அதனாலதான் உங்க வலைப் பக்கம் அதிகமா வர முடியல. மத்தபடி கோபமெல்லாம் இல்ல. வந்தாதான் வருவேன். போட்டாதான் போடுவேன். அதான் ஓட்டு. அப்படின்னு பாலிஸி ஒண்ணும் வச்சிக்கறதுல்ல. வாழ்க்கைய போகிற போக்குல அனுபவிச்சிட்டு போற ஆளு நான். இதோ வந்தேன். அட்டெண்டன்ஸ் போட்டேன். முத்திரையிட்டாச்சு. வர்ட்டா?
@ கணேஷ்
// ஹன்சிகா எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் - எதைங்க? //
டபுள் மீனிங் இல்லை சார்... சிங்கிள் மீனிங் தான்... கவர்ச்சி பத்தலை...
@ வீடு சுரேஸ்குமார்
// சட்டை சுமாரா தைச்சிருக்காங்க போல...! //
நல்லாதான் தைச்சிருக்காங்க... ஆனா என்கிட்டே ஏற்கனவே இதேமாதிரி ரெண்டு சட்டை இருக்கு...
@ ஜீ...
// அதுவே போதும் பாஸ்! என்னத்த சீரியசா பாத்து! :-) //
நீங்க நம்மாளு பாஸ்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// சரிங்ணா...... //
எங்கேயோ உதைக்குதே...
@ இரவு வானம்
// இப்போதைக்கு காமெடின்னாதான் படத்துக்கு வராங்க ஜனங்களும், அவங்களும் என்னதான் பண்ணுவாங்க, வித்தியாசமா டிரை பண்ணுனா நம்மாளுகளும் வித்தியாசமா பேக் பண்ணிடறாங்க //
வித்தியாச விரும்பிகள் சிறுபான்மையினராக இருப்பதுதான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சாபம்...
@ "என் ராஜபாட்டை"- ராஜா
// நீங்கள் சொல்வது உண்மைதான் .. கதையை விட காட்சிகளை நம்பி , முக்கியமா சந்தானத்தை நம்பி படத்தை எடுத்துள்ளனர் //
நன்றி தல...
@ Manimaran
// நண்பா..படம் நல்லாயிருக்கும் போல...பாத்திட வேண்டியதுதான்.வழக்கம் போல கலக்கலான விமர்சனம் //
நன்றி மணிமாறன்...
@ krishy
// அருமையான பதிவு //
நன்றி க்ரிஷி...
@ துரைடேனியல்
// தல! நமக்கு சினிமான்னாலே அலர்ஜி. படம் பார்த்தே பல வருஷங்கள் ஆச்சு. என்னடா வித்தியாசமான ஜந்துவா இருக்கானேன்னு நெனக்கிறீங்க இல்ல. அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன். நான் சினிமா பதிவு போடறதில்ல. சினிமா பத்தி எழுதறுதும் இல்ல. நீங்க சினிமா பத்திதான் அதிகமா எழுதறீங்க.அதனாலதான் உங்க வலைப் பக்கம் அதிகமா வர முடியல. மத்தபடி கோபமெல்லாம் இல்ல. வந்தாதான் வருவேன். போட்டாதான் போடுவேன். அதான் ஓட்டு. அப்படின்னு பாலிஸி ஒண்ணும் வச்சிக்கறதுல்ல. வாழ்க்கைய போகிற போக்குல அனுபவிச்சிட்டு போற ஆளு நான். இதோ வந்தேன். அட்டெண்டன்ஸ் போட்டேன். முத்திரையிட்டாச்சு. வர்ட்டா? //
சார் இப்ப எதுக்கு இந்த தன்னிலை விளக்கம்... நான் கேட்கவே இல்லையே...
நண்பர்களோட குருப்பா போய் பார்க்க தகுதியான படம்னு சொல்ல வரீங்க - அப்படிதானே?
சூப்பர் விமர்சணம்
இன்றைய பதிவு
அனாமதேயருக்கு ஒரு படம் வைக்கலாம் வாங்க
மூன்று Gadjet-களை ஒரே Gadjet-ல் வைக்கலாம்
////////Philosophy Prabhakaran said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// சரிங்ணா...... //
எங்கேயோ உதைக்குதே.../////////
சரின்னு சொல்றது ஒரு குத்தமாய்யா....?
ஆமா இந்த ப்ராப்ள பதிவர் பிரபாகரன் என்பது நீதானா?
கலைஞர் பேரன பாக்கும் போது 3 பட டைலாக் ஒண்ணுதான் ஞாபகம் வருது.. "மூஞ்ச பாரு.. பழைய அஞ்சு காசு மாதிரி..." இதுல க்ளோஸ் அப் ஷாட்டு.. டான்ஸ் மூவ்மேன்ட்ன்னு அழகுக்கு அழகு சேக்குற மேட்டர் ஏராளம்...
ஹன்சிகா இந்த படத்துல பாலைவனத்துல ஒடராப்ல ஒரு பாட்டு இருக்குது.. அத தினமும் கிரௌன்ட்ல செய்யல்லேன்னா, கொஞ்ச நாள்ல குஷ்பூவ எல்லாரும் 'சின்ன'ஹன்சிகா ன்னு சொல்ற நெலம வந்துடும்...அந்த நாசமா போன EXPRESSION லாம் பாக்க சகிக்கல...
தலதளபதின்னு சும்மா ஜாலிக்கெல்லாம் சந்தானம் பேர் வெச்சுக்கல... அவுங்க ரெண்டுபேரோட படுத்துக்கு கெடைக்கிற அதே ஓபனிங்தான் இவருக்கு இந்த படத்துல... டிக்கெட்லாம் ப்ளாக்லதான் கெடைக்குது.. மனுஷன் பின்னியிருக்கார்...குறிப்பா மைலாபூர்காரா மாதிரி அவர் english பேசற ஸ்டைல் இருக்கே.. அசத்தல்...
க்ளிஷேக்களில் இருந்து வெளிவரமுடியாமல் இராஜேஷ், இசை பஞ்சத்தில் ஹாரிஸ்...தேசிய விருது வாங்குனதுனாலையோ என்னவோ அதே choreography ஸ்டைலுடன் தினேஷ்.. போதும் பாஸ்..மூணு பேரும் கொஞ்சம் மாறுங்க...
வாலிப வயோதிக நண்பர்களே... இவ்வளவு நேரம் கொசுக்கடியோட நா பாத்த படத்த வெச்சு உங்களுக்கெல்லாம் ஒரு குட்டி விமர்சனம் சொல்ல போறேன்...
இதுதான் (பிளாஸ்டிக் கப்) படத்தோட கதை...
இது (சரக்கு) சந்தானம் டைமிங்...
இது (மிக்சிங்) சந்தனத்தோட modulation...
இப்ப இத நல்லா கலக்கி படத்த பாக்குறோம்... தியேட்டர்ல இருந்து வெளிய வரும்போது சந்தானம் மட்டுமே மனசுல இருக்கும்போது படத்தோட கதை என்னாச்சு?
குப்பத்தொட்டில மச்சி...
yes, that is the OK OK....
(FROM MY REVIEW IN FB :) )
Philosophy Prabakaran said//சார் இப்ப எதுக்கு இந்த தன்னிலை விளக்கம்... நான் கேட்கவே இல்லையே...//
- அது ஒண்ணுமில்லை. என்னுடைய பதிவு(http://duraidaniel.blogspot.in/2012/04/blog-post.html) ஒண்ணுல நீங்க
//காவக்காரன்... கோவக்காரன்... வேட்டைக்காரன்... எங்க வூட்டு மாப்பிள்ள ஒரு குடிகாரன்...//
அப்படின்னு கமெண்ட் பண்ணிருந்தீங்களா? என்னையத்தான் சொல்றீங்களோன்னு ஒரு குற்ற உணர்ச்சி. அதான் புலம்பித் தள்ளிட்டேன். மற்றபடி ஒண்ணுமில்ல. Continue Your work....
@ குடிமகன்
// நண்பர்களோட குருப்பா போய் பார்க்க தகுதியான படம்னு சொல்ல வரீங்க - அப்படிதானே? //
அதேதான் தலைவா...
@ Vairai Sathish
// சூப்பர் விமர்சணம் //
ந"ண்"றி பாஸ்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// சரின்னு சொல்றது ஒரு குத்தமாய்யா....? //
வதவதன்னு பின்னூட்டம் போடுற ஆளு ஒத்த வார்த்தையோட நிறுத்திக்கிட்டா குத்தம்தான்...
@ Anonymous
// ஆமா இந்த ப்ராப்ள பதிவர் பிரபாகரன் என்பது நீதானா? //
ணா... ஆமாங்ணா அதுக்கு இப்ப என்னங்ணா...
@ மயிலன்
இதையெல்லாம் பதிவுல போட்டா என்னவாம்...
@ துரைடேனியல்
// அப்படின்னு கமெண்ட் பண்ணிருந்தீங்களா? என்னையத்தான் சொல்றீங்களோன்னு ஒரு குற்ற உணர்ச்சி. அதான் புலம்பித் தள்ளிட்டேன். மற்றபடி ஒண்ணுமில்ல. Continue Your work.... //
Crazy... நீங்க கிராமத்து சொலவடைகள் பற்றிய பதிவு போட்டிருந்தீர்கள்... அதற்கு நான் சமீபத்தில் ரசித்த சொலவடையை பின்னூட்டமாக போட்டேன்... அதுக்குப்போய் என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிட்டு... போங்க சார்...
ஒன்னோட அக்கப்போர் தாங்காம எதிரி ஒர்த்தேன் ஒன்னைய தட்டி வெக்க சொல்ல எனக்கு வயர் ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்கான்!நீ என்ன செய்ய போற?"கவனிப்பை" வாங்கிகிரியா?இல்ல அவனுக்கு மேல அமவுண்டு தரியா?
//Philosophy Prabhakaran said...
@ மயிலன்
இதையெல்லாம் பதிவுல போட்டா என்னவாம்..//
விமர்சனம் எழுத நெறைய சினிமா அறிவு இருக்கணும்.. மொக்க படத்தையும் பாக்கணும்.. வாக்குவாதம் பண்ண தயாரா இருக்கணும்.. ரொம்ப முக்கியமா நடுநிலையா எழுதணும்.. இதெல்லாம் முடியாத கையாலாகாதத்தனம் தான் காரணம்ன்னு வெச்சுக்கோங்களேன்...அதனால சும்ம்மா அப்பப்ப facebook ல மட்டும் இந்த ஜிகிடி வேல...
@ Anonymous
// ஒன்னோட அக்கப்போர் தாங்காம எதிரி ஒர்த்தேன் ஒன்னைய தட்டி வெக்க சொல்ல எனக்கு வயர் ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்கான்!நீ என்ன செய்ய போற?"கவனிப்பை" வாங்கிகிரியா?இல்ல அவனுக்கு மேல அமவுண்டு தரியா? //
தலைவா... நீங்க யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்... நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறீங்க...
இப்ப என்ன... கவனிக்கணும் அதானே... என் வீட்டு விலாசம் 828, T.H.Road, Thiruvotriyur, Chennai - 19.... தைரியம் இருந்தால் வாருங்கள் மோதிப்பார்க்கலாம்...
@ மயிலன்
// விமர்சனம் எழுத நெறைய சினிமா அறிவு இருக்கணும்.. மொக்க படத்தையும் பாக்கணும்.. வாக்குவாதம் பண்ண தயாரா இருக்கணும்.. ரொம்ப முக்கியமா நடுநிலையா எழுதணும்.. இதெல்லாம் முடியாத கையாலாகாதத்தனம் தான் காரணம்ன்னு வெச்சுக்கோங்களேன்...அதனால சும்ம்மா அப்பப்ப facebook ல மட்டும் இந்த ஜிகிடி வேல... //
யோவ்... ஏன் இப்படியெல்லாம் ஜல்லியடிக்கிறீங்க... ப்ளாக்கர் இருப்பதே அவரவர் மனதில் தோன்றுவதை எழுதுவதற்கு தான்... இதுல என்ன அறிவு இருக்கணும், நடுநிலையா எழுதணும்ன்னு காமெடி பண்ணிக்கிட்டு....
அட தூ ஒன்ன மாதிரி மொக்க பசங்களை எவண்டா கவனிப்பான்?நா யாருன்னு ஒனக்கு ஒரு *****ம் தெரியாது நீ சாத்து!எழுத படிக்கவே தெரியாத ஒரு முட்டாள் தெலுங்கன் படத்த போட்டுகினு நிக்கும்போதே ஒன்னோட லட்சணம் தெரியுதுடா!நீ மூடிக்கினு முடிய வள!அதுவாவது வளருதே!
எவன் கமன்ட் போட்டாலும் அவனா நீ ன்னு கேக்கும்போதே ஒனக்கு மர கழன்டிடுச்சுன்னு தெரியுது!திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டுல போறவன் வரவனேல்லாம் பாத்து நீ அவன்தான?:ஒனக்கு அது சரிபட்டு வராதுன்னு சொல்றியாம்!ஐயோ ஐயோ!சாப்ட்வேர் மன்னாங்கட்டியால் இப்படி ஒரு ஜடாமுடி மொக்கையன் இப்படி மெண்டல் ஆகிட்டானே ஐயோ!இனியும் நீ அப்படி கேட்டியன்னா நீ மெண்டல் என்பது கன்பார்ம்!அப்பால ஒன்னோட இஷ்டம்!கைத்தா மட்டையில் கொசு மூத்திரத்தை தேச்சா குணமாகும்!
யாரை பார்த்தாலும் அவனா நீ என கேட்பது குணப்படுத்த முடியாத வியாதி அல்ல!மண்டையிலும் அதே நேரத்தில் கொ***லும் ஷாக் வெச்சா சரியாகிடும்!ஒரு மேன்டலை அடிக்க நான் கோழை இல்ல!கெட் லாஸ்ட்!
நல்ல விமர்சனம். எது எப்படியோ, 'இளைய தளபதி' படம் போல கடுப்படிக்காமல் இருந்தால் சரி. பகிர்வுக்கு நன்றி பிரபா.
@ Anonymous
தலைவா... நீங்க யாருன்னு தெரிஞ்சதுனாலதான் இன்னமும் மரியாதை கொடுத்து பதில் போட்டுட்டு இருக்கேன்.... அதுக்கு மேல உங்க இஷ்டம்... நானும் தரை டிக்கெட் தான்... என் கீ போர்டுலயும் கெட்டவார்த்தை டைப்படிக்க முடியும்... ஸ்டார் போடாமலே டைப்படிக்கவும் செய்வோம்...
Post a Comment