அன்புள்ள வலைப்பூவிற்கு,
முன்குறிப்பு: இது கொஞ்சம் வறட்சியான சப்ஜெக்ட். நிறைய
பேருக்கு பிடிக்காது. அவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம். சிலர், ஏன் தொடரவில்லை
என்று கேட்டதாலும் என்னுடைய எண்ணங்களை ஆவணப்படுத்தும் பொருட்டும் தொடர்கிறேன்.
கனவு கண்ட தேதி: மார்ச் 15, 2012
கனவு கலைந்த நேரம்: காலை 9:38
“வாகன இரைச்சல் நிறைந்த பகல் நேரம். நானும் என்
தந்தையும் வீட்டு பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். கீழே
பிரதான சாலையில், வெற்றிலை பாக்கு கடைக்கு முன்பாக ‘TAKE DIVERSION’ பலகை
வைக்கப்பட்டு இருந்தது. அங்கே ஒரு வாலிபர் Bajaj M80 வாகனத்தில் வந்தார். போலீஸ்
அவரை வழிமறித்து திரும்பிப்போகச் சொன்னார்கள். அவரும் சரி சரியென்று
கேட்டுக்கொண்டு, போலீஸ்காரர் அசந்த நேரம் வண்டியோடு எங்கள் வீட்டு பால்கனிக்கு
ஜம்ப் அடித்தார். (அந்த உயரத்திற்கு ஜம்ப் அடிப்பதற்கு இளையதளபதியால் மட்டுமே
முடியும்). நானும் அப்பாவும் வியந்தோம். அதே சமயம் ‘என்ன இந்த ஆளு சுற்றி
செல்வதற்கு கூட பொறுமையில்லாமல் ஜம்ப் பண்றான்... லூசுப்பய...’ என்று மனதிற்குள்
கடிந்துக்கொண்டேன்.
இனி அவர் வண்டியோடு கீழே இறங்க வேண்டுமென்றால்
வீட்டிற்கு உட்புறமாக வண்டியை எடுத்துக்கொண்டு வரவேண்டும் அல்லது மறுபடி
பால்கனியில் இருந்து கீழே ஜம்ப் அடிக்கவேண்டும். நாங்கள் முதலாவதைப் பற்றி
யோசித்துக்கொண்டிருக்கும் போது அவர் இரண்டாவதை தேர்ந்தெடுத்தார். ‘வேண்டாம்
சார்... இந்தப்பக்கமா வண்டியை எடுத்துட்டு போங்க என்று சொல்லச் சொல்ல
செவிட்டுத்தனமாய் முன்னேறினார். இன்னும் ஒரு அடி முன்னேறினால் அவருக்கும்
பைக்குக்கும் சிவலோக பதவி கிடைத்துவிடும். ஒருபுறம் அவருக்காக மனம்
பரிதாபப்பட்டாலும், மறுபுறம் அவருடைய திமிருக்கு அது தேவை என்றே தோன்றியது. மேலும்,
ஒரு விபத்தை நேரடியாக பார்க்கும் ஆர்வமும் என்னிடம் தொற்றிக்கொண்டது. அடுத்த நொடி,
M80க்காரர் ஜம்ப் அடித்துவிட்டார்.
ஆச்சர்யம் என்னவென்றால் அவர் கிட்டத்தட்ட கீழே
இறங்கும் வரை எல்லாம் சுமூகமாகவே நடந்தது. தரையிறங்கும் தருவாயில் பைக்
தலைக்குப்புற சாய்ந்து பெரிய சத்தத்துடன் கீழே விழுந்தார். சாக்கடை நீர்
தேங்கியிருந்த, ஆற்று மணல் குவித்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் அவர் விழுந்தார்.
சில நொடிகளுக்குப்பின் மனநோயாளி போல தோற்றமளித்த ஒருவர் சாக்கடையில் இருந்த M80
நபரை தூக்கி மணல்மேட்டில் கிடத்தினார். கூட்டம் சேர்ந்தது. ஆள் இறந்துவிட்டார்
என்று பேசிக்கொண்டனர். இப்போது என்னுடைய வேடிக்கை பார்க்கும் ஆர்வம் என்னைவிட்டு
விலகி, ‘ச்சே... நாம நினைச்சிருந்தா காப்பாற்றியிருக்கலாமே...’ என்ற குற்ற
உணர்ச்சி சூழ்ந்துக்கொண்டது. கிட்டத்தட்ட அழுதுவிட்டேன்.
சுமார் ஐந்து நிமிட சலசலப்புக்குப்பின்
மணல்மேட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த மனிதரிடம் உயிர் இருக்கிறதா என்று
மறுபரிசோதனை செய்தார்கள். அப்போது முதல் மரியாதை சிவாஜி கணேசன் மாதிரி அவருடைய கண் இமைகள் ஜெர்க் காட்ட, அனைவர் முகத்திலும்
நிம்மதி ரேகைகள். ஆமாம் அவர் உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் உடல் முழுவதும்
காயங்கள். அதாவது அவருடைய வம்சம் அவரோடு முடிந்துவிட்டது என்று உறுதியாக
சொல்லுமளவிற்கு காயங்கள். முழுமையாக கண்களை திறந்தவர், எதிரே இருந்தவரிடம்
தன்னுடைய கண்ணாடியை வாங்கி மாட்டிக்கொண்டு மீண்டும் கிளம்பினார். (ஆம், அவ்வளவு
பெரிய விபத்திற்கு பின்னும் அவருடைய கண்ணாடி உடையாமல் இருந்தது). ஏதோ துக்க
வீட்டிற்கு அவசரமாக சென்றுக்கொண்டிருந்ததாக கூறினார். ‘அடப்பாவி... விபத்து
இன்னும் கொஞ்சம் மோசமாகியிருந்தாலும் உன் வீடே துக்க வீடாக மாறியிருக்குமே...’
என்று கடிந்துக்கொண்டே பால்கனி கதவை சாத்தினேன்.”
இனி எஸ்.கேயும், நானும் உரையாடலும்...
எஸ்.கே:
வணக்கம்...
உங்கள் கனவில் வரும் பைக் ஆசாமி நீங்கள் இதுவரை
நிஜத்தில் பார்த்திராத ஆள் என்று நினைக்கிறேன்... உங்கள் கனவு உங்கள் வாழ்வில்
சமீபத்தில் நடந்த சம்பவத்தை குறிக்கிறது என்று நினைக்கிறேன்...
சமீபத்தில் உங்களால் யாருக்காவது உதவி செய்யும்
சூழ்நிலை இருந்து செய்யாமல் விட்டுவிட்டீர்களா...? அதனால் ஏற்பட்ட குற்ற உணர்வு
கனவில் தெரிகிறது... அதே சமயம் பைக் ஆசாமி உயிர் பிழைப்பது, நீங்கள் எல்லாம்
சுமூகமாக முடிய வேண்டுமென்று விரும்புவதை குறிக்கிறது...
உங்கள் கனவில் இன்னும் சில குறியீடுகள் உள்ளன...
மனநோயாளி, பைக், சாக்கடை, துக்க வீடு போன்றவை...
கனவுக்கு விளக்கம் கூறுவதற்கு முன் சில பதில்கள்
தேவை :-
மார்ச் 15 அன்று கனவு கண்டிருக்கிறீர்கள்...
இத்தனை நாட்களுக்குப்பின் கனவுக்கு விளக்கம் தேட வேண்டிய அவசியம் என்ன...??? இதே
கனவு அடிக்கடி வந்ததா...? அல்லது இதேபோன்ற விபத்து கனவுகள் வேறெதுவும் வந்ததா...?
வேறு ஏதேனும் மனரீதியான பிரச்சனைகள்...?
கனவில் கண்ட இடம் உங்கள் வீட்டுப்பகுதி தானா..?
கனவில் உங்கள் தந்தை தவிர வேறு யாராவது உடன் இருந்தார்களா....? கனவில் உங்கள்
தந்தையின் ரியாக்ஷன் என்ன...?
நான்:
// மார்ச் 15 அன்று கனவு கண்டிருக்கிறீர்கள்...
இத்தனை நாட்களுக்குப்பின் கனவுக்கு விளக்கம் தேட வேண்டிய அவசியம் என்ன...??? இதே
கனவு அடிக்கடி வந்ததா...? //
அப்படியெல்லாம் இல்லை மார்ச் 15 கனவு கலைந்ததும்
ஒரு பேப்பரில் எழுதி வைத்தேன்... இப்போது நேரம் கிடைத்தமையால் டைப்படித்தேன்... நிறைய
கனவுகள் வருகின்றன, ஆனால் யாவும் நினைவில் இருப்பதில்லை... நிறைய என்றால்
கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கனவுகள் வருகின்றன எண்பது என்னுடைய கணிப்பு... ஆனால்
விடிந்ததும் அத்தனையும் மறந்துவிடுகிறது... கனவில் வந்த குறிப்பிட்ட செயல்களை
செய்யும்போது மட்டும் கொஞ்சமாக நினைவு கூற முடிகிறது...
// இதேபோன்ற விபத்து கனவுகள் வேறெதுவும்
வந்ததா...? வேறு ஏதேனும் மனரீதியான பிரச்சனைகள்...? //
வந்திருக்கலாம்... நினைவில்லை... மனரீதியான
பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன....
// கனவில் கண்ட இடம் உங்கள் வீட்டுப்பகுதி
தானா..? கனவில் உங்கள் தந்தை தவிர வேறு யாராவது உடன் இருந்தார்களா....? கனவில்
உங்கள் தந்தையின் ரியாக்ஷன் என்ன...? //
ஆமாம் எங்கள் வீடே தான்... குறிப்பிட்ட ஒரு
சுவர் மட்டும் இல்லாமல் இருந்தது...உங்களுக்கு தேவைப்பட்டால் சம்பவ இடத்தை போட்டோ
எடுத்து அனுப்புகிறேன்... கனவில் நான், தந்தை தவிர வேறு யாருமில்லை... தந்தையிடம்
இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை... பால்கனி கதவை சாத்தியபிறகு இன்னும் சில
காட்சிகள் கூட வந்தன... ஆனால் எழுதி வைக்காததால் நினைவில்லை...
நீங்கள் கூறியது போல பைக் ஆசாமி முன்பின்
தெரியாத நபர் தான்...
எஸ்.கே:
உங்கள் கனவினை முற்றிலுமாக விளக்க இயலவில்லை...
ஆனால் சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஏதோவொரு சம்பவத்தின் பாதிப்பினாலேயே இந்த
கனவு ஏற்பட்டுள்ளது... உதவி தேவைப்பட்ட ஒருவருக்கு உங்களால் உதவ முடியாமல்
போயிருக்கலாம்... அல்லது நீங்களாகவே செய்யாமல் இருந்திருக்கலாம்,.. அதை நினைத்து
உங்கள் மனம் வருத்தப்படுவதே கனவினுடைய மையக்கருத்து...
மற்றபடி கனவில் வந்த குறியீடுகளை உங்கள் சமகால
நிகழ்வுகளோடு பொருத்திப்பார்த்து ஆராய்ந்தால் தெளிவாக விளங்கும்.
எப்படியிருப்பினும் கனவு நேர்மறையான முடிவையே
கொண்டிருப்பதால் உங்கள் மனம் நிம்மதியாக இருக்கிறது அல்லது நிம்மதியை தேடுகிறது
என்று கொள்ளலாம்... மீண்டும் அதே கனவு வராததால் தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள
வேண்டாம்.
கனவுகள் தொடரும்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
16 comments:
இன்சப்சன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் வடசென்னை லியனார்டோ டீயோ காப்பியோ அவர்களே..!!
யோவ் தம்பி நீ ரொம்ப நல்லா எழுதுறேன்னு சொன்னது எவ்வளவு தப்பானதுன்னு இன்னைக்குதான் தெரிஞ்சது:))
ஒண்ணும் வெளங்கல சாமி. ஏதோ கமல்ஹாசனின் படம் பாக்குறாப்ல இருக்குது.
@ ! சிவகுமார் !
// இன்சப்சன் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் வடசென்னை லியனார்டோ டீயோ காப்பியோ அவர்களே..!! //
விட்டா கிறிஸ்டோபர் நோலன்னு கூட சொல்லுவீங்களே...
@ கே.ஆர்.பி.செந்தில்
// யோவ் தம்பி நீ ரொம்ப நல்லா எழுதுறேன்னு சொன்னது எவ்வளவு தப்பானதுன்னு இன்னைக்குதான் தெரிஞ்சது:)) //
அண்ணே... முன்குறிப்பு படிக்கலையா... இது நீங்க நினைக்கிற மாதிரி ஆகச்சிறந்த படைப்பு வெளக்கெண்ணை கிடையாது...
@ ஆரூர் மூனா செந்தில்
// ஒண்ணும் வெளங்கல சாமி. ஏதோ கமல்ஹாசனின் படம் பாக்குறாப்ல இருக்குது. //
இதையெல்லாம் ஆராயக்கூடாது ஆரூர் மூனா... அனுபவிச்சி பார்க்கணும்...
ஆழ் மனதில் இருக்கும் ஆசை துக்கம் இவையே தூக்கத்தில் கனவுகளாக தோன்றுகிறது...அறிவியல் ரீதியாக மூளை ரெப்ரஸ் செய்து கொள்கிறது என்றும் சொல்லுறாங்க.....கனவில் நடிகைகள் வருவதும் இதே ரகம்தான்....
ஆனால் கனவு ஒரு அழகான நிகழ்வு சந்தோசமாக வந்தால்.....மனஅழுத்தம் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம் அதுவே துக்கமாக...கொடூரமாக நாம் பயந்து ஓடுவதை போன்று வந்தால் நாம் இயல்பாக இருக்கிறோம் என்று கொள்ளலாம்...
கனவு பலன்களை சொல்லும் புத்தகத்தில் பார்த்தால் சுபகாரியம் கனவில் வந்தால் கெட்டது நடக்கும் என்றும்.....தீய காரியம், மரணம், பாம்பு கொத்துவது போன்று வந்தால் நல்லது நடக்கும் என்றும் போட்டிருப்பார்கள்.
உங்களுக்கு ஒரு நண்பர் யாரும் தெரியாதவர் விபத்தில் சிக்கி கொள்வதாக கனவு கண்டு உள்ளீர்கள் விரைவில் யாரோ உங்களுக்கு தெரிந்தவர் நண்பர் உறவினர் யாருக்காவது வேலை, திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
சில நேரங்களில் கனவுகளின் பலன் பலித்து விடுகிறது...அதற்கு காரணம் மிருகங்களுக்கு இருக்கும் அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு உதாரணமாக பூகம்பம் அறியும் எறும்பு பறவை போலவே பசு மாடும் ஒரு சில நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும். மழை பூகம்பம் போன்றவற்றை...
அனுபவரீதியாக என் கண் முன்னால் கண்டது எஜமானர் இறந்த இரண்டு நாளில் இறந்த நாய் ஆடு ஆகியவைகளை கண்டிருக்கிறேன்...
தண்ணீர் தொட்டிக்கு விழச் சென்ற குழந்தையை தூங்கிக்கொண்டு இருந்த நாய் திடீரென்று எழுந்து ஓடி காப்பாற்றியது....மனிதனும் மிருகம்தான் சில எச்சரிக்கை உணர்வுகளை சில நேரங்களில் அறிந்து கொள்வான் நம்மையும் மீறிய ஒரு சக்தி இருக்கின்றது.
பகுத்தறிவுவாதி நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்....
அதற்காக சிவபெருமான் கனவில் வந்தார் என்று மதுரை ஆதினம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது....ஹிஹி!
கனவுகளை எழுதி வைக்கும் பழக்கம் எனக்கும் இருக்கின்றது.......
@ வீடு சுரேஸ்குமார்
// கனவுகளை எழுதி வைக்கும் பழக்கம் எனக்கும் இருக்கின்றது....... //
ஆகக்கா... வாங்கண்ணே... வாங்கண்ணே...
உங்கள் விரிவான பின்னூட்டத்தை படித்தேன்... கனவுகளின் பலன்களை நான் நம்புவதில்லை... அதாவது இந்த கனவு வந்தால் அடுத்து இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்பது அபத்தமாக இல்லையா... கனவுகளுக்கு காரணி என்னவென்றே தேடுகிறேன்...
ல்லா....ஜானே ல்லா ஜானே
பிரியாணி தின்னா நாட்களும் உண்டோ?
பெண்களை போ** நாட்களும் உண்டோ?
நல்ல பிகர் மொக்க பிகர் யார்தான் அறிவார்?
நாளை எந்த பிகர் யார்தான் உணர்வார்?ல்லா.....(இதை மூக்கால் பாடவும்)
......
வெல்....ஓம்பதாம் தேதி ஒம்பது பேரோட நான் சுன்னத் பண்ணிக்கிட்டு கொமல ஹாசன்னு மாத்திக்க்க போறேன்!
சுன்னத் பண்னப்புரம் என் பெயர் ஒலக்கை நாயகன் என அழைக்கப்படும்!வெல்....எம் ஆர் கோதா, சிரியார் வழியில் நானும் ஒரு போலி நாத்திகன்!ல்லா.....வெல் தட்ஸ் ஆள் பார் நவ்....கம் டு சுன்னத் அண்ட் ஈட பிரியாணி...வர தவறாதீர்கள்....
/////ஏன் தொடரவில்லை என்று கேட்டதாலும் என்னுடைய எண்ணங்களை ஆவணப்படுத்தும் பொருட்டும் தொடர்கிறேன்.//////
ஓஒ ஆவன படுத்துறீங்களா ? படுத்துங்க படுத்துங்க , ஆனா நீங்க ஆவன படுத்துறதுல எல்லாமே சைவமா இருக்கே அசைவமான மேட்டர்' எதுவும் இல்லையா? இருக்கும்
கனவு துரத்தி குறிப்புல நீ எந்தெந்த நடிகைய துரத்தினியோ
/////வந்திருக்கலாம்... நினைவில்லை... மனரீதியான பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன....////
இனிமே நேருல பாத்தா கொஞ்சம் எட்டியே நினுக்கணும் கிட்ட போன கடிச்சு வச்சாலும் வச்சுடுவாரு போல
பாஸ் கனவை வைத்து நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள், எனக்கு வரும் கனவுகள் எழுதும் ரகத்தில் வருவதில்லை.
@ N.Mani vannan
// ஓஒ ஆவன படுத்துறீங்களா ? படுத்துங்க படுத்துங்க , ஆனா நீங்க ஆவன படுத்துறதுல எல்லாமே சைவமா இருக்கே அசைவமான மேட்டர்' எதுவும் இல்லையா? இருக்கும்
கனவு துரத்தி குறிப்புல நீ எந்தெந்த நடிகைய துரத்தினியோ //
அண்ணே... அசைவ கனவுகளை எழுதிவைக்க முடிவதில்லை... தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் சுத்தப்படுத்திவிட்டு வருவதற்குள் கனவு மறந்துவிடுகிறது...
@ கும்மாச்சி
// பாஸ் கனவை வைத்து நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள், எனக்கு வரும் கனவுகள் எழுதும் ரகத்தில் வருவதில்லை. //
ப்ளாக்ல எழுத முடியலைன்னா டைரியில எழுதலாமே கும்ஸ்...
Post a Comment