7 May 2012

பிரபா ஒயின்ஷாப் – 07052012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நேற்றிரவு நீயா நானா நிகழ்ச்சியில் பெண்கள் உடைகுறித்த ஒரு ஒன் சைடட் டாபிக். நியாயமாக, மனசாட்சியோடு ஈவ் டீசிங்கிற்கு ஆதரவாக பேசமுடியாது. அப்படியிருக்கும்போது ஆண்கள் பக்கத்தில் இருந்த சுமார் இருபது பேரை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அதிலும் எதிர்ப்பக்கம் ஆண்குறியின் மையப்புனைவை நசுக்கும் குட்டி ரேவதி, டாக்டர் ஷாலினி போன்ற பெண்ணியவாதிகள் உட்கார்ந்துக்கொண்டு ஆண்களை நையப்புடைந்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஆணோ, பெண்ணோ ஒருவருடைய காதுகளுக்கு எட்டாத அல்லது அவரை பாதிக்காத எந்தவொரு கமெண்டும் தவறில்லை. இதுகுறித்து கமல் ஸ்டைலில் ஒரு தத்துவம் சொல்லவேண்டுமென்றால், சுடிதார் அணியும் பெண்களையும் மதிக்கலாம், மாடர்ன் டிரஸ் அணியும் பெண்களையும் மதிக்கலாம், ஆனால் க்ளீவேஜ் தெரியும்படி உடையணிந்துக்கொண்டு யாராவது பார்த்தால் மட்டும் “பாக்குறான் பாரு... பொறுக்கிப்பையன்...” என்று முனங்கிக்கொண்டு உடையை சரி செய்வதுபோல சீன் போடும் பெண்களை மட்டும் மிதிக்கலாம்.

நான் இதற்கு முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு பெண், எப்போதும் சுடிதார் மட்டுமே அணிந்து வருவார். அவர் சுடிதார் அணியும் முறையில் ஒரு நேர்த்தி, கண்ணியம். ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட தோன்றும். எப்படியாவது ஒருநாள் அந்தப்பெண்ணிடம் இந்த விஷயத்தை சொல்லி பாராட்டியே ஆகவேண்டும் என்று நினைப்பேன். அப்புறம் வழியுறான், ஜொள்ளு என்று வேறெதாவது அர்த்தம் வந்துவிடுமென்று அமைதியாகிவிடுவேன்.

வழக்கு எண்: 18 / 9 ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் கூட குறைந்தபாடில்லை. இரண்டாவது முறையாக நேற்று பிதாமகன் மற்றும் அஞ்சாசிங்கத்துடன் பார்த்தேன். சத்யம் திரையரங்கின் துல்லியமான ஒலி / ஒளி அமைப்பிலும், பக்கத்தில் அதிகப்பிரசங்கித்தனமாக கமென்ட் அடிக்கும் லூஸு கும்பல் எதுவும் இல்லாததாலும் அதிகமாகவே ரசிக்க முடிந்தது. இந்தமாதிரி சமயத்தில் தந்தையார் ஊருக்கு சென்றிருப்பதால் அவருக்கு ஒரு நல்ல சினிமா காட்ட முடியாத வருத்தத்தில் இருக்கிறேன். அடுத்தவாரத்தில் அப்பாவையும், தியேட்டருக்கு வரவே முரண்டு பிடிக்கும் அம்மாவையும், தங்கையையும் எப்படியாவது அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.

வேடந்தாங்கல் கருண் ஒருநாள் மாணவர்களிடம் தன் கவலையை புலம்பிக்கொண்டிருந்தார். லீவு அன்னைக்காவது டிவியில் ஏதாவது உருப்படியாக பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். என் மனைவியின் சர்வாதிகாரத்தில் ரிமோட் அவளுடைய கைகளுக்கு மாறிவிட்டது. புதுப்படம் போடுறாங்க பேசாம பாருங்க என்று மனதை திருடிவிட்டாய் என்ற படத்தை வைத்தார். அதில் சம்பந்தமே இல்லாமல் திடீர்ன்னு ‘மஞ்சக்காட்டு மைனா’ன்னு ஒரு பாட்டு வருது (தலையில் அடித்தபடி) விதியே என்று பார்த்துக்கொண்டிருந்தபோது பாடலின் இடையில் தெரியாத்தனமாக கவிஞர் அருமையா ஒருவரி எழுதியிருக்குறான் பாருங்க... “பூக்கள் பொதுக்குழு கூட்டும்... உன்னை தலைமை தாங்கக்கேட்கும்...” என்று லைட்டாக ரொமாண்டிக் மூடுக்கு தாவினார். உடனே நம்மாளு ஒருத்தன் எழுந்து சார் அதே பாட்டுல இன்னொரு வரிகூட நல்லாயிருக்கும்ன்னு சொன்னான். ஆர்வத்துடன் அவன் சொன்னதை கேட்ட கருண் அடுத்த நொடியே வன்முறை மூடுக்கு மாறி அவனுடைய முதுகில் கொத்துபரோட்டா போட்டுவிட்டார். “கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு...”

சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது, ஜப்பானை சுனாமி, டோர்னேடோ போன்றவை துவம்சம் செய்கிறது, வெள்ளத்தால் யூ.கே முடங்கிப்போயிருக்கிறது போன்ற செய்திகளால் இனி யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மைலாப்பூர் முண்டகக்கண்ணி கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட அபிஷேக பெருவிழா நடந்து முடிந்திருக்கிறது.

ஜொள்ளு:
ஒருமுறை இழுத்து அணைச்சபடி... உயிர்மூச்சை நிறுத்து கண்மணியே...!
ட்வீட் எடு கொண்டாடு:
காதலுக்கு ஒரு தினம் வச்சிருக்க மாதிரி கள்ளக்காதலுக்கும் ஒரு தினம் வைக்கலாம், அதுக்கு ''தினம்னு பேர் வைக்கலாம்! #ஐடியா

சில பெண்கள் excuseme என்று சொல்வது, yes squeeze me என்று கேட்கிறது. 

புற‌உல‌கை ம‌ற‌ந்து "ச‌ப்ஜெக்ட்டில்" ம‌ட்டுமே முழு க‌வ‌ன‌மும் செலுத்தி ம‌ன‌தை ஆன‌ந்த‌த்தில் ஆழ்த்துவ‌தால் சைட்டடிப்ப‌தும் ஒரு வகை தியான‌மே

இன்னிக்குதான் 'காஞ்சனா' படம் பார்த்தேன்! சமீரா ரெட்டி 'கால்ஷீட்'க்கு கொஞ்சம் வெயிட் பண்ணிருந்திருக்கலாம்!

இந்த காலண்டர்ல தத்துவம் எழுதறவன் மட்டும் கைல கிடச்சா ங்கொய்யால்ல மர்டர் தான்

பார்த்துட்டேன்...! பார்த்துட்டேன்...!

அது ஒண்ணுமில்ல... நான் எந்தமாதிரியான வீடியோக்களை பார்க்கிறேன் என்று யூடியூப்காரன் வேவு பார்த்து எனக்கான வீடியோக்களை பரிந்துரை செய்கிறானாம். எப்படி நம் தொழில்நுட்ப வளர்ச்சி. ஆனால் அதே தொழில்நுட்ப வளர்ச்சி சில சமயங்களில் நமக்கே ஆப்படிப்பதை தவிர்க்க முடிவதில்லை. கீழே இருக்கும் ஸ்க்ரீன்ஷாட்டை பாருங்கள்.
செம ஷாட்டுல...!
ம்ம்ம்... இப்பல்லாம் எதையுமே ரகசியமா செய்ய முடியுறதில்லை...!

உடல் தானம் பற்றி கமல்...!



சின்ன வயசுல பிடித்த நடிகை யாரென்று கேட்டால் சுகன்யா என்று சொல்வேனாம். அப்பவே நாங்க அப்படி...!

அடுத்து வருவது: Cannibal Ferox
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

48 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

//சுடிதார் அணியும் பெண்களையும் மதிக்கலாம், மாடர்ன் டிரஸ் அணியும் பெண்களையும் மதிக்கலாம், ஆனால் க்ளீவேஜ் தெரியும்படி உடையணிந்துக்கொண்டு யாராவது பார்த்தால் மட்டும் “பாக்குறான் பாரு... பொறுக்கிப்பையன்...” என்று முனங்கிக்கொண்டு உடையை சரி செய்வதுபோல சீன் போடும் பெண்களை மட்டும் மிதிக்கலாம்.//

இது பாயிண்ட்டு :) :)

ஹாலிவுட்ரசிகன் said...

// அடுத்து வருவது: Cannibal Ferox //

ஏற்கனவே ஒரு கானிபல் படம் பற்றி விமர்சித்திருந்தீங்கல்ல? இதுவும் கிட்டத்தட்ட அதே ஸ்டோரி தான். ஆனால் holocaust இதை விட மோசமா இருந்ததா ஞாபகம்.

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// ஏற்கனவே ஒரு கானிபல் படம் பற்றி விமர்சித்திருந்தீங்கல்ல? இதுவும் கிட்டத்தட்ட அதே ஸ்டோரி தான். ஆனால் holocaust இதை விட மோசமா இருந்ததா ஞாபகம். //

ஆமாம் தல... ஏற்கனவே படம் பார்த்து, பதிவும் எழுதிவிட்டேன்... டிராப்டில் இருக்கிறது...

Holocaust படத்தின் நகல் என்றே சொல்லலாம்... ஒரே கதைதான்... Holocaust படத்தில் சில காட்சிகளை கொடூரமாக நேரடியாக காட்டுவார்கள்... இதில் கொடூரம் செய்பவரின் முக பாவனையை மட்டுமே காட்டுகிறார்கள்...

பாலா said...

நீயா நானாவில் இந்த மாதிரி மொக்கை தலைப்புகள் வந்தால் அதை நான் தவிர்த்து விடுவேன்.

Unknown said...

கருத்து சொல்றாராமா....??

Unknown said...

நடத்துய்யா...நடத்து!

அனுஷ்யா said...

உங்களின் முதல் இரு பதிகள் தொடர்பான என் கருத்தினை ஒரு தனி பதிவே எழுதியிருந்தேன் சமீபத்தில்... இணைப்பு...அம்மணம்தான் சுதந்திரமோ?

அனுஷ்யா said...

நேற்றிரவு தான் நண்பா நானும் வழக்கு எண் பார்த்தேன்...
அங்காடி தெருவிற்கு பிறகு படம் பார்த்த அடுத்த நாளும் பாதிப்பு நீடிப்பது இந்த படத்திற்கு தான்...
நீங்கள் சொன்னது போல விமர்சன் பதிவும் எழுதியுள்ளேன்...
"ப்ளாக்கரில்"

அனுஷ்யா said...

//மைலாப்பூர் முண்டகக்கண்ணி கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட அபிஷேக பெருவிழா நடந்து முடிந்திருக்கிறது.//

ஒரு குடத்து பால் மட்டும் தயிரா மாறிடுச்சாம்.. சாமி குத்தம்.. ங்கொய்யால கோவிலுக்குள்ளேயே சுனாமி வந்தும் அடங்க மாட்றானுன்களே...

அனுஷ்யா said...

ஜொள்ளு என்று ஒரு சுரப்பிற்குள் அந்த புகைப்படத்தின் வீரியத்தை அடக்கி விடாதே....

Philosophy Prabhakaran said...

@ பாலா
// நீயா நானாவில் இந்த மாதிரி மொக்கை தலைப்புகள் வந்தால் அதை நான் தவிர்த்து விடுவேன். //

நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் டைட்டாகி விடுவதால் பார்க்க முடியவில்லை... நேற்றுதான் கொஞ்ச நேரம் பார்க்க முடிந்தது...

அனுஷ்யா said...

excuse me பழைய எஸ்.எம்.எஸ் ஜோக்...
என்றாலும் பிரபா ஏ-ஜோக் எஸ்.எம்.எஸ் லாம் வாசிக்காத சொக்க தங்கம் என்பதால் மன்னித்து விடுகிறோம்...

Philosophy Prabhakaran said...

@ கே.ஆர்.பி.செந்தில்
// கருத்து சொல்றாராமா....?? //

அண்ணன் எந்த கருத்தை சொல்றீங்கன்னே புரியலையே....

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// நடத்துய்யா...நடத்து! //

ம்...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// உங்களின் முதல் இரு பதிகள் தொடர்பான என் கருத்தினை ஒரு தனி பதிவே எழுதியிருந்தேன் சமீபத்தில்... இணைப்பு...அம்மணம்தான் சுதந்திரமோ? //

உங்களுடைய அந்த பதிவை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்... நான் சொன்னது போல அவர்கள் அப்படி உடையணிவதை தவறு என்று சொல்லமாட்டேன்... ஆனால் அவ்வாறு உடையணிந்தவர்களை நான் குறுகுறுவென்று பார்ப்பதை அவர்கள் தவறு என்று சொல்லக்கூடாது...

// நேற்றிரவு தான் நண்பா நானும் வழக்கு எண் பார்த்தேன்...
அங்காடி தெருவிற்கு பிறகு படம் பார்த்த அடுத்த நாளும் பாதிப்பு நீடிப்பது இந்த படத்திற்கு தான்...
நீங்கள் சொன்னது போல விமர்சன் பதிவும் எழுதியுள்ளேன்...
"ப்ளாக்கரில்" //

அதையும் படித்துவிட்டேன்... மொபைல் மூலம் படித்ததால் கமென்ட் போட முடியவில்லை...

// பழைய எஸ் எம் எஸ் ஜோக்...
என்றாலும் பிரபா ஏ-ஜோக் எஸ்.எம்.எஸ் லாம் வாசிக்காத சொக்க தங்கம் என்பதால் மன்னித்து விடுகிறோம்... //

எது பழைய எஸ்.எம்.எஸ் ஜோக்... புரியல...?

// ஜொள்ளு என்று ஒரு சுரப்பிற்குள் அந்த புகைப்படத்தின் வீரியத்தை அடக்கி விடாதே.... //

ஜொள்ளு என்ற வார்த்தையே வேறொரு திரவத்தை மறைமுகமாக குறிக்கும் சொல்தானே...

அனுஷ்யா said...

//அவ்வாறு உடையணிந்தவர்களை நான் குறுகுறுவென்று பார்ப்பதை அவர்கள் தவறு என்று சொல்லக்கூடாது...//

புடிங்க சார் இவன... புடிச்சு என்கவுண்டர்ல போடுங்க சார்...

அனுஷ்யா said...

//எது பழைய எஸ்.எம்.எஸ் ஜோக்... புரியல...?//

excuse me...:)

Unknown said...

/////அதிலும் எதிர்ப்பக்கம் ஆண்குறியின் மையப்புனைவை நசுக்கும் குட்டி ரேவதி, டாக்டர் ஷாலினி போன்ற பெண்ணியவாதிகள் உட்கார்ந்துக்கொண்டு ஆண்களை நையப்புடைந்துக் கொண்டிருந்தார்கள்./////

யோவ் அது என்னய்யா மைய்யபுனைவு?

Unknown said...

/////ஜொள்ளு

ஒருமுறை இழுத்து அணைச்சபடி... உயிர்மூச்சை நிறுத்து கண்மணியே...!////

யோவ் மைய்யப்புனைவுனா என்னன்னு புரிஞ்சிடுச்சுயா .

சமுத்ரா said...

How R U Sir

Jayadev Das said...

\\ஆண்குறியின் மையப்புனைவை நசுக்கும்\\ இதுக்கு அருத்தம் என்ன மாப்பு? [ரொம்ப ஜாஸ்தி சாரு எழுதறத படிக்காதே மாப்பு.......]

Jayadev Das said...

\\என்னைப் பொறுத்தவரையில் ஆணோ, பெண்ணோ ஒருவருடைய காதுகளுக்கு எட்டாத அல்லது அவரை பாதிக்காத எந்தவொரு கமெண்டும் தவறில்லை.\\ ஒருவரையும் பொல்லாங்கு சொல் வேண்டாம். [நன்றி: ஔவையார்]

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// excuse me...:) //

ஓ அப்படியா... ஆமாம் நான் படித்ததில்லை (நிஜமாகவே)...

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
மணியாரே... என்ன நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக்கிறீங்க...

Philosophy Prabhakaran said...

@ சமுத்ரா
// How R U Sir //

சூப்பரா இருக்கேன் தல...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// இதுக்கு அருத்தம் என்ன மாப்பு? [ரொம்ப ஜாஸ்தி சாரு எழுதறத படிக்காதே மாப்பு.......] //

எனக்கும் அர்த்தம் தெரியாது சார்... அதை புத்தகம் எழுதிய குட்டி ரேவதியிடம் தான் கேட்க வேண்டும்...

// ஒருவரையும் பொல்லாங்கு சொல் வேண்டாம். [நன்றி: ஔவையார்] //

ச்சே... இந்த பொண்ணுங்களும் அவ்வையார் மாதிரி இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்...

Unknown said...

ஆணகள் பார்க்கனும் என்றுதான் பெண்கள் உடையனிகிறார்கள்....!
பார்த்தால் பொறுக்கி அப்படிங்கறாங்க....!
நீயா நானா இல்லை எங்கயும் பேசி பெண்களை யாராலும் ஜெயிக்கமுடியாது...

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு பிரபா...

Prem S said...

நீயா நானா பார்த்தேன் கடைசியில் உடையினால் தவறுகள் நடப்பதில்லை என்பது முடிவாம் என்ன கொடுமை பாஸ்

Prem S said...

//தொழில்நுட்ப வளர்ச்சி சில சமயங்களில் நமக்கே ஆப்படிப்பதை தவிர்க்க முடிவதில்லை//இதை தடுக்க பிளாக்கர் நண்பன் தளத்தில் ஒரு பதிவு உள்ளது

Jayadev Das said...

\\ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட தோன்றும்.\\ மாப்பு, நீ ரஜினியை ஒரு +ve ஆன உதாரணத்துக்கு பயன் படுத்தியதை இப்பத்தான் பார்க்கிறேன். ஹா..ஹா..ஹா...

Jayadev Das said...

\\சில பெண்கள் excuseme என்று சொல்வது, yes squeeze me என்று கேட்கிறது. \\ எங்கேயிருதான் இவங்களுக்கு ஐடியா கிடைக்குமோ தெரியலையே!!

Jayadev Das said...

\\உடல் தானம் பற்றி கமல்...!\\
மாப்பு, வேணுமின்னா உசுரோட இருக்கும்போதே கூட உடல் உறுப்புகளை நீ அறுத்துகிட்டு ஓடு, வேண்டான்னு சொல்லல, ஆனா இவரு பேசறதெல்லாம் பாருன்னு மட்டும் சொல்லிடாதே, அது மட்டும் ...ஐயோ...சாமி... என்னால முடியாது.......

Sivakumar said...

காம ராஜர் வாழ்க!!

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// நீயா நானா இல்லை எங்கயும் பேசி பெண்களை யாராலும் ஜெயிக்கமுடியாது... //

உங்க பெயருக்கு முன்னாடி இருக்குற இடத்துலயும் அப்படித்தான் போல...

Philosophy Prabhakaran said...

@ சே. குமார்
// நல்லாயிருக்கு பிரபா... //

நன்றி தல...

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// நீயா நானா பார்த்தேன் கடைசியில் உடையினால் தவறுகள் நடப்பதில்லை என்பது முடிவாம் என்ன கொடுமை பாஸ் //

அவங்க சொல்றது கரெக்ட்தான் ப்ரேம்...

// இதை தடுக்க பிளாக்கர் நண்பன் தளத்தில் ஒரு பதிவு உள்ளது //

அதை பண்ருட்டி வேல்முருகனுக்கு பரிந்துரை செய்யுங்கள்...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// மாப்பு, நீ ரஜினியை ஒரு +ve ஆன உதாரணத்துக்கு பயன் படுத்தியதை இப்பத்தான் பார்க்கிறேன். ஹா..ஹா..ஹா... //

ஒரு ஃப்ளோவுல வந்துடுச்சு...

// மாப்பு, வேணுமின்னா உசுரோட இருக்கும்போதே கூட உடல் உறுப்புகளை நீ அறுத்துகிட்டு ஓடு, வேண்டான்னு சொல்லல, ஆனா இவரு பேசறதெல்லாம் பாருன்னு மட்டும் சொல்லிடாதே, அது மட்டும் ...ஐயோ...சாமி... என்னால முடியாது....... //

யோவ் ஏன்யா... தலைவரு எவ்வளவு கருத்தா பேசுறாரு...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// காம ராஜர் வாழ்க!! //

நல்லவேளை அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டாரு...

pshychic pshychartist said...

dei NR un Office ponnae ennaku intro panni vei nannum antha alaga parthu resikadana thevira verrae ethukum illa da :P

Vadakkupatti Raamsami said...

ஒவ்வொரு ஞாயிறு இரவும் உலகின் ஒரு பிரச்னையை தீர்த்து வைக்கும் கோபிநாத்தின் தெறம எண்ணை வியக்க வைக்குது!
வெல் வாட் ஐ சே இஸ் கொழம்பு இஸ் கொதிச்சிங் இப்படிதான் பொண்ணுங்க பெசுராளுங்க அந்த நிகழ்ச்சியில்?எவன் பார்ப்பான்!காசு கொடுத்தாலும் பார்க்க மாட்டேன்!அவனுக்கு பெரிய பருப்புன்னு நெனப்பு!சிவா கார்த்திகேயன் இன்னொரு டம்மி பீஸ் விஜய் டிவி என்னும் டப்பா டிவி ஊதிய பலூன்கள் இவை!கோபிநாத் என்ன பெரிய இவனா?ஓவர்னைடில் பிரச்னையை தீர்த்து வைக்க?அதில் மொதல்ல எல்லாரையும் ஒழுங்கா தமிழ் பேச சொல்லுங்க அப்பால பாக்க முயற்சி செய்யலாம்!

Vadakkupatti Raamsami said...

சிவகார்த்திகேயன் கோபிநாத் இரண்டும் டப்பா விஜய் டிவியால் ஊதப்பட்ட பலூன்கள்!காலப்போக்கில் அவை தானாக வெடித்துவிடும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அப்புறம் அந்த மையப்புனைவு என்னாச்சுண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எப்படியாவது ஒருநாள் அந்தப்பெண்ணிடம் இந்த விஷயத்தை சொல்லி பாராட்டியே ஆகவேண்டும் என்று நினைப்பேன். அப்புறம் வழியுறான், ஜொள்ளு என்று வேறெதாவது அர்த்தம் வந்துவிடுமென்று அமைதியாகிவிடுவேன். //////////

நீங்க நல்லவரா கெட்டவரா?

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
தல... உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் ஆகியவற்றை பட்டியலிட முடியுமா...? உங்களுடைய லிஸ்டை பார்த்தாவது அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அண்ணே அப்புறம் அந்த மையப்புனைவு என்னாச்சுண்ணே? //

என்னோடது பத்திரமா தாண்ணே இருக்கு...

// நீங்க நல்லவரா கெட்டவரா? //

நான் கெட்டவன் தான் தல... ஆனா கேவலமானவன் இல்ல... #சுந்தர்.சி பட பஞ்ச் டயலாக்

சக்தி கல்வி மையம் said...

innaikku unga cutting kku naanthaan oorukaayaa?

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// innaikku unga cutting kku naanthaan oorukaayaa? //

நான் பள்ளியில் படிக்கும்போது நடந்த சம்பவம் தல... ஒரு மரியாதைக்காக உங்க பெயரை போட்டேன்...