அன்புள்ள வலைப்பூவிற்கு,
“டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நாலரை ஸ்டார் கொடுத்திருக்காங்களாம்...
நீங்க, நான், பிதாமகன் மொத்தம் மூணு டிக்கெட் எடுத்துடுங்க...” என்று நேற்று காலை
சிவா போனில் கர்ஜித்தார். அண்ணன் கட்டளையை அப்படியே நிறைவேற்றிவிட்டு அப்படியே
நம்ம பதிவர்கள் பக்கம் திரும்பினால் தொடர்ந்து பாசிடிவ் டாக். விடுமுறைக்காக
ஊருக்கு வந்திருக்கும் அகமதாபாத் NIDயில் படிக்கும் தம்பிக்கு ஒரு நல்ல சினிமாவை
காட்டலாமே என்ற நல்ல எண்ணத்தில் அவனையும் அழைத்துக்கொண்டு லோக்கல் திரையரங்கான அகஸ்தியாவிற்கு
விரைந்தேன். “டிக்கெட் கிடைக்குமா...?” என்றான். “அட வாங்க பாஸ்... என்னைக்கு நல்ல
சினிமாவிற்கு ஜனங்க வந்திருக்காங்க...” என்றபடி திரையரங்கில் நுழைந்ததும்
ஆச்சர்யம். படம் ஆரம்பிக்கும்போது அரங்கு நிறைந்திருந்தது. ஆனால் படம்
முடியும்போது நம் மனது நிறைந்ததா....???
பிரியாணி கடையில் வேலை பார்க்கும் இளைஞன் – அவனுடைய ஒருதலை காதலி,
வீட்டுவேலை செய்யும் பெண் – அவளுடைய எஜமானி மகள் – எஜமானி மகளுக்கு கொக்கி போடும்
ஹை க்ளாஸ் பையன். இப்படியாக தனித்தனி, வெவ்வேறு வகையான கதைகளை முத்துமணி மாலையாக
கோர்த்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
ஸ்கூல் பெண் கேரக்டரில் மனிஷா யாதவ்ன்னு ஒரு புள்ள நடிச்சிருக்கு.
சான்ஸே இல்லை... கொள்ளை அழகு. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும் கொஞ்ச நேரத்துக்கு ஒரே
பனிமூட்டமாகவே இருந்தது. ஒரு டீன் ஏஜ் பெண்ணுடைய ஃபீலிங்க்ஸ் எப்படியிருக்கும்
என்பதை நன்கு உணர்ந்து அவருடைய பாத்திரத்தை செதுக்கியிருக்கிறார்கள். அப்புறம்
ஸ்ரீ’ன்னு ஒரு பையன், கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர், அவனும் நல்லா
நடிச்சிருக்கான். (பையனை பத்தி வேற என்ன சொல்றதாம்...???) முக்கிய கதாப்பாத்தில்
ஊர்மிளா மகந்தாவும், ப்ளஸ் டூ படிக்கும் வில்லன் (!!!) கேரக்டரில் மிதுன்
முரளியும் ஓகே ஓகே. இவர்கள் அனைவரும் புதுமுகங்கள் – ஆச்சர்யக்குறி...!
இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் பெரும்பாலும் புதுமுகங்களே.
போலீஸ்காரர், ஜோதியுடைய அம்மா, பிரியாணி கடை ஓனர், ரோஸி அக்கா என்று நிறைய பேர்
எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஸ்கூல் கரஸாக வரும் ஆண்ட்டி
இஸ் நைஸ் யூ நோ. எல்லாம் இருந்தாலும் நடிப்பில் மேன் ஆஃப் தி ஃபிலிம் வாங்குவது
சின்னசாமி கேரக்டரில் நடித்திருக்கும் சின்னப்பையன். அவனுடைய மாடுலேஷனில்
கல்லாப்பெட்டி சிங்காரம் கொஞ்சூண்டு எட்டிப்பார்க்கிறார்.
நல்ல பின்னணியிசை என்பது படம் பார்ப்பவர்களை டிஸ்டர்ப் செய்யாமல்
இருக்க வேண்டும். அந்த வகையில் முதல் பாதி ஓகே. இரண்டாம் பாதி ஹை க்ளாஸ் பையனை
காட்டும் காட்சிகளில் கொஞ்சம் உறுத்துகிறது. ஒரே ஒரு பாடல் இருக்கிறது, அதுவும்
பின்னணியிசையைப் போலவே ரசிகர்களை டிஸ்டர்ப் செய்யாமல் வந்து செல்கிறது. ஏதாவது
வித்தியாசம் காட்டியே ஆகவேண்டுமென ஒளிப்பதிவாளர் ஏதோ முயற்சி செய்திருக்கிறார்.
அது எடுபடவில்லை.
படத்தின் தொடக்கம் முதல் குழந்தைக்கல்வியின் அவசியம், ஏழைகள்
வறுமைக்காக கிட்னியை விற்கும் அவலநிலை, விவசாய நிலங்களை ஃப்ளாட் போட்டு விற்பது,
நலிந்துவரும் கூத்துக்கலைஞர்கள், செல்போன் MMS ஸ்கேண்டல்கள் என்று கிடைத்த
கேப்பில் எல்லாம் கோல் போட்டுக்கொண்டே இருக்கிறார் பாலாஜி. திருந்திவாழும் பாலியல்
தொழிலாளியும், நாயகியின் நல்ல குணத்தை பார்த்ததும் நாயகனுக்கு லவ் பூமாவதும் ஹே...
ஹே... தமிழ் சினிமா. கதை இதுதான் என்று தெரியாமல் படம் பார்ப்பவர்களுக்கு
உண்மையிலேயே கடைசி கால்மணிநேரம் வரை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். “இதான்யா எங்க
நாடு... இங்க இப்படியெல்லாம்தான் நடக்கும்...” என்று எடுத்துச்சொல்லியிருக்கும்
வழக்கு எண்: 18/9 திரைப்படத்தை உலக சினிமாவாக கொண்டாடி இருக்கலாம் கடைசி பத்து
நிமிடங்களை கத்தரித்திருந்தால்...! கமர்ஷியல் வெற்றிக்காகவும், நம்மூர்
ரசிகர்களுக்காகவும் இயக்குனர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்திருப்பார் போல தெரிகிறது.
வழக்கு எண்: 18/9 – மையப்புள்ளிக்கு மிக அருகாமையில்
எய்யப்பட்டிருக்கும் அம்பு...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
30 comments:
Off the Record: Not particularly for this movie, சமீபகாலமாகவே மூத்த பதிவர்கள் சிலர் என்ன காரணங்களுக்காக என்று தெரியவில்லை, சில படங்களுக்கு ஓவர் ஹைப் கொடுப்பதுமாகவும், சில படங்களை ஒரேயடியாக அடித்து உட்கார வைப்பதுமாகவும் இருக்கிறார்கள்... பதிவுலக சினிமா விமர்சனங்களிலும் கூட அரசியலையும் வியாபாரத்தையும் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள்...
இன்னாருடைய விமர்சனத்தில் படம் நல்லாயிருக்கு என்று சொல்லியிருந்தால் படத்தை நம்பி பார்க்கலாம் என்ற வாசகர்களின் நம்பிக்கை, துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது...
எதற்கும் உங்கள் தலையில் மிளகாய்த்தூள் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்று ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொள்ளவும்...
இந்த படத்த பத்தி நல்ல விதமா தான சொல்லிருக்காங்க உங்கள மாதிரி
இதைவிட ஒரு நல்ல படம் எடுக்க முடியுமா?நீர் என்னவோ இப்படி சொல்லுரீர்!என்னவோ செய்ங்க!
ரைட்டு ...!
படம் மோசமில்லை...பார்க்கலாம்!
ஆனா இறுதி காட்சிய கட் பண்ணினா ஒலக சினிமாங்கறது...!எக்ஸ்செல் நாவலை திரும்ப திரும்ப படிக்காதிங்கன்னு சொன்னா கேட்டாத்தானே.....!
பிரபா நல்ல விமர்சனம், இது வரை வந்த விமர்சனங்களில் தங்களது விமர்சனம் படத்தை சரியாக அலசியிருக்கீர்கள் என்று தோன்றுகிறது.
உங்களுக்கு தெரிந்து மையப்புள்ளில் நடு சென்டரில் எய்யப்பட்ட அம்புகளில் சில சாம்பிள் ப்ளீஸ்... :)
@ PREM.S
// இந்த படத்த பத்தி நல்ல விதமா தான சொல்லிருக்காங்க உங்கள மாதிரி //
என்ன சொல்றீங்கன்னு புரியல... இருந்தாலும் நன்றி ப்ரேம்...
@ Anonymous
// இதைவிட ஒரு நல்ல படம் எடுக்க முடியுமா?நீர் என்னவோ இப்படி சொல்லுரீர்!என்னவோ செய்ங்க! //
அனானி... இதைவிட நல்ல சினிமா எடுக்க முடியும்... ஏன் இதுவே நல்ல சினிமாதான்... கடைசி காட்சியில் சினிமாத்தனத்தை புகுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து...
@ வரலாற்று சுவடுகள்
// ரைட்டு ...! //
ஓகே...
@ வீடு சுரேஸ்குமார்
// படம் மோசமில்லை...பார்க்கலாம்!
ஆனா இறுதி காட்சிய கட் பண்ணினா ஒலக சினிமாங்கறது...!எக்ஸ்செல் நாவலை திரும்ப திரும்ப படிக்காதிங்கன்னு சொன்னா கேட்டாத்தானே.....! //
என்ன தல பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க... அப்புறம் நான் இன்னும் எக்சைலை தொடவே இல்லை... சாலை விரிவாக்கப் பணிகள் வந்ததும் மொத்த புத்தகங்களையும் கட்டி பரணில் போட்டுவிட்டேன்... எப்போது திரும்பவும் எடுப்பேன் என்று தெரியவில்லை...
@ கும்மாச்சி
// பிரபா நல்ல விமர்சனம், இது வரை வந்த விமர்சனங்களில் தங்களது விமர்சனம் படத்தை சரியாக அலசியிருக்கீர்கள் என்று தோன்றுகிறது. //
மிக்க நன்றி கும்ஸ்...
@ சேலம் தேவா
// உங்களுக்கு தெரிந்து மையப்புள்ளில் நடு சென்டரில் எய்யப்பட்ட அம்புகளில் சில சாம்பிள் ப்ளீஸ்... :) //
எனக்கு தெரிந்தவரையில் தமிழ் சினிமாவில் அப்படியா பட்ட படங்கள் மிகவும் அரிதாகவே வருகின்றன... புதுப்பேட்டை, அங்காடித்தெரு போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்... காப்பி அடிக்காமல் இருந்திருந்தால் நந்தலாலாவையும் சேர்க்கலாம்...
நல்லா இருக்கு விமர்சனம் ....அஸ்யூஸ்வல் சுபெர்ப்
// கமர்ஷியல் வெற்றிக்காகவும், நம்மூர் ரசிகர்களுக்காகவும் இயக்குனர் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்திருப்பார் போல தெரிகிறது//
இது நூற்றுக்கு நூறு உண்மை.
நல்ல விமர்சனம்...
படம் பார்த்தவர்கள் நல்லாயிருக்கு என்று சொல்கிறார்கள்... பார்க்க வேண்டும்.
படம் பிடித்து இருக்கிறது.முதல் பாதி கொஞ்சம் ஏதோ டாக்குமெண்டரி போல் இருந்தாலும் நம்மை படத்தில் ஒன்றிட செய்கிறது.நல்ல விமர்சனம்..கடைசி காட்சியில் அவள் ஆசிட் ஊத்தியவுடன் இங்கு எழுந்த கிளாப்ஸ் இருக்கே...அதுதான் ரசனை...
இன்றுதான் பார்த்தேன்.அரங்கு நிறைந்த கூட்டம்.
@ கலை
// நல்லா இருக்கு விமர்சனம் ....அஸ்யூஸ்வல் சுபெர்ப் //
நன்றி மேடம்...
@ உலக சினிமா ரசிகன்
// இது நூற்றுக்கு நூறு உண்மை. //
புரிந்துக்கொண்டமைக்கு நன்றி தல...
@ சே. குமார்
// நல்ல விமர்சனம்...
படம் பார்த்தவர்கள் நல்லாயிருக்கு என்று சொல்கிறார்கள்... பார்க்க வேண்டும். //
நன்றி தல... கண்டிப்பாக பாருங்கள்...
@ கோவை நேரம்
நன்றி தல...
ராஜன் லீக்ஸ்,சி பி, கேபிள், உண்மை தமிழன்,வீடு, அனந்து....ன்னு எல்லாரோட ப்ளாக்லயும் இன்னிக்கு இதே கூத்துதான்... படிச்சா கதைய சொல்லிருவாங்கலோன்னே படிக்கல... நீயும் கதைய எங்காவது ஆரம்பிச்சா நிப்பாட்டிரலாம் ன்னு நெனச்சுதான் ஆரம்பிச்சேன்.. கலக்கிட்ட நண்பா.. விமர்சன நடை நல்லா இருந்துது... ஆனா படம் பாத்துட்டு இது இரசனையோட ஒத்துபோகுதான்னு பாத்துக்கிறேன்.. :)
@ மயிலன்
// ராஜன் லீக்ஸ்,சி பி, கேபிள், உண்மை தமிழன்,வீடு, அனந்து....ன்னு எல்லாரோட ப்ளாக்லயும் இன்னிக்கு இதே கூத்துதான்... படிச்சா கதைய சொல்லிருவாங்கலோன்னே படிக்கல... நீயும் கதைய எங்காவது ஆரம்பிச்சா நிப்பாட்டிரலாம் ன்னு நெனச்சுதான் ஆரம்பிச்சேன்.. கலக்கிட்ட நண்பா.. விமர்சன நடை நல்லா இருந்துது... ஆனா படம் பாத்துட்டு இது இரசனையோட ஒத்துபோகுதான்னு பாத்துக்கிறேன்.. :) //
சிபி, உ.தா ப்ளாக் படிச்சா நீங்க படம் பார்க்கவே தேவையில்லை... மற்றவர்கள் சம்பிரதாயத்திற்காக சில வரிகளில் சொல்லியிருந்தார்கள்...
படம் ரொம்ப பிடித்திருந்தால் கதை சொல்லமாட்டேன்... அதுதான் என் பாலிசி...
நன்றி... பார்த்துவிட்டு பதிவிடுங்கள்... ப்ளாக்கரில்...!
//ப்ளாகரில்...//
ஹ்ம்ம்ம்...
\\ஆனால் படம் முடியும்போது நம் மனது நிறைந்ததா....???\\ இதுக்கு பதிலையும் சொல்லிடேன் பிரபா........
\\இன்னாருடைய விமர்சனத்தில் படம் நல்லாயிருக்கு என்று சொல்லியிருந்தால் படத்தை நம்பி பார்க்கலாம் என்ற வாசகர்களின் நம்பிக்கை, துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது...\\ உண்மைத் தமிழன் 3 படத்தை நல்லாயிருக்குது, ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து எழுதியிருந்தாரு. நொந்துட்டேன். அவருக்கு அப்படி என்ன அவசியமோ தெரியவில்லை. கேட்டால், ரசனை ஆளாளுக்கு மாறுபடும்கிறாரு. எல்லா பதிவர்களும் ஒரே மாதிரி இருக்க இவர் ஒருத்தர் ரசனை மட்டும் எப்படி வேறுபட்டது என்பது புரியாத புதிர்.
\\கடைசி காட்சியில் சினிமாத்தனத்தை புகுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து.\\ அந்த பதினஞ்சு நிமிடம் தவிர்த்து படம் நன்றாக இருந்ததா? அப்படியிருதால் கூட போதுமே!
@ Jayadev Das
// இதுக்கு பதிலையும் சொல்லிடேன் பிரபா........ //
நிறையோ நிறையென்று நிறைந்துவிட்டது தல...
// உண்மைத் தமிழன் 3 படத்தை நல்லாயிருக்குது, ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து எழுதியிருந்தாரு. நொந்துட்டேன். அவருக்கு அப்படி என்ன அவசியமோ தெரியவில்லை. கேட்டால், ரசனை ஆளாளுக்கு மாறுபடும்கிறாரு. எல்லா பதிவர்களும் ஒரே மாதிரி இருக்க இவர் ஒருத்தர் ரசனை மட்டும் எப்படி வேறுபட்டது என்பது புரியாத புதிர். //
உண்மைத்தமிழனுக்கு ஏன் 3 படத்தை பிடித்திருந்தது என்பது அவர் அதற்கடுத்து எழுதிய பதிவை படித்தால் புரியும்... நான் சொல்வது அதைப் பற்றியல்ல...
க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருந்தால் நிறையவே பாதித்திருக்கும் ... வேலு சிறைக்கு சென்றவுடன் படத்தை முடித்திருக்க வேண்டும் ... உங்களின் விமர்சனம் நன்று ...
Post a Comment