அன்புள்ள வலைப்பூவிற்கு,
என்னுடைய அலுவலக கார் டிரைவரின் மகன் +2 முடித்திருக்கிறார் போல.
அடுத்ததாக எந்த படிப்பில் சேர்க்கலாம் என்று என்னிடம் அடிக்கடி ஆலோசனை கேட்கிறார்.
உங்க பையன் என்ன படிக்க விரும்புறாருன்னு கேட்டேன். “அவனுக்கு கெமிக்கல்
எஞ்சினியரிங் படிக்கணும்ன்னு ஆசை”. அப்படின்னா அதையே படிக்க வையுங்க என்றேன்.
“இல்ல... அந்த படிப்பு படிச்சா வேலை கிடைக்காதாமே...” என்று இழுத்தார். மற்றொரு
நாள் மறுபடியும் ஆலோசனை கேட்க என்னுடைய கலைந்த கனவான மெரைன் எஞ்சினியரிங்கை பரிசீலித்தேன்.
“அய்யய்யோ... அதெல்லாம் படிச்சா வெளிநாட்டுகெல்லாம் போகணுமே... எனக்கு இருக்குறதே
ஒரே புள்ள...” என்று ராகம் பாடினார். “அப்படின்னா என்னதான் செய்யணும்ன்னு
ஆசைப்படுறீங்க” கொஞ்சம் கோபமாகவே கேட்டேன். “என் பையனுக்கு கைநிறைய சம்பளம்
வாங்குற ,மாதிரி வேலை கிடைச்சா போதும்” என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் பதில்
சொன்னார். அதெல்லாம் பெரிய கம்பசூத்திரமில்லை...அவர் என்ன ஆசைப்படுறாரோ அதையே
படிக்க வையுங்க என்று அழுத்தமாகவே சொன்னார். ஆனாலும் அவர் இறுதியில் ஏதோவொரு
எஞ்சினியரிங் கல்லூரியில் ஐடி கோர்ஸ் தான் சேர்ப்பார் என்று தெளிவாக தெரிகிறது.
குஸ்காதான் வேணும் ஆனா லெக்பீஸ் இருக்கணும்ன்னு சொல்றவங்கள என்ன செய்வது...???
“அவனை அடிக்கிற அடியில உலகத்துல எந்த மூலையிலும் இருட்டுல கூட ஒரு
தமிழன் மேல கை வைக்க ஒவ்வொருத்தனும் பயப்படணும்...” – இது ஏழாம் அறிவு படத்தில்
தன்யா பாலகிருஷ்ணன் (அல்லது அவருக்கு டப்பிங் கொடுத்தவர்) பேசிய பொங்கல் வசனம். பெங்களூரை
சேர்ந்த மாடலான தன்யா சமீபத்தில் வெளியிட்ட ஃபேஸ்புக் நிலைச்செய்தி: - dear
chennai, you beg for water, we give! you beg for electricity, we give! ur
people come n occupy our beautiful city and kocha paduthify it , we allow and
nw u were at our mercy to go to playoffs, n we let be!! like this u begging –
we givin! dai ungalukku vekkame illaiya da??
இவர்களைச் சொல்லி குற்றமில்லை. அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள் என்ற ஒரே
காரணத்திற்காக இவர்களுக்கு தமிழ்ப்படங்களில் வெட்கமே இல்லாமல் வாய்ப்பளிக்கும்
தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களைச் சொல்ல வேண்டும்.
இந்த IPL / கிரிக்கெட் நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கை மாதிரி
ஆகிவிட்டது. சிலர் கர்மசிரத்தையோடு கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள், சிலர் எல்லாம்
சூதாட்டம் என்று ஒதுங்கிக்கொள்வார்கள். கடவுள் பக்தியில் ஒரு பிரிவினர் உண்டு.
கடவுள் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை. ஆனால்
கடவுளை நினைத்தால் நிம்மதியடைகிறேன் என்று கூறுவார்கள். அதுமாதிரி தான் நானும். கிரிக்கெட்டில்
சூதாட்டம் நடக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை.
நடந்துக்கொண்டிருக்கும் போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்று தெரியாத
வரைக்கும் கிரிக்கெட் எனக்கு சுவாரஸ்யம் தான். BTW, வாழ்த்துகள் KKR.
இதனை படிப்பவர்கள் யாராவது ஹைதராபாத்தில் வசித்தால் அல்லது ஹைதராபாத்
சென்று வருவதாக இருந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். உதவி ஒன்று
தேவைப்படுகிறது.
ட்வீட் எடு கொண்டாடு:
விமலுக்குள்ள ஒரு
இங்கிலீஷ் மீடியம் ராமராஜன் ஒளிஞ்சிட்டு இருந்திருக்காரு. இந்த படத்துலதான் வெளிய 'கமிங்' #இஷ்டம்
இரண்டு இளையராஜா ரசிகர்கள் ரூம்மெட்டாக கிடைத்தால் ........................... !!!!!!! ரும் காலி பண்றத தவிர வேறு வழியில்லை #whyRajaIsGod
போதையில் வரும்
நண்பனை நெறிப்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு அறையிலும்
ஒரு நண்பன் இருக்கிறான்.. #நண்பேண்டா
ஃபிரெஞ்ச் பியர்ட்
தாடிய பாக்கும்போதெல்லாம் மேற்கத்திய நீல பட நாயகிகள் ஞாபகம் வர்றவுங்கள்லாம் RT செய்யவும்! கமான் குவிக்!
'அப்புறம்' என்று
உன் நண்பன் கூறினால் நீ அவனை ரொம்ப நேரமா பேசியே கொல்றனு அர்த்தம்
கனடாவில் வசிக்கும் நண்பர் ரவி பரமன், சென்னைக்கு வரும்போது என்னுடன்
ஒரு கப் காபியாவது சாப்பிடவேண்டும் என்று மெயில் அனுப்பி இருந்தார். சந்தோஷத்தில்
துள்ளி குதிக்காத குறை. இரண்டு நாட்களுக்குப்பின் Hi Prabhakaran, You’ve won
$500,000 பாணியில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. மறுபடியும் இரண்டு
நாட்களுக்குப்பின் என்னுடைய Fuel Card-க்கு யாரோ ரீ-சார்ஜ் செய்துவிட்டதாக
குறுஞ்செய்தி. ஒன்றும் புரியவில்லை. என்னிடம் Fuel Card என்ற சமாச்சாரமே இல்லை.
என் மொபைலுக்கு யாரோ சிம்கார்டு சூனியம் வைத்துவிட்டார்களோ என்று எண்ணிக்கொண்டேன்.
மேற்கண்ட மூன்று சம்பவங்களையும் இணைக்கும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்
ரவி பரமன் சென்னையில் இருக்கும் அவருடைய நண்பரின் மூலமாக சத்யம், எஸ்கேப்
திரையரங்குகளில் டிக்கெட் எடுக்கப் பயன்படும் Fuel Card வாங்கி அனுப்பியிருந்தார்.
நிச்சயமாக என்னை பெருமகிழ்ச்சி அடைய வைக்கும் பரிசுப்பொருள். தேவி திரையரங்கே கதி
என்று கிடந்தவன் இனி சத்யம், எஸ்கேப் திரையரங்குகளுக்கும் போகலாம். மிக்க நன்றி
என்பது சாதாரண வார்த்தை ரவி பரமன். உங்களைப் போன்றவர்களின் உந்துதலால்தான் ஏதாவது
உருப்படியாக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது.
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு
திங்கு’ன்னு ஆடுச்சாம். கர்நாடக மாநில, முதோல் கிராமத்தில் உள்ள மருதேஸ்வரர்
கோவிலில் ஒரு விசித்திரமான சடங்கு நடைபெறுகிறது. அதாவது பச்சிளம் குழந்தையை
கோவிலின் கூரையிலிருந்து அர்ச்சகர் வீசுவார், கீழே உள்ள சேவகர்கள் ஒரு கம்பள
விரிப்பில் குழந்தையை பிடிக்கிறார்கள். இந்த சடங்கிற்கு ஒக்காலி என்று பெயராம்.
(சரியாகத்தான் வைத்திருக்கிறார்கள்). இந்தமாதிரி செய்தால் குழந்தை ஆரோக்கியமாக
இருக்கும் என்பது நம்பிக்கையாம். ஒரே ஒரு ஆச்சர்யம், இந்த சடங்கை நிறைவேற்றுவதில்
இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களாம்.
தமிழில் உள்ள நாட்டுப்புற டூயட் பாடல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான
தீமில் இருக்கும். தலைவன் தலைவியிடம் உனக்கு அது வாங்கித் தரேன் இது வாங்கி தரேன்
ஒதுக்குப்புறமா வா என்று தாஜா பண்ணுவார். தலைவி எனக்கு அது இது எதுவுமே வேணாம், ஒரே
ஒரு மஞ்சக்கயிறு மட்டும் கட்டு நீ எங்க கூப்பிட்டாலும் வருவேன் என்பார். (FYI,
அந்த மாதிரி பெண்கள் லெமூரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போய்விட்டார்கள்). பார்பி
கேர்ள் பாடலில் “Come on Barbie... Lets go party...” என்று அழைக்கும் கென்னிடம் “You
can touch... You can play... if you say im always yours” என்று பதில்
சொல்லுவதையும் நாட்டுப்புற பாடல்வகையில் சேர்க்கலாமா என்று தெரியவில்லை.
வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலுக்கு அடுத்து என்னைக் கவர்ந்த
கேரக்டர் திலீப்புடையது தான். அவருடைய ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ், ட்ரெஸ்ஸிங்
சென்ஸ் எல்லாம் இப்போதும் கூட என்னுடைய இன்ஸ்பிரேஷன்களுள் ஒன்று. எல்லாவற்றிற்கும்
மேலாக அந்தப்படத்தில் ஏதாவது களவாணித்தனம் பண்ணிட்டு யாருடா இதெல்லாம்
சொல்லிக்கொடுக்குறதுன்னு கேட்டா, என் ஃப்ரெண்ட் திலீப் கொடுத்த ஐடியா என்று
சொல்வார். காலப்போக்கில் திலீப்பை மறந்துவிட்டோம். இப்போதுகூட திலீப்பின்
மரணச்செய்தி ஊடகங்களில் வராமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
37 comments:
செம சரக்கு.. நல்ல மிக்சிங் ..
யோவ் எங்கையா "ஜொள்ளு " படம் ,அம்பூட்டு நல்லவனா ஆயிட்டியா நீயி ?
//இப்போதுகூட திலீப்பின் மரணச்செய்தி ஊடகங்களில் வராமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.//
மிகச்சரியாக தீலிப்புக்கு அஞ்சலி செலுத்தி உள்ளீர்கள்.உங்களோடு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.
//இதனை படிப்பவர்கள் யாராவது ஹைதராபாத்தில் வசித்தால் அல்லது ஹைதராபாத் சென்று வருவதாக இருந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். உதவி ஒன்று தேவைப்படுகிறது.///
பாஸ்,
நான் ஹைதராபாத் தான்...என்ன ஹெல்ப் வேணும்னாலும் raj.zte@gmail.com -க்கு ஒரு மெயில் தட்டுங்க...
கீழே உள்ள சேவகர்கள் ஒரு கம்பள விரிப்பில் குழந்தையை பிடிக்கிறார்கள். இந்த சடங்கிற்கு ஒக்காலி என்று பெயராம்.
////////////////
வக்காலி! அறிவே கிடையாதா? அப்படின்னு திட்டனும்போல இருக்கு!
Good...
\\பெங்களூரை சேர்ந்த மாடலான தன்யா சமீபத்தில் வெளியிட்ட ஃபேஸ்புக் நிலைச்செய்தி\\
இன்றைய தினமலரில் ஒரு செய்தியைப் பார்த்தேன். கேரளா அரசு தமிழக எல்லை முழுவதிலும் தங்கள் நகரக் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்களாம், அந்த குப்பை லாரிக்காரங்கள் அத்தனை பெரும் தமிழ்க் காரனுன்கலாம் என்பது கூடுதல் செய்தி. கேரளாவுக்கு மணல் தென் மாவாட்டங்களில் இருந்து போகிறது, அதை அள்ளுபவன், லாரி டிரைவர் எல்லாம் தமிழ்க் காரன். இந்த மாதிரி பணத்துக்காக பெ.........யைக் கூட கூ.......... கொடுக்கும் தமிழ்க் காரனைப் போல ஈன மானம் இல்லாதவனைப் பார்ப்பது அரிதிலும் அரிது. அப்படிப் பார்த்தால் இந்தமா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=67
\\கடவுள் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை. ஆனால் கடவுளை நினைத்தால் நிம்மதியடைகிறேன் என்று கூறுவார்கள். அதுமாதிரி தான் நானும். \\ Then, இனிமே சாமி கும்பிடுறவங்க, மத சம்பிரதாயங்களை காரணமே தெரியாம பண்றவங்களை திட்டாதீங்க.
\\இரண்டு இளையராஜா ரசிகர்கள் ரூம்மெட்டாக கிடைத்தால் ........................... !!!!!!! ரும் காலி பண்றத தவிர வேறு வழியில்லை\\ Why this Kolaveri on Ilayaraja?
\\கமலுக்கு அடுத்து என்னைக் கவர்ந்த கேரக்டர் திலீப்புடையது தான்.\\ He is from Mysore it seems.
இதுவரைக்கும் ஒயின் ஷாப்ல எனக்கு புடிச்ச பகுதிகளுக்கு மட்டும்தான் கமெண்ட் போடுவேன்..
இன்னிக்கு ஒன்னு விடாம பின்னிட்டீங்க...
சோ first ஒரு டோட்டல் லைக்...
அதே நேரம் ஜொள்ளு படம் போட மறந்த உன்னை என்ன செய்யலாம்.. உன்னுடைய பதிவுலக பொறுப்பு அவ்வளவுதானா?
/ குஸ்காதான் வேணும் ஆனா லெக்பீஸ் இருக்கணும்ன்னு சொல்றவங்கள என்ன செய்வது...??? //
என் அப்பாவும் இந்த வகையறாதான்.. நான் மேற்படிப்பு சேர்ந்து பல நாட்களுக்கு பிறகும் தன்னுடைய அறிவு ஜீவி நண்பர்களிடம் தொடர்ந்து கருத்து கேட்டுக்கொண்டே இருந்தார்... அதனால் இந்த வரிகளோட எளிதில் ஓட்ட முடிந்தது...:)
//தன்யா பாலகிருஷ்ணன்//
சமீபத்துல சென்னை வந்தப்போ பெசன்ட் நகர் பீச்சாண்ட இந்த ஜிகிடிய ஒரு பாடாவதி சூம்பிபோன தலையனோட பாத்தேன்.. ஒரு சாயல்ல டோங் லீ மாதிரியே இருந்தான்...
IPL பெரியார்- பிரபா வாழ்க...
//உங்களைப் போன்றவர்களின் உந்துதலால்தான் ஏதாவது உருப்படியாக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது.//
என்ன எழவ வேணும்னாலும் எழுத்து.. ஆனா தயவு செஞ்சு இந்த ஜொள்ளு ஏரியாவ மட்டும் இன்னொரு தபா மறந்துடாத...
அந்த கர்நாடகா மாநில வக்காளிகள் கேட்சை மிஸ் செய்தால்???
திலீப்பை பொறுத்தவரை வசன உச்சரிப்பு ஸ்டைல்தான் எனக்கு இஷ்டம்.. ஒரு அலட்சிய ஆடம்பர தொனி இருக்கும்..
ஆழ்ந்த இரங்கல்கள்..
அந்த Facebook status ஐ பார்த்தேன் ... இப்படியான கடுப்பு வரக்கூடிய status பல அண்மைக்காலமாக சிங்கள நண்பர்கள் போட்டு சீண்டுவார்கள் .. திருப்பி ஏதும் போட்டால் புலி முத்திரை குத்தப்படும் அபாயம் இருக்கிறது ... தன்யாவின் ஸ்டேடஸ் பார்க்க அதுதான் ஞாபகம் வந்தது ... திருத்தமுடியாது ..
பிட்டு படம் இந்த வாரம் இல்லாததை இட்டு எங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து கொள்ளுகிறோம்!!
முதலில் நடிகர் திலீப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அப்புறம் கன்னியா... சாரி தன்யா மாதிரி நாய்களை நடுவீட்டில் வைத்துப் பார்க்கும் இயக்குநர்கள் இருக்கும் வரை இங்கு தின்னுகொண்டு அங்கு போய் பேசத்தான் செய்வாள்கள்...
மற்றவை அனைத்தும் அருமை.
@ Sathish
// செம சரக்கு.. நல்ல மிக்சிங் .. //
நன்றி சதீஷ்...
@ N.Mani vannan
// யோவ் எங்கையா "ஜொள்ளு " படம் ,அம்பூட்டு நல்லவனா ஆயிட்டியா நீயி ? //
அப்படி ஆக்கிட்டாங்க மணி...
@ ராஜ்
// பாஸ்,
நான் ஹைதராபாத் தான்...என்ன ஹெல்ப் வேணும்னாலும் raj.zte@gmail.com -க்கு ஒரு மெயில் தட்டுங்க... //
சூப்பர்... உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன் ராஜ்...
@ வீடு சுரேஸ்குமார்
// வக்காலி! அறிவே கிடையாதா? அப்படின்னு திட்டனும்போல இருக்கு! //
திட்டுங்க சுரேஷ் திட்டுங்க...
@ சமுத்ரா
// Good... //
Thanks...
@ Jayadev Das
// இன்றைய தினமலரில் ஒரு செய்தியைப் பார்த்தேன். கேரளா அரசு தமிழக எல்லை முழுவதிலும் தங்கள் நகரக் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்களாம், அந்த குப்பை லாரிக்காரங்கள் அத்தனை பெரும் தமிழ்க் காரனுன்கலாம் என்பது கூடுதல் செய்தி. கேரளாவுக்கு மணல் தென் மாவாட்டங்களில் இருந்து போகிறது, அதை அள்ளுபவன், லாரி டிரைவர் எல்லாம் தமிழ்க் காரன். இந்த மாதிரி பணத்துக்காக பெ.........யைக் கூட கூ.......... கொடுக்கும் தமிழ்க் காரனைப் போல ஈன மானம் இல்லாதவனைப் பார்ப்பது அரிதிலும் அரிது. அப்படிப் பார்த்தால் இந்தமா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். //
ஜி... அந்த செய்தியில் தமிழர்கள் அவ்வாறு செய்வதாக குறிப்பிடவில்லையே...
// Then, இனிமே சாமி கும்பிடுறவங்க, மத சம்பிரதாயங்களை காரணமே தெரியாம பண்றவங்களை திட்டாதீங்க. //
தல... இப்பவும் சொல்றேன்... நான் கிரிக்கெட்டை நம்புவது கூட மூடநம்பிக்கை தான்... கிரிக்கெட் ரசிகர்கள் என்னை திட்டினால் கூட அதனை தலைகுனிவோடு ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை...
// Why this Kolaveri on Ilayaraja? //
கொலவெறி எல்லாம் இல்லை... ஹீரோ வொர்ஷிப் எப்படி தவறானதோ அதேமாதிரி இளையராஜா வொர்ஷிப்பும் தவறென்று நினைக்கிறேன்...
// He is from Mysore it seems. //
ஆமாம் சார்... மைசூரில் தான் இறுதிச்சடங்கு நடைபெற்றதாம்...
@ மயிலன்
// இதுவரைக்கும் ஒயின் ஷாப்ல எனக்கு புடிச்ச பகுதிகளுக்கு மட்டும்தான் கமெண்ட் போடுவேன்..
இன்னிக்கு ஒன்னு விடாம பின்னிட்டீங்க...
சோ first ஒரு டோட்டல் லைக்... //
மிக்க நன்றி தல...
// அதே நேரம் ஜொள்ளு படம் போட மறந்த உன்னை என்ன செய்யலாம்.. உன்னுடைய பதிவுலக பொறுப்பு அவ்வளவுதானா? //
மறப்பேனா... அலுவலகத்தில் படிக்க சங்கடமாக இருக்கிறது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள்...
// என் அப்பாவும் இந்த வகையறாதான்.. நான் மேற்படிப்பு சேர்ந்து பல நாட்களுக்கு பிறகும் தன்னுடைய அறிவு ஜீவி நண்பர்களிடம் தொடர்ந்து கருத்து கேட்டுக்கொண்டே இருந்தார்... அதனால் இந்த வரிகளோட எளிதில் ஓட்ட முடிந்தது...:) //
கடைசியா உங்க விருப்பம் நிறைவேறினதா இல்லையா... அடுத்த தலைமுறைக்காவது அவர்கள் எண்ணப்படி தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுப்போம்...
// சமீபத்துல சென்னை வந்தப்போ பெசன்ட் நகர் பீச்சாண்ட இந்த ஜிகிடிய ஒரு பாடாவதி சூம்பிபோன தலையனோட பாத்தேன்.. ஒரு சாயல்ல டோங் லீ மாதிரியே இருந்தான்... //
குட்டு பிகருக்கு அட்டு பாய்தான் கிடைப்பான்னு தலைவரே சொல்லியிருக்கார்...
// IPL பெரியார்- பிரபா வாழ்க... //
நல்லவேளை பெரியார் இப்ப இல்லை...
// அந்த கர்நாடகா மாநில வக்காளிகள் கேட்சை மிஸ் செய்தால்??? //
அத்தனை பேரும் கம்பி எண்ண வேண்டியதுதான்...
@ ஜேகே
// பிட்டு படம் இந்த வாரம் இல்லாததை இட்டு எங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து கொள்ளுகிறோம்!! //
இது எப்ப...
@ சே. குமார்
//
அப்புறம் கன்னியா... சாரி தன்யா மாதிரி நாய்களை நடுவீட்டில் வைத்துப் பார்க்கும் இயக்குநர்கள் இருக்கும் வரை இங்கு தின்னுகொண்டு அங்கு போய் பேசத்தான் செய்வாள்கள்...
மற்றவை அனைத்தும் அருமை. //
ஹி ஹி... நன்றி தல...
நல்ல பதிவு
//////ஆனாலும் அவர் இறுதியில் ஏதோவொரு எஞ்சினியரிங் கல்லூரியில் ஐடி கோர்ஸ் தான் சேர்ப்பார் என்று தெளிவாக தெரிகிறது. குஸ்காதான் வேணும் ஆனா லெக்பீஸ் இருக்கணும்ன்னு சொல்றவங்கள என்ன செய்வது...???//////////
ரொம்ப அரிதான அல்லது பொதுவா யாரும் அதிகம் சேராத கோர்ஸ்கள்ல சேர எல்லாரும் தயக்கம் காட்டுறது இயல்புதான்.
/////இது ஏழாம் அறிவு படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் (அல்லது அவருக்கு டப்பிங் கொடுத்தவர்)//////
பிகர் நல்லாருந்தாலும் மூஞ்சில திமிர் வழியுது............
//////இவர்களைச் சொல்லி குற்றமில்லை. அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ///////
இந்தப்புள்ளைக்குமா அட்ஜஸ்ட்மெண்ட்டு............. வெளங்கிரும்..........
/////அதுமாதிரி தான் நானும். கிரிக்கெட்டில் சூதாட்டம் நடக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அது எனக்கு தேவையுமில்லை. நடந்துக்கொண்டிருக்கும் போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என்று தெரியாத வரைக்கும் கிரிக்கெட் எனக்கு சுவாரஸ்யம் தான். BTW, வாழ்த்துகள் KKR. ///////
ஏதோ பொழுது நல்லா போச்சு..........
/////// சாதாரண வார்த்தை ரவி பரமன். உங்களைப் போன்றவர்களின் உந்துதலால்தான் ஏதாவது உருப்படியாக எழுதவேண்டுமென்று தோன்றுகிறது./////////
யோவ் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ஏதாச்சும் எலக்கியம் ஒலகப்படம்னு ஆரம்பிச்சிடாதீங்கப்பா.............
//////ஒரே ஒரு மஞ்சக்கயிறு மட்டும் கட்டு நீ எங்க கூப்பிட்டாலும் வருவேன் என்பார். (FYI, அந்த மாதிரி பெண்கள் லெமூரியா கண்டத்தோடு வழக்கொழிந்து போய்விட்டார்கள்///////
இப்பல்லாம் ஃபேஸ்புக்ல லைக் போடுறேன்னு சொன்னாவே போதுமாமே?
//// அவருடைய ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ், ட்ரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம் இப்போதும் கூட என்னுடைய இன்ஸ்பிரேஷன்களுள் ஒன்று. ///////
எனக்கும் ரொம்ப பிடிக்கும், பிரபுதேவா கூட ஒரு பாட்டுல திலீப் மாதிரி கேரக்டர்ஸ் கொண்டுவந்திருப்பார்....... (மனதை திருடிவிட்டாய்-ஹாலிடே)
Post a Comment