அன்புள்ள வலைப்பூவிற்கு,
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் எப்போதும் போல பிதாமகன் தலைமையில் நகர்வலம்
வந்துக்கொண்டிருந்தோம். மாலையில் ஏதோ ட்வீட்டப் இருப்பதாக சொன்னார்கள். சரி,
காந்தி சிலைதானே என்றால் இல்லை தம்பி இது மெகா ட்வீட்டப், அடையாறு யூத் ஹாஸ்டல்
என்றார்கள். அடடே என்று ஆச்சர்யக்குறியை கையில் பிடித்துக்கொண்டு அடையாறு செல்ல
ஆயத்தமானோம். அவசர வேலையென்று தலைவர் கழண்டுக்கொள்ள அக்கப்போரு ஒன்றை
உடன்சேர்த்துக்கொண்டு யூத் ஹாஸ்டலுக்குள் நுழைந்தோம். ஒவ்வொருவராக தங்களுடைய
டிவிட்டர் ஐடி மற்றும் டிவிட்டர் ஹாண்டில் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு
இருந்தார்கள். நமக்கு ட்விட்டர் ஹாண்டில் என்றால் என்னவென்றே தெரியாது. நல்லவேளையாக
கடைசி ஆளாக அமர்ந்திருந்த என் கைகளுக்கு மைக் வரவில்லை. ராஜன், பரிசல் போன்ற
சீனியர் டிவிட்டர்களையும் திருட்டுகுமரன், குள்ளபுஜ்ஜி, வேதாளம், கோமாளி செல்வா
போன்ற பிடித்த டிவிட்டர்களையும் கண்டு மகிழ்ந்தேன். நிறைய பேரை அடையாளம்
தெரியாததால் சிபியாரை வைத்து கேட்டு தெரிந்துக்கொள்ள முயன்றேன். ஆனால் அவரோ பெண்
கீச்சர்களை போட்டோ எடுப்பதிலேயே குறியாக இருந்தார். நிகழ்வு போரடிக்காமல்
அடுத்தடுத்து Activities வைத்து அசத்திக்கொண்டிருந்தார் பரிசல். எம்.ஜி.ஆர் என்ற
நண்பர் பார்ப்பதற்கு அஜீத் குமார் மாதிரி இருந்தார், அவர் வந்து மிமிக்ரி செய்து
அசத்திக்காட்டினார். உடனே முன்வரிசையில் அமர்ந்திருந்த கறுப்பு எம்.ஜி.ஆர் கிரேஸி
கோபால் கவுண்ட்டர் கொடுக்க மிமிக்ரி ஷோ களைகட்டியது. ட்வீட்டப்பின் ஹைலைட்டே
முன்ஏற்பாடு எதுவுமில்லாமல் அவர்கள் செய்த கவுண்ட்டர் மிமிக்ரி என்று சொல்லலாம். முதல்முறையாக
நாகராஜசோழரை சந்தித்தது வரலாற்று சிறப்பு. நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடந்துக்கொண்டே
இருந்தாலும் நமக்கு அயர்ச்சியாக இருந்ததால் சற்று முன்னதாகவே கிளம்ப வேண்டியதாகி
போய்விட்டது. தோட்டா மற்றும் என்னுடைய மோஸ்ட் ஃபேவரிட் ட்விட்டர் கில்மா கணேஷ்
ஆகியோரை சந்திக்க முடியாதது ஃபீலிங்க்ஸ்...!
ட்வீட்டப் முடிந்த கையோடு டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர் சந்திப்பை
ஜமாய்த்துவிடலாம் என்று நினைத்தால் அதற்குள்ளாக ஒரு துயர சம்பவம் துரத்தி வந்து
நடுமன்டையில் நங்கென்று கொட்டி உட்கார வைத்தது. ஆனாலும் நம்முடைய அண்ணன்கள்
சிவகுமார், அஞ்சாசிங்கம், ஆரூர் மூனா ஆகியோர் அடங்கிய குழு ஒன்று வடசென்னை என்னோடது,
சவுத் உன்னோடது, சென்ட்ரலை நீ பார்த்துக்கோ என்கிற ரீதியில் பதிவர் சந்திப்பின்
வெற்றிக்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
வெல்டன் பாய்ஸ். சென்னை மட்டுமல்லாமல் மற்ற ஊர்களில் இருந்து உணவு உலகம் ஆபீசர்,
தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், வீடு சுரேஷ், புது மாப்பிள்ளை கோகுல் மற்றும் பலர்
படையெடுக்க உள்ளனர். வீடு சுரேஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக
சென்னையில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ். பதிவர்
சந்திப்புக்கு வருகை தருபவர்கள் புத்தகங்களை பத்து சதவிகித தள்ளுபடியில் வாங்கலாம்
என்று அதிரடி அறிவிப்பு கொடுத்திருக்கிறார் கடை உரிமையாளர் வேடியப்பன். வீடியோ
கவரேஜை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்திருப்பவர் வலைமனை சுகுமாரன்.
மென்மேலும் பதிவர் சந்திப்பை சிறப்பானதாக்க உங்களுடைய ஆலோசனைகள்
வரவேற்கப்படுகிறது.
பதிவர் சந்திப்பு குறித்த விவரங்கள்:
நாள்: மே 20, 2012
நேரம்: மாலை 4 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்
மேலும் விவரங்களுக்கு:
கே.ஆர்.பியார் - 8098858248
சிவகுமார் – 9841611301
அஞ்சாசிங்கம் – 9444125010
அடுத்த செய்தி, பதிவர் சந்திப்பு பற்றியதல்ல. ஈழப்படுகொலை
நடந்துமுடித்து மூன்றாண்டுகள் முடிந்திருக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்களின்
நினைவாகவும், அவர்களுக்காக குரல் கொடுக்க இன்னமும் நாங்கள் இருக்கிறோம் என்று
அரசுக்கு நினைவூட்டுவதற்காகவும் மே 20ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில்
மெழுகுவர்த்தி நினைவேந்தல் நடைபெற இருக்கிறது. மே பதினேழு இயக்கமும் பெரியார்
திராவிடர் கழகமும் இணைந்து நடத்தும் மேற்கண்ட நிகழ்விற்கு செல்ல விரும்புபவர்கள் மேலும்
விவரங்களுக்கு :-
கும்மி – 9600781111
திருமுருகன் – 9443486285
இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம் நிகழ்வுகள் நடந்தால் எப்படி என்று கேட்பவர்களுக்கு
பதில் சொல்ல சற்றே சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் வேறு வழியில்லை. உங்களுக்கு
விருப்பமானதை தேர்ந்தெடுத்துக்கொள்ள உங்களுக்கு முழு சுதந்திரமும் உண்டு என்பதை
பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
40 comments:
வீடு சுரேஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக சென்னையில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்.
///////////////////////////////////
ஆஹா! இது யாரு கிளப்பிவிட்டது.........!?
// பதிவர் சந்திப்பின் வெற்றிக்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வெல்டன் பாய்ஸ்.//
நீ நேர்ல வா மாப்ள..
தம்பி ..வேடியப்பன் 90% தள்ளுபடில புத்தகம் தர்றதா சொல்லி இருக்கார். பிழை திருத்தவும். புதுகை அப்துல்லா பாசக்கார பயல்கள் பாசறை பசங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ். அப்துல்லா அண்ணன் 100% வருவதாக சம்மதித்து உள்ளார்.
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?
டுவிட்டர் சந்திப்பை சுவைபட எழுதியிருக்கிறீங்க.
சிபி எங்கு போனாலும் அம்மணிகள் பின்னே தான் செல்வாரா? சும்மா ஒரு டவுட்டு//.
வீடு சுரேஸ் அன்பு மழையில் நனைந்து மெலிந்திடப் போறாரு! அவ்...
சந்திப்பு இனிதே நிகழ சிறியேனும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஜூப்பரா நடத்துங்கயா.......
// வீடியோ கவரேஜை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்திருப்பவர் வலைமனை சுகுமாரன். //
சொல்ல்ல்ல்லவே இல்லை..... :))))
இரு நிகழ்ச்சிகளும் முழுமையாக வெற்றி பெறட்டும், வாழ்த்துக்கள்
ம்ம்ம்... நடக்கட்டும் அசத்துங்கோ... நானும் வந்திடறேன்.
கொஞ்ச கஷ்டம் தான்... ஆனா நான் வர போறது எங்கனு எல்லாருக்குமே தெரியும்.... சென்னைல பொறந்ததுக்கு இதான் மிச்சமே.... ஹி ஹி...
பகிர்வுக்கு நன்றி. வர முடியாத காரணத்தால் வாழ்த்துகிறேன்.
ஒன்ன அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு என்ன செஞ்சாலும் அடங்க மாற்றியே அடுத்த நாளே tere naam பட சல்மான் கான் மாதிரி முடிய சிலுப்பிகிட்டு அலையுற...ஒன்ன என்னதான் பண்ண?
பதிவர் சந்திப்புக்கு நானும் வருவேன்
சா இராமாநுசம்
போன வருசத்த விட இந்த வருஷம் பட்டய கிளப்பும் போல , கிளப்பிடலாம்
baas nalla pathivu
enakkidayum blog irukku vanthu nalla palakunga baas www.suncnn.blogspot.com
இரண்டில் எது என்ற குழப்பமே இல்லை.. பணிபுரியும் இடத்தில் அன்று ஆணிபுடுங்கும் வேலை நியமிக்கப்பட்டுள்ளது... எல்லாம் தேவையில்லாததுதான்...
பதிமூணாம் தேதின்னு நெனச்சிட்டு இருந்தேன்.. இருபதுக்கு மாத்திட்டீங்க..இந்த சந்திப்பிற்கும் வர முடியாம போயிருச்சு... (ஒரு வேல நாம பதிவர் லிஸ்ட்லே இல்லையோ?...)
//வீடு சுரேஷுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக சென்னையில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ்.//
காசு மணிஆர்டர் வேணும்னாலும் பண்ணிவைக்கிறேன்.. தயவு செஞ்சு இந்த பெரிய மனுசன மட்டும் ஏத்திவிடாதிங்க...
@ வீடு சுரேஸ்குமார்
// ஆஹா! இது யாரு கிளப்பிவிட்டது.........!? //
சிவாஜிதான் சொன்னாரு...
@ ! சிவகுமார் !
// நீ நேர்ல வா மாப்ள.. //
அதுக்குள்ளயா இன்னும் நாள் இருக்கு...
// தம்பி ..வேடியப்பன் 90% தள்ளுபடில புத்தகம் தர்றதா சொல்லி இருக்கார். பிழை திருத்தவும். புதுகை அப்துல்லா பாசக்கார பயல்கள் பாசறை பசங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ். அப்துல்லா அண்ணன் 100% வருவதாக சம்மதித்து உள்ளார். //
அம்பது பர்சன்ட் வர்றதுன்னா எப்படி இடுப்புக்கு கீழே மட்டும் அனுப்பி வைப்பாரோ...
@ நிரூபன்
// வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?
டுவிட்டர் சந்திப்பை சுவைபட எழுதியிருக்கிறீங்க.
சிபி எங்கு போனாலும் அம்மணிகள் பின்னே தான் செல்வாரா? சும்மா ஒரு டவுட்டு//.
வீடு சுரேஸ் அன்பு மழையில் நனைந்து மெலிந்திடப் போறாரு! அவ்...
சந்திப்பு இனிதே நிகழ சிறியேனும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். //
மிக்க நன்றி நிரூப்ஸ்... சிபி மாம்ஸ் எப்பவுமே அப்படித்தான்... வீட்டை அன்புவெள்ளம் வந்து அடிச்சிட்டு போகப்போகுது...
@ தமிழ்வாசி பிரகாஷ்
// ஜூப்பரா நடத்துங்கயா....... //
நன்றி பிரகாஷ்...
@ Sukumar Swaminathan
// சொல்ல்ல்ல்லவே இல்லை..... :))))//
அது ஒண்ணுமில்ல வீடியோ ஆதாரம் வேணும்ன்னு சிவா ஆசைப்படுறாரு... அதான் கோர்த்துவிட்டேன்... போனமுறை தப்பிச்சிட்டீங்க... இந்தமுறை விடமாட்டோம்...
@ இரவு வானம்
// இரு நிகழ்ச்சிகளும் முழுமையாக வெற்றி பெறட்டும், வாழ்த்துக்கள் //
மிக்க நன்றி சுரேஷ்...
@ கணேஷ்
// ம்ம்ம்... நடக்கட்டும் அசத்துங்கோ... நானும் வந்திடறேன். //
சூப்பர் சார்... வந்திடுங்க...
@ சதீஷ் மாஸ்
// கொஞ்ச கஷ்டம் தான்... ஆனா நான் வர போறது எங்கனு எல்லாருக்குமே தெரியும்.... சென்னைல பொறந்ததுக்கு இதான் மிச்சமே.... ஹி ஹி... //
ஜாக்கி இருக்குற இடம்தான் சதீஷுக்கு அயோத்தி...
@ பாலா
// பகிர்வுக்கு நன்றி. வர முடியாத காரணத்தால் வாழ்த்துகிறேன். //
மிக்க நன்றி தல...
@ புலவர் சா இராமாநுசம்
// பதிவர் சந்திப்புக்கு நானும் வருவேன் //
வாங்க தலைவரே... உங்களைத்தான் சென்னை பதிவர்கள் ரொம்ப நாளா தேடிட்டு இருக்காங்க...
@ சதீஷ் மாஸ்
// கொஞ்ச கஷ்டம் தான்... ஆனா நான் வர போறது எங்கனு எல்லாருக்குமே தெரியும்.... சென்னைல பொறந்ததுக்கு இதான் மிச்சமே.... ஹி ஹி... //
ஜாக்கி இருக்குற இடம்தான் சதீஷுக்கு அயோத்தி...
@ கோகுல்
// போன வருசத்த விட இந்த வருஷம் பட்டய கிளப்பும் போல , கிளப்பிடலாம் //
ஆமா தல... கிளப்புறோம்...
@ sunfun
// baas nalla pathivu
enakkidayum blog irukku vanthu nalla palakunga baas www.suncnn.blogspot.com //
இதோ இப்பவே வர்றேன்...
@ மயிலன்
// எல்லாம் தேவையில்லாததுதான்... //
என்ன தம்பி லந்தா...???
// பதிமூணாம் தேதின்னு நெனச்சிட்டு இருந்தேன்.. இருபதுக்கு மாத்திட்டீங்க..இந்த சந்திப்பிற்கும் வர முடியாம போயிருச்சு... (ஒரு வேல நாம பதிவர் லிஸ்ட்லே இல்லையோ?...) //
அப்ப போன வாரம் ட்வீட்டப் நடந்தப்ப சார் எங்க போயிருந்தீங்க...
// காசு மணிஆர்டர் வேணும்னாலும் பண்ணிவைக்கிறேன்.. தயவு செஞ்சு இந்த பெரிய மனுசன மட்டும் ஏத்திவிடாதிங்க... //
எனி பஞ்ச்...???
பதிவர் சந்திப்பு சிறக்கட்டும்.
////////////// எல்லாம் தேவையில்லாததுதான்... //
என்ன தம்பி லந்தா...??//////////
புரியலையே...எனக்கு ஒரு வெட்டிவேலை இங்கே நியமிக்க பட்டிருக்குன்னு சொன்னேன்..
////////////////////////////// பதிமூணாம் தேதின்னு நெனச்சிட்டு இருந்தேன்.. இருபதுக்கு மாத்திட்டீங்க..இந்த சந்திப்பிற்கும் வர முடியாம போயிருச்சு... (ஒரு வேல நாம பதிவர் லிஸ்ட்லே இல்லையோ?...) //
அப்ப போன வாரம் ட்வீட்டப் நடந்தப்ப சார் எங்க போயிருந்தீங்க...//////////////////////////
நடந்த மேட்டரே அதுக்கு பின்னாடி வெளியான சிபியின் பதிவுலதான் தெரிஞ்சுது...
நானும் வருகிறேன்
இப்படிக்கு
இன்னொரு யூத் (ஒரிஜினல்:-)
நல்ல விஷயம் தான் நண்பா... இனி சென்னையில் ஏதாவது பதிவர் சந்திப்பு நடக்கும் போது கொஞ்சம் முன்கூட்டியே தெரிவித்தால் மகிழ்ச்சி ... வழக்குக்கு அப்புறம் படம் எதுவும் பார்க்கவில்லையா ?
நான் ஊருக்கு வரும்போதெல்லாம் பதிவர் சந்திப்பு நடக்க மாடேங்குதே? சரி பரவாயில்லை. அடுத்த தடவை வந்துடுறேன்.
பிரபா, உனக்கு அஜீத் மேல என்னய்யா கோபம்?..இல்ல அஜித்தை உனக்குப் பிடிக்காதா!
வாழ்த்துக்கள்!
ஆமா பெரிய ஐநா சபை சந்திப்பு....
பொண்டாட்டி கொழம்பு அம்மா கொழும்புக்கு ஈடாகாது அப்படின்னு ஒருவன் ட்வீட் செய்வான் உடனே அது பாணந்த பகடனில் வரும்...அதுக்கு உடனே நீ பொண்டாட்டி குடுக்கும் போண்டா டீ சுவையே தநின்னு ரிப்ளை பன்னவுடன் பங்காளி சண்டை...உப்புக்கு பெறாத ஒரு சந்திப்பு...மெரீனா பீச்சில் எல்லாரும் சுண்டல் வாங்கி துன்னுட்டு ஒரே நேரத்தில் மெகா குசு விடுவதுதானே உங்க வேலை?மசுரு த்வீட்டார்..எவண்டா அதை கண்டுபிடிச்சது?
mattikittan marthandan :-)
Post a Comment