அன்புள்ள வலைப்பூவிற்கு,
மச்சினிக்கு தமிழில் முதல்படம் என்பதாலும், சந்தானம் இருப்பதால்
மினிமம் கியாரண்டி என்பதாலும் இஷ்டம் படத்தை பார்க்க இஷ்டப்பட்டேன். மொக்கைப்
படங்களை தெரிந்தே போய் பார்ப்பது எனக்கு புதுசில்லை என்றாலும்
இந்தப்படத்திற்கெல்லாம் இதுவே ஜாஸ்தி என்று பத்து ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு தேவி
பாரடைஸ் திரையரங்கின் முதல் வரிசையில் சென்று அமர்ந்துக்கொண்டேன். உள்ளே
நுழையும்போதே பிங்க் நிற ரொமாண்டிக் பேக்ரவுண்டில் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
இது எமைந்தி ஈ வேலா என்கிற தெலுகு படத்தின் தமிழ் பதிப்பாம். ஹீரோவும்
ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்து டைவர்ஸ் செய்துகொள்கிறார்கள். அப்புறம்
தங்கள் தவறை உணர்ந்து மறுபடியும் சேருகிறார்கள். இதுதான் படத்தின் கதை.
Actually, இது ஃபீல் குட் படங்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட
சித்தார்த் மாதிரியான ஹீரோ நடிக்க வேண்டிய படம். விமலிடம் போய், “பெட்ரோல் விலை
ஏழு ரூபாய் ஐம்பது பைசா ஏறிவிட்டதாம்” என்று சொன்னால் கூட அப்படியா என்று ஆற அமர
ஆரவாரமே இல்லாமல் கேட்பார் போல. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் மாவு மாதிரி
நடித்திருக்கிறார். நிறைய காட்சிகளில் இவருடைய “ரியாக்சன்ஸ்” துணை நடிகர் ராஜ்
கபூரை நினைவூட்டுகிறது. இந்த கொடுமையில் கதைப்படி விமல் ஐஐடியில் படித்த,
சாப்ட்வேர் என்ஜினீயராம். இங்கிலிபீஸ் அவருடைய வாயில் மாட்டிக்கொண்டு தவியாய்
தவிக்கிறது. கெட்ட கேட்டுக்கு தெலுகு பதிப்பில் நடித்தவரை இமிடேட் செய்வதற்கு வேறு
முயற்சிக்கிறார்.
கன்னுக்குட்டி காஜல் அகர்வாலின் தங்கை நிஷாதான் ஹீரோயின். இரண்டு
காட்சிகளில் தேவி பேரடைஸின் விசாலமான திரையில் பறந்து விரிந்து தெரிந்த நிஷாவின்
தொப்புளை பார்ப்பதற்கு பரவசமாகத்தான் இருந்தது. ஆனால் காஜல் அளவிற்கு முகப்பொலிவு
இல்லை. காஜலின் சிறப்பே அவருடைய உதடுகள்தான். அவற்றில் பாதி கூட நிஷாவிடம் இல்லை.
Lip augmentation ஏதாவது செய்துகொண்டால் தேவலை. பனிப்பிரதேசத்தில் ஆட்டம் போடும்
ஒரு பாடல்காட்சியில் சூடேற்றுகிறார். மற்றபடி நடிப்பையெல்லாம் இனிவரும் படங்களில்
காட்டினால்தான் உண்டு. ஆங்... விமலுடைய அம்மா ஒரு காட்சியில் சொல்வது போல
சேலையில்தான் அழகாக இருக்கிறார் மச்சினி...!
கலிகால மொக்கை திரைப்படங்கள் பலவற்றையும் ஒற்றை ஆளாக காப்பாற்றும்
ஆபத்பாந்தவனாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். ஆஹா ஓஹோ என்று
இல்லையென்றாலும் சந்தானம் நகைச்சுவை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு
தமிழ்ப்படம் என்று அவ்வப்போது நினைவூட்டிவிட்டு செல்கிறது. “துணிக்கடை ஓனரா
இருந்தாக்கூட குளிக்கும்போது அம்மணமா தான் குளிக்கணும்”, “கடவுள் கண்ணத்
தொறந்துட்டார்ன்னா இவ்வளவுநாள் அவரென்ன கோமா ஸ்டேஜ்லயா இருந்தாரு” போன்ற
தத்துபித்தூஸ், “எட்டாம் கிளாஸுக்குள்ள ஹெட்மாஸ்டர் நுழைஞ்ச மாதிரி” போன்ற உவமை
நகைச்சுவைகள், “டியூப் லைட்டா குண்டு பல்பா” போன்ற ஷார்ப் டயலாக்ஸ் என்று
வெரைட்டியாக கலக்குகிறார்.
ஹீரோயினின் தோழிகளாக வருபவர்கள் படுமொக்கையான செலக்ஷன்ஸ். பூ விற்கும்
அல்லது எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களை கண்முன்
நிறுத்துயிருக்கிறார்கள். (ஹரே பகவான்... இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இவ்வளவு
மொக்கையா இருக்காங்க....) இவர்கள் தவிர ஹீரோ, ஹீரோயினுடைய இரண்டாவது செட்டப்ஸ்,
பெற்றோர்கள், ஹீரோயினுடைய அத்தை என்று இன்னும் சில கேரக்டர்கள் இருந்து தொலைத்து
படத்தின் கடைசி அரைமணிநேரத்தில் மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என்று எழவெடுக்கிறார்கள்.
எந்த நேரத்தில் பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டே
திரையரங்கில் அமர வேண்டி இருக்கிறது. “தினக்கு தின தினா...” என்ற பாடல் மட்டும்
ஓரளவுக்கு ஓகே அதுகூட நிஷாவுக்காக மட்டும். டைரக்டரும் படக்குழுவினரும்
ப்ரொட்யூசர் காசில் நல்லா OATS சாப்பிட்டிருக்காங்கன்னு தெரியுது. “ஒரு தேநீரில்
காணாத சுவை உன் பெயரில் கண்டேன்” என்று சம்பந்தமே இல்லாத ஏதேதோ வரிகளுக்கு கூட
வெளிநாட்டு தெருக்களில் அரைடிராயர் போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள்.
படத்தின் ஒளி ஓவியம் ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த
படத்துடைய ரீ-பிரிண்ட் மாதிரி சொறி சொறியாக இருக்கிறது. டப்பிங்கும் நடிகர்களின்
வாயசைவுக்கு பொருந்தாமல் இருக்கிறது. முக்கியமாக முதல் பாதி முழுக்கவே ஏதோ லோ
பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பி-கிரேடு பிட்டுப்படத்திற்கு வந்துவிட்டோமோ என்று
சந்தேகப்பட தோன்றுகிறது.
நான் எழுதியிருக்குறத வச்சி படம் பாக்குறது ரொம்ப கஷ்டம்ன்னு மட்டும்
பயந்துடாதீங்க. இந்தமாதிரி படங்கள் தான் நமக்கு ஜாலிலோ ஜிம்கானா. நிறைய
காட்சிகளில் மனம்விட்டு சிரிக்க முடிந்தது. போதாத குறைக்கு பின்வரிசையில் இன்னொரு
ஜாலி கும்பல் அமர்ந்துக்கொண்டு கமெண்டுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். ஆனால்
ஆயிரம் பேர் அமரக்கூடிய திரையரங்கில் வெறும் ஐம்பது பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.
அதிலும் முப்பது பேர் பத்து ரூபா டிக்கெட்.
மொத்தத்துல இஷ்டம் – மொக்கைப் பட விரும்பிகளுக்கு சத்தியமா ஃபீல் குட்
படம்தானுங்க...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
25 comments:
என்ன சொல்லு காஜல் அப்பா எத்தன மச்சி நிச்சி ரெடி பண்ணாலும் காஜல் மாதிரி ஆ.. ஆப்.. எ.. அப்.. அப்படி ஒரு பிகர , அப்படி ஒரு பீச, அப்படி ஒரு லட்டு , அப்படி ஒரு ரசகுல்லாவா ரெடி பண்ணறது கஷ்ட்டம்தான் நெனைக்கிறேன் ,என்ன நா சொல்றது
கழுதைய அந்த வெள்ள குதிரைக்கு ரேட்டு என்ன தெரிஞ்ச வசதியாக இருக்கும் ,எவ்வளவு நாள்தான் நானும் கனவுலேயே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மச்சினி மேல – இஷ்டம்-பிட்டுபட விமர்சனம் போடுரிங்கனு வந்தா இஷ்டம் விமர்சனமா ட்ரைய்லர் நல்லா தான் இருந்துச்சு பாஸ்
மச்சினி செம நாட்டுகட்டை...போல! பத்து ரூபாய்க்கு பாயசமே கிடைக்காது குலோப்ஜாமுன் சாப்பிட்டு இருக்றேள்.....
//////மச்சினிக்கு தமிழில் முதல்படம் என்பதாலும்,////////
க்கும்...........
//////இரண்டு காட்சிகளில் தேவி பேரடைஸின் விசாலமான திரையில் பறந்து விரிந்து தெரிந்த நிஷாவின் தொப்புளை பார்ப்பதற்கு பரவசமாகத்தான் இருந்தது. ஆனால் காஜல் அளவிற்கு முகப்பொலிவு இல்லை. ////////
அதெல்லாம் இன்னும் ரெண்டு படத்துல சரி பண்ணிடுவானுங்கப்பு......... நம்ம டாகுடர் மொத படத்துல எப்படி அழகா இருந்தார்னு தெரியும் தானே?
/////காஜலின் சிறப்பே அவருடைய உதடுகள்தான். அவற்றில் பாதி கூட நிஷாவிடம் இல்லை. Lip augmentation ஏதாவது செய்துகொண்டால் தேவலை. /////////
யோவ் உதடைத்தான் சொல்றீங்களா இல்ல......... வேற ஏதாச்சுமா?
////// பூ விற்கும் அல்லது எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களை கண்முன் நிறுத்துயிருக்கிறார்கள். (ஹரே பகவான்... இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்காங்க....) //////////
என்ன ஒரு ஆணாதிக்கம்? மொக்கையிலும் முக்தி கிடைக்கும் தம்பி.............. பொறுமையா தேடுங்கோ......!
//////மொத்தத்துல இஷ்டம் – மொக்கைப் பட விரும்பிகளுக்கு சத்தியமா ஃபீல் குட் படம்தானுங்க...!/////////
போற போக்க பார்த்தா இனிமே வேணும்னே மொக்க படமா எடுப்பானுங்க போல இருக்கு..........?
ஹீரோயின் ஒருக்களித்து படுத்திருக்கும் படத்தை பதிந்ததற்கு நன்றி தோழர்
ரைட்டு கிளப்புங்க ...!
படத்துல எப்படியோ தெரியல. ஆனா ஹீரோயின் போஸ்ல நல்லாத் தான் இருக்காங்க.
#இந்த கொடுமையில் கதைப்படி விமல் ஐஐடியில் படித்த, சாப்ட்வேர் என்ஜினீயராம். இங்கிலிபீஸ் அவருடைய வாயில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறது#
மாடர்ன் கேரக்டரில் விமல் நிச்சயம் சொதப்புவார் என்று காலையில் தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ... நினைத்தது போலவே நடந்திருக்கிறது படம் பார்க்கலாமா ? வேண்டாமா என்ற கேள்விக்கும் உங்கள் விமர்சனத்தின் மூலம் நல்லபதில் கொடுத்ததற்கு நன்றி ... க்ளாஸ் விமர்சனம் ...
arumaiyaana vimarshanam...........
ஓகே பாஸ்.. ஆ.. குஜால்கா ஜிம்கான..
@ N.Mani vannan
// என்ன சொல்லு காஜல் அப்பா எத்தன மச்சி நிச்சி ரெடி பண்ணாலும் காஜல் மாதிரி ஆ.. ஆப்.. எ.. அப்.. அப்படி ஒரு பிகர , அப்படி ஒரு பீச, அப்படி ஒரு லட்டு , அப்படி ஒரு ரசகுல்லாவா ரெடி பண்ணறது கஷ்ட்டம்தான் நெனைக்கிறேன் ,என்ன நா சொல்றது //
நிதர்சனம்...
// கழுதைய அந்த வெள்ள குதிரைக்கு ரேட்டு என்ன தெரிஞ்ச வசதியாக இருக்கும் ,எவ்வளவு நாள்தான் நானும் கனவுலேயே ம்ம்ம்ம்ம்ம்ம்ம் //
ஏது லயணம் படத்துல சிலுக்கு முகத்தையும் ஒரு வெள்ளை குதிரையையும் மாத்தி மாத்தி காட்டுவாங்களே... அதுவா...
@ PREM.S
// மச்சினி மேல – இஷ்டம்-பிட்டுபட விமர்சனம் போடுரிங்கனு வந்தா இஷ்டம் விமர்சனமா ட்ரைய்லர் நல்லா தான் இருந்துச்சு பாஸ் //
இதெல்லாம் மார்கெட்டிங் டெக்னிக் பாஸ்...
@ வீடு சுரேஸ்குமார்
// மச்சினி செம நாட்டுகட்டை...போல! பத்து ரூபாய்க்கு பாயசமே கிடைக்காது குலோப்ஜாமுன் சாப்பிட்டு இருக்றேள்..... //
சுரேஷ்... டிக்கெட் ஒரு பேச்சுக்குத்தான் பத்து ரூபாய்... அதற்கு ஆன்லைன் புக்கிங் சர்வீஸ் டாக்ஸ் இருபது ரூபாய், இன்டர்வலில் வாங்கிய மிராண்டா டின் 50 ரூபாய், லேஸ் சிப்ஸ் 20 ரூபாய், பயணச்செலவு எல்லாம் சேர்த்து 120 ரூபாய்க்கு மேல ஆயிடுச்சு...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// க்கும்........... //
என்ன ஆரம்பத்துக்கே இப்படி முக்குறீங்க...
// அதெல்லாம் இன்னும் ரெண்டு படத்துல சரி பண்ணிடுவானுங்கப்பு......... நம்ம டாகுடர் மொத படத்துல எப்படி அழகா இருந்தார்னு தெரியும் தானே? //
கரெக்ட் தான்... ஏன் காஜலே மொத படத்துல மொக்கையா தானே இருந்தாங்க...
// யோவ் உதடைத்தான் சொல்றீங்களா இல்ல......... வேற ஏதாச்சுமா? //
சத்தியமா உதட்டை தான்... மீ யோக்கியன் ஹி ஹி...
// என்ன ஒரு ஆணாதிக்கம்? //
யோவ்... ஜனங்க கிட்ட போட்டு குடுக்குறியா...
// போற போக்க பார்த்தா இனிமே வேணும்னே மொக்க படமா எடுப்பானுங்க போல இருக்கு..........? //
இப்பவே நிறைய பேர் அப்படி இருக்காங்க ஜி...
@ யுவகிருஷ்ணா
// ஹீரோயின் ஒருக்களித்து படுத்திருக்கும் படத்தை பதிந்ததற்கு நன்றி தோழர் //
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸா... ம்ம்ம் நடத்துங்க...
@ வரலாற்று சுவடுகள்
// ரைட்டு கிளப்புங்க ...! //
நன்றி தல...
@ ஹாலிவுட்ரசிகன்
// படத்துல எப்படியோ தெரியல. ஆனா ஹீரோயின் போஸ்ல நல்லாத் தான் இருக்காங்க. //
சேலையில் வரும் சில காட்சிகளில் மட்டும் அழகாக இருக்கிறார் நண்பா...
@ ananthu
// மாடர்ன் கேரக்டரில் விமல் நிச்சயம் சொதப்புவார் என்று காலையில் தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ... நினைத்தது போலவே நடந்திருக்கிறது படம் பார்க்கலாமா ? வேண்டாமா என்ற கேள்விக்கும் உங்கள் விமர்சனத்தின் மூலம் நல்லபதில் கொடுத்ததற்கு நன்றி ... க்ளாஸ் விமர்சனம் ... //
அத ஏன் கேக்குறீங்க... அவர் இங்க்லீஷ் பேசலைன்னா கூட சாப்ட்வேர் என்ஜினியர்ன்னு நம்பியிருக்கலாம்... இன்னொரு விஷயம், அவர் ஐஐடியில் படித்தாருன்னு சொல்ல வேண்டிய அவசியமே கதையில் இல்லை...
@ வல்லத்தான்
// arumaiyaana vimarshanam........... //
நன்றி தல...
@ கோவி
// ஓகே பாஸ்.. ஆ.. குஜால்கா ஜிம்கான.. //
நன்றி பாஸ்...
Post a Comment