10 May 2012

Cannibal Ferox – யார் காட்டுமிராண்டிகள்...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முன்குறிப்பு: வன்முறையை விரும்பாதவர்கள் தயவுசெய்து தவிர்க்கவும்.

சில நாட்களுக்கு முன்பு என்னுடைய Cannibal Holocaust பற்றிய பதிவை படித்துவிட்டு ஆண் காளை (!!!) என்ற புதிய நண்பர் மெயிலியிருந்தார். வதை, வாதை போன்றவற்றை எழுத்தில் படித்தாலே அவர் பரவசநிலை அடைந்துவிடுவாராம். மேலும் கழுமரம் ஏற்றுவது, எண்ணைக்கொப்பறையில் பொறிப்பது, அவ்வாறு பொறிக்கும்போது காட்டுவாசிகள் கூடி கும்மாளம் போடுவது என்று அவர் சொல்வது எல்லாமே எனக்கே ராவாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் கூட சிலருடைய ரசனை இருந்து தொலைக்கிறது. Well, ரசனையே இல்லாத ஜடங்களாக இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

அவருடைய மெயிலை படித்ததும் மீண்டும் வெறியேறி இணையத்தில் தேடிக்கண்டுபிடித்தது தான் 1981ல் வெளிவந்த Cannibal Ferox. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் Cannibal படங்களின் புகழ் உச்சத்தில் இருந்திருக்கிறது. முதல்முறையாக 1972ம் ஆண்டில் Man from the deep river படத்தின் மூலமாக Umberto Lenzi என்ற இயக்குனர்தான் Cannibal ஆட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் 1977ம் ஆண்டு Ruggero Deodata இயக்கிய Last Cannibal World வெளிவந்ததும் ட்ரெண்ட் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இரு இயக்குனர்களும் Cannibal படைப்புகளின் அப்பாட்டாக்கர்கள். 1980ம் ஆண்டு Ruggero இயக்கிய Cannibal Holocaust பிரபலத்திலும் பிராப்ளத்திலும் சாதனை படைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே Umberto இயக்கியதுதான் இந்த Cannibal Forex.

“உண்மையிலேயே உலகத்தில் Cannibalism என்ற யிசம் இல்லவே இல்லை. அது ஐரோப்பியர்கள் தங்கள் காலணி ஆதிக்கத்தை செலுத்தவேண்டி பரப்பிய கட்டுக்கதை...” என்பது Cannibals பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை தயாரிக்கும் மாணவி க்ளோரியாவின் கருத்து. அதனினை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் பொருட்டு தன்னுடைய அண்ணனையும் தோழியையும் அழைத்துக்கொண்டு பராகுவே நாட்டைக் கடந்து அமேஸான் காடுகளுக்குள் நுழைகிறார்கள். வழக்கமான திகில் படங்களில் வருவது போலவே, ஆ... அந்த இடமா... அங்க போகாதீங்க... அங்க போனவங்க திரும்பி வந்ததே இல்லைன்னு எச்சரிக்கிறார்கள் லோக்கல் மக்கள். அதையும் மீறி நுழைபவர்கள் ஏற்கனவே அங்கே வைர, கஞ்சா வியாபார ஆசையில் காட்டுக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களை சந்திக்கிறார்கள். அவர்கள் இருவரும் உண்மையில் யார்...? உண்மையிலேயே Cannibalism இருக்கிறதா...? என்பதெல்லாம் மீதிக்கதை.

ஸோரா என்ற அழகான நடிகை இரண்டு காட்சிகளில் ஜோராக நிர்வாண தரிசனம் தருகிறார். ஆனால் அவற்றில் இரண்டாவது காட்சியை மட்டும் ரசிக்க முடியவில்லை. காரணம் பின்னர்...

இது, Cannibal Holocaust படத்தின் அப்பட்டமான நகல் என்றே சொல்லலாம். அதிகபட்சம் ஏழு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியாது. அதே கதை, அதே கருத்து, காட்சிகள் கூட கிட்டத்தட்ட அதேதான், அதை திரையில் காட்டிய விதத்தில் மட்டுமே Cannibal Ferox வேறுபடுகிறது. Cannibal Holocaustல் எப்பேர்பட்ட கொடூரமான காட்சியையும் கூச்சப்படாமல் காட்டுவார்கள். இந்த படத்தில் சில கொடூரமான காட்சிகளில், அந்த கொடூரத்தை அரங்கேற்றும் நபரின் முகபாவனையை மட்டும் காட்டுகிறார்கள். 

படத்திலிருந்து சில “ஸ்வாரஸ்யமான” காட்சிகள்:
- பாம்பு கீரியையும், சிறுத்தை குரங்கையும், உடும்பு பாம்பையும் சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள்.
- காட்டுவாசி ஒருவர் நல்லா ராஜ்கிரண் வக்கணையாக உட்கார்ந்து எலும்பு கடிப்பது போல அமர்ந்துக்கொண்டு பூ... சைஸில் இருக்கும் பெரிய புழுக்களை பிடித்து சாப்பிடுகிறார்.
- ஆமையொன்றை அப்படியே எரிகின்ற நெருப்பின் மீது குப்புற படுக்க வைத்து அதன் கை, கால், தலையை துடிதுடிக்க அறுத்தும் எரித்தும் கொள்கிறார்கள்.
- காட்டுவாசி ஒருவனை கட்டிவைத்து அவனுடைய கண்ணை நொண்டி, லுல்லாவையும் கதம் செய்கிறார்கள். இதே காட்சி பிற்பகுதியில் ஹீரோவுக்கு நடக்கிறது. அதாவது பழிக்கு பழி.
- ஒரு மனிதனுடைய நெஞ்சைக்கிழித்து உள்ளிருக்கும் பாகங்களை தங்களுக்குள் சண்டையில்லாமல் சமரசமாக பகிர்ந்து சாப்பிடுகிறார்கள்.
- நம்ம நிர்வாண நடிகை ஸோராவின் நிலைமை அதைவிட கொடுமையானது, அவருடைய இரண்டு முலைக்காம்புகளிலும் கொக்கி மாட்டி தொங்கவிட்டே சாகடிக்கிறார்கள்.
- இறுதியாக ஹீரோவின் தலையை சும்மா இளநீர் சீவுவது மாதிரி சீவி, தலைக்குள் இருக்கும் லொட்டு, லொசுக்கு சாமான்களை என்னவோ மலேசியாவில் அத்தோ சாப்பிடுவது போலவே சாப்பிடுகிறார்கள்.

இத்தனையையும் செய்துவிட்டு இறுதியாக, Cannibals என்பவர்கள் உண்மையிலேயே சகமனிதர்களையே கொன்று தின்னும் அளவிற்கு மோசமானவர்கள் அல்ல. ஆனால் அவர்களை அத்தகைய மூர்க்கநிலைக்கு ஆளாக்கியது நாகரீக மக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் என்ற கருத்தோடு படம் நிறைவுபெறுகிறது.

31 நாடுகளில் தடை செய்யப்பட்ட Cannibal Ferox நீங்கள் மட்டும் ஸ்பெஷலாக பார்ப்பதற்கு பதிவிறக்க இணைப்புகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 comments:

ராஜ் said...

கல்லுரி நாட்களில் இந்த மாதிரி படங்கள் விரும்பி பார்த்தேன்...தற்சமயம் இம்மாதிரி படங்கள் அவ்வளவு விருப்பம் இல்லை....

Philosophy Prabhakaran said...

@ ராஜ்
// கல்லுரி நாட்களில் இந்த மாதிரி படங்கள் விரும்பி பார்த்தேன்...தற்சமயம் இம்மாதிரி படங்கள் அவ்வளவு விருப்பம் இல்லை.... //

பாருங்க ராஜ்... லைப் நல்லா இருக்கும்...

Unknown said...

மொபைல்ல இந்த படத்தின் கொடூர காட்சிகளை நண்பர் ஒருவர் தந்தார்! ம்ம்! மனசு தைரியம் வேண்டும்

Thava said...

முன்னமே நீங்கள் பண்ணிய கேன்னிபல் பதிவை படித்திருக்கிறேன்..இந்த மாதிரி படங்களை பற்றி சில விடயங்களை இணையத்தில் படித்ததை தவிர பார்த்த அனுபவம் என்று ஒன்றுமே இல்லை.ஆசை இருந்தாலும் மன உறுதி வேண்டுமே சார்.சின்ன வயசுல இருந்தே இந்த ரத்தம், கொடூரம் சமச்சாரங்கள் நிறைந்த படம் என்றாலே பார்க்க மாட்டேன்.என்றாவது அதையும் மீறி ஆசைவந்தால் கட்டாயம் இப்படத்தை பார்க்கிறேன்.

மற்றப்படி நல்ல விமர்சனம் சார்..கேனிபலிஸம் குறித்த திரை தொடக்கத்தை கூறியது படிக்க மேலும் ஒரு சுவாரஸ்யத்தை தந்தது.. பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி சார்,

Mysterious Island - திரைப்பார்வை

சதீஷ் மாஸ் said...

கனிபேல் என்பது முழுக்க முழுக்க உண்மை என்று நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் படித்து இருக்கிறேன்...

Sivakumar said...

பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா....

Anonymous said...

ஏம்ப்பா, உனக்கு வேற வேலையே இல்லையா? இந்த மாதிரி படங்கள பாக்குறத விட்டுட்டு மாமனாரின் இன்பவெறி, மாயக்கா, பாப்பா போட்ட தாப்பா, டியுசன் டீச்சர் போன்ற உலகப்படங்களின் விமர்சனங்களை போட்டு அதற்கான லிங்க்கையும் கொடுத்தால் கிளுகிளுப்பா இருக்குமா, இல்ல ....

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// மொபைல்ல இந்த படத்தின் கொடூர காட்சிகளை நண்பர் ஒருவர் தந்தார்! ம்ம்! மனசு தைரியம் வேண்டும் //

இதுக்கே மெர்சலானா எப்படி தல...

Philosophy Prabhakaran said...

@ Kumaran
விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி குமரன்...

Philosophy Prabhakaran said...

@ சதீஷ் மாஸ்
// னிபேல் என்பது முழுக்க முழுக்க உண்மை என்று நான் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் படித்து இருக்கிறேன்... //

இது மாதிரி சமாச்சாரமெல்லாம் சொன்னா லிங்கோட சொல்லணும் தல...

Philosophy Prabhakaran said...

@ ! சிவகுமார் !
// பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா.... //

அவ்வளவு கேவலமாவா ஆயிட்டேன்...

Philosophy Prabhakaran said...

@ ஆரூர் மூனா செந்தில்
// ஏம்ப்பா, உனக்கு வேற வேலையே இல்லையா? இந்த மாதிரி படங்கள பாக்குறத விட்டுட்டு மாமனாரின் இன்பவெறி, மாயக்கா, பாப்பா போட்ட தாப்பா, டியுசன் டீச்சர் போன்ற உலகப்படங்களின் விமர்சனங்களை போட்டு அதற்கான லிங்க்கையும் கொடுத்தால் கிளுகிளுப்பா இருக்குமா, இல்ல .... //

யோவ்... நீங்கல்லாம் பதிவுலகத்துல பண்ற அளப்பறையை நான் சொல்ல ஆரம்பிச்சா பராசக்தி வசனம் மாதிரி வரும்...

Riyas said...

இதற்கு முன் நீங்க அறிமுகப்படுத்திய cannibal படத்த பார்த்தாச்சு இதையும் டவுன் லோடுக்கு போட்டாச்சு!! இனியும் இருந்தா தேடிச்சொல்லிங்க பார்த்திடுவோம்!!!!

Vadakkupatti Raamsami said...

யோவ் நீ கலிகுலா மாற்று sado 120 days of Sodom பாத்திருக்கியா?ஹீ ஹீ!அவை ஒன்லி பார் வயது வந்து Saw,Texas chain saw massacre போன்ற "சாத்வீக" படம் பாத்து பக்குவபட்டவர்களுக்கு மட்டும்

Vadakkupatti Raamsami said...

// பதிவுலக தனுஷ் மாதிரி திரியறய்யா.... //

ஐயோ பாவம் எப்படி இருந்த பிரபா இப்படி ஆகிப்போனானே!

'பரிவை' சே.குமார் said...

இப்படியுமா படம் எடுப்பார்கள்...

Philosophy Prabhakaran said...

@ Riyas
// இதற்கு முன் நீங்க அறிமுகப்படுத்திய cannibal படத்த பார்த்தாச்சு இதையும் டவுன் லோடுக்கு போட்டாச்சு!! இனியும் இருந்தா தேடிச்சொல்லிங்க பார்த்திடுவோம்!!!! //

அடுத்தடுத்து ஒரே மாதிரியான படங்கள் பார்ப்பதில்லை... அடுத்தது ஏதாவது சாப்டா, ரொமாண்டிக்கா பார்க்கலாம்ன்னு இருக்கேன்...

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// யோவ் நீ கலிகுலா மாற்று sado 120 days of Sodom பாத்திருக்கியா?ஹீ ஹீ!அவை ஒன்லி பார் வயது வந்து Saw,Texas chain saw massacre போன்ற "சாத்வீக" படம் பாத்து பக்குவபட்டவர்களுக்கு மட்டும் //

என்னய்யா சொல்றீரு... நீங்க சொன்ன படம் எதையுமே பார்த்ததில்லையே... Saw பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

@ சே. குமார்
// இப்படியுமா படம் எடுப்பார்கள்... //

பார்த்து சார்... அப்படிக்கா ஓரமா நடந்து போங்க... சட்டைல ரத்தக்கறை பட்டுட போகுது...

Vadakkupatti Raamsami said...

120 days of sodom பார்க்கும் முன் ஒரு எச்சரிக்கை.சற்று கல் மனம்(குறிப்பா செடிஸ்ட் மனப்பாங்கு உள்ளவர்கள்) மட்டுமே இதை பார்க்கலாம்!இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்!
**********************************
தீயில் கொதிக்கும் ஆமை.....
உஸ்ஸ்....இப்பவே நாக்கில் எச்சில் ஊறுதே!ஹீ ஹீ!
***********************************

// இப்படியுமா படம் எடுப்பார்கள்... //


சின்ன வயசா இருக்க சொல்ல இருந்தே ஆளவந்தான் நந்து மாதிரி வளர்ந்தவர்கள்(அடியேன் உட்பட)பார்ப்பதற்காக இதை எடுக்கிறார்கள்!ஹீ ஹீ பிரபா கூட அப்படித்தான்னு கேள்விப்பட்டேன்...

Anonymous said...

hostel படத்தை பார்க்கையில் அதில் ஒரு காட்சியில் கண்ணை நோண்டப் போகிறான் என்று தெரிந்ததும் அடுத்த ரூமுக்கு ஓடிப்போன ஆளுநானு.பதட்டம் தணிய பீரு தேவைப்பட்டுச்சு.சத்தியமா விமர்சனம் மட்டும்தேன் படிக்கமுடியும்.

ஹாலிவுட்ரசிகன் said...

இந்தப் படம் எல்லாம் பார்க்கும்போது ஒருவகை அருவருப்பு மட்டுமே எனக்கு வந்தது. அந்த ஒரு இடத்தில் காட்டுவாசியின் ப்ரைவேட்டை கதம் செய்யும்போது மட்டும் திக் என்றது.

ஆனால் கொஞ்சம் இந்த டைப் படங்கள் வேண்டுமானால் இவற்றை கொஞ்சம் மனசை திடப்படுத்திண்டு ட்ரை பண்ணிப் பாருங்க. சும்மா அதிரும் ...

1. Saw series
2. Hostel series
3. Caligula
4. 120 days of Sodom
5. I spit on your grave
6. Martyrs
7. À l'intérieur
8. A Serbian Film

Philosophy Prabhakaran said...

@ வடக்குபட்டி ராம்சாமி
// சின்ன வயசா இருக்க சொல்ல இருந்தே ஆளவந்தான் நந்து மாதிரி வளர்ந்தவர்கள்(அடியேன் உட்பட)பார்ப்பதற்காக இதை எடுக்கிறார்கள்!ஹீ ஹீ பிரபா கூட அப்படித்தான்னு கேள்விப்பட்டேன்... //

நானும் ஆளவந்தான் நந்து மாதிரிதான் தல... ஆனா சித்தி ஃப்ளாஷ்பேக் இல்லை...

Philosophy Prabhakaran said...

@ Chilled Beers
// hostel படத்தை பார்க்கையில் அதில் ஒரு காட்சியில் கண்ணை நோண்டப் போகிறான் என்று தெரிந்ததும் அடுத்த ரூமுக்கு ஓடிப்போன ஆளுநானு.பதட்டம் தணிய பீரு தேவைப்பட்டுச்சு.சத்தியமா விமர்சனம் மட்டும்தேன் படிக்கமுடியும். //

அவ்வளவு வீக்கான ஆளா நீங்க...? So sad...

Philosophy Prabhakaran said...

@ ஹாலிவுட்ரசிகன்
// 3. Caligula
4. 120 days of Sodom //

வடக்குப்பட்டியும் நீங்களும் ஒருசேர பரிந்துரைப்பதால் இந்த இரண்டு படங்களில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்...