அன்புள்ள வலைப்பூவிற்கு,
தும்மலின் போது “ஹச்சம்மா... ஹச்சப்பா...” என்று பெற்றவர்களின்
பெயரைச் சொல்லி தும்ம வேண்டும். அதே மாதிரி ஒற்றைப்படை எண் தும்மல்கள் கூடாது
என்றெல்லாம் எனக்கு சின்ன வயதிலேயே சொல்லிக்கொடுத்திருந்தார் என் பெரியம்மா. என்
கெரகம்... அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லாததால் பெரியம்மாவின் அறிவுப்பூர்வமான
தகவல்களை கேட்டுத்தொலைக்க வேண்டியிருந்தது. இப்போது அலுவலக சூழலில் அப்பா அம்மா
என்று தும்முவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அதற்கு பதிலாக தும்மி
முடித்ததும் எக்ஸ்க்யூஸ் மீ சொல்கிறார்கள். பெரியம்மாவிடம் சொன்னால் ஒருவேளை
தும்மியவருடைய அம்மாவின் பெயர் எக்ஸ்க்யூஸ் மீயாக இருக்குமோ என்று
சந்தேகப்படுவார். மேலை நாடுகளில் கூட முன்பொரு காலத்தில் இதுபோன்ற மொன்னையான
லாஜிக்குகள் இருந்து வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றில் ஒன்று,
தும்மும்போது கண்களை திறந்துக்கொண்டிருந்தால் கருவிழிகள் வெளியே வந்து
விழுந்துவிடுமாம். அடுத்தமுறை தும்மும்போது முயற்சி செய்து பாருங்கள்...!
ஏதாவதொரு விபத்து / சதி நடந்துவிட்டால் கொஞ்ச நாளைக்கு அதுகுறித்த
விழிப்புணர்வுடன் இருப்பது மனித இயல்பு. உதாரணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்து
நடந்ததும் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, குண்டு வெடிப்பு
சம்பவங்களுக்குப்பின் ரயில் நிலையங்களில் மனைவி செய்த மைசூர் பாகை சோதனை செய்வது. வாழ்க்கை
ஒரு வட்டம். கொஞ்சநாளில் மறந்துவிடுவோம், மறுபடியும் குண்டுவெடிக்கும், மறுபடியும்
தீவிர சோதனை and so on. நல்லகாலம், பூகம்பம் மட்டும் ஒரேயடியாக தீர்த்துக்கட்டாமல்
அவ்வப்போது ட்ரைலர் காட்டி நம்மை அலர்ட் செய்கிறது. நாலரை ரிக்டருக்கே நாமெல்லாம்
மிரளுகிறோம், ஆனால் அதிகபட்சமாக 1960ம் ஆண்டு சிலே நாட்டில் 9.5 ரிக்டர் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 9.3, 2004ல் இந்தியப்பெருங்கடலில்
ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலெல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன்பு, 1556ம் ஆண்டு சீனாவில்
ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் அதிகபட்சமாக (வரலாற்றில் பதியப்பட்டு) எட்டு
லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை விழுங்கியிருக்கிறது. அங்குள்ள மக்கள் “யோடோங்”
எனப்படும் குகை வீடுகளில் (பார்க்க படம்) வாழ்ந்து வந்ததால் தப்பிக்க முடியவில்லை.
உலகெங்கிலும் கடைசி முப்பது நாட்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் இந்த இணையதளத்தில்
அப்டேட் செய்யப்படுகிறது.
சன் டிவியில் சனிக்கிழமை இரவுகளில் டப்பிங் செய்யப்பட்ட ஹாரர் படங்களை
ஒளிபரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன். கடந்த வாரங்களில் சில கொரிய திகில்
படங்கள் மொக்கையாகவே இருந்தாலும் எங்கள் வீட்டில் பார்த்துவிடுவார்கள். சென்ற
வாரம் கோத்திகா என்ற படத்தை பார்க்க நேர்ந்தது. நல்லதொரு திகில் படம் என்று சொல்ல
முடியாவிட்டாலும் நல்லதொரு த்ரில்லர் படமென்று சொல்லலாம். பதிவிறக்க
லிங்க்.
சற்று நேரத்திற்கு முன் கே டிவியில் “கலக்குற சந்துரு” என்ற மொக்கைப்
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்து பூரித்துக்கொண்டிருந்தேன். ஸ்லம்டாக்
மில்லியனர் படத்தின் கதையை வைத்துக்கொண்டு அதேமாதிரி ஏதோ செய்ய முயற்சி
செய்திருக்கிறார்கள். ப்ரிட்டிஷ் மகாராணி ஆட்சிக்கு வந்து வைர விழா கொண்டாடுவதால்,
அலுவலகத்தில் விடுமுறை விட்டு கே டிவி மொக்கை படங்களை எல்லாம் பார்த்து தொலைக்க
வேண்டியிருக்கிறது. இதுவாவது பரவாயில்லை, இரவு சீரியல்களை பார்க்க அல்லது பக்கத்து
அறையில் இருந்தால் குறைந்தபட்சம் கேட்கவாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலே குலை
நடுங்குகிறது.
After all, ஏர் கண்டிஷனர் கண்டுபிடித்து நூற்றிப்பத்து வருடங்கள் தான்
ஆகியிருக்கிறது. அதிலும் இந்தியாவிற்கு புழக்கத்திற்கு வந்து இருபது வருடங்கள் கூட
இருக்காது. ஆனால் சிலர் பிறந்ததிலிருந்தே ஏ/சி காற்றை மட்டுமே சுவாசித்து போல
போடும் சீன் இருக்கே அப்பப்பா...! இந்தமாதிரி சீன் போடுபவர்களை டைம் மெஷினில்
வைத்து சீலிங் ஃபேன் கூட இல்லாத காலத்திற்கு கடத்திவிட வேண்டும் போல இருக்கிறது.
மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் “பங்கா” என்ற பெயரில் பனை ஓலையை கயிற்றில் கட்டி
தொங்கவிட்டு அதனை கூலிக்கு ஆள் வைத்து ஆட்டியிருக்கிறார்கள். அதுவும் கூட
சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பவர்களுக்கு மட்டும்தான்.
ட்வீட் எடு கொண்டாடு:
விலை சொல்லும் போதே 2 ரூபாய் ஏத்தி சொல்லி குறைக்கிறதுக்கு,பாண்டிபஜார் நடைபாதை வியாபாரியை கூட
பெட்ரோலியம் மினிஸ்டராகலாம்!!
ஆணவம் ஓர் அற்புதமான
இசை என அவதானிக்கிறேன். எல்லோரையும் ஆட வைத்து விடுகிறது!
டக்கராக உடை அணிந்திருக்கும்
அப்பாவை பார்த்து "அப்பாடக்கரா இருக்கீங்க!!" என்று தான் சொல்ல
முடியும்!
100 கி.மீ. வேகத்தில் நடந்து கொண்டே கைகளை
கண்டமேனிக்கு வீசுவது தான் டான்ஸ்..! #ரஜினி அகராதி
Lot of people ask me about GOD. Am I
an atheist? No. I am a firm believer of god except my work is my god.
சில சமயங்களில், சொல்கிற மனிதரை நமக்கு பிடிக்காவிட்டாலும் சொல்லும்
விஷயம் சரியாகவே இருக்கிறது. வழக்கு எண்: 18 / 9 பற்றி மிஷ்கின்...!
சற்றே நீளமான குறும்படம்தான், ஆனாலும் அலுக்கவில்லை. இதனை
பார்த்துவிட்டு எனக்குள்ளிருக்கும் இருவேறு முரண்பட்ட நபர்களும் சண்டையிட்டு
கொள்கிறார்கள். குறும்படத்தில் (குறும்புப்படத்தில் அல்ல) லிப் கிஸ் சீன் வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
37 comments:
OK OK
////// ப்ரிட்டிஷ் மகாராணி ஆட்சிக்கு வந்து வைர விழா கொண்டாடுவதால், அலுவலகத்தில் விடுமுறை விட்டு/////////
பார்ரா.............?
/////மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் “புங்கா” என்ற பெயரில் பனை ஓலையை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு////////
பங்கான்னு நினைக்கிறேன்
இப்பல்லாம் கவர்ச்சி படத்த விட்டுட்டு வீடியோ போட ஆரம்பிச்சிட்டீங்க........ ம்ம்ம்...!
@ சமுத்ரா
// OK OK //
நன்றி சமுத்ரா... எனக்கும் satisfaction இல்லைதான்... அடுத்தமுறை இன்னும் பெட்டரா முயற்சி பண்றேன்...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// பங்கான்னு நினைக்கிறேன் //
ஓ அப்படியா... மாத்திடுறேன்... ஆங்கிலத்தில் punkha என்றிருந்ததால் குழம்பிவிட்டேன்...
// இப்பல்லாம் கவர்ச்சி படத்த விட்டுட்டு வீடியோ போட ஆரம்பிச்சிட்டீங்க........ ம்ம்ம்...! //
யோவ் அது அந்தமாதிரி வீடியோ இல்லைய்யா...
மிஸ்கின் செம டமாசுப்பா...!!
//இப்போது அலுவலக சூழலில் அப்பா அம்மா என்று தும்முவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது//அப்படியா பாஸ் இதுல்ல என்ன இருக்கு அப்பா அம்மானு சொல்றது தானா வரதுன்னு தான் நினைக்கிறேன்
இன்னாபா சரக்கு லோக்கலா?
இன்னிக்கு முக்கியமா சொல்ல வேண்டியது ரெண்டு வீடியோ பத்திதான்...
முதல் வீடியோ மிஸ்கின் என்னனமோ சொன்னாரு.. ஒத்துக்கலாம்.. பட் ஏதோ ஒரு நெருடல் அதுல இருக்கு.. ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன்.. அதுக்கு அந்த வீடியோவில் இருந்து கொஞ்சம் பாயிண்ட்ஸ் கெடச்சிருக்கு.. சீக்கிரம் பிரசுரிக்கிறேன்..
ரெண்டாவது உண்மையில் ஒரு மிக நேர்த்தியான குறும்படம்.. எத்தனை பேரால் ஏற்று கொள்ள முடியுமென தெரியல...
(ஜொள்ளு போடல ன்னு இருந்த பீலிங்க மாயா புள்ள சரி பண்ணிருச்சு...ஹ்ம்ம்..)
@ ! சிவகுமார் !
// மிஸ்கின் செம டமாசுப்பா...!! //
அதான் நானே சொல்லிட்டேனே... அவரு சொல்ற மெசேஜை கேளுய்யா...
@ PREM.S
// அப்படியா பாஸ் இதுல்ல என்ன இருக்கு அப்பா அம்மானு சொல்றது தானா வரதுன்னு தான் நினைக்கிறேன் //
ஹலோ பாஸ்... நான் அம்மா அப்பான்னு சொல்றது பைத்தியக்காரத்தனமா இருக்குன்னு சொல்லல... தும்முனதுக்கு அப்புறம் ஏன் சொல்லணும்ன்னு தான் கேக்குறேன்...
@ மயிலன்
// இன்னாபா சரக்கு லோக்கலா? //
சட்டியில இருக்குறது தானே அகப்பையில வரும்...
// முதல் வீடியோ மிஸ்கின் என்னனமோ சொன்னாரு.. ஒத்துக்கலாம்.. பட் ஏதோ ஒரு நெருடல் அதுல இருக்கு.. ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன்.. அதுக்கு அந்த வீடியோவில் இருந்து கொஞ்சம் பாயிண்ட்ஸ் கெடச்சிருக்கு.. சீக்கிரம் பிரசுரிக்கிறேன்.. //
சூப்பர்... காத்திருக்கிறேன்...
// ரெண்டாவது உண்மையில் ஒரு மிக நேர்த்தியான குறும்படம்.. எத்தனை பேரால் ஏற்று கொள்ள முடியுமென தெரியல... //
நான் ரெண்டுங்கெட்டான் மனநிலையில இருக்கிறேன்... லாங் ஜம்ப் நாகரிக வளர்ச்சியா தோணுது...
// (ஜொள்ளு போடல ன்னு இருந்த பீலிங்க மாயா புள்ள சரி பண்ணிருச்சு...ஹ்ம்ம்..) //
ஆமாம் தல... அந்த குறும்படத்தில் வரும் ஃபிகர்களிலேயே மாயா தான் சூப்பர்...
மிஸ்கின்.. ஆவ்வ்..
என்னது குறும்படத்துலயும் கிஸ் அடிக்கிறாங்களா..
லோகம் எவ்வளவு முன்னேறிடுத்து பார்த்தியலா?
"சில சமயங்களில், சொல்கிற மனிதரை நமக்கு பிடிக்காவிட்டாலும் சொல்லும் விஷயம் சரியாகவே இருக்கிறது"
உண்மைதான்... படத்தை மக்கள் ஏற்கவில்லை என்ற உண்மையை சரியாக சொல்லி இருக்கிறார். மற்றபடி காமெடி படம் எடுப்பது சுலபம் என்பது போல அவர் பேசி இருப்பது பிதற்றல்.
Hi I am new to blog. I Wish to type in tamil but i dont how to type in tamil. Mostly I read all your blog writings. Congratulations.
மிஸ்கின்னு இப்படி தண்ணியடிச்சவன் மாதிரி உளறாம அழகா சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் பேர் இவரு சொல்வதை கவனித்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. சீரியஸிலும் காமெடி காட்டுறாரே.
நல்ல தகவல்கள், பங்கா எனக்குத் தெரிந்து எழுபதுகளில் தாலுக்கா அலுவலகங்களில் பார்த்த நியாபகம்.
@ கோவி
// மிஸ்கின்.. ஆவ்வ்.. //
என்னய்யா... ஏப்பம் விடுறீரு...
@ Rizi
// என்னது குறும்படத்துலயும் கிஸ் அடிக்கிறாங்களா..
லோகம் எவ்வளவு முன்னேறிடுத்து பார்த்தியலா? //
கிஸ் மட்டுமில்லை ரிசி... படத்தை பார்த்தீங்கன்னா லோகம் எவ்வளவு முன்னேறியிருக்குன்னு புரியும்...
@ பார்வையாளன்
// உண்மைதான்... படத்தை மக்கள் ஏற்கவில்லை என்ற உண்மையை சரியாக சொல்லி இருக்கிறார். மற்றபடி காமெடி படம் எடுப்பது சுலபம் என்பது போல அவர் பேசி இருப்பது பிதற்றல். //
ஹி ஹி உண்மைதான் பார்வைஜி... வழக்கு எண் படத்தை மக்கள் ஏற்கவில்லை என்பது மக்களின் மீதுள்ள தவறு... படைப்பாளியின் மீதுள்ள தவறு அல்ல...
காமெடி படங்கள் எடுப்பது உண்மையிலேயே சுலபம்தான்... ஆனால் அவற்றை பார்த்து மக்கள் சிரிப்பது தான் கடினம்...
@castrobharathi
// Hi I am new to blog. I Wish to type in tamil but i dont how to type in tamil. Mostly I read all your blog writings. Congratulations. //
வெல்கம் தலைவா... தமிழில் டைப்புவது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல...
http://www.google.com/ime/transliteration/
இந்த இணைப்பில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்...
@ ஹாலிவுட்ரசிகன்
// மிஸ்கின்னு இப்படி தண்ணியடிச்சவன் மாதிரி உளறாம அழகா சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் பேர் இவரு சொல்வதை கவனித்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. சீரியஸிலும் காமெடி காட்டுறாரே. //
மிஷ்கின் கிகுஜிரோவை சுட்டபோது பாதி போச்சு... பதிவர்களை பத்தி தரக்குறைவா பேசினதும் மீதி போச்சு... இனி அவர் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் பதிவர்கள் கேட்கமாட்டார்கள்...
@ கும்மாச்சி
// நல்ல தகவல்கள், பங்கா எனக்குத் தெரிந்து எழுபதுகளில் தாலுக்கா அலுவலகங்களில் பார்த்த நியாபகம். //
நன்றி கும்ஸ்... நானும் கூட பெரியார் திரைப்படத்தின் ஒரு காட்சியில் பார்த்த ஞாபகம்...
\\மேலை நாடுகளில் கூட முன்பொரு காலத்தில் இதுபோன்ற மொன்னையான லாஜிக்குகள் இருந்து வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றில் ஒன்று, தும்மும்போது கண்களை திறந்துக்கொண்டிருந்தால் கருவிழிகள் வெளியே வந்து விழுந்துவிடுமாம். அடுத்தமுறை தும்மும்போது முயற்சி செய்து பாருங்கள்...!\\ நீயே முயன்றாலும் கண்ணைத் திறந்து கொண்டே தும்ம முடியாது- ன்னு எங்கேயோ படிச்சேனே............
\\மனைவி செய்த மைசூர் பாகை \\ எதிரிகளை அடித்தே தாக்கி கொல்ல கூடிய ஆயுதம் வைத்திருந்தாக கைது செய்யலாம்.
\\சிலர் பிறந்ததிலிருந்தே ஏ/சி காற்றை மட்டுமே சுவாசித்து போல போடும் சீன் இருக்கே அப்பப்பா...!\\ வீட்டில ஃபேன் கூட இருக்காது. ஆளு கரிச்சட்டி. ஏ/சிபார்த்தே இருக்க மாட்டா. ஏதோ காண்டிராக்டில் வேலைக்கு வந்தாள். அடேங்கப்பா. அதுக்கப்புறம் எப்பவும் 17 டிகிரி தான் இருப்பேன், உடம்பு கருத்திடும்............. அப்படின்னு கம்பனி காசில் நல்லா தாளிக்க ஆரம்பிச்சிட்டா. தாங்க முடியலைடா சாமி.
பிரபா குறும்படம் பார்தேன்....
நல்ல கான்செப்ட்......
ஹேராம் படம் மாதிரியே தமிழ்-ல எடுக்காம வேற எதோ மொழில எடுத்திருக்காணுக.......
அதான் ஒண்ணுமே பிரியலை.....
\\நம்பியாரு @Nambiyaaru
100 கி.மீ. வேகத்தில் நடந்து கொண்டே கைகளை கண்டமேனிக்கு வீசுவது தான் டான்ஸ்..! #ரஜினி அகராதி\\ரஜினி காலை வாருவது தான் உனக்கு அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே!!
\\Lot of people ask me about GOD. Am I an atheist? No. I am a firm believer of god except my work is my god.\\இந்த உழைப்பாளிங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி..........
Gilma Short film!! lemme see......
@ Jayadev Das
// நீயே முயன்றாலும் கண்ணைத் திறந்து கொண்டே தும்ம முடியாது- ன்னு எங்கேயோ படிச்சேனே............ //
தெரியும் சார்... அதற்காகத்தான் முயற்சி செய்து பார்க்கச் சொன்னேன்...
// எதிரிகளை அடித்தே தாக்கி கொல்ல கூடிய ஆயுதம் வைத்திருந்தாக கைது செய்யலாம். //
அண்ணிகிட்ட போட்டு கொடுக்குறேன்... இருங்க...
// வீட்டில ஃபேன் கூட இருக்காது. ஆளு கரிச்சட்டி. ஏ/சிபார்த்தே இருக்க மாட்டா. ஏதோ காண்டிராக்டில் வேலைக்கு வந்தாள். அடேங்கப்பா. அதுக்கப்புறம் எப்பவும் 17 டிகிரி தான் இருப்பேன், உடம்பு கருத்திடும்............. அப்படின்னு கம்பனி காசில் நல்லா தாளிக்க ஆரம்பிச்சிட்டா. தாங்க முடியலைடா சாமி. //
"காற்றுள்ள" போதே தூற்றிக்கொள் வகையறா போல...
// ரஜினி காலை வாருவது தான் உனக்கு அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே!! //
டிவிட்டர்லயும் நம்மள மாதிரி சிலர் இருக்காங்க... அதான் தேடி கண்டுபிடிச்சு போட்டேன்...
// இந்த உழைப்பாளிங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி.......... //
ஹி ஹி ஹி... கூல்...
// Gilma Short film!! lemme see...... //
கில்மாவெல்லாம் இல்ல சார்...
@ NAAI-NAKKS
// பிரபா குறும்படம் பார்தேன்....
நல்ல கான்செப்ட்......
ஹேராம் படம் மாதிரியே தமிழ்-ல எடுக்காம வேற எதோ மொழில எடுத்திருக்காணுக.......
அதான் ஒண்ணுமே பிரியலை..... //
ஹி ஹி ஹி... நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க...
வழக்கு எண்...
யாரு? தியேட்டருக்கு போறாங்க...............ஓட வைக்க வேண்டிய படம்தான்....
என்னமா ஜிந்திக்கிறாங்க....இதுல காந்தி கதை வேறயா மிஸ்கினு சாருக்கு ஹிஹி!
இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசம்னு நினைக்கிறேன்...
நிறைய வாசிச்சிருக்கீங்கன்னு தோணுது...
பழசு ரொம்ப பிடித்தது...
Post a Comment