26 June 2012

பிரபா ஒயின்ஷாப் – 26062012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தூக்கம் வராமல் தவித்த ஒரு பின்னிரவில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டைகர் விஷ்வா என்ற டப்பிங் படத்தை பார்த்தேன். எல்லாம் காஜலுக்காக. படம் சூரமொக்கை என்பது அறிந்ததே. ஆனால் காஜலும் மொக்கையாக இருந்தது எ.கொ.ச.இ. வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என்று காஜல் தலையில் ஒரு மண்சட்டியை கவிழ்த்துவைத்து முடி வெட்டியிருக்கிறார்கள். ஒரு மார்வாடி ஃபிகரை ஏர்வாடி ஃபிகராக மாற்றிய எருமையை டைகர் விஷ்வா படத்தின் இயக்குனருக்கு கொடுக்கலாம். க்ளைமாக்ஸுக்கு முன்னாடி வந்த தீவானா... தீவானா... பாடல் மட்டும் நம் உணர்ச்சிகளுக்கு தீவனம் போடுகிறது. 

மீண்டும் ஒரு புத்தக வெளியீட்டிற்காக “பெண் தொடா எழுத்தாளர்” கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள். விழாவில் பதிவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையிலேயே இருந்தது அதிர்ச்சி. நாசருடைய பேச்சு நேர்மையாகவும் கேட்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது. இருந்தாலும் சிலருடைய பெயரை நேரடியாக குறிப்பட முடியாத தர்மசங்கடத்துடனேயே பேசினார். நாசர், பிரகாஷ்ராஜ், மணிவண்ணன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு தொடர்ந்து தயிர் சாதம் மட்டுமே போட்டு வெறுப்பேற்றி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.

இன்னொரு ஹாட் நியூஸ், எங்கிருந்து சுட்டோம்ன்னு கண்டுபிடிக்கவே முடியாதுன்னு சவால் விட்ட கேபிளுக்கு ஒரு பல்பு...!

யூரோ கப் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. நாக் அவுட் போட்டி என்பதால் பெனால்டி ஷூட் முறை கையாளப்பட்டிருக்கிறது. ஆங்கே ஒரு இங்கிலாந்து ரசிகர் இத்தாலி வீரரை திசை திருப்பும் பொருட்டு தன்னுடைய பப்லுவை எடுத்து வெளியே காட்டியிருக்கிறார். ம்ஹூம்... பப்லுவை பார்த்தும் கூட இத்தாலி வீரர்கள் கவனம் சிதறாமல் 4-2 என்று அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டார்கள். நல்லவேளையாக பந்து மட்டையை பதம் பார்க்கவில்லை.

பழனியப்பா பிரதர்ஸ் வெளியீட்டில் சென்னையைப் பற்றிய அரிய பெரிய தகவல்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படும் மதராசப்பட்டினம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இரவல் தந்தவர் அஞ்சாசிங்கம். அவர்களுடைய வெளியீடு என்பதாலோ என்னவோ கோனார் உரையை படித்தது போலவே இருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யமான தகவலுக்காக வறட்சியான பல பக்கங்களை படிக்க வேண்டி இருக்கிறது. முடிந்தால் சுவையான தகவல்களை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

பில்லா 2 படத்தின் சென்சார் சான்றிதழின் சாஃப்ட் காப்பி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. A சான்றிதழ். 128 நிமிட படம். “மயிறு”, “லொட்டை”, “ஓத்தா” போன்ற வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன. பாடல் காட்சியொன்றில் நடிகையின் மார்கச்சை விலகிய ஷாட்டுகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே புகை, மது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அநேகமாக ஜூலை 13 திருவிழா என்று நினைக்கிறேன்.

ட்வீட் எடு கொண்டாடு:
கட்டிப்பிடிச்சு ஹீரோயின் உதட்ட கடிச்சா அது கமல்., ஹீரோயின கட்டிப்பிடிச்சு தன் உதட்ட தானே கடிச்சுகிட்டா அது எம்.ஜி.ஆர் !

என்றைக்கோ வரப்போகும் மரணத்தை விட நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாய் இருக்கிறது. #ஆபீஸ்

சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ஸ் அக்ரஹாரம் ஸ்பெஷல் பாத்தேன். அடுத்து தேவர், கவுண்டர், வன்னியர் ஸ்பெஷல் பார்க்க ஆவல்! நாடு உருப்படும்! #சீ

ஒரு விரலை காட்டிட்டு ரெண்டுல ஒண்ணு தொடுன்னு சொல்றதே இந்த கிளைன்ட்டுக்கு வேலையா போச்சி :-(

One thing for sure;very proud as a DMKian to see so many defending tamizh mozhi..if not for Thalaivar,this would not have been possible! :)

மனிதர்களுக்கு தான் 6 அடி, தேவதைகளுக்கு மட்டுமது 70 அடியோ? மஹி....

தமிழ்ப்படங்களில் சேலை, தாவணி, சுடிதார் என படுபாந்தமாக காட்சிதரும் ரம்யா நம்பீசன் சமீபத்தில் வெளியான பேச்சிலர் பார்ட்டி என்ற மலையாள படத்தில் தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடித்திருக்கிறார். தமிழில் மட்டும் ஏனிப்படி....? என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் நாம்...??

பாண்டிச்சேரி சென்றிருந்தபோது என் கைரேகையை பார்த்து பல உண்மைகளை புட்டு புட்டு வைத்த கொசக்சி பசப்புகழ் ஜோசியக்காரர்...! ஆடியோவுக்கு வீடியோவுக்கும் ஏதோ சண்டையாம். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

அப்படி ஒன்றும் பெரிய காமநெடி இல்லையென்றாலும் மெக்சிகோ சலவைக்காரி என்ற வசீகரமான தலைப்பை வைத்துக்கொண்டே வாசகர்களுக்கு விளையாட்டு காட்டினார் வாத்தியார். இப்போது பக்கத்து வீட்டு பப்பு கூட மெ.ச ஜோக்கை ஒப்பிக்கிறான். அதே மாதிரி இந்தியன் படத்தில் திராட்சை பழ ஜோக் ஒன்னு இருக்கு’ன்னு கடைசி வரைக்கும் சொல்லாமலே விடுவார் கமல். அதுவும் கூட வாத்தியாரின் வேலையாகத்தான் இருக்கும். திராட்சை பழ ஜோக் தேடலில் கிடைத்த இன்னொரு ஜோக்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

45 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ட்வீட்களை ரசித்தேன். நன்றி !

Unknown said...

அப்படியே கலகலப்பா காப்பி அடிச்சு படம் எடுத்துருக்காய்ங்களே இந்த ஜெர்மன்காரய்ங்க ,ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா

Unknown said...

“பெண் தொடா எழுத்தாளர்” என்ன கொடுமை சார் இது...?

Unknown said...

ரம்யா நபீசனும் மட்டும் அல்ல பல நடிகைகள் தன சொந்த மாநில மக்களுக்காக ஸ்பெஷல் தரிசனம் குடுத்திருக்கிறார்கள், இது சம்பந்தமாக நான் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் பல தரிசங்களை காண முடிந்தது .ம் ம் ம் காலங்காலமாய் தமிழன் தலையில் மொளகாய் அரைப்பதே எல்லோருக்கும் வேலையாக போய்விட்டது .இதை விட வேறு என்ன அவமானம் இருக்க முடியும் நமக்கு .என்னதான் ஆட்டம் போட்டாலும் ஓடமும் ஒருநாள் வாந்தியில் ச்சே இது வண்டியில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று மனத்தை தேற்றிக்கொண்டு இனிவருகாலங்களிலாவது தமிழனாகிய நாம் ஏமாறாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க படவேண்டும் என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிகொள்கிறேன் .

Prem S said...

ரெண்டு தாரம் னு சொன்னதும் உங்க முகத்துல உதடுள்ள வர்ற புன்னகைக்கு காரணம் என்னவோ

ராஜ் said...

இங்கிலாந்து மாதிரி ராசி இல்லாத அணியை நீங்க பார்க்கவே முடியாது.. மறுபடியும் நிரூபணம் ஆகிருச்சு..
இன்னைக்கு ஒயின்ஷாப் கொஞ்சம் மந்தமா இருக்குற மாதிரி தோணுது எனக்கு..

முத்தரசு said...

காக்டெயில் கிக்கு கொஞ்சம் கம்மி தான்..... ஒக்கே....யு கன்டீநீவ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என்று காஜல் தலையில் ஒரு மண்சட்டியை கவிழ்த்துவைத்து முடி வெட்டியிருக்கிறார்கள். ///////

யோவ் பாக்க வேண்டியத பாக்காம வேற எதையோ பாத்துப்புட்டு.......... பொலம்பல் வேற.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மீண்டும் ஒரு புத்தக வெளியீட்டிற்காக “பெண் தொடா எழுத்தாளர்” கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள். /////////

இதுல என்ன உள்குத்து இருக்கோ....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// விழாவில் பதிவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையிலேயே இருந்தது அதிர்ச்சி. ////////

பதிவர் சந்திப்புன்னு போட்டுட்டு அதுல புத்தகம் வெளியிடுறாங்கன்னு பிட்ட போட்டிருக்கனும்............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரம்யா நம்பீசன் சமீபத்தில் வெளியான பேச்சிலர் பார்ட்டி என்ற மலையாள படத்தில் தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடித்திருக்கிறார். /////////

ஏனுங்கோ.... அம்மினி இந்தப்பாட்டுலயும் சேலதானுங்கோ கட்டி இருக்கு........? அப்படி எதுவும் பெசலா தெரிஞ்ச மாதிரியும் இல்லையே?

Unknown said...

நல்ல சரக்கு, அந்த மொக்க படத்த நானும் பார்த்தேன், அதுவும் அந்த அம்மா செண்டிமெண்ட் கொடுமை :-( அதுசரி அக்கினேனி நாகசைதன்யானு போட்டானுக, அந்த அக்கினேனின்னா என்னன்னு தெரியுமா தல?

rajamelaiyur said...

//கட்டிப்பிடிச்சு ஹீரோயின் உதட்ட கடிச்சா அது கமல்., ஹீரோயின கட்டிப்பிடிச்சு தன் உதட்ட தானே கடிச்சுகிட்டா அது எம்.ஜி.ஆர் !
//

அப்ப படத்தபாக்குறவன் அடுத்தவன கடிச்சா ?

rajamelaiyur said...

கிளி ஜோசியத்தில் சிவாக்கு கண்டம் இருக்குனு சொன்னாராம்ல ...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// "என் ராஜபாட்டை"- ராஜா said...
கிளி ஜோசியத்தில் சிவாக்கு கண்டம் இருக்குனு சொன்னாராம்ல ...?/////////

மறுபடியும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதிட்டீங்களே.........?

rajamelaiyur said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// விழாவில் பதிவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையிலேயே இருந்தது அதிர்ச்சி. ////////

பதிவர் சந்திப்புன்னு போட்டுட்டு அதுல புத்தகம் வெளியிடுறாங்கன்னு பிட்ட போட்டிருக்கனும்............
//


இல்லனா வர எல்லாருக்கும் புத்தகம் இலவசம்னு சொல்லிருக்கணும்

rajamelaiyur said...

// கிளி ஜோசியத்தில் சிவாக்கு கண்டம் இருக்குனு சொன்னாராம்ல ...?

June 26, 2012 10:21 AM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// "என் ராஜபாட்டை"- ராஜா said...
கிளி ஜோசியத்தில் சிவாக்கு கண்டம் இருக்குனு சொன்னாராம்ல ...?/////////

மறுபடியும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதிட்டீங்களே.........?
//

சிவா பிரபா போல நல்ல புள்ள ...

அஞ்சா சிங்கம் said...

அடல்ட் கார்னரை இங்கே போடவேண்டியது தானே . இப்படி இணைப்பு குடுத்து மனசை கெடுக்க வேண்டாம் .
அங்க போயிட்டு இங்க வர 1 : 30 மணி நேரம் ஆச்சி .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
அடல்ட் கார்னரை இங்கே போடவேண்டியது தானே . இப்படி இணைப்பு குடுத்து மனசை கெடுக்க வேண்டாம் .
அங்க போயிட்டு இங்க வர 1 : 30 மணி நேரம் ஆச்சி .////////

நான் இன்னும் அங்கதான் இருக்கேன்...

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
அடல்ட் கார்னரை இங்கே போடவேண்டியது தானே . இப்படி இணைப்பு குடுத்து மனசை கெடுக்க வேண்டாம் .
அங்க போயிட்டு இங்க வர 1 : 30 மணி நேரம் ஆச்சி .////////

நான் இன்னும் அங்கதான் இருக்கேன்.../////

அண்ணே நம்ம சங்கத்து ஆளுங்க நெறைய பேரு இங்கதான் இருக்காங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////N.Mani vannan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அஞ்சா சிங்கம் said...
அடல்ட் கார்னரை இங்கே போடவேண்டியது தானே . இப்படி இணைப்பு குடுத்து மனசை கெடுக்க வேண்டாம் .
அங்க போயிட்டு இங்க வர 1 : 30 மணி நேரம் ஆச்சி .////////

நான் இன்னும் அங்கதான் இருக்கேன்.../////

அண்ணே நம்ம சங்கத்து ஆளுங்க நெறைய பேரு இங்கதான் இருக்காங்க//////////

கட்டதொர வந்த உடனே சங்கத்த கலைச்சிடுங்க.........

Jayadev Das said...

\\விழாவில் பதிவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையிலேயே இருந்தது அதிர்ச்சி. \\ மாப்பு, ஒற்றைப்படை என்றால் Odd number என்று அர்த்தம், நீ சொல்ல வருவது Single Digit என்று நினைக்கிறேன், அது தான் என்றால் "ஒரு கையில் விரல் விட்டு எண்ணி விடலாம்" - என்பது மாதிரி Phrase வேற எதாச்சும் இருந்தா பாரு. ஹி......ஹி......ஹி......

Jayadev Das said...

\\தமிழ்ப்படங்களில் சேலை, தாவணி, சுடிதார் என படுபாந்தமாக காட்சிதரும் ரம்யா நம்பீசன் சமீபத்தில் வெளியான பேச்சிலர் பார்ட்டி என்ற மலையாள படத்தில் தாராளமயமாக்கல் கொள்கையை கடைபிடித்திருக்கிறார். தமிழில் மட்டும் ஏனிப்படி....? என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் நாம்...??\\ தமிழ் உணர்வோட, சமுதாய அக்கறையோட பொங்கி எழுந்திருக்கும் சிங்கக் குட்டியே வருக வருக.......... அப்படின்னு போஸ்டர் அடிச்சு ஓட்டலாம்னு இருக்கேன். [பக்கத்து ஸ்டேட் காரன் தண்ணீர் விடமாட்டேங்கிறான், ஆற்றின் குறுக்கே அணை கட்டப் போறான், இங்கிருந்து மணல், ரேஷன் அரிசி கடத்துகிறான் என்பது போன்ற விஷயங்களுக்கு கூட நம்மாளுங்க இவ்வளவு பொங்க மாட்டாங்க போலிருக்கிறதே!!]

Jayadev Das said...

மாப்பு, அந்த ஜோசியக் காரன், நீ எவ்வளவு சம்ப்பத்திச்சாலும் காசு உன் கையில தங்காது, உனக்கு ரெண்டு பெண்டாட்டி, பிள்ளளைங்க நாலு.......... ஐயையோ..... நீ எங்கியோ போயிட்டேன். [உன்னை ஆளை பாத்து எடை போட்டுட்டன் போல இருக்கே..... கன்னி ராசி படத்துல ஜனகராஜு க்கு ஜோசியம் சொல்வது போல!!]

CS. Mohan Kumar said...

ராம்சாமி அண்ணே பாட்டு ஆரம்பத்தில் மட்டும் ரம்யா கொஞ்சம் கிளுகிளுப்பா வர்றாங்க தம்பி அதை தான் ஜொல்லிருக்கார்

பெண் தொடா எழுத்தாளர் ...ஏன்?????

test said...

// பாடல் காட்சியொன்றில் நடிகையின் மார்கச்சை விலகிய ஷாட்டுகள் கத்தரிக்கப்பட்டுள்ளன.//

ஆமா இதையெல்லாம் வெட்டிட்டு எதுக்கு எ கொடுத்தாங்க? ச்சே! இப்பிடி இருந்த தமிழ்சினிமா எப்பிடி அடுத்த கட்டத்துக்குப் போகும்! என்ன கொடுமை பாஸ்! :-)

Riyas said...

ரம்யா நம்பீசன் நல்லாத்தான் இருக்கு நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்.. ஒரு இடத்துல பெல்லி டான்ஸ் வேற!

ஜோசியம் பார்க்கும் வீடியோவில் சாலையில் போகும் பெண்ணையும் சேர்த்து கவர் செய்த கேமரா மேன் யாரோ? யாராயிருந்தாலும் ரசனைக்கார பயபுள்ள!!

Riyas said...

//அண்ணே நம்ம சங்கத்து ஆளுங்க நெறைய பேரு இங்கதான் இருக்காங்க////////////

UAE யில் அந்த திராட்சைப்பழ ஜோக் BLOCK ஐய்யய்யோ!!

Philosophy Prabhakaran said...

@ திண்டுக்கல் தனபாலன்
// ட்வீட்களை ரசித்தேன். நன்றி ! //

நன்றி சார்...

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
// அப்படியே கலகலப்பா காப்பி அடிச்சு படம் எடுத்துருக்காய்ங்களே இந்த ஜெர்மன்காரய்ங்க ,ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா //

இதிலிருந்து ஜெர்மனியிலும் நம்ம தலைவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்வோமாக...

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// “பெண் தொடா எழுத்தாளர்” என்ன கொடுமை சார் இது...? //

சுரேஷ்... அது pen...

Philosophy Prabhakaran said...

@ N.Mani vannan
// ரம்யா நபீசனும் மட்டும் அல்ல பல நடிகைகள் தன சொந்த மாநில மக்களுக்காக ஸ்பெஷல் தரிசனம் குடுத்திருக்கிறார்கள், இது சம்பந்தமாக நான் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில் பல தரிசங்களை காண முடிந்தது .ம் ம் ம் காலங்காலமாய் தமிழன் தலையில் மொளகாய் அரைப்பதே எல்லோருக்கும் வேலையாக போய்விட்டது .இதை விட வேறு என்ன அவமானம் இருக்க முடியும் நமக்கு .என்னதான் ஆட்டம் போட்டாலும் ஓடமும் ஒருநாள் வாந்தியில் ச்சே இது வண்டியில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று மனத்தை தேற்றிக்கொண்டு இனிவருகாலங்களிலாவது தமிழனாகிய நாம் ஏமாறாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க படவேண்டும் என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறிகொள்கிறேன் //

மணியன்னே... கவலைப்படாதீங்க ரம்யா நம்பீசன் மாதிரி கிராக்கிகள் கடைசியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும்போது தமிழ் சினிமா அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்... அப்ப நாம சீன் பாத்துக்கலாம்...

Philosophy Prabhakaran said...

@ PREM.S
// ரெண்டு தாரம் னு சொன்னதும் உங்க முகத்துல உதடுள்ள வர்ற புன்னகைக்கு காரணம் என்னவோ //

ஏன்யா கோர்த்து விடுற...

Philosophy Prabhakaran said...

@ ராஜ்
// இங்கிலாந்து மாதிரி ராசி இல்லாத அணியை நீங்க பார்க்கவே முடியாது.. மறுபடியும் நிரூபணம் ஆகிருச்சு..
இன்னைக்கு ஒயின்ஷாப் கொஞ்சம் மந்தமா இருக்குற மாதிரி தோணுது எனக்கு.. //

ஆக, கால்பந்திலும் கிரிக்கெட் போலவே ராசி இல்லாத அணி தானா இங்கிலாந்து...

Philosophy Prabhakaran said...

@ மனசாட்சி™
// காக்டெயில் கிக்கு கொஞ்சம் கம்மி தான்..... ஒக்கே....யு கன்டீநீவ்... //

தல... நீங்கள்லாம் என்னதான் எதிர்பாக்குறீங்கன்னு சொல்லுங்க... ஜமாய்ச்சிடலாம்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் பாக்க வேண்டியத பாக்காம வேற எதையோ பாத்துப்புட்டு.......... பொலம்பல் வேற.....! //

எதை காட்டுறாங்களோ அதைத்தானே தல பார்க்க முடியும்...

// இதுல என்ன உள்குத்து இருக்கோ....? //

சத்தியமா இல்லைங்கோ... அது அம்புலி பட இயக்குனர் கேபிளுக்கு கொடுத்த பட்டம்...

// ஏனுங்கோ.... அம்மினி இந்தப்பாட்டுலயும் சேலதானுங்கோ கட்டி இருக்கு........? அப்படி எதுவும் பெசலா தெரிஞ்ச மாதிரியும் இல்லையே? //

சேலையில் இருந்தாலும் சோலையா இருக்காங்களே ப.கு.ரா...

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// நல்ல சரக்கு, அந்த மொக்க படத்த நானும் பார்த்தேன், அதுவும் அந்த அம்மா செண்டிமெண்ட் கொடுமை :-( அதுசரி அக்கினேனி நாகசைதன்யானு போட்டானுக, அந்த அக்கினேனின்னா என்னன்னு தெரியுமா தல? //

அக்கினேனி என்பது ஆந்திராவில் பயன்படுத்தப்படும் குடும்பப்பெயர்களுள் ஒன்று...

Philosophy Prabhakaran said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா
// அப்ப படத்தபாக்குறவன் அடுத்தவன கடிச்சா ? //

நீங்க தான்...

// சிவா பிரபா போல நல்ல புள்ள ... //

யோவ்... அசிங்கமா பேசாத...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// அடல்ட் கார்னரை இங்கே போடவேண்டியது தானே . இப்படி இணைப்பு குடுத்து மனசை கெடுக்க வேண்டாம் .
அங்க போயிட்டு இங்க வர 1 : 30 மணி நேரம் ஆச்சி . //

அவ்வளவு பெரிய பத்தியை யாரு தமிழ்ல மொழிபெயர்த்து டைப் பண்றது...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// மாப்பு, ஒற்றைப்படை என்றால் Odd number என்று அர்த்தம், நீ சொல்ல வருவது Single Digit என்று நினைக்கிறேன், அது தான் என்றால் "ஒரு கையில் விரல் விட்டு எண்ணி விடலாம்" - என்பது மாதிரி Phrase வேற எதாச்சும் இருந்தா பாரு. ஹி......ஹி......ஹி...... //

நீங்கள் சொல்வது சரிதான்... ஒற்றை இலக்கம் என்று எழுதியிருக்கணும்... மாற்றிவிடுகிறேன்... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...

// தமிழ் உணர்வோட, சமுதாய அக்கறையோட பொங்கி எழுந்திருக்கும் சிங்கக் குட்டியே வருக வருக.......... அப்படின்னு போஸ்டர் அடிச்சு ஓட்டலாம்னு இருக்கேன். [பக்கத்து ஸ்டேட் காரன் தண்ணீர் விடமாட்டேங்கிறான், ஆற்றின் குறுக்கே அணை கட்டப் போறான், இங்கிருந்து மணல், ரேஷன் அரிசி கடத்துகிறான் என்பது போன்ற விஷயங்களுக்கு கூட நம்மாளுங்க இவ்வளவு பொங்க மாட்டாங்க போலிருக்கிறதே!!] //

சார்... ஹீரோயினுடைய கவர்ச்சியா இருந்தாலும் சரி, தண்ணியா இருந்தாலும் சரி... நாம சத்தம்போட்டு ஒன்னும் நடக்கப்போறதில்லை... அப்புறம் ஏன் தேவையில்லாம டென்சன் ஆகிட்டு... அப்படியே ஏதாவது மாற்றம் வரணும்ன்னு அதுக்கு களத்தில் இறங்கி போராடணும்... வெறுமனே மெழுகுவர்த்தி ஏற்றி என்ன செய்வது...

Philosophy Prabhakaran said...

@ Jayadev Das
// மாப்பு, அந்த ஜோசியக் காரன், நீ எவ்வளவு சம்ப்பத்திச்சாலும் காசு உன் கையில தங்காது, உனக்கு ரெண்டு பெண்டாட்டி, பிள்ளளைங்க நாலு.......... ஐயையோ..... நீ எங்கியோ போயிட்டேன். [உன்னை ஆளை பாத்து எடை போட்டுட்டன் போல இருக்கே..... கன்னி ராசி படத்துல ஜனகராஜு க்கு ஜோசியம் சொல்வது போல!!] //

அவனை நாங்க ஊருகாயாக்க பார்த்தோம்... பட்ச அவன் எங்களை ஊறுகாய் ஆக்கிட்டான்...

Philosophy Prabhakaran said...

@ மோகன் குமார்
// பெண் தொடா எழுத்தாளர் ...ஏன்????? //

Pen...

Philosophy Prabhakaran said...

@ ஜீ...
//
ஆமா இதையெல்லாம் வெட்டிட்டு எதுக்கு எ கொடுத்தாங்க? ச்சே! இப்பிடி இருந்த தமிழ்சினிமா எப்பிடி அடுத்த கட்டத்துக்குப் போகும்! என்ன கொடுமை பாஸ்! :-) //

ம்ஹூம்... நமக்கு இந்த காலத்துல ஆஸ்கர் இல்ல... ஒரு பாஸ்கர் அவார்டு கூட கிடைக்காது...

Philosophy Prabhakaran said...

@ Riyas
// ஜோசியம் பார்க்கும் வீடியோவில் சாலையில் போகும் பெண்ணையும் சேர்த்து கவர் செய்த கேமரா மேன் யாரோ? யாராயிருந்தாலும் ரசனைக்கார பயபுள்ள!! //

நம்ம நண்பர் சிவகுமார் தான்...

// UAE யில் அந்த திராட்சைப்பழ ஜோக் BLOCK ஐய்யய்யோ!! //

ஹி... ஹி... ஹி...

'பரிவை' சே.குமார் said...

பகிர்வு நன்று.
ட்டுவிட்ஸ் கலக்கல்.