அன்புள்ள வலைப்பூவிற்கு,
காப்பீ – அந்த திரவப்பொருளை நம்மில் பலர் அப்படித்தான் கூச்ச நாச்சமே
இல்லாமல் அழுத்தம் கொடுத்து உச்சரிக்கிறோம்.
ஒரு க்ளாஸ் காபி குறைந்தபட்சம் ஐந்து ரூபாயில் ஆரம்பித்து, கொஞ்சம்
கெளரவமான ரெஸ்டாரன்ட்களில் பதினைந்து, இருபது ரூபாய்களிலும், நவநாகரிக இளைஞர்களும்
யுவதிகளும் மாய்ந்து மாய்ந்து கடலை வறுக்கும் காபி ஷாப்புகளில் நூற்றியிருபது ரூபாய்
வரையிலும் விற்கப்படுகிறது. மேற்படி காபிஷாப்புகளில் Cappuccinno என்ற வகையறாவை
பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் Crappuccinno...???
வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் அரிதாக கிடைக்கும் குறிப்பட்ட
வகையறா காபியின் ஒரு கப் விலை, 80 USD, அதாவது இந்திய மதிப்பில் சுமார்
நாலாயிரத்து ஐநூறு ரூபாய். ஒருவேளை அங்கேயும் அம்மா போல யாராவது பால் விலையையும்
எழரையையும் கூட்டி இருப்பாரோ என்று சந்தேகிக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட காபியின்
கதை அப்படி.
விரிவாகவே சொல்கிறேன். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சு
அரசாங்கம் இந்தோனேசியாவை “கிழக்கு இந்திய தீவுகள்” என்ற பெயரில் ஆட்சி
செய்துக்கொண்டிருந்த சமயம். சுமத்ரா, ஜாவா, பாலி போன்ற பிரதான தீவுகளில் காபி
பயிரிடப்பட்டிருந்தது. ரொம்ப ஸ்ட்ரிக்டான டச்சு அரசாங்கம், லோக்கல் விவசாயிகள்
தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக காபி கொட்டைகள் பறிப்பதை தடை செய்திருந்தது. இயல்பிலேயே
காபி பிரியர்களான இந்தோனேசியர்கள் காபியை பிரிந்து அவஸ்தைப்பட்டனர். அங்கே இரவு
நேரங்களில் புனுகுப்பூனை எனப்படும் ஒரு தினுசான விலங்கு (தமிழகத்தின் சில
பகுதிகளில் மரநாய் என்றும் சொல்வார்கள்) காபி வயல்களில் புகுந்து அட்டகாசம்
செய்யுமாம். அவை தின்று வைத்த காபி கொட்டைகள் அறையும் குறையுமாக செரிமானமாகி ஓரிரு
நாட்களுக்குள் மலத்தில் வெளிவரும். அந்த மலத்தில் உருக்குலையாமல் இருந்த காபி
கொட்டைகளை பார்த்ததும் விவசாயிகளுக்கு வினோத ஆசை தோன்றியிருக்கிறது. அதிலிருந்த
காபி கொட்டைகளை பொறுக்கி எடுத்து, சுத்தப்படுத்தி, வறுத்து, காபி தயாரித்து, பருகி
பார்த்ததும்.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்... டிவைன்... என்று தயிர் சாதம் சாப்பிட்ட
கேபிள் சங்கரை போலவே ஃபீல் செய்திருக்கிறார்கள். விஷயம் காட்டுப்பீயாக... ச்சே
காட்டுத்தீயாக பரவி டச்சு முதலாளிகளின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது, பின்னர்
நாவுக்கும் குடலுக்கும் கூட. அவர்களும் நா சிலிர்த்துப்போக காப்பீ தன்னுடைய
அதிகாரப்பூர்வ தயாரிப்பை தொடங்கியிருக்கிறது. ஆங்... சொல்ல மறந்துட்டேன் இதற்கு அவர்கள் சூட்டிய பெயர் காபி லுவாக்...!
காட்டில் வாழ்ந்துவந்த புனுகுப்பூனைகளை மொத்தமாக பிடித்துவந்து
கூண்டுகளில் அடைத்து, அவை ஆரோக்கியமாக இருப்பதற்காக மாட்டிறைச்சி கொடுத்து, காபி பழங்களை
கொடுத்து கழிய வைப்பதற்காகவே பிரத்யேக புனுகுப்பூனை பண்ணைகளும் பணியாளர்களும்
நியமிக்கப்பட்டனர். பயத்தில் பேண்டால் இன்னும் ருசியாக இருக்குமென யாரோ புரளியை
கிளப்பிவிட்டதால், ரோட்டோர பிரியாணி கடைகளில் சத்தம் எழுப்புவது போல அதன்
கூண்டுகளில் இரும்புக்கம்பியால் அடித்து “பீ”தியை கிளப்புவார்களாம். கிட்டத்தட்ட
KFC கோழிகளைப் போலவே புனுகுப்பூனைகள் சித்திரவதை செய்யப்பட்டன என்று வரலாறு
சொல்கிறது.
ஒரு கட்டத்தில் புனுகுப்பூனைகளின் எண்ணிக்கை குறைய
ஆரம்பித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆச்சாரமான சிலர், மலத்திலிருந்து காபி
கொட்டைகளை பொறுக்குவதை எண்ணி சங்கூஜப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாக
புனுகுப்பூனைகளின் உணவுக்குழாயில் காபி கொட்டையின் மீது ஏற்படும் ரசயான மாற்றம்
என்னவென்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
ஆராய்ச்சியில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஃப்ளோரிடா பல்கலைக்கழகம்
அதற்கு “காபி ப்ரிமேரோ” என்று பெயர்சூட்டி பேடன்ட்டும் வாங்கி வைத்து விட்டது. அதேபோல
வியட்நாமின் Trung Nyugen காபி நிறுவனமும் தன் பங்குக்கு வேறொரு செயற்கை முறையில்
Legendee என்ற காபியை தயாரித்தது. என்னதான் இருந்தாலும் கும்பகோணம் ஃபில்டர் காபி
மாதிரி வராதுய்யா என்று சிலாகித்துக்கொள்ளும் பெருசுகளை போலவே ஒரிஜினல் காப்பீ
லுவாக்குக்கும் பாரம்பரிய ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதும் கூட
மிகவும் அரிதாக கிடைக்கும் காப்பீ லுவாக் கிலோ ஒன்றிற்கு ஆறாயிரத்து அறுநூறு
அமெரிக்க டாலர் விலையில் விற்கப்படுகிறது. உலக அளவில் மிகவும் விலை உயர்ந்த
காபியாகவும் அதே சமயம் அருவருக்கத்தக்க உணவுப்பொருட்களில் ஒன்றாகவும் விளங்குகிறது
காபி லுவாக்.
இனி நீங்கள் ஒவ்வொரு முறை காபி குடிக்கும்போதும் இந்த கட்டுரையோ
அல்லது தலைப்போ அல்லது மேலே உள்ள புகைப்படமோ உங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஜாக்கிரதை...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
41 comments:
நல்ல வேளை நான் காபியே குடிக்கிறதில்ல ஒன்லி கட்டாஞ்சாயாதான்... அதுக்கும் எதாவது post போட்டுறாதீங்க :))
நல்ல அலசல்.. தெரியாத விவரங்கள்..
@ ராம்குமார் - அமுதன்
// நல்ல அலசல்.. தெரியாத விவரங்கள்.. //
நன்றி தலைவா...
நேத்தி வரைக்கும் நல்லாதானய்யா இருந்த. திடீர்னு ஆராய்ச்சி வேற. அடுத்து ‘இங்க பாத்தீங்களா குஷ்பு அப்பளம்’ அதான.!!.
பாஸ் அந்த கடைசி படம் சான்சே இல்ல உரிச்சு வைச்சுருக்கே நீங்க சொன்னது உண்மைன்னு
:) நான் இந்த காபி குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன், உவ்வே........!
இதுல என்ன விசயம்! என்றால் எங்கள் பகுதியில் புனுகு பூனை என்கிற மரநாய் அதிகம், அதன் கொழுப்பில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு வாசனையான திரவம் புனுகு, இதை நம் முகத்தில் தேய்த்துக்கொண்டால் முகப்பரு வராது...ஒரு வேளை புனுகு பூனையின் “பீ” மணக்குமோ?
முகர்ந்து பாருங்க அப்படின்னு பதில் போட்டா பிச்சுபுடுவேன்பிச்சு...............
புனுகு பூனையிடமிருந்து எடுக்கப்படும் பீ ' ஒத்த தலைவலிக்கு மிக சரியான மருந்து என்று கேள்வி பட்டிருக்கிறேன் ,ஆனால் இனிமேல் கால காலத்துக்கு காப்பி குடிக்க முடியுமாய்யா ,காப்பி குடிக்கும் இந்த ஞாபகம் தானேயா வந்து தொலையும் ,ஆனாலும் நாங்க குடிப்போம்ல இத விட கேவலமான விஷயம் பக்கத்துல இருந்தாலும் அரசட்டி சோற அசால்ட்ட சாப்புடுவோம்ல ஹே ஹே ஹே ஹே
பட் இந்த ஆராய்ச்சி எனக்கு புடிச்சிருக்கு ,அந்த கடைசி புகைப்படத்துக்கு ரொம்ப தேடுனியோ?
@ ! சிவகுமார் !
// நேத்தி வரைக்கும் நல்லாதானய்யா இருந்த. திடீர்னு ஆராய்ச்சி வேற. அடுத்து ‘இங்க பாத்தீங்களா குஷ்பு அப்பளம்’ அதான.!!. //
என்ன தல சொல்றீங்க... ஒன்னும் புரியல... U mean குஷ்பூ இட்லி...???
@ PREM.S
// பாஸ் அந்த கடைசி படம் சான்சே இல்ல உரிச்சு வைச்சுருக்கே நீங்க சொன்னது உண்மைன்னு //
நான் எதையும் உரிச்சி வைக்கல தல...
@ கோவி.கண்ணன்
// :) நான் இந்த காபி குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன், உவ்வே........! //
ஹி... ஹி... ஹி...
இது பற்றி பன்னி மாம்சும் அவரோட ஸ்டைல்ல பதிவு போட்டிருந்தார்! :-)
//அல்லது மேலே உள்ள புகைப்படமோ உங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஜாக்கிரதை...!//
ம்ம்ம்... வெளங்கிரும்!
நல்ல வேலை நான் காப்பி குடிக்கிறதில்லை! :-)
@ வீடு சுரேஸ்குமார்
// இதுல என்ன விசயம்! என்றால் எங்கள் பகுதியில் புனுகு பூனை என்கிற மரநாய் அதிகம், அதன் கொழுப்பில் இருந்து தயார் செய்யப்படும் ஒரு வாசனையான திரவம் புனுகு, இதை நம் முகத்தில் தேய்த்துக்கொண்டால் முகப்பரு வராது...ஒரு வேளை புனுகு பூனையின் “பீ” மணக்குமோ? //
Actually, அதைப் பற்றியும் படித்தேன்... ஆனால் காபி பற்றிய பதிவில் அது வேண்டாமென்று நீக்கிவிட்டேன்... மரநாய் அல்லது புனுகுப்பூனைகளிடம் ஒரு ஆயுதம் இருக்கிறது... தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஆசனவாயில் இருந்து ஒரு திரவத்தை பீய்ச்சி அடிக்கும்... அதை முகர்ந்து பார்த்தால் வாந்தி, தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்... ஆனால் அதே ஆசனவாய் திரவத்தை எடுத்து நீக்கவேண்டியத்தை நீக்கி, சேர்க்க வேண்டியதை சேர்த்தால் நறுமணம் வீசும் வாசனை திரவம் தயார்...!
// முகர்ந்து பாருங்க அப்படின்னு பதில் போட்டா பிச்சுபுடுவேன்பிச்சு............... //
உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதால சொல்றேன்... எதுக்கும் ஒரு முறை முயற்சி செய்து நான் சொல்றது சரியான்னு செக் பண்ணுங்களேன் :)
//பயத்தில் பேண்டால் இன்னும் ருசியாக இருக்குமென யாரோ புரளியை கிளப்பிவிட்டதால்//
அடங்கொன்னியா எப்பிடியெல்லாம் இருக்கானுகப்பா!
@ N.Mani vannan
// புனுகு பூனையிடமிருந்து எடுக்கப்படும் பீ ' ஒத்த தலைவலிக்கு மிக சரியான மருந்து என்று கேள்வி பட்டிருக்கிறேன் //
இருக்கலாம் மணி... எனக்கு தெரியவில்லை...
// ஆனால் இனிமேல் கால காலத்துக்கு காப்பி குடிக்க முடியுமாய்யா ,காப்பி குடிக்கும் இந்த ஞாபகம் தானேயா வந்து தொலையும் ,ஆனாலும் நாங்க குடிப்போம்ல இத விட கேவலமான விஷயம் பக்கத்துல இருந்தாலும் அரசட்டி சோற அசால்ட்ட சாப்புடுவோம்ல ஹே ஹே ஹே ஹே //
நானும் அப்படித்தான் தல...
// பட் இந்த ஆராய்ச்சி எனக்கு புடிச்சிருக்கு ,அந்த கடைசி புகைப்படத்துக்கு ரொம்ப தேடுனியோ? //
அதெல்லாம் ஒன்றுமில்லை... Kopi Luwak'ன்னு கூகுள்ல டைப் பண்ணேன்... மூன்று படங்களும் அங்கிருந்து தான் எடுத்தேன்...
@ ஜீ...
// இது பற்றி பன்னி மாம்சும் அவரோட ஸ்டைல்ல பதிவு போட்டிருந்தார்! :-) //
அடடே... அப்படின்னா இது ரிபீட் பதிவா...
நானும் கூட பிரபா ஒயின்ஷாப்பில் ஒரு துணுக்காக எழுதியிருந்தேன்...
ஹஹா...ஏற்கனவே எங்கயோ படிச்சாப்ல இருக்குது...இருந்தாலும் விவரங்கள் சூப்பரப்போய்!
இதைப்பற்றி ஏற்கனவே பன்னிக்குட்டியின் தளத்தில் படித்திருந்தாலும், கூடுதலான தகவலுடன், சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த பதிவு.
இவ்ளோ நாள் கழித்து இந்த சப்ஜெக்ட் எனக்கு கொல்லிமலை நினைவு வருது ...
உங்கள் நினைவு திறனுக்கு ஒரு சபாஷ் .
யோவ் அடுத்த வாட்டி காப்பிய குடிச்சு பாத்துட்டு எழுதும்யா..........
/////பயத்தில் பேண்டால் இன்னும் ருசியாக இருக்குமென யாரோ புரளியை கிளப்பிவிட்டதால், ///////
நல்ல வேள வயித்தால போன நல்லாருக்கும்னு எவனுக்கும் தோனல.........
///// ஜீ... said...
இது பற்றி பன்னி மாம்சும் அவரோட ஸ்டைல்ல பதிவு போட்டிருந்தார்! :-)///////
ஹி....ஹி...... கக்கா மேட்டர்னா மறக்க மாட்டேங்கிறாங்கப்பா..........
இப்பதான் வந்தேன்.. படித்தேன்..ரசித்தேன்.. கூடவே பல தகவல்களை அறிந்தும் கொண்டேன்.நீங்க சொன்ன மாதிரி இனி காப்பி குடிக்கையில் இந்த பதிவும் கூடவே கீழே கடைசியில் உள்ள படமும் ஞாபகம் வரலாம்..பகிர்வு நன்று..நன்றிங்க.
ப்ரபாண்ணே.. புனுகு பூனை வேற, மர நாய் வேற
ஆனா ரெண்டும் நெருங்கிய குடும்பஸ்தனுங்கதான்
நீங்க படத்துல காட்டுனது மரநாய்
palm civet
புனுகு பூனைன்னா வெரும்
civet
மரநாய்ல இருந்து புனுகோ ப்ராசஸ்டு காபிகொட்டையோ எடுக்க முடியாது
கூகிள்ள அந்த இங்ளீஸ் வேர்ட போட்டு தேடி பாத்துக நைனா
" பயத்தில் பேண்டால் இன்னும் ருசியாக இருக்குமென யாரோ புரளியை கிளப்பிவிட்டதால்" ha ha ha நம்மாளுங்களுக்கு கெளப்புறதுக்கு சொல்லியா குடுக்கணும்... செம காமெடி சார்...
@ விக்கியுலகம்
// ஹஹா...ஏற்கனவே எங்கயோ படிச்சாப்ல இருக்குது...இருந்தாலும் விவரங்கள் சூப்பரப்போய்! //
நன்றி மாம்ஸ்... உங்க நாட்டுல தான் தயாரிக்கிறாங்களாமே ஒரு கப் குடிச்சு பாக்குறது...
@ ரஹீம் கஸாலி
// இதைப்பற்றி ஏற்கனவே பன்னிக்குட்டியின் தளத்தில் படித்திருந்தாலும், கூடுதலான தகவலுடன், சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த பதிவு. //
நன்றி கஸாலி...
@ அஞ்சா சிங்கம்
// இவ்ளோ நாள் கழித்து இந்த சப்ஜெக்ட் எனக்கு கொல்லிமலை நினைவு வருது ...
உங்கள் நினைவு திறனுக்கு ஒரு சபாஷ் . //
தகவலின் ஒன்லைன் மட்டுமே நினைவில் இருந்தது... மற்றவை இணையத்தில் தேடி தொகுத்தது...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் அடுத்த வாட்டி காப்பிய குடிச்சு பாத்துட்டு எழுதும்யா.......... //
இந்தியாவுல விக்குதா என்ன...
// ஹி....ஹி...... கக்கா மேட்டர்னா மறக்க மாட்டேங்கிறாங்கப்பா.......... //
ஆமாம் தல... இன்னைக்கு நீங்கதான் ஹீரோ... அத்தனை பேரும் கரெக்டா நினைவில் வைத்திருக்கிறார்கள்...
@ Kumaran
// இப்பதான் வந்தேன்.. படித்தேன்..ரசித்தேன்.. கூடவே பல தகவல்களை அறிந்தும் கொண்டேன்.நீங்க சொன்ன மாதிரி இனி காப்பி குடிக்கையில் இந்த பதிவும் கூடவே கீழே கடைசியில் உள்ள படமும் ஞாபகம் வரலாம்..பகிர்வு நன்று..நன்றிங்க. //
மிக்க நன்றி குமரன்...
@ Anonymous
// ப்ரபாண்ணே.. புனுகு பூனை வேற, மர நாய் வேற
ஆனா ரெண்டும் நெருங்கிய குடும்பஸ்தனுங்கதான்
நீங்க படத்துல காட்டுனது மரநாய்
palm civet
புனுகு பூனைன்னா வெரும்
civet
மரநாய்ல இருந்து புனுகோ ப்ராசஸ்டு காபிகொட்டையோ எடுக்க முடியாது
கூகிள்ள அந்த இங்ளீஸ் வேர்ட போட்டு தேடி பாத்துக நைனா //
அனானி... நீங்கள் சொல்வது ஓரளவிற்கு உண்மைதான்...
ஒவ்வொரு இணைப்பிலும் ஒவ்வொரு மாதிரியான தகவல்கள் இருக்கின்றன...
http://en.wikipedia.org/wiki/Asian_Palm_Civet#Local_names
இந்த இணைப்பில் Palm Civetடின் தமிழ் பெயர் மரநாய் என்றும் அதுவும் காபி லுவாக் தயாரிக்க பயன்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
சரி, புனுகுப்பூனை என்ன செய்யும் என்று தேடினேன்...
http://en.wikipedia.org/wiki/Civet
அங்கேயும் காப்பி லுவாக் பற்றிய தகவல் இருக்கிறது...
ஆக, நீங்கள் குறிப்பிட்டுள்ள Palm Civet, Civet இரண்டுமே காபி லுவாக் தரவல்லது...
http://en.wikipedia.org/wiki/Weasel
இந்த இணைப்பு மரநாய் என்றால் ஆங்கிலத்தில் Weasel என்று சொல்கிறது...
@ Amirtha Raja
// ha ha ha நம்மாளுங்களுக்கு கெளப்புறதுக்கு சொல்லியா குடுக்கணும்... செம காமெடி சார்... //
நன்றி ஆ.ராசா...
அய்யய்யோ... நான் அவன் இல்லீங்கோவ்!
யோவ்...நல்லா மங்கலகரமா ஒரு பதிவுய்யா....
காப்"பீ"ய நல்லா நோண்டி நொங்கெடுத்து நாரடிச்சுட்டய்யா...
@ Amirtha Raja
// அய்யய்யோ... நான் அவன் இல்லீங்கோவ்! //
ஹி... ஹி... நான் போடுற பதிலை படிக்கிறதுக்கு கூட ஆள் இருக்கா... உஷாரா இருக்கணும்...
@ மயிலன்
// யோவ்...நல்லா மங்கலகரமா ஒரு பதிவுய்யா....
காப்"பீ"ய நல்லா நோண்டி நொங்கெடுத்து நாரடிச்சுட்டய்யா... //
நன்றி மயிலன்...
நல்லவேளை பதிவைப் படிக்கிறதுக்கு முன்பே காபி குடிச்சிட்டேன்
சுவாரஸ்யமான தகவல். ஜாலியா எழுதியிருக்கீங்க.... :-)
ஏற்கனவே இந்த 'காபி'யை பற்றி யாரோ ஒரு பதிவர் எழுதி படித்திருக்கிறேன். எனினும் பகிர்வுக்கு நன்றி பிரபா.
தலைவா கலக்கிட்டிங்க...... சூப்பர் தகவல்......
Post a Comment